தமிழ் கிறித்தவ தளத்தின்ஒரு குறிப்பிட்ட திரியில் நமக்குள் நடந்த உரையாடல்கள் காரணமாக நமக்குள்ளே எந்தவித உள்நோக்கமுமில்லாவிட்டாலும் அது அந்த தளத்திலுள்ள மற்ற நண்பர்களுக்கு சங்கடத்தைத் தருவதாக உள்ளது;ஏனெனில் குறிப்பாக அந்த திரியில் இப்படிப்பட்ட திசைதிருப்பும் வாதங்களைத் தவிர்க்கச் சொல்லியிருக்கிறது;எனவே அதனை நீக்குகிறேன்.நீங்களும் அங்கிருந்து உங்கள் வரிகளை நீக்கிவிடுங்கள்;எனக்குத் தெரிவிக்கவிரும்பும் கருத்துக்களை இங்கே பதிக்கவும்.
ஆரம்பத்தில் அந்த தளத்தில் நண்பர்களின் இதுபோன்ற சீண்டல்களும் சிணுங்கல்களுமாக சுவாரசியமாகவே இருந்தது;ஒருகட்டத்தில் ஏனோ அது வற்றிப் போனது;ஒருவித இறுக்கமான சூழ்நிலை நிலவுகிறது; ஒருவருக்கொருவர் விசாரிப்புகளும் அன்பும் தணிந்தே போனது;உதாரணமாக என்னைப் போன்றோர் ஏதாவது கட்டுரையைப் போட்டால் அது வாசிக்கப்படுகிறதா சென்று சேருகிறதா என்று கூட தெரியாத அளவுக்கு தளம் தூங்கி வழியும்; இதனைக் கருத்தில் கொண்டே என்னைப் போன்றோர் அவ்வப்போது சிரித்துக்கொண்டே சண்டைபோடுவோம்; ஏனெனில் இது நண்பர்களின் வட்டம்; இங்கே பொழுதுபோக்கு மட்டுல்ல அத்துடன் காரியமும் நடக்கவேண்டும்; ரொம்ப ஆவிக்குரியவர்களாகக் காட்டிக்கொள்ளுகிறவர்களுக்கு இங்கே என்ன வேலை என்கிறேன்; கீழ்மட்டத்திலுள்ளோரை மேல்மட்டத்துக்குக் கொணர்வதற்கு கீழ்மட்டத்துக்குச் சென்றாலே ஆகும் என்பதையே நான் நம்புகிறேன்.
இதோ நமக்குள் நடைபெற்ற அந்த விவாதத்தினை இங்கே போட்டு வைக்கிறேன்;தேவைப்பட்டால் கோல்டாவுக்கு எனது பதில்கள் என்ற தனி பகுதியையே உருவாக்குவேன்;அந்த அளவுக்கு உங்களோடு எனக்கு பேச வேண்டிய காரியங்கள் அதிகம் இருக்கிறது.
pgolda Wrote on 20-04-2011 19:22:42:
சகோ சில்சாம் நீங்க ஏன் உங்க விளக்கத்தை கொடுக்கவில்லை?
Chillsam:
நீங்க எப்ப இங்க வந்தீங்க.. கட்சியில மன்னிப்பு கேட்டு .திரும்பவும் சேந்துட்டீங்களா..? இந்த உலகத்திலே யாரையுமே நம்பமுடியலயே...சேகரண்ணன் மூலமாக தானே காரியத்தை சாதிச்சீங்க...நான் நினைச்சேன்... எனக்கு அப்பவே தெரியும்..!
pgolda Wrote on 20-04-2011 20:50:14:
நான் வந்ததற்கு சகோ ராஜ்குமாரின் நல்ல மனதும், சகோ அற்புதத்தின் அன்பின் வார்த்தைகளும்தான் காரண்ம். சகோ சேகர் மார்க் போட்டதிலிருந்து தெரியவில்லையா.ஒழிஞ்சது..... என்று மகிழ்ச்சியாய் இருந்திருக்கிறார் என்று! விடாது கருப்பு போல திரும்ப வந்து விட்டேன்!!
Chillsam:
அது சரி... நீக்கும்போது மட்டும் ஆர்ப்பாட்டம் பண்ணின நீங்கள் இணையும்போது மட்டும் சத்தம் காட்டாம "சாது" மாதிரி இருப்பது நியாயந்தானா..?
pgolda Wrote on 21-04-2011 22:18:03
அது சரி... நீக்கும்போது மட்டும் ஆர்ப்பாட்டம் பண்ணின நீங்கள் இணையும்போது மட்டும் சத்தம் காட்டாம "சாது" மாதிரி இருப்பது நியாயந்தானா..?
Good Question!
ஆர்ப்பாட்டம் பண்ணின நீங்கள்...
அல்ல. அது வருத்தம்.
இணையும்போது மட்டும் சத்தம் காட்டாம "சாது" மாதிரி இருப்பது நியாயந்தானா..?
ஆரத்தி எடுக்கலாம் என்று நினைச்சீங்களோ?
வந்த வேகத்தில் போக வச்சிடாதீங்க. சாது பற்றி உங்க போர்டில் பேசலாம்.
நம்ப மாட்டீங்க. நான் நினைச்சேன்...நீங்க சொல்லிட்டீங்க. அல்லது நான் சொன்னேன்.. நீங்களும் நினைச்சீங்க என்ற ஒரு ஆவிக்குரிய ஒற்றுமை எனக்கும் சகோ அற்புதத்திற்கும் ஆச்சர்யப்படத்தக்க விதமாக ஒரே நாளில் உண்டானது. அப்ப்றமென்ன, உராய்வு நீங்கியது. கசப்பு, வருத்தம் மறைந்தது. புயல் ஓய்ந்தது. புது ராகம் பிறந்தது. (நம்ம அற்புதம் அண்ணாச்சி தானே, அவர் பிள்ளையையும் கிள்ளிவிடுவார், பிறகு தொட்டிலையும் ஆட்டிவிடுவாரே..?)
பின்னானவைகளை மறந்து , முன்னானவைகளை நாடிச் செல்வோம். என்ன சொல்றீங்க?
கிறிஸ்தவர்கள் மன்னித்து மறக்கும் சாதனையை வாழ்நாளெல்லாம் செய்யத்தான் வேண்டும். அதுவே சிலுவையின் வழி.
mycoimbatore Wrote on 22-04-2011 00:00:01:
தயவு செய்து இந்த திரியில் மற்ற விவாதங்கள் வேண்டாமே!
Chillsam:
இந்த பரிசுத்த விளையாட்டு திரியிலிருந்து என்னுடைய தேவையற்ற விளையாட்டு (வினையாக்கும்) வரிகளை நீக்கிவிட்டேன்;வாசகர்கள் மன்னிக்கவும்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)