5.பின்பு பிசாசு அவரை உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் ஒரு நிமிஷத்திலே அவருக்குக் காண்பித்து:
6. இவைகள் எல்லாவற்றின்மேலுமுள்ள அதிகாரத்தையும் இவைகளின் மகிமையையும் உமக்குத் தருவேன், இவைகள் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; எனக்கு இஷ்டமானவனுக்கு இவைகளைக் கொடுக்கிறேன்.
7. நீர் என்னைப் பணிந்துகொண்டால், எல்லாம் உம்முடையதாகும் என்று சொன்னான்.
பிசாசு இப்படி அவனுக்கு இஷ்டமான சிலரோடு ஒப்பந்தம் பண்ணி அவன் மகிமையை கொஞ்சம் கொடுத்து பாப்புலர் ஆக்கி விட்டு விடுகிறான். மக்களும் இதுதான் கடவுள் போல என்று எண்ணி ஏமாந்து விடுகிறார்கள். சாய் பாபாவை பிடிக்காதவர்கள் கூட , அவர் அறக்கட்டளை மூலம் செய்யப்படும் சமூக சேவையை பாராட்டுகிறார்கள். சிறு பிள்ளைகளை சாக்லேட் கொடுத்து ஏமாற்றுவது போல, இப்படி சமூக சேவை செய்து அதைக் காட்டி பலரை ஏமாற்றி தன்னை நல்லவன் போல் பிசாசு காட்டிக் கொள்கிறான்.
இது போன்ற குருமார்கள் வணக்கத்திலிருந்து நம் தேசம் விடுதலையாவது எப்போது?