என்னடா, கேள்விக்கு பதில் கேள்வி கேட்கிறான் என்று நினைக்க வேண்டாம். சாத்தான் பாம்பை (அந்த அற்ப பிராணியை) பயன் படுத்தினான் என்று எப்படி சொல்கிறீர்கள்? வேத ஆதாரம் உண்டா?
நன்றி,
அசோக்
குறிப்பு: சில சமயம், கேள்விகளே நல்ல பதில்களாக அமையலாம்.
// மேலே கூறிய பதிவின்படி கர்த்தர் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது காணக்கூடாத ஆவி ஆளாகிய சாத்தானுக்குத்தான், சாத்தானே அந்த அற்ப பிராணியே தவறாக பயன்படுத்தினவன்!!! அப்படி இருக்க தேவன் ஏன் தான் படைத்த அந்தப் பாம்பைப் பார்த்து சபிக்கவேண்டும்? //
சாத்தான் தான் அந்த இடத்தில் சபிக்கப்பட்டான் என்றாலும். பாம்பானது சபிக்கப்படவில்லை என்றும் சொல்லமுடியாது. தேவன் பூமியில் உள்ள அனைத்தையும் மனிதன் ஆண்டுகொள்ளும்படி உருவாக்கினார். ஆதாம் பாவத்தில் விழுந்தபோது பூமியும் அதன் ஜீவராசிகளும் கூட ஒருவகையில் சபிக்கப்பட்டன. பாம்புக்கு கால் இருந்தது என்றோ இல்லை என்ற உறுதியாய் சொல்லமுடியாது அது தேவையும் இல்லை என்றே கருதுகிறேன்.
பின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய். (ஆதியாகமம் 3:17)
மேலும் தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்குச் சிருஷ்டியானது மிகுந்த ஆவலோடே காத்துக்கொண்டிருக்கிறது. அதேனென்றால் சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு..(ரோமர் 8:19-20)
நிச்சயமாக எனக்கு தெரியாது! அதை தெரிந்து கொள்வதால் நமக்கு எந்த ப்ரோயோஜனமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஆதியாகமம் தேவன்தான் எல்லாவற்றையும் உண்டாக்கினார் என்று சொல்லுகிறதே தவிர எப்படி உருவாக்கினார் என்று சொல்லவில்லை. அவர் இல்லாதவைகளை இருக்கிறவைகளை போல அழைக்கிறவர். எப்படி இல்லாதவைகள் தோன்றின என்பது தேவனுக்கே வெளிச்சம். வேறு சகோதர்கள் முடிந்தால் முயற்சிக்கலாம்
சகோதரரே, நீங்கள் ஏன் இந்த கேள்விக்கு விடை தெரிந்து கொள்ளவிரும்புகிறீர்கள் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?
ஆதியாகமம் 3 : 14. அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப் பார்த்து: நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டுமிருகங்களிலும் சகல காட்டுமிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்;
நண்பர் ஜோன் அவர்களே,
இந்தக் கேள்வியே கேட்க காரணம்!!! மேலே கூறிய பதிவின்படி கர்த்தர் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது காணக்கூடாத ஆவி ஆளாகிய சாத்தானுக்குத்தான், சாத்தானே அந்த அற்ப பிராணியே தவறாக பயன்படுத்தினவன்!!! அப்படி இருக்க தேவன் ஏன் தான் படைத்த அந்தப் பாம்பைப் பார்த்து சபிக்கவேண்டும்? அடுத்து குறிப்பாக பாம்பின் இயல்பே வைற்றால் நகர்ந்து ஊர்ந்து செல்லும், அது நாக்கை நீட்டி உள்ளே இழுப்பது மண்ணை நக்குவது போலவே தெரியும் இது பாம்பின் இயல்பு!!! இது இப்படி இருக்க தேவன் ஏன் அதை பார்த்து இப்படி சபிக்கவேண்டும்!!!
பின்குறிப்பு:-
இது லூசுத்தனமான கேள்வியாக இருந்தாலும்; இது பைபளில் இருந்தே இந்தக் கேள்வியே கேட்கிறேன்: நன்றி.
நிச்சயமாக எனக்கு தெரியாது! அதை தெரிந்து கொள்வதால் நமக்கு எந்த ப்ரோயோஜனமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஆதியாகமம் தேவன்தான் எல்லாவற்றையும் உண்டாக்கினார் என்று சொல்லுகிறதே தவிர எப்படி உருவாக்கினார் என்று சொல்லவில்லை. அவர் இல்லாதவைகளை இருக்கிறவைகளை போல அழைக்கிறவர். எப்படி இல்லாதவைகள் தோன்றின என்பது தேவனுக்கே வெளிச்சம். வேறு சகோதர்கள் முடிந்தால் முயற்சிக்கலாம்
சகோதரரே, நீங்கள் ஏன் இந்த கேள்விக்கு விடை தெரிந்து கொள்ளவிரும்புகிறீர்கள் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?