இது நண்பர் ஒருவர் எனக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியது;அவரது கோரிக்கையின் பேரில் இதனை பதிவிடுகிறேன்;நண்பர் விரும்பினால் இதனைப் பார்வையிட்டு அவரே இதைக் குறித்த பின்னணி விவரங்களை அறிவிக்கலாம்;மற்றபடி சர்ச்சைகளைத் தவிர்க்க எண்ணியே பெயரைக் குறிப்பிடாமல் பதிக்கிறேன்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள கிறிஸ்தவ தெளிவுகள் இயேசுவின் தெய்வத்தன்மையை உறுதிபடுத்துகிறது;ஆனால் இஸ்லாமியர்களால் மறுக்கப்படுகிறது.
இயேசுவானவர் தெய்வம் : அவர் தாமே “நான் தேவனுடைய குமாரன்” என்று உரிமை பாராட்டினார்.
இயேசுவானவர் தெய்வம் : அவர் ஒரேபேறான தேவனுடைய குமாரன்.
இயேசுவானவர் தெய்வம் : ஏனெனில் உலக தகப்பன் மூலமாய் அவர் பிறப்பிக்கப்படவில்லை.
இயேசுவானவர் தேவன் : ஏனெனில் அவர் தேவனை, "அப்பா பிதாவே" என்று அழைத்தார்.
இயேசுவானவர் தெய்வம் : ஏனெனில் அவர் மேசியா (இரட்சகர்) என்றழைக்கப்பட்டார்.
இயேசுவானவர் தெய்வம் : ஏனெனில் அவர் நம்முடைய ஆராதனையை ஏற்றுக்கொள்கிறார்.
இயேசுவானவர் தெய்வம் : ஏனெனில் அவர் கர்த்தரும் தெய்வமும் என்றழைக்கப்பட்டார்.
இயேசுவானவர் தெய்வம் : ஏனெனில் அவர் உலகத்தோற்றமுதல் இருக்கிறார்.
இயேசுவானவர் தெய்வம் : ஏனெனில் “ஆபிரகாமிற்கும் முன் நான் இருக்கிறேன்” என்றார்.
இயேசுவானவர் தெய்வம் : ஏனெனில் நம் பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் அவருக்கு இருக்கிறது.
இயேசுவானவர் தெய்வம் : ஏனெனில் அவரே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் என்றார்.
இயேசுவானவர் தெய்வம் : ஏனெனில் நானும் பிதாவும் ஒன்றாய் இருக்கிறோம் என்று உரிமை பாராட்டினார்.
இயேசுவானவர் தெய்வம் : ஏனெனில் எல்லாவற்றைக் குறித்தும் அவர் அறிவுள்ளவராயிருந்தார்.
இயேசுவானவர் தெய்வம் : ஏனெனில் அவர் அற்புதங்களை செய்பவராக இருந்தார்.
இயேசுவானவர் நானே தேவன் என்று ஒரு நாளும் பிரகடனப்படுத்தவில்லை.
“இஸ்ரவேலரே நான் சொல்லும் வார்த்தையை கேளுங்கள், நீங்கள் அறிந்திருக்கிறபடி நசரேசனாகிய இயேசுவைக் கொண்டு தேவன் உங்களுக்குள் பலத்த செய்கைகளையும் அற்புதங்களையும், அடையாளங்களையும் நடப்பித்து அவைகளினாலே அவரை உங்களுக்கு வெளிப்படுத்தினார்” அப் - 2: 22
ஆங்கிலத்தில்; “Jesus of Nazareth, A Man” என எழுதப்பட்டுள்ளது. லூக்கா 24: 25 -27, 44 – 45 இந்த வாக்கியங்களில் தீர்க்கதரிசிகள் அவரை தேவன் என்று அறிக்கை கொடுக்கின்றனர்.
இயேசுவானவர் தெய்வம், ஏனெனில் அவரே தன்னை தேவனுடைய குமாரன் என்று சொந்தம் பாராட்டினார்.
இயேசு தேவமைந்தன் ஏனெனில் தேவனின் ஒரே நேசக் குமாரன். “தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை”… “ஒரேபேறான குமாரன்” (யோவான்.3:16) எனப்படுவது இயேசுவிற்கு மாத்திரம் கொடுக்கப்பட் மிகப்பெரிய நாமம் என்று கிறிஸ்தவம் கூறுகிறது.
இயேசுவானவர் ஒரு தெய்வம், மனிதபிரகாரமாக ஒரு தந்தையால் அவர் உண்டாகவில்லை மாறாக பரிசுத்த ஆவியால் உண்டானவர்.\
இயேசுவானவர் தெய்வம்;: நாம் அப்பா பிதாவே என்று கூறும் போது எழுத்தின் பிரகாரமாக பிதாவே என்று நாம் அழைப்பதினால் அவருக்கு பிதா உண்டு என்று நாம் விசுவாசிக்க முடிகிறது. “எங்களுக்கு ஒரே பிதா உண்டு, அவரே தேவன்” (யோவான் 8:41) என்று யூதர்கள் இப்படிக் கூறுகின்றனர். யோவான் 8:44- ல் இயேசுவானவர் கூறும்போது பிசாசானவனுக்கு கூட தகப்பன் உண்டென்று உவமையாய் சொல்கிறார்.
இயேசுதான் தேவன் ஏனெனில் மேசியா என்றழைக்கப்பட்டார்.
நம்முடைய ஆராதனைக்கு பாத்திரராய் காணப்படவதினால் அவர் தேவனாய் இருக்கிறார். இயேசுவானவர் நாம் செலுத்தும் ஆராதனைகளை அங்கீகரிக்கிறார் என்பது அவரின் தெய்வத்தன்மைக்கு சாட்சி. (யோவான் 9:38, மத் 28:17)
இயேசுவானவர் தேவன் அவரை நாம் காத்தரும் தேவனுமானவர் என்று அழைக்கிறோம். யோவான் 20 ஆம் அதிகாரத்தில் தோமா இயேசுவைப் பார்த்து “என் ஆண்டவரே என் தேவனே” என்று கூறி வணங்குகிறார். (யோவான். 20:28) 1 கொரி 8:4-6 பிதாவாகிய ஒரே தேவன் நமக்கு உண்டு, இயேசுக் கிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்கு உண்டு.
இயேசுவானவர் தெய்வம்: ஏனெனில் உலகத்தோற்றத்திற்கு முன் இருந்தவர். யோவான் 8:58 ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன். எரேமியா 1: 5 தாயின் வயிற்றில் உருவாகும் முன்னே உன்னை அறிந்தேன் (எழுத்தின் படி)
ஆபிரகாமிற்கு முன்னும் நான் இருக்கிறேன் என்று கூறியிருப்பதால் இயேசுவே தேவன். "இருக்கிறவராகவே இருக்கிறேன்"(யாத்.3:14) "ஆபிரகாமிற்கு முன்னமே நான் இருக்கிறேன்"(யோவான்.8:58)."இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர்"(வெளி.1:8)
நம் பாவங்களை மன்னிக்க அதிகாரம் பெற்றவர் நம் இயேசு – அவரே தேவனாயிருக்கிறார்.(மாற்கு 2: 5-10) இயேசுவிற்கு பாவங்களை மன்னிக்க அதிகாரமுண்டு. எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும். ( யோவான் 20:23)
நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் என்று சொன்னவர் - அவரே தேவனாயிருக்கிறார்." நானே வழியும் சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்"(யோவான் 14:6) என்ற வார்த்தை இன்றும் வல்லமையுள்ளதும் மாறாததுமாயிருக்கிறது.
"நானும் என் பிதாவும் ஒருவரே" என்று உரிமை பாராட்டுகிறவர் - இயேசுவானவர் தெய்வம். "நானும் என் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்” (யோவான் 10:30 ) தன் சீடர்களின் ஒருமைப்பாட்டை விளக்கும் படிக்கு யோவான் 17:11,22,22,23 “நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருக்கிறீர்"
இயேசுவானவர் தெய்வம்;: ஏனெனில் சகல ஞானமும் உடையவராகக் காணப்பட்டார்.ஆனால் மத்தேயு 24:36- ல் மனித குமாரனின் வருகையை குறித்து என் பிதா தவிர அந்த நாழிகையை வேறொரும் அறியார்கள் என்று பிதாவை மகிமைப்படுத்துகிறார்.
அநேக அற்புதங்களைச் செய்தவர் - இயேசுவே தேவன். "வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது."(மத்.28:18) "நான் சுயமாய் ஒன்றும் செய்கிறதில்லை, என்னை அனுப்பின பிதாவிற்கு சித்தமானதை செய்கிறேன்"(யோவான்.5:30) பழைய ஏற்பாட்டில் தேவனுடைய வல்லமை தம்முடைய ஊழியக்காரம் மூலமாய் விளங்கினதை கீழே காணப்படும் வசனங்களிலிருந்து அறிந்துகொள்ளலாம். 2 இராஜா 4:42-44, 1 இராஜ 5:14, 6:17-20, 1 இரா 17:22 எசேக் 37:1-14 புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தலர் காலத்திலும் வல்லமை வெளிப்பட்டது அப் 3:7, 5:15-16
இயேசுவானவர் நான் தேவன் என்னை பணிந்து வணங்குங்கள் என்று ஓரிடத்திலும் கூறவில்லை. கலாத்தியர் 4:8 நாம் இதை விளங்கிக்கொள்ளலாம். , ஆனால் நடைமுறை செயல்பாடுகள், வேத உண்மைகள், இயேசு தான் கடவுள் என்பதை நான் உறுதியாய் கூற எனக்கு வாய்ப்புகள் தந்தது. வேதவாக்கியங்கள் உண்மையானவகைள் என்று இயேசு கூறினார். அந்த வேத வாக்கியங்களே இயேசு தேவன் என கூறுவதற்கு அத்தாட்சியாக விளங்குகிறது. அந்த வேத வசனம் அவரின் மனித நேயத்தையும், பரிசுத்தத்தையும், பறைசாற்றும் உண்மை கூற்றுகளாய் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
நமது கேள்விக்கு பதிலாக பைபிள் வசனங்கள் இயேசுதான் மெய்யான கடவுள் என நிரூபிப்பது மட்டுமல்ல, கொடுக்கப்பட்டுள்ள பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாட்டு வசனங்கள் கூட அவர்தான் மெய்யான தேவன் என்று நமக்கு அறுதியிட்டு கூற விளக்கமாக இருக்கிறது. ஆதலால் எதை இயேசுவானவர் சொன்னாரோ அத்தனையும் உண்மையும் உறுதியுமாகிவிட்டது.
புதிய ஏற்பாடு மத்தேயு 5:17, 18 லூக்கா 24:25-27, 44-46 இந்த வசனங்களில் தீர்க்கதரிசன நிறைவேறுதலும் இயேசுவானவரின் உயர்ந்த நிலையையும், அவர்தான் தேவன் என்பதையும், அவர் வார்த்தைகள் உண்மையானது என்பதையும் நமக்கு நிரூபிக்கிறது. (ஆதலால் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசன வசனங்கள் அவரைக் குறித்தே சொல்லப்பட்டது என உறுதியாய்க் கூறமுடியும். அவரே தெய்வம் என்பதற்கும் இன்னும் புதிய அறிக்கைகள் தேவையற்றது. வேத வசனம் உண்மையானது, அந்த வசனம் இயேசு தான் மெய்தேவன் என்று திடமாய் விளக்கி சொல்லும் போது நிச்சயமாய் நாம் அதை விசுவாசித்து ஏற்றுக்கொள்கிறோம் அவரே “மெய்யான தேவன்”.
லூக்கா 4:16-18 இயேசுவானவர் தாமே தம்மைக் குறித்து ஏசாயா தீர்க்கன் சொன்ன தீர்க்கதரிசன வசனங்களை எடுத்துரைத்தார்.
ஏசாயா 61:1-3 உண்மையான தேவனின் வார்த்தையை செயல்படுத்த அவர் வந்திருப்பதை விளக்கினார்.
ஏசாயா 9:6 (குமாரன் இயேசு வல்லமையானவர், அவர் வல்லமையுள்ள குமாரன்).
ஏசாயா தீர்க்கன் இயேசுவைப்ப பற்றி உரைத்த அத்தனை காரியங்களும் உண்மமையய் நடந்தேறின.
மத்தேயு 22:41-46 இந்த வசனங்களில் இயேசுவானவர் தாமே தம்மைப்பற்றி தாவீதால் சங்கீதம் 110:1 ல் கூறப்பட்ட வார்த்தையை எடுத்துக் கூறினார். “காத்தர் என் ஆண்டவர்” தாவீது இயேசுவை “காத்தர் என் ஆண்டவர்” என அறிக்கையிடுகிறான். இதே போல் ஆதியாகமம் புத்தகம் முதல் மல்கியாவரையிலும் தோரா, நெபீம், கேத்துபீம் ஆகிய யாவும் கடவுளின் வார்த்தைகள் என்று அறுதியிட்டுக் கூறி உறுதிபடுத்துகிறார் இயேசு.
நான் ஒரு உண்மையான கேள்வியை கேட்க ஆசைப்படுகிறேன். ஆம் “ வேதசனம் இயேசுவானவரை கடவுள் என்று கூறவில்லையா? வேத வாக்கியங்கள் அவரைப்பற்றி கூறியிருப்பதை உன்னால் விசுவாசிக்க முடிகிறதா? இயேசுவானவர் சொன்னதை உன்னால் விசுவாசிக்க முடியாவிட்டர் அவரை நீ எப்படி விசவாசித்து நம்பமுடியும். நமக்கு ஏறக்குறைய 25 தீர்க்கதரிசிகளின் உறுதிசெய்யப்பட்ட வார்த்தைகளை இயேசுவானவர் அங்கீகரித்தார். ஆதலின் வேதாகம வசனங்கள் உண்மையுள்ளவைகள். (இதன் விளக்கம் “வேதாகமம் தேவவார்த்தையா” என்ற பதிப்பில் வெளியிடப்பட்டுள்ளது)
பழைய நியம புத்தகத்தில் இயேசுவானவருடைய தெய்வீகத் தன்மை, தெய்வீக செயல்பாடுகள், தெய்வீக கிரியைகள் வெளிப்படுத்தபட்டுள்ளது.
திரித்துவம்
ஒன்று என்றால் ஒன்றல்ல, ஒன்றிலும் அதிகமானது. எபிரேய மொழியில் “ஒன்று” என்பதற்கு ஒன்பது பதங்கள் (வார்த்தைகள்) கொடுக்கப்பட்டுள்ளது. ஆவை : இஸ், இஸா, நேபஸ், யாச்சிட், அல்மோனி, எக்ஹாத், காம், படாத், ச்சாட். ஆகும். முற்றிலும் ஒன்று என்றச் சொல் “யாச்சிட்” என்றும் ஒன்றிற்கும் அதிகம் என்பதற்கு “எக்ஹாத்” என்ற பதம் ஒருமைக்கும் பன்மைக்கும் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.
எரேமி 32:29 ஒரே இருதயத்தையும் ஒரே வழிகளையும் கட்டளையிட்டு (லேவ் எக்ஹத்) அவர்கள் லட்சமும், கோடியும் ஆக இருந்தார்கள் ஆனால் ஒன்றாய் ஒருமனதோடு காணப்பட்டனர் (எக்ஹத்) என்ற வார்த்தையின் படி ஒன்று ஆனால் அவர்கள் அநேகர்.
தேவன் முற்றிலும் ஒருவர் தானா?
முற்றிலும் ஒருவர் தான் என்பதற்கு “யாச்சிட்” என்ற பதம் கூறப்பட்டுள்ளது.
ஆதி 22:2 அப்பொழுது அவர், உன் புத்திரனும் உன் ஏகசுதனும் (யாச்சிட்)
ஆதி 22:12 எனக்காக ஒப்புக்கொடுத்த ஏகசுதன் (யாச்சிட்)
ஆதி 22:16 உன்புத்திரனும் ஏகசுதனும் (யாச்சிட்)
நியா 11:34 அவள் அவனுக்கு ஒரேபிள்ளை (யாச்சிட்)
சங் 25:16 எனக்கு இறங்கும் நான் தனித்தவன் (யாச்சிட்)
நீதி 4:3 என் தகப்பனுக்கு பிரியமானவன் (யாச்சிட்)
எரே 6:26 ஆமோ 8:10 சக்கரி 12:10 ஒரே பேரான குமாரன் (யாச்சிட்)
இங்கு எல்லா இடத்திலும் (யாச்சிட்) என்ற பதம் கிரேக்கச் சொல் முற்றிலும் ஒன்று என கூறும் படி உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. அருமையான இஸ்லாமிய நண்பனே கடவுள் ஒருவர் என கூறுவதற்கு “யாச்சிட்” என்ற பதம் உண்டா என நிரூபிப்பது உன் கடமையாகும்.
தேவன் ஒருவரே, ஒரே ஒரு தேவன் என்றால் அதன் விளக்கம்தான் என்ன?
(எக்ஹத்) ஒருவரானவர் ஃ பலரானவர். நெகேமியா 9:6 நீர் ஒருவரே கர்த்தர் ஏசாயா 37: 20 எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் ஒருவரே கர்த்தர்.
இவ்விதமாக வார்த்தைகள் வேதாகமத்திலிருந்து மேற்கோள் காட்டி தேவன் தனித்தவரே என நிரூபிக்கும்படி இஸ்லாமியர் வேதவாக்கியத்தை பயன்படுத்துகின்றனர்.
தேவன் ஒருவரே வேறு தேவர்கள் இல்லை; கீழே கொடுக்கப்பட்டுள்ள வேதவசனங்கள் யாவும் நமக்கு உண்மையான தேவன் யார் என்று வெளிப்படுத்துகிறது.
இந்த குறிப்பிட்ட வசனங்கள் ஒரு தேவன்தான் உண்டு என நிரூபிக்க பயன்படுத்துகின்றனர். யாத் 18:10 உபா 4:35, 39. 32:39 , 2 சாமு 7:22, 22:32, 1 இரா 8:60,
1 நாள 17:20, சங் 18;31, ஏசா 43:10, 44:6-8, 45:5,14,18,21, 46:9 இவைகளில் எந்த இடத்திலும் “யாச்சிட்” என்ற கிரேக்க பதம் வருவதில்லை. மாறாக “எக்ஹத்” என்பதே பயன்படுத்தப்பட்டுள்ளது. சக்கரியா 4:9
ஒருமையிலும், பண்மையிலும் கடவுளைப் பற்றி நாம் வார்த்தைகளைப் எப்படி உபயோகப்படுத்துகிறோம்.
A.ஒருமையின் வார்த்தைகள்:
ஒருமையும், திரித்துவத்தையும் பற்றி பேசுகிறவர்கள் வேதத்தில் தேவனின் நாம் தனித்ததுமாய் நிற்பதைக் கண்டு சந்தோஷமடைகின்றனர். எப்படியென்றால் பெயர், பலபெயர், செயல், செயல்கள் என இப்படிப் பல.
1. என்னால், நான் தேவன், கர்த்தர், ஏல். எண்ணாகமம் 23:19, ஆதி 33:20, ஏசா 45:11 இந்த வசனங்களில் தனித்துமான கர்த்தர் என்ற பதம் “எல்” அல்லது “போரா” (BOREH) உண்டாக்கினவர் என்றும் செயல்படுகிறவர் என்றும் “பார” என்றும், “வியட்சரோ” (MAKER) என்றும் பண்மையில் ஏசா 45:11 ல் “யாத்சா” என்றும் காணலாம்.
B.பன்மையில் கர்த்தரின் பெயர்கள்
ஏலோஹிம், நாங்கள், எங்கள், என்னுடைய, எங்களுடைய மற்றும் அவர்கள். சரியான வார்த்தை ஏலோஹிம் என்று ஆதி 1:1 லும் ஆதி 1:26, நமது சாயலாகவும் 1:27 நம்முடைய சாயலாக.
C.பண்மையில் கூறும் நபர்கள்.
ஆதி 19:24, ஏசா 48:12-17, ஓசியா 1:7 இப்பகுதிகளில் ஒருவரிலும் அதிகம் என காணப்படுகிறது. பண்மையில், பெயர், பெயர்கள், இப்படி வருகிறது: நாம், நமது, நம்முடைய – எப்படியெனில் இந்த பதங்கள் ஒன்றிலும் அதிகமானவர்கள் என விளக்கிக் கூறுகிறது. பன்மையில் எழுதப்பட்டிருப்பதால் “ஒன்றிலும் அதிகமானவர்கள்" என்று விளங்கிக் கொள்ளலாம்.
"கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி ….. . நீர் எனது வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார்.(சங் 110:1) "கர்த்தர் என் ஆண்டவரோடு சொன்னார்"(மத் 22:41-46 )
யோவான் 8:56-58 ஆபிரகாமிற்கு முன் இருந்தேன்.
மத்தேயு 28:19 பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர்.
இயேசுவானவர் தன் சொந்த வார்த்தையால் பிதா,குமாரன், பரிசுத்த ஆவி என மொழிந்தருளினார். இது எந்த மனிதனுடைய கண்டுபிடிப்புமல்ல - மத்தேயு 28:19 – உறுதியான நிலைப்பாட்டை காண்பிக்கிறது.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)