Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயேசுவை வணங்க சொல்லி எங்குமே சொல்லவில்லை!!!

Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: இயேசுவை வணங்க சொல்லி எங்குமே சொல்லவில்லை!!!
Permalink  
 
பென் அவர்களே,நான் உங்களை இந்த தளத்தைவிட்டு ஓடச் சொல்லவில்லை; நீர் எழுப்பக்கூடிய கேள்விகளுக்கு இங்கே ஏற்கனவே பதிலளிக்கப்பட்டிருக்கிறது என்றே சொன்னேன்;உதாரணமாக இந்த திரியிலேயே நண்பர்கள் இயேசுவை தெய்வமாகத் தொழவேண்டியதன் அவசியத்தையும் அதன் மேன்மையையும் அழகுற எடுத்துரைத்துள்ளனர்;நீங்கள் கண்செருகிப்போன குருடனாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை;அல்லா யாரென்றே தெரியாத நீங்கள் இஸ்லாமியருடைய நடைமுறைகளுக்கு விரோதமாக அல்லா மீதே சத்தியம் செய்வதிலிருந்தே தெரிகிறது நீங்கள் யாரென்பது..?

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

pen

Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 8
Date:
Permalink  
 
இவர் மீண்டும் எம்மை குழப்புகிறார்!!!  அல்லாவின் நாமத்தால் சொல்கிறேன்!!  நான் இஸ்லாமியன். தங்களின் ஊகங்களுக்கு பதில் சொல்ல எனக்கு நேரம் இல்லை. நீங்கள் இயேசுவை தெய்வமாகத் தொழுவதால் உங்களுக்கு என்ன நஷ்டம்..?எனக்கு ஒரு நஷ்டமும் இல்லை!! ஆனால் உங்கள் அறியாமையே நினைத்து நாம் வெக்கப்படுகிறோம். இருப்பினும் தாங்களை நான் குழப்புகிறேன் என்று சொல்வதின் நிமித்தம் இன்று இருந்து இந்த தளத்தை விட்டு விலகிக்கொள்கிறேன்!!  பின்குறிப்பு:  நீங்கள் அனைவரும் பைப்லை தவறாக புரிந்துகொண்ட விவாதம் செய்கிறிர்கள் என்பது மட்டும் எமக்கு தெளிவாக தெரிகிறது.

chillsam wrote:

தோழர் பென் அவர்களே,நீங்கள் பெண் அல்லது பென் என்ற பெயரில் இங்கே நுழைந்து கேள்விகளை அடுக்கிக்கொண்டிருக்கிறீர்கள்;தாவீது அரசன் சொல்லுகிறான்,

  • "இதோ, உள்ளத்தில் உண்மையிருக்க விரும்புகிறீர்; அந்தக்கரணத்தில் ஞானத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்."(சங்கீதம்.51:6)‌.

என்பதாக;நீங்கள் உண்மையான ஆளாக இருந்தால் உங்கள் விசுவாசத்தை அறிக்கையிட்டு அதன் அடிப்படையில் பதிவுகளைத் தரலாம் அல்லது கேள்விகளைக் கேட்கலாம்; கேள்விகளையும் அறிந்துகொள்ளும் பாவனையிலேயே கேட்க வேண்டும் என்று ஏற்கனவே அறிவித்திருக்கிறேன்; சத்தியமே உங்களை சத்தியத்தை நோக்கி நடத்தவல்லது;ஒருவரும் உங்களுக்கு அறிவிக்கவேண்டிய அவசியமில்லை; உங்களைப் பொறுத்தவரை ஏற்கனவே பழகிய நண்பராக இருந்தும் போலியாக இஸ்லாமியன் என்று சொல்லிக்கொண்டு அதே அரைத்த மாவையே அரைக்க உங்களுக்கு வெட்கமாக இல்லையா? ஏற்கனவே இங்கே சகாயம் என்பவரும் இன்னும் சில மாற்று நம்பிக்கையாளரும் வந்து எங்களை சோதித்துக் கொண்டுதானிருக்கிறார்கள்.நீங்கள் அறிந்த காரியத்திலும் கிடைத்த வெளிச்சத்திலும் முன்னேறுங்கள்; உங்களுக்கு சொல்லவேண்டியதெல்லாம் சொல்லியாகிவிட்டது; இனி நியாயத்தீர்ப்பு மாத்திரமே எஞ்சியுள்ளது.இங்கே நண்பர்களுடைய உணர்ச்சிகளைத் தூண்டி அவர்களுடைய பொன்னான நேரத்தை வீணாக்க உங்களை அனுமதிக்கமுடியாது.

என்னுடைய ஒரே தாழ்மையான கோரிக்கை,நீங்கள் ஒரு இஸ்லாமியன் என்பதை நிரூபியுங்கள்; நீங்கள் பிறப்பால் முகமதியனா அல்லது தற்போதும் முகமதியனா என்பதிலேயே தெளிவு இல்லை; இனியும் வே(பே)தமாணவர் அல்லது (இரஸலின்) யெகோவா சாட்சிகளுடன் நாங்கள் விவாதித்த காரியங்கள் தொடர்பாக கேள்விகள் கேட்கவேண்டாம். அது எங்களுக்கு சலிப்பையே தருகிறது; நாங்கள் இயேசுவை தெய்வமாகத் தொழுவதால் உங்களுக்கு என்ன நஷ்டம்..? எங்கள் வேலையை நாங்கள் பார்க்கிறோம், உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள்;நீங்கள் புதிய ஆளாக இருந்தால் முதலில் இந்த தளத்திலுள்ள அனைத்து பதிவுகளையும் ஓரளவு வாசித்து கிரகித்துக்கொள்ளுங்கள்;பிறகு கேள்வி கேட்கவேண்டிய அவசியமே இராது; இங்கிருக்கும் ஒருவரைக் கூட உங்களால் வஞ்சிக்கவோ திசைதிருப்பவோ உங்களால் முடியாது;நீங்கள் பழகிய எதிரி என்பதே என் அனுமானம்.

__________________

Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 
pen wrote:

நண்பர் கொல்வின் அவர்களே, நான் பிறப்பால் இஸ்லாமிய மார்க்கத்தை சேர்ந்தவன். ஆகையால் தான் கிறிஸ்தவ மதம் என்ன சொல்கின்றது என்பதை கற்றுக்கொண்டேன். நீங்கள் சொன்னதின் நிமித்தம் இந்த இணையதளங்களை பார்வையிட்டேன். யேகோவா என்ற பெயரை கொண்ட தேவனும் உண்டோ? அப்படி என்றால் இயேசுவும் கடவுள் ஆவியும் கடவுளோ? நீங்கள் அனைவரும் வாசிக்கும் பைபல் ஒன்றாக இருக்கும் போது எப்படி இவ்வாறு இரு விசுவாசம் உங்களுக்குள் புகுந்தது?  இதற்குதான் ஏரியஸ், அத்நாஷியஸ் போன்றவர்களின் வரலாறைக் கிளறவேண்டும். இங்குதான் கிறிஸ்தவ மண்டல போதனைகள் தவறாக பரவ ஆரம்பித்த காலம். இதை நாங்கள் வேறு ஒரு திரியில் விவாதிப்போம்!!!!

 நண்பர் பென் அவர்களே. வித்தியாசம் மனிதப் போதனைகளில்தான் உள்ளது வேத வசனங்கள் தெளிவாகத்தான் உள்ளன. இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம்

வேறொரு சுவிசேஷம் இல்லையே; சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல.(Gal 1:7)

__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)

Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 
நீங்கள் பதித்த இந்த வசனமே இவர் மிகாவேல் தேவதூதர் அல்ல என்பதை மிகத் தெளிவாக சொல்கிறதே

 ''ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும்( அதாவது, குரலோடும்), தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்'':

கர்த்தர் மிகாவேல்  தேவதூதரின் சத்தத்தோடு வருவார் என்றால் என்ன அர்த்தம் இயேசுவுடன் மிகாவேல் தேவதூதன் வருவான் என்றுதானே அர்த்தம். இங்கு தேவன் என் குறிப்பிடப்பட்டிருப்பவர் இயேசுகிறிஸ்துதான். 

__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)

Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 
pen wrote:

///யோசிங்க சார், மேலும் உங்களுக்கெல்லாம் இயேசுவின் தெய்வத்தன்மை புரியாமலிருப்பது அதிசயமல்ல. கீழ்கண்ட வசனங்களை வாசித்து பாருங்கள் புரியும்.///

ஐயா அசோக்குமார் அவர்களே, எனக்கு இயேசுவுக்கு  தெய்வத்தன்மை இருப்பதாக தெரியவில்லை!!!  எங்கள் மார்க்கம் படி இயேசுவை நாங்கள் இறைதூதராகவே நம்புகிறோம்!!!  ஆனால் உங்கள் வேதமே அதற்கு ஆதாரமாக அவர் ஆரம்பத்தில் மீகாவேல் என்ற தூதராகவே இருந்து இருக்கிறார்!!!  அதற்க்கான வேதப் பதிவு இதோ...

இயேசு தேவனின் முதல்படைப்பு. வெளிப் 3 :14        கொலேசெயர் 1 :15 -17
அவர் ஒரு தூதுவராக இருந்தார்( மீகாவேல்)  1 தெசலோனிக்கேயர் 4:16 இவ்வாறு சொல்கிறது: ''ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும்( அதாவது, குரலோடும்), தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்'':

யூதா 9-இல் இந்தப் பிரதான தூதன் மிகாவேல் எனச் சொல்லிருக்கிறது.

 ஹா...ஹா.. சும்மா தமாஷ் பண்ணாதீங்க சார். இயேசு மிகாவேல் தேவதூதரல்ல. நான் ஏற்கனவே ஒரு கட்டுரை பதிந்துள்ளேன். அதை படித்து விட்டு பதில் எழுதுங்கள்

இதோ தொடுப்பு

 இயேசு மிகாவேல் தேவதூதரா

__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)

Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 
தோழர் பென் அவர்களே,நீங்கள் பெண் அல்லது பென் என்ற பெயரில் இங்கே நுழைந்து கேள்விகளை அடுக்கிக்கொண்டிருக்கிறீர்கள்;தாவீது அரசன் சொல்லுகிறான்,

  • "இதோ, உள்ளத்தில் உண்மையிருக்க விரும்புகிறீர்; அந்தக்கரணத்தில் ஞானத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்."(சங்கீதம்.51:6)‌.

என்பதாக;நீங்கள் உண்மையான ஆளாக இருந்தால் உங்கள் விசுவாசத்தை அறிக்கையிட்டு அதன் அடிப்படையில் பதிவுகளைத் தரலாம் அல்லது கேள்விகளைக் கேட்கலாம்; கேள்விகளையும் அறிந்துகொள்ளும் பாவனையிலேயே கேட்க வேண்டும் என்று ஏற்கனவே அறிவித்திருக்கிறேன்; சத்தியமே உங்களை சத்தியத்தை நோக்கி நடத்தவல்லது;ஒருவரும் உங்களுக்கு அறிவிக்கவேண்டிய அவசியமில்லை; உங்களைப் பொறுத்தவரை ஏற்கனவே பழகிய நண்பராக இருந்தும் போலியாக இஸ்லாமியன் என்று சொல்லிக்கொண்டு அதே அரைத்த மாவையே அரைக்க உங்களுக்கு வெட்கமாக இல்லையா? ஏற்கனவே இங்கே சகாயம் என்பவரும் இன்னும் சில மாற்று நம்பிக்கையாளரும் வந்து எங்களை சோதித்துக் கொண்டுதானிருக்கிறார்கள்.நீங்கள் அறிந்த காரியத்திலும் கிடைத்த வெளிச்சத்திலும் முன்னேறுங்கள்; உங்களுக்கு சொல்லவேண்டியதெல்லாம் சொல்லியாகிவிட்டது; இனி நியாயத்தீர்ப்பு மாத்திரமே எஞ்சியுள்ளது.இங்கே நண்பர்களுடைய உணர்ச்சிகளைத் தூண்டி அவர்களுடைய பொன்னான நேரத்தை வீணாக்க உங்களை அனுமதிக்கமுடியாது.

என்னுடைய ஒரே தாழ்மையான கோரிக்கை,நீங்கள் ஒரு இஸ்லாமியன் என்பதை நிரூபியுங்கள்; நீங்கள் பிறப்பால் முகமதியனா அல்லது தற்போதும் முகமதியனா என்பதிலேயே தெளிவு இல்லை; இனியும் வே(பே)தமாணவர் அல்லது (இரஸலின்) யெகோவா சாட்சிகளுடன் நாங்கள் விவாதித்த காரியங்கள் தொடர்பாக கேள்விகள் கேட்கவேண்டாம். அது எங்களுக்கு சலிப்பையே தருகிறது; நாங்கள் இயேசுவை தெய்வமாகத் தொழுவதால் உங்களுக்கு என்ன நஷ்டம்..? எங்கள் வேலையை நாங்கள் பார்க்கிறோம், உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள்;நீங்கள் புதிய ஆளாக இருந்தால் முதலில் இந்த தளத்திலுள்ள அனைத்து பதிவுகளையும் ஓரளவு வாசித்து கிரகித்துக்கொள்ளுங்கள்;பிறகு கேள்வி கேட்கவேண்டிய அவசியமே இராது; இங்கிருக்கும் ஒருவரைக் கூட உங்களால் வஞ்சிக்கவோ திசைதிருப்பவோ உங்களால் முடியாது;நீங்கள் பழகிய எதிரி என்பதே என் அனுமானம்.

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 
//யோவான் 1 :1  - ஐ தான் எழுதினபோது அப்போஸ்தலன் யோவான் பொருள் கொண்டதென்ன? இயேசுதாமே கடவுள் என்று அல்லது ஒருவேளை இயேசு பிதாவுடன் ஒரே கடவுளாக இருந்தாரென பொருள் கொண்டானா? அதே அதிகாரத்தில் 18 -ஆம் வசனத்தில் யோவான் பின்வருமாறு எழுதினான். "தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை, பிதாவின் மடியில் இருக்கிற ஒரே பேரான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்". குமாரனான இயேசு கிறிஸ்துவை எந்த மனிதனாவது கண்டானா? நிட்சயமாகவே கண்டான்!!! அப்படியானால், இயேசு கடவுள் என்று யோவான் சொன்னானா? இல்லை என்று தெளிவாகின்றது!!!  //
 
நீங்க எல்லாம் ஒரே  University ல் ஒன்றாக படித்து விட்டு இங்கே வருகிறீர்களா? யோவான் 1:1 ல் இயேசு தேவன் என்றும், 1:18 ல் தேவனை யாரும் காணவில்லை என்றால் இயேசு தேவனில்லை என்று சொல்லுவீர்களா? அப்போது யோவான் 1:1 ஐ எடுத்து விடலாமா? யோவான் 1:1 ம் உண்மை 1:8 ம் உண்மை என்றால் ஒரே தேவன் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட ஆள்தத்துவம் உள்ளவராக இருக்கிறார் என்பதே பொருள். ஒரு ஆள்தத்துவமாகிய பிதாவானவர் மனிதரில் ஒருவரும் காணக்கூடாதவரும், கண்டிராதவருமாய் இருக்கிறார். மற்றொரு ஆள்தத்துவமான குமாரனானவர் மனிதர்களோடு உறவாடக்கூடிய , தேவனுக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள உறவுப்பாலமாக இருக்கிறார். சரி யோவான் 1:8 ஐயாவது  முழுமையாக ஏற்று கொள்ளுகிறீர்களா? இயேசு கிறிஸ்து பிதாவின் மடியில் இருந்தார் என்றால் என்ன அர்த்தம்? எப்போது அப்படி இருந்தார் உலகத்திற்கு வரும் முன்பா அல்லது வந்து மரித்து உயிர்த்த பின்பா?

__________________
pen

Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 8
Date:
Permalink  
 
///யோசிங்க சார், மேலும் உங்களுக்கெல்லாம் இயேசுவின் தெய்வத்தன்மை புரியாமலிருப்பது அதிசயமல்ல. கீழ்கண்ட வசனங்களை வாசித்து பாருங்கள் புரியும்.///

ஐயா அசோக்குமார் அவர்களே, எனக்கு இயேசுவுக்கு  தெய்வத்தன்மை இருப்பதாக தெரியவில்லை!!!  எங்கள் மார்க்கம் படி இயேசுவை நாங்கள் இறைதூதராகவே நம்புகிறோம்!!!  ஆனால் உங்கள் வேதமே அதற்கு ஆதாரமாக அவர் ஆரம்பத்தில் மீகாவேல் என்ற தூதராகவே இருந்து இருக்கிறார்!!!  அதற்க்கான வேதப் பதிவு இதோ...

இயேசு தேவனின் முதல்படைப்பு. வெளிப் 3 :14        கொலேசெயர் 1 :15 -17
அவர் ஒரு தூதுவராக இருந்தார்( மீகாவேல்)  1 தெசலோனிக்கேயர் 4:16 இவ்வாறு சொல்கிறது: ''ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும்( அதாவது, குரலோடும்), தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்'':

யூதா 9-இல் இந்தப் பிரதான தூதன் மிகாவேல் எனச் சொல்லிருக்கிறது.

Ashokkumar wrote:

Pen,

smile

உங்களுக்கு என்னுடைய முந்தைய பதில் புரியவில்லை போலும்.

உங்களை கண்டவர் உங்கள் தகப்பனாரையும் கண்டார்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா? அப்படி நானும் சொல்ல முடியாது, நீங்களும் சொல்ல முடியாது. ஆனால், இயேசு ஏன் இப்படி சொல்கிறார்:

  • அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்;யோவான் 14 :9 

யோசிங்க சார், மேலும் உங்களுக்கெல்லாம் இயேசுவின் தெய்வத்தன்மை புரியாமலிருப்பது அதிசயமல்ல. கீழ்கண்ட வசனங்களை வாசித்து பாருங்கள் புரியும்.

  • என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்கிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்; நானும் அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன் என்றார். - யோவான் 14 :21

__________________

Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
Permalink  
 
Pen,

smile

உங்களுக்கு என்னுடைய முந்தைய பதில் புரியவில்லை போலும்.

உங்களை கண்டவர் உங்கள் தகப்பனாரையும் கண்டார்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா? அப்படி நானும் சொல்ல முடியாது, நீங்களும் சொல்ல முடியாது. ஆனால், இயேசு ஏன் இப்படி சொல்கிறார்:

  • அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்;   யோவான் 14 :9 .

யோசிங்க சார், மேலும் உங்களுக்கெல்லாம் இயேசுவின் தெய்வத்தன்மை புரியாமலிருப்பது அதிசயமல்ல. கீழ்கண்ட வசனங்களை வாசித்து பாருங்கள் புரியும்.

  • என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்கிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்; நானும் அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன் என்றார். - யோவான் 14 :21

__________________
pen

Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 8
Date:
Permalink  
 
நண்பர் கொல்வின் அவர்களே, நான் பிறப்பால் இஸ்லாமிய மார்க்கத்தை சேர்ந்தவன். ஆகையால் தான் கிறிஸ்தவ மதம் என்ன சொல்கின்றது என்பதை கற்றுக்கொண்டேன். நீங்கள் சொன்னதின் நிமித்தம் இந்த இணையதளங்களை பார்வையிட்டேன். யேகோவா என்ற பெயரை கொண்ட தேவனும் உண்டோ? அப்படி என்றால் இயேசுவும் கடவுள் ஆவியும் கடவுளோ? நீங்கள் அனைவரும் வாசிக்கும் பைபல் ஒன்றாக இருக்கும் போது எப்படி இவ்வாறு இரு விசுவாசம் உங்களுக்குள் புகுந்தது?  இதற்குதான் ஏரியஸ், அத்நாஷியஸ் போன்றவர்களின் வரலாறைக் கிளறவேண்டும். இங்குதான் கிறிஸ்தவ மண்டல போதனைகள் தவறாக பரவ ஆரம்பித்த காலம். இதை நாங்கள் வேறு ஒரு திரியில் விவாதிப்போம்!!!!

__________________
pen

Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 8
Date:
Permalink  
 
நண்பரே சில்சாம் அவர்களே, எனக்கு நீங்கள் எழுதிய கருத்தின் அர்த்தம் புரியவில்லை!!!  இதை எனக்கு தான் எழுதினிங்களா? அல்லது வேறு யாருக்காவது எழுதினீங்களா?

chillsam wrote:

மாற்றான் வலியறிந்து மோது என்பர்; (மேசியாவின்) எதிரி இன்னான் என்று அடையாளங் காணாமல் அடிப்பதோ அழிப்பதோ நமக்கு வழக்கமில்லை; ஆனாலும் சொல்லிவைக்கிறேன், (மேசியாவின்) எதிரி பழைய கூடாரத்திலிருந்து, புதிய வேடம் கட்டி வந்திருக்கிறான் என்கிறேன்; எதிர்கொள்வோம்.

__________________
pen

Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 8
Date:
Permalink  
 
நண்பர் அசோக்குமார்  அவர்களே, நீங்கள் நினைப்பதைப் போல எனக்கு ஒரு ஆணவமும் இல்லை!! அத்துடன் தங்களின்  வேதப்பதிவுகளுக்கு  நன்றி.

"இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாம்."(மத்தேயு 1 :23)

பதில்:- வரவிருந்த இயேசுவின் பிறப்பை அறிவிக்கையில், கடவுள்தாமே அந்தப் பிள்ளையாக இருப்பாரென உங்கள் கடவுளின் தூதன் சொன்னானா? இல்லை, அந்த அறிவிப்பு என்னவெனில்: "அவர் பெரியவராய் இருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்" என்பதே!!!  இயேசு தாமே தாம் கடவுளா இருந்ததாக ஒருபோதும் பாராட்டவில்லை, அதற்கு மாறாக "தேவனுடைய குமாரன்" என்றே கூறினார்!!!  இயேசுவைக் கடவுள் உலகத்துக்குள் அனுப்பினார். ஆகையால் இந்த ஒரே பேரான குமாரனின் மூலம் கடவுள் மனிதவர்க்கதுடன் இருந்தார். யோவான் 3 : 17 :::  17 : 8

எபிரேய பெயர்கள் கடவுள் என்பதற்க்கான சொல்லை அல்லது கடவுளுடைய சொந்தப் பெயரின் சுருக்கச் குரிஈட்டயும் தங்களுக்குள் உள்ளடங்கலாகச் கொண்டிருப்பது அசாதாரனமில்லை. உ +ம் எலியாத்தா  என்பது "கடவுள் வந்துவிட்டார்" என பொருள் கொள்கிறது!!!! யெகூ என்பதன் பொருள் " கர்த்தரே அவர்" எலியா என்பதன் பொருள் "என் கடவுள் கர்த்தாவே" என்பதாகும். ஆனால் இந்தப் பெயர்களில் எதுவும் அந்தப் பெயரை உடையவன் தானே கடவுள் என மறைமுகமாக குறிப்பிடவில்லை.

"ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது."(யோவான் 1 :1)

 பதில்:- கிறிஸ்தவர்கள் அடிக்கடி பாவிக்கும், மற்றும் தவறாக புரிந்து கொண்ட வசனமும் கூட!!!  
யோவான் 1 :1  - ஐ தான் எழுதினபோது அப்போஸ்தலன் யோவான் பொருள் கொண்டதென்ன? இயேசுதாமே கடவுள் என்று அல்லது ஒருவேளை இயேசு பிதாவுடன் ஒரே கடவுளாக இருந்தாரென பொருள் கொண்டானா? அதே அதிகாரத்தில் 18 -ஆம் வசனத்தில் யோவான் பின்வருமாறு எழுதினான். "தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை, பிதாவின் மடியில் இருக்கிற ஒரே பேரான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்". குமாரனான இயேசு கிறிஸ்துவை எந்த மனிதனாவது கண்டானா? நிட்சயமாகவே கண்டான்!!! அப்படியானால், இயேசு கடவுள் என்று யோவான் சொன்னானா? இல்லை என்று தெளிவாகின்றது!!!  தன சுவிஷ்சசதின் முடிவுப் பகுதியில், யோவான் காரியங்களை மிக எழிதாக சுருக்கி விவரமாகவும் அதை வாசிக்கும் நாங்கள் கூட குழம்பாத வகையில் "இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும் படி..... இவைகள் எழுதப்பட்டிருகிறது" யோவான் 20: 31 இதில் என்ன குழப்பம் உங்களுக்கு !!!!

நண்பர் ஜோன் மற்றும் கொல்வின் சில்சாம் அவர்களின் கேள்விக்கு பதில் தயாராகின்றது!!!!

__________________

Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 
pen wrote:

கிறிஸ்தவ மக்கள் அல்லது கிறிஸ்தவ மண்டலத்தில் உள்ளவர்கள் ஏன் இயேசுவை கடவுளாக வணங்குகிறார்கள்? இதற்கு வேத ஆதாரப்பூர்வம் உண்டா? நான் ஏன் இந்தக் கேள்வியே கேட்கிறேன் என்றால் நானும் பல வருடங்களாக கிறிஸ்த பைப்லை வாசித்து வருகிறேன்!!!  அதில் இயேசுவை வணங்க சொல்லி எங்குமே சொல்லவில்லை. வேதப் பதிவு இப்படி இருக்கும் போது கிறிஸ்தவர்கள் எதை ஆதாரமாக கொண்டு இயேசு தான் தெய்வம் என்று வணங்க்குவத்தின் மர்மம் என்ன?

 உங்கள் பைபிளில் சகோ. ஜோன், சகோ. அசோக் குமார்  கூறிய வசனங்கள் இல்லையா? இதிலிருந்து தெரிகிறது நீங்கள் வசனம் வாசிக்கும் இலட்சணம். கோவைபெரியன்தான் தேவதூதனுக் கால் இல்லை. பாதம் உண்டு என கூறுகிறாரே. அப்படிப்பார்த்தால் வணங்கியிருக்க சந்தரப்பம் உண்டுதானே! சகோ. அன்புவைப் பொறுத்தவரை பரலோகத்தில் இயேசுவை வணங்கித் தொழுவதும் பூலோகத்தில் அரசசபையில் அரசனை வணங்குவதும் சமன் அவர்களிடம் போய் கேளுங்கள் இன்னும் சிறப்பாக பதில் தருவார்கள். இதோ அவர்களின் இணையத்தள முகவரிகள்

கோவைவெறியனின் இணையத்தளம்

இவருக்கு ரசலின் ஆவியும் ஏரியசின் ஆவியும் உண்டு. போய் கேட்டுப் பாருங்கள். விடை பகர்வார்

kovaibereans.activeboard.com

அன்புவின் நித்தியஜீவன்

மூலபாஷையில் வித்தகர். எந்தக் கேள்விக் கேட்டாலும் பட்டென்று பதில் தருபவர். தேவனின் எண்ணங்களை அறிந்தவர். தேவன் அறியாதது கூட இவருககுத் தெரியும்

eternal-life.activeboard.com

__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)

Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: இயேசுவை வணக்க சொல்லி எங்குமே சொல்லவில்லை!!!
Permalink  
 
மாற்றான் வலியறிந்து மோது என்பர்; (மேசியாவின்) எதிரி இன்னான் என்று அடையாளங் காணாமல் அடிப்பதோ அழிப்பதோ நமக்கு வழக்கமில்லை; ஆனாலும் சொல்லிவைக்கிறேன், (மேசியாவின்) எதிரி பழைய கூடாரத்திலிருந்து, புதிய வேடம் கட்டி வந்திருக்கிறான் என்கிறேன்; எதிர்கொள்வோம்.

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
இயேசுவை வணங்க சொல்லி எங்குமே சொல்லவில்லை!!!
Permalink  
 
//கிறிஸ்தவ மக்கள் அல்லது கிறிஸ்தவ மண்டலத்தில் உள்ளவர்கள் ஏன் இயேசுவை கடவுளாக வணங்குகிறார்கள்? இதற்கு வேத ஆதாரப்பூர்வம் உண்டா? நான் ஏன் இந்தக் கேள்வியே கேட்கிறேன் என்றால் நானும் பல வருடங்களாக கிறிஸ்த பைப்லை வாசித்து வருகிறேன்!!! அதில் இயேசுவை வணங்க சொல்லி எங்குமே சொல்லவில்லை. வேதப் பதிவு இப்படி இருக்கும் போது கிறிஸ்தவர்கள் எதை ஆதாரமாக கொண்டு இயேசு தான் தெய்வம் என்று வணங்க்குவத்தின் மர்மம் என்ன?//

இது ஒரு புதிராக இருக்கிறது! இயேசு கிறிஸ்துவை தொழச்சொல்லியும், தொழுதுகொள்வதாகவும் நிறைய வசனங்கள் வேதத்தில் உண்டு. உதாரணத்திற்கு சில வசனங்கள:-
  • மேலும், தமது முதற்பேறானவரை உலகத்தில் பிரவேசிக்கச் செய்தபோது: தேவதூதர் யாவரும் அவரைத் தொழுது கொள்ளக்கடவர்கள் என்றார் (எபிரெயர் 1:6)
  • கொரிந்துவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாயும், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களாயுமிருக்கிற தேவனுடைய சபைக்கும், எங்களுக்கும் தங்களுக்கும் ஆண்டவராயிருக்கிற நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தை எங்கும் தொழுதுகொள்ளுகிற அனைவருக்கும் எழுதுகிறதாவது (I கொரிந்தியர் 1:2)
  • இங்கேயும் உம்முடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற யாவரையுங் கட்டும்படி அவன் பிரதான ஆசாரியர்களால் அதிகாரம் பெற்றிருக்கிறானே என்றான். (அப்போஸ்தலர் 9:14)

__________________

Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
இயேசுவை வணக்க சொல்லி எங்குமே சொல்லவில்லை!!!
Permalink  
 
என்ன ஒரு ஆணவம்...

இயேசுவை தெய்வமாய் தொழும்படி வேதத்தில் எங்குள்ளது என்று கேட்டால் பவாயில்லை.எடுத்தவுடன் "இயேசுவை வணக்க சொல்லி எங்குமே சொல்லவில்லை" என்று தீர்ப்பு சொல்லிவிட்டு, விவாதம் என்றால் என்ன அர்த்தம்..? 
  • "இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாம்."(மத்தேயு 1 :23)
  • "ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது."(யோவான் 1 :1)
உங்கள் கேள்விக்கு இவ்வளவு பதில் போதும் என்று நினைக்கிறேன்.

__________________
pen

Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 8
Date:
இயேசுவை வணங்க சொல்லி எங்குமே சொல்லவில்லை!!!
Permalink  
 
கிறிஸ்தவ மக்கள் அல்லது கிறிஸ்தவ மண்டலத்தில் உள்ளவர்கள் ஏன் இயேசுவை கடவுளாக வணங்குகிறார்கள்? இதற்கு வேத ஆதாரப்பூர்வம் உண்டா? நான் ஏன் இந்தக் கேள்வியே கேட்கிறேன் என்றால் நானும் பல வருடங்களாக கிறிஸ்த பைப்லை வாசித்து வருகிறேன்!!!  அதில் இயேசுவை வணங்க சொல்லி எங்குமே சொல்லவில்லை. வேதப் பதிவு இப்படி இருக்கும் போது கிறிஸ்தவர்கள் எதை ஆதாரமாக கொண்டு இயேசு தான் தெய்வம் என்று வணங்க்குவத்தின் மர்மம் என்ன?

__________________
Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us

Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard