Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தீர்க்கதரிசி வின்சென்ட் செல்வகுமார்


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
RE: தீர்க்கதரிசி வின்சென்ட் செல்வகுமார்
Permalink  
 


உண்மைதான் இந்த தகவலை சொன்னது கூட கொல்டா அவர்கள் தான்,

இதுதான் நான் சொன்ன தகவல்!

---

Angel TV is hosting open heavens prophetic conference in Jerusalem, Isarel for the past 3/4 years.

இந்த முறை எருசலேம் மட்டுமல்ல, எகிப்திற்கும் செல்ல வேண்டும் என்று ஆண்டவர் சொன்னதால், முதலில் இவர்கள் எகிப்திற்கு சென்றார்கள். ஆனால் எதற்கு ஆண்டவர் கொண்டு செல்கிறார் என்று தெரியததால், விமான பயணத்தில், இவர் (வின்சென்ட் செல்வகுமார்) ஏன், எதற்கு என்று ஜெபித்துக் கொண்டே இருந்திருக்கிறார். அப்பொழுது ஒரு எகிப்திய ஆடை அணிந்த ஒரு பெண்(ஆவி) விமான பணிப்பெண் போல் நடந்து - இது என் ஏரியா. நீயும், சாதுவும் என்ன செய்துவிடுவீர்கள் என்று பார்க்கலாம் என்று சொல்லிக் கொண்டு நடந்து மறைந்து விட்டதாம்.

பிறகு அவர் தங்கியிருந்த இடத்தில் (என்று நினைக்கிறேன்) ஜெபிக்கும்போது ஆண்டவரே கேள்வி கேட்கச் சொல்லி வெளிப்படுத்திய காரியம் என்னவென்றால்:

1. வெளி 13:1 ல் சொல்லப்பட்ட அந்த கடற்கரை - செங்கடல் கரை. எகிப்து தேசத்தின் பார்வோன் மந்திர சக்தியை அதிகமாக நம்புகிறவன். அவன் வருடத்தின் குறிப்பிட்ட காலத்தில், தன் மந்திரவாதிகளோடு கடற்கரை சென்று அதிகமாய் நரபலி செலுத்தி பிசாசைப் பணிந்து கொள்வானாம். அப்பொழுது இந்த 7 தலை 10 கொம்புள்ள மிருகம் கடலிருந்து எழும்பி வந்து பார்வோனை ஆசீர்வதித்து , தன் வ்ல்லமையைக் கொடுக்குமாம்.

எப்படி இயேசு கிறிஸ்து மாம்சத்தில் வெளிப்படும் முன் பழைய ஏற்பாடு பரிசுத்தவான்களுக்கு காட்சியளித்தாரோ, அப்படியே அந்தி கிறிஸ்துவும் பூமியில் வெளிப்படும் முன், தன்னை உண்மையாய் (!) தேடும் ஜனத்திற்கு காட்சியளித்திருக்கிறான் என்று நான் நினைக்கிறேன்.

2. வெளி 13:3 மிருகம் காயப்பட்டது எப்பொழுது?

இஸ்ரவேல் ஜனங்களை ஆண்டவர் செங்கடல் வழி கொண்டு சென்றதிற்கு ஒரு மறைவான ஆவிக்குரிய காரணமும் உண்டு. என்னவென்றால், செங்கடல் பிளந்து இலட்சக்கணக்கான தேவ ஜனங்கள் நடந்து சென்ற போது, அந்த மிருகத்தின் தலை நசுக்கப்பட்டு அது சாவுக்கேதுவாக காயப்பட்டது.

அது திரும்ப வல்லமை பெற்று எழும்பும் படி இக்காலத்தில் முயற்சிக்கிறது. அதைக் கட்டி ஜெபிக்கும் படி யாகத்தான் அவர்களை எகிப்திற்கு கொண்டு வந்ததாக ஆண்டவர் சொன்னாராம். அப்படியே செங்கடல் கரையில் நின்று ஜெபிக்கும் போது அந்த மிருகத்தைப் தரிசனத்தில் பார்த்ததாகவும் சொன்னார்.

இவர் கேட்டிருக்கிறார் (கேள்வி கேள் என்று ஆண்டவர் சொல்லிட்டார்ல!) - ஆண்டவரே வெளி 13:6,7 ல் அது எழும்பி தேவனை தூஷிக்கும், பரிசுத்தவான்களோடு யுத்தம் செய்து மேற்கொள்ளும் என்று எழுதியிருக்கிறதே. எனவே அது நடக்கத்தானே செய்யும் என்று கேட்டபோது ஆண்டவர் சொன்னது - பிசாசிற்கு அனுமதி கொடுக்கப்பட்டிருப்பது உண்மைதான். என்றாலும் ஜெபிக்கும் போது பிசாசின் வல்லமை மட்டுப்படும். பரிசுத்தவான்கள் காப்பாற்றப்படுவார்கள் என்று சொல்லி காட்டிய உதாரணம் பேதுரு.

பேதுருவை புடைக்க பிசாசிற்கு அனுமதி கொடுக்கப்பட்டது. ஆனால் இயேசு பேதுருவிற்காக வேண்டிக் கொண்டார்/ஜெபித்தார். எனவே பேதுரு காக்கப்பட்டார். இல்லையென்றால் சத்துரு புடைக்கும் போது பேதுரு பறந்து போயிருப்பார்.

எனவே ஜெபம் மிக அவசியமானதாய் இருக்கிறது.

--



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

Bro John : அவுங்க வேதத்தை எழுதினார்கள் நாமும் எழுதலாமா? அவர்கள் தேவனால் ஏவப்பட்டு பேசின எல்லாமே வேதம்! சகோ. சாதுவும், சகோ. வின்சென்ட் செல்வக்குமாரும் சொல்லுகிற தீர்க்கதரிசனம் எல்லாம் வேதமா?

இது என்ன கேள்வி? இப்படி யார் சொன்னது?

ஆனால் சகரியாவில் தேவாலயம் கட்டப்படும் போது தேவனுக்கு முன்பாக நிற்கும் இரண்டு விளக்குகள் என்று செருபாபேலையும் , யோசுவாவையும் வேதம் சொல்லுவதை பார்க்கும் போது இவர்களும் மனிதர்களாக என்பது என் (சொந்த) கருத்து!

2 மனிதர்கள் என்பது போல தான் இருக்கிறது. அவர்கள் எலியாவும், ஏனோக்கும் அல்லது மோசேயும், எலியாவும் என்று சில காம்பினேஷன் சொல்கிறார்கள். இதில் தான் எனக்கு இப்ப சந்தேகம். பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசிகள் தான் 2 சாட்சிகளாக வருவார்கள் என்று எதை வைத்து சொல்கிறோம் என்று யோசித்துக் கொண்டிருகிறேன்

சகோ. சாதுவும், சகோ. செல்வகுமாரும் அப்படி சொல்ல மாட்டார்கள் என்று நம்பலாம் ஏனென்றால் அதிலே கொல்லபடுவர்கள் , உடல்கள் வீதியிலே கிடக்கும் என்று Graphic ஆன காட்சிகள் வருவதால் அது வேறு யாராவதாகத்தான் இருக்கவேண்டும். சாது அய்யா செத்துட்டா "புதிய எருசலேம் பரலோகத்தில் இருந்து இறங்கி வருவதை" யாரு படம் புடிக்கிறது? (இது அவரோட List ல உண்டா?)

அவருக்கு ஆண்டவர் கொடுத்த பணி, 2 சாட்சிகளின் ஊழியத்தை காட்டுவதுதான். புதிய எருசலேம் கொஞ்சம் லேட்டாக அல்லவா இறங்கி வரும்!



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 

//ஆவியானவர் பொழியப்பட்டவுடன் தீர்க்கதரிசன ஊழியம் நின்று போக வில்லை என்பதற்கு வேதத்திலே ஆதாரம் இருக்கிறது என்பதற்கு உதாரணம் தான் பவுலும், யோவானும். அவங்க சொன்னாங்கன்னா நாமும் சொல்லலாம். இதில் அசிங்கப்படுத்த என்ன இருக்கிறது//

அவுங்க வேதத்தை எழுதினார்கள் நாமும் எழுதலாமா? அவர்கள் தேவனால் ஏவப்பட்டு பேசின எல்லாமே வேதம்!  சகோ. சாதுவும்,  சகோ. வின்சென்ட் செல்வக்குமாரும் சொல்லுகிற தீர்க்கதரிசனம் எல்லாம் வேதமா?

//அப்படி சொல்லிடுவாங்களோ என்று நானும் பயந்ததுண்டு! அத்துடன் 2 சாட்சிகள் பரலோகில் இருந்து தான் வர வேண்டும் என்று எந்த வசனத்தின் அடிப்படையில் சொல்கிறோம்- என்பது எனக்கு இப்போதுள்ள கேள்வி.//



எனக்கு தெரியாது நிறைய பேர் டி.வி யிலும் , Left Behind போன்ற சினிமாவிலும் சொல்லுகிறதை வைத்து சொல்லுகிறேன். நான் வெளிப்படுத்தின விசேஷத்தை படிக்கும் போது இயேசு கிறிஸ்துவின் மகிமையையும் , எச்சரிப்பையுமே காண்கிறேன். இரண்டு சாட்ட்சிகள் என்பது இரண்டு மனிதர்களை குறிக்குமா அல்லது வேறு எதையாவது குறிக்குமா என்று தெரியவில்லை.என்னுடைய Favorite Preachers எல்லாம் கைவிட்டு விட்டார்கள் so I don't know! ஆனால் சகரியாவில் தேவாலயம் கட்டப்படும் போது தேவனுக்கு முன்பாக நிற்கும் இரண்டு விளக்குகள் என்று செருபாபேலையும் , யோசுவாவையும் வேதம் சொல்லுவதை பார்க்கும் போது இவர்களும் மனிதர்களாக  என்பது என் (சொந்த) கருத்து!

சகோ. சாதுவும், சகோ. செல்வகுமாரும் அப்படி சொல்ல மாட்டார்கள் என்று நம்பலாம் ஏனென்றால் அதிலே கொல்லபடுவர்கள் , உடல்கள் வீதியிலே கிடக்கும் என்று Graphic ஆன காட்சிகள் வருவதால் அது வேறு யாராவதாகத்தான் இருக்கவேண்டும். சாது அய்யா செத்துட்டா "புதிய எருசலேம் பரலோகத்தில் இருந்து இறங்கி வருவதை" யாரு படம் புடிக்கிறது?  (இது அவரோட List ல உண்டா?)



-- Edited by John on Friday 29th of April 2011 05:51:35 PM

__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

John wrote:
"நானும் சாதுவும் செங்கடலுக்கு போனோம் பத்து தலை மிருகத்தை பார்த்து அதை கட்டி ஜெபித்தோம்" (வெளிபடுதத்தின விசேஷம் இனி நிறைவேறாதோ!) என்பது எல்லாம் தீர்க்கதரிசனம் இல்லை அம்புலிமாமா கதை அல்லது பிசாசின் (ஒளியின் தூதனான) ஜாலம்!

 உண்மைதான் இந்த தகவலை சொன்னது கூட கொல்டா அவர்கள் தான், இது என்ன வேடிக்கை? இவர்கள் ஜெபித்தால் அந்த பத்து தலை மிருகம் கடலிலேயே மூழ்கிமரித்து போய்விடுமா? அவர்களுடைய விசுவாசிகளையும் அப்படித்தானே ஜெபிக்க சொல்லியிருப்பார்கள்? கொஞ்சம் அக்கிரமமமாகத் தோன்றவில்லை?

 

இவர்கள் ஜெபிப்பதால் அந்திக்கிறிஸ்து எழும்பாமல் போய் நேரடியாக ஆயிரம் வருட அரசாட்சி வந்துவிடும் அளவுக்கு ஆண்டவரை இவர்கள் இறங்கிவரச் செய்துவிடுவார்கள் போலிருக்கிறதே? அப்படியானால் கிறிஸ்து மரித்தது வீணாக இருக்குமே? 

 

இந்த ஊழியர்கள் ஜெபிப்பது கிறிஸ்துவின் மரணத்தைவிட அதிக மகிமையானதல்லவா சித்தரிக்க படுகிறது? கேட்கவே அறுவறுப்பாக உள்ளது இவர்கள் எப்படி அந்திக்கிறிஸ்துவின் வல்லமையை கட்டி ஜெபிக்க முடியும்? அப்பா சாமீ.... ரீல் அந்து போச்சுடா.............

 



__________________
க‌ர்த்த‌ர் என் மேய்ப்ப‌ராய் இருக்கிறார்


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

Bro John: தயவு செய்து பவுலையும், யோவானையும் அசிங்கப்படுத்தாதீர்கள். அவர்கள் ஆவியானவரால் ஏவப்பட்டு வேதத்தை எழுதினவர்கள்.

ஆவியானவர் பொழியப்பட்டவுடன் தீர்க்கதரிசன ஊழியம் நின்று போக வில்லை என்பதற்கு வேதத்திலே ஆதாரம் இருக்கிறது என்பதற்கு உதாரணம் தான் பவுலும், யோவானும். அவங்க சொன்னாங்கன்னா நாமும் சொல்லலாம். இதில் அசிங்கப்படுத்த என்ன இருக்கிறது.

இன்னும் கொஞ்ச காலத்தில் இந்த ரெண்டு முதலாளிகளும் நாங்கதான் கடைசி நாளில் தீர்க்கதரிசனம் சொல்லும் அந்த இரு சாட்சிகள் என்று சொன்னாலும் சொல்லலாம். சகோதரி . கோல்டா நம்புவாரா?

அப்படி சொல்லிடுவாங்களோ என்று நானும் பயந்ததுண்டு! அத்துடன் 2 சாட்சிகள் பரலோகில் இருந்து தான் வர வேண்டும் என்று எந்த வசனத்தின் அடிப்படையில் சொல்கிறோம்- என்பது எனக்கு இப்போதுள்ள கேள்வி.

அது என்ன வேத புத்தகமா? இதற்கு ஆதார வசனம் என்ன?

சகோ தினகரன் மேலுள்ள நம்பிக்கைதான் காரணம்.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 

//பவுலும், யோவானும் தீர்க்கதரிசிகள் தானே. அவங்க பரிசுதத ஆவியானவர் பொழியப்பட்ட பின் தான் தீர்க்கதரிசனம் உரைத்தார்கள்.//
 
தயவு செய்து பவுலையும், யோவானையும் அசிங்கப்படுத்தாதீர்கள். அவர்கள் ஆவியானவரால் ஏவப்பட்டு வேதத்தை எழுதினவர்கள்.  இப்போது தீர்க்கதரிசன வரத்தை பெற்று  இருப்பவர்கள் (அதாவது தேவனுடைய வசனத்தில் அடிப்படையில் ஒரு சபை அல்லது தனி மனிதனனுடைய குறைகளை உணர்த்துவிக்கும் உழியம்) சொல்லும் தீர்க்கதரிசனங்கள் வேதத்திற்கு கட்டுப்பட்டவை. "நானும் சாதுவும் செங்கடலுக்கு போனோம் பத்து தலை மிருகத்தை பார்த்து அதை கட்டி ஜெபித்தோம்" (வெளிபடுதத்தின விசேஷம் இனி நிறைவேறாதோ!) என்பது எல்லாம் தீர்க்கதரிசனம் இல்லை அம்புலிமாமா கதை அல்லது பிசாசின் (ஒளியின் தூதனான) ஜாலம்!
 
//பழைய ஏற்பாட்டில் தீர்க்கதரிசிகளுக்கு மட்டும் தான் அபிஷேகம் என்பதால், இந்த அபிஷேகம் மிக மிக பலமாக, வல்லமையானதாய் இருக்குமாம். முழு தேசத்திற்கும் அவர்கள்(அதுவும் ஒன்றிரண்டு பேர்தான்) தான் பொறுப்பு, அவர்கள் மட்டும் தான் தேவனின் வார்த்தையை கொண்டு போக முடியும் என்பதால் மிக கனமான ஒரு மகிமை அவர்கள் மேல் தங்கி இருக்குமாம்.

புதிய ஏற்பாட்டில் அப்படி அல்ல. 12 அப்போஸ்தலர்களுக்கு கூட அந்த அளவிற்கு வல்லமையான் அபிஷேகம் கிடையாதாம். ஏனென்றால், அபிஷேகம் அனைவருக்கும் இப்பொழுது உண்டு என்பதால், பல காரியங்களை அவரவரே ஆண்டவரிடமிருந்து நேரடியாக பெற்றுக் கொள்வதால், அப்போஸ்தலர், தீர்க்கதரிசிகளுக்கு பாரம்(பளு) குறைவு. அவர்கள் அனைவரையும் இப்ப தூக்கி சுமக்கத் தேவையில்லை.

இப்படி சகோ தினகரன் தன் புத்தகத்தில் எழுதியிருக்கிறார்//

அது என்ன வேத புத்தகமா? இதற்கு ஆதார வசனம் என்ன?

இதோ நான் ஒரு தீர்க்கதரிசனம் (சும்மா) சொல்லுகிறேன். இன்னும் கொஞ்ச காலத்தில் இந்த ரெண்டு முதலாளிகளும் நாங்கதான் கடைசி நாளில் தீர்க்கதரிசனம் சொல்லும் அந்த  இரு சாட்சிகள் என்று சொன்னாலும் சொல்லலாம். சகோதரி . கோல்டா நம்புவாரா?


__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

Bro Chillsam : புதிய ஏற்பாட்டில் தீர்க்கதரிசன‌ங்கள் ஆவியானவர் மூலம் மாத்திரமே போதிக்கப்பட்டு நிறைவேறுகிறது;தீர்க்கதரிசிகள் மூலமாக அல்ல, ஆவியானவர் வெளிப்படையாகப் பொழிந்தருளப்பட்ட பின்னர் தீர்க்கதரிசிகளின் பணிக்காலம் முடிந்துபோனது என்பதே மறுக்கமுடியாத உண்மையாகும்; அதனை மறுத்தும் மறைத்தும் பொய்ப் போதகம் செய்வோர் விரைவில் சங்கரிக்கப்படுவார்கள்.

பவுலும், யோவானும் தீர்க்கதரிசிகள் தானே. அவங்க பரிசுதத ஆவியானவர் பொழியப்பட்ட பின் தான் தீர்க்கதரிசனம் உரைத்தார்கள்.

அபிஷேகம் பொழியப்பட்ட பின் தீர்க்கதரிசிகள் தேவையில்லை என்று நீங்க சொல்வது ஒரு வகையில் சரிதான். எல்லோரும் சுவிசேஷப் பணி செய்ய வேண்டும் என்றாலும், சிலரை சுவிசேஷப் பணிக்கென்று ஆண்டவர் அழைக்கிறார். அது போல், அனைவருக்கும் அபிஷேகம் கொடுக்கப்பட்டாலும், சிலரை தீர்க்கதரிசிகளாகவும் ஆண்டவர் அழைத்து பேசத்தான் செய்கிறார்.

பழைய ஏற்பாட்டில் தீர்க்கதரிசிகளுக்கு மட்டும் தான் அபிஷேகம் என்பதால், இந்த அபிஷேகம் மிக மிக பலமாக, வல்லமையானதாய் இருக்குமாம். முழு தேசத்திற்கும் அவர்கள்(அதுவும் ஒன்றிரண்டு பேர்தான்) தான் பொறுப்பு, அவர்கள் மட்டும் தான் தேவனின் வார்த்தையை கொண்டு போக முடியும் என்பதால் மிக கனமான ஒரு மகிமை அவர்கள் மேல் தங்கி இருக்குமாம்.

புதிய ஏற்பாட்டில் அப்படி அல்ல. 12 அப்போஸ்தலர்களுக்கு கூட அந்த அளவிற்கு வல்லமையான் அபிஷேகம் கிடையாதாம். ஏனென்றால், அபிஷேகம் அனைவருக்கும் இப்பொழுது உண்டு என்பதால், பல காரியங்களை அவரவரே ஆண்டவரிடமிருந்து நேரடியாக பெற்றுக் கொள்வதால், அப்போஸ்தலர், தீர்க்கதரிசிகளுக்கு பாரம்(பளு) குறைவு. அவர்கள் அனைவரையும் இப்ப தூக்கி சுமக்கத் தேவையில்லை.

இப்படி சகோ தினகரன் தன் புத்தகத்தில் எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன். எங்கே வாசித்தேன் என்று தெளிவாக ஞாபகம் இல்லை.

Bro Chillsam : கோல்டா அவர்களே,

கொல்வின் போன்றவர்களை ஒருநாளும் உங்களால் வஞ்சிக்கமுடியாது; நட்புபாராட்டுகிறாரே என்று நம்பி அனைத்து இரகசியங்களையும் இப்போதே சொல்லிவிடாதிருங்கள்.அது சாதுவின் வழிவந்தோருக்கு அழகல்ல. ஆரம்பத்தில் எழுப்புதலைத் தூண்டும் புரட்சிகரமான கேள்விகளை மட்டுமே கேட்கவேண்டும்;ஒரு குறிப்பிட்ட கட்டத்துக்குப் பிறகே வளைத்துப் போடவேண்டும்;இதுவே கள்ளத்தீர்க்கதரிசிகளின் பாணி..!

தங்களின் மேலான ஆலோசனையின்படியே நடந்து கொள்கிறேன்!!!

ஆனாலும் சகோ கொல்வின் மேல் தான் என்ன ஒரு அன்பு, அக்கறை உங்களுக்கு! சகோ கொல்வின் தான் கண்டதையும்(!) படித்துக் கரைத்துக் குடித்தும் வஞ்சிக்கப்படாமல் தெளிவாகத் தானே இருக்கிறார்.அத்துடன் நான் சொல்வதை கேட்டால், இன்னும் கொஞ்சம் தெளிவாகத்தான் மாறுவார். வஞ்சிக்கப்பட மாட்டார்!



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

Bro Colvin: இந்நூல்கள் மின்பதிப்புகளாக கிடைக்குமா? (Html format, PDF format?

சகோ கொல்வின், eformat இல் புத்தகங்கள் இருப்பது போல் தெரியவில்லை. அவர்கள் முகவரிக்கு எழுதிக் கேட்டால் கிடைக்கும். அல்லது vincentselvakumaar@gmail.com க்குஎழுதவும். அல்லது நான் வாங்கி அனுப்பி வைக்கிறேன்!

 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

சகோ. சில்சாம் உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன். ஒருசில பிரசங்கங்கள் அருமையாக உள்ளன. ஒரு போதகர் என்ன சொல்லுகிறார் என்ன போதிக்கிறார் என்ன எழுதுகிறார் என ஆராய்வது என் வழமை. அந்த அடிப்படையில்தான் சகோதரி கோல்டாவிடம் கேட்டேன். 

நீங்கள் கூறும் பிரகாரம் தற்காலத்தில் தீர்க்கதரிசனங்கள் தேவையில்லை. ஏற்கனவே அவசியமானவை அனைத்தும் வெளிப்படுத்தப்பட்டுதான் உள்ளது. அதுவே போதும் என்பது தான் எனது கருத்து.

 



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

வின்சென்ட் செல்வகுமார் புத்திசாலியாகவும் நல்ல எழுத்தாளராகவும் இருக்கலாம்;அதனால் தீர்க்கதரிசியாகிவிடமுடியாது; வழக்கறிஞர் என்பதற்கும் வழக்குரைஞர் என்பதற்கும் வித்தியாசமுண்டல்லவா, அதுபோல.

புதிய ஏற்பாட்டில் தீர்க்கதரிசன‌ங்கள் ஆவியானவர் மூலம் மாத்திரமே போதிக்கப்பட்டு நிறைவேறுகிறது;தீர்க்கதரிசிகள் மூலமாக அல்ல, ஆவியானவர் வெளிப்படையாகப் பொழிந்தருளப்பட்ட பின்னர் தீர்க்கதரிசிகளின் பணிக்காலம் முடிந்துபோனது என்பதே மறுக்கமுடியாத உண்மையாகும்; அதனை மறுத்தும் மறைத்தும் பொய்ப் போதகம் செய்வோர் விரைவில் சங்கரிக்கப்படுவார்கள்.

கோல்டா அவர்களே,

கொல்வின் போன்றவர்களை ஒருநாளும் உங்களால் வஞ்சிக்கமுடியாது; நட்புபாராட்டுகிறாரே என்று நம்பி அனைத்து இரகசியங்களையும் இப்போதே சொல்லிவிடாதிருங்கள்.அது சாதுவின் வழிவந்தோருக்கு அழகல்ல. ஆரம்பத்தில் எழுப்புதலைத் தூண்டும் புரட்சிகரமான கேள்விகளை மட்டுமே கேட்கவேண்டும்;ஒரு குறிப்பிட்ட கட்டத்துக்குப் பிறகே வளைத்துப் போடவேண்டும்;இதுவே கள்ளத்தீர்க்கதரிசிகளின் பாணி..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

அன்பு சகோதரிக்கு 

//ஜாலி ஹோம், ஆழங்கள் சொல்லும் சாட்சிகள் //

இந்நூல்கள் மின்பதிப்புகளாக கிடைக்குமா? (Html format, PDF format? இவரைப் பற்றி இவ்வளவு விடயஙகள் இப்போதுதான் கேள்விபடுகிறேன். சாதுவை விட்டு வெளியே வந்தால் இவரும் சிறப்பான போதகராக திகழ வாயப்புண்டு. 

//யேகோவா சாட்சிகளின் கோட்டையைத் தகர்க்க உபயோகப்படும் என்று சகோ.கொல்வினுக்கு watchtower magazine படிக்க வேண்டும் என்ற விருப்பத்தை ஆண்டவர் கொடுத்திருப்பார் போல!//

ஏற்றுக்கொள்கிறேன் சகோதரி. மிக நீண்ட காலமாக வாசித்து வருகிறேன். அதன் பலன் தற்போதுதான் கிடைத்திருக்கிறது. குறிப்பாக விழித்தெழு சஞ்சிகைகளில் வரும் பல கட்டுரைகள் பயனுடையதே. (இளைஞர் கேட்கும் கேள்விகள், அறிவியல் தகவல்கள் போன்றவை)  இன்னும் Science Fiction, Health தொடர்பான நூல்கள், சஞ்சிகைகள், படங்கள் விரும்பி பார்ப்பேன் / வாசிப்பேன்.

 

 



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

தீர்க்கதரிசி வின்சென்ட் செல்வகுமார்

தீர்க்கதரிசிகளை ஆண்டவர் நன்றாக வனைந்து, உருவாக்கி, உடைத்து, புடமிட்டு பின் தான் வெளியே அனுப்புகிறார்.

வின்சென்ட் செல்வகுமாரை ஆண்டவர் கிராமத்தில்தான் ஊழியம் செய்ய வேண்டும். சொத்து சேர்க்க ஆசைப்படக் கூடாது.வெளிநாடு போய் ஊழியம் செய்யக் கூடாது, நீ முழுமையாக எனக்கு ஒப்புக் கொடுத்திருக்க வேண்டும் என்றெல்லாம் கட்டுப்பாடு போட்டு தான் உருவாக்கியிருக்கிறார்.

சில வருடங்கள் முன்பதாகத்தான், பட்டயத்தை உறையிலிருந்து எடுக்கும் காலம் வந்தாகிவிட்டது என்று சொல்லி, இப்பத்தான் பலர் பார்க்கும் படி ஊழியம் செய்ய வைத்திருக்கிறார். சபை ஊழியத்தையெல்லாம் விட்டு விட்டு, தீர்க்கதரிசன ஊழியம் மட்டும் செய்யும்படி இப்போது ஆண்டவர் சொல்லியிருக்கிறார்.

அவர் நன்றாக சம்பாதிக்கும் ஒரு ஆர்டிஸ்ட் ஆக இருந்திருக்கிறார். ஒரு நாள் ஆண்டவர் தொழிலை விட்டு விட்டு முழு நேர ஊழியத்திற்கு வரும்படி அழைத்தாராம். இவர், வேலை பார்த்துட்டே ஊழியம் செய்கிறேனே(தேவைக்கு யாரையும் எதிர்பார்க்க வேண்டாம் என்று) என்று சொன்னாராம். அதற்கு ஆண்டவ்ர், நீலத் திமிங்கலத்தின்(blue whale) பிறந்த குட்டி 400 லிட்டர் பால் குடிக்கும். அதை நான் போஷிக்கிறேன். ஒரு டம்ளர் பால் மட்டும் தேவைப்படும் உன் சின்ன வயிற்றை நான் போஷிக்க மாட்டேனா என்று கேட்டாராம்! எழுதப் படிக்கும் முன்பே அவருக்கு வரையத் தெரியுமாம். வரைவது அவருக்கு உயிருடன் கலந்த ஒரு காரியம் போல. ஆனாலும் அதையும் அவர் சிலுவையில் அறையத்தான் வேண்டியிருந்திருக்கிறது. ஆரம்ப காலத்தில் எப்பவும் உபவாசம் தானாம். 30, 60, 90 நாள் கூட உபவாசம் இருந்திருக்கிறாராம்.

அவர் நடத்தும் கூட்டத்தில் தேவ பிரசன்னமும், தேவ அபிஷெகமும் பலமாய் இருக்கும். மக்கள் துள்ளி குதித்துக் விழுந்து கொண்டிருப்பார்கள். அப்படிப் பட்ட கூட்டம் நடத்தும் நேரத்தில் உணரும் அபிஷேகத்தை விட, வேதம் வாசிக்கும் போதுதான் அதிகமான அபிஷேகத்தை உணர்வதாக சொல்லியிருக்கிறார். வேதம் வாசிக்கும்போது சுற்றுப்புறத்தை மறந்து ஆழ்ந்து வாசிப்பாராம். குடம் குடமாய் அபிஷேகம் தலையில் இறங்குவதை வேதம் வாசிக்கும்போது தான் உணர்வாராம்.

அவர் தாயின் கருவிலிருந்த போது, அவங்க அம்மா மிகவும் பலவீனமாக இருந்ததால், பிள்ளை பிறக்கையில் ஏதாவது ஒரு உயிரைத்தான் காப்பாற்ற முடியும். என்வே இப்பவே அபார்ட் செய்து விடுவது நல்லது என்று டாகடர் அறிவுறுத்த, அவர் அப்பாவும், முகம் தெரியாத கருவிலுள்ள பிள்ளையை விட, முகம் தெரிந்த மனைவிதான் முக்கியம் என்று நினைத்து சரி என்று சொல்லி விட்டாராம். கருவைக் கலைக்க மாத்திரை கொடுத்திருக்கிறார்கள். ஆனால் , பிள்ளை அந்த மாத்திரையையும் சாப்பிட்டு தெம்பாக வளர்ந்து பிறந்திருக்கிறது. இவர் கருவில் இருக்கையில் ஒரு சிவப்பு சேலை கட்டிய பெண் தெய்வம் ஒன்று உன்னை கொன்று விடுவேன். இந்த பிள்ளை எனக்குத்தான் என்று சொல்லி அவ்ர் அம்மாவை அடிக்கடி பயமுறுத்துமாம். அபார்ட் பண்ண முயற்சித்து, பின் பிறந்ததால், சிறு வயதில் முகத்தில் ஒரு பக்கம் கருப்பாக இருக்குமாம்.

இவர் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தாலும் நாத்திகவாதியாக வளர்ந்திருக்கிறார். சிகரெட், குடி, போதை மருந்து பழக்கம் வேறு வந்து சேர்ந்து கொண்டது. இப்படி பிசாசால் கட்டப்பட்டு இருக்கையில், சகோ தினகரன் இராமநாதபுரத்தில் சுவிசெஷக் கூட்டம் போட்டிருக்கிறார். இவர் இருந்த கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், இந்த கூட்டத்தில் இயேசு வருகிறார், தொடுகிறார், சுகமாக்குகிறார் என்றெல்லாம் கதை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். என்ன நடக்கிறது என்று பார்த்து, ஒரு ரிப்போர்ட் எழுதிட்டு வா என்று இவரை அனுப்பி வைத்திருக்கிறார்கள். இவர் கூட்டத்தின் பின்னால் இருட்டில், ஒரு மரத்தடியில், சிகரெட் பிடித்துக் கொண்டே பார்த்துக் கொண்டிருக்கிறார். சகோ தினகரன் பேசுவது ஒன்றும் புரியவில்லை. இறுதி ஜெப வேளையில் சகோ தினகரன் இப்படி சொன்னாராம் - ஒரு வாலிபன் பின்னால் சிகரெட் பிடித்துக் கொண்டே பார்த்துக் கொண்டிருகிறாய். இந்தக் கூடட்த்தை குறை சொல்லி ரிப்போர்ட் கொடுக்கும்படி அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறாய். ஒரு நாள் ஆண்டவர் உன்னையும் பயன்படுத்துவார். இந்த வேதம், ஆண்டவர் எல்லாம் சத்தியம் என்று ஊர் ஊராக ஆதாரபூர்வமாக எடுத்துச் சொல்லும்படி வைப்பார் என்று சொன்னாராம்.இவர் அதைக்கேட்டு பயந்து போய் ஒன்றும் எழுதாமல் வந்து விட்டாராம்.(அவர் புத்தகங்களில் அகழ்வாராய்ச்சி, வரலாற்று, அறிவியல் ஆதாரங்களை அதிகம் சொல்லியிருப்பார். எனக்குப் மிகவும் பிடித்தவை ஜாலி ஹோம், ஆழங்கள் சொல்லும் சாட்சிகள் என்ற புத்தகங்கள். தரிசனம், சொப்பனம், வெளிப்பாடு என்ற வார்த்தைகள் கூட அதில் இருக்காது. என்வே அனைவரும் பயப்படாமல் வாசிக்கலாம்).

அப்புறம், ஒரு நாள் இவரைப் போல் போதை மருந்து பழக்கம் உள்ள நண்பன் ஒருவன் குப்பை மேட்டில் விழுந்து இறந்து கிடந்திருக்கிறான். நமக்கும் இந்த நிலைமைதான் வரப் போகுது என்று தெரிந்து குடி,போதை மருந்து பழக்கத்தை விட முயற்சி செய்திருக்கிறார். முடியவில்லை. சமாதானம் போய் பைத்தியம் பிடித்தாற்போல் ஒரு மாதம் இருந்திருக்கிறார். அப்ப அவர் சகோதரி ஒரு ஊழியக்காரரை போய் பார்த்து ஜெபித்து விட்டு வரும்படி சொல்ல், இவரும் போயிருக்கிறார். அந்த ஊழியக்காரர் இவருக்காக ஜெபிக்கும் போது, நீ விரும்பும் சமாதானத்தை ஆண்டவர் தந்தால், நீ அவருக்காக உன்னை முழுமையாக ஒப்புக் கொடுப்பாயா என்று ஆண்டவர் கேட்கச் சொல்கிறார் என்று சொல்ல, இவரும் சரி என்று சொல்ல அன்று விடுதலை பெற்றுக் கொண்டாராம். பிசாசு, இவரை அடித்து, இனிமேல் இவன் நமக்கு உபயோகப் பட மாட்டான் என்று சொல்லி, இழுத்து வெளியே போட்டு விடுவதை தரிசனமாக அன்றே பார்த்திருக்கிறார்.

இரட்சிக்கப்பட்டு, அபிஷேகம் பெற்று வாழ்க்கை போய் கொண்டிருக்கிறது. இதுதான், இவ்வளவுதான் கிறிஸ்தவ வாழ்க்கையா என்று சிந்தித்துக் கொண்டிருக்கையில், சாது சுந்தர் சிங்கின் புத்தகங்கள் படித்து, அவ்ர் ஆண்டவரை பார்த்தது, பேசியது போல், நாமும் பார்க்க வேண்டும் என்று மிகவும் விருப்பப்பட்டு, ஒரு நாள் உறுதியுடன் 7 மணி நேரம் காத்திருந்து ஆண்டவரை பார்த்தாராம்.

நானும்தான் அதையெல்லாம் படித்திருக்கிறேன். ஆனாலும் ஆண்டவரைப் பார்க்க வேண்டும் என்று ஜெபிக்க தோன்றியதில்லை. அவரே தமது தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும், செய்கையையும் உண்டாக்குகிறார் என்ற வசனத்தின்படி, என்ன ஊழியம் வைத்திருக்கிறாரோ, நாம் என்ன செய்ய வேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிறாரோ, அதற்கேற்ற மன விருப்பத்தையும் அவரே கொடுக்கிறார் என்று நினைக்கிறேன். தீர்க்கதரிசி பார்க்க வேண்டும் என்பதால், பார்க்கும் விருப்பம் அவருக்கு உண்டாகியிருக்கிறது. யேகோவா சாட்சிகளின் கோட்டையைத் தகர்க்க உபயோகப்படும் என்று சகோ.கொல்வினுக்கு watchtower magazine படிக்க வேண்டும் என்ற விருப்பத்தை ஆண்டவர் கொடுத்திருப்பார் போல!

பிற தகவல்கள்:

நல்ல அருமையான பாடகர். கவிஞர். 200 பாடல்களுக்கு மேல் எழுதியிருக்கிறார். தாயின் கருவிலே பிசாசு அவரை அழிக்க முயற்ச்சித்ததை நினைவு கூர்ந்து “ தாயின் கருவிலிருந்து நீரே என் பாதுகாப்பு ” என்ற ஒரு நல்ல பாடல் எழுதியிருக்கிறார். பாடல் பாடும் போது உணர்ந்து பாடணும். அது குரலில் தெரிய வேண்டும் என்று சொல்வார்.

அவர் எழுதிப் பாடிய “என் நினைவிலும் என் செயலிலும்” பாடல்: www.youtube.com/watch?v=OeObpxkbKXc

வாசிப்பதில் புலியாம். புத்தகம் வாசிக்காமல் ஒரு நாளும் இருப்பதில்லையாம். மிக வேகமாக வாசிப்பாராம். 100 கடிதங்களை 5 நிமிடத்தில் வாசித்து விடுவாராம்.

கிட்னி இரண்டும் பழுதாகி , ஆண்டவரால் சுகம் பெற்று ஓடிக் கொண்டிருக்கிறார்.

கண்ணீர் வராதாம். He has dry eyes. இப்படியும் குறைபாடு இருக்கிறது போல!

Sound Sleep என்றும் கிடையாதாம். 1, 2 மணி நேரம் தூக்கம். பின் முழிப்பு. ஜெபம், பைபிள் வாசிப்பு. பின் தூக்கம். பின் முழிப்பு. ஜெபம், பைபிள் வாசிப்பு. இப்படியேதான் நேரம் போகுமாம். தூங்கும்போது லேசா சத்தம் கேட்டா, ஒரு தீக்குச்சி உரசும் சத்தம் கேட்டால் கூட முழித்து விடுவாராம். தினமும் காலை 3 மணிக்கு தவறாமல் ஜெபிப்பாராம்.

பைபிளில் எந்தக் கோடும் போட மாட்டாராம். புத்தம் புதுசா பத்திரமா வச்சிருப்பாராம்.

(public life இல் இருந்தால், அவங்க சாப்பிடுவது, தூங்குவது கூட public இல் வந்து விடுகிறது, என்னைப் போன்றோர் புண்ணியத்தில்!! )



-- Edited by golda on Monday 25th of April 2011 04:35:26 PM



-- Edited by golda on Monday 25th of April 2011 05:45:12 PM

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard