Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சுவிசேஷம் அறிவித்தல் அவசியமா..?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: சுவிசேஷம் அறிவித்தல் அவசியமா..?
Permalink  
 


சுவிசேஷம் அறிவிப்பதைக் குறித்த நமது உரிமையை இந்த திரியில் நண்பர் ஜோசப் மிக அழகாக எடுத்துரைத்திருக்கிறார்; இதனிடையே சுவிசேஷம் எனும் வார்த்தைக் குறித்து நான் கேள்விப்பட்ட தகவலை தமிழ் கிறித்தவ தளத்தில் நான் எழுதிய ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறேன்;அதனை இங்கே யௌவன ஜனம் தளத்தின் வாசக நண்பர்களின் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்.

சுவிசேஷத்தின் மேன்மை

"சுவிசேஷம்" என்ற வார்த்தை சமஸ்கிருத மொழியிலிருந்து வந்ததொரு வார்த்தையாகும்;இதனை சு வி சேஷம் எனப் பிரிக்கலாம்;

இதில் "சேஷம்" என்றால் செய்தி என்றும் "விசேஷம்" என்றால் நற்செய்தி என்றும் "சு" என்பது பரிசுத்தத்தைக் குறிக்கும் தனி எழுத்தாதலால் "தூய்மையான நற்செய்தி" என்ப‌து பொருளாகும்;

ந‌ற்செய்தியின் த‌ன்மை என்ன?
அது எல்லா ஜன‌த்துக்கும் மிகுந்த‌ ச‌ந்தோஷ‌த்தை உண்டாக்கும் ந‌ற்செய்தியாம்;

ந‌ற்செய்தி யாரைப் ப‌ற்றிய‌து? கிறிஸ்து எனும் இர‌ட்ச‌க‌ரைப் ப‌ற்றிய‌து;

ப‌வுல் சொல்லும் போது சுவிசேஷ‌ம் சிலுவையைப் ப‌ற்றியது என‌ நேர்மையாக‌வே சொல்லுகிறார்;ஆம், ப‌ரிசுத்த‌மான‌ ந‌ற்செய்தி ம‌ட்டும‌ல்ல‌,அது பரிசுத்த‌மாக்கும் ந‌ற்செய்தியாகும்;

யாரை அது ப‌ரிசுத்த‌மாக்கும்? யார் அசுத்த‌மாக‌ இருக்கிறார்க‌ளோ அவ‌ர்க‌ளையே..!

http://tamilchristians.com/index.php?option=com_ccboard&view=postlist&forum=4&topic=1668&Itemid=287



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

 தேவன் எண்ணிக்கையை வைத்து எடை  போடுகிறவர் இல்ல என்பது உங்களுக்கு எத்தனை தடவை சொன்னாலும் தெரிவதில்லை. நோவா காலத்திலேயே பெரும் அழிவுக்கு 8 பேர் தானே தப்பினர். பாரதத்தில் மீதம் உள்ள 97% மக்களுக்காக நீங்கள் பரிதபிக்கும் போது தேவன் பரிதபியாமல் இருப்பாரோ? அவரது இரக்கங்கள் பெரிதாயிருக்கிறபடியால் தானே வருகை தாமதிக்கிறது. யாரும் கெட்டுப்போவதில் தேவன் பிரியப்படுகிறவர் அல்ல. எனவே பாரத திரு நாட்டில் நடைபெறும் மிஷனரி ஊழியங்களை கொச்சைப்படுத்தாதீர்கள். இந்த 97% மக்களும் ஒருமுறையாவது நற்செய்தியை அறியவேண்டும் என்பதே மிஷனரிப்பணியின் நோக்கம், ஏற்றுக்கொள்ளும் முடிவு அவர்களுடையது.

//ஜோசப் அவர்களே, இவர்கள் மாத்திரம் இல்லை, இவர்களை போன்ற எல்லா ஊழியர்களையும் நான் ஒரே பார்வையில் தான் பார்ப்பேன்!! இன்றைய கிறிஸ்தவர்கள் கூட்டம் கூட்டமாக ஒவ்வொரு ஊழியர்களை தங்கள் இஷ்ட்ட தேய்வங்களை போல் ஒவ்வொருவர் ஒவ்வொரு ஊழியர்களிக்கு பின்னால் இருப்பதை கண்கூடாக பார்க்க முடியும்!! அரசு உத்தியோகத்தில் இருந்தால் இருச்சக்கர வாகணத்தில் தான் போக முடியும், ஆனால் ஊழியம் என்று வந்துவிட்டால் கார், ஏரோப்லேன் என்று விதவிதமாக போகலாமே, வேலையை உதறி தள்ளி முழு நேர ஊழியத்திற்கு வருகிறோம் என்பவர்களில் பெரும்பாலுமானோர் இப்படி பட்டவர்கள் தான்!! வெகு சிலர் (எண்ணி விடலாம்) காசுக்கு ஆசைப்படாமல் பேர் புகழுக்காக இப்படி வருபவர்களும் இருக்கிறார்கள்!! இதில் எந்த மாற்றமும் கிடையாது!!

ஊழியம் என்றால் பவுல் பேதுரு போன்றோர் செய்தது தான்!! //

நீங்கள் எப்படி பார்ப்பீர்கள் என வைத்து யாரையும் தீர்ப்பு செய்யமுடியாது, தேவன் எப்படி பார்க்கிறார் என்பதை வைத்து தான் தீர்ப்பு இருக்கும். நான் ஸ்டான்லியையும் அகஸ்டின் ஜெபக்குமாரையும் இஷ்ட தெய்வங்கள் போல பின்பற்றுபவன் அல்ல, பின்பற்றத்தக்க முன்மாதிரியை வைத்துப்போனவர் இயேசு மாத்திரமே, அது எனக்கும் தெரியும். அரசு ஊழியர்கள் 2 சக்கர வாகனத்தில் தான் போகிறார்கள் என உங்களுக்கு தெரியுமா, 6 வது சம்பள கமிஷனின் புண்ணியத்தில் இப்போது அரசின் கடை நிலை ஊழியன் கூட ஜெட் ஏர்வேசில் தாராளமாக பயணிக்கலாம். ஊழியக்காரன் வேறு மா நிலத்துக்கோ அல்லது வேறு நாட்டிற்கோ சென்றால் பின்ன நடந்தோ அல்லது நீச்சல் அடித்தா செல்ல முடியும், ஊழியர்கள் விமான பயணம் போவது உங்களுக்கு எரியுதாக்கும். தேவைக்கு, இருக்கிற வசதியை பயன்படுத்துவது தவறல்ல. ஊழியம் என்றால் பவுல், பேதுரு செய்தது தான் என நீங்களாக தீர்ப்பு சொல்லாதிருங்கள், அவர்களது ஊழியம் ஒரு பின்பற்றத்தக்க மாடல் அல்லது மாதிரி அவ்வளவே, இப்போதுள்ள வகையில் ஊழியம் அந்தந்த காலத்துக்கு தகுந்தவகையில் மாற்றம் அடைந்துள்ளது. பவுல், பேதுரு இவ்விருவரிலுமே வித்தியாசங்கள் உண்டு, ஒருவர் திருமணம் ஆனவர் ஒருவர் ஆகாதவர், ஒருவர் யூதேயாவிலும் மற்றவர் பிற தேசங்களிலும் சுற்றித்திரிந்து ஊழியம் செய்தனர். இப்படி நீங்கள் சொன்ன 2 பேரிலேயே இவ்வளவு வேறுபாடுகள் இருக்கும் போது நீங்கள் இப்போதுள்ளவற்றை அவர்களுடன் ஒப்பிடுகிறீர்கள். விந்தை தான்.

//நாங்கள் செய்யும் ஊழியத்தில்(!!) நாங்கள் எங்களை அப்போஸ்தலர், போதகர், பாஸ்டர், ஃபாதர், தீர்க்கதரிசி, சுவிசேஷகர் போன்ற பட்டங்கள் எங்களுக்கு இல்லை!! மாஸ்டர் ஆஃப் டிவினிட்டி, மாஸ்டர் ஆஃப் பிப்லிக்கல் அட்மினிஸ்ட்ரேஷன், டாக்ட்ரேட் இன் டிவினிட்டி போன்ற பட்டங்களும் எங்களை அலங்கரிப்பது கிடையாது!! இதை தான் இன்றைய ஊழியர்கள் சரியாக செய்து வருகிறார்கள்!!

ஆதி சபை ஊழியர்களிடம் இப்படி எந்த பதவிகளோ, பட்டங்களோ கிடையாது!! அவர்கள் வேலை செய்து சாப்பிட்டார்கள்!! குறைந்தப்பட்சமாக இந்த இரு விஷயங்களில் ஒன்றிலாவது ஒத்து போகிற ஒரு ஊழியக்காரனை காண்பியுங்களேன்!!//

இந்தியாவின் சிறந்த ஊழியர்களில் ஒருவரான பக்த் சிங், தன்னை சகோதரன் என்று அழைக்கப்படுவதையே விரும்பினார், அவரது வேத அறிவுக்கும் ஊழியத்துக்கும் அவரை அலங்கரிக்க எத்தனையோ பட்டங்கள் தயாராக இருந்தன ஆனால் அவர் அதை விரும்பவில்லை. அதே போல் ஸ்டான்லியும் தனது பெயருடன் சகோதரன் என எழுதுவதையே விரும்புவார். இன்னும் எத்தனையோ உதாரணங்களை நான் சொல்ல முடியும்.

மறுபடி மறுபடி திரித்துவத்தை இழுக்காதீர்கள், நீங்கள் எத்தனை முறை சொன்னாலும் திரித்துவம் குறித்த எனது கருத்து மாறப்போவதில்லை, அதைப்பற்றிய எனது புரிந்துகொள்ளுதல் வேறு. 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

உங்க‌ளுக்கு தைரிய‌ம் இருன்தால் ஆங்கிலேய‌ரின் ஆட்சிக்கால‌த்தில் ந‌டைபெற்ற‌ மிஷ‌ன‌ரிப்ப‌ணியை நிராக‌ரியுங்க‌ள் பார்ப்போம், அப்ப‌டி நிராக‌ரித்தால் இப்போது இவ்வ‌ள‌வு வ‌க்க‌ணையாக‌ பேசும் நீங்க‌ள் என்ன‌வாக‌ இருன்திருப்பீர்க‌ள் என்ப‌தையும் சொன்னால் ந‌ன்றாக‌ இருக்கும். பார‌த‌ம் வந்த‌ மிஷ‌ன‌ரிக‌ள் நீங்க‌ள் சொன்ன‌ ஏதாவ‌து ஒரு ப‌ணியைத்தான் செய்த‌ன‌ர். டாக்ட‌ராக‌வோ, ஆசிரிய‌ராக‌வோ, போத‌க‌ராக‌வோ தான் வந்த‌ன‌ர். 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

//இவர்களாகவே எங்களை குறித்து எதை வேண்டுமென்றாலும் எழுதலாம் போல்!! சுவிசேஷம் அறிவிப்பது தேவையில்லை என்பதற்கு காரணம் இருக்கு!! 

1. அறுப்போ உலகத்தின் முடிவு என்கிறது வசனம்!! இப்ப விதைத்தாலும் அது முலைக்காது!!

 2.  நீங்கள் அறிவிப்பது நற்செய்தி அல்ல, துர்ச்செய்தியாக இருக்கிறது!! 

 இதற்காக தான் சுவிசேஷம் அறிவிப்பதை வேண்டாம என்கிறோமே தவிர அதற்கு வேறு ஒரு காரியம் இல்லை!! வேதத்தை புரட்டும் திரித்துவர்கள் கூட்டம் முதலில் தேவன் யார் என்றும் கிறிஸ்து யார் என்றும் தெரியாமல் இருக்கிறார்கள், அப்படி என்றால் நிச்சயமாக சுவிசேஷம் என்றால் என்னவென்று தெரியாமல் தானிருப்பார்கள்!! வேத வசனங்களை புரட்டி வேத புரட்ட திரித்துவர்கள் தான் பிசாசின் பிரதிநிதிகளாக செயல்ப்படுகிறார்கள்!!//

 விதைத்தாலும் முளைக்காதாம், யார் சொன்னது, கி.பி 2000 மாவது ஆண்டில் விதைத்துப்பார்த்தால் முளைக்காது என்று பைபிளில் இருக்கிறதா என்ன. அறுப்பு உலகத்தின் முடிவு என்றால் உங்களுக்கு உலகத்தின் முடிவு தேதி தெரிந்துவிட்டதாக்கும். விதைப்பது மட்டுமே கிறிஸ்தவனின் பணி விளையச்செய்கிறவர் தேவன். அறிவிக்கப்படுவது துர்ச்செய்தி என நீங்கள் சர்டிபிகேட் தரவேண்டாம். நீங்கள் கிறிஸ்துவை படைக்கப்பட்ட நபராக மட்டுப்படுத்துவது தான் துர்ச்செய்தி நினைவில் கொள்ளுங்கள்.

 //2 கொரிந்தியர் 11:13. அப்படிப்பட்டவர்கள் கள்ள அப்போஸ்தலர்கள், கபடமுள்ள வேலையாட்கள், கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலரின் வேஷத்தைத் தரித்துக்கொண்டவர்களாயிருக்கிறார்கள். 14. அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே. 15. ஆகையால் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டால் அது ஆச்சரியமல்லவே; 

 இது தான் இப்பொழுது சுவிசேஷம் சொல்லுகிறோம் என்கிறவர்களை குறித்த வசனம்!! நாங்கள் சுவிசேஷமோ ஊழியமோ செய்ய தேவை இல்லை என்கிறோமே, நீங்கள் செய்யவேண்டும் என்கிறீர்கள், அப்படி என்றால் மேலே சொல்லப்பட்ட வசனங்கள் வேதத்தை புரட்டும் திரித்துவர் கூட்டத்தை குறித்தே அல்லாமல் வேறு யாரை குறித்து இருக்க முடியும்!!//

 வேத வசனம் இருபுறமும் கருக்குள்ள பட்டயம், இது உங்களுக்கும் பொருந்தும். என்ன மற்றவர்கள் போய் சுவிஷேஷம் சொல்கிறார்கள் என்கிறீர்கள் நீங்கள் வேத ஆராய்ச்சி என கூப்பிட்டு சுவிஷேஷம் (!!???) சொல்கிறீர்கள். விதைக்காமலே இருந்துகொண்டு கையில் அரிவாளோடு அலைபவர்கள் விதைப்பதை பற்றி கமென்ட் அடிக்கக்கூடாது. அன்றைக்கு மிஷனரிகள் முளைக்கவே முளைக்காது என இழுத்துப்போர்த்திக்கொண்டு தூங்கியிருந்தால் இன்றைக்கு என்னவாகியிருக்கும்

 //நற்செய்தி!! சும்மா மூன்று நாட்கள் கூட்டம் போட்டு பேயை துரத்துகிறோம், வியாதியை நீக்கிறோம் என்பது அல்ல!! திரும்பவும் கேட்கிறேன், இத்துனை ஊழியர்கள், சுவிசேஷகர்கள் இருந்தும் ஏன் இன்னும் இந்தியாவின் கிறிஸ்தவர்கள் சதவிகிதம் அதே மூன்று புள்ளி கொஞ்சம் இருக்கிறது!! வேதத்தில் இருப்பதை நாங்கள் சொல்லுகிறோம், தங்களை அப்போஸ்தலர்கள் என்று சொல்லிக்கொள்ளும் கள்ள அப்போஸ்தலர்கள் கூட்டத்தினர் தங்களை மேன்மை படுத்துவதற்காக ஏற்படுத்திய உபதேசங்களை நீங்கள் சொல்லுகிறீர்கள், ஆகவே உங்களுக்கு வேதத்திலிருந்து சொல்லப்படும் எதுவும் எங்கள் கருத்தாக தான் இருக்கும்!! மத்தேயு 28:20ல் சொல்லப்பட்டது அப்போஸ்தலர்களுக்கு தான்!! ஏன் சொமாளியா போன்ற நாடுகளுக்கு உங்கள் பென்ஸ், ஹோண்டா அக்கார்ட் ஊழியர்கள் போவதில்லை!! கேட்டல் மடார்னு ஒரு புருடா விடுவார்கள், தேவன் எங்களை இப்படி சொகுசாக இருக்கும் இடத்தில் மாத்திரமே ஊழியம் செய்ய சொன்னார் என்று!! இன்னும் இந்தியாவில் ஏழ்மையின் அதே சதவிகிதம் தான் இருக்கிறது!! உங்கள் ஊழியர்கள் மாத்திரம் இல்லை இன்னும் வேற்று மதத்தாரின் எத்துனை மிஷனரிகள் வந்தாலும் தேவனின் ராஜியத்தில் தான் அனைத்தும் மாறும்!! உணர்ச்சி வசப்பட்டு எதையும் எழுதுவதால் பிரயோஜனம் இல்லையே!!//

 ஏன் ஊழிய‌ம் என்றால் கோட் சூட் போட்டு பென்ஸ் காரில் போகும் ஊழிய‌ர்க‌ள் மாத்திர‌ம் க‌ண‌க்கில் எடுக்கிறீர்க‌ள் சோமாலியா, சூடான் போன்ற‌ இட‌ங்க‌ளில் ஊழிய‌ம் ந‌ட‌க்க‌வில்லை என‌ யார் சொன்ன‌து. தேவ‌ன் அங்குள்ள‌வ‌ர்க‌ளையும் யாரையாவ‌து கொண்டு ச‌ந்தித்துக்கொண்டு தான் இருக்கிறார். 100 கோடிக்கும் அதிக‌ம் ம‌க்க‌ள் தொகை உள்ள‌ பார‌த‌த்தில் 3 ச‌த‌வீத‌ம் என்ப‌து 3 கோடி கிறிஸ்த‌வ‌ர்க‌ளுக்கும் மேல் என்ப‌தை அறிவீர்க‌ளா, இது ப‌ல‌ கிறிஸ்த‌வ‌ நாடுக‌ளின் த‌னிப்ப‌ட்ட‌ ம‌க்க‌ள் தொகையை விட‌ அதிக‌ம் என்ப‌தை அறின்து கொள்ள‌ அடிப்ப‌டை க‌ணித‌ அறிவு போதும். தேவ‌ன் எண்ணிக்கையை கொண்டு திருப்தி ப‌டுகிற‌வ‌ர் அல்ல‌, அன்றைய‌ சோதோமிலேயே 10 நீதிமான்க‌ளாவ‌து இருக்கிறார்க‌ளா என‌ தான் தேடினார். 

நிலையான‌ க‌ட்டிட‌ பொறியாள‌ர் உத்தியோக‌ம் பார்த்து அதை ராஜினாமா செய்து விட்டு ஆசீர்வாத‌ இளைஞ‌ர் இய‌க்க‌ம் ஆர‌ம்பித்த‌ ஸ்டான்லியை குறித்து அறிவீர்க‌ளா, இல்லை மின் பொறியாள‌ராக‌ இருன்து தேவ‌ அழைப்பால் அனைத்தையும் உத‌றிவிட்டு பீகாருக்கு ஊழிய‌ம் செய்ய‌ சென்ற‌ அக‌ஸ்டின் ஜெப‌க்குமாரை ப‌ற்றி உங்க‌ளுக்கு தெரியுமா, இன்த‌ இர‌ண்டு இய‌க்க‌ங்க‌ளும் போதும் உங்க‌ள் குத‌ர்க்க‌ங்க‌ளுக்கு பதில் சொல்ல‌, இதை நிர்வ‌கிப்ப‌வ‌ர்க‌ள் கோட் சூட் போட்ட‌வ‌ர்க‌ள் அல்ல‌, ஏ.சி காரில் ப‌ற‌ப்ப‌வ‌ர்க‌ள் அல்ல‌, அடிக்க‌டி வெளி நாடு போகிற‌வ‌ர்க‌ள் அல்ல‌. இவ‌ர்க‌ளது ஊழிய‌த்தால் ப‌ய‌ன்பெற்றோர் எத்த‌னை பேர் தெரியுமா. ஜெம்ஸ் ஊழிய‌ம் பீகாரில் எத்த‌னை ம‌க்க‌ளின் ம‌றும‌ல‌ர்ச்சிக்கு அடிகோலியிருக்கிற‌து என்று தெரியுமா. சும்மா ஊழிய‌ம் என்றாலே பிராடுத்த‌ன‌ம் என‌ க‌தை விடாதீர்க‌ள். அன்றைக்கு ஐரோப்பிய‌ மிஷ‌ன‌ரிக‌ள் தென் த‌மிழ‌க‌ம் வ‌ராதிருன்தால் இப்ப‌டி ஜ‌ம்ப‌மாக‌ அடுத்த‌வ‌ர்க‌ளை குறைசொல்லிக்கொண்டிருப்பீர்க‌ளா. புதிய‌ ஏற்பாடு யோவானுக்கு வெளிப்ப‌டுத்திய‌ விஷேஷ‌த்தோடு முடிகிற‌து, அத‌ற்க‌ப்புற‌மும் 2000 ஆண்டுக‌ள் க‌ட‌ன்து விட்ட‌ன‌ தேவ‌ன் எப்ப‌டியோ த‌ன‌து திட்ட‌த்தை நிறைவேற்றிக்கொண்டுதான் இருக்கிறார். எத்த‌னையோ பேர்களை அவ‌ர‌வ‌ர் த‌குதிக்கோ தால‌ன்திற்கோ ஏற்ற‌வித‌மாய் ப‌ய‌ன்ப‌டுத்திக்கொண்டு தான் இருக்கிறார். ஒவ்வொருவ‌ருக்கும் எப்ப‌டி அழைப்பு வ‌ருகிற‌து என்ப‌தை உம‌க்கு சொல்லி அப்ரூவ‌லா வாங்க‌முடியும். 

 என‌து உற‌வின‌ர் பைய‌ன் ஒருவ‌ன் பொறியிய‌ல் ப‌டித்து 90% ம‌திப்பெண் பெற்றிருன்தும் சிறுவ‌ர், வாலிப‌ர் ம‌த்தியில் ஊழிய‌ம் செய்யும் ஒரு ஸ்தாப‌ன‌த்தில் முழு நேர‌ ப‌ணியாள‌னாக‌ சேர்ன்தான். சொற்ப‌ வ‌ருமான‌ம் தான் ஆனால் தேவ‌ன் அவ‌னைக்கொண்டு எவ்வித‌ம் ம‌க‌த்தான‌ காரிய‌ங்க‌ளை செய்கிறார், எவ்வள‌வு பேருக்கு அவ‌ன் ஆசீர்வாத‌மாக‌ இருக்கிறான் என்ப‌தை க‌ண்கூடாக‌ க‌ண்டிருக்கிறேன். சும்மா முழு நேர‌ ப‌ணியை எதையோ நினைத்து ம‌ட்ட‌மாக‌ எழுதாதீர்க‌ள். 

 முழு நேர‌ப்ப‌ணி செய்யும் மிஷ‌ன‌ரிக‌ள் ஒன்றும் சும்மா சாப்பிடுவ‌தில்லை அவ‌ர்க‌ள் ஏதாவ‌து ஒரு ப‌ணியை செய்கிறார்க‌ள், ஆசிரிய‌ராக‌வோ, ம‌ருத்துவ‌ராக‌வோ, மொழிபெய‌ர்ப்பாள‌ராக‌வோ, க‌ட்டிட‌ பொறியாள‌ராக‌வோ, செவிலிய‌ராக‌வோ வேலை செய்கிறார்க‌ள், அதுபோக‌ ப‌ணித்த‌ள‌ங்க‌ளில் ந‌ற்செய்தி அறிவிப்ப‌வ‌ர்க‌ள் த‌ங்க‌ள் உழைப்பிற்கு ஏற்ற‌ ச‌ம்ப‌ளத்தை த‌ங்க‌ள் த‌லைமையிட‌த்தில் இருன்து பெறுகிறார்க‌ள், இத‌ற்கான‌ ப‌ண‌ம் இன்திய‌ கிறிஸ்த‌வ‌ர்க‌ளால் தான் கொடுக்க‌ப்ப‌டுகிற‌து. யாரும் சும்மா ப‌டுத்துக்கொண்டு விட்ட‌த்தை பார்த்துக்கொண்டு ஏதாவ‌து விழும் என‌ வாயை பிள‌ந்து கொண்டிருப்ப‌தில்லை என்ப‌தை நினைவில் கொள்ளுங்க‌ள்.

 //அன்று மிஷனரிகள் சேவை நோக்கத்தோடே இருந்தார்கள், இந்த மிஷனரிகள் அவர் அவர் பணியை செய்து இன்றைய மிஷனரிகள், ஊழியர்கள் போல் சொகுசாக வாழ்ந்தவர்கள் கிடையாது!! உங்களுக்கு மிஷ்னரிகள் என்றவுடன் மத பிரச்சாரம் செய்யும் கூட்டம் என்று நினைத்திருக்கிறீகள் போல், ஆகவே தான் மிஷ்னரிகளை குறை சொல்லுபவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல என்கிற முடிவிற்கு வருகிறீர்கள்!! மிஷனரிகள் அனைத்து மதங்களிலும் இருப்பவர்கள் தான்!! //

 அன்று என்றால் என்று, நான் சொல்லும் அன்று என்ப‌து 17 ம் நூற்றாண்டின் பிற்ப‌குதியில், மிஷ‌ன‌ரிக‌ள் சொகுசாக‌ வாழ் ந்த‌வ‌ர்க‌ள் கிடையாது என்கிறீர்க‌ள் ந‌ன்றி, அப்ப‌டியானால் மிஷ‌ன‌ரி செய்யும் ந‌ற்செய்தி அறிவிக்கும் ப‌ணியை தேவ‌ சித்த‌ம் இல்லை என‌ கூறாதீர்க‌ள். ம‌த‌ பிர‌சார‌ம் செய்யும் கூட்ட‌ம் மிஷ‌ன‌ரிக‌ள் என‌ சொல்ல‌ வர‌வில்லை, சும்மா ஆர்.எஸ்.எஸ் கார‌ன் மாதிரி எதையாவ‌து எழுதாதீர்க‌ள், நான் சொல்லும் மிஷ‌ன‌ரி ப‌ணி என்ப‌து சுவிஷேஷ‌ம் சென்ற‌டையாத‌ இட‌ங்க‌ளில் ம‌க்க‌ளோடு ம‌க்க‌ளாக க‌ல‌ ந்து ப‌ழ‌கி, அங்குள்ள‌வ‌ர்க‌ளின் தேவைக‌ளை பூர்த்தி செய்து, எ ந்த‌ அன்பு அவ்வித‌ம் செய்ய‌ த‌ங்க‌ளை நெருக்கி ஏவிய‌து என்ப‌தை சொல்லும் மிஷ‌ன‌ரிப்ப‌ணி. இதைப்ப‌ற்றி தான் நான் க‌ர‌டியாக‌ க‌த்திக்கொண்டிருக்கிறேன். இ ந்த‌ ப‌ணியில் நோய்வாய்ப்ப‌ட்டு, ர‌த்த‌சாட்சியாக‌ ம‌ரித்த‌வ‌ர்க‌ளும் அனேக‌ர். வ‌ ந்த‌ இட‌த்தில் இருன்து கொண்டு சொன்த‌ பூமிக்கு திரும்பாம‌ல் அதே இட‌த்தை த‌ங்க‌ள் க‌ல்ல‌றை பூமியாக்கிக்கொண்ட‌ ப‌ணி இன்த‌ மிஷ‌ன‌ரிப்ப‌ணி. இதைப்ப‌ற்றி யெல்லாம் கொச்சைப்ப‌டுத்தி எரிச்ச‌லை கிள‌ப்பாதீர்க‌ள். மிஷ‌ன‌ரி ப‌ணி ப‌ற்றி தெரிய‌ வேண்டுமானால் போய் மிஷ‌ன‌ரி ப‌ணித்த‌ள‌ங்க‌ளை பார்த்து வாருங்க‌ள் தெரியும். 

//Ephesians 4:11

 So Christ himself gave the apostles, the prophets, the evangelists, the pastors and teachers,

 But No MISSIONARIES, Why Sir!!??//

 மிஷ‌ன‌ரிக‌ள் என்ற‌ வார்த்தை பைபிளில் இல்லை என்ப‌து உண்மைதான் அது நவீன கால வார்த்தை, ஆனால் மிஷ‌ன‌ரி மேலே உள்ள‌ ஏதாவ‌து ஒரு வ‌கையில் அட‌ங்கிவிடுகிறான். எத்த‌னையோ மிஷ‌ன‌ரக‌ள் போத‌க‌ராக‌வும், ந‌ற்செய்தியாள‌ராக‌வும், தீர்க்கதரிசிகளாகவும் இருன்திருக்கிறார்க‌ள். தேவ‌னின் சுவிஷேஷ‌ ப‌ணியை த‌ன‌து இத‌ய‌த்தின் தாக‌மாக்கி அ ந்த‌ குறிக்கோளுட‌ன் ந‌ற்செய்தி அறிவிக்க‌ப்ப‌டாம‌ல் உள்ள‌ இட‌ங்க‌ளில் அதை அறிவிப்ப‌வ‌னே மிஷ‌ன‌ரி. 



-- Edited by joseph on Monday 9th of May 2011 02:13:17 PM



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

சுவிஷேஷம் அறிவிப்பது தேவையில்லை என்பது கிறிஸ்துவை தொழ மறுக்கும் வேத புரட்டட்களின் ஒரு முக்கியமான கருத்தாக இருந்து வருகிறது. அவர்களை பொறுத்தவரை பிசாசின் எண்ணத்தை சரியாகவே செயல்படுத்தி வருகின்றனர்.பிசாசுக்குத்தான் சுவிஷேஷம் அறிவித்தல் என்பதே பிடிக்காதே,நற்செய்திக்கு எதிரியாகத் தானே இருந்து வந்துள்ளான்..?

இவர்களின் கருத்து என்னவென்றால், மத்தேயு கடைசி அதிகாரத்தில் இயேசு கொடுக்கும் கட்டளை அவரது சீஷர்களுக்கு மட்டும் தானாம். மற்றவர்களுக்கு இல்லையாம். சகல ஜாதிகளையும் சீஷராக்க அந்த ஒரு சிறு கூட்டத்தால் முடிந்திருக்குமா?

ஒன்று இரண்டாகி இரண்டு நான்காகி நான்கு எட்டாகி... இப்படி ஒருவர் மற்றவருக்கு அறிவித்ததாலே சுவிஷேஷம் அனைத்து ஜாதிகளுக்கும் பரவியது. ஏதோ ஒரு கட்டத்தில் இயேசுவின் நேரடி சீடர்கள் அல்லாதோர் கூட இந்த நற்செய்தியை அறிவித்திருப்பர். இந்த அடிப்படை கூட புரியாமல் மிஷனரி ஊழியத்தை இகழ்ந்துகொண்டிருக்கின்றனர். என்னத்தை சொல்ல.

இவர்கள் கூற்றுப்படி இயேசுவின் நேரடி சீடன் அல்லாதோன் சுவிஷேஷம் அறிவித்தால் அவன் ஒரு ஃபிராடு. அப்படி பார்த்தால் முதல் ஃபிராடு பவுல் அப்போஸ்தலன் தான் (ஆண்டவர் என்னை மன்னிப்பாராக) ஏனெனில் அவர் இயேசுவின் நேரடி சீடர் இல்லையே. பின்னர் ரட்சிக்கப்பட்டவர் தானே. ஊர் ஊராக தேசம் தேசமாக 3 நெடும் பயணம் மேற்கொண்டு இந்த பிராடுத்தனத்தை முதலில் செய்தவர் பவுல் தான்

அடுத்து இவர்கள் சொல்வது முழு நேர ஊழியம் என்பது தேவையில்லையாம். அவரவர் ஒரு வேலையை செய்துகொண்டே ஊழியம் செய்ய வேண்டுமாம். அப்படியானால் இயேசு உன் வலைகளை விட்டுவிட்டு என்னை பின்பற்றி வா என சொல்லக்காரணம்..?

ஒரு சிலருக்கு தங்களது பணியுடனே ஊழியம் செய்யும் அழைப்பு இருந்து வேறு சிலருக்கு தங்களது பணியை விட்டுவிட்டு ஊழியம் செய்ய அழைப்பு இருந்தது.

மிஷனரி ஊழியத்தை பற்றி இவர்களுக்கு என்ன தெரியும், ஜிம் எலியட் பற்றி இவர்கள் அறிவார்களா, இல்லை ஹட்சன் டெய்லர் பற்றி தெரியுமா, இல்லை தென் தமிழகத்துக்கு சுவிஷேஷத்தை ஏந்தி வந்த ஐரோப்பிய மிஷனரிகளின் வரலாறு தெரியுமா. பர்தலோமியு சீகன்பால்கு இல்லை என்றால் வேதம் இவர்கள் கையில் இப்படி படாத பாடுபட்டுக் கொண்டிருக்குமா?

மிஷனரி ஊழியத்தை குறை கூறுபவன் கிறிஸ்தவனே இல்லை. உங்களுக்கு என்ன தெரியும் மிஷனரிகளை பற்றி..? நவீன கால மிஷனரி ஊழியங்களை பற்றி தெரிய வேண்டுமானால் ஜெம்ஸ் ஊழியத்தை பற்றி விசாரித்துப்பார் தெரியும். அவர்கள் பீகாரில் கொண்டு வந்திருக்கும் சமூக மாற்றத்தை பார்.

சும்மா கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்துகொண்டு, அடுத்தவனை நாயே பேயே என எழுதிக்கொண்டிருப்பவர்களுக்கு என்ன தெரியும் மிஷனரி ஊழியத்தை பற்றி..?

மிஷனரி ஊழியம் தேவசித்தம் இல்லையாம்... அட அறிவுகெட்ட கூட்டமே., இன்றைக்கு சுவிஷேஷம் மூலை முடுக்கு எல்லாம் பரவுவதற்கு மிஷனரி ஊழியமும் நற்செய்தி பணியும் தானே காரணம். இல்லையென்றால் மிஷனரி ஊழியமானது யூதேயாவிலேயே தங்கியிருக்குமே.

எங்கோ போய் ஊழியம் செய்வதை விட பக்கத்து வீட்டில் இருப்பவனையும் அடுத்த தெருவில் இருப்பவனையும் சந்திக்க வேண்டுமாம். ஆமாம் ஒத்துக்கொள்கிறேன், ஆனால் அவர்களையும் சந்திக்க தேவன் தனது பிரதி நிதிகளை வைத்து தான் இருக்கிறார். அறிவிக்காவிட்டால் எப்படி கேள்விப்படுவார்கள். யாரை நான் அனுப்புவேன் என பழைய ஏற்பாட்டு காலத்திலேயே தேவன் மிஷனரிகளை தேடினார். 



__________________
ebi


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

 

சுவிசேஷம் குறித்த யெகோவா சாட்சிகளின் கருத்து மிகவும் தவறானது.

கோ.பெ//கிறிஸ்துவின் நாமத்தை கூப்பிடுகிறவர்களுக்கு இரட்சிப்பு என்று தான் வசனமே தவிர//

கோ.பெ//கிறிஸ்துவின் இரத்தத்தினால் அனைவருக்கும் மீட்பு என்பது வேதம் தருகிற நற்செய்தி!! கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வோருக்கு மாத்திரமே மீட்பு என்பது மிஷனரிகள், ஊழியர்கள் தருகிற நற்செய்தி!//

கோ.பெ//எல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள் என்றும் அதற்காகவே கிறிஸ்து இந்த உலகில் வந்தார் என்று சொல்லுவது நற்செய்தியாகுமா, அல்லது கிறிஸ்து இரத்தம் சிந்தியிருக்கலாம், ஆனால் அதை ஏற்றுக்கொள்வோருக்கு மாத்திரமே இரட்சிப்பு என்று நீங்கள் சொல்லுவது நற்செய்தியாகுமா!! //

#கிறிஸ்துவின் நாமத்தை கூப்பிடுகிறவர்களுக்கு இரட்சிப்பு.

#கிறிஸ்துவை ஏற்றுக்கொள்பவர்களுக்கு மாத்திரம் மீட்பு என்பது சரியல்ல.

இந்த இரண்டு பாய்ண்டும் முரணாக உள்ளதே.

 

*ஏன் வேதாகமத்தில் தேவனுக்கு கீழ்ப்படிதல் பற்றி சொல்லியுள்ளது? அதனால் என்ன பயன்?

இந்த கேள்விக்கு பதில் இல்லை. 

//எபி:உங்களுக்கு தெரிந்த இந்த உண்மை பாவம் பவுல், பேதுரு போன்றவர்களுக்கு தெரியவில்லை போலும். இல்லையென்றால் இரத்தசாட்சியாய் மரித்திருக்க மாட்டார்களே

கோ.பெ:பவுல் பேதுரு போன்றோர் இரத்தசாட்சிகளாக மரிக்க தேவனால் நியமிக்கப்பட்டிருந்தார்கள்!! அவர்கள் கிறிஸ்துவின் நிமித்தமாக படும் பாடுகள் முன்னமே அறிவிக்கப்பட்டிருந்தது!! அவர்கள் சொன்னதை தான் நான் சொல்லி வருகிறேன் என்பதற்காகவே உங்களுக்கு 1 தீமோத்தேயு 2:7ஐ கொடுத்திருக்கிறேன்!! பவுல் அறிவிக்காததை இன்று ஊழியர்கள் அறிவிக்கிறார்கள்:..............//

அவரை ஏற்றுக்கொண்டோர்,கொள்ளாதோர் அனைவருக்கும் இரட்சிப்பு என்று ஆனதற்கு பின் ஏன் இவர்கள் கிறிஸ்துவினிமித்தம் பாடுபட வேண்டும்? கொடூரமாக சாக ஏன் நியமிக்கப்பட வேண்டும்? இவர்கள் பாடுகள் மரணங்கள் அர்த்த்மற்றவைகளாகிவிடுகின்றனவே. 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

உலகத்துக்கு சுவிசேஷம் என்பது வேத மாணவர் குழுவினரின் கொள்கையில் கிடையாது;அவர்களுக்கு அவர்களுடைய தலைவர்கள் பணித்திருக்கும் பணியானது பாபிலோனிய வேசி மார்க்கத்தார் என்று அவர்களால் குறிப்பிடப்படும் கிறித்தவர்களை மீட்பதுதான்;இது தெரியாமல் அவர்களுடன் ரொம்ப பொறுப்புடன் ஜோசப் அவர்கள் வாதிடுவதாகவே தோன்றுகிறது;அவர்களும் மேம்போக்காக எதையோ சொல்லி சமாளித்து வைப்பார்கள்.

ஆனாலும் கைப்பிரதி ஊழியத்தையோ தெருப்பிரசங்கத்தையோ இயேசுவின் மூலமே வரும் இரட்சிப்பை சுவிசேஷமாக அறிவிக்கும் பணியையோ அவர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள்; அப்படியிருந்திருந்தால் அவர்கள் இதுபோன்ற ஊழியத்தில் ஈடுபட்டிருக்கும் நல்ல சகோதரர்களுடன் இணைந்து தங்கள் பணியை நிறைவேற்றியிருக்கலாமே;எல்லோருமே மோசம் என்றால் உலகம் அதைவிட மோசமாக இருக்கிறதே,அங்கு சம்பாதிக்கும் பணம் தீட்டாக எண்ணப்படவில்லை,ஆனால் இங்கே இருக்கும் சகோதரர்களுடன் இணைந்து செயல்படுவது தீட்டாக இருக்கிறதோ? காரணம் இவர்களுடைய நோக்கம் சிலுவையிறையப்பட்ட இயேசுவை பிரசங்கிப்பது அல்ல.

ரெயிலில் கண்பார்வையற்ற ஒரு சகோதரர், "எல்லாம் இயேசுவே,எனக்கு எல்லாம் இயேசுவே.." என்று பாடி பிச்சையெடுக்கிறார்; அவருக்கு மதசார்பில்லாமல் அனைவரும் பிச்சைபோடுகிறார்கள்;ஆனால் இயேசுவைக் குறித்த மூல உபதேசங்களுக்கு எதிரான கொள்கையையுடைய இவர்களோ அந்த விழிப்புலன் இழந்த மாற்று திறனாளிக்கு ஒரு காசும் பிச்சை போடமாட்டார்கள் என்கிறேன்;அப்படியே போட்டாலும் அது அவருடைய பரிதாப நிலைக்காகத் தானே தவிர அந்த பாடலுக்காக அல்ல‌.

ஏனெனில் எல்லாம் இயேசுவே என்ற பாடல் இரஸலின் யெகோவா தேவனுக்கு விரோதமானது; வனாந்தரத்தில் தம்முடைய தாசனாகிய மோசேக்குத் தம்மை வெளிப்படுத்தின அந்த  சர்வ வல்லவரின் தீர்மானத்தைவிட ஏரியன், இரஸல் போன்றவர்களின் தீர்மானத்தையே பெரிதும் மதிக்கிறார்கள்.

http://en.wikipedia.org/wiki/Arianism

ஆனால் சாமான்ய மனிதனுக்கு கோவாவை தெரிந்த அளவுக்கு யெகோவாவைத் தெரியாது;ஏனெனில் இயேசு எனும் நாமமே ஆதி அப்போஸ்தலர்கள் மூலம் இரட்சிப்படுவதற்கான ஒரே நாமமாக ஆதிமுதலாகப் பிரசங்கிக்கப்பட்டது,பிரசங்கிக்கப்படுகிறது.

யெகோவா இரட்சிக்கிறார் என்று வேதத்தில் எங்கும் இல்லை;ஆனால் இயேசுவின் நாமத்தினால் பாவ மன்னிப்பாகிய மீட்பு முதலாக அனைத்து தெய்வீக சுதந்தரங்களும் வாக்களிக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு நீதிபதியும் முன்னாள் வழக்கறிஞர் தானே;அதுபோலவே இயேசு தற்காலத்தில் நம்முடைய வழக்கறிஞராக இருக்கிறார்;பிதாவாகிய தேவனோ நீதியுள்ள நியாயாதிபதியாக சிங்காசனத்தில் வீற்றிருக்கிறார்;அவருடைய திருக்குமரனான இயேசுவானவரோ பிதாவின் ஆதீனத்திலிருந்து வெளிப்படப்போகும் யுகத்தில் வழக்கறிஞர் ஸ்தானத்திலிருந்து நீதிபதியாக உயர்த்தப்படுவார்;அப்போது தேவத்துவத்தின் அனைத்து தன்மைகளும் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும்;அதுவரை இந்த குழப்பங்கள் தொடரும்,தொடரட்டும்;சுவிசேஷம் பேதைகளுக்கேயல்லாமல் ஞானிகளுக்கு அல்ல‌.

சுவிசேஷத்தைக் குறித்த வேற்றுமையான கொள்கைகளைக் கொண்டவர்களிடம் அதுகுறித்து விளங்கவைப்பது வேண்டாத வேலையாகவே தோன்றுகிறது;உதாரணமாக ஒருவன் எதற்கு அஞ்சுகிறானோ அதன் மீதான பயம் தெளிந்தபிறகு அவன் அதற்கு அஞ்சப்போவதில்லை;ஒருவன் எதற்காக ஏங்கினானோ அதனை அடைந்தபிறகு அவன் அதற்காக ஏங்கப்போவதில்லை;அதுபோலவே ஒருகாலத்தில் மென்மையான உணர்வுடன் நன்றாக ஓடியவர்கள் தடுமாறியபிறகு அவர்கள் மீண்டும் சரியான பாதையை நோக்கி வருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை;ஆனாலும் தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை என்பதையும் விசுவாசிக்கிறேன்.

(மேசியாவின்) எதிரிகள் ஒருவேளை சுவிசேஷம் அறிவிக்கும் பணியே வேண்டாத வேலை என்பார்களானால் அதனை நேர்மையுடன் சொல்லட்டும்;தேவைப்பட்டால் செலவில்லாமல் நேர்மையுடன் சுவிசேஷம்  அறிவிக்கும் முறைகளை நான் சொல்லித் தருகிறேன்.

உதாரணமாக அண்மையில் இதே கோவை பட்டணத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் சென்னைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஒரு மிஷினரி ஸ்தாபனத்தார் இல்லந்தோறும் நற்செய்தி பணி இயக்கத்தை உள்ளூர் சபையினரின் ஒத்துழைப்புடன் நடத்தி முடித்தார்கள்;அது சம்பந்தமான ரிப்போர்ட் வேண்டுமானால் சமர்ப்பிக்கிறேன்;அதனைத் தொடர்ந்து சென்னை சிந்தாதரிப்பேட்டையில் பெரிய வெள்ளியைத் தொடர்ந்த மூன்று நாட்கள் இல்லந்தோறும் நற்செய்தி பணி திட்டம் போடப்பட்டுள்ளது;இதில் விசேஷித்த அம்சம் என்னவெனில் வழக்கம் போல வீடாக ஏதோ ஒரு கைப்பிரதியைக் கொடுத்துக்கொண்டே செல்லுவதல்ல,அந்த இயக்கத்தின் மையப் பொருளே,நண்பர்களாக்கி நற்செய்தி அறிவித்தல் என்பதாகும்;அதன்படி ஒவ்வொரு வீட்டுக்கும்  இரண்டிரண்டு பேராகச் சென்று அவர்களுடன் நட்புபாராட்டி தாங்கள் வந்த நோக்கத்தைச் சொல்லி அதனைத் தொடர்ந்து நிதானமாக அவர்களுடைய குடும்பத்தைக் குறித்து விசாரித்து இறுதியில் ஆண்டவருடைய அன்பைச் சொல்லி அவர்களுக்குடைய குறிப்பான பிரச்சினைகளுக்காக பிரார்த்திப்பதாகச் சொல்லி நட்புடன் விடைபெறுவது;இறுதியில் அவர்களுக்கு  சுவிசேஷத்தின் ஒரு பிரதியைக் கொடுத்து ஒரு அட்டையில் அவர்களுடைய விவரங்களைப் பதிந்துகொண்டு அவர்களுடன் தொடர்ந்து பின் தொடர்பணி செய்வது அடுத்த கட்ட திட்டமாகும்.

இந்த முறைமைதனை ஏற்கனவே இரஸலின் யெகோவா சாட்சி கூட்டத்தார் பின்பற்றி வருகின்றனர்;ஆனால் வித்தியாசம் என்னவென்றால் அவர்கள் கிறித்தவர்கள் வீடுகளாகப் பார்த்து உள்ளே நுழைந்து அவர்களுடைய அடித்தளத்தைத் தகர்ப்பது போல இயேசு தொழத்தக்க தெய்வமல்ல என்றும் அவர் வெறும் மத்தியஸ்தர் மட்டுமே என்றும் இரசலின் யெகோவா தேவனையே தொழவேண்டும் என்றும் சொல்லி வஞ்சிப்பார்கள்.

ஏழை எளிய மக்களில் பலருக்கும் இயேசு என்ற நாமத்தை தெரிந்த அளவுக்கு யெகோவா எனும் நாமத்தைத் தெரியாது;பிரச்சினை அதுவல்லவே;இது போன்ற‌ அஸ்பாரத்தை மீண்டும் மீண்டும் போடவேண்டாம் என்றுதான் வேதம் சொல்லுகிறதே?

"ஆகையால், கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்களை நாம் விட்டு, செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல், தேவன்பேரில் வைக்கும் விசுவாசம்,

ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம், கைகளை வைக்குதல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்பவைகளாகிய அஸ்திபாரத்தை மறுபடியும் போடாமல், பூரணராகும்படி கடந்து போவோமாக." (எபிரெயர்.6:1,2)
 
சுவிசேஷம் அறிவிப்பதின் அவசியம் குறித்தும் சுவிசேஷம் என்பது எது என்பதைக் குறித்தும் இன்னும் விவரமாக ஆராய்ந்து தத்தமது கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள நண்பர்களை வேண்டுகிறேன்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

" இயேசுவை தொழமறுக்கும் புரட்டர்களுக்கு பதில் தெரியாத கேள்விகள் " எனும் திரியில் பேத மாணவர்களுடன் சுவிசேஷம் அறிவிப்பது குறித்தும் மிஷினரி பணிகள் குறித்தும் நண்பர் ஜோசப் அவர்கள் வாதிட்டு வருகிறார்; அது குறிப்பிடத்தகுந்த நிலையை எட்டியுள்ளதாலும் அந்த திரியில் ஜாண் அவர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டு (மேசியாவின்) எதிரிகளைத் திணறடித்து வருவதாலும் வாதத்தின் தன்மையைக் கூர்மைப்படுத்தும் பொருட்டு சுவிசேஷம் மற்றும் மிஷினரி பணிகள் சம்பந்தமான கருத்துக்களைத் தனியே பிரித்து தனி திரியாகப் பதிக்கப்படுகிறது;

நண்பர் ஜோசப் அவர்கள் இங்கே தன்னுடைய வாதங்களைத் தொடர அன்புடன் வேண்டுகிறேன்.

Kovai:

///கிறிஸ்துவின் நாமத்தை கூப்பிடுகிறவர்களுக்கு இரட்சிப்பு என்று தான் வசனமே தவிர, கிறிஸ்துவின் நாமத்தை தொழுதுகொள்வோருக்கு இரட்சிப்பு என்று நீங்கள் சொல்ல்லுவதால், அல்லது நம்பிக்கை வைப்பதால் அப்படி ஆகாது!! ஒரு காலத்தில் நிலவில் பாட்டி வடை சுட்டுக்கிட்டு இருந்தாங்க என்று தான் நம்பியிருந்தோம், இன்று அதே நிலவுக்கு மனிதன் வடை (சாரி சமோசா) எடுத்துக்கொண்டு போயிருக்கிறான்!! நம் நம்பிக்கை என்பது உண்மை அறியப்படும் வரை தான்!! அதன் பின் அந்த உண்மை தான் நம் நம்பிக்கையாக இருக்கவேண்டும்!!///

Joseph on Sat Apr 16 07:29:25 2011

ஆகா, என்ன அருமையான கண்டிபிடிப்பு, பின்னிட்டேள் போங்கோ. கூப்பிடுதல் வேறு, தொழுதுகொள்ளுதல் வேறு..?! தொழுதுகொள்ளும் எண்ணத்தில் இருப்பவன் தான் கூப்பிடுவான், தொழுதுகொள்ள எண்ணாதவன் எப்படி கூப்பிடுவான். கூப்பிட்டால் வருவார் என்பது உண்மை தான், அதற்காக அவரை 108 ஆம்புலன்ஸ் ரேஞ்ச்சுக்கு மாத்திரம் கற்பனை செய்ய வேண்டாம். பல ஆங்கில வேதாகமங்களை காட்டியிருக்கீங்க. அதே வேதாகமத்தில்...

New American Standard Bible (©1995)

'Call to Me and I will answer you, and I will tell you great and mighty things, which you do not know.'

King James Bible

Call unto me, and I will answer thee, and shew thee great and mighty things, which thou knowest not.

American King James Version

Call to me, and I will answer you, and show you great and mighty things, which you know not.

American Standard Version

Call unto me, and I will answer thee, and will show thee great things, and difficult, which thou knowest not.

Douay-Rheims Bible

Cry to me and I will hear thee: and I will shew thee great things, and sure things which thou knowest not.

Darby Bible Translation

Call unto me, and I will answer thee, and I will shew thee great and hidden things, which thou knowest not.

English Revised Version

Call unto me, and I will answer thee, and will shew thee great things, and difficult, which thou knowest not.

Webster's Bible Translation

Call to me, and I will answer thee, and show thee great and mighty things, which thou knowest not.

World English Bible

Call to me, and I will answer you, and will show you great things, and difficult, which you don't know.

Young's Literal Translation

Call unto Me, and I do answer thee, yea, I declare to thee great and fenced things -- thou hast not known them.

-என இருக்கிறதை கவனிச்சியளா. அதுவும் யேகோவா தேவனே கூப்பிட்டால் பதில் அளிப்பார், அதுவும் இஸ்ரவெலின் தொழுகைக்கு பாத்திரமான தேவன். எப்படி இந்த வசனத்தை வெறும் கூப்பிடுதல் என்று மாத்திரம் வைத்துக்கொள்ளலாமா..?

 

Kovai:

//ஆங்கிலேயர்கள் இந்த பெரிதான தேசத்தை சுமார் 350 வருடங்கள் ஆண்டார்கள், அப்போ ஜனத்தொகையும் மிகவும் குறைவு தான், மிஷனரிகள் அந்த நேரத்தில் தான் மிகவும் அதிகமாக இந்த தேசத்தில் இருந்தார்கள், நிறைய கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள், சேவை மைய்யங்கள் என்று கிறிஸ்துவின் அன்பை நிச்சயமாக அறிவித்தார்கள், அதிகாரத்தில் இருந்தார்கள், இருந்தாலும் இந்த நாடு ஏன் கிறிஸ்தவ நாடாக மாறவில்லை!? தேவனுக்கு சித்தம் இல்லை என்று தான் சொல்ல முடியும்!! நாம் நம் ஊழியம் மூலம், தேவனுக்கு உதவிசெய்கிறோம் கட்டளையிடுகிறோம் என்றெல்லாம் நினைத்து ஏதேதோ செய்து வருகிறோம், ஆனால் தேவன் அனைவரையும் இரட்சிக்க தீர்மானித்திருக்கிறார், அதுவே அவரின் சித்தமாகவும் இருக்கிறாது என்று மேலே வசனத்தில் காண்பித்தேன், என்றால் தேவனின் சித்தம் நிறைவேறும் என்று நான் விசுவசித்து, அதையே அறிவிக்கிறேன்!! இதில் எந்த தவறும் இருப்பதாக நான் நினைக்கவில்லை!!

இன்று ஊழியங்கள், நற்செய்தி பெருவிழாக்கள், அற்புத கூட்டங்கள் இப்படி நடக்கும் எந்த ஒரு கூட்டத்திற்கும் செல்பவர்களில் 99% ஏற்கனவே சபைகளில் இருப்போர் தான்!! மீதம் உள்ள 1%த்தில் எத்துனை பேர் இந்த நற்செய்தியை கேட்டு, சத்தியத்தை அறிந்து, ஞானஸ்நானம் எடுத்து, ................ என்று இருப்பார்கள்!! யாருக்கு லாபம் இருக்கிறதோ, இல்லையே, கூட்டத்தை நடத்துவோருக்கு காணிக்கையும், கூட்டத்தில் பேசியவருக்கு சூட்கேஸும் நிறம்பும்!! இதற்கு தானே இத்துனை ஆர்ப்பாட்டம்!! இதை நீங்கள் தவறாக எடுத்துக்கொண்டாலும், உண்மை இதுவே!! யாரோ கஷ்ட்டப்பட்டு உழைத்து கொடுக்கும் பணத்தில் யாரோ குடும்பத்துடன் காரில் சுற்றுகிறார்கள், விடுமுறை என்று அமேரிக்கா, ஆஸ்த்ரேலியா சென்று வருகிறார்கள், வியர்வை சிந்தி அனுப்பும் பணத்தில் ஏசியில் குடும்பத்துடன் பதுங்கும் சோஃபாவில் அமர்ந்து வசனம் பேசுகிறோம் என்று சொல்லுகிறார்கள்!! இது தான் நற்செய்தியா!! //


Joseph on Sat Apr 16 07:29:25 2011

ஊழியங்களை பற்றி புரிந்துகொள்ளாமல் எதையாவது எழுதாதீர்கள். ஆங்கிலேய ஆட்சியின் காலத்தில் மிஷனரிகள் வந்தார்கள். ஆனால் இந்தியாவில் இருந்த ஆங்க்கிலேய ஆட்சியின் பிரதி நிதிகள் எந்த அளவுக்கு மிஷனரிகளுக்கு பாதகமாக இருந்தார்கள் என்பது மிஷனரி வரலாறு தெரிந்தவர்களுக்கு தான் புரியும். மக்கள் தெளிவடைந்து முன்னேறுவது ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு பிடித்தம் இல்லாமல் தான் இருந்தது.

மருத்துவமனைகள், கல்விக்கூடங்கள் அமைத்தது அந்த காலத்தில் இந்திய தேசத்தின் தேவையாக இருந்தது, ஆனால் அதன் மூலமாக மாத்திரம் சுவிஷேஷம் அறிவிக்கப்படவில்லை. நீங்கள் நாசரேத் மற்றும் தென் தமிழகத்தின் பகுதிகளில் உள்ள வயதானவர்களிடம் கேளுங்கள், அவர்கள் சொல்வார்கள் மிஷனரிகள் எப்படி ஊழியம் செய்தனர் என்பதை. மக்களின் பிரச்சனைகள் தேவைகள் போன்றவற்றை நேரடியாக சந்தித்தனர். இப்போதும் ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்து அமைப்புகள் கிறிஸ்தவ மிஷனரிகளை பின்பற்றி கல்விக்கூடங்கள், ஆஸ்பத்திரிகள் என வைத்திருக்கிறார்கள் ஆனால் அவை கிறிஸ்தவ மிஷன் போன்று செயல்படவில்லை, பெயர் பெறவும் இல்லை. மிஷனரிகளிடம் கிறிஸ்தவ அன்பு இருந்தது. அதன் மூலமாகவே பல ஆத்துமாக்களை சுதந்தரித்தனர்.

மிஷனரி ஊழியம் தேவ சித்தம் இல்லையா, இதைபோன்ற ஒரு அறிக்கையை என் வாழ் நாளில் கேட்டதேயில்லை. நீங்கள் புறப்பட்டு போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்னானம் கொடுங்கள் என இயேசு இறுதி கட்டளை கொடுத்தாரே, இது மிஷனரி ஊழியத்துக்கான அறை கூவல் இல்லையா? ஒருவேளை பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என சொல்வதால் உங்களுக்கு இந்த வசனம் பிடிக்கலையோ என்னவோ.

அன்றைக்கு மிஷனரிகள் ஊழியம் செய்தது தான் இன்றைக்கு இந்தியாவில் கிறிஸ்தவம் வளர்ந்துவருகிறது. நீங்கள் வெறும் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கையை மாத்திரம் வைத்து இந்தியாவில் கிறிஸ்தவர்கள் எங்கே வளர்ந்திருக்கிறார்கள் என்கிறீர்கள், எத்தனையோ பேர் வெளிப்படையாக பல்வேறு காரணங்களுக்காக தங்களை கிறிஸ்தவர்கள் என அறிவிக்காமல் ரகசிய கிறிஸ்தவர்களாக இருக்கிறார்கள் தெரியுமா? ஏதோ ஒரு ஊழியம் மூலமாக, சபையின் மூலமாக தனி நபரின் மூலமாக சத்தியத்தை அறிந்து கொண்டு, பைபிளை மறைத்து வைத்துக்கொண்டு, வெளியே வேற வேலையாக போகிறேன் என சொல்லிக்கொண்டு ஆலயத்துக்கு செல்லும் ரகசிய கிறிஸ்தவர்கள் எத்தனை பேர்.

இயேசு தொழுதுகொள்ளப்படும் தெய்வம் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ளாதவரை உங்களுக்கு இதெல்லாம் குழப்பமாக தான் இருக்கும். கூப்பிடுகிறவன் தொழுதுகொள்ள கூப்பிடவில்லை என்பது ஏரியனின் கருத்தா, சாரி இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

சுவிஷேஷத்தை அறிவிக்குமுன் மக்களின் அடிப்படை தேவையை சந்திக்க வேண்டும், மிஷனரிகள் தென் தமிழகத்துக்கு வந்த காலத்தில் அப்பகுதி மக்களின் வாழ்க்கைத்தரம் எப்படி இருந்தது என்பதை நீங்கள் தென் தமிழக மாவட்டங்களை சார்ந்தவராக இருந்திருந்தால் அறிந்திருப்பீர்கள். அடிப்படை கல்வி, மருத்துவ வசதி போன்றவை மறுக்கப்பட்ட நிலையில் இருந்த அம்மக்களை சந்திக்க அடிப்படை வசதிகள் செய்துகொடுப்பது இன்றியமையாததாக இருந்தது, சுவிஷெஷம் அறிவிக்கப்பட இது ஒரு காரணி மாத்திரமேயன்றி இந்த கல்வி, மருத்துவ வசதிகளை மாத்திரம் மிஷனர்கள் செய்துகொண்டிருக்கவில்லை.

நீங்கள் திரித்துவத்தை ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் அதை போல திரித்துவம் இல்லை என்ற உங்கள் ஏரியனிஸ்டு கருத்துக்களை நானும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.

வைராக்கியமான பிற மத நம்பிக்கைகளை விட்டு இயேசுவை ஏற்றுக்கொண்ட ரகசிய கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்ந்து பார்த்திருக்கிறீர்களா? அதில் உள்ள கஷ்டம் தெரியுமா? ரகசிய கிறிஸ்தவர்கள் பெரும்பாலும் கடைசி வரை அப்படி வாழ்வதில்லை. கத்திரிக்காய் முற்றினால் கடைக்கு வந்தாகவேண்டும் என்ற வகையில் என்றோ ஒரு நாள் அவர்களது விசுவாசம் அவர்களது குடும்பத்திற்கு, சமுதாயத்துக்கு முன்னால் அவர்களால் அறிக்கை பண்ணப்படும். சில காரணங்க்களுக்காக தாங்கள் கொண்ட விசுவாசத்தை குறிப்பிட்ட காலம் வரைக்கும் மறைத்து வாழ வேண்டிய வாழ்க்கை அவர்களுக்கு. உங்களுக்கு எங்கே அந்த கஷ்டம் தெரியப்போகிறது.

Kovai:

//எப்படி, இயேசு கிற்ஸ்து தன் அப்போஸ்தலர்களிடம், நீங்கள் போய் சர்வ ஜாதிகளுக்கும் சுவிசேஷம் சொல்லும் முன், அவர்களுக்கு மருத்துவ வசதிகள் இருக்கிறதா, அவர்கள் பிள்ளைகள் படிக்க வசதிகள் இருக்கிறதா போன்றவற்றை பார்த்து, அது இல்லாவிட்டால் அதற்கு முதலில் மருத்துவமனைகள், கல்விக்கூடங்கள் திறந்து அதன் பின் அதன் மூலமாக தான் கிறிஸ்துவின் போதனைகளை தரச்சொன்னாரோ!! 

சர்வ ஜாதிகளுக்கும் போய் சுவிசேஷம் அறிவிக்க சொன்ன கிறிஸ்துவின் கட்டளையை ஏற்று, ஏன் உங்கள் ஆடம்பர ஊழியர்கள் ஆஃப்ரிக்கா கண்டத்திற்கு போக பயப்படுகிறார்கள்!! நீங்கள் சொன்ன தென் தமிழகத்திலிருந்து மாத்திரமே ஊழியர்கள் என்று சொல்லும் ஒரு கூட்டம் இந்தியா முழுவதும் பரவியிருக்கிறார்கள்!! அப்படி இந்திய முழுவதும் இன்று மிஷனரிகள், ஊழியர்கள் என்று இருந்தாலும் இந்தியாவின் கிறிஸ்தவ ஜனத்தொகையை சொல்ல முடியுமா!! இத்துனை ஊழியர்கள் மிஷனரிகள் இருந்தாலும் ஒரே விசுவசத்தில் இருக்கிறார்களா?? இத்துனை ஊழியர்களும் மிஷனரிகள் இருந்தாலும் இந்தியா கிறிஸ்தவ நாடாக இல்லையே, அப்படி என்றால் இது தானே தேவனின் சித்தம்!! மனுஷ குமாரன் வரும் போது விசுவாசத்தை கான்பாரோ என்கிற வசனத்திற்கு அர்த்தம் தெரியுமா!??

முதலாவது ஊழியர்களையும் மிஷனரிகளையும் மக்களுக்கு முன்பாக சாட்சியாக வாழ சொல்லுங்கள், கிறிஸ்தவம் தானாகவே வளரும்!! இவர்களை ஒருவரும் பாடு பட சொல்லவில்லை!! இவர்கள் வேலை செய்துக்கொண்டே ஊழியம் செய்தால் அடுத்தவர்களுக்கு முன்மாதிரியாக இருப்பார்கள்!! டீவி ஊழியம், பத்திரிக்கை ஊழியம், தீர்க்கதரிசின ஊழியம், என்று ஒவ்வொரு பெயராக வைத்துக்கொண்டு அதற்கு பணம் கேட்பதை நிறுத்தினாலே கிறிஸ்தவம் தானாகவே வளரும்!! முதலில் ஒவ்வொரு ஊழியனும், தன் தெருவில் இருப்பவர்களை பரலோகம் கூட்டி போக முடியுமா என்று பார்க்கட்டும், பிறகு நாட்டையோ, உலகத்தையோ பார்க்கலாம்!! தென் தமிழகத்தில் நடக்கும் ஒரு விஷயம் மாத்திரமே கிறிஸ்தவமாகாது!! கீழே இருக்கும் இத்துனை சபைகள் (பதிவு செய்யப்பட்டவைகள் மாத்திரமே) இருந்தும் கிறிஸ்தவ சதவிகிதம் 2.3% மாத்திரமே என்பது உங்களுக்கு தெரியுமா!! நீங்கள் சொல்லும் இரகசிய கிறிஸ்தவர்களை சேர்த்தால் 3% வரும்!! இவர்களை வேதத்தின்படி கிறிஸ்தவர்கள் என்று சொல்லக்கூடாது!! அப்படி என்றால் 350 வருடங்களாக மிஷனரிகளினாலும், நம் ஆடம்பர ஊழியர்களின் கூட்டு முயற்சினாலும் 3% தான் கிறிஸ்தவர்கள் இருந்துக்கொண்டு இருப்பதே, இப்படி பட்ட ஊழியமோ மிஷனரிகளோ தேவனின் சித்தம் தானா என்று யோசித்து பாருங்கள்!! ஒரே பிரசங்கத்தில் 3000 பேர், 5000 பேர், அனுதினமும் சபைக்குள் வந்துக்கொண்டு இருந்த அப்போஸ்தலர்களின் ஊழியம் எங்கே, இன்று நீங்கள் பேசும் ஊழியமும் ஊழியர்களும் எங்கே!!??//

Joseph on Sat Apr 16 07:29:25 2011

உனக்கு நன்மை செய்ய திராணி இருக்கும் போது அதை செய்யாமல் இராதே என்கிறது வேதம். இன்றைக்கும் மிஷனரிகள் ஆரம்பித்து வைத்த பள்ளிகள், கல்லூரிகள் வைத்திய சாலைகள் பலரது வாழ்க்கைக்கு கலங்கரை விளக்கமாக இருந்திருக்கின்றன. இந்த சிறியரில் ஒருவனுக்கு எதை செய்தீர்களோ அதை எனக்கே செய்தீர்கள் என்றார் இயேசு. நல்ல சமாரியன் கூட அடிபட்டு கிடந்தவனை காயம் கட்டி அவனது சிகிச்சைக்கு ஏற்பாடு தான் முதலில் செய்தான். ஒரு இடத்தில் நற்செய்தி அறிவிக்குமுன் அதற்கான பாதையை செவ்வைபண்ண வேண்டும். 

ஆனானப்பட்ட பவுலே, பொறாமையினாலாவது, என்னத்தினாலாவது சுவிஷேஷம் அறிவிக்கப்பட்டால் சரி என்கிறார். பொறாமையினால் அறிவிக்கப்படும் சுவிஷேஷத்தையே பவுல் சகித்துக்கொள்கிறார், ஏற்றுக்கொள்கிறார், நீங்கள் நல்ல நோக்கத்தினால் செய்யப்படும் மிஷனரி பணியையே குறை சொல்கிறீர்கள். எண்ணிக்கையை மாத்திரம் வைத்து கிறிஸ்தவ சபை எங்கே வளர்ந்திருக்கிறது என்கிறீர்கள், அன்றைக்கு பெருவெள்ளம் வந்த போது நோவாவின் குடும்பத்தினர் மாத்திரம் தானே தப்பித்தனர், சோதோம் பட்டணத்தில் 10 நீதிமாங்களாவது தேறுவார்களா என்றுதானே ஆண்டவர் பார்த்தார். எண்ணிக்கையை விட மனமாற்றத்தின் தன்மையை தானே தேவன் பார்க்கிறார். மனந்திரும்புகின்ற ஒரு பாவியின் நிமித்தம் பரலோகமே சந்தோஷப்படும் என்கிற வசனம் உங்களுக்கு தெரியவில்லையா, இன்றைக்கு இந்திய நாட்டிற்கு வெள்ளை மிஷனரிகள் வந்திராவிட்டால் நீங்கள் ரட்சிப்பை குறித்து அறிந்திருப்பீர்களா? இல்லை இப்படி விவாதம் செய்யவாவது நமக்கு சந்தர்ப்பம் இருந்திருக்குமா, தயவு செய்து மிஷனரிப்பணியை மட்டுப்படுத்தி பேசாதீர்கள். உங்காளுக்கு வேண்டுமானால் மிஷனரிப்பணியில் ஆர்வம் இல்லாமல் இருக்கலாம், அதற்கான ஈடேற்றத்தில் இருப்பவர்களை சந்தேகத்திற்குள்ளாக்காதீர்கள்.

நான் பேசிக்கொண்டிருப்பது நற்செய்தி அறிவிக்கும் மிஷனரிப்பணியை, ஆடம்பர ஊழியர்களை பற்றி அல்ல, அவர்களது ஆடம்பர வாழ்க்கையை நான் ஆதரிப்பவன் அல்ல. ஊழியத்தில் ஆடம்பரம் தேவையில்லை என்ற கருத்துடையவன் தான் நானும். இந்த ஒரு விஷயத்தில் உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு.

இந்தியா கிறிஸ்தவ நாடாக இல்லை என அங்கலாய்க்கிறீர்கள், உலகத்தின் எத்தனையோ கிறிஸ்தவ நாடுகளின் ஜனத்தொகையை விட இந்திய கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என அறிவீர்களா. நற்செய்தி பணியினால் ரட்சிப்படைந்தோர் உங்கள் கோவை பெரெயன்ஸ் அலுவலகத்திற்கு வந்து தங்கள் பெயரை பதிவு செய்தால் தான் சுவிஷேஷப்பணியின் நம்பகத்தன்மையை அங்கீகரிப்பீர்களோ? தேவன் விரும்புவது மனமாற்றமேயன்றி கெசட்டில் போய் கிறிஸ்தவர்கள் என பதிவு செய்வதை அல்ல. எனவே தான் சொல்கிறேன் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பை வைத்து கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையை எடை போடாதீர்கள் என.

ஆப்பிரிக்கா போகவேண்டியது தானே என்கிறீர்கள், நாம் கேள்விப்பட்டதை அறியாத எத்தனையோ இனங்கள் ஜாதிகள் இந்தியாவில் இருக்கின்றனவே. இந்தியாவில் ஊழியம் செய்வது எளிது என தப்புக்கணக்கு போடாதீர்கள், அதுவும் சுவிஷேஷப்பணிக்கு எதிரான மன நிலையில் இருக்கும் இடங்களில் மிஷனரிகள் எப்படி உயிரை பணயம் வைத்து ஊழியம் செய்கிறார்கள் தெரியுமா?

மிஷனரி ஊழியம் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் ஜெம்ஸ் ஊழியத்தை எப்படி அகஸ்டின் ஜெபக்குமார் ஆரம்பித்தார் என விசாரித்து பாருங்கள். பின் தங்கிய, மிஷனரிகளின் கல்லறை தோட்டம் என்றழைக்கப்பட்ட பீகாரில் ஜெம்ஸ் ஊழியம் கொண்டுவந்துள்ள மாற்றத்தை வாசித்து பாருங்கள் தெரியும். அவரை போன்ற மிஷனரிகள் பென்ஸ் காரில் போகிறவர்கள் அல்லர், அல்லது அமெரிக்காவுக்கோ ஆஸ்திரேலியாவுக்கோ விடுமுறைக்கு செல்கிறவர்கள் அல்ல , ஒரு நாளின் ஒவ்வொரு மணித்துளியையும் எப்படி கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்கவேண்டும் என யோசிப்பவர்கள். எனவே தயவு செய்து மிஷனரி பணியை தேவசித்தம் உள்ள ஊழியம் அல்ல என மட்டுப்படுத்தவேண்டாம். உங்களால் முடிந்தால் அகஸ்டின் ஜெபக்குமார் எழுதிய "நீ இல்லாவிட்டால்" என்ற புத்தகத்தை வாசித்து பாருங்கள் தெரியும், தேவன் எப்படி அவரது சித்தத்தை நிறைவேற்ற அவரை அழைத்தார் என. நானெல்லாம் அவரை பற்றி வாசிப்பதற்கு அவர் என்ன பெரிய ஆளா என்றால் சாரி, இதற்கு மேல் ஒன்னும் சொல்வதற்கில்லை

இப்போதும் இதையெல்லாம் பெரிதாக நீங்கள் நினைப்பவர் அல்ல என்று தான் எண்ணுகிறேன், ஒருவேளை என் எண்ணம் தவறானால் மிஷனரிப்ணியை பற்றி சிறிதேனும் அறிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். உலகப்பிரகாரமான நாட்டின் ராணுவத்தைற்கே இவ்வளவு உணர்ச்சி பெருக்கிட்ட நீங்கள், திறப்பின் வாசலில் நின்று அந்தகார வ்ல்லமைகளோடும் எதிர்ப்புகளோடும் போராடும் மிஷனரிகளை பற்றியும் கரிசனையுடன் சற்று சிந்தியுங்கள். மிஷனரி பணியை பற்றி இவ்வளவு எழுத காரணம். அது முழுமையான தேவ சித்தத்தின் படி நடைபெறும் பணி என்பதை நான் முழுமையாக நம்புவதால் தான். பல மிஷனரிகளை எங்கள் உறவினர்களின் குடும்பத்தினர் களப்பணிக்கு அனுப்பியதால் எனக்கு தெரியும் அது எப்படிப்பட்ட பணி என.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard