Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பாம்பிற்கு கால்கள் இருந்தனவா? என் கேள்வி இதுவே!!!!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
RE: பாம்பிற்கு கால்கள் இருந்தனவா? என் கேள்வி இதுவே!!!!
Permalink  
 


Jasmine Golda@facebook:

///  வரை முறையின்றி அதான் இது என்று ஒருவர் பேசுகிறார். அதுவும் லைக் செய்யப்படுகிறது. என்ன பரிசுத்ததையும் பக்தி வைராக்கியத்தையும் காட்டுகிறார்கள் என்று புரியவில்லை. ///

ஏவாள் என்பதற்கு பின்வரும் வசனத்தில் அர்த்தம் இருக்கிறது.ஆனால் அந்த கபட்டு சந்நியாசி ஒரு கைத்தடியை அருகில் வைத்துக்கொண்டு ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாயான ஏவாளை உலகின் முதல் ” தேவடியா..” அதான் சாத்தானோடு படுத்துவிட்டு வந்தவள் என்று சொல்லலாம்... அதனை, “ அதான் இது “ என்ற தலைப்பில் பேசலாம். ஆனால் அந்த கயவனின் ஏஜெண்டுகளை எதிர்க்க நாம் வைராக்கியத்துடன் நின்றால் நாம் குற்றவாளிகளா ? நியாயந்தீர்ப்பவர்களா ? இனி மரணமே ஆனாலும் சரி இவர்களோடு நோ காம்ப்ரமைஸ்..!!!

  • ஆதியாகமம் 3:20 ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்று பேரிட்டான்; ஏனெனில், அவள் ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாயானவள்.


ஆதாமுக்கு ஏற்ற துணையான ஏவாளை சர்ப்பத்துடன் சரசமாடியவள் என்றும் அதனால் உருவான கருவினால் பிறந்தவனே காயீன் என்றும் வேதப்புரட்டு நடத்திய ஏஞ்சல் டிவிக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கிறோம். அப்படியே நோவாவை அவன் மகன் ஆண்புணர்ச்சி செய்து சபிக்கப்பட்டான் என்கிறார்கள். மெய்யாகவே ரோஷம் இருப்போர் ஏஞ்சல் டிவியை ஒழிக்க ஒன்றுபடுங்கள். இல்லாவிட்டால் வழியை விடுங்கள்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 32
Date:
Permalink  
 

நிச்சயமாக ஆதாமின் நாட்களில் பாம்பிற்கு கால் இருந்திருக்கும்..! பல்லி / உடும்பு / அர்னை / முதலை போன்று பாம்பும் இருந்திருக்கும். எந்த சந்தேகமும் இல்லை..

ஆதாம் ஏவாளுடன் ஏதேன் தோட்டத்தில் பேசிய பாம்பு, குறிப்பிட்ட ஓர் பாம்பு அல்ல.. பலவகை பாம்பு இனத்திலிருந்து சாத்தானால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒர் பாம்பும் அல்ல.....!

ஏனெனில்.....

ஆதியா 3-ம் அதிகாரத்தை பார்க்கும் போது,மனிதரை போன்று ஆண் / பெண் என்ற இரு பாம்புகள் தான் இருந்திருக்க வேண்டும். (இதில் எந்த பாம்பு ஏவாளுடன் பேசியது என்பது நமது அறிவிற்கு அப்பாற்ப்பட்டது).

ஆதியா 2:19-20 - படி ஒவ்வொரு மிருக சோடி தான் மண்ணினால் செய்யப்பட்டு இருந்திருக்கும்.என யூகிக்கலாம்.ஆதாம் அவைகளுக்கு பேரிடும் போது,தன்னை போல வேறு யாரும் இல்லையே என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கலாம். ஏனெனில்,அடுத்த வசனம் இப்படியிருக்கிறது. ஆதாமிற்கோ ஏற்ற துணை இன்னும் காணப்படவில்லை.. என வருகிறது.. மேலும்,

ஆதியா 1:11-13-ல், பூமியில் (நிலப்பரப்பில்) உண்டாக்கப்பட்ட கனிமரங்களின் சாதிகள் பன்மையில் உள்ளது.

ஆதியா 1:20 -ல் நீரில் வாழும் உயிரினங்கள் மற்றும் ஆகாயவிரிவில் பறக்கும் பறவைகளும் பன்மையில் சொல்லப்பட்டிருக்கிறது.மேலும் பலுகி பெருக கடவது என்றும் சொல்லப்பட்டு இருக்கிறது.

ஆனால்....

ஆதியா 1:24-31. பூமியில் வாழும் உயிரினங்களுக்கு அப்படி சொல்லப்படவில்லை.என்பதை அறியலாம்.இங்கு அனைத்தும் ஒருமையில் சொல்லப்பட்டிருக்கிறது. 5- ம். நாள் படைப்பில், ஆதியா 1:20-22. நீரில் வாழும் உயிரினங்கள், ஆகாயவிரிவில் பறக்கும் பறவைகள் தங்கள்,தங்கள் சாதியின் படி திரளாய் உண்டாக்கப்பட்டது.

ஆனால்.......

ஆதியா 1:24-25. பூமியில் வாழும் பிராணிகள் ஆண் / பெண் என்றே படைக்கப்பட்டு இருந்திருக்கும்.என யூகிக்கலாம். இன்னும் சற்று விரிவாக சென்றால், ஆதாம் / ஏவாள் சபிக்கப்பட்ட பின்னர், சாபம் அப்படியே நடந்தேறியதும். அது இன்னும் தொடர்வது போல பாம்பிற்கும் நடந்து, இப்போதும் தொடர்கிறது என ஏன் ஏற்றுக் கொள்ளக்கூடாது...? (குறிப்பிட்ட பாம்பு என்றால் மற்ற வகை பாம்புகளுக்கு கால்கள் இருந்திருக்க வேண்டுமே...? ).

இப்போது நாம் பல வகை பாம்புகளை காண்கிறோம்.ஆனால் முன்பு அப்படி இல்லை...! வெட்டாந்தரையாக பூமி காணப்பட்ட போது.கண்டங்களோ, தீவுகளோ இருந்ததில்லை. நோவா காலத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் பிற்பாடு இவைகள் ஏற்பட்டது.

ஆதாம் காலத்திலிருந்து நோவாவின் வெள்ளம் வரைக்கும் ஒரே பாசை இருந்தது. அதே போல மனிதரும், ஒரே விதமாக இருந்திருக்கின்றனர். பிற்பாடு தான்... ஆப்பிரிக்க - கறுப்பினத்தவர்.

மஞ்சள் நிற - தென்கிழக்கு ஆசிய நாட்டவர்.

வெள்ளை / இளஞ்சிவப்பு - ஐரோப்பிய மனிதர்.

கறுப்பு / மாநிறம் - கொண்ட இந்திய துணைக்கண்ட மக்கள்.. இன்னும் பல ... தோன்றியது.

அதே வகையில்,ஏன், பாம்பிற்கும் ஏற்பட்டிருக்காது...? ஏன் இத்தகைய வாதத்தை ஏற்றுக் கொள்ளக்கூடாது...? ஏற்றுகொண்டால், இந்த விவாதத்துக்கு முற்றுபுள்ளி வைக்கலாம். அதுவுமல்லாமல்,....

ஏவாளுடன் பேசிய பாம்பு தனிப்பட்ட ஓர் பாம்பு என்றால்.. கீழே வருபவைக்கு அது ஒத்து போகாதே...?

பாம்பிற்கு என எந்த காட்டு மிருகமோ, நாட்டு மிருகமோ அல்லது பறவைகளோ நண்பர்களாக கிடையாது. பாம்பு தனியே மறைந்து வாழ்பவை.. (பார்வோனுடைய எகிப்தின் மந்திரவாதிகள் போல, வேண்டுமானால், இந்நாட்களில் சினிமாவில், பாம்பிற்கும் மற்ற மிருக நண்பர்கள் இருப்பது போல படம் எடுக்கப்படுகிறது. ஆனால், நிச வாழ்க்கையில் அப்படி அல்ல...! )

ஏவாள் எப்படி பிரசவ வேதனை பட்டு பிள்ளை பெற்றாளோ... அப்படியே பாம்பிற்கும் கால் போய், ஊர்ந்து செல்லும் நிலைமை ஏற்பட்டிருக்கும் அல்லது அதன் குட்டிகள் பிறந்த போது காலில்லாமல் பிறந்திருக்கும் என அறியலாம்.

சாத்தான் பாம்பாக மாறி அல்லது பாம்பிற்குள் நுழைந்து ஏவாளை அறியவில்லை. அதற்கு எந்த ஆதாரமும் கிடையாது.

தேவ சாபத்தைபற்றி:- ஏவாள் கடவுளிடம் பாம்பு தன்னை வஞ்சித்தது என்ற போது, கடவுள் பாம்பிடம் உரையாடவில்லை.படைத்தவருக்கு தமது படைப்பை தெரியும். " எங்கள் தேவனாகிய கர்த்தர் தாம் செய்து வருகிற தம்முடைய கிரியைகளில் எல்லாம் நீதி உள்ளவர். தானி 9:14.

இது மனிதர் படைக்கப்பட்ட காலத்தில் நடந்தவை.நம் கண்களால் அதை காண இயலாது.. விசுவாசித்தால் போதும்.

இப்போதைய கேள்வி எனனவெனில்... பாம்பு மண்ணை தின்றதா.....?

இதற்கு எந்த ஆவிக்குரிய அர்த்தமும் கொடுத்து விடக்கூடாது.... ஆதியா 1:30 -படி, பூமியின் உயிரினங்களுக்கு உணவாக பசுமையான தாவரங்கள் / கனிகள் கொடுக்கப்பட்டிருந்தது. பாம்புவும் இப்படி தான் தாவர வகைகளை / கனிகளை தின்றிருக்கும். சபிக்கப்பட்ட பின்னரும் அது, இவைகளை தொடர்ந்து தின்றிருக்கும். அது ஊர்ந்து செல்லும்போது, அது அடிக்கடி தன் நாவை வெளியே நீட்டும் போது, பூமியின் மண் அதன் வாயினுள் சென்றிருக்கும். இதனால் பாம்பு மண்ணை தின்றது என்பதாகாது....!

நோவா பெரு வெள்ளத்திற்கு பிற்பாடு ஆதியா 9:2-3. பசுமையான இயற்கை உணவு / இறைச்சி சாப்பிட அனுமதிக்கப்பட்டது. இதன் பிற்பாடே எல்லா பிராணிகளும், தம்மால் இயன்ற பிராணிகளை கொன்று தின்னும் பழக்கம் வந்திருக்கும். பாம்பிற்கும் இது விதிவிலக்கல்ல...!

பாலைவனத்தில், மண்ணில் புதைந்திருக்கும் பாம்பு, மண்ணை தின்பதில்லை... கண்ணில்படும் பிராணிகளை, மறைந்து தாக்கி,அவைகளை கவ்வி பிடித்து விழுங்குகிறது..

அப்படியானால் ஆதியா 3:14. சொல்லப்பட்ட வசனம் எப்போது நிறைவேறும்...? இசையா 11:1-10 / 65:25. கடவுளுடைய இராச்சியத்தில் ம்ற்றும் (1000 வருட இராச்சியத்தில்) நிச்சயமாய் பாம்பு முழுமையாக மண்ணை தனது உணவாக தின்னப் போகிறது. (மண் புழுவை போல).

இது நிறைவேற இத்தனை காலமா....? என்ற கேள்வி எழும்பலாம்....!

ஆதியா 3:15. என்ற சாபம்... பல நூற்றாண்டுகள் கடந்து.. இசையா 7:14-ல் தீர்க்கதரிசனமாக " ஓர் கன்னிகை கர்ப்பவதியாகி...... வசனம் வெளிப்பட்டு.... மேலும் சில நூற்றாண்டுகள் கடந்த பின்னரே மேசியா இயேசுநாதர் பிறந்தார்.( மத்தே 1:17 மற்றும் லூக்காஸ் 3:23 - 38 வரைக்கும் பல தலைமுறையை கடந்தே நிறைவேறியது).

அதே போல.. ஆதியா 15:18-21. கடவுள், முற்பிதாவான ஆபிரகாமோடே உடன்படிக்கை செய்யும் போது. " எகிப்தின் நதி துவக்கி, ஐபிராத்து நதி வரை...... என்ற வாக்குதத்தம் ( உடன்படிக்கை) இன்னும் முழுமை அடையவில்லை.

என்பதையும், அது எதிர்காலத்தில், கடவுளுடைய குமாரனின் 1000 வருட அரசாட்சியில் அது நிறைவேரும்..!

எசேக்கியா 40 / 44 அதிகாரம் வரையில் சொல்லப்பட்டிருக்கும்,விவரமானது... அவ்வளவு பெரிய நிலப்பரப்பு தற்போதைய இஸ்ராயேல் தேசத்தில் இல்லை என்பதையும் எதிர்காலத்தில் 1000 வருட அரசாட்சியில் அந்த பகுதி மாற்றம் அடையும் எனபதையும் அறியலாம். வரும் எதிர் காலத்தில் முற்பிதாவான ஆபிரகாம் சந்ததியினருக்கு கொடுக்கப்படும் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

(குறிப்பு:- அந்திகிறிஸ்து காலத்தில் எருசலேமில் உள்ள மோரியா மலையின் மேல் தேவாலயம் கட்டப்படும். 1000 வருட அரசாட்சியில் சீலோவாவில் புதிய தேவாலயம் கட்டப்படும்).

இவைகளை அறிந்து கொள்வதை விட, விசுவாசம் / அன்பு / கீழ்படிதலே சாலச் சிறந்தது... இது எமது படிப்பினை...!

வாய்ப்பு தந்ததற்கு நன்றி சில்சாம் அவர்களே... தவறு காணப்பட்டால் தயவுசெய்து உடனடியாக அழித்துவிடவும்......!



__________________
karna


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

 

அன்பின் சகோதருக்கு

உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். அதிகமாய் கர்த்தருடைய வசனத்திலும் ஞானத்திலும் வளர பிரார்த்திக்கிறேன். 

பாம்பிற்கு கால்கள் இருந்தனவா இல்லையா என்பது பற்றி வேதத்தில் எதுவும் சொல்லப்படவில்லை. ஆயினும் தேவன் சபித்ததாக வசனங்களில் வாசிக்கிறோம். (ஆதி.3.14).  எனவே இச்சாபம் காரணமாக பாம்பின் வாழ்க்கை முறையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டிருக்க இடம் உண்டு 

 

அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப் பார்த்து: நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டு மிருகங்களிலும் சகல காட்டு மிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய் (ஆதி.3.14). 

 

வயிற்றில் ஊர்வன அருவருப்பானவைகளாகும் (லேவி. 11:4). மனிதனுடைய பார்வையில் சர்பம் அருவருப்பானதும் அபாயமானதுமாகும். சர்பத்தை வழிபடுபவர்கள் சாத்தனையே வழிபடுகின்றனர். 

மண்ணை புசிப்பாய் என்பது சொல்லர்த்த்த்தின் படியன்.று உருவகமொழியில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். இது எதிரிகளின் இழிவான தாழ்ந்த நிலையை குறிக்கும் விபரணமாகும். (சங். 72:9, ஏசா. 49:23, மீகா 7:17)

எந்த உயிரினமும் மானிட மொழிகளில் மனிதனுடன் உரையாடுவதில்லை. ஆனால் இங்கு சர்ப்பம் தர்க்கம் செய்து கதைப்பதை பார்க்கிறோம். எப்படி சாத்தானால் பீடிக்கப்பட்டவர்கள் சாத்தானின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து அவனது வார்த்தைகளை பேசுகிறார்களோ அதேபோல் இந்த சர்ப்பமும் சாத்தானால் ஆட்கொள்ளப்பட்டிருந்தது. 

இனி, 

வெளிப்படுத்தின சுவிஷேசம் 12:9, 20:2

உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச்சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள். (வெளி. 12:9)

பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருஷமளவுங் கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருஷம் நிறைவேறும்வரைக்கும் அது ஜனங்களை மோசம்போக்காதபடிக்கு அதைப் பாதாளத்திலே தள்ளியடைத்து, அதின்மேல் முத்திரைபோட்டான். (வெளி. 20:2)

இவ்வசனங்களின் பிரகாரம் இந்தச் சர்ப்பம் சாதாரண பாம்பல்ல என்னும் பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பம் என்றும் அறிகிறோம். பழைய எனற பதத்திற்கு கிரேக்க மொழியில் தொடக்கத்திலிருந்து என்னும் கருத்தும் உண்டு. அதாவது வெளிப்படுத்தின சுவிஷேசத்தில் யோவான் பார்க்கும் சர்பமும் ஆதியாகமம் 3ஆம் அதிகாரத்தில் விபரிக்கப்பட்டிருக்கும் சர்ப்பமும் ஒன்றுதான். அது சாதாரண பாம்பல்ல

1)அது மற்ற சர்பங்களை விட வித்தியாசமானது என்பதைக் குறிக்க சர்பமாகிய அது என்றும் அந்தச் சர்ப்பம் ஆங்கிலத்தில் (The)  என்று வலியுறுத்தி கூறப்பட்டுள்ளது.

2)அது மற்ற எல்லா மிருகங்களையும் விட தந்திரமுள்ளதாய் இருந்தபடியால் அவற்றிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது

3)அது மற்ற சாதாரண பாம்புகளைப் போலல்லாது அல்லாமல் ஏவாளோடு பேசும்போது திறமையுடன் சிந்தித்து தர்க்கம் செய்யக் கூடியதாயிருந்த்து. 

ஆகவே வேத்த்தில் கொடுக்கப்பட்டிருக்கும் சான்றுகளைப் பார்த்தால் குறிப்பிட்ட இந்தச் சர்ப்பம் ஆதாம் ஏவாள் வீழ்ச்சி அடையச் செய்யும் ஒரே சிறப்பான பணிக்காக சாத்தனால் ஆட்கொள்ளப்பட்டு சாத்தனுடைய வலிமையைப் பெற்றிருந்தது.

 

தன் பாவத்தை அறிக்கையிட்டு மன்னிப்புக் கேட்பதற்கு சாத்தியம் இல்லாதபடியால் சர்ப்பத்தை எந்த கேள்வியும் கேட்கவில்லை. (வசனங்கள் 9, 11, 13 ஒப்பிடவும்). கடவுள் சாத்தானுக்கும் சர்ப்பத்திற்கும் உடனே தீரப்பளித்து தண்டனை அளிக்கிறார் 

ரோமர் 8:19-22 இல்

மேலும் தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்குச் சிருஷ்டியானது மிகுந்த ஆவலோடே காத்துக்கொண்டிருக்கிறது. 20 அதேனென்றால் சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும் என்கிறநம்பிக்கையோடே, 21 அந்தச் சிருஷ்டியானது சுயஇஷ்டத்தினாலே அல்ல, கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது. 22 ஆகையால் நமக்குத் தெரிந்திருக்கிறபடி, இதுவரைக்கும் சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது.

பகுதியை வாசிக்கும்போது பாவம் உலகில் நுழைந்ததினால் காரணமாக தேவன் பூமியை சபிப்பதினால் படைக்கப்பட்டவைகள் யாவும் சீரழிவு அடைந்தன் என்று காண்கிறோம். சர்ப்பமும் பெருமளவு மாற்றமடைந்து வயிற்றினால் நகரும் துன்பத்திற்குள்ளானது

(Source : Genesis(T) by Appleby p 58, 70)  

 

மேலும் விளக்கம்

சர்பமும் வேதனால் சிருஷ்டிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இது தேவனின பார்வையில் நல்லதாகவே இருந்தது. (ஆதி 1:31) ஆனால் ஏவாளிடம் வந்த சர்பம் சகல காட்டு ஜீவன்களைப் பார்க்கிலும் தந்திரம் மிக்கதாய் இருந்தது. (ஆதி 3.1) இவ்வசனம் தந்திரம் எனும் பதம் நேரடியான அர்த்த்த்தோடு அல்ல (நீதி. 12:16,  13:16,  மத்தேயு 10:10) எதிரிடையான அர்த்த்த்துடன் உபயோகிக்கப்பட்டுள்ளது. யோபு 5.12, 15.5) சாத்தான் மக்களை ஏமாற்றுவதற்காக ஒளியின் வேஷம் தரித்துக் கொண்டு வருவான். (2 கொரி. 11:14) இங்கு தந்திரமுள்ள சர்ப்பமாக பாம்பின் உருவில் வந்தான் (2 கொரி. 11:3)

 

பாம்பு பற்றி இணையத்தில் திரட்டிய சில தகவல்கள்

ஊர்வன இனத்தைச் சேர்ந்தது. ஊர்வன பெரும்பாலும் கால்கள் கொண்டவை. ஆனால் பாம்பிற்கு கால்கள் இல்லை 

உ-ம் ஆமை, ஓணான், முதலை, பல்லி, உடும்பு

 

பாம்பிற்கு காதுகள் கிடையாது. இதனால் கேட்கும் திறன் இல்லை ஆனால் நிலத்தில் ஏற்படும் அதிர்வுகளை உணர்ந்து கொள்ளும்.  

 

மகுடி இசையை கேட்டு பாம்பு மயங்குவதில்லை. ஆனால் பாம்பாட்டிகளினால் நிலத்தில் ஏற்படுத்தப்படும் அதிர்வுகளை உணர்ந்து கொள்ளும் திறன் உடையது. 

 

ஊர்வனவற்றில் விஷம் மிக கொண்டது பாம்பு ஆகும். 

உலகில் ஆண்டுதோறும் ஏறத்தாழ 125,000 மக்கள் நச்சுப் பாம்புக்கடியால் இறக்கின்றனர் என்று கணிக்கப்பட்டுள்ளது http://www.who.int/bloodproducts/publications/en/bulletin_1998_76(5)_515-524.pdf

 

 

 



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

Seraphim

Seraphim in Hebrew means “flaming serpents.” In Judeo-Christian tradition, the Seraphim are the order of angels who surround the Throne of the Presence. They appear by name in the bible only once, in the vision of Isaiah:

“… I saw the Lord sitting upon a throne, high and lifted up; and his train filled the temple. Above him stood the Seraphim; each had six wings: with two he covered his face, and with two he covered his feet, and with two he flew.”

The Seraphs are also referred in the apocryphal Book of Enoch, and are associated with the “fiery serpents” who assaulted the Israelites in the Book of Numbers.

A seraph is most often depicted as one to four heads surrounded by six flaming wings, often covered with a multiplicity of eyes.

---

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
பாம்பிற்கு கால்கள் இருந்தனவா? என் கேள்வி இதுவே!!!!
Permalink  
 


சகோ சில்சாம் :நான் எழுதப்போகும் கருத்துக்கள் யாவும் ஏற்கனவே சாதுஜி ......

கோல்டா: சாது அப்படி உபதேசிக்கிறார் என்பது உங்கள் கற்பனையேயன்றி வேறல்ல.

சகோ சில்சாம் :மற்றும் ப்ரன்ஹாம் கூட்டத்தாரால் உபதேசிக்கப்பட்டு உலகத்தின் பல்வேறு மொழிகளில் அச்சிடப்பட்டு உலகெங்கும் விநியோகிக்கப்பட்டு ஆரோக்கிய உபதேசத்தில் நிற்கும் பெரும்பாலான போதகர்களாலும் விசுவாசிகளாலும் புறக்கணிக்கப்பட்டது தான்;

கோல்டா: அவர்(Branham) இப்படியெல்லாம் பேச ஆரம்பித்தவுடன், நீங்க சொன்னபடி பலர் அவரை விட்டு விலகி விடுகிறார்கள். அவர் இறந்த கார் விபத்தே ஆண்டவரின் நியாயத்தீர்ப்புதான். இதுக்கு மேல இந்த மனுஷனை பூமியில் வைத்தால் தாங்காது என்று எடுத்துக் கொண்டார் என்று எங்கோ வாசித்த ஞாபகம்.

சகோ சில்சாம் :மனிதக் குரங்கு...

கோல்டா: அப்படியெல்லாம் அல்ல , ஏதேன் தோட்டத்து சர்ப்பம் ரொம்ப அழகா இருக்குமாம். அப்ப, எல்லா மிருகங்களும் பேசும் போல. சர்ப்பமும் , ஏவாளும் நல்ல friends ஆம். எங்கேயும் சேர்ந்துதான் போவாங்களாம். என்வே தான் அது சொன்னதை ஏவாள் காது கொடுத்துக் கேட்டாங்களாம். பழத்தை சாப்பிட்டாங்களாம்.

 பாடம்: சாத்தான் நம் நெருங்கிய நண்பர்களையும் உப்யோகப்படுத்தி, தேவ சித்தத்திலிருந்து நம்மை விலகிப் போகப் பண்ணக் கூடும். நம் ஆண்டவர் பேதுருவை அப்பாலே போ சாத்தானே என்று சொன்னதுபோல் நமக்கும் சொல்லத் தெரிய வேண்டும்.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
RE: பாம்பிற்கு கால்கள் இருந்தனவா? என் கேள்வி இதுவே!!!!
Permalink  
 


Mr.Peter,

    Your statement is "self defeating". You are saying that there is no verse to support your question. And at the same time, how can you say that "because of the verses, I got that question?".

   Looks like there is some hidden motives behind your question. Sorry to say this.

 



__________________


Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 10
Date:
Permalink  
 

///என் கேள்விக்கு நீங்கள் பதில் அளிக்காமல் உதாசீனம் செய்வது ஏனோ? சாத்தான் பாம்பு என்ற பிராணியை உபோயோகித்தான் என்று எதனால் நம்புகிறீர்கள்? எந்த வேத வசனம் உங்களை அந்த நம்பிக்கைக்கு கொண்டு சென்றது? நீங்கள் அதை கொடுத்தால், உங்களுக்கு பதிலை உணர வைக்க முடியும் என்று நம்புகிறேன்.

   உண்மையை அறிந்து கொள்ள கேள்வி கேட்டால், நீங்கள் இதற்கு பதில் சொல்லுவீர்கள், உங்களுக்கும் பதில் கிடைக்கும்.//

நிட்சயமாக இதற்கு வேதவசனம் இல்லை!!  இருப்பினும் வேதத்தின் வசனங்களைக் கொண்டே இந்த தீர்மானத்தை எடுத்தேன்!!! 

நண்பர் சில்சாம் அவர்களே; உங்கள் வாதம் சரியே....  இருந்தாலும் நீங்கள் எழுதிய பதில் ஆகிய ///
அந்த சுகத்தையே அவள் ஆதாமுக்கும் கற்றுத் தருவாள்; இதனால் இரண்டு கரு உருவாகி ஒன்று சாத்தானின் கருவினால் உருவான காயீனாகவும் மற்றொன்று ஆதாமின் கருவினால் உருவான ஆபேலாகவும் பிறக்கும்; இதுவே கனியைப் புசித்தல் என்று நாகரீகமாக வேதத்தில் குறிப்பிடப்படுகிறது;இது ஏன் பாவமாகக் கருதப்பட்டது என்றால் தேவன் தம்முடைய சாயலின்படி படைத்த மனிதனுக்கு மிருகங்களைப் போன்ற இனவிருத்தி முறையை நியமிக்கவில்லையாம்;இதனை மிருகரூபத்தில் வந்து சாத்தான் உடைத்துப்போட்டான்;எனவே ஆதிமுதலாகவே பெண் விழுந்து போகிறவளாகவும் விழப்பண்ணுகிறவளாகவும் இருக்கிறாள்;/// 

இதுதான் புரியவில்லை?  சகோதரரே தயவுசெய்து விளக்கமுடியுமா ?
 


__________________

நீதிமொழிகள் 16:18 ''அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை''.



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

Stanis Peter wrote:

நண்பர் சில்சாம் அவர்களே,  தாங்கள் கிழே  எழுதிய பதிவுக்கும் என் கேள்விகளுக்கும் என்ன சம்பந்தம்!!!


நண்பர் பீட்டர் அவர்களே,

சம்பந்தமில்லாமல் நான் என்ன எழுதியிருக்கிறேன் என்று கொஞ்சம் சொல்லுவீர்களா,ஒருவேளை ரொம்ப விளக்கமாக ஏதாவது எழுதிவிட்டேனோ..? பாம்பைக் குறித்த கேள்விக்கு பாம்பைக் குறித்த தகவலைத் தானே எழுதியிருக்கிறேன்..?



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
Permalink  
 

திரு.ஸ்டானிஸ் பீட்டர்,

      என் கேள்விக்கு நீங்கள் பதில் அளிக்காமல் உதாசீனம் செய்வது ஏனோ? சாத்தான் பாம்பு என்ற பிராணியை உபோயோகித்தான் என்று எதனால் நம்புகிறீர்கள்? எந்த வேத வசனம் உங்களை அந்த நம்பிக்கைக்கு கொண்டு சென்றது? நீங்கள் அதை கொடுத்தால், உங்களுக்கு பதிலை உணர வைக்க முடியும் என்று நம்புகிறேன்.
   உண்மையை அறிந்து கொள்ள கேள்வி கேட்டால், நீங்கள் இதற்கு பதில் சொல்லுவீர்கள், உங்களுக்கும் பதில் கிடைக்கும்.


__________________


Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 10
Date:
பாம்பிற்கு கால்கள் இருந்தனவா? என் கேள்வி இதுவே!!!!
Permalink  
 


நண்பர் சில்சாம் அவர்களே,  தாங்கள் கிழே  எழுதிய பதிவுக்கும் என் கேள்விகளுக்கும் என்ன சம்பந்தம்!!!  வேலையால் வந்த பின்  இதற்கு யாராவது பதில் எழுதி இருப்பார்களா என்று பார்த்தல் ஒன்றும் இல்லை!!!!  சரி பரவாய் இல்லை இதைப் போலவே இன்னும் ஒரு கேள்வியே வேறு ஒரு புதிய திரியில் முன்வைக்கிறேன். அதை ஆராய்வோம் !!!

//இயேசு கிறிஸ்து யூத ராஜ சிங்கம் என்று அழைக்கப்படுகிறார். இது எதைத் தெரிவிக்கிறது?//   தேவனால் வாக்களிக்கப்பட்ட வித்து இயேசுகிறிஸ்துவே!!!  அவர்தான் யூதர்களுக்கு எல்லாம் ராஜா!!!



-- Edited by Stanis Peter on Friday 15th of April 2011 08:57:04 PM

__________________

நீதிமொழிகள் 16:18 ''அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை''.



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
RE: பாம்பிற்கு கால்கள் இருந்தனவா? என் கேள்வி இதுவே!!!!
Permalink  
 


//II பேதுரு 2 : 4. பாவஞ்செய்த தூதர்களை தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்து;

முன்னொரு சமயம் தேவ தூதர்களில் ஒருவனாக மென்மையான நிலையில் இருந்த அவன், 'டார்ட்ட்ராஸ்' என்று பைபல் குறிப்பிடப்படுகிற கீழ்தனமாக நிலைக்குப் தள்ளப்பட்டான் என்று சொன்னதற்கு சர்ப்பத்துக்கும் சம்மந்தம் என்ன?//

சகோதரரே நீங்கள் எழுதுவதை பார்த்தால் நீங்கள் இந்தவிஷயங்களில் முன்னேமே ஒரு முடிவுக்கு வந்து விட்டது போல தெரிகிறது. நீங்கள் என்ன நினைகிறீர்கள் என்று எழுதினால் நாங்களும் கற்றுக்கொள்வோம் அல்லது உங்களுடைய முடிவு ஏன் சரி அல்லது தவறு என்று விவாதிக்கலாம்



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

golda wrote:

நீ உன் வயிற்றினால் நகர்ந்து....

சபிக்கப்படும் வரை அப்படி இல்லை, காலால் தான் நடந்தது என்று எடுத்துக் கொள்ளலாம்.


பெண் வாசகர்கள் தயவுசெய்து மன்னிக்கவும்;நான் எழுதப்போகும் கருத்துக்கள் யாவும் ஏற்கனவே சாதுஜி மற்றும் ப்ரன்ஹாம் கூட்டத்தாரால் உபதேசிக்கப்பட்டு உலகத்தின் பல்வேறு மொழிகளில் அச்சிடப்பட்டு உலகெங்கும் விநியோகிக்கப்பட்டு ஆரோக்கிய உபதேசத்தில் நிற்கும் பெரும்பாலான போதகர்களாலும் விசுவாசிகளாலும் புறக்கணிக்கப்பட்டது தான்;

அதாவது ஏவாளை வஞ்சித்துப்போட்ட பாம்பைக் குறித்து இங்கே எழுப்பப்பட்ட கேள்விகள் தற்போது சபிக்கப்படுவதற்கு முன் அதற்கு கால்கள் இருந்தது என்ற அளவில் இருக்கிறதல்லவா, இதற்கு அடுத்த கட்டத்தில் அது ஏறக்குறைய மனிதக் குரங்கு ரேஞ்சுக்கு விவரிக்கப்படும்; அது ஒரு ஆண் பாம்பாக இருக்கும்;எனவே அதற்கு ஆண் குறியும் இருக்கும்;அது முதன்முதல் ஏவாளுக்கு ஆதாமுக்கும் முன்னால் காம சுகத்தை அள்ளித்தரும்.

அந்த சுகத்தையே அவள் ஆதாமுக்கும் கற்றுத் தருவாள்; இதனால் இரண்டு கரு உருவாகி ஒன்று சாத்தானின் கருவினால் உருவான காயீனாகவும் மற்றொன்று ஆதாமின் கருவினால் உருவான ஆபேலாகவும் பிறக்கும்; இதுவே கனியைப் புசித்தல் என்று நாகரீகமாக வேதத்தில் குறிப்பிடப்படுகிறது;இது ஏன் பாவமாகக் கருதப்பட்டது என்றால் தேவன் தம்முடைய சாயலின்படி படைத்த மனிதனுக்கு மிருகங்களைப் போன்ற இனவிருத்தி முறையை நியமிக்கவில்லையாம்;இதனை மிருகரூபத்தில் வந்து சாத்தான் உடைத்துப்போட்டான்;எனவே ஆதிமுதலாகவே பெண் விழுந்து போகிறவளாகவும் விழப்பண்ணுகிறவளாகவும் இருக்கிறாள்;

இந்த இரகசியமே இத்தனை காலம் சீல் பண்ணப்பட்டிருந்தது; ப்ரன்ஹாம் தான் முதன்முதலில் அந்த சீலை, அதாவது ஏவாளின் சீலை அல்ல, சத்தியத்தின் சீலை உடைத்தவராம்; ஏன் என்னை அப்படி உக்கிரமாக பார்க்கிறீர்கள்? உங்களுக்கே இத்தனை கோபம் வருமானால் அதனை வாசித்து வாசித்து கடந்த 18 வருடமாகப் புழுங்கிக்கொண்டிருக்கும் என்னுடைய மனம் என்ன பாடுபடும்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

Stanis Peter wrote:

II பேதுரு 2 : 4. பாவஞ்செய்த தூதர்களை தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்து;

முன்னொரு சமயம் தேவ தூதர்களில் ஒருவனாக மென்மையான நிலையில் இருந்த அவன், 'டார்ட்ட்ராஸ்' என்று பைபல் குறிப்பிடப்படுகிற கீழ்தனமாக நிலைக்குப் தள்ளப்பட்டான் என்று சொன்னதற்கு சர்ப்பத்துக்கும் சம்மந்தம் என்ன?


 

 ஒன்றும் இல்லை!



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

Stanis Peter wrote:

பைபளில் சர்ப்பத்தைப் பார்த்து பொய்க்குப் பிதா என்றும் பழையபாம்பு என்றும் விவரிக்கிறது!!!  இவ்விரண்டு பட்டப்பெயர்களும் எதைத் தெரிவிக்கின்றனர்?


இயேசு கிறிஸ்து யூத ராஜ சிங்கம் என்று அழைக்கப்படுகிறார். இது எதைத் தெரிவிக்கிறது?

 

 

 

 

 



__________________


Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 10
Date:
Permalink  
 

II பேதுரு 2 : 4. பாவஞ்செய்த தூதர்களை தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்து;

முன்னொரு சமயம் தேவ தூதர்களில் ஒருவனாக மென்மையான நிலையில் இருந்த அவன், 'டார்ட்ட்ராஸ்' என்று பைபல் குறிப்பிடப்படுகிற கீழ்தனமாக நிலைக்குப் தள்ளப்பட்டான் என்று சொன்னதற்கு சர்ப்பத்துக்கும் சம்மந்தம் என்ன?



__________________

நீதிமொழிகள் 16:18 ''அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை''.



Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 10
Date:
Permalink  
 

பைபளில் சர்ப்பத்தைப் பார்த்து பொய்க்குப் பிதா என்றும் பழையபாம்பு என்றும் விவரிக்கிறது!!!  இவ்விரண்டு பட்டப்பெயர்களும் எதைத் தெரிவிக்கின்றனர்?



__________________

நீதிமொழிகள் 16:18 ''அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை''.



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

நீ உன் வயிற்றினால் நகர்ந்து....

சபிக்கப்படும் வரை அப்படி இல்லை, காலால் தான் நடந்தது என்று எடுத்துக் கொள்ளலாம்.



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

சாத்தானே அந்த அற்ப பிராணியே தவறாக பயன்படுத்தினவன்!!! அப்படி இருக்க தேவன் ஏன் தான் படைத்த அந்தப் பாம்பைப் பார்த்து சபிக்கவேண்டும்?

 

பிசாசுக்கு இடம் கொடுக்கக் கூடாது. அது தான் பாம்பு செய்த தவறு!



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

பாம்பிற்கு கால்கள் இருந்தனவா? என் கேள்வி இதுவே!!!!

இருந்தது. அது மட்டுமல்ல பேசவும் செய்தது!!

 



__________________


Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 10
Date:
Permalink  
 

எனக்கு புரியவில்லை என்றே இந்தக் கேள்வியே கேக்கிறேன். இயேசுவை தொளமருக்கும் அன்பு, பெறேயான்ஸ் அவர்களும் இந்த கேள்விக்கு பதில் தரலாம் அல்ல!!!



__________________

நீதிமொழிகள் 16:18 ''அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை''.

1 2  >  Last»  | Page of 2  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard