ஒருத்தர் பெயர் போடாமல் அவங்க கட்டுரையை எடுத்துப் போடுவது என்ன நியாயம்? என்ன ethics? ஒரு உண்மையாய் கிறிஸ்துவை பின்பற்றும் ஊழியர் இப்படி செய்ய முடியுமா? அதனால் தான் ஆண்டவர் சொல்லியிருக்கிறார்- ஒருவரின் கனிகளால் அவரை அறிவீர்கள் என்று. ஒருத்தரை எப்படியெல்லாம் திட்டணுமோ, அப்படியெல்லாம் திட்டி விட்டு, அவங்க கட்டுரையை திருடிப் போடுவது என்ன வகையான பரிசுத்தமோ? ஒரு வேளை குறுகுறுக்கும் குற்ற மனச்சாட்சியை அடக்க இப்படி செய்றாங்களோ?பாத்தியா....நான் 100% கெட்டவன் கிடையாது ... கொஞ்சம் நல்லவனும்தான்... என்று ஒரு வேளை show காட்ட இப்படி செய்றாங்களா?
உரிமையாளர்கள் யாரும் இந்த உரிமை மீறலுக்கு வழக்குப் போட மாட்டாங்க என்ற தைரியம்தான் இப்படியெல்லாம் செய்ய வைக்கிறது. போட்டார்கள் என்றால் தொலைந்தார்கள். அதை வைத்தே அவங்களை ஆபாசமாகத் திட்டித் தீர்த்து விடுவார் இந்த உலக மகா பரிசுத்தவான் என்பது 200 சதவீதம் நிச்சயம்.
ஒரிசா கலவரத்தில் கிறிஸ்தவர்கள் கஷ்டப்பட்ட போது இவர் என்ன சொன்னார்? உதவி என்று யாரும் யாருக்கும் காசு கொடுத்துடாதீங்க, ஒரிசா கிறிஸ்தவர்களை யாரும் சந்திக்கமுடியாது. நீங்க கொடுக்கும் காசு அவ்ங்களை சென்றடையாது என்று கொடுப்பவர்களை discourage பண்ணினார். ஆனால் , மோகன் சி லாசரஸ் அருமையாக அந்த ஜனங்களை சந்தித்து அனேக உதவிகள் செய்தார். அப்ப இதில் பொய் சொன்னது யார்?
பென்னி ஹின் பொய் சொன்னார்தான். ஆனால் பென்னி ஹின் பற்றி இவர் சொன்னதெல்லாம், இட்டுக் கட்டிச் சொன்ன சினிமாக் கதை.
மோசமான பாவத்தில் இருப்பவர்களிடம் spirit of perversion கிரியை செய்யக் கூடும். அது போல் தன்னை மிஞ்சிய பரிசுத்தவானாய் (நான் மட்டும்தான் ஒழுங்கு, மத்தவனெல்லாம் மோசம்) காட்டிக் கொள்ளும் நபரிடமும் அதே ஆவி கிரியை செய்யக் கூடும் என்பதுதான் என் கணிப்பு.