Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Arius vs Athanasius திரித்துவ வரலாறு


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
RE: Arius vs Athanasius திரித்துவ வரலாறு
Permalink  
 


John wrote:
கலக்கல் சகோ. கொல்வின். மிகவும் அருமையாக எழுதியுள்ளீர்கள்! கர்த்தர் தாமே உங்களை இன்னும் பெரிய அளவில் எடுத்து பயன் படுத்துவாராக!!

 உற்சாகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி சகோரதரே. வரும் காலங்களில் திருச்சபையில் எழுந்த மற்றைய பேதங்களையும் எழுதுகிறேன். கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார். 



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 

கலக்கல் சகோ. கொல்வின். மிகவும் அருமையாக எழுதியுள்ளீர்கள்! கர்த்தர் தாமே உங்களை இன்னும் பெரிய அளவில் எடுத்து பயன் படுத்துவாராக!!


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
RE: Arius vs Athanasius திரித்துவ வரலாறு(3)
Permalink  
 


இக்காலக்கட்டத்தில் ஒரிகன் உடைய கல்லூரியின் மாணவரினால் உருவாக்கப்பட்ட பதியதோர் நிசேயக் குழு தோன்றியது. உண்மையில் இவர்கள் தேவார்த்தையை சரியான விதத்தில் வியாக்கியானம் செய்யத் கற்றதற்கு அத்தனாசியசின் இற்கும் நிசேய விசுவாசப் பிரமாணத்திற்கும் (Nicene Creed) கடன்பட்டவர்கள். இவர்களுள் Basil the great, Gregory of Nyssa , Gregory of Nazianz  எனும் மூன்று Cappadocians முக்கியமானவர்கள். இவர்கள் மூவரும் OUSIA என்பதற்கு சாரம் – Essence)  PRESOPON என்பதற்கும் (நபர் – Person) hypostasis எனும் பதத்தை உபயோகிப்பதால் ஏற்படும் தவறை / புரிந்து கொள்ளுதலை கண்டு கொண்டனர். இதனால் இப்பத்த்தின் உபயோகத்தைக் குறைத்துக் கொண்டனர். தங்களுடைய இறையியலை அத்தினாசினைப் போல் தேவனுடைய தெய்வீக சாரத்திலிருந்து ஆரம்பிக்காமல் தேவனில் மூன்று நபர்கள்(Hypostasis) இருப்பதில் தொடங்கி இம்முன்றையும் தெய்வீக சாரத்தின் கீழ் கொண்டுவர எத்தனித்தனர். தேவத்துவத்தின் நபர்களுக்கிடையேயுள்ள உறவை மூன்று நபர்கள் இருப்பதற்கு இவர்கள் கொடுத்த முக்கியத்துவம் நிசேய உபதேசம் வலிமை பெறவும், கள்ளப்போதனைகளின் பிழைகள் புலப்படவும் காரணமாய் அமைந்தது மட்டுமல்ல வார்த்தையின் (Logos) ஆள்தத்துவமும் பேணப்பட்டது. அதே சமயத்தில் இவர்கள் வேதத்துவத்தின் ஒற்றுமையையும் வலியுறுத்தினர். 

இக்காலக்கட்டம் வரை தூயஆவியைப் பற்றிய கருத்துக்கள் இறையியல் வட்டங்களில் முக்கியத்துவம் பெறவில்லை. முரண்பாடான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. குமாரனால் சிருஷ்டிக்க்ப்பட்ட முதல் வஸ்துவே (Being) பரிசுத்த ஆவி என ஏரியஸ் போதித்தார். ஒரிகனும் இதே கருத்துடையவராகவே இருந்தார். அத்தினாசிஸ் இவைகளை மறுத்து தூய ஆவியும் பிதாவினுடைய தன்மையுடையவர் என வலியுறுத்தினார். எனினும் நிசேய விசுவாசப் பிரமாணம் பரிசுத்த ஆவியையும் விசுவாசிக்கிறேன் எனும் பிரமாணத்தை மட்டுமே சேர்த்துக் கொண்டது.  Cappadocians உம் அத்தனாசின் அடிச்சுவட்டைப் பின்பற்றி தூயஆவியின் Homoousios (Same Essence) (பிதாவினுடைய அதே தன்மையுடையவர்) வலியுறுத்தினார். . மேலைத்தேய Poitiers ஐச் சேர்ந்த Hilary தூய ஆவியானவர் தேவனுடைய ஆழங்களை ஆராய்கின்றபடியால் தெய்வீக தன்மைக்கு அந்நியராய் இருக்க முடியாது என வாதிட்டார். கொனஸ்தந்திநோபிளின் சபைத் தலைவரான Nacedoniue  தூயாவியானவர் குமாரனை விடவும் தாழ்வான சிருஷ்டி என கருதினார். எனினும் இவருடைய உபதேசம் பிழையானது என பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டதோடு இவரது கொள்கைகளைப் பின்பற்றியவர்கள் தூயாவியைப் பற்றி தீமையானவைகளைப் பேசுபவர்கள் என அழைக்கப்பட்டனர். 

கி.பி. 381 கொனஸ்தந்திநோபிளில் பொதுவான சங்கம் கூடியபோது Gregory of Nazianz இன் வழிநடத்துதலின் கீழ் நிசேய விசுவாசப் பிரமாணத்திற்கு அனுமதியளித்தது. பரிசுத்த ஆவியைப் பற்றி பின்வருமாறு விசுவாசப் பிரமாணத்தில் எழுதப்பட்டது. கர்த்தரும் ஜீவனைக் கொடுக்கிற வரும், பிதாவினின்று புறப்பட்டவரும் பிதாவுடன் குமாரனோடும் கூடத் தொழுது ஸ்தோத்தரிக்கப்பட்ட வேண்டியவரும் தீர்க்கதரிசிகளினூடாகப் பேசுகின்றவருமான பரிசுத்த ஆவியையும் விசுவசிக்கின்றேன்.

இரு காரணங்களின் நிமித்தமாக கொனஸ்தந்திபோபிள் சங்கத்தின் பிரமாணம் திருப்பதியற்றதாயிருந்து. (1) Homoousios சஙகத்தின் எனும் வார்த்தை உபயோகிக்கப்படாதமையால் தூய ஆவியானவர் பிதாவோடே ஒரே தன்மை பொருந்தியவர் என்பது வலியுறுத்தப்படவில்லை. (2) தூய ஆவிக்கும் மற்ற இருவருக்குமிடையேயுள்ள உறவுமுறை விளக்கப்படவில்லை. தூய ஆவியானவரை பிதாவிலிருந்து புறப்படுகிறவர் என குறிப்பிடப்பட்டிருப்பினும் அவர் குமாரனிலிருந்து புறப்படுவதைப் பற்றி வலியுறுத்தவோ அன்றி மறுத்துரைக்கவோ இல்லை. அவ்விடயம் எல்லோராலும் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறியமுடியாம லுள்ளது. தூய ஆவியானவர் பிதாவிலிருந்து மட்டும் புறப்படுகின்றவர் என்று கூறுவதானது குமாரனுக்கும் பிதாவுக்கும் இடையேயுள்ள ஒருமைத் தன்மையை மறுதலிப்பதாகவுள்ளது. தூய ஆவி குமாரனிலிருந்து வந்தவர் என கூறும்போது சார்ந்திருக்கும் நிலையை அவருக்கு கொடுப்பதைப் போன்றும் அவருடைய தேவத்துவத்திற்கு களங்கம் விளைவிப்பதாயும் உள்ளது. Athanasius, Basil, Gregory of Nyssa  என்போர் தூய ஆவியானவர் குமாரனிலிருந்து புறப்பட்டவர் என்பதை எவ்வித்த்திலும் எதிர்க்காத முறையில் அவர் பிதாவிலிருந்து புறப்பட்டவர் என வலியுறுத்தினர். 

மேலைத்தேய இறையியலாளர்கள் பிதாவிலும் குமாரனிலுமிருந்து புறப்பட்டவரே தூயஆவியானவர் என்பதை ஏற்றுக் கொண்டனர். கி.பி 589 இல் கூடிய Toled சங்கம் இவ்வுபதேசத்திற்கு முக்கியமானது கீழைத்தேய சபைகளைப் பொறுத்தவரை திரித்துவ உபதேசத்தின் இறுதியான கருத்தமைப்பு தமஸ்குவிலிருந்த John என்பரால் கொடுக்க்ப்பட்டது. இவருடைய கருத்துப்படி ஒரு தெய்வீக சாரமே உள்ளது. ஆனால் மூன்று நபர்கள் இருக்கிறார்கள். இவை தெய்வீக வஸ்துவில் உள்ள நிஜங்களாக கருதப்பட வேண்டும். ஆனால் மூன்று மனிதர்களுக்கிடையேயான உறவு முறையின் சம்பந்த முறையைப் போன்றதாகக் கருதப்படக் கூடாது. அவர்கள் சகலவற்றிலும் ஒன்றானவர்களாக இருக்கும் நிலையில் மட்டுமே வேறுபட்டவர்கள். மூவரும் ஒருவரை விட மற்றவர் தாழ்வானவர்கள் அல்ல என வாதிட்டாலும் பிதாவினால் குமரன் மூலமாக புறப்பட்டவரே தூய ஆவியானவரே என கருதினர். இக்கருத்து இன்றும் கூட ஒருவரை விட மற்றவர் தாழ்ந்தவர் எனும் எண்ணத்தை மக்களுக்கு ஏற்படுத்துவதாகவுள்ளது.

Augustine இனுடைய பிரமாண்டபமான படைப்பான De Tunicate  இலேயே மேலைத்தேய திரித்துவ உபதேசம் தனது பூரணத்துவத்தை பெற்றது. அவர் தெய்வீகச் சாரம் தன்மை என்பவைகளின் ஒருமைத் தன்மையும் நபர்களின் பன்மைத் தன்மையையும் வலியுறுத்தினர். மூன்று மானிட நபர்களைப் போன்றவர்கள் அல்ல (அதாவது பொதுவான மானிட தன்மையின் பகுதிகளைக் கொண்டிருத்தல்) மாறாக தெய்வீக நபர்களுக்கிடையேயான உறவுமுறை ஒருவரில்லாமல் மற்றவர் இருக்க முடியாத நிலையாகும். அவர்களுக்கிடையேயான சம்பந்தம் அந்நியோன்யமானது. Augustine ஐப் பொறுத்தவரையில் தூய ஆவியானவர் பிதாவிலிருந்து மட்டுமல்ல குமாரனிலிருந்தும் புறப்படுகின்றவர். ஆனால் மூவரும் சம்மானவர்கள், ஒருவரை விட மற்றவர் எந்தவிதத்திலும் தாழ்வானவர் அல்ல என்பதை வலியுறுத்தினார்.

இதன்பின் திரித்துவ உபதேசத்திற்கு மேலதிகமாக எதுவும் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. எனினும் இந்நிலையில் இருந்து பிழையான உபதேசத்திற்கு இறையிலாளர் செல்வதும் மற்றவர்கள் சரியான சத்தியத்தை அறியவும் உதவியாயிருந்தது.. சிலர் மூன்று கடவுள்கள் இருப்பதாக கருதினர். சிலர் தேவனின் மூவகைக் குணவியல்புகளாக நபர்களாகக் கருதினர். இன்னும் சிலர் தேவனின் மூவகை நிலைகளைக் குறிப்பதாக எண்ணினர். Thomas Acquaints   இன் எழுத்துக்களில் நாம் திரித்துவ உபதேசத்தின் வழமையான விளக்கத்தைக் காணலாம். சபை சீர்த்திருத்தக் காலத்தில் John Calvin திருமறையில் அடிப்படையில் திரித்துவ உபதேசத்தை நெறிப்படுத்தினார. 

சீர்த்திருத்த காலத்தில் திரித்துவ உபதேசத்தின் மேலதிகமான அபிவிருத்தி யொன்றையும் நம்மால் காணமுடியாது. எனினும் பழைய கள்ளப் போதகங்கள் மறுபடியும் புதிய போர்வைகளின் கீழ் வந்தமையும் அவற்றை எதிர்த்து சரியான உபதேசத்தை நிலைநாட்ட எடுக்கப்பட்ட முயற்சிகளையும் சபை சரித்திரத்தில் காணலாம். 

Reference 

J.N.D. Kelly, Early Christian Doctrines (London: Adams & Charles Black, 1968, 1972)

G. Bray,  Creeds, Councils and Christ (Leicester:  Inter Varsity Press, 1984)

H. Bateson, Documents of the Christian Church (London : Open university press, 1963)

எம்.எஸ். வசந்தகுமார், இறையியல், (இலங்கை வேதாகமக் கல்லூரி, 2003) 

கிறிஸ்தவம் ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி, தரம் 13 (இலங்கை கல்விநிறுவகம், 2010)

 

 

 

 

 



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
RE: Arius vs Athanasius திரித்துவ வரலாறு
Permalink  
 


இக்குழு ஏரியசின் கொள்கைச் சார்புடையதாய் இருந்தமையால் குமாரனும் பிதாவினுடைய சாரத்தையும் தன்மையையும் உடையவர் என்ற கருத்தை (Homoousios) எதிர்த்தது. எனினும் இக்குழு Eusebiue  இனால் முன்பு எழுதப்பட்ட பிரமாணத்தை இச்சங்கத்தில் சமர்ப்பித்த்து. இப்பிரமாணம் அத்தனாசினுடைய மற்றெல்லா கருத்துக்களையும் ஏற்றுக்கொண்ட போதிலும் மேற்சொன்ன Homoousios (same Essence) உபதேசத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. இதற்குப் பதிலாக Homoiousios (Similar Essence)  எனும் பதத்தை உபயோகித்த்து. அதாவது பிதாவும் குமாரனும் ஒரு தன்மையுடையவர்கள் அல்ல. மாறாக பிதாவைப் போன்ற தன்மையுடையவரே (Similar Essence) குமாரன் என கூறினார். வாக்குவாதங்கள் முடிவின்றி தொடர்ந்தமையால் அரசன் இவ்விவதகாரத்தில் தலையிட்டு தனக்கிருந்த அதிகாரத்தைக் கொண்டு சமத்துவத்தை உருவாக்க எத்தனித்தான். எனினும் அரசனுடைய முடிவு அத்தினாசின் பக்கத்திற்கு வெற்றியாக அமைந்த்து. இதனால் இச்சங்கம் “குமாரன் உண்டாக்கப்படாமல் ஜெனிப்பிக்கப்பட்டவர். பிதாவோடே ஒரே தன்மை பொருந்தியவர்“ எனும் முடிவுரையைக் கொடுத்த்து. நிசேய சங்கத்தின் முடிவு அரசனின் தலையீட்டினாலும் அவனுடைய வல்லமையினாலும் ஏற்பட்டமையால் அது சபையினரிடையே பூரண திருப்தியைப் பெற்றுக் கொள்ளவில்லை. இம்முடிவு அரசனால் பலவந்தமாக திணிக்கப்பட்டதென்று கருதினர். அத்தனாசிஸ் கூட தான் வெற்றியடைந்தாலும் சபையின் விவகாரங்கள் அரசாங்கத்தின் தலையீட்டினால் தீர்க்கப்படுவதை விரும்பவில்லை. தன்னுடைய வாக்குவத்தினாலும் வேதாகம சத்தியத்தினடிப்பைடையிலும் ஏரியசினுடைய குழுவினருக்கு தன் நிலையை உறுதிப்படுத்தியிருக்கலாம் என எண்ணினார். பிற்காலத்தில் இத்தகு நிலைமை ஏற்பட்டதையும் நாம் சரித்திரத்தில் அவதானிக்கலாம்.

nicaea-sistine.jpg

பிற்காலத்தில் சபை ஏரியசின் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளத் தொடங்கியது. எனினும் ஏரியசின் முழுக்கொள்கைகளையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இவர்கள் Semi-Arians என அழைக்கப்பட்டனர். அரசர்களும் பெரும்பான்மையினர் பக்கமே சார்ந்தனர். இதனால் அத்தனாசியஸ் உலகத்திற்கு எதிரானவராகவே கருதப்பட்டார். ஐந்து முறை நாடுகடத்தப்பட்ட இவர் சுயபுகழுக்காக பதவியிலிருப்பவர்களால் பதவியை இழந்துவிட்டார். 

 

நிசேய  சங்கத்தினது முடிவுரையின் எதிர்ப்பு இருவகைப்பட்டது. ஏரியஸ் குழுவில் துணிகரமிக்கவர்கள் குமாரன் பிதவைவிட வேறானத் தன்மை உடையவர் (Heteroousios) என கூறினர். இன்னும் சிலர் அதாவது Semi-Arians என அழைக்கப்படுவோர் பிதாவைப் போன்ற தன்மையுடையவர். ஆனால் அதே தன்மையல்ல (Homoiousios) என வாதிட்டனர். எனினும் அனைவருமே நிசேய சங்கத்தினது முடிவான ஒரே தன்மையுடையவர் (Homoousios – Same Essence ) என்பதை ஏகமனதாக எதிர்த்தனர். குமாரனுடைய முழுமையானதும் உண்மையானதுமான தேவத்துவத்தை இவர்கள் எதிர்த்தமையால் நிசேய சங்கமுடிவை எதிர்த்தனர். 

இப்பொதுச்சங்கங்களின் ஒழுங்குகள் சட்டங்கள் பற்றி எடுத்த தீர்மானங்கள்

1. ஆரியசையும் அவரது முக்கிய சீடர்களையும் சபையிலிருந்து வெளியேற்றல்.

2. மனம்வருந்திய பகிரங்கப் பாவிகளை திருச்சபை மீண்டும் ஏற்றுக்கொள்ளல்.

3. வேதபோத கருத்துடையவர்களை மீண்டும் திருச்சபையில் சேர்க்கும்போது மீண்டும் திருமுழுக்கு அளிப்பது தேவையற்றதென்பதாகும்.

4. பாஸ்கு விழா பற்றி உரிய திகதியொன்றை உறுதி செய்தல்.

5. குருக்களுக்கான ஒழுக்க சட்டங்களை விதித்தல்.

6. வழிபாடுகள், திருப்பலி நடாத்துதல் பற்றி தேவையான சட்டதிட்ட விதிகளை முன்வைத்தல்.

7. உரோமை, அந்தியோக்கியோ, அலெக்சாந்திரியா போன்ற மூன்று நகரங்களினதும் ஆயர்களுக்கு விசேட ஆட்சி அதிகாரங்களை ஒப்படைத்தல்.

8. எருசலேம் ஆயருக்கு விசேட கௌரவத்தைப் பெற்றுக் கொடுத்தல்.

 

எனினும், ஆரிய வாதம் முடிவுறவில்லை. ஆரியசுக்கு உதவியளித்த அவரின் சீடர்கள் திருச்சபையில் பேதகங்களை ஏற்படுத்தி பேரரசினுள் பல சிக்கல்களை ஏற்படுத்தினர்  அதனால், இந்த பேதகங்களை அடித்தளமாகக் கொண்டு மீண்டும் ஒருமுறை பொதுச்சங்கமொன்று கி.பி. 381ஆம் ஆண்டு நடைபெற்றது.

Semi-Arians  கீழைத்தேய சபைகளிலேயே வெற்றியாளர்களாக இருந்தனர். மேலைத்தேய சபை நிசேய சங்க முடிவிற்கு விசவாசமாயிருந்தது, இதற்க்கு காரணம் கீழைத்தேய சபைகள் Origen சபைகள் Tertullian இன் செல்வாக்கிற்கு உட்பட்டிருந்தமையினாலாகும். 

எனவே மேலைத்தேய சபைகள் Tertullian உடைய உபதேசத்தின் அடிப்படையில் அமைந்த இறையியலைக் கொண்டிருந்தது. இது அத்தனாசிஸ் இறையியல் போலவே அமைந்திருந்தது. மேலும் ரோமுக்கும் கொனஸ்தந்தினோபிலுக்கும் இடையே ஏற்பட்ட போட்டியும் இவ்விடத்தில் கருத்திற் கொள்ளப்பட வேண்டியதொன்று. கீழைத்தேய சபைகளில் இருந்து அந்தனேசிஸ் துரத்தப்பட்ட பின் மேலைத்தேய சபைகள் அவரை ஏற்றுக் கொண்டது, கி.பி 341 இல் கூடிய ரோம சங்கமும் 334 இல் கூடிய  சன்டிகா (Sandica) சங்கமும் அத்தனாசிஸின் உபதேசத்தை முழுமனதாக ஏற்றுக் கொண்டது.  

 

எனினும் நிசேய இறையியலில் வெற்றியளராக கருதப்பட்ட Ancyra  ஐச் சேர்ந்த Marcellus அதிகாரத்திற்கு வந்தமை அத்தனாசிஸின் இறையியல் நிலையை பலவீனமடையச் செய்தது. இவன் தேவனோடிருந்த வார்த்தையின் நித்தியம் ஆள்த்ததுவமற்ற தன்மை எனும் வேறுபடுத்தப்பட்ட பழைய இறையியலாளர்களின் கருத்தைத் தழுவினான். இதனால் வார்த்தை மாம்சமாகிய போதே ஆள்த்த்துவமுடையதாக மாறியது எனும் கருத்தைக் கொண்டிருந்தான். வார்த்தை மாம்சமாவதற்கும் முன் இருந்தது என்பதைக் குறிப்பதை மறுதலித்து மாம்சமாகிய வாரத்தைக்கு தேவனுடைய குமாரன் எனும் நாமத்தைக் கொடுப்பதை மட்டுப்படுத்தி மானிட வாழ்வின் முடிவிலேயே வார்த்தையானது, உலகிற்கு முன்பான பிதாவுடனான உறவுக்கு திருப்பியது. இவ்வுபதேசம் உடைய கொள்கையை நியாயப்படுத்துவதற்காக அமைந்த்தோடு கீழைத்தேய மேலைத்தேய சபைகளுக்கு கிடையேயிருந்த இடைவெளியை மேலும் பெரிதுபடுத்தும் காரணியாயும் அமைந்த்து.

 

கீழைத்தேய மேலைத்தேய சபை இடைவெளியை நீக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தியோக்கியாவில் கூடிய சங்கம் நிசேய முடிவை அங்கீகரித்தாலும் இரண்டு முக்கிய அம்சங்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. குமாரன் பிதாவைப் போன்ற தன்மையுடையவர் (Homoiouios) என்பதையும் அவருடைய ஜெனிப்பிக்கப்படுதலையும் (Generation) பிதாவினடைய சிதத்த்திற்கான செயல் எனக் கூறினர். இது மேலைத்தேய சபைகளை திருத்திப்படுத்துவதாய் அமையவில்லை. இதனைத் தொடர்ந்து பல சங்கங்கள் கூடின. இவைகளின் கொள்கையை பின்பற்றியவர்கள் அந்தனாசிஸின் இடத்தை மேலைத்தேய சபைகளிலிருந்து அகற்றுவதன் மூலமாக தம் கொள்கைளை நிலைநிறுத்த எடுத்த முயற்சிகள் யாவும் வியர்தமாகின. எனினும் கொன்ஸ்டன்டைன் சக்கரவத்தியாகும்வரை இவர்களுடைய முயற்சிகள் யாவும் வெற்றியளிக்கவில்லை. ஆனால் கொன்ஸ்டன்டைன் சர்வ்வல்லைமை பொருந்திய சக்கரவர்தியாகிய பின் மேலைத்தேய சபைத் தலைவர்கள் அனைவரையும் இக் கொள்கைகளை ஏற்றுக்கொள்ள வைத்தான். இம்முயற்சி கி.பி 355 இல் கூடிய Arles சங்கத்திலும் Milan சங்கத்திலும் நடைபெற்றது. 

பிழையான காரணத்திற்காக ஏற்பட்ட இணைவு அபாயகரமானது என்பது மறுபடியும் நிருபணமாகியது. உண்மையில் நிசேய குழுவின் எதிர்ப்புக்குழு பிரிவடையும் நிலைக்கான அறிவிப்பாகவே அது அமைந்தது. காரணம் நிசேய குழுவை எதிர்ப்பதற்காக மட்டுமே வேறுப்பட்ட கருத்துக்களைக் கொண்ட குழுக்கள் யாவும் ஒன்றிணைந்தன. வெளிப்புற அழுத்தங்கள் (Eternal pressure) குறைவடைந்த பின உள்ளக ஒன்றுமையின்மை வெளிப்படையாகத் தெரியத் தொடங்கியது. Arius க்கும் Semi-Arius  சில விடயங்களில் கருத்து முரண்பாடு ஏற்பட்டது. 

கி.பி. 357 இல் கூடிய Sirmium சங்கம் சகல குழுவினரையும் இணைக்க முற்பட்ட Ousia, Homoousios, Homoiousios போன்ற பதங்கள் மானிட அறிவுக்கு அப்பாற்பட்டவைகள் என கூறி அவைகளை இறையியல் கலந்துரையாடல்களில் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தது.

எனினும் இத்தகு முறையில் ஐக்கியத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையில் குழுக்கள் இருக்கவில்லை. உண்மையான ஏரியசும் தான் யார் என்பதைக் காட்டத் தொடங்கியதோடு, பழைமை Semi-Arians அனைவரயும் நிசேய குழுவின் பக்கம் துரத்தி விட்டார்

                                                                        (அடுத்த பதிப்பில் நிறைவுபெறும்)



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

colvin wrote:
chillsam wrote:

ஏரியஸுக்கும் ஏரியனுக்குமிடையிலான வேறுபாட்டையும் காலத்தையும் உபதேசத்தையும் அதன் விளைவுகளையும் விளக்கினால் உதவியாக இருக்கும்; ஏனெனில் பலருக்கும் ஏரியஸுக்கும் ஏரியனுக்கும் வித்தியாசம் தெரியவில்லை என்றெண்ணுகிறேன்.


புரியவில்லை நண்பரே. திரித்துவ உபதேசங்களுடன் தொடர்புடைய அனைத்து விபரங்களையும் அக்கட்டுரை ஆராயாது விட்டாலும் நீங்கள் எண்ணும் பிரகாரமாக அனைத்து பேதங்கள் பற்றியும் எழுத முயற்சிக்கிறேன். இன்னும் இரு பகுதிகளுடன் இத்தொடர் நிறைவு பெறும். பி்ன்னர் திருச்சபையில் எழுந்த பேதங்கள் குறி்த்து பார்ப்போம். 

ஏரியன் என்ற ஒருவர் திரி்த்துவ உபதேசங்களுடன் சம்பந்தப்படுகிறாரா? என தெரியவில்லை. எங்காவது Refer பண்ணினால் அது பற்றி அறியத் தருகிறேன். 


நமக்கு இதிலெல்லாம் ஆர்வமில்லை,நண்பரே;ஆழமாகச் சென்று ஆராயுமளவுக்குப் பொறுமையுமில்லை,அது எனக்கு தேவையுமில்லை; ஏனெனில் என்னுடைய விசுவாசம் குருட்டுத்தனமான விசுவாசமாகும்; எப்படியெனில், ஒரு குருடன் ஆண்டவரிடம் வந்தான்,பார்வை பெற்றான், எதிரிகள் விவரம் கேட்டனர்,அவன் சொன்னது,எனக்கு எதுவும் தெரியாது, நான் முன்பு பார்வையற்றவன், தற்போது பார்வைபெற்றவன்,உங்களுக்கு அவரிடமிருந்து ஏதாகிலும் வேண்டுமா என்று கிண்டலாகக் கேட்கிறான்.இது எனக்கு வேதத்தில் மிகவும் பிடித்தமான நகைச்சுவையான பகுதியாகும்.(யோவான்.9)

ஆனால் உங்களைப் போன்றவர்களால் நான் இங்கே பல காரியங்களை அவதானித்து வருகிறேன்;இதில் ஒன்று தான் இரஸலுக்கும் முற்பட்ட ஏரியஸ் என்பாரைக் குறித்த காரியம்;அவனுடைய கொள்கைகள் ஏரியனிஸ்ம் எனப்படுவதை அறியாத காரணத்தினால் நான் அப்படியாகக் கேட்டிருக்கிறேன்;மற்றபடி தற்போது தெளிவு பிறந்துவிட்டது.இந்த தெளிவை நான் பெறக்காரணமாயிருந்த தொடுப்பைக் கொடுத்துள்ளேன்;ஆனால் இந்த தொடுப்பே ஏரியன் என்ற வேறொரு ஆள் இருந்தாரோ என்ற குழப்பத்துக்கும் காரணமாக இருந்தது.

http://en.wikipedia.org/wiki/Arianism



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

இது தமிழ் கிறி்ஸ்தவர்கள் தளத்தில் சகோ. அற்புதம் எழுதியது.

இன்று ஆவிக்குரிய சபைகள் செல்வோருக்கு விசுவாசப் பிரமாணங்கள் எந்தளவுக்கு பரிச்சயம் என்பது தான். பாரம்பரிய சபைகளில் கூட விசுவாசப் பிரமாணங்கள் பெரும்பாலோனாரால் விசுவாசிக்கப்படுகிறதும் இல்லை, பிரமாணங்களாகவும் இல்லை. வெறுமனே உச்சரிக்கப்படவே செய்கிறது. எத்தனை விசுவாசப் பிரமாணங்கள் என்பது கூட அனேகருக்கு தெரியாது. இக்காலத்தில் விசுவாசப்பிரமாணங்கள் குறித்த அவசியம் என்ன என்ற ? இதை வாசிப்பவருக்கு எழலாம். இக்கால் சபைகளில் வாசிக்கப்படவேண்டும் என்பதற்கால அல்லாது சபையின் அடிப்படை விசுவாசம் என்ன என்பதை சுருக்கமாக அறிந்து கொள்ளவாவது நாம் அவற்றை குறைந்த பட்சம் தெரிந்து கொள்வது நல்லது.

விசுவாசப் பிரமாணங்கள் எத்தனை? 3

  • அப்போஸ்தல விசுவாசப் பிரமாணம்
  • நிசேயா விசுவாசப் பிரமாணம்
  • அதனாசியஸ் விசுவாசப் பிரமாணம்

அப்போஸ்தல விசுவாசப் பிரமாணம்

வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய தேவனை விசுவாசிக்கிறேன்:அவருடைய குமாரனாகிய நம்முடைய நாதர் இயேசு கிறிஸ்துவையும் விசுவாசிக்கிறேன். அவர் பரிசுத்த ஆவியினாலே கன்னிமரியாளிடத்தில் உற்பவித்துப் பிறந்தார். பொந்தியு பிலாத்துவின் காலத்தில் பாடுபட்டு, சிலுவையில் அறையுண்டு, மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, பாதாளத்தில் இறங்கினார்: மூன்றாம் நாள் மரித்தோரிடத்திலிருந்து எழுந்தருளினார்: பரமண்டலத்துக்கேறி, பிதாவின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்; அவ்விடத்திலிருந்து உயிருள்ளோரையும் மரித்தோரையும் நியாயந்தீர்க்க வருவார்.
பரிசுத்த ஆவியையும் விசுவாசிக்கிறேன், பொதுவாயிருக்கிற பரிசுத்த சபையும்; பரிசுத்தவான்களுடைய ஐக்கியமும்; பாவ மன்னிப்பும்; சரீரம் உயிர்த்தெழுதலும்; நித்திய ஜீவனும் உண்டென்று விசுவாசிக்கிறேன். ஆமென்.

(அப்போஸ்தல விசுவாசப் பிரமாணமானது அப்போஸ்தலர்களின் விசுவாசத்தினடிப்ப்டையிலமைந்தது ஆகும். மூல மொழியில் 12 வரிகளில் உள்ளது. ஒவ்வொரு அப்போஸ்தலரும் தம் தம் பங்காக ஒரு வரி எழுதியதாக சொல்லப்படுகிறது)

நிசேயா விசுவாசப் பிரமாணம்

வானத்தையும் பூமியையும் காணப்படுகிறதும் காணப்படாததுமான எல்லாவற்றையும் படைத்தவராயிருக்கிற சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய ஒரே தேவனை விசுவாசிக்கிறேன்.
ஒரே கர்த்தருமாய், தேவனுடைய ஒரே பேறான குமாரனுமாயிருக்கிற இயேசு கிறிஸ்துவையும் விசுவாசிக்கிறேன்; அவர் சகல உலகங்களும் உண்டாவதற்கு முன்னே தமது பிதாவினாலே ஜெனிப்பிக்கப்பட்டவர்; தெய்வத்தில் தெய்வமானவர், ஜோதியில் ஜோதியானவர், மெய்த்தேவனில் மெய்த்தேவனானவர், உண்டாக்கப்படாமல் ஜெனிப்பிக்கப்பட்டவர், பிதாவோடே ஒரே தன்மையுடையவர், சகலத்தையும் உண்டாக்கினவர்; மனிதராகிய நமக்காகவும் நமக்கு இரட்சிப்பு உண்டாகவும் பரமண்டலத்திலிருந்து இறங்கி, பரிசுத்த ஆவியினாலே கன்னிமரியாளிடத்தில் அவதரித்து மனிதனானார்; நமக்காக பொந்தியுபிலாத்துவின் காலத்தில் சிலுவையில் அறையுண்டு, பாடுபட்டு, அடக்கம் பண்ணப்பட்டார்; வேத வாக்கியங்களின் படி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்; பரமண்டலத்துக்கேறி, பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்; உயிருள்ளோரையும் மரித்தோரையும் நியாயந்தீர்க்க மகிமையோடே திரும்ப வருவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவில்லை.

கர்த்தருமாய் ஜீவனைக் கொடுக்கிறவருமாய், பிதாவிலும் குமாரனிலும் நின்று புறப்படுகிறவருமாய், பிதாவோடும் குமாரனோடும்கூட தொழுது தோத்தரிக்கப்படுகிறவருமாய், தீர்க்கதரிசிகள் மூலமாக உரைத்தவருமாயிருக்கிற பரிசுத்த ஆவியையும் விசுவாசிக்கிறேன். ஒரே பொதுவான அப்போஸ்தல திருச்சபை உண்டென்று விசுவாசிக்கிறேன். பாவமன்னிப்புக்கென்று நியமிக்கப்பட்ட ஒரே ஞானஸ்நானத்தை அறிக்கையிடுகிறேன். மரித்தோர் உயிர்த்தெழுதலும் மறுமைக்குரிய ஜீவனும் உண்டாகும் என்று காத்திருக்கிறேன். ஆமென்.

(நிசேயா விசுவாசப் பிரமாணம் நிசேயா என்ற இடத்தில் கூடின கிறிஸ்தவ தலைவர்கள் கவுன்சிலில் இயற்றப்பட்டது ஆகும். அக்காலத்தில் சபையில் நிலவி வந்த குழப்ப உபதேசங்களைக் களையும் பொருட்டு நிசேயா கவுன்சில் கூடி ஆராய்ந்து பல முடிவுகளை எடுத்து முடிவில் வெளியிட்ட பிரமாணம் தான் நிசேயா விசுவாசப் பிரமாணம்.)

அதனாசியஸ் விசுவாசப் பிரமாணம்

இரட்சிப்படைய விரும்புகிறவன் எவனோ: அவன் திருச்சபைக்குரிய பொதுவான விசுவாசத்தை எல்லாவற்றிலும் முதன்மையாய் பற்றிக் கொள்ள வேண்டும்.
அந்த விசுவாசத்தைப் பழுதின்றி முழுமையும் அனுசரியாதவன்: என்றைக்கும் கெட்டுப் போவான் என்பதில் சந்தேகமில்லை.
திருச்சபைக்குரிய பொதுவான விசுவாசமாவது: தேவத்துவமுள்ளவர்களை கலவாமலும், தேவத்துவத்தைப் பிரியாமலும்,
ஏகதேவனை திரித்துவமாகவும்: திரித்துவத்தை ஏகத்துவமாகவும் வணங்கவேண்டுமென்பதே.
பிதாவானவர் ஒருவர், குமாரனானவர் ஒருவர், பரிசுத்த ஆவியானவர் ஒருவர்.
ஆனாலும் பிதாவுக்கும் குமாரனுக்கும் பரிசுத்த ஆவிக்கும்: ஒரே தேவத்தன்மையும் சம மகிமையும் சம நித்திய மகத்துவமும் உண்டு.
பிதா எப்படிப்பட்டவரோ, குமாரனும் அப்படிப்பட்டவர்: பரிசுத்த ஆவியும் அப்படிப்பட்டவர்.
பிதா சிருஷ்டிக்கப்படாதவர், குமாரனும் சிருஷ்டிக்கப்படாதவர்: பரிசுத்த ஆவியும் சிருஷ்டிக்கப்படாதவர்.
பிதா அளவிடப்படாதவர், குமாரனும் அளவிடப்படாதவர்: பரிசுத்த ஆவியும் அளவிடப்படாதவர்.
பிதா நித்தியர் நித்தியர், குமாரனும் நித்தியர்: பரிசுத்த ஆவியும் நித்தியர்.
ஆகிலும் மூன்றி நித்திய வஸ்துக்களில்லை. நித்திய வஸ்து ஒன்றே.
அப்படியே மூன்று அளவிடப்படாத வஸ்துக்களில்லை, மூன்று சிருஷ்டிக்கப்படாத வஸ்துக்களில்லை: சிருஸ்டிக்கப்படாத வஸ்து ஒன்றே, அளவிடப்படாத வஸ்து ஒன்றே.
அப்படியே பிதா சர்வ வல்லவர், குமாரனும் சர்வ வல்லவர்: பரிசுத்த ஆவியும் சர்வ வல்லவர்.
ஆகிலும் மூன்றி சர்வ வல்ல வஸ்துக்களில்லை. சர்வ வல்ல வஸ்து ஒன்றே.
அப்படியே பிதா தேவன், குமாரனும் தேவன்: பரிசுத்த ஆவியும் தேவன்.
ஆகிலும் மூன்று தேவர்களில்லை: தேவன் ஒருவரே.
அப்படியே பிதா கர்த்தர், குமாரனும் கர்த்தர்: பரிசுத்த ஆவியும் கர்த்தர்.
ஆகிலும் மூன்று கர்த்தர்களில்லை: கர்த்தர் ஒருவரே.
அம்மூவரில் ஒவ்வொருவரும் தனித்தனியாக தேவனென்றும் கர்த்தரென்றும் அறிக்கையிடவேண்டுமென்று: கிறிஸ்துமார்க்க சத்தியம் கட்டளையிட்டிருக்கிறது போல;மூன்று தேவர்கள் உண்டென்றும், மூன்று கர்த்தர்கள் உண்டென்றும் சொல்லக் கூடாதென்று: திருச்சபைக்குரிய பொதுவான சித்தாந்தம் கட்டளையிட்டிருக்கிறது.
பிதா ஒருவராலும் உண்டாக்கப்பட்டவருமல்ல: சிருஷ்டிக்கப்பட்டவருமல்ல, ஜெனிப்பிக்கப்பட்டவருமல்ல.
குமாரன் பிதாவினாலேயே இருக்கிறவர்: உண்டாக்கப்பட்டவருமல்ல, சிருஷ்டிக்கப்பட்டவருமல்ல, ஜெனிப்பிக்கப்பட்டவரே.
பரிசுத்த ஆவி பிதாவினாலும் குமாரனாலும் இருக்கிறவர்: உண்டாக்கப்பட்டவருமல்ல, சிருஷ்டிக்கப்பட்டவருமல்ல, ஜெனிப்பிக்கப்பட்டவருமல்ல; புறப்படுகிறவரே.
ஆகையால் மூன்று பிதாக்களில்லை, ஒரே பிதாவும்; மூன்று குமாரரில்லை, ஒரே குமாரனும்; மூன்று பரிசுத்த ஆவிகளில்லை, ஒரே பரிசுத்தஆவியும் உண்டு.
அன்றியும் இந்த திரித்துவத்தில் ஒருவரும் முந்தினவருமல்ல, பிந்தினவருமல்ல: ஒருவரில் ஒருவர் பெரியவருமல்ல, சிறியவருமல்ல.
மூவரும் சம நித்தியரும்: சரிசமானருமாம்.
ஆதலால் மேற்சொல்லியபடி, எல்லாவற்றிலும்: ஏகத்துவத்தை திரித்துவமாகவும், திரித்துவத்தை ஏகத்துவமாகவும் வணங்க வேண்டும்.
ஆனபடியால், இரட்சிப்படைய விரும்புகிறவன்: திரித்துவத்தைக் குறித்து இப்படி நினைக்க வேண்டும்.
மேலும் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மனுஷாவதாரத்தைக் குறித்து சரியானபடி விசுவாசிப்பதும்: நித்திய இரட்சிப்படைவதற்கு அவசியமாயிருக்கிறது.
நாம் விசுவாசித்து அறிக்கையிடுகிற சரியான விசுவாசமாவது, தேவ குமாரனாகிய நம்முடைய நாதர் இயேசு கிறிஸ்து: தேவனும் மனுஷனுமாய் இருக்கிறார்.
உலகங்கள் உண்டாவதற்கு முன்னே அவர் ஜெனிப்பிக்கப்பட்டு, பிதாவின் தன்மையுடைய தேவனாகவும்: உலகத்தில் பிறந்த தம்முடைய தாயின் தன்மையுடைய மனுஷனாகவும் இருக்கிறார்.
குறைவற்ற தேவனாயும்: பகுத்தறிவுடைய ஆத்துமாவும் நரதேகமும் பொருந்திய குறைவற்ற மனுஷனாயும் இருக்கிறார்.
தேவத்தன்மையின் படி பிதாவுக்கு சரியானவர்: மனுஷ்த்தன்மையின் படி பிதாவுக்குத் தாழ்ந்தவர்.
அவர் தேவனும் மனுஷனுமாயிருந்து: இருவராயிராமல், கிறிஸ்து என்னும் ஒருவராகவே இருக்கிறார்.
தேவத்தன்மை மனுஷத்தன்மையாய் மாறினதினாலேயல்ல: தெய்வத்தில் மனுஷத்தன்மையை சேர்த்துக் கொண்டதினாலேயே ,ஒருவராயிருக்கிறார்.
இரண்டு தன்மையும் கலந்ததினாலேயல்ல: ஒருவராகப் பொருந்தினதினாலே, முற்றூம் ஒருவராயிருக்கிறார்.
பகுத்தறிவுடைய ஆத்துமாவும் சரீரமும் பொருந்தி, ஒரே மனுஷனாயிருப்பது போல: தேவனும் மனுஷனும் பொருந்தி ஒரே கிறிஸ்துவாயிருக்கிறார்.
அவர் நமக்கு இரட்சிப்புண்டாக பாடுபட்டு: பாதாளத்தில் இறங்கி மூன்றாம் நாள் மரித்தோரிடத்திலிருந்து எழுந்தருளினார்.
அவர் பரமண்டலத்துக்கேறி, சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய தேவனுடைய வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்; அவ்விடத்திலிருந்து உயிருள்ளோரையும் மரித்தோரையும் நியாயந்தீர்க்க திரும்ப வருவார்.
அவர் வரும்பொழுது, சகல மனுஷரும் தங்கள் சரீரங்களோடு எழுந்து: தங்கள் கிரியைகளைக் குறித்து க்ணக்கு ஒப்புவிப்பார்கள்.
நன்மை செய்தவர்கள் நித்திய ஜீவனையும்: தீமை செய்தவர்கள் நித்திய அக்கினியையும் அடைவார்கள்.
திருச்சபைக்குரிய பொதுவான விசுவாசம் இதுவே. இதை ஒருவன் உண்மையாக விசுவாசியாவிட்டால் இரட்சிப்படையான்.
பிதாவுக்கும் குமாரனுக்கும் பரிசுத்த ஆவிக்கும்: மகிமையுண்டாவதாக.
ஆதியிலும் இப்பொழுதும் எப்பொழுதுமான சதாகாலங்களிலும் மகிமையுண்டாவதாக. ஆமென்.

(அதநாசியஸ் விசுவாசப் பிரமாணம் அதநாசியஸ் என்பவரால் எழுதப்ப்ட்டது என்று முன்பு சொல்லப்பட்டது. ஆனால் இப்போது வேத பண்டிதர்கள் இதை எழுதியது அதநாசியஸ் என்று கூறுவதில்லை. எனினும் இப்பிரமாணம் விஸ்தீரணமாக இருப்பது இதன் சிறப்பு. இதனாலேதானோ என்னவோ அனேகர் இதை அறிந்திருப்பதுமில்லை, பாரம்பரிய சபைகளில் பயன்படுத்துவதுமில்லை.)

கடைசியாக விசுவாசப்பிரமாணங்களை விசுவாசம் இல்லாமல் சொல்லி என்ன பிரயோஜனம், கிறிஸ்து இல்லாத கிறிஸ்தவ வாழ்க்கை எதற்கு. பேச்சில் அல்ல செயலில் காட்டப்படும் விசுவாசமும் கிறிஸ்தவமுமே இன்றைய தேவை.



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

Bro. Chillsam Wrote 

//ஒன்றுமட்டும் தெளிவாகிறது, (மேசியாவின்) எதிரிகள் மிகவும் தந்திரமாக நம்மை இரஸலை விட்டுவிட்டு ஏரியஸ் என்பவரைக் குறித்து பேச வைத்திருக்கிறார்கள்; //

ஏரியசைப் பற்றி பேசுவதும் நல்ல விடயம்தான். பலருக்கும் ஏரியஸ் யார் என்பது குறித்து தெரியாது. ஏரியஸ் பற்றியும் எழுதுகிறேன். இத்தொடரில் அவர் குறித்து பெரிதாக ஆராயவில்லை. சொல்லப்போனால் அத்தனாசிசை விட மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தவர் ஏரியஸ்தான். பல உபதேசங்களை ரசல் ஏரயசிடமிருந்தே பெற்றுள்ளார். 

 

Bro. Chillsam Wrote 

//இப்போது பிரச்சினை என்னவென்றால் கிறிஸ்தவ விசுவாசத்துக்கு அண்மைக்காலத்தில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது இரஸல் எனும் கள்ளப்பிசாசு தான்;அவனுடைய அடியவர்களும் அவனுடைய உபதேச வழிவந்தோரும் இன்றும் நம்முடன் அவனைப் போலவே மோதிக்கொண்டிருக்கிறார்கள்;ஆனால் நாம் அவனை விட்டுவிட்டு ஏரியஸ் என்பவரிலிருந்தே காரியத்தை ஆராய்வது நல்லதுதான் என்றாலும் ஒரு பழைய எதிரியை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தி அதன்பிறகு அந்த எதிரியின் தாறுமாறான உபதேசங்கள் இவை என்று நிரூபிக்கவேண்டும் இது சற்று கடினமான பணிதான்;நாம் தோலுரிக்கவேண்டிய முதல் எதிரி ஏரியஸ் அல்ல,இரஸல் என்பவனே என்கிறேன். அதன்மூலமே இன்று நம்மிடையேயுள்ள இரஸலியன்களை அடையாளங் காணமுடியும்;//

இரசல் பற்றி சொல்லமுன் அதற்கு முன் இருந்த பேதங்களையும் சொன்னால் மிக நல்லது. ஏரியசின் போதனைகளை சரியாக இனங்கண்டு கொண்டால் ரசலின் போதனைகள் பற்றி அறிவது பெரிய விடயமல்ல

 

Bro. Chillsam Wrote 

//இரஸலைக் குறித்து எழுதினால் யாருக்கு கோபம் வருகிறதோ அவர்களே இரஸலியன் என்பார்//

சரியாக சொன்னீர்கள். இரசல் சொன்னால் என்ன ஆட்டுக்குட்டி சொன்னால் என்ன என்று டயலோக் விடுவார்கள். ரசல் குறித்து பேசினால் இவர்களுக்கு ஏன் இத்தனை கோபம் வருகிறது என்று இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது. 

 



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

chillsam wrote:

ஏரியஸுக்கும் ஏரியனுக்குமிடையிலான வேறுபாட்டையும் காலத்தையும் உபதேசத்தையும் அதன் விளைவுகளையும் விளக்கினால் உதவியாக இருக்கும்; ஏனெனில் பலருக்கும் ஏரியஸுக்கும் ஏரியனுக்கும் வித்தியாசம் தெரியவில்லை என்றெண்ணுகிறேன்.


 

புரியவில்லை நண்பரே. திரித்துவ உபதேசங்களுடன் தொடர்புடைய அனைத்து விபரங்களையும் அக்கட்டுரை ஆராயாது விட்டாலும் நீங்கள் எண்ணும் பிரகாரமாக அனைத்து பேதங்கள் பற்றியும் எழுத முயற்சிக்கிறேன். இன்னும் இரு பகுதிகளுடன் இத்தொடர் நிறைவு பெறும். பி்ன்னர் திருச்சபையில் எழுந்த பேதங்கள் குறி்த்து பார்ப்போம். 

ஏரியன் என்ற ஒருவர் திரி்த்துவ உபதேசங்களுடன் சம்பந்தப்படுகிறாரா? என தெரியவில்லை. எங்காவது Refer பண்ணினால் அது பற்றி அறியத் தருகிறேன். 



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

என்னை உற்சாசப்படுத்திய சகோ. ஜோன் மற்றும் சகோ. சில்சாமிற்கு மிக்க நன்றிகள்.

//எப்படி கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் உங்களால் புளுக முடிகிறது நண்பரே?//

இப்போதுதான் புரிந்து கொண்டீர்களா சகோ. ஜோன் அவர்களே!!. அதனால்தான் இவர்களுடன் விவாதம் செய்வது வீண் என்கிறேன். ஆயினும் சத்தியத்திற்காக நீங்கள் எழுவது மிக வரவேற்கத்தக்கது. நீங்கள் கேட்ட கேள்விகளுககு அவர்கள் பதில் தரப்போவதில்லை. இருப்பினும் உங்கள் முயற்சி தொடர வாழ்த்துக்கள். 

 

//நீதி 8:22, மத் 28:18, மாற் 13:32,  லூக் 18:19,யோவான் 5:19, 14:28, 1 கொரி 15:28)//

ஏரியசின் இத்தகைய வசனங்கள் குறித்த விளக்கங்களுக்கு இங்கு சொடுக்கவும். 

கர்த்தர் தமது கிரியைகளுக்குமுன் பூர்வமுதல் என்னைத் தமது வழியின் ஆதியாகக் கொண்டிருந்தார். (நீதி 8:22)

தமிழ் விளக்கம் காண இங்கு சொடுக்கவும். 

 

அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர்தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார். (மாற் 13:32)  

ஆங்கிலத்தில் விளக்கம் காண இங்கு அழுத்துங்கள். 

மற்றொரு விளக்கம்

http://www.forananswer.org/Mark/Mk13_32.htm

தமிழ் விளக்கம் விரைவில் வெளியிடப்படும்

 

அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே. (லூக் 18:19) 

ஆங்கிலத்தில் காண இங்கு அழுத்துங்கள். 

தமிழ் விளக்கம் விரைவில் வெளியிடப்படும். 

 

பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்; . (யோவான் 5:19)

ஆங்கிலத்தில் காண இங்கு அழுத்துங்கள். 

தமிழ் விளக்கம் விரைவில் வெளியிடப்படும். 

 

ஏனெனில் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார் (யோவான் 14:28)

தமிழில் விளக்கம் காண இங்கு சொடுக்குங்கள். 

 

கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார். (1 கொரி 15:28)

தமிழில் விளக்கம் காண இங்கு சொடுக்குங்கள். 



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

ஒன்றுமட்டும் தெளிவாகிறது, (மேசியாவின்) எதிரிகள் மிகவும் தந்திரமாக நம்மை இரஸலை விட்டுவிட்டு ஏரியஸ் என்பவரைக் குறித்து பேச வைத்திருக்கிறார்கள்; இப்போது பிரச்சினை என்னவென்றால் கிறிஸ்தவ விசுவாசத்துக்கு அண்மைக்காலத்தில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது இரஸல் எனும் கள்ளப்பிசாசு தான்;அவனுடைய அடியவர்களும் அவனுடைய உபதேச வழிவந்தோரும் இன்றும் நம்முடன் அவனைப் போலவே மோதிக்கொண்டிருக்கிறார்கள்;ஆனால் நாம் அவனை விட்டுவிட்டு ஏரியஸ் என்பவரிலிருந்தே காரியத்தை ஆராய்வது நல்லதுதான் என்றாலும் ஒரு பழைய எதிரியை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தி அதன்பிறகு அந்த எதிரியின் தாறுமாறான உபதேசங்கள் இவை என்று நிரூபிக்கவேண்டும் இது சற்று கடினமான பணிதான்;நாம் தோலுரிக்கவேண்டிய முதல் எதிரி ஏரியஸ் அல்ல,இரஸல் என்பவனே என்கிறேன். அதன்மூலமே இன்று நம்மிடையேயுள்ள இரஸலியன்களை அடையாளங் காணமுடியும்;

இரஸலைக் குறித்து எழுதினால் யாருக்கு கோபம் வருகிறதோ அவர்களே இரஸலியன் என்பார்; "இரஸலுடன் எங்களை ஒப்பிட்டு எழுதாதே" என்பார் தாங்கள் இரஸலியன் விசுவாசத்தைச் சார்ந்தவர்களாக இருந்தும் அதனை மறுதலித்த குற்றத்துக்கு ஆளாகிறார்கள்;இவர்கள் இராஜ்யத்தில் விசாரிக்கப்படுவார்கள்.

கிறிஸ்தவ விசுவாசத்தின் ஆதாரங்களையும் அதன் வரலாற்றையும் ஆராயத் துவங்கும் ஆரம்பநிலையிலேயே நம்மை ஒரு குறிப்பிட்ட உபதேசக்காரர்களுடனோ ஸ்தாபனத்துடனோ இணைத்து கருத்து கூறுவதிலிருந்தே எதிரிகள் எந்த அளவுக்கு மிரண்டுபோயிருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ளலாம்;இவர்கள் சொல்வதையெல்லாம் கண்களை விரித்து கேட்டுக்கொண்டிருந்தது அந்த காலம்;இப்போது அந்த சூழ்ச்சி செல்லுபடியாகாது என்பது அவர்களுக்கு அதிர்ச்சிகரமான செய்தியாகும்.

ஒருத்தர் தன் மனதில் இப்படி புலம்புகிறார்,என்னிடம் இந்த உபதேசம் வந்தபோது நான் உடனே கவிழ்ந்துபோனேன்,ஆனால் ஜாண் ,கோல்வின் எல்லாம் இந்த‌ளவுக்கு சமாளித்து கேள்விகள் கேட்கிறார்களே என்பதாக‌.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

John wrote:
சகோ சில்சாம்,
மேசியாவின் எதிரிகளுக்கு உள்ள திலை இந்த திரியிலே பதிக்கலாமா? வேண்டாம் என்றால் தயவு செய்து வேறு திரிக்கு மாற்றிவிடுங்கள்.

 ஆம் நண்பரே, நானும் யோசித்தேன்;ஆனாலும் குறிப்பிட்ட ஒரு பின்னூட்டத்தை இடம் மாற்றும் வசதி நம்முடைய தளத்தில் இல்லாத காரணத்தினால் நீங்களே அதனை செய்யவேண்டும்;மேலும் தங்களுடைய கருத்து இந்த கட்டுரை தொடர்பாக இருந்தாலும் அது தனித்துவம் மிக்கதாக இருக்கிறது;எனவே கவனத்தை ஈர்க்கும் தனி தலைப்பில் பதிவிட்டீர்களானால் அது வாசகரை விரைவில் சென்றடையும்;நீங்கள் இதுபோல பல்வேறு கட்டுரைகளை வெளியிட்டு அது வெற்றி பெற்றுள்ளது. கோல்வின் அவர்களின் கட்டுரை தொடர்பான கருத்துக்களை ஓரிரு வரிகளில் பதித்து வந்தோமானால் இந்த கட்டுரையும் சிறப்பு பெறும்.

ஆனாலும் இங்கே தற்போது பதிக்கப்பட்டிருக்கும் உங்கள் கருத்துக்களை நீக்கிவிடவேண்டாம்;ஏனெனில் இந்த திரியின் தொடுப்பைக் கொடுத்து எதிர்தரப்பினர் எழுதியிருப்பவற்றைத் தேடிவரும் வாசகர்கள் சிரமப்படுவார்கள்;எனவே இதே கருத்துக்களை ஆரம்பமாகக் கொண்டு கத்தோலிக்க விசுவாசத்தைக் குறித்த உங்கள் கருத்துக்களைத் தனி திரியாக எழுதுங்கள்,நன்றி.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 

அருமையாய் தொடங்கி உள்ளீர்கள் சகோ.கொல்வின்! தொடர்ந்து எழுதுங்கள் மிகவும் உபயோகமாக இருக்கிறது.
 
 
சகோ சில்சாம்,
மேசியாவின் எதிரிகளுக்கு உள்ள திலை இந்த திரியிலே பதிக்கலாமா? வேண்டாம் என்றால் தயவு செய்து வேறு திரிக்கு மாற்றிவிடுங்கள்.


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 

//அத்நாஷியஸின் விசுவாச அறிக்கையின் துவக்கம் இப்படியாக இருக்கிறது, அதாவது இரட்சிக்கப்பட எல்லாவற்றுக்கும் முன் ஒருவன் கத்தோலிக்க விசுவாசம் உடையவனாக இருக்க வேண்டுமாம்!! இந்த ஒரு விசுவாசத்தை முழுமையாகவும், பரிசுத்தமாகவும் கடைப்பிடிப்பவனை தவிர, சந்தேகத்திற்கு இடமில்லாமல் மற்றவர்கள் அனைவரும் நித்தியத்திற்கும் அழிந்துபோவார்களாம்!! இந்த விசுவாசத்தை கொண்டு வந்த அத்நாஷியஸின் வார்த்தைகளை இன்று ஆவி சபை என்று சொல்லும் பெந்தகோஸ்தே சபையினர் தாராளமாக பின்பற்றுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை!!

அது என்ன கத்தோலிக்க விசுவாசம்??

Baptism, Confirmation, Confession, Eucharist, Marriage, Holy Orders, Annointing of the Sick, Mass, Sin, Hell, Purgatory, Death, Divorce / Annulments,  Contraception / Abortion, Mary, The Pope

குழந்தை ஞாஸ்நானம், உறுதிப்பூசுதல், சாமியாரிடம் பாவ சங்கீர்த்தனம், நற்கருனை ஆராதனை, திருமன சடங்கு, (ரோமின்) புனித கட்டளைகள், நோயில் பூசுதல் (அவஸ்தை கொடுப்பது என்பார்கள்), திருப்பலி, பாவம், நரகம் (எரி நரகம்), உத்தரிக்கிரஸ்தலம், மரணம், விவாகரத்து, கருத்தடை / கருகலைப்பு, மரியாள் / புனிதர்கள், போப் ஆண்டவர்!!

ஒருவன் இரட்சிக்கப்பட மேலே உள்ள இத்துனை கத்தோலிக்க விசுவாசம் வேண்டும் என்று அத்நாஷியஸ் எழுதியதை இன்றைய பெந்தகோஸ்தே சபைகள் கூட பின்பற்றுகிறார்கள் என்பதை கேட்பதற்கு சற்று வருத்தமாக தான் இருக்கிறது!! எனக்கு இரட்சிப்புக்கு வேதம் சொல்லிக்கொடுப்பது,//

 

எப்படி கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் உங்களால் புளுக முடிகிறது நண்பரே? இதுதான் உங்கள் கிறிஸ்தவ விசுவாசமா? உண்மையிலே எனக்கு உங்களை நினைக்கும் பொது வெட்கமாக இருக்கிறது. கதோலிக் (Catholic ) என்ற வார்த்தையின் அர்த்தம் பொதுவான என்று உங்களுக்கும் தெரியும், கொஞ்சம் விஷயம் தெரிந்த எல்லாருக்கும் தெரியும் இருந்தும் ஏன் இப்படி ரோமன் கத்தொலிசத்தையும்,  ஆதி சபையின் பொதுவான விசுவாச அறிக்கையையும் குழப்பி வெட்கமில்லாமல் புரட்ட முடிகிறது? பெரேயன் என்று பெயரில் இருந்தால் போதாது நண்பரே, சற்றேனும் பெயருக்கு ஏற்ப நடக்க முயற்சியாவது செய்யுங்கள்! ஏசாயா கண்ட யேகோவா யார், ஆபிரகாம் விட்டுக்கு வந்த யேகோவா யார்? மோசேக்கு தரிசனமான தேவனாகிய கர்த்தர் யார் என்று பெரேயர்களைப்போல ஆராய்ந்தீர்களா? அவர்கள் ஆராய்ச்சி செய்து நற் குணசாலிகள் என்று பெயர்பெற்றர்கள். நீங்கள் இப்படி எழுதி அந்த பெயரை அசிங்கப்படுத்தாதீர்கள்!! நீங்கள் மறைத்து விட்ட மற்ற பகுதியையும் வெளியிடுகிறேன்.

 

 

...And the catholic faith is this:


3

And the catholic (universal) faith is this:

That we worship one God in Trinity,

and Trinity in Unity;

 

4
Neither confounding the Persons,

nor dividing the Substance.

 

5
For there is one Person of the Father,

another of the Son,
and another of the Holy Spirit.


6
But the Godhead of the Father,

of the Son,

and of the Holy Spirit,

is all one,
the glory equal,

the majesty coeternal.

 

7
Such as the Father is,

such is the Son,
and such is the Holy Spirit.

 

8
The Father uncreate,

the Son uncreate,
and the Holy Spirit uncreate.

 

9

The Father incomprehensible,

the Son incomprehensible,
and the Holy Spirit incomprehensible.

 

10
The Father eternal,

the Son eternal,
and the Holy Spirit eternal.

 

11
And yet they are not three eternals,
but one eternal.

 

12
As also there are not three uncreated

 nor three incomprehensibles,

but one uncreated, and one incomprehensible.

 

13
So likewise the Father is almighty,

the Son almighty,
and the Holy Spirit almighty.

 

14
And yet they are not three almighties,
but one almighty.

 

15
So the Father is God,

the Son is God,
and the Holy Spirit is God;

 

16
And yet they are not three Gods,
but one God.

 

17
So likewise the Father is Lord,

the Son Lord,
and the Holy Spirit Lord;

 

18
And yet not three Lords,
but one Lord.

 

19
For like as we are compelled by the Christian verity

to acknowledge every Person by himself to be God and Lord;

 

20
so we are forbidden by the catholic (universal) religion to say,

there are three Gods, or three Lords.

 

21
The Father is made of none,
neither created, nor begotten.

 

22
The Son is of the Father alone;
not made, nor created, but begotten.

 

23
The Holy Spirit is of the Father and of the Son;
neither made, nor created, nor begotten, but proceeding.

 

24
So there is one Father, not three Fathers;

one Son, not three Sons;
one Holy Spirit, not three Holy Spirits.

 

25
And in this Trinity none is afore, or after another;

none is greater, or less than another.

 

26
But the whole three Persons are coeternal and coequal.

27

So that in all things, as aforesaid,
the Unity in Trinity and the Trinity in Unity is to be worshipped.

 

28
He therefore that will be saved
must thus think of the Trinity.

29
Furthermore, it is necessary to everlasting salvation
that he also believe rightly the incarnation of

our Lord Jesus Christ.

 

30

For the right faith is that we believe and confess

that our Lord Jesus Christ,

the Son of God,

is God and man.

 

31
God, of the substance of the Father,

begotten before the worlds;
and man, of the substance of His mother,

born in the world.

 

32
Perfect God and perfect Man,
of a reasonable soul and human flesh subsisting.

 

33
Equal to the Father, as touching His Godhead,
and inferior to the Father, as touching His Manhood.

 

34
Who, although He is God and Man,
yet He is not two, but one Christ.

 

35
One, not by conversion of the Godhead into flesh,
but by taking of that manhood into God.

 

36

One altogether,

 not by confusion of substance,
but by unity of Person.

 

37
For as the reasonable soul and flesh is one man,
so God and man is one Christ;

 

38
Who suffered for our salvation,

descended into hell, *
rose again the third day from the dead;

 

39
He ascended into heaven,

He sitteth on the right hand of the Father, God, Almighty;

 

40
from thence He shall come to judge the quick and the dead.

 

41
At whose coming all men shall rise again with their bodies;

 

42
and shall give account of their own works.

 

43
And they that have done good shall go into life everlasting
and they that have done evil into everlasting fire.

 

44
This is the catholic (universal) faith,

which except a man believe faithfully
he cannot be saved.

 

Amen.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

ஏரியஸுக்கும் ஏரியனுக்குமிடையிலான வேறுபாட்டையும் காலத்தையும் உபதேசத்தையும் அதன் விளைவுகளையும் விளக்கினால் உதவியாக இருக்கும்; ஏனெனில் பலருக்கும் ஏரியஸுக்கும் ஏரியனுக்கும் வித்தியாசம் தெரியவில்லை என்றெண்ணுகிறேன்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

COUNCIL_OF_NICEA.%20new.jpg

இயேசு கிறிஸ்துவின் காலத்தில் வாழ்ந்த யூதர்கள் ஒரு தெய்வக் கொள்கையுடையோராய் (Monotheistic) இருந்தமையினால் கிறிஸ்தவ சபைக்குள்ளும் இக்கருத்தின் முக்கியத்துவத்தினை கொண்டு வந்தனர். இதன் காரணமாக தேவனின் பன்மை நிலையை முற்றிலும் மறுதலிப்பவர்களாகவும் குமாரனினதும், தூயஆவியினதும் தேவத்துவத்தை சரியான விதத்தில் ஏற்ற்றுக் கொள்ளாதவர்களாகவுமே இருந்தனர்

ஆதிச்சபை பிதாக்கள் திரித்துவத்தைப் பற்றிய சரியான கருத்தினைக் கொண்டிருக்கவில்லை. சிலர் ஆள்தன்மையற்றிருந்த தெய்வீக வார்த்தை (Logos) சிருஷ்டிப்பின்போதே ஆள்தத்துவமுடைய நபராகியது என்று கருதினர். வேறு சிலர் குமரன் ஆள்தத்துவம் உடையவராகவும், பிதாவைப் போலவே நித்தியராகவும்   தெய்வீகத் தன்மையுடையவராய் இருந்தார் என கருதிய போதிலும் பிதாவைவிட சற்று தாழ்மையானவராகவே அவரைக் கருதினர். அக்கால கட்டத்தில் தூயஆவியனவரைப் பற்றிய எண்ணம் இறையியல் கருத்துப் பரிமாறல்களில் இடம்பெறவில்லை. தூயஆவியானவர் விசுவாசிகளின் இருதயத்தில் இரட்சிப்பு சம்பந்தமாக கிரியை செய்பவர் என்று மட்டுமே கருதினர். சிலர் தூயாவியை பிதாவுக்கு மட்டுமல்ல குமாரனுக்கும் கூட தாழ்வானதொன்றாகவே கருதினர். 

“மூவொருமை“ எனும் பொருளுடைய திரித்துவம் எனும் சொல்லை இறையியலில் புகுத்தி திரித்துவ உபதேசத்தை நெறிப்படுத்த ஓரளவு முயன்றவ Tertullian என்பவர்.  கூட திரித்துவ உபதேசத்தை சரியான முறையில் விளக்கவில்லை. இவரே முதன் முதலில் தேவனில் மூன்று ஆள்த்த்துவங்கள் உள்ளதென்றும் அவர்களின் ஐக்கியத்தைப் பற்றியும் வாதிட்டவர்

Tertullian உடைய காலத்தில் Monarchianism எனும் உபதேசம் தேவனின் ஒருமைத் தன்மையை வலியுறுத்தியதோடு குமாரனுக்கும் உண்மையான தேவத்துவத்தை கொடுத்த்து. எனினும் மூவொருமை என அர்த்தந்தரும் திரித்துவத்தின் உண்மையான கருத்தை இவ்வுபதேசம் மறுதலிப்பதாயிருந்தது. Tertullian உம் Hippolytus ம் இவ்வுபதேசத்தை பிழையென நிருபித்தனர். இவர்கள் மேலைத்தேய சபைகளில் இப்பிழையான உபதேசம் பரவுவதைத் தடுத்தனர். Origen என்பார் கீழைத்தேய சபைகளில் இவ்வுபதேசத்திற்கெதிராக வாதட்டார். இவர்கள் அப்போஸ்லருடைய விசுவாசப் பிரமாணத்தில் குறிப்பிட்டபடி திரித்துவ உபதேசத்தைப் போதித்தனர். 

Origen உடைய திரித்துவ உபதேசம் திருப்திகரமானதொன்றாகயில்லை. பிதாவும் குமாரனும் தேவத்தன்மை பொருந்திய சமமானவர்கள் என்பதை அவர் சரியாக விளக்கவில்லை. எனினும் நித்திய பரம்பரை (Eternal Generation) எனும் கருத்தினடிப்படையில் பிதாவுக்கும் குமாரனுக்கும் இடையிலுள்ள உறவை முதன் முதலில் விளக்கியவர் இவரே. (Divine Essence) பிதாவைவிட குமாரன் தாழ்வானவர் என்பதையே அவர் நித்திய ஜனனம் என்பதன் மூலம் விளக்கினார். இரண்டாந்தர தெய்வீக உயிர் அணுவையே பிதா குமாரனுக்கு கொடுத்தார். இதனால் குமாரன் ஒர கடவுள் (a God)   என கூறப்படலாமே தவிர கடவுள் (The God)  என கூறமுடியாது அவர் சில சமயங்களில் குமாரனை இரண்டாம் கடவுள் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இதுவே Origen இன் உபதேசத்தின் மிகப்பெரிய பிழையாகவும் பிற்கால கள்ளப்போதகமான  ஏரியனிஸம் தோன்ற காரணமாயமைந்த்து. மேலும் தூயஆவி குமாரனிலும் தாழ்வானதாக கருதியது மட்டுமல்ல குமாரனால் சிருஷ்டிக்கப்பட்டதொன்றாகவும் கருதினர். 

திருத்துவ உபதேசத்தைப் பற்றிய மிகப்பெரிய தர்க்கம் கி.பி. நாலாம் நூற்றாண்டில் வாழ்ந்த Arius உடன் சம்பந்தப்பட்டது. ஏரியஸ் என்ற குரு கி.பி.310ஆம் ஆண்டளவில் அலெக்சாந்திரியாவில் வாழ்ந்தவர்  இவர் ஒரு தெய்வ கொள்கையை (Monotheism) ஆதரித்தவராதலால் தேவத்துவம் ஒரு நித்திய ஆளில் தான் அடங்கியிருக்கிறது என்று வாதிட்டார். தேவனோடிருந்த வார்த்தை (Logos) தெய்வீக வல்லமையே (Divine energy)  என தெரிவித்தார். இவ்வல்லமையே கடைசியில் மாம்சமாகியது என போதித்தார்.  இவரது கருத்துப்படி குமாரனுக்கு ஆரம்பம் ஒன்றுண்டு. அவர் பிதாவினால் ஜெனிப்பிக்கப்பட்டவர் என்று ஏரியஸ் கூறினாலும் அதன் அர்த்தம் குமாரன் சிருஷ்டிக்கப்பட்டவர் என்பதேயாகும். குமாரன் உலக சிருஷ்டிப்புக்கு முன் ஒன்றுமில்லாததிலிருந்து சிருஷ்டிக்கப்பட்டவர் (Created out nothing) எனவே அவர் நித்தியராகவும் தெய்வீகத் தன்மை உடையவராகவும் இருக்க முடியாது என வாதிட்டார். கிறிஸ்து இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையில் தொடர்பை ஏற்படுத்தும் நடுநிலையானவர் மட்டுமே எனவும் எடுத்துரைத்தார் மேலும், அவர் திரித்துவத்தைப் பற்றியும் தவறான கருத்துக்களை முன்வைத்தார் அவரின் மறை எதிர்ப்புக் கருத்துக்களின்படி திரித்துவம் அறிவுசார் கொள்கை மட்டுமே.

 

குமாரனே முதலாவதாக சிருஷ்டிக்கபட்ட மிகப்பெரிய வஸ்து (being) அவர் சிருஷ்டிக்கப்பட்டதன் காரணம் இவரினூடாக உலகம் சிருஷ்டிக்கப்படுவதற்காகவே. எனவே அவர் மாற்றமடைபவர். (Mutable) எனவே இவருடைய புண்ணியங்களை தேவன் முன்னறிந்தமையால் (foreseen Merits)  தேவனால் தெரிந்தெடுக்கப்பட்டு எதிர்கால மகிமையின் அடிப்படையில் தேவனுடைய குமாரன் என்ற அழைக்கப்படுகின்றார். அவர் குமாரனாக சுவீகரிக்கப்பட்டமையால் (adopted) வணக்கத்திற்குரியவராக நியமிக்கப்பட்டுள்ளார் பிதாவை விட குமாரன் தாழ்வானவர் என்பது போல் தென்படும் வேதவசனங்களை ஏரியஸ் தன்னுடைய உபதேசத்திற்கு ஆதாரமாக உபயோகித்தார். (நீதி 8:22, மத் 28:18, மாற் 13:32,  லூக் 18:19,யோவான் 5:19, 14:28, 1 கொரி 15:28)

ஏரியஸ் இக்கருத்தை ஒவ்வொரு இடங்களிலும் போதித்தாரே ஒழிய அதை அவர் எழுத்தாக்கம் செய்யவில்லை. இருப்பினும் பிற்காலத்தில் இவை நூல் வடிவம் பெற்றதோடு அவற்றில் மிஞ்சியிருப்பது தலேய்ய (Thaleia) என்ற பெயரில் அறிமுகமாகும் பாடல்களின் சில பகுதிகள் மட்டுமே. மகனின் நீதியின் நிமித்தம் இறைமகன் என்ற பெயர் அவருக்கு அளிக்கப்பட்டது எனவும், அவர் திரித்துவத்தின் இரண்டாம் ஆளாயினும் தந்தையைப் போல் முடிவில்லாதவர் அல்லர் எனவும் இப்பாடலில் கூறப்பட்டுள்ளது. இவ்வாறான கருத்துக்கள் கிறிஸ்தவ விசுவாச உண்மைகளை சீர்குலைக்கச் செய்தது. கிறிஸ்துவின் இறைத்துவம் மறுக்கப்பட்டால் அவர் உலகிற்குப் பெற்றுக்கொடுத்த விடுதலை அர்த்தமற்றுப் போய்விடும். எனவே, தொடக்கத்திலிருந்தே அலெக்சாந்திரிய ஆயர் தூய சிறில் ஏரியசின் கொள்கைகளைப் பேதகங்கள் எனக்கூறி மறுத்து வந்தார் எனினும், நிக்கமேடியாவின் ஆயரான எயுசேபியுசின் உதவியோடு இப்பேதகம் மேலைத்தேயங்களில் பரவியது. 

இவர் குமாரனுடைய உண்மையான தெய்வத்துவத்தையும் நித்திய ஜனனத்தையும் (Eternal Generation)  வலியுறுத்தியவர். எனினும் அலெக்சாந்திரியாவின் Archdeacon   Athanasius  என்பவரே ஏரியஸின் கொள்கைகளின் எதிரியாகத் திகழ்ந்தார். இவர் உறுதியான எதற்கும் வளைந்து கொடுக்காத, சத்தியத்திற்காக போராடிய இறையியலாளர். 

 

Athanasius%20and%20arius%20new.jpg

கி.பி. 295இல் அலெக்சாந்திரியாவில் பிறந்த இவரது பெற்றோர் கிறிஸ்தவர்களாவர் முதலில் கிறிஸ்தவக் கல்வி கிடைக்காதபோதும் சிறுவயதிலிருந்தே துறவற வாழ்வில் பற்றுக் கொண்டிருந்தார் எனினும் கற்ற அறிவுள்ள ஒருவராக இருந்தமையால் கி.பி. 325இல் அலெக்சாந்திரியாவின் ஆயரின் செயலாளராக நியமிக்கப்பட்டார் இப்பதவியில் இருந்தமையால் நிசேயா திருச்சங்கத்தில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. இத் திருச்சங்கத்தில் ஆரிய பேதகத்துக்கு எதிராக இவரால் பேசுவதற்கு முடிந்தது. இவருடைய வாழ்க்கையில் அதிக காலத்தை ஆரிய பேதகத்துக்குக்கு எதிராகப் போராடியதால் அத்தனாசிஸ் பற்றிக் கூறுகையில் ஆரிய பேதகத்தை மறக்க முடியாது. கி.பி. 328இல் அலெக்சாந்திரியாவின் ஆயருக்குப் பின் அத்தனாசிஸ் புதிய ஆயராக நியமனம் பெற்றார். பொதுநிலையின், துறவறத்தோர் என இருபாலாரும் விரும்பியதால் அத்தனாசிஸ் எகிப்து, லிபியா உள்ளடக்கப்பட்ட பரந்த மாகாணத்துக்கு பேராயராக நியமனம் பெற்றார் அன்று தொடக்கம் ஏழு வருடங்கள் தனது பிரதேசத்தில் பயணம் செய்து மக்களைத் தைரியப்படுத்திப் பாரிய பணியாற்றினார். அடிப்படைவாதிகளின் பயமுறுத்தலிலிருந்து பிரதேசத்தைக் காப்பாற்றுவதே அவரது ஒரே நோக்கமாயிருந்தது. 

 

„துறவற மடங்களில் வாழ்ந்த காலத்தில் இவர் விசேட செயலில் ஈடுபட்டார். அதாவது, அனேக நூல்களை எழுதி திருச்சபைக்கு வழங்கினார். இவை மிகவும் எளிய கட்டுரைகளாகும். இவற்றில் அனேகமாக ஏரியஸின் தத்துவத்திற்கு எதிராக எழுதப்பட்டவையாகும். இந்நூல்களில் திருவிவிலியத்துக்கு எழுதப்பட்ட அரும்பத விளக்க நூல் (அரும்பத விளக்கம்) எஞ்சியிருந்தது. திருவிவிலியத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 27 நூல்களை உள்ளடங்கியதாக முதன்முதலில் வெளியிட்டவர; புனித அத்தனாசிஸ் ஆவார். இவருடைய நூல்களின் விசேட தன்மையானது, எப்பொழுதும் உட்பொருளுடன் முன்வைப்பதாகும். இவர் திருவிவிலியத்தை கிறிஸ்துவை மையமாகக் கொண்ட தொனிப்பொருளில் அறிமுகப்படுத்துகிறார் 

கிறிஸ்து சிருஷ்டிக்கப்பட்டவர் என்று கூறுவது தேவனுடன் உறவை ஏற்படுத்திக் கொள்வதற்கு கிறிஸ்துவை விசுவாசிக்க வேண்டும் என்பதை மறுதலிப்பதாக உள்ளது என வாதிட்டார். இவர் தேவத்துவத்தின் ஒருமைத்துவத்தை வலியுறுத்திய அதேசமயம் அதன் மூவொருமை (Tri-unity) திரித்துவதிற்கு எவ்வித முரண்பாடும் ஏற்படாவண்ணம் தனது இறையியல் கருத்தை வெளியிட்டார். பிதாவும், குமாரனும் தெய்வீக தன்மையுடையவர்கள் எனினும் தேவனில் பிரிவுகளோ அல்லது வேறுபாடுகளோ இல்லை இதனால் இரண்டாம் கடவுள் (Theos Devteros) என்று குமாரனைக் குறிப்பிடுவது தவறு எனத் தெரிவித்தார். தேவனுடைய ஒருமைத் தன்மையை முக்கியப்படுத்திய அதேவேளையில் அவர்களில் மூன்று நபர்கள் (Three hypostases) இருப்பதையும் கண்டுகொண்டார். குமாரன் சிருஷ்டிக்கப்பட்ட ஆரம்ப்மொன்றையுடையவர் என்பதை ஏற்றுக்கொள்ளாத அவர் குமாரனும் ஆரம்பங்களற்ற நித்தியமானவர் என தெரிவித்தார். குமாரன் எதையும் சார்ந்திராதவரும், தாமாகவே இருப்பவரும் என போதித்தார். மூன்று ஆள்கள் அல்லது ஆள்தத்துவங்கள் தேவனில் இருப்பதென்பது எவ்வித்த்திலும் தேவனில் பிரிவுகள் இருப்பதாக கருதப்படக் கூடாதென வாதிட்ட அவர் மூன்று கடவுள்கள் தேவத்துவத்தில் இல்லை என்று வாதிட்டார். மூவரும் சாரத்தில் (Essence) ஒன்றானவர்கள் என அவர் கூறினார். அத்தனாசிஸின் இறையியல் அடிப்படையான நம்பிக்கையே திரித்துவத்தின் உபதேசத்திற்காக போராட அவரை ஏவியது. தேவனுடனான உறவை அல்லது ஐக்கியத்தை ஏற்படுத்திக் கொள்வதே இரட்சிப்பின் அத்திவாரம் என அவர் நம்பினார். எனவே எந்தவொரு உயிரினமும் அல்ல. தேவனால் மட்டுமே நமக்கு இந்த உறவை ஏற்படுத்திக் கொடுக்க முடியும் என விசுவாசித்தார். எனவே கிறிஸ்து தேவனாக இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும் என கருதிய அவர், குமாரனுக்கு முழுமையான வேதத்துவத்தை கொடுக்காத ஏரியசின் கொள்கைகளை எதிர்த்தார். 

ஏரியஸ் இற்கும் அத்தனாசின் குழுவினருக்குமிடையே வாக்குவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் Caesarea எனுமிடத்தைச் சேர்ந்த Evsetive   எனும் சபை சரித்திர ஆசிரியரின் தலைமையில் மூன்றாவது குழுவொன்று இரண்டிற்கும் நடுவில் வந்தது. அக்குழுவிவே பெரும்பான்மையினரைக் கொண்டிருந்தது. இது Origenist Portly என்று அழைக்கப்பட்டது. காரணம் Origen உடைய நியதிகளில் இக்குழு ஊக்கப்படுத்தப்பட்டிருந்தது. 

                                                                                                      (வளரும்)



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard