Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அன்னை சாராள் நவரோஜி


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 330
Date:
அன்னை சாராள் நவரோஜி அவர்களுடன் இனிய சந்திப்பு..!
Permalink  
 


அன்னை சாராள் நவரோஜி அவர்களுடன் இனிய சந்திப்பு..!



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: அன்னை சாராள் நவரோஜி
Permalink  
 


 

அறிந்த முகம் ,அறியாத செய்தி (1)

205253_2261313549534_1812889604_n.jpg

இவர் தனது பெற்றோருக்கு கடைசி பிள்ளை. இவரது தந்தை திரு.சாலமோன் ஆசிர்வாதம் ஒரு Violin வித்வானகவும்,கர்நாடக இசை ஆசிரியராகவும் இருந்தார்.தனது தந்தையிடம் இவர் முறையாக இசை பயின்றார்.

"நவரோஜி" என்பது கர்நாடக இசையில் ஒரு ராகம்.அதை இவரது தந்தை இவருக்கு பெயராக சூட்டினர்.

இவரது 21-வது வயதில் Mission பணிக்காக இலங்கை செல்ல வேண்டியதாக இருந்தபோது,அதற்காக தனுஷ்கோடி செல்லும் ரயிலில் ஏறி அமர்ந்திருந்தபோது,தன்னை வழியனுப்ப தனது தயார் வருவார் எனக் காத்திருந்தார்.நேரம் கடந்து போனதே தவிர,தயார் வரவில்லை இந்த சூழ்நிலையில் அவர் எழுதிய பாடல் தான் "என்னை மறவா இயேசு நாதா உந்தன் தயவால் என்னை நடத்தும்" ஒரு தாய் தன் பிள்ளையை மறந்தாலும்,மறவாமல் நேசிக்கும் தேவனை மையபடுத்தி எழுதப்பட்ட பாடல் இது.இந்த பாடல் எழுதபட்ட வருடம் 1960

இவர் சென்னை Electriccity board - இல் பணியாற்றி கொண்டிருந்த போது ஒரு தெய்வீக தரிசனத்தைக் கண்டு,தனது பணியை ராஜினாமா செய்துவிட்டு முழுநேர ஊழியப் பணியை தொடங்கினர்.

இவர் உயர் நிலை பள்ளியில் படித்துகொண்டிருக்கும் போது UN அமைப்பு நடத்திய ஒரு பாட்டு போட்டியில் பங்கேற்று முதல் பரிசை வென்றார்.

இவரது பாடல்களில் இசை,இலக்கணம் (பல்லவி,அனுபல்லவி மற்றும் சரணங்கள்) முறையாக கடைபிடிக்கப்பட்டது.

இசைத்தகடு தயாரிப்பில் புகழ் பெற்ற நிறுவனமான HMV,இவரது பாடல்களை தயாரித்து வெளியிட்டு வந்தது.

All India Radio இவருடைய பாடல்களை தொடர்ந்து பல ஆண்டுகள் ஒலிபரப்பிவந்தது வந்தது.

இவருக்கு Rhode island -இல் உள்ள ஒரு சர்வதேச பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது.

இவர் கடந்த 50 ஆண்டுகளில் 365 பாடல்களை எழுதி,இரக்கம் அமைத்து,பாடி வெளியிட்டிருக்கிறார்.

தற்போது 74 வயதாகும் இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.

இவரது வாழ்க்கை,மற்றும் பாடல்களை குறித்த ஒரு புத்தகம் "முட்களுக்குள் லீலி புஷ்பம்"(Lilly among the Thtons)என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. 

இவருடைய முகவரி மற்றும் தொடர்பு எண் :

SISTER: SARAH NAVAROJI,

46, Kuttiappan 2nd Street, Kilpauk,

Chennai – 600 010, INDIA.

Tel : +91- 44 – 26422692

E-Mail : prayerhouse@sarahnavaroji.com 

CONTACT PERSONS: 

Prayer requests:-

Sister. Lalitha Evangeline Cell: +91 – 9884851814 

About ministries:-

Rev. Dr. R.Samuel Cell: +91 – 9884713075 

For Audio MP3 CDs /Videos & Books

Sister. E.J. Roshini Samuel Cell: +91 – 9884635053 

 



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

சாராள் நவ்ரோஜி அம்மையார் “பாடல் பிறந்த கதையில்” சொன்னது. அவங்களுக்கு Madras EB இல் வேலை கிடைத்ததாம். ஆண்டவர் வேலையை விட்டு விட்டு ஊழியத்திற்கு வரும்படி அழைத்தாராம். வீட்டில் எல்லோரும் பயங்கர எதிர்ப்பாம். ஊழியத்தில் இருந்த மாமா கூட - உன்னால் நிலைத்து நிற்க முடியுமா, நன்றாக யோசித்துக் கொள். இது சாதாரண விஷயமில்லை- என்று அறிவுரை சொன்னாராம். நான் ஆண்டவருக்காக என் வாழ்க்கையை ஒப்புக் கொடுத்திருக்கிறேன். எல்லாம் ஆண்டவர் பார்த்துக் கொள்வார் என்று சொல்லி வீட்டில் யாருக்கும் சொல்லாமல் வேலையை விட்டு விட்டு, ஊழியத்திற்காக சிலோன் போக இரயில் ஏறிட்டாங்களாம். இவங்க கடைசிப் பிள்ளை என்பதால் அம்மாவிற்கு ரொம்ப செல்லமாம். வழியனுப்ப வந்த அம்மா பயங்கரமாக அழ, இவங்களும் அவங்களைப் பார்த்து அழுது கொண்டே போக , அப்போழுது ஆண்டவர் கொடுத்த பாடலாம் இது.

என்னை மறவா யேசு நாதா

உந்தன் தயவால் என்னை நடத்தும்

ஒரு முறை ஸ்டுடியோவில் பாடல் பதிவு செய்து கொண்டிருக்கையில், ஒரு சினிமா மியுசிக் டைரக்டர், உங்க குரலும் பாடலும் நன்றாக இருக்கிறது. சினிமாவில் பாடுங்கள் என்று கேட்க, மாட்டேன் என்று சொல்லி விட்டார்களாம். அந்த சூழ்நிலையில்,உம்மைத் தவிர யாரையும் பாட மாட்டேன் என்று சொல்லி பாடிய பாடல் தான் இது.

உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே

உம்மையன்றி யாரைப் பாடுவேன் ஏசையா



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

Ashokkumar wrote:
நண்பர்களின் வார்த்தைகளை பார்த்து,இப்போது  நான் மிகவும் ரசித்து கேட்ட  கிறிஸ்துவ பாடல்களில் பல அம்மையாருடையது.அருமையான ஊழியம் (தன்னை மறைத்து கிறிஸ்துவை வெளிப்படுத்துவது).

//சாராள் நவ்ரோஜி அவர்கள் ஏஞ்சல் டிவியில் ”பாடல் பிறந்த கதை” யில் சொன்னது - சபையில் பெண்கள் பேசக் கூடாது என்று சொல்லி அவர்கள் செய்யும் ஊழியத்தை பலர் முதலில் தடுத்தார்களாம்/எதிர்த்தார்களாம். (இப்பவும் இந்த மனப்பான்மை மாறியிருக்கிறதா என்று தெரியவில்லை). பின் அப்படிப் பேசியவர்களே வந்து அவர்கள் செய்தியையும், பாடல்களையும் கேட்டார்களாம்.//

என்னை ஆணாதிக்கவாதி என்று நினைத்தாலும் சரி, இப்போதும் சபைகளில்  பெண்கள்  (ஆண்கள் மத்தியில்) பிரசங்கம் செய்யும்போது, பவுலடிகளின்  வார்த்தைகள் நெஞ்சை நெருடுகிறது.


-- Edited by Ashokkumar on Monday 18th of April 2011 10:08:24 PM


 உங்களுக்கு மீசை இருக்கு. எங்களுக்கு இல்லை. இந்த ஒரு வித்தியாசம் என்ன பாடு படுத்துகிறது என்று பாருங்கள்!

நான் ஒரு தனி திரி ஆரம்பித்து பெண்கள் பற்றிய வேத வசனங்களின் விளக்கத்தையும், என் மற்றும் பிறர் கருத்துக்களையும் எழுதலாம் என்று நினைக்கிறேன்.

 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

நண்பர் ES.ஜோசப் அவர்களின் விருப்பப்பாடல்..!

என்னை மறவா இயேசு நாதா
உந்தன் தயவால் என்னை நடத்தும்.

1. வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள்
வரைந்தெனக்காய் தந்ததாலே, ஸ்தோத்திரம்!
ஆபத்திலே அரும் துணையே
பாதைக்கு நல்ல தீபமதே. - என்னை

2. பயப்படாதே வலக்கரத்தாலே
பாதுகாப்பேன் என்றதாலே, ஸ்தோத்திரம்!
பாசம் என் மேல் நீர் வைத்ததினால்
பறிக்க இயலா தெவரு மென்னை - என்னை

3. தாய் தன் சேயை மறந்து விட்டாலும்
மறவேன் உன்னை என்றதாலே ஸ்தோத்திரம்!
வரைந்தீரன்றோ உம் உள்ளங்கையில்
உன்னதா எந்தன் புகலிடமே. - என்னை

4. திக்கற்றோராய்க் கைவிடேனே
கலங்கிடீரே என்றதாலே, ஸ்தோத்திரம்!
நீர் அறியா தேதும் நேரிடா
என் தலைமுடியும் எண்ணினீரே. - என்னை

5. உன்னைத் தொடுவோன் என் கண்மணியைத்
தொடுவதாக உரைத்ததாலே, ஸ்தோத்திரம்!
அக்கினியின் மதிலாக
அன்பரே என்னைக் காத்திடுமே. - என்னை

6. உனக்கெதிராய் எழும்பும் ஆயுதம்
வாய்த்திடாதே என்றதாலே, ஸ்தோத்திரம்!
பறந்திடுமே உம் நாமத்திலே
பரனே எனக்காய் ஜெயக்கொடியே. - என்னை

7. என்னை முற்றும் ஒப்புவித்தேனே
ஏற்றும் என்றும் நடத்துவீரே, ஸ்தோத்திரம்!
எப்படியும் உம் வருகையிலே
ஏழை என்னைச் சேர்த்திடுமே. - என்னை



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
Permalink  
 

நண்பர்களின் வார்த்தைகளை பார்த்து,இப்போது  நான் மிகவும் ரசித்து கேட்ட  கிறிஸ்துவ பாடல்களில் பல அம்மையாருடையது.அருமையான ஊழியம் (தன்னை மறைத்து கிறிஸ்துவை வெளிப்படுத்துவது).

//சாராள் நவ்ரோஜி அவர்கள் ஏஞ்சல் டிவியில் ”பாடல் பிறந்த கதை” யில் சொன்னது - சபையில் பெண்கள் பேசக் கூடாது என்று சொல்லி அவர்கள் செய்யும் ஊழியத்தை பலர் முதலில் தடுத்தார்களாம்/எதிர்த்தார்களாம். (இப்பவும் இந்த மனப்பான்மை மாறியிருக்கிறதா என்று தெரியவில்லை). பின் அப்படிப் பேசியவர்களே வந்து அவர்கள் செய்தியையும், பாடல்களையும் கேட்டார்களாம்.//

என்னை ஆணாதிக்கவாதி என்று நினைத்தாலும் சரி, இப்போதும் சபைகளில்  பெண்கள்  (ஆண்கள் மத்தியில்) பிரசங்கம் செய்யும்போது, பவுலடிகளின்  வார்த்தைகள் நெஞ்சை நெருடுகிறது.


-- Edited by Ashokkumar on Monday 18th of April 2011 10:08:24 PM



__________________


Newbie>>>வருக..வருக..!

Status: Offline
Posts: 2
Date:
Permalink  
 

எத்தனையோ ஆவிக்குரிய புத்தகங்கள் இருந்தாலும், பரிசுத்த வேதாகமம் ஒரு தனி சிறப்பு வாய்ந்தது. எந்த புத்தகங்களோடும் ஒப்பிட முடியாதது. மனிதனால் எழுதப்பட்டாலும்,  அந்த நேரத்தில் தேவன் அவர்களை அபிஷேகித்து தேவனே எழுதி அருளிய வார்த்தைகள். அந்த வார்த்தையில் ஜீவன் உண்டு.

ஆகவே எக்காலத்திலும் (இந்த கம்ப்யூட்டர் யுகத்திலும்) மனிதர்களுடைய இருதயங்களை அசைக்க கூடிய வல்லமை வேதத்திற்கு மாத்திரமே உண்டு.

அதுபோலவே  ஆவிக்குரிய பாடல்களும். தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்டு எழுதப்பட்ட பாடல்கள் இருதயத்தை தொடக்கூடியதாக இருக்கும். எக்காலத்திலும் அழியாமல் நிலைத்து நிற்க்கக்கூடியதாக இருக்கும்.

வேத நாயகம் சாஸ்திரியார், நடராஜ முதலியார், சாது கொச்சு குஞ்சு, சாராள் நவரோஜி இன்னும் CPM, MPA சபைகளிலும் பெயர் தெரியாத அநேகரை தேவன் அதுபோல் எழுப்பிருக்கின்றார். அபிஷேகித்து பாடல்களை தந்திருக்கின்றார்.

இதில் பெரும்பான்மையான பாடல்கள் பாடுகள், கஷ்டங்கள் மத்தியில் எழுதப்பட்டவைகள். அருமை தாயார் சாராள் நவரோஜி அவர்களுடைய அநேக நல்ல பாடல்களில் என்னுடைய favorite  “என்னை மறவா இயேசு நாதா” என்ற பாடல்.

தேவன் அவர்களுக்கு இன்னும் ஆயுசு நாட்களை கூட்டிக்கொடுத்து, சுகத்தோடு ஜீவிக்க கிருபை செய்வாராக. அவர்களுடைய நாட்களில் நானும் இருக்கின்றேன் என்று நினைக்கும்போது ஒரு விதத்தில் பெருமையாக உள்ளது. அவர்களை கண்டு ஆசீர் பெறவேண்டும் என்ற வாஞ்சை உண்டு, கர்த்தர் தாமே வாய்க்கச்செய்யும்படி வேண்டுகிறேன்.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
Permalink  
 

தான் மறைந்திருந்து -கரைந்திருந்து

சுவைதரும் உப்பைப் போல‌..!

Bro.Chillsam,

    I dont know, whether the above is your words are not. But, they are wonderful. I have just learned, what it means to "being salt and the light of this world".

God Bless you,

Ashok





__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: சாராள் நவ்ரோஜி
Permalink  
 


John wrote:

எனக்கு அவர்களை பற்றி அதிகம் தெரியாது ஆனால் அவருடைய பாடல்களில் இருந்து இயேசுவோடு உண்மையிலே வாழ்ந்த ஒரு பெண்மணி என்பதை புரிந்து கொண்டேன். இப்போது உள்ள பல பாடல்களை கேட்கும் போது விட்டு விட்ட சினிமா பாடல் மோகத்தை மறுபடியும் சாத்தான் உள்ளே நுழைக்க செய்யும் முயற்சி போல தோன்றுகிறது.


 
மிகவும் சரியாகச் சொன்னீர்கள் ஜாண்;உங்களையும் அன்னை சாராள் நவ்ரோஜியையும் குறித்து கர்த்தர் நிச்சயம் மகிழுவார்;

நீங்கள் யாரால் நடத்தப்படுகிறீர்கள் என்பதைக் காட்டிலும் நீங்கள் யாரை நோக்கி நடத்தப்படுகிறீர்கள் என்பதே முக்கியம்;

இன்றைக்கு பலரும் கிறித்துவுக்கு கைகாட்டிகளாக நில்லாமல் வழிப்போக்கனைத் தன்னிடமே வைத்துக்கொள்ள நினைக்கிறார்கள்;

கிறித்துவை மையமாகக் கொண்ட ஒரு ஊழியத்தில் ஊழியர் அல்ல ஊழியரின் கிரியைகளே புகழப்படவேண்டும்;

அதுவே ஆண்டவருக்கு மகிமையாக விளங்கும்;அந்த வகையில் அன்னையாரது பல பாடல்கள் மூலம் இரட்சிக்கப்பட்ட, ஆறுதல் பெற்ற பலருக்கு அது அவர் எழுதியது என்பது கூட தெரியாது;அதுதான் ஊழியம்;

தான் மறைந்திருந்து -கரைந்திருந்து

சுவைதரும் உப்பைப் போல‌..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 

//இந்த திரியில் அன்னை சாராள் நவ்ரோஜி அவர்களின் ஊழியத்தை பாராட்டும் வகையிலான கருத்துக்களை மட்டும் பதிக்கவேண்டுகிறேன்.//

 

எனக்கு அவர்களை பற்றி அதிகம் தெரியாது ஆனால் அவருடைய பாடல்களில் இருந்து இயேசுவோடு உண்மையிலே வாழ்ந்த ஒரு பெண்மணி என்பதை புரிந்து கொண்டேன். இப்போது உள்ள பல பாடல்களை கேட்கும் போது விட்டு விட்ட சினிமா பாடல் மோகத்தை மறுபடியும் சாத்தான் உள்ளே நுழைக்க செய்யும் முயற்சி போல தோன்றுகிறது.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

golda wrote:

ஆண்கள், பெண்கள் என்பவர்கள் வீட்டில் தங்கி, ஆண்களுக்கு பணிவிடை செய்ய படைக்கப்பட்ட, second class citizens என்று வேதத்தில் எழுதப்பட்டிருப்பதாக நினைக்கிறார்கள். ஆண்டவரோ அதையெல்லாம் மறந்துவிட்டு, இப்படி வல்லமையாய் அவருக்கு ஊழியம் செய்ய பெண்களையும் கூப்பிடுகிறாரே..!


பெண்கள் வீட்டில் தங்காமல் ஆண்களுக்கு பணிவிடை புரியாமல் இருப்பதால் சமுதாயத்தில் தனியொருவனுடைய வாழ்க்கைத் தரம் எந்த அளவுக்கு உயர்ந்திருப்பதாக எண்ணுகிறீர்கள்,சகோதரி..?


ssn2.jpg

http://www.sarahnavaroji.com/church.html

அன்னை சாராள் நவரோஜி அவர்களைப் போன்றவர்கள் விதிவிலக்குகளே; அவர்களை மாத்திரம் கருத்தில் கொண்டு தற்காலப் பெண்களின் போக்குகளை நியாயப்படுத்த முடியாது; பெண்கள் போதிப்பதும் மேடையில் நின்று கைகளை உயர்த்தி ஆராதிப்பதும் அவலட்சணமானது என்பதே சரியானது; அதன் விளைவுகளை சபைகளில் பார்த்து வருகிறோம்.

வேதம் பெண்களை அடக்கவில்லை; அவர்கள் மறைந்திருப்பதாலேயே மேன்மையடையும் வழியைப் போதிக்கிறது. இதுகுறித்து இன்னும் விரிவாக வேறொரு திரியில் பேசுவோம்;ஆனால் அன்னை சாராள் நவரோஜியைப் போன்றவர்கள் மாத்திரமல்ல, சகோதரி பத்மா முதலியார் முதலானோர் ஆண் ஊழியர்களால் பட்ட அவஸ்தைகளை நாகரீகம் கருதி வெளியில் சொல்லுவதில்லை.கர்த்தர் அவர்களை மணவாளனைப் போல இருந்து காத்துக்கொண்டார், தவறினார்கள் ஆனாலும் மன்னித்து அணைத்துக் கொண்டார் என்பதே உண்மை..!

பின்குறிப்பு:

குயிலைப் பார்ப்பது அரிது ஆனால் கேட்க மட்டுமே முடியும் என்பார்கள்; அதுபோலவே இந்த நவீன உலகத்திலும் அன்னை சாராள் நவரோஜி அவர்களின் புகைப்படம் அவ்வளவு எளிதாகக் கிடைக்கவில்லை;மிகுந்த சிரமப்பட்டே தேடியெடுத்தேன்; ஆனால் தற்கால ஊழியர்கள் எவ்வாறெல்லாம் பேர்புகழை விரும்பி தங்களை சிங்காரித்து அலங்கோலப்படுத்திக் கொள்ளுகிறார்கள் என்று பார்க்கிறோம் அல்லவா..?

இந்த திரியில் அன்னை சாராள் நவ்ரோஜி அவர்களின் ஊழியத்தை பாராட்டும் வகையிலான கருத்துக்களை மட்டும் பதிக்கவேண்டுகிறேன்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
அன்னை சாராள் நவரோஜி
Permalink  
 


சாராள் நவ்ரோஜி அவர்கள் ஏஞ்சல் டிவியில் ”பாடல் பிறந்த கதை” யில் சொன்னது - சபையில் பெண்கள் பேசக் கூடாது என்று சொல்லி அவர்கள் செய்யும் ஊழியத்தை பலர் முதலில் தடுத்தார்களாம்/எதிர்த்தார்களாம். (இப்பவும் இந்த மனப்பான்மை மாறியிருக்கிறதா என்று தெரியவில்லை). பின் அப்படிப் பேசியவர்களே வந்து அவர்கள் செய்தியையும், பாடல்களையும் கேட்டார்களாம். தேவசித்தம் செய்ய பொறுமை அதிகம் தேவை என்று சொல்லி இந்த பாடலைப் பாடினார்கள்.

தேவசித்தம் நிறைவேற என்னையும் ஒப்படைக்கிறேன்

தேவசத்தம் என்னுள்ளம் பலமாக தொனிக்குதே

--

அநாதி தேவன் உன் அடைக்கலமே

அவர் நித்திய புயங்கள் உன் ஆதாரமே

என்ற பாடலையும் பாடினார்கள்.

ஆண்கள், பெண்கள் என்பவர்கள் வீட்டில் தங்கி, ஆண்களுக்கு பணிவிடை செய்ய படைக்கப்பட்ட, second class citizens என்று வேதத்தில் எழுதப்பட்டிருப்பதாக நினைக்கிறார்கள். ஆண்டவரோ அதையெல்லாம் மறந்துவிட்டு, இப்படி வல்லமையாய் அவருக்கு ஊழியம் செய்ய பெண்களையும் கூப்பிடுகிறாரே..!



__________________
Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard