Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கிறிஸ்து உயிர்த்தெழுந்த தின வாழ்த்துக்கள்!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
RE: கிறிஸ்து உயிர்த்தெழுந்த தின வாழ்த்துக்கள்!
Permalink  
 



சகோதரர் சில்சாம் மற்றும் கொல்வின் அவர்களுக்கு எனது கனிவான வேண்டுகோள், தயவு செய்து உங்கள் தனிப்பட்ட உரையாடல்கள், செல்போன் குறுஞ்செய்திகள் மூலம் நீங்கள் பகிர்ந்துகொண்டவற்றை வைத்து தளத்தில் மோதாதீர்கள். அண்மையில் ஒரு பாரளுமன்ற சிறப்பு கூட்டத்தில் சோனியா, மன்மோகன், அத்வானி, சுஷ்மா சுவராஜ் போன்றவர்கள் எதிரணியில் இருந்தாலும் அளவளாவி கொண்டிருந்ததை பத்திரிக்கைகள் படம் பிடித்து காட்டியிருந்தன. கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அரசியல்வாதிகள் தனிப்பட்ட தாக்குதல் தொடுப்பதில்லை. கிறிஸ்தவ நம்பிக்கை இல்லாத இவர்களே இப்படி இருக்க முடியுமாயின் நமக்கு ஏன் சகிப்புத்தன்மை காணாமல் போய்விடுகிறது.(தமிழக அரசியல் சூழல் வேறுவிதம்) தள உறவுகளை பொறுத்தவரை ஒவ்வொருவரும் ஒவ்வொரு பிண்ணனியில் இருந்து வருகிறோம், ஒவ்வொருவரின் எண்ண உருவாக்கமும் மன ஓட்டமும் வெளிப்புற காரணிகளாலும், நாம் எப்படி சிலவற்றை புரிந்துவைத்துள்ளோம் என்பதை வைத்து தான் அமைகின்றன ஆதலால் மாற்று கருத்து கொள்வோரையும் மதிப்பதே விவாத நாகரீகம். உங்களுக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை, தளத்தில் தயவு செய்து தனி நபர் தாக்குதலை தொடராதீர்கள். ஒருவேளை ஒருவர் மற்றொருவரிடம் நீங்கள் இப்படி சொல்வது எனக்கு பிடிக்கவில்லை என்றால் அதை மதிப்பது தான் அழகு.

திராவிட கட்சிகளை சேர்ந்தவர்கள் ராஜாஜியை கிண்டல் பண்ணும் விதமாக ராசாசி என்று அழைப்பார்கள், பொறுத்து பொறுத்து பார்த்த அந்த முதியவர், தயவு செய்து என்னை அப்படி அழைக்காதீர்கள் என கேட்டுக்கொண்டார், அதில் இருந்து யாரும் அவரை அப்படி கிண்டலாக அழைப்பதில்லை. தமிழக அரசியலின் இரு துருவங்களாக ராஜாஜியும் பெரியாரும் இருந்த போதும் ஒருவர் மீது ஒருவர் அவ்வளவு பாசம் வைத்திருந்தனர். இது தான் இம்முதியவர்கள் நமக்கு கற்று தந்த பாடம். எனவே ஒருவரை ஒருவர் மதிப்பதில் நாம் கிறிஸ்துவை காண்பிப்போம்.


Chillsam:-

ஆம் நண்பரே, தங்கள் அன்பான வரிகளை நானும் கருத்தில் கொள்ளுகிறேன். நான் எழுதியவற்றுக்குரிய ரியாக்‌ஷனைப் பார்த்தவுடனே எனது வரிகளை நீக்கிவிடுவேன்.மேலும் இதற்கு முந்தைய வரிகளையும் நீக்கியிருக்கிறேன். மூத்த உறுப்பினரான திரு.கொல்வின் அவர்களே ஈஸ்டர் வாழ்த்து சொல்லும் இந்த திரியில் சம்பந்தமில்லாத கருத்துக்களை வெளியிட்டிருப்பது வருந்தத்தக்கது. தனி மடல், மின்னஞ்சல் மற்றும் உறுப்பினர் அறிமுகம் திரி ஆகிய எத்தனையோ வாய்ப்புகள் இருக்க தனிப்பட்ட ஒரு சிலரது அபிப்ராய பேதங்கள் மற்றவர்களையும் பாதித்து மற்றவர்கள் கருத்துகூற தடையாக எதையாவது எழுதுவது தளத்தின் ஒற்றுமையை நிச்சயமாகவே பாதிக்கக்கூடியது. நானும் நேற்று முழுவதும் தீவிரமாக யோசித்தேன்,புதிய உறுப்பினர்கள் வந்து தங்கள் கருத்துக்களை வெளியிடுவதற்கு ஏதுவாக நாம் கொஞ்சகாலம் அமைதியாக இருக்கலாம், என்பதாக. ஆனாலும் மீண்டும் மீண்டும் தோற்று போகிறேன்.

இனி இதுபோல நண்பர்களை நோக்கி கருத்தையும் தாக்குதல்களையும் தொடுக்க நினைக்கிறவர்கள் குறிப்பிட்ட திரியின் தலைப்புக்கு பங்கம் வராதிருக்க அதன் தொடுப்பை மாத்திரம் கொடுத்து இந்த குறிப்பிட்ட திரியில் இந்த நண்பர் இவ்வாறு எழுதியிருக்கிறார்,அது தவறு,ஏனெனில் இவரே சரியில்லாதவர் என்பதாக அவருடைய உறுப்பினர் அறிமுகத்துக்குக் கீழாகவோ அல்லது தனி திரியாகவோ துவங்கலாம்.இதனால் தளம் ஒழுங்கமைக்கப்படுவதுடன் சுறுசுறுப்பாகவும் இயங்கும்.ஆனாலும் சகோதரர்களான நமக்குள் இருக்கும் பிணக்குகளை முதலில் தனிப்பட்ட முறையில் பேசித் தீர்த்துக்கொள்ளுவதே நல்லது.மேலும் தனிமடல் மின்னஞ்சல் போன்ற வசதிகளைப் பயன்படுத்தலாம். இதனை கொல்வின் ஏற்பதாக இருந்தால் முதலில் அவர் செய்யவேண்டியது தான் எழுதிய சம்பந்தமில்லாத அவதூறு வரிகளை நீக்கிவிடுவாராக.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

joseph wrote:

என்னுடன் பணிபுரியும், நாம் மிகவும் மதிக்கும் ஒரு மாற்று மத சகோதரியிடம் இதை (புனித வெள்ளி, ஈஸ்டர்)  குறித்து பகிர்ந்து கொள்ள நேர்ந்தது. அவர்களை நாம் கன்வின்ஸ் செய்யவில்லை ஆனால் அதன் தாத்பர்யத்தை விளக்கினேன். 


 நீண்ட இடைவெளிக்குப் பிறகு நம்முடைய தளத்தில் உங்கள் எழுத்துக்களைப் பார்ப்பது மிகவும் சந்தோஷம். எல்லோரும் போனது போல நானும் தளத்தைவிட்டு போயிருக்கக்கூடாது. நம்முடைய உழைப்பு வீணாகாவண்ணம் நம்முடைய தளத்துக்கும் உயிரூட்டவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.இயன்றமட்டும் உதவுங்கள். நான் விடுத்த எளிமையான சவாலுக்கு அழகாகவும் ’சுருக்’ கமாகவும் பதிலளித்திருக்கிறீர்கள். ஆனாலும் இந்த பதில் எனக்கு முழு திருப்தியைத் தரவில்லை.கேள்விகள் ஒன்றுக்கும் மேற்பட்டதாக இருக்க பதிலோ ஒன்றாக இருக்கிறது.. biggrin



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

என்னுடன் பணிபுரியும், நாம் மிகவும் மதிக்கும் ஒரு மாற்று மத சகோதரியிடம் இதை (புனித வெள்ளி, ஈஸ்டர்)  குறித்து பகிர்ந்து கொள்ள நேர்ந்தது. அவர்களை நாம் கன்வின்ஸ் செய்யவில்லை ஆனால் அதன் தாத்பர்யத்தை விளக்கினேன். 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 


chillsam Wrote on 10-04-2012 03:58:11:
colvin Wrote on 09-04-2012 17:21:44:
போதகர் சில்சாம்... குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பவர்.

திரு.கொல்வின் அவர்களுக்கு எனது இறுதியான அறிவிப்பு.என்னை இதுவரையிலும் எங்குமே நான் போதகர் என்று குறிப்பிடாத நிலையில் என்னை அவதூறு செய்து இழிவுபடுத்தும் நோக்கத்துடன் போதகர் என்று குறிப்பிடுவது அடாத செயலாகும்.

மிக அழகான கற்பனை. ஊழியம் செய்பவரை பாஸ்டர் என்றும் ஆலயத்தில் குருத்துவபணி செய்யும் குருவானவரை ஃபாதர் என்றும்தான் அழைப்போம். இதுதான் நடைமுறை. அதுவும் நீங்கள் முழு நேரஊழியம் செய்கிறீர்கள். இப்படி உங்களை அழைப்பதில் என்ன சங்கடமோ? ஆனால் முன்னர் எல்லாம் நீங்கள் ஆட்சேபம் தெரிவித்ததில்லை. முடிந்தால் ஆதாரத்தை பதிக்கிறேன். இனி உம்முடன் எனக்கு பேச்சு இல்லை.
chillsam Wrote on 10-04-2012 03:58:11:
மேலும் நான் குட்டையைக் குழப்பி மீன்பிடித்து உங்கள் நாட்டுக்கு பார்ஸல் பண்ணப்போவதில்லை. குழம்பி நிற்கும் குட்டையான நீங்கள் நல்ல தண்ணீருக்கு ஏற்பாடு செய்து உங்கள் மீன்களைக் காப்பாற்றிக் கொள்ளலாமே ??? இனியும் என்னை போதகர் என்று நீங்கள் குறிப்பிட்டால் நானும் உங்களை வேறொரு பெயரால் குறிப்பிடவேண்டியிருக்கும். ஒரு மனிதனுடன் தந்திரமாகப் பழகி அவனுடைய தனி விவரங்களையும் தனிப்பட்ட பெலவீனங்களையும் அறிந்துகொண்டு அதை வைத்து அந்த மனிதனைக் கட்டுப்படுத்த முயற்சிக்கும் பேடித்தனத்தை தமிழ் கிறிஸ்தவ உலகில் மட்டுமே நான் கண்டு வியக்கிறேன்

இது உங்களுக்குதான் சாலபொருந்தும். என்னை எப்படி வேண்டுமென்றாலும் அழைத்துக் கொள்ளுங்கள். தந்திரமாக பேசுவது, பொய் பேசுவது இவை போன்றவற்றை செய்பவன் நான் அல்ல. பலவீனங்களை தெரிந்துகொள்வதற்கு நீர் என்ன உண்மையா பேசுகிறீர் இல்லைதானே!. அவன் நான் அல்ல என்று போனில் பேசும் நபர்தான் நீர் என்பதை புரிந்து கொள்ளும்.


Chillsam:-

ஹலோ மிஸ்டர்,

நண்பர்களுக்கிடையான தனிப்பட்ட உரையாடல்களைப் பொதுவில் வைத்து விவாதிப்பது நட்பின் எல்லைகளை கொளுத்திவிடும் என்ற அடிப்படை நாகரீகம் கூட இல்லாமல் சிறுபிள்ளைத்தன்மாக செயல்படும் நீங்கள் என்னைக் குறித்து அபிப்ராயம் சொல்லுவது வேடிக்கையாக இருக்கிறது. இலங்கைய (தமிழ) ரிடத்தில் பொதுவாகவே சில அடிப்படை நாகரீக பண்புகள் இருக்கும் என்று நம்பி கொஞ்சம் அதிகமாகவே உங்களுக்கு மரியாதை கொடுத்தது என்னுடைய தவறுதான். என்னுடைய காலம் ஏறக்குறைய முடிந்துவிட்டது.ஆனால் நீங்களோ இளைஞர், செல்லவேண்டிய தூரம் வெகுதூரம். இப்போதுதான் வாழ்க்கையைத் துவங்கியிருக்கிறீர்கள். நிதானமாக செல்லுங்கள்.

நான் இங்கு யாரிடமும் என்னை முழு நேர ஊழியன் என்றோ போதகன் என்றோ பாஸ்டர் என்றோ சொல்லிக்கொண்டதில்லை. உங்களால் முடிந்தால்- நான் அவ்வாறு குறிப்பிட்டு யார் மீதாவது அதிகாரம் செலுத்தியிருந்தால்- அதற்கான ஆதாரத்தை உடனே வெளியிடவும். இப்படி என்னைக் குறித்து நான் அறிவிக்காதவற்றை எப்படியோ சூழ்ச்சியுடனும் குறைமதியுடனும் ஆராய்ந்துபெற்று அதை வைத்து என்னை முடக்க சதிசெய்வதும் மடமை தான். நான் ஆரம்பமுதலே சாதாரண பார்வையாளனைப் போலவும் வழிப்போக்கனைப் போலவுமே என் மனதில் தோன்றிய கருத்துக்களை வெளியிட்டு வந்திருக்கிறேன்.நான் இங்கு எந்த ஸ்தாபனத்துக்காகவும் தலைவருக்காகவும் பணியாற்றவில்லை. நான் யாரிடமும் யாசகம் கேட்டதுமில்லை.எனது சொந்த பிரச்சினைகளை யாரிடமும் பகிர்ந்துகொண்டதுமில்லை. முக்கியமாக இந்த கொல்வின் என்பவருக்கு எனது தனி எண்ணைக் கொடுத்து போன் சொல்லவுமில்லை. யாரிடமோ தந்திரமாக எனது எண்ணைக் கேட்டு பெற்று ஓயாமல் போன்மூலம் தொல்லை செய்தவர் அவரே. என்னைத் தொடர்புகொள்ளுங்கள் என்று ஒருமுறைகூட அவரிடம் நான் சொன்னதில்லை.இன்னும் இவரைக் குறித்து என்ன சொல்ல ?

( சொந்த நாட்டிலும் இந்தியா போன்ற (புண்ணிய பூமியிலும்..) வெளிநாடுகளிலும் அகதிகளாக வாழ போராடிக்கொண்டிருக்கும் இலங்கை அகதிகள் மீது சிறுவயதிலிருந்தே எனக்கு தனி அனுதாபம் உண்டு. அதுபோன்ற நல்லெண்ணத்துக்கு கொல்வின் தகுதியானவர் அல்ல என்று நினைக்கிறேன். ) கொடூரமான வார்த்தைகளால் கேவலமாக எழுதுவது..உடனே அந்தர் பல்டியடித்து மன்னிப்பு கேட்பது என்று மன்னிப்பின் மாண்பையே குலைப்பவர் இவர். கடந்த மாதம் இதேபோல என்னை அவதூறு செய்து எழுதிவிட்டு நான் அமைதியாக இருந்ததும் மனதில் குத்தப்பட்டு என்னிடம் மன்னிப்பு கேட்டு குறுஞ்செய்தி அனுப்பினார். நானும் அதனை ஏற்று தனிமடல் அனுப்பியிருக்கிறேன். இதோ மீண்டும் தேவையில்லாமல் என்னை நோக்கி தாக்குதல் தொடுக்கிறார். சொந்த ஜனங்களையே இராணுவத்தை ஏவி கொலைசெய்யும் தேசத்தின் கலாச்சாரம் எனக்கு தெரியாது. நான் ஒருபோதும் எனது நெருங்கிய நண்பர்களை கேவலமாக பேசியதோ எழுதியதோ இல்லை. முக்கியமாக ஆரோக்கிய உபதேசத்தைக் கைக்கொள்ளும் நண்பர்களிடம் சற்று இதமாகவே நடந்துகொள்ளுவேன். ஆனால் இந்த கொல்வின் கத்தோலிக்க (சர்ப்ப ) ஸ்தாபனத்தின் குட்டியாக இருந்தாலும் நான் நேசம் பாராட்டியே வந்திருக்கிறேன். அவர் ஏனோ என்னை ஓயாமல் அவதூறு செய்கிறார்.காரணம் புரியவில்லை. பார்ப்போம்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
கிறிஸ்து உயிர்த்தெழுந்த தின வாழ்த்துக்கள்!
Permalink  
 


ஈஸ்டர் எனும் பண்டிகையின் பழங்கால மூலதாரம்


கலப்பின கலாச்சார பண்டிகைகளின் தொடர்புகள்

 



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
RE: கிறிஸ்து உயிர்த்தெழுந்த தின வாழ்த்துக்கள்!
Permalink  
 


போதகர் சில்சாம்... குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பவர்.


திரு.கொல்வின் அவர்களுக்கு எனது இறுதியான அறிவிப்பு. என்னை இதுவரையிலும் எங்குமே நான் போதகர் என்று குறிப்பிடாத நிலையில் என்னை அவதூறு செய்து இழிவுபடுத்தும் நோக்கத்துடன் போதகர் என்று குறிப்பிடுவது அடாத செயலாகும். மேலும் நான் குட்டையைக் குழப்பி மீன்பிடித்து உங்கள் நாட்டுக்கு பார்ஸல் பண்ணப்போவதில்லை. குழம்பி நிற்கும் குட்டையான நீங்கள் நல்ல தண்ணீருக்கு ஏற்பாடு செய்து உங்கள் மீன்களைக் காப்பாற்றிக் கொள்ளலாமே ??? இனியும் என்னை போதகர் என்று நீங்கள் குறிப்பிட்டால் நானும் உங்களை வேறொரு பெயரால் குறிப்பிடவேண்டியிருக்கும். ஒரு மனிதனுடன் தந்திரமாகப் பழகி அவனுடைய தனி விவரங்களையும் தனிப்பட்ட பெலவீனங்களையும் அறிந்துகொண்டு அதை வைத்து அந்த மனிதனைக் கட்டுப்படுத்த முயற்சிக்கும் பேடித்தனத்தை தமிழ் கிறிஸ்தவ உலகில் மட்டுமே நான் கண்டு வியக்கிறேன்.

josephsneha Wrote on 09-04-2012 15:51:06:
சரிதான் நண்பர் சில்சாம் அவர்களே, ஈஸ்டர் வாழ்த்துக்களில் யாரும் முட்டையை நினைவுகூறுவதில்லை ஒருவேளை மேற்கத்திய நாடுகளில் இது (முட்டை) போன்றவற்றை முக்கியப்படுத்துவார்களாக இருக்கும், என்னை பொறுத்தவரை கிறிஸ்துமஸ், ஈஸ்டர் போன்றவை மாற்றுமத நண்பர்களிடம் நமது சுவிஷேஷத்தை சொல்ல ஒரு வாய்ப்பாக தான் பார்க்கிறேன். இப்பண்டிகைகள் தோன்றிய பாபிலோனிய வழக்கங்களை நாம் ஆராய்வதை விட்டு இப்பண்டிகைகளை இயேசுவின் அன்பை விவரிக்கும் கருவிகளாகவே பயன்படுத்தவேண்டும். இயேசு பிறந்தார், நம் பாவங்களில் இருந்து நம்மை மீட்க சிலுவையில் மரித்தார், உயிர்த்து எழுந்தார் என்பது உண்மை என நம்புகிறோமே, அப்படியானால் பண்டிகைகளை கொண்டாடினால் தான் என்ன‌. அன்றைக்கு வெள்ளைக்காரன் இருந்து ஆண்டு அடிமைப்படுத்துவதற்கு உபயோகித்த கட்டிடங்களை இன்றைக்கும் நாம் அரசு அலுவலகங்களாக பயன்படுத்துகிறோமே அது மாதிரி தான் இதுவும். இப்பண்டிகைகள் தோன்றிய வெற்று பாபிலோனிய பாரம்பரியங்களை விட்டு விட்டு அவற்றை கிறிஸ்துவின் அன்பை விவரிக்கும் காரணியாக பயன்படுத்துவதில் தவறில்லை.


ஆம் நண்பரே, தற்கால அரசாங்கங்கள் ஏகமாக அங்கீகரிக்கக்கூடிய புறக்கணிக்கமுடியாத விழாக்களாக நம்முடைய திருச்சபையின் முக்கிய விழாக்கள் அமைந்திருக்கிறது.அதுகுறித்து ஒருபக்கம் சந்தோஷம் தான்.இன்றைக்கும் பல இந்து நண்பர்கள் நமக்கு ஹாப்பி ஈஸ்டர் வாழ்த்து சொல்லும்போது நெகிழ்ந்து போகிறோம்.நம்மோடு சகஜமாக பழகக் கூடிய இந்து நண்பர்களின் மத சகிப்புத்தன்மை நம்மை வியக்கவைத்து ஒருவேளை நாம் தான் மதவெறியனாக இருக்கிறோமோ என்ற ஐயத்தை ஏற்படுத்துவது உண்மை தான்.அதே நேரத்தில் நாம் நமது முன்னோர்களின் பாரம்பரியத்தில் கொண்டாடி வந்த விழாக்களின் மாயை அகன்றதும் அதனை வெறுத்து ஒதுக்கிறோமோ அதேபோன்ற காரணத்துக்காகவே இதுபோன்ற கலப்பு கலாச்சார விழாக்களைக் குறித்து விழிப்புணர்வு உண்டாக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

அதாவது பண்டிகையை நாம் சரியான நோக்கத்துடன் கொண்டாடுகிறோம்.ஆனால் தவறான காலத்திலும் தவறான அமைப்பு அறிவித்தமுறையிலும் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்.எனது நோக்கம் இந்த விழாக்களை வரிக்கு வரி வேத கால சம்பவத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து அதன் வழியே வேதத்தின் மகத்துவத்தை நிலைநிறுத்துவதே.உதாரணமாக உங்களுக்கு ஒரு பரீட்சை..(>:( ) வேதத்தில் யூதர்களால் கொண்டாடப்பட்ட எந்த பண்டிகையானது கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில் நிறைவேறியது என்று அறிவீர்களா? அதுகுறித்த செய்தி நேற்றைய தினத்தில் உங்கள் பீடத்திலிருந்து உங்களுக்குக் கிடைத்ததா ? அதனை உங்களைச் சுற்றிலும் இருக்கிற யாராவது ஒரு எளிய மனிதனுடன் பகிர்ந்தீர்களா ? அப்படியானால் நாம் ஏன் இன்னும் கிறிஸ்தவர்களாக இருக்கிறோம் ?

முயற்சியுங்களேன்... (பந்து உங்கள் பக்கம் இருக்கிறது..!!!)



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
கிறிஸ்து உயிர்த்தெழுந்த தின வாழ்த்துக்கள்!
Permalink  
 


இது தமிழ் கிறிஸ்தவ தளத்திலிருந்து...

1.gif

மேற்காணும் வசனப் படத்தில் இரு வசனங்கள் இணைத்து சொல்லப்பட்டிருக்கிறது.அந்த வசனங்கள் முறையே,

  • ”மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.” (வெளிப்படுத்தல்.1:18)

மற்றும்

  • ”நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.” (மத்தேயு.28:20)

மேற்காணும் வசனங்களைத் தழுவி வசனப் படம் அமைக்கப்பட்டிருக்கிறது.அது பின்வருமாறு,

  • இனி உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருப்பேன்...மரித்தேன்,ஆனாலும் இதோ உயிர்த்தெழுந்தேன்..”

இடப்பற்றாகுறையினாலோ என்னவோ வசனத்தை சுருக்கியிருக்கிறார்கள்.ஆனால் அது வசனத்தின் மூலப் பொருளை பாதிப்பதாக இருப்பதே வருத்தமளிக்கிறது. தற்காலத்தில் ஆர்வமுள்ள இளைஞர்கள் அதிகமானோர் எழும்பி கற்றுக்கொள்ளவே அவசியமில்லாதவர்கள் போல தீர்மானமாக பல காரியங்களை செய்தும் போதித்தும் வருகிறார்கள்.அவர்களுக்கு நம்மால் ஈடுகொடுக்கமுடியவில்லை என்பதோடு இதுபோல தவறுகளை சுட்டிக்காட்டினாலும் நம்மையே கோபித்துக்கொள்ளுகிறார்கள்.

மீண்டும் வசனப் படத்திலுள்ள வாசகங்களை கவனிப்போம்....அதில் ”இனி உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருப்பேன்... மரித்தேன், ஆனாலும் இதோ உயிர்த்தெழுந்தேன்..” என்று இருக்கிறது.இதில் என்ன தவறு ? என்ன கருத்துப் பிழை ? இதில் வருத்தப்படுமளவுக்கு என்ன இருக்கிறது ? அந்த தவறை சம்பந்தப்பட்டவர்கள் ஒப்புக்கொள்ளுகிறார்களோ இல்லையோ வசனத்தின் ஆழத்தையும் அழகையும் ஆராய்ந்த சந்தோஷமாவது நமக்குக் கிடைக்கட்டும்.

நம்முடைய ஆண்டவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் என்றும் பிதாவுக்கு சமமானவர் என்றும் விசுவாசிக்கிறோம். எனவே அந்த அதிகாரத்துடனே அவர் இருப்பேன் என்றோ இருந்தேன் என்றோ சொல்லாமல் இருக்கிறேன் என்று சொல்லுகிறார். ப்ரஸண்ட் கண்டினியூ டென்ஸ் என்பார்களே அதுபோன்ற (தொடர் நிகழ்கால) வார்த்தை இது.ஆனால் இனி எனும் வார்த்தையும் இருப்பேன் எனும் வார்த்தையும் சர்வ வல்ல தேவனின் முக்காலத்துக்குமுரிய ஆளுமைக்கு மாறான வார்த்தையாகும்.அதே போல உயிர்த்தெழுந்தேன் என்று அவர் சொல்லாமல் உயிரோடிருக்கிறேன் என்று சொல்லுகிறார்.இரண்டு வார்த்தைக்கும் எவ்வளவோ வித்தியாசம் இருக்கிறது.

எனவே வேத வசனங்களை இயன்றமட்டும் உள்ளது உள்ளபடியே பயன்படுத்தினோமானால் இதுபோன்ற கருத்துப் பிழைகளைத் தவிர்க்கலாம். சம்பந்தப்பட்டவர்கள் இந்த வசனப் படத்தை உடனே எடிட் செய்து சரியான வசனத்துடன் வெளியிடுவார்களானால் உள்ளபடியே மகிழ்ச்சியடைவேன்.நன்றி.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
RE: கிறிஸ்து உயிர்த்தெழுந்த தின வாழ்த்துக்கள்!
Permalink  
 


colvin wrote:

சகோதர சகோதரிகள் அனைவருக்கும் உளம் கனிந்த ஈஸ்டர் வாழ்த்துக்கள்

easter27a.jpg


 

rawangjohnson Wrote@Tcs on 08-04-2012 02:22:09:
யூத ராஜ சிங்கம் உயிர்த்தெழுந்தார்.
அவர் மெய்யாகவே உயிர்த்தெழுந்தார்.
இனி மரணம் நம்மை ஆட்கொள்ளாது.


இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை விசுவாசிக்கிற அனைவருக்கும் எங்கள் ஈஸ்டர் வாழ்த்துகள்.

Chillsam:- இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை விசுவாசிக்கிறவர்கள் “ஈஸ்டர்” வாழ்த்து சொல்லமாட்டார்கள், நண்பரே..! (நாளைய தினம் இயேசுவானவரின் உயிர்த்தெழுதலை நினைவுகூறுகிறோமே தவிர (முயல் ??? ) முட்டையை வைத்து ஈஸ்டர் வாழ்த்து கூறப்போவதில்லை... ஏனெனில் நாளைய தினம் இயேசுவின் உயிர்த்தெழுந்த நாள் அல்ல..!)

மேலும் விவரங்களுக்கு தொடுப்புகளைத் தொடரவும்....

கில்கமேஷ் என்பவன் பாபிலோனிய புராண நாயகர்களில் ஒருவன். இவனது வரலாறு ஒரே மர்ம-மயமாக இருக்கிறது. உருக்-கின் அரசன் என்று அறியப்படுகிறான். நினேவ் இடிபாடுகளில் கி.மு.2000 -ஆம் ஆண்டுகளில் எழுதப்பட்டதாக நம்பப்படும் 3000 வரிகள் கொண்ட பல்வேறு கல்வெட்டுக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. என்கிடுவும் கில்கமேஷும் நண்பர்கள், இவர்களிருவரும் புரிந்த சாகசங்களை பற்றியது அக்கல்வெட்டுக்கள். இஸ்தார் என்று அறியப்பட்ட பெண் தெய்வம் இவனை திருமணம் செய்து கொள்ள ஆவலோடு இருக்கிறாள். இவன் இஸ்தாரை நிராகரிக்கிறான். இவனைக் கொள்ள இஸ்தார் ஏவும் தெய்வீக காளைமாட்டை தன் நண்பன் என்கிடுவோடு இணைந்து கொல்கிறான். திடீரென்று நோய்வாய்ப்பட்டு என்கிடு இறக்கிறான். கில்கமேஷுக்கு மரண பயம் வருகிறது. முன்பொரு சமயம் ஏற்பட்ட வெள்ளத்தில் தப்பித்த ஒரே ஒருவரான அவன் தாத்தா/மூதாதையர் ஒருவர் அவனுக்கு அமரத்துவம் கொடுக்கும் ஒரு செடி பற்றி தெரிவிக்கிறார். அதை அடைந்த கில்கமேஷ் அலட்சியமாய் இருப்பதால் பாம்பு ஒன்று எடுத்துச் சென்று விடுவதாக தெரிகிறது. கில்கமேஷ் என்கிடுவின் ஆவியாக மாறுகிறான். அவனுக்கு இறப்புக்கு பின்பான வாழ்வை பற்றியறியும் ஆவல் தோன்றுகிறது.

http://vidhoosh.blogspot.in/2010/11/blog-post_23.html

http://www.google.co.in/url?sa=t&rct=j&q=%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&source=web&cd=1&ved=0CCMQFjAA&url=http%3A%2F%2Fwww.bibleintamil.com%2Fbiblestudy%2Fu_ot-intro.htm&ei=z36AT8umGIrprQe6_6jtBQ&usg=AFQjCNGth0jsgiF_WxKs0EKxbdQYMGLURQ&cad=rja



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
Permalink  
 

 இயேசு உயிர்த்தெழுந்த போது சாத்தான், விழுந்தான்.
இந்த உயிர்த்தெழுதலின் நாளில், ஒரு சாத்தானின் கைக்கூலி (சாய்பாபா) விழுந்தான்.


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

சகோதர சகோதரிகள் அனைவருக்கும் உளம் கனிந்த ஈஸ்டர் வாழ்த்துக்கள்

 

easter27a.jpg



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
கிறிஸ்து உயிர்த்தெழுந்த தின வாழ்த்துக்கள்!
Permalink  
 


golda wrote:

அருமை சகோதரர் சில்சாம் அவர்களுக்கு, இதயம் கனிந்த கிறிஸ்து உயிர்த்தெழுந்த தின வாழ்த்துக்கள்! ("ஈஸ்டர்" ன்னு சொல்லக் கூடாதில்ல!)


மிகச் சரியாக சொன்னீர்கள்..."உயிரோடிருக்கிறவரை நீங்கள் மரித்தோரிடத்தில் தேடுகிறதென்ன?" (லூக்கா.24:5) மனிதர்களால் மனிதர்களுக்காக நிர்ணயிக்கப்பட்ட எந்த நாளையும் விட கர்த்தருடைய நாள் என்பது விசேஷமானதாக இருக்கிறது;இவையெல்லாம் சாலை பாதுகாப்பு வாரம் என்றும் எயிட்ஸ் ஒழிப்பு நாள் என்றும் உலகத்தார் நிர்ணயித்து ஆசரிப்பதைப் போன்றதே;சர்ச்சைகளைத் தவிர்ப்போம், பூரணராகும்படி கடந்துபோவோம்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

அருமை சகோதரர் சில்சாம் அவர்களுக்கு, இதயம் கனிந்த கிறிஸ்து உயிர்த்தெழுந்த தின வாழ்த்துக்கள்! ("ஈஸ்டர்" ன்னு சொல்லக் கூடாதில்ல!)



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard