Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஒரு நேரடி இணையதள விவாதம்..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: ஒரு நேரடி இணையதள விவாதம்..!
Permalink  
 


'தானே அடங்கிடும்,அமர்ந்திருப்போம் ' என்ற மனப்பான்மையினாலேயே அவர்கள் இந்த அளவுக்கு வேர்விட்டு வளர்ந்திருக்கிறார்கள்;அனைத்து துருபதேசக்காரனுக்கும் என்னே ஒரு தைரியம் என்றால் எதிர்த்து கேள்வி கேட்கவோ வாதிடவோ நாம் வரமாட்டோம் என்பது தான்;நம்முடைய பெலவீனத்தையே சாதகமாகப் பயன்படுத்தும்(மேசியாவின்) எதிரிகள் நம்முடைய வட்டாரத்திலிருந்தே சில எளிமையானவர்களையும் பெலவீனரையும் வஞ்சித்து சபைக்குப் புறம்பாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது அன்றாட நிகழ்வாகிவிட்டது.

இவனெல்லாம் கிறித்தவனா, ஊழியக்காரனா என்றெல்லாம் என்னை இகழ்ந்துரைக்கும் அளவுக்கு இந்த வெறியர்களுடன் நான் போராடக் காரணமே இனியும் நாம் அமர்ந்திருந்தால் இளைஞர்கள் பலரும் கொள்ளைப் போவார்கள் என்ற பதட்டத்தினால் தான்;ஆனாலும் என்னுடைய கடுமையான தாக்குதலை (மேசியாவின்) எதிரிகள் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை என்பதே உண்மை;அவர்கள் ஏற்கனவே சந்தித்த சாந்த சொரூபியான சாம்பார் ஊழியர்களில் ஒருவனாகவே என்னை கணித்தார்கள்;ஆனால் இவர்கள் மீது மோதி வெடித்து சிதறி இவர்களை அழிக்கும் சக்தியாக நான் உருவெடுத்திருப்ப‌தை அவர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை.

  • "கர்த்தருடைய நாமத்தினால் இவர்களை சங்கரிப்பேன்"(சங்கீதம்.118:10)


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

colvin wrote:
ebi wrote:

//என்னைப் பொறுத்தவரை இவர்களுடன் குறிப்பாக கோவைபெரியனுடன் விவாதம் செய்வது வீண் என்றே படுகிறது.//

         சகோ.கொல்வினின் நிலைப்பாடே என்னோடதும். இவர்களுடன் விவாதிப்பதை விட சகோ.ஜான், சகோ.கொல்வின்,சகோ.சில்சாம் போன்றவர்கள் தங்கள் கருத்துக்களை பொது கட்டுரையாக பதிக்கலாம் என்பது என் கருத்து.


சகோ. எபி சொல்லுவதுதான் என்னைப் பொறுத்தவரை சரி. சகோ. ஜோன் சிறப்பாக வாதம் செய்கிறார். இவர்களுடன் எழுத்தின் பிரகாரம் இனி வாதம் செய்ய மாட்டேன். ஆனால் பொதுக் கட்டுரையாக விடயங்களை பதிப்பேன். இதுவே எனது நிலைப்பாடு.

நண்பர் கோல்வின் அவர்களே,

ஒரு நேரடி விவாத மேடையை அமைக்க நீங்கள் தான் முதலில் அதிக முன்முயற்சி எடுத்தீர்கள்;அதனை வழிமொழிந்தே சோதனை முயற்சியாக நாம் ஏற்கனவே உறுப்பினர்கள் அனைவருமாக தமிழ் கிறித்தவ தளத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்தித்தோமே அதே பாணியில் ஒரு சந்திப்பை ஒழுங்குசெய்ய எண்ணினேன்;ஆனால் அதற்கு எதிர்தரப்பினர் தயக்கம் காட்டி ஏற்கனவே மறுத்துவிட்டார்கள்;ஆனால் அவர்களே விவாதத்தை மறுத்து ஓடுகிறார்கள் என்ற உண்மையை நிலைநாட்டுவதற்குக் கூட வாய்ப்பு தராமல் நீங்கள் உங்கள் நிலையினையே ஓங்கி சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே, அவர்கள் இதனை மேற்கோள் காட்டி நம்மை பரியாசம் செய்யமாட்டார்களா?

ஒருவேளை உங்களுக்கு அதில் சம்மதமில்லாவிட்டால் போகட்டும், குறைந்தபட்சம் உமர் அவர்கள் இஸ்லாமியர்களுக்கெதிராக செய்துவரும் பாணியில் கூட நாம் செய்வதற்கு இயலாதவர்களல்ல என்ற அளவில் இனி ஒருங்கிணைந்து செயல்படுவோம்;அவர்களை கிறித்தவ உலகத்துக்கு அடையாளங் காட்டி தோலுரிப்பதில் வெற்றி கண்டிருக்கிறோம் என்பதில் கர்வம் கொள்வோம்;அவர்கள் இனி தனிமைப்படுத்தப்படுவார்கள் என்பதும் இனியும் அவர்கள் தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக் கொண்டாலும் ஒருவரும் நம்பப்போவதில்லை என்பதும் தாங்கள் அறியவேண்டியது.

அதற்கு ஒரே அடையாளமாக நான் நினைப்பது அவர்களுடைய பார்வையாளர்கள் எண்ணிக்கை உயர்ந்திருப்பதே;தங்கள் வாசகர்களை காகங்கள் என்றும் பன்றிகள் என்று இகழ்ந்த கனவான்கள் தற்போது  பெருகியிருக்கும் பார்வையாளர்களை என்னவென்று அழைப்பார்களோ..?

சிலர் மாத்திரம் இருந்தால் கழுகு கூட்டமாம்,அதிகமாக இருந்தால் காகங்களின் கூட்டமாம்,சிங்கிளாக இருந்தாலும் சிங்கங்களாம்,கூட்டமாக இருந்தால் பன்றிகளாம்... இதெல்லாம் அவர்களின் பழைய பாட்டாகும்; இப்போது புதிய பாட்டு எதையாவது பாடுவார்கள்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

ebi wrote:

//என்னைப் பொறுத்தவரை இவர்களுடன் குறிப்பாக கோவைபெரியனுடன் விவாதம் செய்வது வீண் என்றே படுகிறது.//

         சகோ.கொல்வினின் நிலைப்பாடே என்னோடதும். இவர்களுடன் விவாதிப்பதை விட சகோ.ஜான், சகோ.கொல்வின்,சகோ.சில்சாம் போன்றவர்கள் தங்கள் கருத்துக்களை பொது கட்டுரையாக பதிக்கலாம் என்பது என் கருத்து.


சகோ. எபி சொல்லுவதுதான் என்னைப் பொறுத்தவரை சரி. சகோ. ஜோன் சிறப்பாக வாதம் செய்கிறார். இவர்களுடன் எழுத்தின் பிரகாரம் இனி வாதம் செய்ய மாட்டேன். ஆனால் பொதுக் கட்டுரையாக விடயங்களை பதிப்பேன். இதுவே எனது நிலைப்பாடு.


__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

ebi wrote:

//என்னைப் பொறுத்தவரை இவர்களுடன் குறிப்பாக கோவைபெரியனுடன் விவாதம் செய்வது வீண் என்றே படுகிறது.//

         சகோ.கொல்வினின் நிலைப்பாடே என்னோடதும். இவர்களுடன் விவாதிப்பதை விட சகோ.ஜான், சகோ.கொல்வின்,சகோ.சில்சாம் போன்றவர்கள் தங்கள் கருத்துக்களை பொது கட்டுரையாக பதிக்கலாம் என்பது என் கருத்து.


அடியே'ன்னு கூப்பிட பெண்டாட்டிய காணல,பிள்ளைகுட்டி எத்தனை'னு கேட்டானாம் ஒருத்தன்; அதுபோல நம்முடன் விவாதிக்க ஒருவருமில்லை; காரணம் பயமோ உதாசீன எண்ணமோ அறியோம்;ஆனாலும் இந்த வேண்டுகோளுக்கு கிடைத்த ஆதரவைப் பார்த்தபிறகு எனக்கு இன்னும் அந்த எண்ணம் அதிகமாகியிருக்கிறது;சகோதரர் ஜாண் மற்றும் அசோக் ஆகியோர் இந்த விவாதத்துக்கு சம்மதித்துள்ளனர்;இது நம்முடைய தள நண்பர்களின் ஒருங்கிணைப்புக்கும் ஊக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

நாம் பாடுபட்டு அங்குமிங்கும் திரிந்து சேர்த்து ஒரு கட்டுரை வெளியிட்டால் அதை நோகாமல் நுங்கெடுத்து காப்பி பேஸ்ட் செய்யவும் பெயரைப் போடாமலே பதித்து இஷ்டத்துக்கு கருத்து கூறவும் நிறைய அறிவுஜீவிகள் இங்கு உண்டு;இந்நிலையில் நாம் நேரடி விவாதத்தில் மட்டுமே நேருக்கு நேராக நம்முடைய நியாயங்களைக் கேட்கமுடியும் என்பதில் நான் தீவிரமாக இருக்கிறேன்.

நம்முடன் விவாதிக்க தயங்கும் எதிர்தரப்பினர் கோழைத்தனமாகவும் கையாலாகாத்தனமாகவும் சில கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்; இன்னும் விவாதிக்கவே வரவில்லை;அதற்குள் எத்தனை நிபந்தனைகள்... எத்தனை விமர்சனங்கள்...!

இவிங்களையெல்லாம் ஐநா சபைக்கு தலைவர்களாக்கவேண்டும் உலகம் உருப்பட்டுவிடும்;எட்டு மணிநேரகெடு வைத்துவிட்டு கடந்த 38 மணிநேரமாக ஒரு இணக்கமான சூழ்நிலை உருவாகக் காத்திருக்கிறேன்;அதற்காகவே ஒரு சிறு வருத்தம் ஏற்படுத்தும் வகையான விமர்சனமோ கருத்தோ கூறாமல் அமைதிகாத்தேன்;ஆனால் இவர்களெல்லாம் வெத்துவேட்டுகள் என்பது தெளிவாகிவிட்டது.

நான் இதுவரை எந்த ஆராய்ச்சி கட்டுரையையும் இவர்களுக்கெதிராக எழுதியதில்லை;காரணம் எனக்கு விஷயம் தெரியாது என்பதல்ல;எனக்கு விஷயம் தெரியுமா தெரியாதா என்பது எனக்கருமையான வாசகர்களுக்குத் தெரியும்;நான் எழுதாத ஒரே காரணம் அத்தனையும் விழலுக்கு இறைத்த நீராகும்;நான் இங்கு எழுதிய ஒரு சில எதிர் கருத்துக்களுக்கே தடுமாறி நிற்கிறார்கள்;நான் எழுப்பும் சில வாதங்களுக்கு அமைதிகாப்பதே அவர்கள் தடுமாறுவதற்கு அடையாளம்;உதாரணத்துக்கு,

  • "உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே " என்று ஆண்டவர் சொன்னதில் தம்மைத் தொழுதுகொள்ளவேண்டாம் என்று சொன்னார் என்று எப்படி அர்த்தம் எடுக்கமுடியும், என்று எனக்குப் புரியவில்லை. சாத்தானை ஆராதிக்க மறுத்தார் என்பது தானே வெளிப்படையான செய்தி, அது எப்படி இயேசுவானவரைப் பணிந்துகொள்ளுவதற்கும் ஆராதனை செய்வதற்கும் எதிரானதாகும்? ஒருவேளை சாத்தானானவன் ஆண்டவரைப் பணிந்து ஆராதனை செய்யவரும்போது அவனைத் தடுத்து இவ்வாறு கூறியிருந்தால் அது ஏற்புடைய வாதமாக இருக்கும்; ஏனெனில் மற்றொரு இடத்தில் ஒரு தூதன் இதுபோல தன்னை விழுந்து வணங்க வந்தவனைத் தடுக்கிறான் அல்லவா?

-என்பதாக நான் முன்வைத்துள்ள கருத்துக்களுக்கு யாரும் இன்னும் பதிலளிக்கவில்லை;ஒருவரும் அதனைப் பொருட்படுத்தவில்லையோ என்னவோ..?

ஜாணுக்கு இன்னும் அவர்களால் பதில் சொல்லமுடியவில்லை;கோல்வின் கேட்ட கேள்விகளுக்கோ அவரால் பதிக்கப்பட்ட கட்டுரைகளுக்கோ பதில் சொல்லும் திராணி அவர்களுக்கு இல்லை;கேட்டால் வசந்தகுமாருடைய கட்டுரைக்கெல்லாம் பதிலளிக்கமாட்டார்களாம்; இதைவிட மொள்ளமாரித்தனம்  ஏதாவது இருக்குமோ என்னவோ தெரியவில்லை;

வழக்கமாக தவறான ஒரு கட்டுரையையோ அறிக்கையையோ யாராகிலும் வெளியிட்டுவிட்டால் அதனால் ஏற்படும் பாதிப்பைக் கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்டவரின் சார்பானவர்களே அந்த குறிப்பிட்ட கருத்துக்கு பொறுப்பேற்காமல் விலகுவார்கள்.

ஆனால் இங்கோ அதிசயத்திலும் அதிசயமாக அறிக்கையை வைத்துக்கொண்டு கேள்வி கேட்கவேண்டியவர் கருத்துகூற மறுக்கிறார்;இது எப்படி இருக்கிறதென்றால் ஜெயலலிதா அம்மையார் விடுக்கிற அறிக்கையெல்லாம் அவர் விடுப்பதாக நான் நினைக்கவில்லை, எனவே அதுகுறித்து நான் கருத்து கூறுவதற்கில்லை என்று தலைவர் மறுப்பது போல அல்லவா இருக்கிறது..!

கோல்வின் வெளியிட்ட கட்டுரைக்கு எதிராக எதிர்தரப்பினர் கேள்வி எழுப்பி அதற்கு கோல்வின் பதில் சொல்லமுடியாமல் தடுமாறி, இந்த கட்டுரைக்கு நான் பதில் சொல்லமுடியாது; இதுகுறித்து அதனை எழுதிய வசந்தகுமாரிடமே கேட்கவேண்டும் என்று கோல்வின் நழுவினால் நானே அவரை கண்டிப்பேன்;அவரால் செய்ய முடியாத பணியினை நான் ஏற்று முடிப்பேன்;இதுவே நாகரீக சமுதாயத்தின் இலக்கணம்.

ஆனால் காட்டுவாசிகளிடமிருந்து பிரிந்துவந்த கலப்பின ஆடுகளுக்கு மேய்ப்பனோ மேய்ச்சலோ இல்லாததால் எந்த கட்டுப்பாட்டுக்கும் வரைமுறைக்கும் வராமல் தாந்தோன்றித்தனமாக அலையவே விரும்புகிறதுகள்;பெந்தெகொஸ்தே சபைகளில் ஆயிரக்கணக்கான பிரிவுகள் என்றால் இந்த பேத மாணவர்களிடையே இலட்சக்கணக்கான பிரிவுகள் இருக்கிறதே.

இந்நிலையில் இன்னும் இவர்களுக்கு கட்டுரை மூலம் பாடம் எடுக்கவேண்டுமா என்று யோசிக்கிறேன்;குறைந்தபட்சம் என்னுடைய வாசகர்கள் உண்மையிலேயே சத்தியத்தை அறியும் ஆர்வத்துடன் கேட்கட்டும்;அவர்களுக்காக செய்யலாம்;ஆனால் இவர்களுக்காக பெரிய பெரிய முயற்சிகளெல்லாம் தேவையில்லை;பிடுங்கியெறிய வேண்டிய புல்லர்களுக்கு கடப்பாரை எதற்கென்கிறேன்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

ebi


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

//என்னைப் பொறுத்தவரை இவர்களுடன் குறிப்பாக கோவைபெரியனுடன் விவாதம் செய்வது வீண் என்றே படுகிறது.//

         சகோ.கொல்வினின் நிலைப்பாடே என்னோடதும். இவர்களுடன் விவாதிப்பதை விட சகோ.ஜான், சகோ.கொல்வின்,சகோ.சில்சாம் போன்றவர்கள் தங்கள் கருத்துக்களை பொது கட்டுரையாக பதிக்கலாம் என்பது என் கருத்து.

 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 

சகோதர, சகோதரிகளே  நான் ஒன்றும் பெரிய ஆள் இல்லை. நான் தீவிரமாய் எதிர்ப்பதற்கும், விவாதத்திற்கு தயாராய் இருப்பதற்கும் ஒரே காரணம் கர்த்தருடைய வார்த்தை ஜிவனுள்ளது அது எந்தகாலத்திலும் மாறாதது, தவறாதது என்ற நம்பிக்கையும், அனுபவமும்தான்.
  • "....வேதவாக்கியமும் தவறாததாயிருக்க" (யோவான் 10:35 ) 
 யாரும் தேவனுடைய வார்த்தையை தெரிந்தோ, தெரியாமலோ   வெற்றிகரமாக புரட்டிவிடமுடியாது. இதற்க்கு முன்பு வேதத்தை புரட்ட முயன்று தோற்று போன எத்தனையோ புரட்டர்களை இப்போது நாம் அடையாளம் காண முடியும். கிழே உள்ள வசனம் கிறிஸ்துவுக்கு மாத்திரம் அல்ல தேவனுடைய எழுதப்பட்ட  வார்த்தைக்கும் (Logos) பொருந்தும் என்று கருதுகிறேன்.
  • இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன் மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் (மத்தேயு 21:44 )
தேவனுடைய வசனமே சத்தியம். The truth will defend itself! நாம் சத்தியத்தை வேத அடிப்படையில் Present பண்ணினாலே போதுமானது.

 

=>>>இந்திய பகல்நேரம் எனக்கும் வசதியாகவே இருக்கும்<<<=



-- Edited by John on Tuesday 19th of April 2011 05:38:51 PM



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

இறுதியாக ஒரு அதிரடி கேள்வி:
இயேசுவானவர் தம்மை தொழுதுகொள்ளும்படி சொல்லவில்லை என்கிறீர்கள்;அது அப்படியே இருக்கட்டும்;சரி, இயேசுவானவர் எங்காவது "யெகோவா தேவனே உம்மை தொழுதுகொள்ளுகிறேன்" என்று விழுந்து பணிந்து கொண்டாரா? ஜெபித்தார், வேண்டுதல் செய்தார் எல்லாம் சரி,அதை இயேசுவிடமும் செய்வதில் உங்களுக்குத் தடையில்லையே..? ஏனெனில் இயேசுவை பணிந்துகொண்டார்கள், வேண்டினார்கள், தொழுது கொண்டார்கள் உட்பட அனைத்து ஆதாரங்களையும் புறக்கணிப்பதால் இந்த நிலைக்கு நான் தள்ளப்பட்டுள்ளேன்.

http://www.jwfacts.com/watchtower/worship-jesus.php

"உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே " என்று ஆண்டவர் சொன்னதில் தம்மைத் தொழுதுகொள்ளவேண்டாம் என்று சொன்னார் என்று எப்படி அர்த்தம் எடுக்கமுடியும், என்று எனக்குப் புரியவில்லை. சாத்தானை ஆராதிக்க மறுத்தார் என்பது தானே வெளிப்படையான செய்தி, அது எப்படி இயேசுவானவரைப் பணிந்துகொள்ளுவதற்கும் ஆராதனை செய்வதற்கும் எதிரானதாகும்? ஒருவேளை சாத்தானானவன் ஆண்டவரைப் பணிந்து ஆராதனை செய்யவரும்போது அவனைத் தடுத்து இவ்வாறு கூறியிருந்தால் அது ஏற்புடைய வாதமாக இருக்கும்; ஏனெனில் மற்றொரு இடத்தில் ஒரு தூதன் இதுபோல தன்னை விழுந்து வணங்க வந்தவனைத் தடுக்கிறான் அல்லவா?

{நானும் கொஞ்சம் கொஞ்சமாக நண்பர் ஜாண் அவர்களைப் போல மாறிக்கொண்டிருக்கிறேன்..!?}

(தனிப்பட்ட தாக்குதலையும் விமர்சனத்தையும் தவிர்த்திருக்கிறேன் என்பதை கவனிக்கவும்.)



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

// யெகோவாவின் நாமத்தைக் கூட உச்சரிக்கவிரும்பாத இவர்களிடம் வேதத்தைப் பற்றியும், வேதத்தில் இருக்கும் விஷயங்களை குறித்தும் விவாதிப்பதில் என்ன பயன் வரப் போகின்றது.   சாத்தானிடம் இயேசு சொல்கிறார்,

  • "அப்பொழுது இயேசு: "அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்".(மத்தேயு 4:10)

வேதம் தெளிவாக சொல்கிறது முழு வணக்கமும் அவருக்கே என்று!! இதை புரிந்துகொள்ள ஏன் சிக்கல் என்று தான் புரியவில்லை!!! //

நம்முடைய அழைப்புக்கு எதிர்தரப்பிலிருந்து டினோ என்பவர் பதிவுசெய்திருக்கும் கருத்து இது;குலத் தாழ்ச்சி இகழ்ச்சி சொல்லல் பாவம் என்பார்கள்; குலத்தினால் தீது சொல்லும் கூட்டத்தாரைவிட இவர்களுடைய கருத்து அத்தனை அதிகமாக பாதிக்கிறது என்பது அவர்களுக்குப் புரிகிறதில்லை;

டினோவின் கருத்தை படித்ததுமே எனக்குத் தோன்றியதே மேலே குறிப்பிட்டிருக்கிறேன்;ஒரு குறிப்பிட்ட வசனத்தை வைத்து ஒரு கருத்தையோ அல்லது போதனையையோ உருவாக்குகிறோம் எனில் அதே வசனத்துக்கு மற்றொரு பொருளும் இருக்குமல்லவா? உங்களுக்கு இருக்கும் வியாக்கியான உரிமை எங்களுக்கும் இருக்கும் தானே..? உங்கள் நிலைக்குக் காரணமான முன்னோர்களைக் குறித்து பேசக்கூடாது என்றால் எங்களுடைய முன்னோர்களைக் குறித்தும் நீங்கள் பேசக்கூடாதல்லவா? அதுதானே நியாயம்?

திரித்துவத்தை நாங்கள் எங்கிருந்தோ கற்றுக்கொண்டதாக நீங்கள் செய்தி பரப்பும்போது பதிலுக்கு நாங்களும் நீங்கள் உங்கள் உபதேசத்தை யாரிடமிருந்து கற்றுக்கொண்டீர்கள் என்பதை ஆராயவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறோம்.

பரியாசம் செய்யாமலும் கேலி செய்யாமலும் தூஷிக்காமலும் இருந்தால் நானும் ஒரு குறிப்பிட்ட வசனத்தை வாசித்தவுடனே தோன்றும் உணர்வுகளை வெளியிடுவேன்;அது உங்களுக்கு ஏற்புடையதாக இல்லாவிட்டாலும் அது என்னுடைய புரிதல் என்ற அளவில் அமர்ந்திருக்கவேண்டுமே தவிர அதற்கு மாறாக,"ஹா..இது தெரியாதா,இது பாபிலோனிய வேசி மார்க்கத்தாரின் போதகம்,திரித்துவக்காரனின் சூழ்ச்சியான உபதேசம் " என்பீர்களானால் இரசாபாசம் நடப்பதை யாராலும் தடுக்க இயலாது;

உதாரணத்துக்கு டினோ குறிப்பிட்ட வசனத்தை வாசித்ததும் எனக்குத் தோன்றியதை எழுதுகிறேன்;இந்த கருத்து யாருக்கும் சொந்தமில்லை;இது இயேசுவானவரின் மீதான எனது நல்லெண்ணத்தினாலும் நம்பிக்கையினாலும் தோன்றியதாகும்.

அந்த வேதப்பகுதியை அனைவரும் அறிந்தபடியினால் பொதுவான நடையில் எழுதுகிறேன்;சாத்தானானவன் இயேசுவிடம் உலகமேன்மையெல்லாம் காட்டி தன்னைப் பணிந்துகொள்ளச் சொல்லுகிறான்;

அதற்கு இயேசு பதிலாக என்ன சொல்லியிருக்கலாம்,நான் யெகோவா தேவனையே பணிந்துகொள்ளுவேன் என்று சொல்லியிருக்க வேண்டுமல்லவா?  ஆனால் அப்படி சொல்லாமல் ஏற்கனவே பழைய ஏற்பாட்டில் சொல்ல‌ப்பட்ட ஒரு வசனத்தையே எடுத்து பதிலாகச் சொல்லுகிறார்;

இதில் எதிர்தரப்பினர் எப்படியாக தங்கள் வசதிக்கு அர்த்தம் சொல்லுகிறார்களோ அதேபோல அர்த்தம் சொல்ல எனக்கும் உரிமையுண்டு என்ற நம்பிக்கையில் சொல்லுகிறேன்," தொழுகைக்குரியவரையே பணிந்துகொள்ளச் சொல்லுகிறாயே, உனக்கு எவ்வளவு தைரியம், நீயல்லவா என் காலில் விழுந்து பணியவேண்டியவன்,நான் எப்படி உன் காலில் விழுந்து உன்னைப் பணியமுடியும்?" என்கிறார்;

இந்த வியாக்கியானம் டினோவுக்கு அதிர்ச்சியாக இருக்கும்;உங்கள் கருத்துக்களும் எங்களுக்கு அப்படியே இருக்கிறது என்பதை அறியவும்;உங்கள் கருத்துக்கு இணை வாக்கியத்தை நீங்கள் தருவீர்களானால் நானும் இதே கருத்துக்கு இணைவாக்கியத்தை தருவேன்;

எப்படி வசதி விவாதத்தை இப்போதே துவங்கிவிடலாமா?

ஏற்கனவே இங்கே குருக்ஷேத்திரப் போர் உக்கிரமாக நடந்து கொண்டிருக்கிறது; நானோ எனக்கு சமாதானம் வேண்டி ஒரு சிறிய அளவில் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் பயனுள்ள ஒரு விவாதம் செய்யலாமே என்று யோசித்தேனே தவிர எங்களுடன் விவாதிப்பதை வீணான காரியமாக நீங்கள் கருதினால் எங்கள் கருத்துக்களுக்கு நீங்கள் எதிர்வினையாற்றியிருக்கவே தேவையில்லையே..!

காலங்களோ எல்லைகளோ நியமங்களோ களங்களோ வகுக்கப்படாத நீண்டதொரு விவாதக்களத்தை வருடக்கணக்காக நடத்தமுடிந்த உங்களுக்கு சத்தியத்தை உடனுக்குடன் அறியும் ஆர்வத்துடனும் நல்லெண்ணத்துடனும் துளிர்த்த ஒரு சிறு முயற்சியை ஏற்கும் மனப்பக்குவம் இல்லையெனில் பிரச்சினை எங்களிடத்தில் இல்லை என்பது தெளிவாகிறது;

இங்கே சகோதரி கோல்டா குறிப்பிட்டது போல எங்கள் தரப்புக்கு நண்பர் ஜாண் ஒருவரே போதும்;நீங்கள் எல்லாரும் மொத்தமாக வந்தாலும் அவரால் உங்களை மேற்கொள்ளமுடியும் என்பதை சவாலாகவே முன்வைக்கிறேன்;

உங்கள் கூடாரம் காலியாவதைத் தடுக்கவே நீங்கள் பதுங்குகிறீர்கள் என்று நினைக்கிறேன்;ஏனெனில் தற்போது உங்களுடைய தளத்துக்கு அதிக பார்வையாளர்களை நாங்களே அனுப்பியிருக்கிறோம்;அதில் பலர் உங்களுடைய ஆதரவாளர்களே;அவர்களுக்கு முன்பாக தமிழ் கிறித்தவ‌ இணைய உலகில் அவமானப்படுவதற்கு உங்களுக்கு தைரியமில்லை என்கிறேன்.

அதை நேரடியா சொல்லிவிட்டு விலகுவதே நட்புக்கு அழகு;வெத்துவேட்டுகள் எதற்கு..? நாம் தொடர்ந்து நட்புணர்வுடன் இருக்கலாமே,அதற்கு நேசக்கரம் நீட்டுங்களேன்,பார்க்கலாம்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

சத்தியத்தை அறிந்து கொண்டேலே போதும் நாம் சத்தியத்திலிருந்து வழுவ மாட்டோம். ஆயினும் மாற்றுக் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவன் நான். இப்படியொரு கருத்து இருக்கிறதே!. உங்கள் பதில் என்ன என்று கேட்டால் அதனை எதிர்கொள்ள தைரியம் இருக்க வேண்டும். மாற்றுக்கருத்தாளர்கள் சொல்லும் கருத்து எமக்குத் புதிதாக  தென்படக்கூடாது. அவற்றுக்கு எவ்வாறு பதில் அளிக்கலாம் என்பது குறித்து தெளிவு நமக்கிருக்க வேண்டும். வெறுமனே சத்தியம் இதுதான் நம்பினால் நம்புங்கள் என்று சொல்லும் கூட்டத்தை சேர்ந்தவன் நான் அல்ல. எனவே தான் காவற்கோபுர வெளியீடுகளையும் இன்னும் புரட்டுக்கருத்துக்களையும் அதிகமாக படிக்கிறேன். 



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

நடத்துங்க. வேடிக்கை பார்க்கிறேன். அவர்கள் அனைவரையும் சமாளிக்க ஜான் ஒருவரே போதும்! முடிந்தால் உங்க டீமிற்கு சகோதரர்கள் கொல்வின், மற்றும் மைகோயம்புத்தூர் அவர்களையும் ஏலத்தில் எடுங்க!



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

Ashokkumar wrote:

     வாதத்தின் மூலம் ஒருவருக்கு ஆன்மீக சத்தியம் புரியவைக்க முடியும் என்று நான் நம்பவில்லை


 
அதனை நாம் ஏற்கனவே அறிந்திருக்கிறோம்,நண்பரே;நான் ஏற்கனவே குறிப்பிட்டவண்ணமாக இந்த விவாதமேடை வாசகர்களை மையமாகக் கொண்டதாகும்;அவர்களிடம் நாம் நம்பிக்கை பெற்றுவிட்டால் பலரும் சரியான போதகத்தைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்புண்டாகும்;ஏனெனில் எந்தவொரு நம்பிக்கையும் விருப்பமும் ஒரு குறிப்பிட்ட கருத்தாக்கத்தின் மூலமே தோற்றுவிக்கப்பட்டதல்லவா? உதாரணமாக கோல்வின் அவர்கள் காவற்கோபுரம் சஞ்சிகையை படித்தும் விழுந்துபோகவில்லை பாருங்கள்.

Ashokkumar wrote:


     அமெரிக்க இரவு வேளைகளில், என்னால் இதற்கு பங்களிக்க முடியும். பகலில் அலுவலக பணி குறுக்கிடும்.

நம்முடைய விவாதத்தில் நீங்கள் இந்திய பகல் நேரத்தில் பங்கேற்பதே சிறந்த‌தாகும்;ஜாண் அவர்களுக்கும் இது ஏற்புடையதாகவே இருக்கும்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

தங்களது முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துக்கள், நண்பரே; இரஸல் கூட்டத்தாரின் படைப்புகள் அனைத்தையும் உட்கொண்டு ஜீரணம் செய்தும் உங்களுக்கு ஏதும் நேராதிருப்பது தங்கள் மன உறுதிக்கும் கிறித்துவைப் பற்றிய உங்கள் வைராக்கியத்துக்கும் ஒரு அடையாளமாகும்;"சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் ஒரு சேதமும் உண்டாகாது " என்று ஆண்டவர் சொன்னது இதுதானோ,அவர் தான் எல்லாவற்றிலும் ஒரு சூட்ச‌மப் புள்ளியை வைத்திருப்பாரே..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

Bro, Chillsam:

\\காவற்கோபுரம் சம்பந்தமான தங்கள் கேள்விகளையும் நீங்கள் கேட்கமுடியும்\\

ஏற்கனவே சுட்டிக்காட்டி விட்டேன். ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்களே! இனியும் இவர்களுடன் விவாதம் செய்வது எனக்கு உடன்பாடில்லை. 

ஒரு காரியம் செய்ய வேண்டும் என்ற ஆவல் நெடுநாளாக என் மனதில் உள்ளது. அதாவது ஏற்கனவே நான் கற்றுக்கொண்ட ரசலின் போதனைகளை சரியான முறையில் இணையத்தில் ஏற்ற வேண்டும். (நூற்தலைப்பு, பக்க இலக்கம்) உட்பட.). அப்போதுதான் இவர்கள் எங்கிருந்து தங்கள் போதனைகளை பெறுகிறார்கள் என்பது தெரியவரும். சிலவற்றைத் தொகுத்து விட்டேன். எனது பெரும்பலான நேரங்களை இக்காரியங்களுக்காக ஒதுக்கி கவனமாக தொகுத்து வருகிறேன். சில மாதங்களில் அனைத்தையும் வெளியிடாவிட்டாலும் முக்கியமான போதனைகளையாவது கொண்டு வருவேன்

தற்சமயம் கூட நான் பதிக்கும் யெகோவா சாட்சிகள் சம்பந்தமான கட்டுரைகளில்  அந்த விபரங்கள் அடங்கியிருப்பதை காணலாம். 

இவர்களுடன் விவாதம் செய்ய நான் தயாராக இல்லை. (சகோ.அன்பு மற்று கோவை பெரியன்ஸ்) ஆனால் அது தொடர்பாக சில கட்டுரைகளை மட்டும் பதிப்பேன். எனது முன்னைய முயற்சி தொடர்வேன்.



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
Permalink  
 

     வாதத்தின் மூலம் ஒருவருக்கு ஆன்மீக சத்தியம் புரியவைக்க முடியும் என்று நான் நம்பவில்லை

 அமெரிக்க இரவு வேளைகளில், என்னால் இதற்கு பங்களிக்க முடியும். பகலில் அலுவலக பணி குறுக்கிடும்.


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

தங்களுடைய உணர்வுகள் புரிகிறது,நண்பரே;ஆனாலும் ஜாண் போன்ற நண்பர்களின் கேள்விகள் இன்னும் பதிலளிக்கப்படாமல் சில சலசலப்புகள் காரணமாகக் காற்றில் கலந்துவிட்டது;நேருக்கு நேராக நின்று கேள்வி கேட்கும்போது யாராக இருந்தாலும் சுற்றிவளைத்து மூக்கைத் தொடாமல் சுருக்கமாக ஓரிரு வரிகளில் பதில் சொல்லித்தானே ஆகவேண்டும்? இதற்கான விதிமுறைகளை வகுத்துக்கொண்டுதானே செயல்படப் போகிறோம்? 

காவற்கோபுரம் சம்பந்தமான தங்கள் கேள்விகளையும் நீங்கள் கேட்கமுடியும்;அதாவது குறிப்பிட்ட சஞ்சிகையை முடிந்தால் ஸ்கேன் செய்து போஸ்ட் செய்யுங்கள்;அத்துடன் இங்கே எதிர்தரப்பினர் பதிவிட்டுள்ள எழுத்தையும் மேற்கோள் காட்டுங்கள்,பிரச்சினை முடிந்தது; இவையனைத்துமே நடுநிலையான வாசகர்களை மனதிற்கொண்டே செய்யப்படுகிறது என்பதையும் தங்கள் கவனத்துக்குக் கொண்டுவருகிறேன்;ஏற்கனவே விவாதித்துக்கொண்டுதானிருக்கிறோம்; ஆனாலும் க்விஸ் (Quiz) நிகழ்ச்சியில் ராபிட் ஸ்பீட் ரௌண்ட் (rapid speed round) என்பார்களே அதுபோன்றதொரு சோதனை முயற்சியே இது.

இந்த விவாதத்தில் தகவல் களஞ்சியமான உங்களையே நான் நம்பியிருக்கிறேன்;தங்கள் பொன்னான நேரத்தில் ஏதேனும் ஒரு மணிநேரம் ஒதுக்கி இங்கே நின்றாலே போதும்;பரிசீலிப்பீர்களா..?



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

என்னைப் பொறுத்தவரை இவர்களுடன் குறிப்பாக கோவைபெரியனுடன் விவாதம் செய்வது வீண் என்றே படுகிறது. ஏற்கனவே நான் குறிப்பிடபடி யெகோவா சாட்சிகளின் குறிப்பாக ரசலின் போதனைகளை பின்பற்றியதாகவே இவரது உபதேசங்கள் உள்ளன. யாரும் இதனை தாரளமாக சோதனை செய்து கொள்ளலாம். ஏனென்றால் நான் நீண்டகாலமாக .இவர்களின் (காவற்கோபுர) வெளியீடுகளை படித்து வருகிறேன். 

வேதத்திற்கு முரண்பாடான வசன ஆதாரம் காட்டியும், தேவதூதனுக்கு கால் இல்லை என்று சொல்வதும்  யோவானின் ஆவியும் எலியாவின் ஆவியும் தனக்கு உண்டென சாதிப்பதும் நேர்மையான ஒரு மனிதருக்கு அழகான காரியமாக தெரியவில்லை. மற்றது இவரின் வார்த்தைப் பிரயோகங்கள். ஆரம்பத்திலிருந்தே என்னையும் சகோதரர்களையும் தகாத வார்தைகளினால் பேசிக்கொண்டே இருக்கிறார. நானும் அந்தவையில் தவறு செய்துள்ளேன். ஆனால் இது எதிர்விளைவினால் ஏற்படடது. இருப்பினும் மன்னிப்புக் கேட்டுவிட்டேன். எனவே இவரை நான் ஒரு சராசரி மனிதனாக கூட நான் கருதவில்லை. இவருடன் விவாதம் செய்யாதிருப்பதே நல்லது. 

சகோ. அன்புவின் கொள்கைகளும் கிட்டத்தட்ட இத்தகையதே. ஆயினும் கோவை பெரியனை விட பரவாயில்லை. வங்கி விடயத்தில் பகிரங்கமாக இவ்வளவு மோசடியாக எழுதியதிலிருந்தே இவரின் நேர்மையைப் புரிந்து கொண்டேன். தேவனுக்கே பாடம் எடுக்கும்  இவர் தேவன் அனைத்தையும் அறிந்திருந்தும் எல்லாவற்றையும் அறிய முயற்சிப்பதில்லை என்று இவரின் போதனை தேவனை நிந்திப்பதாக உள்ளது. 

என்னைப் பொறுத்தவரை இவர்களுடன் விவாதிப்பது நேர வீண்விரயம் என்பேன். வேண்டுமாயின் சகோ. சுந்தருடன் செய்யலாம்.



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

ஐயாமாரே,

விவாதத்துக்கான ஆலோசனைப் பகுதியே ஒரு விவாதமாக உருவெடுத்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்; நானும் அவ்வாறே கட்டுப்பாட்டுடனே கருத்து தெரிவித்திருக்கிறேன்.அதாவது விவாதம் தேவையா என்ற விவாதத்தில் யார் யார் கருத்து சொல்லி விவாதம் தேவையா என்ற விவாதத்தில் மேற்கொள்வார்களோ என்று அஞ்சுகிறேன்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

@Kovai

//இயேசுகிறிஸ்துவை தொழுபவர்கள் கிறிஸ்தவர்கள் என்றும் இயேசு கிறிஸ்துவை தொழ மறுப்பவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல என்பதே ஒரு வீண் கருத்து!! வேதம் தெளிவாக சொல்லியிருக்கிறது, கிறிஸ்துவின் சீஷர்களே கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்பட்டார்கள் என்று, வேதத்தில் இல்லாத ஒன்றை விடாப்பிடியாக நம்புவது மூடத்தனம் என்று சொல்லிக்கொண்டு இப்படி நம்புவதை என்னவென்று சொல்லுவது!! சீஷன் என்றால் ஒருவரை பின்பற்றி செல்பவனே அன்றி அவரை துதிப்பவனோ, ஆராதிப்பவனோ, தொழுதுக்கொள்பவனோ இல்லை!! பின்பற்றுவது என்றால் அவர் என்ன சொல்லிதந்திருக்கிறாரோ, அதை கைக்கொள்வது!! கிறிஸ்து தன் பிதாவை ஆராதிக்க சொல்லி தந்திருக்கிறார் என்றால் நாமும் பிதாவை ஆராதிப்பது தான் பின்பற்றுதலாகும்!! அவர் பிதாவை ஆராதிக்கட்டும், ஆனால் நான் கிறிஸ்துவை ஆராதிக்கிறேன் என்று சொல்வதினால் ஒருவன் தன்னை கிறிஸ்துவன் என்று சொல்லுவதும் வேதத்தில் இல்லாத ஒன்று தானே!! இதையும் விடாப்பிடியாக நம்பித்தானே வருகிறீர்கள்!!

விவாதிப்பது ஒரு பெரிய காரியம் அல்ல, ஆனால் விரக்தியின் உச்சத்தில் வந்து சபிப்பதும், தான் சொல்லுவதை ஏற்றுக்கொள்ளாதவனை தூஷிப்பதும், அவர் குடும்பத்தையும் சந்ததியையும் தகாத வார்த்தைகளால் விமர்சிப்பதும், இன்னும் பல வேண்டாத எழுத்துக்களை எழுதி பலரை காயப்படுத்துவதும் நோக்கம் கொண்டிருந்தால் அப்படி பட்ட ஒரு விவாதம் தேவையற்றதாகும்!!

ஒரே விசுவாசத்தில் இருப்பவர்கள் 2000 சபைகளாக ஒரே தெருவில் 12 சபைகள் வைத்து நடத்துபவர்களாக இருக்க முடியாது!! இது ஒன்றே இந்த சபைகள் வேதத்தை விசுவாசிக்கிறதா, அல்லது தங்களின் சபை போதகர்களை விசுவாசிக்கிறாதா என்பதற்கான விடையாகும்!!

வேதத்தில் ஒரு வசனம் மற்ற வசனத்திற்கு நேர்மாறாக இருப்பதை போன்று கூட இருக்கிறது, அதை அதில் ஒரு வசனத்தை மாத்திரம் பிடித்துக்கொண்டு கேள்விகள் எழுப்புவது ஆரோக்கியமான ஞானம் அல்ல!! மாறாக வசனங்கள் ஏன் அப்படி தோன்றுகிறது என்பதை ஆறாய்ந்து கேட்பதே ஞானமாகும்!! //

மேற்காணும் கருத்தினை நம்முடைய அழைப்புக்கு எதிர்வினையாகப் பெற்றிருக்கிறோம்;இந்த காரியத்தில் என்னுடைய சுயத்தை முழுவதுமாக ஒழித்துவிட்டு கர்த்தரையும் அவருடைய வேதத்தையும் மாத்திரமே சார்ந்திருக்கிறேன் என்பதை சுயநினைவுடன் தெரிவித்துக்கொள்ளுகிறேன்;சக இந்தியப் பிரஜைகள் மற்றும் தமிழ் குடியினர் என்ற அளவில் உங்களுடன சிநேகம் பாராட்ட தயாராக இருக்கிறேன்;எதிர்தரப்பினரின் மேற்கண்ட கருத்து நாம் கேள்விகளை ஒழுங்குசெய்துகொள்ளவும் உதவியாக இருக்கிறது; அதேநேரத்தில் நாம் ஆயத்தப்படுத்திக் கொள்ளவேண்டிய பதில்களுக்கும் வழிகாட்டியாக இருக்கிறது.

விவாதம் என்பதே ஒரு குறிப்பிட்ட காரியத்தில் தெளிவைப்பெற எனில் எந்தவிதமான சங்கடமும் கசப்பும் ஐயங்களும் இல்லாமல் வரவேண்டுமல்லவா? அதேபோல திறந்தமனதுடன் கூடிய விவாதத்தில் ஏற்கனவே ஏதோ ஒன்றை நிர்ணயித்துக்கொண்ட மனப்பான்மையைவிட நியுட்ரலாக (Neutral) வந்தால் நல்லது;ஆனாலும் இது மனிதர்களான நமக்குக் கூடாத காரியம் தான், முயற்சிப்போமே..! உடனடியாக பதிலளிக்க முடியாவிட்டாலும் அதற்குரிய அவகாசத்தைப் பெற்றுக்கொள்வதில் இருதரப்புக்கும் உரிமையுண்டு.

இந்த ஆரோக்கியமான விவாதத்துக்கு நான் தடையாக இருந்தால் எந்த கருத்தையும் விமர்சனத்தையும் முன்வைக்காமல் வெறும் பார்வையாளனாகவே இருந்துவிட்டு போகிறேன்;ஆனாலும் ஜாண் போன்றவர்களின் நிலை எத்தனை இணக்கமாக இருக்கிறது பாருங்கள்;அவர் நான் குறிப்பிட்டதுபோல வெற்று
(Neutral) மனநிலையிலேயே வர ஆயத்தமாக இருக்கிறார்;தன்னை மாற்றிக்கொள்ளவும் ஆயத்தமாக இருக்கிறாராம்.இது எத்தனை அருமையான குணாதிசயம் அல்லவா? இங்கே எழுதிவிட்டாரே,இதனை அவர் மாற்றமுடியுமா? நாம் நட்புபாராட்ட இது உங்களுக்கு நல்லதொரு வாய்ப்பு என்றே எண்ணுகிறேன்.இந்த ஆரோக்கியமான விவாத முயற்சிக்கு அன்பு மற்றும் சுந்தர் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கிறேன்;அவர்கள் எனது இந்த அழைப்பை புறக்கணிக்கமாட்டார்கள் என்றே எண்ணுகிறேன்.

இன்னும் கோல்வின், அசோக், ஜோசப் ஸ்னேகா, எபி மற்றும் சகோதரி கோல்டா  ஆகிய மற்ற நண்பர்களின் கருத்தையும் ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறேன்;இங்கே வெளிப்படையாகக் கருத்து தெரிவிக்க விரும்பாத நண்பர்கள் தனிமடலில் எனக்கு எழுதவும்;

கர்த்தர் நம்மில் மகிமையடைவாராக‌..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 

நீண்டநாட்களாக இதே போன்ற ஒரு காரியத்தை சிந்தித்து கொண்டு தளத்திற்கு வரும் சகோதரர்களிடம்  கேட்கலாம் என்று நினைத்து இருந்தேன். என்னுடைய நிறைய கேள்விகளுக்கு கிறிஸ்தவன்  என்று சொல்லியும்   "இயேசு கிறிஸ்துவை தொழ மறுப்ர்ளிடம்"  பதிலை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறேன் ஆகையால் இது போன்ற ஒரு ஏற்பாடு இந்த விவாதத்தை நல்ல முறையிலும், விரைவாகவும் நடத்த உதவும் என்று நம்புகிறேன். அதேபோல அவர்கள் என்னுடைய விசுவாசத்தை குறித்து எழுப்பும் எல்லா கேள்விகளுக்கும் வேதத்தில் இருந்து மாத்திரம்  என்னால் பதிலளிக்கமுடியும் என்று விசுவாசிக்கிறேன்; அப்படி பதிலளிக்க முடியவில்லை என்றால் என்னை மாற்றி கொள்ளவும் தயாராக இருக்கிறேன்; ஏனென்றால் வேதத்தில் இல்லாத ஒன்று விடாப்பிடியாக நம்புவது மூடத்தனம்..!


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

இயேசுவின் தெய்வத்துவத்தை மறுத்து யெகோவா தேவனுக்கே அனைத்து மகிமையும் செலுத்தவேண்டும் என்று நாளது தேதிவரையிலும் (மேசியாவின்) எதிரிகள் வாதிட்டு வருகின்றனர்;இது சம்பந்தமாக‌ அவர்கள் வேதத்தை மட்டுமே மையமாகக் கொண்டு வாதிட சம்மதிக்கின்றனர்; ஆனாலும் மூலபாஷை மற்றும் சொந்த வியாக்கியானங்களைப் பயன்படுத்துவார்கள் போலும்.

நம்முடைய யௌவன ஜனம் தள நண்பர்களின் முயற்சிகள் குறிப்பிட்ட நிலையை எட்டுவதற்கு உதவியாக ஒரு நேரடி விவாதத்தை இணையதளம் மூலமாக நடத்தினால் என்ன என்று தோன்றுகிறது.

இதுகுறித்து நம்முடைய நண்பர்கள் எதிர்தரப்பினருக்குத் தெரியப்படுத்தினால் நாமனைவருமாக இணைந்து ஒரு குறிப்பிட்ட நேரத்தை நிர்ணயித்து உடனுக்குடன் ஓரிரு வரிகளில் ஏதாவது ஒரு குறிப்பிட்ட பொருளை மட்டுமே மையமாகக் கொண்டு வாதிடலாமா என்பது குறித்து நண்பர்களின் கருத்தை அறிய விரும்புகிறேன்; இங்கு வந்து செல்லும் எதிர்தரப்பினரும் இதையே அழைப்பாக ஏற்று தங்கள் விருப்பத்தைப் பதிவுசெய்ய வேண்டுகிறேன்.

இது தொடர்பாக விவாதிக்கும் நேரம் வாதிக்கப்படும் பொருள் வாதத்தை நடத்துபவர் உட்பட அனைத்து காரியங்களிலும் நண்பர்களுடைய ஆலோசனை வரவேற்கப்படுகிறது; நாம் இதில் தேர்ச்சிபெற்றால் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இணையும் நேரமாக வைத்துக்கொள்ளலாம்.அதற்கு அடுத்த கட்டத்தில் பொதுமேடையிலும் விவாதிக்கும் அளவுக்கு நாம் நல்லிணக்கத்தை உருவாக்க முடியும் என்று நம்புகிறேன்.

  • விவாதிக்கப்படும் பொருளாக மூன்றில் ஒன்றை (Choice) தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை தரவும்.
  • விவாதிக்கும் நேரமாக குறைந்தது இரண்டு முதல் மூன்று மணிநேரத்தை ஒதுக்கவும்.
  • விவாதத்துக்காக இணையும் நேரத்தையும் மாற்று (Choice) வாய்ப்புடன் தரவும்.

மற்ற விதிமுறைகளை ஓரிரு நாட்களில் இறுதிசெய்து கொண்டு களமிறங்குவோம்; யார் யாருடைய தளத்துக்கு வருவது என்பதையும் ஒத்த கருத்துடன் இறுதிசெய்து கொள்ளலாம்; இரு தரப்பிலிருந்தும் குறைந்தது மூன்று பேர் பங்கேற்கவேண்டும்; அதிகபட்சமாக ஐந்து பேர் பங்கேற்கலாம்.

தள நண்பர்கள் மற்றும் எதிர்தரப்பினர் இந்த அழைப்புக்கு அடுத்த 8 மணிநேரத்துக்குள் தகுந்த பதிலைத் தருவார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard