உண்மையில் இது, சிரிப்பதற்கான விஷயமே அல்ல, சிந்திப்பதற்கான விஷயம். ஒவ்வொரு ஊழியரும், தான் தனித்து தெரிய வேண்டும் என, தன்னை முன்னிறுத்திக்கொள்ள இப்படியெல்லாம் விளக்கம் கொடுக்க ஆரம்பித்து விட்டனர். கடைசி காலத்தில், மெய்யான சுவிசேஷம் மக்களை சென்றடையாது, என்பது இதுதானோ..?
இன்று குருத்தோலை ஞாயிறு அல்லவா,அதனை முன்னிட்டு ஒவ்வொரு ஊழியர்களும் பின்னி பெடலெடுத்தனர்;அதில் என்னை மிகவும் கவர்ந்த ஒரு கருத்து ஊழியர் ஆனந்தஸ்திரா அவர்களின் மருமகன் ஜோஷுவா இன்று மாலையில் தமிழன் டிவியில் பேசியது,
மையப் பொருள்:குருத்தோலை
குருத்தோலையுடன் கிறித்துவ விசுவாசத்தை சம்பந்தப்படுத்தி ஏதேதோ சொல்லிக்கொண்டிருந்தார்;ஆனாலும் நான் கவனித்தது இந்த குறிப்பு மட்டுமே;அதற்கு மேல் கேட்க எனக்குப் பொறுமையில்லை;இதனை வாசிக்கும் நண்பர்களும் இதுகுறித்து யாரும் பரியாசம் பண்ணாமல் சிரிக்காமல் அவர் சொன்ன கருத்தில் உள்ள நெஞ்சை உ(லு)ருக்கும் உண்மைகளை உணருமாறு வேண்டுகிறேன்.
"அதாவது குருத்தோலை என்பதை நீங்கள் பார்த்தீர்களானால் அது வளையாமல் மேல்நோக்கி பார்த்துக்கொண்டிருக்கிறது;இது எதை குறிக்கிறது நாம் எப்போதும் பரலோகத்தையே நோக்கியே பார்த்துக்கொண்டிருக்க வேண்டும்; (இரண்டு முறை ரிப்பீட்...அடுத்த வாக்கியம், கொஞ்சம் எதையோ விழுங்கியபிறகே வெளியே வருகிறது...)
அதைத் தான் இந்த குருத்தோலை செய்கிறது;நாமும் அதையே செய்ய வேண்டும்;அதற்காகவே நாம் அதை கையில் பிடித்துக்கொண்டு ஊர்வலமாக போய் நம்முடைய சாட்சியை சொல்லுகிறோம்...'" என்பதாக பேசிக்கொண்டே போக, நான் எழுந்து, அதை எழுத இங்கே வந்துவிட்டேன்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)