ஜனவரி 1 ம் தேதி, வின்சென்ட் செல்வகுமார், கடல் வாழ் உயிரினங்கள் பெரிய அளவில் சாகும்;ஏன் என்று புரியாமல் விஞ்ஞானிகளே திகைப்பார்கள்;இது வருகைக்கு ஒரு அடையாளம் என்று சொன்னார். இது சம்பந்தமான் காட்சிகள் பார்த்தீர்களா!. மனிதர்களின் வ்யிற்றுக்குள் போக வேண்டிய நண்டும், மீனும் இப்படி செத்து கிடக்குதே என்று எனக்கு ரொம்ப வருத்தமா இருந்தது.
இவிங்க ரெண்டு பேரும் எம்டன் மவனுங்க என்பதும் இத்தனை நாள் இல்லாத புதிய (தீர்க்கதரிசிகள் ?) வேஷத்தையே திடீரென தரித்துள்ளார்கள் என்பதும் ஊடகவியலாளர்களின் விரல் நுனியிலுள்ள தகவலாகும்;தினகரன் போன்றவர்கள் காலமானபிறகே இவர்களுக்கு அந்த வெற்றிடத்தை நிரப்பும் தைரியம் வந்தது.
அதிலும் வின்சென்ட் செல்வகுமாரைக் குறித்து இந்த திரியில் நான் எழுதாத நிலையில் நீங்கள் திசைதிருப்பும்வண்ணமாக இங்கே புதிய தகவலைப் போல ஏதோ போட்டிருக்கிறீர்கள்;நான் அவருக்கு தனியாக ஆப்பு ரெடி பண்ணி வெச்சுருக்கேனம்மா,பதில் சொல்ல நீங்க இருக்கும் தைரியத்துல...
முதல்ல சாதுவின் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லுங்கள் பிறகு டமுக்ஸ் மேட்டரை டீல் பண்ணுவோம்..!
ஜப்பான் சுனாமியைக் குறித்து தமிழில் தீர்க்கதரிசனம் சொல்வதால் என்ன பயன் என்பதை இப்போது சொல்லுங்கள்;மேலும் கொஞ்சமும் ஈவிரக்கமில்லாமல் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஒரு காரியத்தை இத்தனை நாட்கள் சுமார் ஆறு மாதங்கள் மூடி வைத்திருந்தது சட்டவிரோதமல்லவா?
ஜப்பான் அரசுக்கோ ஏன் இந்தியாவிலுள்ள ஜப்பான் தூதரகத்துக்கோ இல்லாவிட்டால் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கோ ஏன் இவர் அதனை தெரிவிக்கவில்லை?
காரணத்தை நான் சொல்லுகிறேன்,மூலிகையிலிருந்து பெட்ரோல் எடுப்பதாகக் கூறின ராமர் பிள்ளை ஆராய்ச்சியாளர்களிடம் சிக்கிக்கொண்டு படாதபாடு பட்டார்;இவர்களோ நாசா ஆராய்ச்சி குறிப்புகளையே திருடி மாடிஃபை செய்து வேத வசனத்துடன் கலந்தடிக்கிறார்கள்;எனவே இவர்களால் வேத அறிஞர்களிடமும் விவாதிக்கமுடியாது,அரசாங்கத்திடமும் சொல்ல முடியாது, அதே போல நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துக்கோ அல்லது இந்தியாவிலுள்ள இஸ்ரோவுக்கோ கூட அறிவிக்க இயலாது. ஏனெனில் இவர்கள் எந்த ரிப்போர்ட் அல்லது எச்சரிப்பைக் கொடுத்தாலும் சரி அது அவர்களால் வெளியிடப்பட்டதாகவே இருக்கும்;இன்னும் சுற்றுசூழல் அறிஞர்களின் அறிக்கையும் திருடப்பட்டுள்ளது;
ஏன் திருடப்பட்டுள்ளது என்கிறேன் என்றால், நாசா அறிக்கையையோ சுற்றுசூழல் அறிஞர்களின் அறிக்கையையோ மேற்கோள் காட்டி வேத வசனத்தையும் எடுத்து சம்பந்தப்படுத்தி போதித்தால் நமக்கு ஒரு அருமையான போதனையும் எச்சரிப்பும் கிடைத்திருக்கும்;அதுபோன்ற இடிமுழக்க செய்தியாளராக காலஞ்சென்ற டாக்டர் ஜஸ்டின் பிரபாகரன் அவர்கள் விளங்கினார்.
ஆனால் இவர்களோ அனைத்து தகவல்களையும் கிரகித்துக்கொண்டு கலந்தடிப்பதால் அதையும் தேவதூதன் பெயரில் வெளியிடுவதாலேயே இவர்கள் கதை சந்தி சிரிக்கிறது;கல்வியாளர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடலுக்கு வந்தால் இவர்கள் வெட்கப்படுவார்கள் என்பது நிச்சயம்.
"வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்."(கொலோசெயர்.3;17)
-என்று வேதம் சொல்லியிருக்க இவர்களோ எதைச் சொன்னாலும் செய்தாலும் ஏதோ தூதனுடைய பெயரால் செய்துகொண்டிருப்பதே இவர்களுக்கும் தேவனுக்கும் இடையிலான இடைவெளிக்கு அடையாளமாக இருக்கிறது;அல்லது தூதர்களையே தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு லூசிபருக்கு இணையாகவும் தேவனுக்கு எதிராகவும் தனி இராஜ்யம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்றும் சொல்லலாம்;ஏனெனில் தள்ளப்பட்ட அந்த சாத்தானே ஏற்கனவே போதிக்கப்பட்டவைகளுக்கு எதிராக நூதனமானவற்றைப் போதித்து மனதை மயக்குகிறவன்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
ஜனவரி 1 ம் தேதி, வின்சென்ட் செல்வகுமார், கடல் வாழ் உயிரினங்கள் பெரிய அளவில் சாகும்;ஏன் என்று புரியாமல் விஞ்ஞானிகளே திகைப்பார்கள்;இது வருகைக்கு ஒரு அடையாளம் என்று சொன்னார். இது சம்பந்தமான் காட்சிகள் பார்த்தீர்களா!. மனிதர்களின் வ்யிற்றுக்குள் போக வேண்டிய நண்டும், மீனும் இப்படி செத்து கிடக்குதே என்று எனக்கு ரொம்ப வருத்தமா இருந்தது.
ஜப்பானில் நடைபெற்ற கோரமான சுனாமி பேரழிவை முன்னறிந்தும் அதனை முறைப்படி அரசாங்க அதிகாரிகளுக்குத் தெரிவிக்காத மாபாதகத்தை சாது எனும் கள்ளத்தீர்க்கதரிசி புரிந்திருக்கிறார்;அதன் விவரம் தற்போது தெரியவந்துள்ளது.
இவரையெல்லாம் இனியும் எப்படி நம்பி நாம் நம்முடைய பிரச்சினைகளைச் சொல்லமுடியும்? இங்கே தமிழில் ஒளப்பியதை ஜப்பானில் ஒளப்பியிருந்தால் கேட்கிறார்களோ கேட்கவில்லையோ உண்மையாகவே நம்முடைய ஆண்டவருடைய நாமம் மகிமைப்பட்டிருக்குமே;அப்படியானால் இந்த ஆள் ஆண்டவருக்கு மகிமையை செலுத்தாமல் தனக்கே மகிமையைத் தேடும் வண்ணமாக அதனை இத்தனை நாள் புதைத்து வைத்திருக்கிறார் என்பது பொருளாகும்.
கோம்பேறி மூக்கன் எனும் ஒருவகை பாம்பு இனம் தான் கொத்திய சவ அடக்கத்தைப் பார்க்கும் வரை வெறி அடங்காமல் சுடுகாட்டில் காத்திருக்குமாம்;அதற்கும் இந்த மனுஷனுக்கும் என்ன வித்தியாசம்?
கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாக இருங்கள்;மிரட்டி வரி வசூலித்து ஆண்டவருடைய மன்னிப்பைப் பெற்ற சகேயுவை விட இவர்கள் மோசமானவர்களாக்கும்;அவன் மனந்திரும்ப கிடைத்த வாய்ப்பு இவர்களுக்குக் கிடைக்காமற் போகலாம்.
இவர்களைவிட பல்லாயிரம் ஆண்டுகள் முன்பு எந்த நவநாகரீக வசதிகளும் இல்லாத காலத்திலேயே தீர்க்கதரிசனம் உரைத்த நாஸ்டர்டாம் என்பவரை நம்பலாம்.