Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தீர்க்கதரிசனங்கள்


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 73
Date:
RE: தீர்க்கதரிசனங்கள்
Permalink  
 


golda wrote:

நீங்க ஞானஸ்நானம் எடுத்தவுடன், அடுத்து அபிஷேகம் பெறும் செய்தியை சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன்.


அபிசேகத்தை பலமுறை அனுபவித்த பின்புதான் ஞானஸ்நான அனுபவத்துக்குள் என்னால் போகமுடிந்தது,  காரணம் அபிசேகம் நானும் என் தேவனும் மட்டுமே தேவையாக இருந்ததால் எனக்கு அது யோசிக்காமல் என்னை ஒப்புக்கொடுத்து அடையும் அனுபவமாக இருந்தது 

 

ஆனால் ஞானஸ்நானம் எங்கள் இருவரோடு வேறுசில மனிதர்களும் தேவைப்பட்டார்கள், அந்த மனிதர்கள் என்னை தங்கள் வியாபாரத்துக்கு பயன்படுத்திவிடுவார்கள் என்று பயந்தேன், தள்ளி போட்டுவந்தேன். நேரம் வாய்த்தது ஞானஸ்நானம் எடுத்தேன். ஆனாலும் நான் பயப்பட்ட காரியம் நடந்தது இனி அந்த ஆயருக்கு நீ தசமபாகம் கொடுக்கவேண்டும், அவர் நடத்தும் ஆராதனையில் மட்டும் தான் நீ திருவிருந்து எடுக்க வேண்டும் என்றார்கள் வேத ஆதாரங்கள் காட்டுங்கள் இல்லாவிட்டால் நீங்கள் பணத்துக்காக இப்படி சொல்லுகிறீர்கள் என்று பகீரங்கமாக குற்றம் சாட்டுவேன் என்றேன். நீ பட்டு தெரிந்து கொள் என்றார்கள்

 

என் இரட்சிப்பு உட்பட எல்லாவற்றையும் பாடுபடாமல் தெரிந்து கொள்ளவில்லை, ஒருவேளை நீங்கள் சொல்வது உண்மையானால் நான் பட்ட பின்பே தெரிந்துகொள்கிறேன். இப்போதைக்கு கொஞ்சம் கெளம்பரீங்களா என்றேன், போய்விட்டார்கள்....



__________________
க‌ர்த்த‌ர் என் மேய்ப்ப‌ராய் இருக்கிறார்


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

Bro Rajkumar: இதிலும் கிண்டலா?

சே...கிண்டலே கிடையாது. நீங்க ஞானஸ்நானம் எடுத்தவுடன், அடுத்து அபிஷேகம் பெறும் செய்தியை சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன்.



__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

golda  அப்ப முழுக்கு ஞானஸ்நானம் பெறும் முன்னே, அபிஷேகம் பெற்று விட்டீர்கள்? நன்று! 
இதிலும் கிண்டலா? அப்போஸ்தலர் 10 ஆம் அதிகாரத்தில் கொர்நேலியு வீட்டில் சுவிஷேசம் சொல்லிக்கொண்டிருந்த போதே கூடியிருந்தவர்கள் மேல் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார்(44), அதன் பின்பு தான் அவர்களுக்கு ஞானஸ் நானம் கொடுக்கப்பட்டது(47), 

golda  தனி மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் காரியங்களை வெளிப்படுத்தும் ஆணடவ்ர், ஒரு ஊரில், ஒரு நாட்டில், எருசலேமில் நடக்கப் போகும் காரியங்களை வெளிப்படுத்த மாட்டாரா என்ன?
நிச்சயம் வெளிப்படுத்துவார் நான் மறுக்கவில்லை, அதை ஏதோ தன் மூலமாக மட்டும் தான் வெளிப்படுவார் அவர் எனக்கு வெளிப்படுத்தினால் அது நடந்தே தீரும் பாருங்கள் பட்டியலை கடந்த ஆண்டு இந்த ஈடு இனையில்லா தீர்க்க தரிசி சொன்னதையும், நடந்ததையும், என்று பட்டியல் போட்டு பெருமை அடித்து வியாபாரமாக்கி காசு பார்க்க வேண்டாம் என்றுதான் சொல்லுகிறேன்.
இப்படிப்பட்ட விளம்பரங்களை நம்பி இந்த ஊழியரையல்லாமல் நம்மால் கடவுளை அடையமுடியாது, இவர் கைவைத்து ஜெபம் செய்து சொல்லும் வார்த்தைகள் தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிறவார்த்தைகள். இவர்கள் சொல்லும் திட்டங்களிலெல்லாம் இனைந்து இவர்களுக்கு பணம் அனுப்பினால் தான் நமக்கு ஆசீர்வாதம் என்று நம்பி வேதத்தையும் தணிப்பட்ட மற்றும் குடும்ப ஜெபத்தை விட்டுவிட்டு சினிமா இரசிகர்கள் போல அந்த ஊழியர்களின் புகழ்பாடி திரியும் அப்பாவி மக்கள் இன்று எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை உங்கள் மனசாட்சிக்கே விட்டுவிடுகிறேன்.

golda  ஆமாம் அப்படித்தான் ஜெபிக்க வேண்டும்.
இங்கே தான் இங்கே தான் சாத்தானின் தந்திரமே அடங்கியிருக்கிறது எங்கெங்கோ நடப்பவைகளுக்காக ஜெபிக்கிறேன் என்று சொல்லி மணிக்கணக்கில் ஜெபித்து விட்டு தனக்கு அடுத்தவைகளையும் குடும்பத்தையும் மறந்து பிரச்சனைகளில் மாட்டிக்கொள்வார்கள். உன் வீட்டில் சமாதாணம் உண்டா? உன் வீட்டின் சாபங்கள் எல்லாம் உடைக்கப்பட்டாயிற்றா? உன் மாமியாரையும், உன் பக்கத்து வீட்டுக்காரரையும் மன்னித்து விட்டாயா? உன் கனவன் மேல் மனைவி மேல் ஒரு மனக்குறையும் இல்லாமல் மன்னித்து விட்டாயா? 
நீ பைபிளை எத்தனை முறை முழுமையாக தியானித்திருக்கிறாய் (படிப்பது அல்ல), உன் குடும்ப ஜெபத்தில் எல்லோரும் அமர்ந்திருக்கிறார்களா? டி. வி சீரியல்கள் பார்பப்பதை விட்டு விட்டாயா? உன் தமக்கை உன்னைவிட பெரிய வீடாக கட்டினால் அதற்காக மகிழ்வாயா? இந்த கேள்விகளையெல்லாம் கேட்டுப்பார்த்தால் அதில் பாதிக்குமேல் இப்படி ஜெபிப்பவர்கள் இல்லை என்றுதான் சொல்லுவார்கள்.
இதைத்தான் நம்முடைய அருள் நாதரும் சொன்னார்: எருசலேம் குமாரத்திகளே நீங்கள் மற்றவர்க‌ளுக்காக(எனக்காக) அழாமல் உங்களுக்காகவும் உங்கள் குழந்தைகளுக்காக அழுங்கள்(லூக் 23:28) என்று? இன்று தீர்க்கதரிசிகளின் பேச்சை நம்பி உலகத்துக்காக அழுது கொண்டிருப்பவர்களின் பிள்ளைகள் இன்று சோரம்போய் நிற்கின்றன.
புதிய உடன்படிக்கையின் சித்தாந்தம் மிக மிக எளிமையானது அது உன்னைப் போல் பிறறை நேசி, குழந்தையைப் போல அக்ள்ளம் கபடமற்று இரு அவ்வளவே, இதை ஏன் இந்த தீர்க்கதரிசிகள் போதிக்க மறுக்கிறார்கள்? 
காரணம் பூச்சாண்டி காட்டினால் தான் எல்லோரும் வாயைப் பிளந்து கொண்டு தன் பின்னால் வந்து காசு கொடுப்பார்கள் அதற்கும் மேலாக நமக்காகவும் நம் பிள்ளைகளுக்காகவும் அழச் சொன்ன நம்முடைய சமாதாணப் பிரபுவின் நோக்கம் நிரைவேறாமல் சாத்தான் அங்கே வெற்றி பெற முடியும்
என்ன நான் சொல்லுவது சரிதானே அதற்காகத்தானே நீங்கள் ஒத்துக்கொண்ட படி ஜெபிக்க வேண்டும்?

golda எழுதப் பட்ட வார்த்தையை யாரும் contradict பண்ணி பேச கூடாது. அப்படி பேசினால் அவர்களை கள்ளத் தீர்க்கதரிசிகள் என்று தாராளமாகச் சொல்லலாம்.
மேடம் அது மட்டும் கள்ள தீர்க்க தரிசனம் அல்ல மங்கின நிறமுடைய குதிரை வந்ததாக நீங்கள் சுட்டிய கானொளி எந்த அளவு நம்பகத் தன்மை வாய்ந்தது என்று உங்களுக்கு தெரியுமா? சரி அதை வெளியிட்டவரின் மண சாட்சிக்கே விட்டுவிடுகிறேன்.
அந்த மங்கின நிறமுடைய குதிரை எகிப்தில் சில அடி தூரம் மட்டும் சென்றுவிட்டு பின்பு மறைந்துவிட்டதை நீங்கள் காணலாம் ஆனால் பைபிளில் பாதாளம் அவன் பின்னால் செல்வதாகவும் பட்டயத்தினாலும் பஞ்ச்த்தினாலும் சாவினாலும் துஷ்ட மிருகங்களினாலும் உலகத்திலுள்ள காற்பங்கு ஜன‌த்தொகையை அழிக்கத்தக்க அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்தது என்று சொல்லப்பட்டிருக்கிறது எகிப்தில் இறந்தவர்கள் சில ஆயிரங்கள் தான் என்பதை மணதில் வைத்துக் கொள்ளுங்கள்.
இவைகளுக்கு முன்பாக வெள்ளைக் குதிரை வரவேண்டும் அதில் ஏறியிருப்பவன் அந்திகிறித்து, அவன் எங்கே உலகத்தை இன்னும் ஏன் அவன் உலக்த்தை ஒன்றாக்கவில்லை அவன் முத்திரையை ஏன் பதிக்க வைக்கவில்லை ஏனெனில் அவன் இன்னும் வரவில்லை காரணம் தடை செய்கிறவன் நடுவிலிருந்து நீக்கப்படுமுன்னே அவன் எழும்ப மாட்டான்(IIதெச2:7),
அப்பற எங்கிருந்து வந்தது மங்கின குதிரை கிரஃப்பிக்ஸ் தானே பன்னுனீங்க? 

golda தீர்க்கதரிசன, போதிக்கும் ஊழியங்களும் இருக்கிறது. 
உண்மைதான் தீர்க்கதரிசன ஊழியமும் உண்டுதான், அதை நான் ஒப்புக்கொள்கிறேன். நானும் இப்படிப்பட்ட ஊழியத்தில் நன்மை அடைந்திருக்கிறேன். நான் சொல்லவருவது, ஆண்டவர் என்னிடம் மட்டுமே பேசுவார். என்னிடம் மட்டுமே வெளிப்படுத்துவார், என்னையல்லாமல் யாரும் இயேசுவை கிட்டி சேரமுடியாது ரேஞ்சுக்கு சொல்லுவதையும், தீர்க்கதரிசனம் சொன்னதையும் அது நிறைவேறியதையும் பட்டியலிட்டு பெருமையடித்து கல்லா கட்ட வேண்டாம் என்றுதான் சொல்லுகிறேன்.
சகோ ராஜ்குமார் நல்லவர்தான். 
நான் நல்லவனா? ஹா, ஹா, ஹா, என் பிதா ஒருவர் தவிர நல்லவர் யாருமில்லை என்பது எனக்கு தெரியும். இப்படியெல்லாம் சொல்லி உன் நயவஞ்சக புத்தியை காட்டமுடியாது பிசாசே (சகோதரி உங்களையில்லை), 

 golda சகோ ராஜ்குமார், இப்படி அடிக்கடி என்னை ஜெபம் பண்ண வைக்காதீங்க!
நீங்கள் ஜெபம் பண்ணவேண்டும் சகோதரி, இடைவிடாமல் ஜெபம் பண்ணவேண்டும் என்பது நம் அருள் நாதரின் கட்டளை அல்லவா?


__________________
க‌ர்த்த‌ர் என் மேய்ப்ப‌ராய் இருக்கிறார்


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

ஆண்டவர் உங்களுக்கு செய்ததை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சகோ.ராஜ்குமார். உங்க வெப்சைட்டிலுள்ள உங்க சாட்சியை வாசிக்கும் போது, பிசாசு உங்களை அழிக்கும்படியாகவும், ஆண்டவரை விட்டுத் திசை திருப்பும்படியாகவும் தீவிரமாக முயற்சித்திருக்கிறான் என்று தெரிகிறது. உங்களைக் குறித்த பெரிய நோக்கம் ஆண்டவருக்கு உண்டு என்றும் இதிலிருந்து புரிகிறது.

அப்ப முழுக்கு ஞானஸ்நானம் பெறும் முன்னே, அபிஷேகம் பெற்று விட்டீர்கள்? நன்று!

Bro Rajkumar: இப்படியாக தனிப்பட்ட வாழ்வில் தேவன் நம்மை ஆற்றித் தேற்றி நம்மை வழி நடத்துவதை நமக்கு சொல்லுவதாக இந்த சத்தியத்தை நான் கண்கிறேன், ஜப்பானில் சுனாமி வருவதையும், அமெரிக்காவில் பூகம்பம் பற்றியும் தீர்க்கதரிசனம் சொல்லி தனக்கு புகழ்தேட வலைப்பதற்க்கான சத்தியமாக நான் இதைக் காணவில்லை

தனி மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் காரியங்களை வெளிப்படுத்தும் ஆணடவ்ர், ஒரு ஊரில், ஒரு நாட்டில், எருசலேமில் நடக்கப் போகும் காரியங்களை வெளிப்படுத்த மாட்டாரா என்ன?

ஆபிரகாமிடம் சோதோம் கொமோரா அழியப் போகுது என்று ஏன் ஆண்டவ்ர் சொல்ல வேண்டும்? அழிவு வரப் போகிறதை எப்பொழுதும் முன்னறிவிக்கும் தேவனாகத்தான் அவ்ர் இருக்கிறார். ஏன் நோவாவிற்கு வெள்ளம் வருவதை வெளிப்படுத்த வேண்டும்? பேழை செய்யவும், நோவா தப்பிக்கவும், பிறரை எச்சரித்து தப்புவிக்கவும் தான். ஏன் யோனாவை நினிவேக்கு அனுப்பினார்? இப்ப மட்டும் ஏன் அப்படி ஆண்டவர் செய்ய மாட்டார் என்று நினைக்கிறீர்கள்? வேதத்தில் உள்ள எல்லா தீர்க்கதரிசிகளும்- அழிவு வருகிறது. பாவத்திலிருந்து மனம் திரும்பு-என்று எச்சரிக்கும் தீர்க்கதரிசிகளாகத்தான் இருக்கிறார்கள். ஏன்? துன்மார்க்கனும் கூட சாகிறதை அவர் விரும்புகிறதில்லை. அவன் மனந்திரும்ப வேண்டும். அதற்கு நாம் மன்றாட வேண்டும் என்றுதான் ஆண்டவர் விரும்புகிறார்.

Bro Rajkumar: ஆனால் இது போல கள்ள தீர்க்க தரிசிகள் தங்களுக்கு புகழ்ச்சி உண்டாக கட்டவிழ்த்து விடும் அரைத்த மாவுகளை படித்து ஜெபிப்பதால் (எப்படி? ஆண்டவரே இஸ்ரேல்ல அமைதி உண்டாகட்டும் அங்கே சத்ருவின் சதி ஆலோசனைகள் கட்டப்படுவதாக என்று தேவ சித்ததுக்கு விரோதமாக ஜெபிப்பதா?) பரலோகம் போய்விடுவார்களா என்ன?

ஆமாம் அப்படித்தான் ஜெபிக்க வேண்டும். எல்லாம் ஒரு நாள் சாகத்தான் போகிறோம் என்பதற்காக, யாருக்காவது வியாதி என்றால், சீக்கிரம் செத்து ஆண்டவரிடம் போ என்று சொல்லி விட்டு விடுகிறோமா? ஏதாவது செய்து காப்பாற்றதான் முயற்சிப்போம். அது போல் , பாவம் பெருகின இந்த உலகம் அழிவை நோக்கித் தான் போய் கொண்டிருக்கிறது. அதற்காக சாவு என்று சொல்லி விடமுடியுமா? இரக்கம், உருக்கம், பாரம் உள்ள தன் பிள்ளைகளுக்கு வரப் போகும் அழிவை வெளிப்படுத்தி ஜெபிக்க வைத்து ஆண்டவர் காப்பாற்றுகிறார். இந்த இரகசியம் உங்களுக்குத் தெரியாதா? இந்த உலகத்தில் ஆண்டவர் கிரியை செய்ய நம் ஒத்துழைப்பும் ஆண்டவருக்குத் தேவை. ஆண்டரால் செங்கடலைப் பிளக்க முடியும் என்றாலும், கோலை நீட்ட, வார்த்தையைப் பேச ஒரு மோசேயும் ஆண்டவ்ருக்கு கண்டிப்பாக தேவை. நம் ஜெபம், ஆண்டவர் கிரியை செய்ய அவருக்கு உரிமை கொடுக்கிறது. நாம் ஜெபிக்கவில்லையென்றால், காரியங்கள் நடக்காமல் போகலாம். இது ஒரு ஆவிக்குரிய விதி. அதனால் தான் ஆண்டவர் காரியங்களை வெளிப்படுத்தி, நாம் ஜெபிக்கும் படி எதிர்பார்க்கிறார். நான் அழிக்காதபடி, திறப்பில் நிற்கும் ஒருவனை தேடினேன் என்று ஆண்டவர் சொல்லவில்லையா?

Bro Rajkumar: நாம் ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் இரத்தகிரயத்துக்கு வாங்கப்பட்ட அவருடைய பிள்ளைகள். ஆகவே ஒரு தகப்பண் ஆளனுப்பி தன் மகனுக்கு (மகன் தன்னைவிட்டு தூரமாயிருந்தால் ஒழிய) செய்தி சொல்ல மாட்டார். பொதுவான தீர்க்கதரிசனங்கள் ஏற்கெனவே பைபிளில் சொல்லப்பட்டாயிற்று புதிதாக சொல்ல ஒன்றுமில்லை,

எல்லாம்தான் எழுதியாச்சு என்றால், எழுதியதையாவது காட்டி, அதான் இது , என்று ஆண்டவர் சொல்ல மாட்டாரா?

எல்லாம் எழுதியாச்சு. இனி ஒன்றும் தேவையில்லை என்றால், சென்னை பற்றி வேதத்தில் எங்க எழுதியிருக்கு? சென்னைக்கு பூகம்பம் வருவதை சென்னையில் வசிப்பவரிடம் தானே சொல்ல முடியும்?

எழுதப் பட்ட வார்த்தையை யாரும் contradict பண்ணி பேச கூடாது. அப்படி பேசினால் அவர்களை கள்ளத் தீர்க்கதரிசிகள் என்று தாராளமாகச் சொல்லலாம். உம்: Dominion Theology (ஆளுமை உபதேசம்) என்று ஒன்று இருக்கிறது. அவ்ர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், இயேசு கிறிஸ்து வந்துதான் அவர் ராஜ்யத்தை ஸ்தாபிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கிறிஸ்தவர்களே, அரசியல், கல்வி, வியாபாரம்... போன்ற சகல துறைகளையும் கைப்பற்றி கிறிஸ்தவ ராஜ்யத்தை ஸ்தாபித்து விடலாம் என்று சொல்லி கிரியை செய்து கொண்டு இருக்கிறார்கள். இது தவறான , வேதத்தில் சொல்லப்பட்டிருப்பதற்கு முரணான உபதேசம். இப்படிப்பட்ட உபதேசங்களைத் தாக்குவதை விட்டு விட்டு நல்ல தீர்க்கதரிசிகளை தாக்குவது அர்த்தமற்றது.

Bro Rajkumar: இதை சகோ அற்புதம் தெளிவாக சொல்லுவார், யாராவது தேவன் அது சொன்னார் இது சொன்னார் என்று சொன்னால் நான் நம்ப மாட்டேன் பிரதர், அந்த தேவன் என் தேவன் தானே என்னிடமும் சொல்லட்டும் நான் நம்புகிறேன் என்பார்.

சகோ அற்புதம் சொன்னால் ஆமென் என்றுதான் சொல்ல வேண்டும்!!

Bro Rajkumar: சுவிஷேசம் என்பது மணம்திரும்புங்கள் பரலோக இராஜ்ஜியம் சமீபமாய் இருக்கிறது இயேசுகிறிஸ்துவாலன்றி ஒருவனும் பரலோக இராஜ்ஜியத்தில் வரமுடியாது என்பதல்லவா? இதில் என்ன தீர்க்க தரிசனம் இருக்கிறது? இதுதானே ஊழியர்கள் மீதுமட்டுமல்ல நம் ஒவ்வொருவரின் மீதும் விழுந்த கடமை?

ஒத்துக் கொள்கிறேன். நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கு சுவிசேஷம் சொல்லும் கடமை நம் அனைவருக்கும் இருக்கிறது. ஆனால், ஆண்டவரிடம் அழைப்புப் பெற்றுச் செய்யும் ஊழியம் என்று பார்த்தால், ஐந்து வகையான ஊழியங்கள் இருக்கிறது என்று வேதம் சொல்கிறது. அதில் ஒன்று தான் சுவிசேஷ ஊழியம். அப்போஸ்தல, தீர்க்கதரிசன, போதிக்கும் ஊழியங்களும் இருக்கிறது. இரட்சிக்கப்பட வேண்டியவர்கள் அனேகம் பேர் இருப்பதால், ஆண்டவர் பலரை சுவிசேஷப் பணிக்காக அழைக்கிறார். சிலரை பிற வேலைகளுக்காக அழைக்கிறார் என்று நினைக்கிறேன்.அத்துடன் கடைசி காலத்தில் இராஜ்யத்தின் சுவிசேஷம்(மத் 24:14) அறிவிக்கப்படும். அப்பொழுது முடிவு வரும் என்றும் வேதம் சொல்கிறது. இராஜ்யத்தின் சுவிசேஷம் என்பது என்ன? ஆண்டவர் வருகிறார். அவர் இராஜ்யம் வருகிறது. ஆயத்தப்படுங்கள் என்பது தான் அது. இதை கேட்கும் ஒருவர் தொடப்பட்டால், இயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக் கொண்டு ஆயத்தமாவார். எனவே தீர்க்கதரிசிகளும் கிறிஸ்துவைத்தான் அறிவிக்கிறார்கள்.

Bro Rajkumar: நயவஞ்சகர்கள் , கள்ள தீர்க்க தரிசிகள்

ஜெபம்: அன்பின் ஆண்டவரே! சகோ ராஜ்குமார் நல்லவர்தான். ஏதோ தெரியாமல், புரியாமல் ஊழியக்காரர்களை தப்பா பேசிட்டாரு. மன்னித்துவிடுங்கள் ஆண்டவரே. நன்றி. ஆமென்!

(சகோ ராஜ்குமார், இப்படி அடிக்கடி என்னை ஜெபம் பண்ண வைக்காதீங்க!)



__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

golda wrote:

அப் 2 :17 கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்; உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள்;


 உண்மைதான் சகோதரி, இப்படி அனேகக்காரியங்கள் என் வாழ்விலும் நடந்திருக்கிறது, அவையெல்லாம் ஒரு தகப்பன் நம்மை நல்வழிப்படுத்த நம்முடைய சொந்த வாழ்க்கையில் உள்ள கவலைகள் பிரச்சனைகளில் மற்றவர்களைக் கொண்டு அல்ல நம்மிடமே தரிசனங்கள் மூலமாகவோ சொப்பனங்கள் மூலமாகவோ, ஆவியானவர் நிரம்புவதால் உண்டாகும் அளவற்ற சமாதானத்தின் மூலமாகவோ தேவன் நம்மை வழி நடத்துவது ஆகும்.


உதாரணமாக நான் கடந்த மே மாதம் திடீரென்று ஏற்பட்ட எதிர்பாராத ஒரு செலவினத்தால் நிலைகுழைந்து போனேன். என்ன ஆண்டவரே இப்படி ஒரு ரூபாய் கூட இல்லாமல் செலவலிந்து விட்டதே? வண்டிக்கு பெட்ரோல் எப்படி போடுவேன் போன்பில் எப்படி கட்டுவேன் என்று புலம்பி தீர்த்துவிட்டேன். அப்போது தரிசனத்தில் சில கட்டு பணங்கள் இருப்பது போல பார்த்தேன். அடுத்த சில நாட்களில் முன்னறிவிக்கப்படாத பழைய பாக்கி இன்சென்டிவ் என்ற பெயரில் சம்பளத்தில் முக்கால்வாசி தொகை கிரிடிட் ஆனது அசந்து போனேன்.



கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு பிரச்சனை தூங்கவும் முடியவில்லை, சாப்பிடவும் முடியவில்லை கிட்டதட்ட மனசோர்வு நிலைக்கு ஆளானேன். ஜெபிக்கவே முடியவில்லை முறுமுறுப்பே மேலோங்குகினது. பேசாமல் ஆண்டவரே இந்த விசயத்தில் நான் உம்மையே நம்பியிருக்கிறேன். என்று உணவு தண்ணீர் தவிர்த்து நீர் சொன்னால் ஒழிய நான் எழுந்திரிக்க போவதில்லை, உம்மை மாத்திரமே நம்புவேன். தெரியாமலும் நான் மற்றவர்களுக்கு துரோகம் செய்யக்கூடாது நீர் ஏன் எப்படிப்பட்ட தர்ம சங்கடத்தை அனுமதித்தீர் என்று கதறிக்கொண்டே இருந்தேன். முதல் நாள் முடிந்தது, இரண்டாம் நாள் தேவன் என்னை கைவிட்டுவிட்டார் என்ற எண்ணம் மேலோங்க, ஜெபிப்பதை விட்டுவிட்டு, சே ஆண்டவருக்காக இப்படி இரவும் பகலும் உழைச்சிருக்கோம், ஆண்டவர் இப்படி எதுவும் சொல்ல மாட்டேங்கராரே என்ற எரிச்சலின் ஆவி ஒரு புறம் வாட்ட எனக்கு தெரிந்த ஊழியக்கார நண்பரிடம் அழைத்து நான் நடத்தும் பிளாக்கின் யூசர் நேம் பாஸ்வேர்டை கொடுத்து விடுகிறேன் இனி நீங்களே நடத்திக் கொள்ளுங்கள் எனக்கு ஆண்டவரும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம் என்று சொல்ல போன் செய்தேன். முதல் தடவை தடையானது, அவர் மாலை 4 மனிக்கு மேல் பேச சொன்னார். ஆகவே 4.20 போன் செய்தேன் அப்போதும் தடை, மணி 7  உடனடியாக யாருமில்லாத இடத்துக்கு விரைந்து போ, என்ற உந்துதல் என் வீட்டின் மொட்டை மாடிக்கு ஓடினேன், ஆவியானவர் அளவில்லாமல் இறங்கினார். நவ நாவுகளால் என் வாயைத் திறந்தார். கையை உயர்த்தி ஜெபிப்பது உட்பட அனைத்தும் உள்ளிருந்து இயக்கப்பட்டேன். சுமார் 40 நிமிடங்கள் எனக்குள் இருந்து எனக்கு அறியாத மொழியில் மன்றாடியது இப்போது நினைத்தாலும் புல்லரிக்கிறது கண்களில் கண்ணீர் வருகிறது, அபோது தேவன் நான் ஜெபித்ததை எனக்கே நினைவுக்கு கொண்டுவந்தார். "ஆண்டவரே நான் வேண்டாம் என்று மறுக்கமாட்டேன், உமக்குச் சித்தமில்லையானால் அவர்களே என்னைவிட்டு விலகிச் சென்றுவிடட்டும் என்பதை" அப்படியே பூரித்து போனேன். அரைமனி நேரம் கழித்து நான் போன் செய்ய நினைத்த அந்த ஊழியர் அழைத்தார் அவரிடம் ஆச்சரியம் மாறாமல் கர்த்தர் நல்லவர் என்று நடந்தவைகளைச் சொன்னேன். அடுத்த நாளும் உபவாசமிருந்து மூன்றாம் நாளை நிறைவு செய்தேன்.



இப்படியாக தனிப்பட்ட வாழ்வில் தேவன் நம்மை ஆற்றித் தேற்றி நம்மை வழி நடத்துவதை நமக்கு சொல்லுவதாக இந்த சத்தியத்தை நான் கண்கிறேன், ஜப்பானில் சுனாமி வருவதையும், அமெரிக்காவில் பூகம்பம் பற்றியும் தீர்க்கதரிசனம் சொல்லி தனக்கு புகழ்தேட வலைப்பதற்க்கான சத்தியமாக நான் இதைக் காணவில்லை


நாம் ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் இரத்தகிரயத்துக்கு வாங்கப்பட்ட அவருடைய பிள்ளைகள். ஆகவே ஒரு தகப்பண் ஆளனுப்பி தன் மகனுக்கு (மகன் தன்னைவிட்டு தூரமாயிருந்தால் ஒழிய) செய்தி சொல்ல மாட்டார். பொதுவான தீர்க்கதரிசனங்கள் ஏற்கெனவே பைபிளில் சொல்லப்பட்டாயிற்று புதிதாக சொல்ல ஒன்றுமில்லை,


இதை சகோ அற்புதம் தெளிவாக சொல்லுவார், யாராவது தேவன் அது சொன்னார் இது சொன்னார் என்று சொன்னால் நான் நம்ப மாட்டேன் பிரதர், அந்த தேவன் என் தேவன் தானே என்னிடமும் சொல்லட்டும் நான் நம்புகிறேன் என்பார்.

 



__________________
க‌ர்த்த‌ர் என் மேய்ப்ப‌ராய் இருக்கிறார்


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

Ashokkumar wrote:
 அருமை நண்பர் ராஜ்குமார்,
    அருமையான வார்த்தைகள். சில விடையங்களை குறித்து என் கண்களையும் திறந்தது இந்த வார்த்தைகள். கர்த்தர் தாமே உங்களை ஆசிர்வதிப்பாராக.
கிறிஸ்துவின்,
அசோக்

jesus_my_love wrote:

Bro RajKumar

அருமையான பதில்கள்

நன்றி சகோதரர்களே



__________________
க‌ர்த்த‌ர் என் மேய்ப்ப‌ராய் இருக்கிறார்


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

Received in Mail:

--

HELLO--    MY WIFE GOT A WORD FROM THE Lord -California will have an earthquake in excess of 6.0 May10 (8-12th). 

She also got the Japan quake and about 10 others 100%.  Is it too late to pray God delay/stop it?  I think so.    Dennis

--

Many who read David Wilkerson's 1974 book "The Vision"
are amazed at just how much of it seems to have already come to
pass. But in the same book, Wilkerson also prophesied a huge 
earthquake coming to the USA - seemingly after a major quake in 
Japan. Below is the warning in his own words-

JAPAN & the COMING USA EARTHQUAKES 
-by David Wilkerson. (1974).

The United States is going to experience in the not-too-distant 
future the most tragic earthquakes in its history. One day soon 
this nation will be reeling under the impact of the biggest news 
story of modern times. It will be coverage of the biggest most 
disastrous earthquake in history.

It will cause widespread panic and fear, Without a doubt, it will 
become one of the most completely reported earthquakes ever. 
Television networks will suspend all programming and carry all 
day coverage.

Another earthquake, possibly in Japan may precede the one that 
I see coming here. There is not the slightest doubt in my mind 
about this forthcoming massive earthquake in our continent.

I am not at all convinced that this earthquake will take place in 
California. In fact, I believe it is going to take place where it is 
least expected. This terrible earthquake may happen in an area 
that not known as an earthquake belt. It will be so high on the
 

Richter scale that it will trigger two other major earthquakes. 

---

 

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

பேசும் தெய்வம் நீர்

பேசாத கல்லோ மரமோ நீர் அல்ல

--

தியானிக்க:

அப் 2 :17 கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்; உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள்;

--

நாளை நீளமான பதில்!



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
Permalink  
 

 அருமை நண்பர் ராஜ்குமார்,
    அருமையான வார்த்தைகள். சில விடையங்களை குறித்து என் கண்களையும் திறந்தது இந்த வார்த்தைகள். கர்த்தர் தாமே உங்களை ஆசிர்வதிப்பாராக.
கிறிஸ்துவின்,
அசோக்


__________________


Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 14
Date:
Permalink  
 

Bro RajKumar

அருமையான பதில்கள்  


__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

golda wrote:

என்ன ஒரு சுயநலம்!


 மண்ணாங்கட்டி யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படும்போது கலங்காதேயுங்கள்; இவைகள் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும் முடிவு உடனே வராது. என்று சொல்லப்பட்டிருக்கும் போது பூச்சாண்டி கட்ட இந்த நயவஞ்சகர்கள் யார்? கொஞ்சம் 2000 வருசத்துக்கு முன்னால‌ அரச்சமாவையே திரும்ப திரும்ப அரைக்காமல்........?

golda wrote:

இதெல்லாம், இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு உரியது. இதெல்லாம் தேவையில்லை என்றால், நம் வேதத்தில் உள்ள தீர்க்கதரிசன புத்தகங்கள் தேவையில்லையா? அதையெல்லாம் வாசிக்க மாட்டீர்களா?



ஹலோ மேம் அதையேதான் நானும் கேட்கிறேன். வேதாகமத்தில் தீர்க்கதரிசன புத்தகங்கள் இருக்க இந்த நடமாடும் ஜெராக்ஸ் காபிகள் எதற்கு? நாம் புதிய உடன்படிக்கையின் காலத்தில் இருக்கிறோம், இதில் நம்முடைய அருள் நாதரின் கட்டளை  நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்(மாற்கு 16:15). என்பதுதானே? உலகமெங்கும் போய் தீர்க்கதரிசனம் சொல்லி உங்களுக்கு பெருமை ஏற்பட நீங்களே பறைசாற்றிக்கொள்ளுங்கள் என்றா சொன்னார்?

சுவிஷேசம் என்பது மணம்திரும்புங்கள் பரலோக இராஜ்ஜியம் சமீபமாய் இருக்கிறது இயேசுகிறிஸ்துவாலன்றி ஒருவனும் பரலோக இராஜ்ஜியத்தில் வரமுடியாது என்பதல்லவா? இதில் என்ன தீர்க்க தரிசனம் இருக்கிறது? இதுதானே ஊழியர்கள் மீதுமட்டுமல்ல நம் ஒவ்வொருவரின் மீதும் விழுந்த கடமை?

golda wrote:

அவர் எதுக்கு? நானே சொல்றேன். இந்த தீர்க்க தரிசனங்களை படித்து நாம் ஜெபிப்பதால் ஒரு சிலர் பாதுகாக்கப்பட்டு, இரட்சிக்கப்பட்டு பரலோகம் போவார்கள்.




ஓ பைபிள்ள சொன்னத படிக்க மாட்டீங்களாம், ஆனால் இது போல கள்ள தீர்க்க தரிசிகள் தங்களுக்கு புகழ்ச்சி உண்டாக கட்டவிழ்த்து விடும் அரைத்த மாவுகளை படித்து ஜெபிப்பதால் (எப்படி? ஆண்டவரே இஸ்ரேல்ல அமைதி உண்டாகட்டும் அங்கே சத்ருவின் சதி ஆலோசனைகள் கட்டப்படுவதாக என்று தேவ சித்ததுக்கு விரோதமாக ஜெபிப்பதா?) பரலோகம் போய்விடுவார்களா என்ன?

தெரியாமல் தான் கேட்கிறேன்?  தனக்கு இடுக்கன் செய்த சத்துருக்களை சினேகிக்கவும், மன்னிக்கவும் எத்தனை பேர் போதிக்கிறார்கள்? உன்னை போல் பிறறையும் நேசி என்ற புதிய உடன்படிக்கையின் ஒற்றை வரி சித்தாந்தத்தை போதித்தாலே மக்களிடம் இருக்கும் பாதி மனக்கசப்பு அகன்று பரலோக இராஜ்ஜியத்துக்கான முதல் படியை ஏறிவிடுவார்கள்


ஒருவன் தீர்க்கதரிசிகள் என்று அழைத்துக்கொண்டு சொல்லிக்கொண்டிருப்பதை ஆராய்ந்து கொண்டிருந்தால் நிச்சயமாக பரலோக இரஜ்ஜியத்தில் பங்கு கொள்ள மாட்டான். அவன் குழந்தைகளைப் போல மாறாவிட்டால் ஒழிய பரலோகம் அவனுக்கு குதிரைக் கொம்புதான்




__________________
க‌ர்த்த‌ர் என் மேய்ப்ப‌ராய் இருக்கிறார்


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

Bro Chillsam: நீங்கள் பதித்த செய்தியைக் குறித்த நம்பகத்தன்மைக்கு நீங்களே பொறுப்பேற்காவிட்டால் வாசகருக்கு தவறான தகவலைக் கொடுத்த தெய்வகுத்தத்துக்கு ஆளாக நேரிடும் என்பதை மறவாதிருந்தால் சரி..!

நான் பார்த்ததை படித்ததை பகிர்ந்து கொள்கிறேன். Just a Courier Service!

Bro Chillsam: எல்லாவற்றுக்கும் மேலாக தொடுப்பு கொடுப்பதற்கு முதலில் கற்றுக்கொள்ளுங்கள்.

லிங்கை லிங்கா மாத்தும் வேலை வேறு செய்ய வேண்டி இருக்கு!!



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

Bro Rajkumar: படிக்கவும் பாக்கவும் ரொம்ப த்திரில்லிங்கா இருக்கு, இஸ்ரேல் தேச கற்கள் இரத்தத்தில் நனைந்தால் என்ன இஸ்ரேல் தேசத்துக்கு அரபு நாட்டு க்லவரம் பரவினால் என்ன?

என்ன ஒரு சுயநலம்!

கதையோ நிஜமோ கேட்க நன்றாகத்தான் இருக்கிறது ஆனால் இப்படி கதை சொல்லிக் கொண்டே போனால் உண்மையான இரட்சிப்பையும், ராஜ்ஜியத்தின் பங்கை அடைவது பற்றியும் இன்று சாய்பாபா, நித்தியானந்தா, வேதத்தை நம்பாமல் ஊழியர்களின் வார்த்தைகளை நம்பும் அப்பாவி கிறிஸ்தவர்கள் எப்படி தெரிந்து கொள்வார்கள்?

இதெல்லாம், இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு உரியது. இதெல்லாம் தேவையில்லை என்றால், நம் வேதத்தில் உள்ள தீர்க்கதரிசன புத்தகங்கள் தேவையில்லையா? அதையெல்லாம் வாசிக்க மாட்டீர்களா?

மரணமோ கிறிஸ்துவின் வருகையோ இன்று நேரிட்டால் இந்த தீர்க்க தரிசனங்களை படித்து விசுவாசித்தவர்கள் எத்தனை பேர் பரலோகம் போவர்கள் என்று வின்சென்ட் செல்வக்குமாரைக் கேட்டு சொல்ல முடியுமா சகோதரி?

அவர் எதுக்கு? நானே சொல்றேன். இந்த தீர்க்க தரிசனங்களை படித்து நாம் ஜெபிப்பதால் ஒரு சிலர் பாதுகாக்கப்பட்டு, இரட்சிக்கப்பட்டு பரலோகம் போவார்கள்.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

golda wrote:
// http://www.wnd.com/index.php?fa=PAGE.view&pageId=260049
சகோ சில்சாம் , இந்த திரியில் நான் போடுவது பிடிக்காவிட்டால்/ தேவையில்லை என்று நினைத்தால் நீக்கி விடலாம். ஒன்றும் பாதகமில்லை.

 
அன்பு சகோதரி அவர்களே,

நான் சாதுஜியைப் போல இந்த தளத்தின் முதலாளி அல்ல என்பதை அறியவும்;நண்பர்கள் யாரேனும் ஆட்சேபித்தால் மட்டுமே நீக்குவதைக் குறித்து யோசிப்பேன்;அதற்கு முன்பாக உங்கள் கருத்தையும் கேட்டு முடிந்தால் நீங்களே நீக்கிவிடுங்கள் என்று கோருவேன்;நீங்கள் பதித்த செய்தியைக் குறித்த நம்பகத்தன்மைக்கு நீங்களே பொறுப்பேற்காவிட்டால் வாசகருக்கு தவறான தகவலைக் கொடுத்த தெய்வகுத்தத்துக்கு ஆளாக நேரிடும் என்பதை மறவாதிருந்தால் சரி..!

எல்லாவற்றுக்கும் மேலாக தொடுப்பு கொடுப்பதற்கு முதலில் கற்றுக்கொள்ளுங்கள்.

 



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

படிக்கவும் பாக்கவும் ரொம்ப த்திரில்லிங்கா இருக்கு, இஸ்ரேல் தேச கற்கள் இரத்தத்தில் நனைந்தால் என்ன இஸ்ரேல் தேசத்துக்கு அரபு நாட்டு க்லவரம் பரவினால் என்ன? கதையோ நிஜமோ கேட்க நன்றாகத்தான் இருக்கிறது ஆனால் இப்படி கதை சொல்லிக் கொண்டே போனால் உண்மையான இரட்சிப்பையும், ராஜ்ஜியத்தின் பங்கை அடைவது பற்றியும் இன்று சாய்பாபா, நித்தியானந்தா, வேதத்தை நம்பாமல் ஊழியர்களின் வார்த்தைகளை நம்பும் அப்பாவி கிறிஸ்தவர்கள் எப்படி தெரிந்து கொள்வார்கள்?

 

மரணமோ கிறிஸ்துவின் வருகையோ இன்று நேரிட்டால் இந்த தீர்க்க தரிசனங்களை படித்து விசுவாசித்தவர்கள் எத்தனை பேர் பரலோகம் போவர்கள் என்று வின்சென்ட் செல்வக்குமாரைக் கேட்டு சொல்ல முடியுமா சகோதரி?



__________________
க‌ர்த்த‌ர் என் மேய்ப்ப‌ராய் இருக்கிறார்


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

 

வெளி 6:8 நான் பார்த்தபோது, இதோ, மங்கினநிறமுள்ள ஒரு குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர்; பாதாளம் அவன்பின் சென்றது. பட்டயத்தினாலும், பஞ்சத்தினாலும், சாவினாலும், பூமியின் துஷ்டமிருகங்களினாலும், பூமியின் காற்பங்கிலுள்ளவர்களைக் கொலைசெய்யும்படியான அதிகாரம் அவைகளுக்குக் கொடுக்கப்பட்டது.

வெளி விசே 6:8 இல் சொல்லப்பட்ட மங்கின நிறமுள்ள குதிரை எகிப்தில் நடந்த கலவரத்தின் போது கடந்து போவது படம் பிடிக்கப் பட்டிருக்கிறது.இந்தக் குதிரையின் மேல் ஏறியிருப்பவன் பெயர் மரணம்.

http://www.wnd.com/index.php?fa=PAGE.view&pageId=260049

வின்சென்ட் செல்வகுமார், எருசலேமின் கற்கள் இரத்தத்தால் நனையும் என்று சொல்லியிருக்கிறார்.

அரேபிய முஸ்லிம் நாடுகளில் நடக்கும் கலவரங்கள், இஸ்ரேலுக்கும் வரும் என்று Dr. Owuor என்ற கென்யா நாட்டு தீர்க்கதரிசி கூட அப்படித்தான் சொல்கிறார்.

--

சகோ சில்சாம் , இந்த திரியில் நான் போடுவது பிடிக்காவிட்டால்/தேவையில்லை என்று நினைத்தால் நீக்கி விடலாம். ஒன்றும் பாதகமில்லை.



-- Edited by golda on Monday 25th of April 2011 03:31:31 PM

__________________
«First  <  1 2 | Page of 2  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard