Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயேசுவின் சரீரம் எங்கே, அவர் சரீரத்தில் உயிர்த்தெழுந்தாரா..?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
இயேசுவின் சரீரம் எங்கே, அவர் சரீரத்தில் உயிர்த்தெழுந்தாரா..?
Permalink  
 


போனதெல்லாம் போக தற்போது ஒரு சீஸனல் சர்ச்சையை (மேசியாவின்) எதிரியான கோவை பெரேயன் கிளப்பியிருக்கிறார்;அது என்னவென்றால் இயேசுவானவர் சிலுவையில் மரித்து அடக்கம் பண்ணப்பட்டதோடு சரி, அதற்குப் பிறகு அவருடைய சரீரத்துக்கு என்னவானதோ அதைக் குறித்து எந்த கவலையும் இல்லை;ஆனால் அவர் ஆவியில் உயிர்த்தெழுந்தார், என்கிறார்.

இது கிறித்தவர்களுக்கு முற்றிலும் புதியதான அதிர்ச்சிகரமான செய்தியாகும்; முகமதியர்கள் சிலுவையில் மரித்தது இயேசு அல்ல என்பதுடன் அவருடைய உயிர்த்தெழுதல் தொடர்பான மற்ற நடபடிகள் முழுவ‌தும் கட்டுக்கதை எனவும் புனையப்பட்டது என்றும் உலகம் முழுவதும் அனைத்து ஊடகங்களிலும் பிரச்சாரம் செய்துவருவது அனைத்து கிறித்தவர்களுக்கும் தெரியுமோ தெரியாதோ அதனை நாம் பொருட்படுத்துகிறதில்லை;ஏனெனில் அவர்கள் அதனை வேதத்திலிருந்து எடுத்துச்சொல்லவில்லை;அவர்களுக்கென்று தனியாக எழுதிகொடுக்கப்பட்ட குரான் என்ற முகமதுவின் புத்தகத்திலிருந்து சொல்லுகிறார்கள்.

ஆனால் இந்த கோவை பெரேயன் கூட்டத்தாரோ நம்முடைய வேதத்திலிருந்தே துணிகரமாக எடுத்து இதுபோன்ற பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பிக்கொண்டிருக்கிறார்கள்; மொழியின் பெயராலும் மூலப்பிரதிகளின் பெயராலும் வியாக்கியானங்களின் பெயராலும் இந்த மடத்தனமான கொள்கைகளை சத்தியம் என்ற பெயரில் பல்வேறு தூஷணமான வார்த்தைகளுடன் கலந்து பிதற்றுகிறார்கள்;ஆனாலும் இந்த XXXXXXXXXXXX பயன்படுத்துபவை அனைத்தும் ஆரோக்கிய உபதேசத்தை ஏற்றுக்கொண்டு அதனை முன்னெடுத்துச் செல்ல பாடுபட்ட பெரியவர்களின் உபகரணங்களே; இந்த கூட்டத்தாரின் பிதாமகனான இரஸல் ஒரு துரும்பையும் கிறித்தவத்தின் மேன்மைக்காக கிள்ளிப்போட்டவன் அல்ல.

அவன் ஊற்றிக்கொடுத்த மதுவில் வெறிகொண்ட XXXXXX வெறியர்களான இவர்களுக்கு முந்தைய தலைமுறையின் சில்லறைகள் தந்திரமாக இரஸல் பெயரை மறைத்துவிட்டு வேதமாணவர்கள் என்ற பெயரில் இயங்கினார்கள்; அவர்களில் ஒருவனால் பாதிக்கப்பட்ட கோவை பெரேயன் தானும் விஷம் ஏற்றப்பட்டு கடந்த சுமார் 3 வருடமாக தமிழ் கிறித்தவ உலகின் இணையத்தைப் பாழாக்கிக்கொண்டிருக்கிறார்.

இவர் விரைவில் அழிக்கப்படுவார்; ஆனால் இவரால் வெறியூட்டப்பட்ட அப்பாவி இளைஞர்களின் இரத்தப்பழிக்கு இவரும் இவர் சந்ததியாரும் ஆளாகும் ஆபத்திலிருந்து இவரையும் இவர் கூட்டத்தாரையும் தப்புவிக்கவே இரவும் பகலும் போராடிக்கொண்டிருக்கிறோம்;இந்த குழப்பவாதிகளுடன் போராடுவதால் என்னைப் போன்றவர்களுக்கு எந்த பயனும் இல்லை; இதனால் என்னுடைய பக்திவிருத்திக்கோ என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கோ எந்த பிரயோஜனமும் இல்லை; மாம்சத்தின்படி கண்பார்வையிழந்தோர் மத்தியில் நான் ஊழியம் செய்தால் என்மீது நல்லெண்ணம் கொண்ட சிலர் எனக்கு உதவி செய்யமுன்வருவார்கள்;என் வருமானமும் பெருகும்; அதுபோன்ற சர்ச்சைக்கிடமில்லா பணியில் பல ஊழியர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்; ஆனால் ஆத்துமாவைத் தெளிவிக்கும் அவசரத்தில் போராடும் என்னுடைய இந்த எழுத்துப்பணிக்கு எந்தவிதமான சன்மானமும் யாரிடமிருந்தும் பெறப்படவில்லை என்பது சத்தியமாகும்; ஆனால் கொஞ்சமும் XXXXX நான் இங்கே கலெக்ஷன் பண்ணுவதாகவும் வீடுவீடாகச் சென்று கள்ளப்போதகம் செய்து சம்பாதித்து குடும்பம் நடத்துவதாகவும் பொய்மூட்டைகளை அவிழ்த்துவிடுகிறார், கோவை பெரேயன்; இதனால் எனக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை; அவர் என்னைக் குறித்து என்னவேண்டுமானாலும் பேசட்டும்; கேஸ் போடட்டும், கேஸ் விடட்டும், எதற்கும் நாம் அஞ்சப்போவதில்லை என்பதை ஏற்கனவே அறிவித்திருக்கிறேன்.

ஆனால் ஒரு தனி மனிதனின் வாழ்வில் முக்கியமான மாற்றத்துக்குக் காரணமாக இருக்கக்கூடிய சிலுவையைப் பற்றிய உபதேசத்தில் தொடர்ந்து குழப்பம் விளைவிக்கும் பயங்கரத்தை சகிக்கவே முடியாது; முதலில் ஆத்துமா கிடையாது என்றார்கள்; எனவே இயேசுவுக்கும் ஆத்துமா கிடையாது; இப்போது இயேசு சரீரத்தில் உயிர்த்தெழவில்லை என்கிறார்கள்; எனவே அவரும் காணக்கூடாத ஆதிநிலைக்கு அதாவது முன்பு இருந்த மிகாவேல் தூதனின் தன்மைக்குச் சென்றுவிட்டார் என்கிறார்கள் போலும்.

images?q=tbn:ANd9GcR25-f4g5fecfKe-aWZyJrheEqVlUCL89yBFFLeuXIaoXwhnW33images?q=tbn:ANd9GcSsv0oE2Ataa9V6TGFaVaE5cmVCIh2HiVfvm-TLBYCBTX1KFep6Yw

இயேசு சரீரத்தில் உயிர்த்தெழவில்லை என்றால் உயிர்த்தெழுதல் என்ற வார்த்தையின் பொருள் தான் என்ன? ஒரு ஆவி எழுந்து செல்லுவதையா உயிர்த்தெழுதல் என்கிறோம்; ஒன்று வார்த்தையின் படியான அர்த்தத்திலிருந்து ஒரு முடிவுக்கு வரவேண்டும் அல்லது பொதுவான அபிப்ராயங்களினால் உருவாகும் உணர்வின்படியான நிலைக்கு வரவேண்டும்; இந்த ரெண்டு நிலைக்கும் வர விருப்பமில்லாத ரெண்டாங் கெட்டான்களுக்கு எப்படி புரியவைக்க இயலும்? உயிர்த்தெழுதல் என்ற குறிப்பிட்ட வார்த்தையின் ஆங்கில வார்த்தையிலிருந்தாகிலும் பொருள் தேடுவோமென்று அங்கு சென்றேன். அங்கே இருக்கும் குறிப்புகளை சுருக்கமாகத் தருகிறேன்; முழு விவரத்தையுமறிய தொடுப்பைத் தொடரவும்.

Resurrection:-

From Wikipedia, the free encyclopedia
Jump to: navigation, search

Resurrection refers to the literal coming back to life of the biologically dead. It is used both with respect to particular individuals or the belief in a General Resurrection of the dead at the end of the world. The General Resurrection is featured prominently in Jewish, Christian, and Muslim scriptures. The death and resurrection of Jesus is the central focus of Christianity.

(Contd...)

ஆனாலும் விக்கிப்பீடியாவையெல்லாம் நான் ஏற்கமாட்டேன் எனக்கு வேதமே போதும் என்பார்; அதில் ஏதாவது புரியவில்லையென்றால் திருதிருவென முழித்துவிட்டு இரஸல் சொன்னதே போதும், அவரு சரியாத்தான் சொல்லியிருப்பாரு என்பார்; ஒரு மொழியிலிருந்து புறப்பட்ட ஒரு குறிப்பிட்ட வார்த்தைக்குரிய பொருளையறிய மொழி அகராதியைத் தானே நாடவேண்டும்? இதில் என்ன தவறு இருக்கமுடியும்? மொழியும் மொழி அகராதியும் மொழி இலக்கணமும் இல்லாமலா வேதத்தை மொழிபெயர்த்தார்கள்? மொழி என்றாலே இருவேறு கருத்துக்கள் இருக்கும்தானே? ஒரு மொழியை மற்றொரு மொழிக்கு மாற்றும் போது திரிபுகள் இருக்கும்தானே? அதனை வட்டார உணர்வின்படியாகத்தானே கிரகித்துக்கொள்ளமுடியும்? இந்த எந்த சாதாரண நடைமுறைக்கும் ஒத்துவராமல் ஆகாயத்தில் சிலம்பம் பண்ணும் மதியீனமான போதனையை இரஸலின் வழிவந்தோரிடமிருந்து பெற்று தன்னையும் வேதமாணவர் என்று கூறிக்கொள்ளும் இவர்களை எப்படி திருத்தமுடியும்?

images?q=tbn:ANd9GcRMbJbNZOr32pAvp36TfwcOVXeoTJNA0P4s3gwr3P0EgYax_VAyimages?q=tbn:ANd9GcSRi_iV4E91KfEhC5BRjXLP-wZhHL9w6JrOIWmgw0NY2ZEWKX9y

இயேசு மாம்சத்திலிருந்து உயிர்த்தெழுந்து ஆவியில் மறுரூபமாகி மகிமையின் சரீரத்திலிருந்து காணக்கூடியவராகவும் தொடக்கூடியவராகவும் கேட்கக்கூடியவராகவும் சாதாரண மனிதர்களைப் போல உணவு உட்கொள்ளக்கூடியவராகவும் அதே நேரத்தில் இயற்கைக்கு மேற்பட்ட வல்லமையினால் வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டவராகவும் இருக்கும் இவையனைத்துமே சாதாரண மனிதனால் கிரகிக்க முடியாத அற்புத செயல்களாகும்; இதைக் குறித்து அப்போதே ஆச்சர்யத்துடன் பார்த்து பிரமித்து நின்ற சீடர்களிடம், இரண்டு தூதர்கள் தோன்றி, அவர் சென்ற வண்ணமாக மீண்டும் வருவார் என்று சொல்லிச்சென்றார்கள்.

இயேசுவானவர் சரீரத்தில் உயிர்த்தெழவில்லை என்று வேதப்புரட்டு நிகழ்த்தும் கோவை
பெரேயனின் கூற்றுக்கு யௌவன ஜனம் தளத்தின் நண்பர்கள் முன்வைத்துள்ள கருத்துகளை இங்கே பதிக்கிறேன்;இனி இந்த சர்ச்சை தொடர்பான தத்தமது கருத்துக்களை தள நண்பர்கள் இங்கேயே தொடர்ந்து பதிக்கவும் வேண்டுகிறேன்.உயிர்த்தெழுந்த கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக‌.

Chillsam:-

பாம்பைக் கோபப்படுத்தி விஷத்தை உமிழச் செய்வார்கள்;பிறகு அந்த விஷத்தைக் கொண்டே பாம்பின் விஷத்தால் பாதிக்கப்பட்டோரை குணமாக்குவார்கள் என்று கேள்விபட்டிருக்கிறோம்;அதுபோலவே நம்முடைய தரத்தைத் தாழ்த்திக்கொண்டு சாக்கடைக்குள் புரண்டு கொண்டிருக்கும் கோவை XXXகளை எப்படியாவது மீட்டெடுக்க முயற்சித்து வருகிறோம்;இதன் பாதிப்பும் அதுகள் தெளிக்கும் சேற்றினால் நம்முடைய ஆடைகளெல்லாம் கறைபடுகிறது;ஆனாலும் இதன் முழுபலனும் தற்போது தெரியவராது;ஆனாலும் நமக்குள் ஊடுறுவியிருக்கும் ஒரு விகாரமான கூட்டத்தை எப்படியேனும் பகிரங்கப்படுத்தும் பணியை சிரமேற் கொண்டு செய்துவருகிறோம்.

அவ்வப்போது இதுபோல பட்டு தெறிப்பது போல அபூர்வமாக தங்கள் கொள்கைகளை எடுத்துவிடுவார்கள்;இதைக் கொண்டே இவர்களை நாம் வித்தியாசப்படுத்தி அறியமுடியும்;உதாரணத்துக்கு இதோ அந்த கோவை
பெரேயன் அறிவித்திருக்கும்
அறிவிப்பை பாருங்கள்,அவ
ர் சொல்லுகிறார்,

// மடத்தனமாக கிறிஸ்து சரீரத்துடன் உயிர்த்தெழுந்தார் என்று எழுதி கிறிஸ்தவத்தின் மானத்தை வாங்க வேண்டாம்!! இதற்கெல்லாம் ரஸ்ஸல் தேவையில்லை, வேத புத்தகமே போதும்!! உமக்கு ரஸ்ஸலை குறித்து ஒன்றும் தெரியாது, உமக்கு தெரிந்ததெல்லாம் மஞ்சல் பத்தரிக்கை நடத்தும் கலெக்ஷன் கள்ள போதகனும் அவனின் உபதேசங்களுமே!! அடுத்தவர்களின் அந்தரங்கத்தை விமர்சிப்பவனை மஞ்சல் பத்திரிக்கை நடத்துபவன் என்று எழுதுவதில் ஒரு தவறும் இல்லை!! //

இயேசுவானவர் மாம்சத்தில் உயிர்த்தெழவில்லை;சரி,அப்படியானால் அவருடைய சரீரம் எங்கே போனது என்றும் சொல்லலாமல்லவா? சொல்லமாட்டார்,அவருடைய வேதப் புரட்டு கிளாஸுக்கு வந்தா தான் சொல்லிக்கொடுப்பாராம்..!

இதைக் கண்டிக்க விரும்பும் நண்பர்களும் சத்தியத்தை அறிந்த சகோதரர்களும் உடனே இதற்குரிய பதிலைப் பதிக்கவும்;மற்றதை பிறகு பார்ப்போம்...

Joseph:-

இயேசு சரீரத்தில் உயிர்த்தெழாவிட்டால் நிச்சயம் மரணத்தின் மீதான் வெற்றி நிரூபிக்கப்பட்டிருக்காது. இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள் மூன்று நாளில் அதை எழுப்புவேன் என இயேசு சொன்னது தன் சரீரத்தை தான். இந்த விளங்காத ஏரியனிஸ்டு ரசலின் கூட்டம் இயேசுவின் உயித்தெழுதலை அம்புலிமாமா, விட்டலாச்சாரியா ரேஞ்ச்சுக்கு ஒப்பிட்டு உளறிக் கொண்டிருக்கிறது. 

//பி.கு. இதை வாசித்தவுடன் கலெக்ஷன் கள்ள போதகனின் புதிய சீஷர்கள் என்னமோ இதை போல் ஒரு எழுத்தை பார்க்காத மாதிரி போய் எல்லா தளங்களிலும் கூப்பாடு போடுவார்கள்!!//

ஆமாய்யா நீங்கள்  எழுதிய பதிவை பார்த்து உங்களது தளத்திலேயே பதில் எழுதலாம் என்று தான் நினைத்தேன் ஆனால் ஏற்கனவே உமது நாகரீகம் தான் ரொம்ப பிரபலமாயிற்றே, நீர் இங்கு வந்து இந்த பதிவை பார்ப்பீர் என தெரிந்து தான் இந்த தளத்தில் எழுதுகிறேன்.

இயேசுவின் சரீர உயிர்தெழுதலுக்கு பின்

1) இயேசு சாப்பிட்டார் (லூக்கா 24:42-43) ஒருவேளை இயேசு ஆவியாய் இருந்தால் எப்படி சாப்பிட்டிருக்க முடியும்

2) மத்தேயு 28:9 இயேசுவின் ஆவியாக மட்டும் இருந்திருந்தால் அவரது பாதங்க்களை எப்படி தழுவியிருக்க முடியும், கொஞ்ச்சம் யோசிங்க்ணா...

3) தோமாவுக்கு காண்பித்தது (யோவான் 20:25) , ஒருவேளை அது இயேசுவின் சரீரமாக இல்லாமல் இருந்திருந்தால் தனது கையில் உள்ள ஆணி பாய்ந்த காயம் இருந்திருக்காது

4) யோவான் 20:19-20

இயெசுவின் உயித்தெழுந்த சரீரத்துக்கு கதவையும் தாண்டி வரும் ஆவிக்குரிய தன்மையும், ஏனையோர் சாப்பிடும் அதே முறையில் உணவு சாப்பிடும் மாம்சத்திற்குரிய தன்மையும் இருந்தது. இதுவே மரணத்திற்கு பின் உயிர்த்தெழுந்த சரீரத்தின் தன்மை. அதன் வாயிலாக தான் இயேசு தனது காயங்க்களை காண்பித்தார்.

போங்க்க போய் உங்க ரசல் விட்டுட்டு போன மூல பாஷையில் ஏதாவது நூதனமாக எழுதி வச்சுட்டு போயிருப்பார். பாத்து வழக்கம் போல் சத்தியத்தை புரட்டுங்க...

John:-
நல்ல பதில்கள் சகோ. ஜோசப்..! வழக்கம் போல ரசல் கூட்டம் இயேசுவின் சரிரம் காத்துல கரைஞ்சு போச்சு என்று புளுகும். 1 கொரி.15:50 - ஐ வழக்கம் போல தவறாக திரித்து கொக்கரிக்கும். அதற்கு மேலே பவுல் எழுதியுள்ள ஆவிக்குரிய 'சரிரம்' என்ன என்பதை வசதியாக மறந்து விடும்.

இன்னொரு உபரி தகவலும் சொல்லுகிறேன். ஸ்தோயிக்கர்கள் (Peopl Who practiced Stoicism during Paul's Time) ஆவி உயிரோடு எழுவதை விசுவாசிப்பவர்கள். ஹிந்து மார்கத்தில் உள்ள யோகா போல Asceticism Practice பண்ணுபவர்கள். பவுல் இயேசு கிறிஸ்து ஆவியில் உயிரோடு எழுந்தார் என்று சொன்னால் அவர்கள் கிண்டல் செய்ய அவசியமே இல்லையே!
 
பவுல் அகிரிப்பாவிடம் இயேசுவின் உயிர்த்தெழுதலை குறித்து பேசும் போது அது எல்லாருக்கும் தெரிந்த விஷயம் என்று பேசுகிறார்.
  • இந்தச் சங்கதிகளை ராஜா அறிந்திருக்கிறார்; ஆகையால் தைரியமாய் அவருக்கு முன்பாகப் பேசுகிறேன்; இவைகளில் ஒன்றும் அவருக்கு மறைவானதல்லவென்று எண்ணுகிறேன்; இது ஒரு மூலையிலே நடந்த காரியமல்ல. (அப்போஸ்தலர் 26:32)
யூதர்களும் கூட இயேசுவின் கல்லறை வெறுமையை இருந்தது என்று ஒப்புக்கொண்டு, அவருடைய சீஷர்கள் சரீரத்தை திருடிக்கொண்டு போனதாய் Talmud ல் எழுதிவைத்து இருக்கிறார்கள். ஆவியில் புத்தர் எழுந்தார் என்று புத்தனுடைய சிஷனும் சொல்லலாம். முஹம்மது எழுந்தான் என்று ஒரு முஸ்லிம் சொல்லலாம். என்னடா அத்தாட்சி என்றால் "நான் பார்த்தேன்" என்பான். இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலையும் அது போல ரசலின் சீஷர்கள் கேவலப்படுத்துகிறார்கள்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

«First  <  1 2 | Page of 2  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard