Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயேசுவின் சரீரம் எங்கே, அவர் சரீரத்தில் உயிர்த்தெழுந்தாரா..?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: இயேசுவின் சரீரம் எங்கே, அவர் சரீரத்தில் உயிர்த்தெழுந்தாரா..?
Permalink  
 


//இதுபோலவே, பரலோக ஜீவிகள் காணக்கூடாதவைகளாகவும், வல்லமையுடையவைகளாகவும், அறிவுக்கூர்மை உடையவைகளாகவும் இருப்பதால் அவை ஆவியின் ஜீவிகளாகக் கூறப்படுகின்றன.  இது, நம் ஆண்டவராகிய இயேசு, "தேவன் ஆவியாயிருக்கிறார்" என்று குறிப்பிடுகிற பிதாவாகிய தேவனை மட்டும் குறிக்காதபடி, உயிர்த்தெழுதலுக்குப் பின் இருக்கிற கிறிஸ்துவையும் குறிக்கிறது. வேதம் கூறுகிறது: "நமது கர்த்தரும் இப்போது ஆவியாயிருக்கிறார்." தேவ தூதர்களுக்கும், முதலாம் உயிர்தெழுதலில் பங்குபெறும் திருச்சபையாராகிய மணவாட்டிக்கும், இந்த ஆவிக்குரிய நிலை பொருந்துகிறது. மேலும், சாத்தானும் அவனது தூதர்களும் கூட வல்லமையுள்ள, காணக்கூடாத ஆவியின் ஜீவிகளாக இருப்பதாக வேதம் கூறுகிறது.//

சரியாக ஒரு வருட முன்பு எழுதப்பட்டுள்ள இந்த கருத்துக்களே இயேசுவின் உயிர்த்தெழுதல் சம்பந்தமான (மேசியாவின்) எதிரிகளின் தவறான கொள்கைகளுக்குக் காரணமாக இருக்கிறது;இதன்படி ஆத்துமா என்பது ஒன்றுமில்லை;ஆவி என்பது வெறும் காற்று தானே;சரீரம் எங்கோ ஒளித்து வைக்கப்பட்டுள்ளது;இதுவே இயேசுவுக்கும் பொருந்துமா என்பதை வேதாகமத்தின் விரோதிகள் தான் சொல்லவேண்டும்.

அதாவது (மேசியாவின்) எதிரிகளின் இந்த கட்டுரையின் அடிப்படையிலேயே இயேசுகிறித்துவின் உயிர்த்தெழுதல் சம்பந்தமான கொள்கைகளையும் வகுத்துள்ளார்கள் என்கிறேன்.எனவே அவர்கள் விளக்கமாகவும் வெளிப்படையாகவும் சொல்லாதவற்றை இந்த கட்டுரையின் மூலம் அறிந்து அவர்களுடைய கொள்கைகளின் விபரீதங்களைக் குறித்து புரிந்துகொண்டு அவர்களைக் குறித்து அனைத்து கிறித்தவர்களையும் எச்சரிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்ளுகிறேன்;நம்முடைய நோக்கம் அது மாத்திரமே.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

// மோசேயின் சரீரத்தை தேவனே அடக்கம் செய்தார் என்று இருக்கும் போது, கிறிஸ்துவின் சரீரத்திற்கும் தேவனே நிச்சயமாக ஏற்பாடு செய்திருப்பார் என்பது என் நம்பிக்கை, இது நிச்சயமாக வேதத்தில் இல்லை, வேதத்தில் இல்லாததை யாரும் நம்ப வேண்டும் என்றோ, நம்புங்கள் என்றோ நான் சொல்லுவதில்லை!! இது என் தனிப்பட்ட கருத்து!! //

நல்லா லிங்க்கு கொடுக்கறீங்கய்யா...மனசைக் கெடுத்துக்க‌... நீங்க எதையோ படிச்சுட்டு காமெண்ட் அடிக்க நான் தேவையில்லாமல் வேறு எதையோ படித்து வைக்க மனசெல்லாம் வலிக்கிறது...நீங்களே பாத்து ஏதாவது செய்யுங்க சாமியோவ்..!

http://chillsam.activeboard.com/forum.spark?aBID=134567&topicID=41940925&p=3

 

இயேசுவின் சரீரம் உயிர்த்தெழுந்ததா என்பது குறித்த கருத்துக்களை இங்கே பதிக்கவும்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
இயேசுவின் சரீரம் எங்கே, அவர் சரீரத்தில் உயிர்த்தெழுந்தாரா..?
Permalink  
 


//ஒரு பத்து வயது பிள்ளை வேதம் வாசித்தால் கூட, நரகம் உண்டு, தேவ தூதனுக்கு கால் உண்டு, இயேசு கிறிஸ்து சரீரத்தில் உயிர்த்தெழுந்தார் என்று சொல்லப்பட்டிருப்பதைக் கண்டு பிடித்து விடும்.

இவங்க ஏன் இப்படி இருக்காங்க என்று என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.//

விடை உங்கள் கேள்வியிலே இருக்கு சகோதரியே. இவர்கள் வாசிப்பது வேதம் அல்ல, யாரோ ஒரு பொறம்போக்கு எழுதிய புத்தகம். வேதம் அந்த பொறம்போக்கு எழுதிய புத்தகத்திற்கு ஒத்து போக வில்லை என்றால் வேதத்தை மாற்றிவிடுவார்கள்.


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: இயேசுவின் சரீரம் எங்கே, அவர் சரீரத்தில் உயிர்த்தெழுந்தாரா..?
Permalink  
 


ebi wrote:

பைபிளில் உள்ளதை தப்பும் தவறுமாக புரிந்துகொள்வதையே பிரதானமாக வைத்துள்ளார்கள் போல். Anti-Bible group.


 அற்புதமான கௌரவமான நாகரீகமான பட்டப்பெயர்;நன்றி எபி..! ஆனா பாருங்க இதே பெயரால் வேறொரு சூழ்நிலையில் நம்மை தாக்குவார்கள்; அதுதான் அவர்களுடைய தந்திரங்களிலேயே பிரதானமானது..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

///தன் சீடனை தொட்டு பார்க்க அனுமதித்த கிறிஸ்து இயேசு மரியாளை தொடவிடவில்லை என்பது எல்லாம் ஆறாய்ந்துபார்க்க வேண்டும்!! தன் அப்போஸ்தலர்களுக்கு தான் உயிர்த்தெழுந்தாகிவிட்டது என்று வெளிப்படுத்தவும், அவர்களை திடப்படுத்தி சாட்சிகளாக ஏற்படுத்தவுமே தன்னை அந்த மாதிரி வெளிப்படுத்தினார்!! ஓர் இடத்தில் தோட்டக்காரரை போலவும், மற்றோரு இடத்தில் வழிப்போக்கனை போலவும், ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரியாக தன்னை வெளிப்படுத்தியவர் சரீரம் இருந்ததினால் அல்ல, ஆவியாக இருந்ததினால் மாத்திரமே!!///

 

ச‌ரி ம‌ரியாளை ஏன் தொட‌ அனும‌திக்க‌வில்லை... ஆவி ரூப‌த்தில் இருந்த‌ ஒருவ‌ரை எப்ப‌டி தொட‌ முடியும். ச‌ரீர‌த்தில் இருந்த‌ போது தான் அவ‌ர் த‌ண்ணீரின் மேல் ந‌ட‌ந்தார், இது இயேசுவின் ச‌ரீர‌த்துக்கு மாத்திர‌மே உள்ள‌ த‌னித்த‌ன்மையே. மாம்ச‌ த‌ன்மை உள்ள‌ ஒரு ச‌ரீர‌த்தால் எப்ப‌டி த‌ண்ணீரில் ந‌ட‌க்க‌ முடியும். அவ‌ர‌து சீட‌ர்க‌ள் கூட‌ ஒரு ஆவியை காண்கிற‌தாக‌ தானே எண்ணின‌ர். இதிலிருந்து இயேசுவி ச‌ரீர‌த்துக்கு ஆவிக்குரிய‌, மாம்ச‌த்துக்குரிய‌ த‌ன்மை இருந்த‌து. இயேசுவின் ச‌ரீர‌ம் ம‌றைத்துவைக்க‌ப்ப‌ட்டது என்கிறீர்க‌ள், அப்ப‌டி ஏதாவ‌து வேத‌த்தில் சொல்ல‌ப்ப‌ட்டுள்ள‌தா, சொல்ல‌ப்ப‌டாத‌ ஒன்றை தான் நீங்க‌ள் ந‌ம்புவ‌தில்லையே. அப்புற‌ம் ஏன் இந்த‌ விக‌ற்ப‌ம்.

 

///ஆவிக்குறிய சரீரம், மாம்சத்துக்குறிய சரீரம் என்று இருவருக்கும் சரீரம் என்பது தன்மையை விவரிக்கவே உபயோகப்படுத்தப்பட்ட வார்த்தைகள்!! அதை வெறும் மாம்சம் அல்லது ஆவி என்று வாசித்தாலும் அர்த்தம் மாறாது!!///

 

எப்ப‌டி இது என்ன‌ மூல‌ பாஷை வ‌கைய‌றா விள‌க்க‌மா? 

 

///சுத்து வளைத்து இத்துனை பேசு நீங்கள், அவர் சரீரத்தில் உயிர்த்தெழுந்தார் என்று வசனம் தந்து விவாதத்தை முடித்து வைக்கலாம்!! இப்பொழுது கிறிஸ்து இயேசு சரீரத்தில் இருக்கிறாரா, அல்லது ஆவியானவராக இருக்கிறாரா?? மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜியத்தை சுதந்தரிக்காது என்றால் என்ன?? சரீரத்தோடு பூட்டிய அறைக்குள் நுழைய முடியுமா!! ///

 

ச‌ரீர‌த்தோடு பூட்டிய‌ அறையில் நுழைய‌ முடியுமா, முடியும் ஏனெனில் அவ‌ர் பெற்ற‌து ம‌கிமையான‌ ச‌ரீர‌ம், அத‌ற்கு ஆவிக்குரிய‌ த‌ன்மையோடும் மாம்ச‌த்துக்குரிய‌ த‌ன்மையோடும் செய‌ல்ப‌டும் திற‌ன் இருந்த‌து. அறிவிய‌ல் ஆராய்ச்சிக‌ள் உயிருட‌ன் உள்ள‌ ம‌னித‌னின் ச‌ரீர‌த்தை அடுத்த‌வ‌ரின் க‌ண்க‌ளுக்கு ம‌றைக்கும் க‌ண்டுபிடிப்ப‌டி உருவாக்கிவிட்ட‌து (magical cloak) ஒளி ஊடுருவும் த‌ன்மையை மாற்றி, ஒளியை வ‌ளைன்து போக‌ச்செய்யும் த‌ன்மைகொண்ட‌தாக‌ மாற்றியிருக்கிறார்க‌ள். சாதார‌ண‌ ம‌னித‌னுக்கே, இப்படி செய்ய‌க்கூடிய‌ சாத்திய‌ம் இருந்தால், இயேசுவுக்கு அது முடியாதா? நாம் பார்க்கும் முப்ப‌ரிமாண‌ம் போக‌ ப‌ல‌ க‌ண்ணுக்கு தெரியாத‌ ப‌ரிமாண‌ங்க‌ள் இருக்கின்ற‌ன‌ (அறிவிய‌ல் ப‌டி தான்)  க‌ண்ணுக்கு புல‌ப்ப‌டாத‌ காரிய‌ங்க‌ள் ந‌டைபெறும் ப‌ரிமாண‌ங்க‌ள் அவை. 

 

///நாகரீத்தை குறித்து பேசும் நீங்கள் மண்ணிப்பு கேட்டது பெரிய விஷயம் கிடையாது!! ஆனால் மண்ணிப்பு கேட்கும் அளவிற்கு எழுதியிருக்கிறீர்கள், அப்படி என்றால் உங்களுக்கும் கோபம் வரும், அந்த கோபம் மற்றவர்களுக்கு வரும் போது அதை ஏன் கேள்வி கேட்க்கிறீர்கள் என்று தான் உங்களை கேட்டேன்!! எனக்கு மண்ணிப்பு கேட்கும் சுபாவம் உண்டு என்று சொல்லி தங்களை மேன்மை படுத்திக்கொள்கிறீர்கள்!! உங்களுக்கு பிறர் எழுதும் போது என்ன உணர்சிகள் வருகிறதோ, அதே தான் அடுத்தவர்களுக்கு வரும் என்பதை மறந்து விட வேண்டாம்!!///

 

நான் என்னை மேன்மைப்ப‌டுத்திக்கொள்ள‌வில்லை, அதுவும் உங்க‌ளை போல் அடுத்த‌வ‌னை மூட‌ன், ம‌டைய‌ன் என‌ சொல்லி ம‌ட்ட‌மாக‌ அவ‌ம‌தித்து என்னை மேன்மைப்ப‌டுத்த‌ எண்ண‌வில்லை. த‌மிழ் கிறிஸ்தவ‌ த‌ள‌த்தில் அன்று நான் கோப‌ப்ப‌ட்ட‌து உண்மை காரணம் அவர் கடவுளை எவ்வளவு அவமதித்து எழுதினார் என்பதால்., அத‌ற்காக‌ ம‌ன்னிப்பு கேட்ட‌தும் உண்மை, ம‌ன்னிப்பு கேட்ட‌தை நீங்க‌ள் இருட்ட‌டிப்பு செய்து, என‌து நாக‌ரீக‌ம் ப‌ற்றி பேசிய‌தால் நான் ம‌ன்னிப்பு கேட்ட‌தை சொல்ல‌ நேர்ன்த‌து. இத‌ற்கு வேறு உள் நோக்க‌ம் இல்லை.

 

///உயிர்த்தெழுதலில் இரண்டு விதம் இருக்கிறது, மேன்மையான உயிர்த்தெழுதல் கிறிஸ்துவின் சாயலில் ஆவியான் உயிர்த்தெழுதல், பொதுவான உயிர்த்தெழுதல், சரீரத்தில் நடக்கும் உயிர்த்தெழுதல்!! இந்த பூமியில் மாத்திரமே சரீரத்திற்கு வேலை இருக்கு, பரலோகத்திற்கு இந்த சரீரத்துடன் போக முடியாது, இந்த மாம்சத்தில் போக முடியாது, ஏன் ஒரு குறிப்பிட்ட எல்லையை கடக்க வேண்டுமென்றால் கூட நமக்கு வேறு உபகரனங்கள் தேவைப்படுகிறது!! ///

 

இப்பதான் இயேசு ஆவிக்குரிய வகையில் தான் உயிர்தெழுந்தார் என்றீர்கள் அதற்குள் மேலும் ஒரு வகையறாவை உள் நுழைத்திருக்கிறீர்கள். சரீரத்தில் நடக்கும் உயிர்த்தெழுதல் அதற்கப்புறம்.... சரீரத்தை விட்டுவிட்டு பரம் ஏறி போய் விடுவோமா?...



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

பிலிப்பியர் 3:21 அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்ளத்தக்க தம்முடைய வல்லமையான செயலின்படியே, நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்.



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

I Corinthians 15

35. ஆகிலும், மரித்தோர் எப்படி எழுந்திருப்பார்கள், எப்படிப்பட்ட சரீரத்தோடே வருவார்களென்று ஒருவன் சொல்வானாகில்,

36. புத்தியீனனே, நீ விதைக்கிற விதை செத்தாலொழிய உயிர்க்கமாட்டாதே.

37. நீ விதைக்கிறபோது, இனி உண்டாகும் மேனியை விதையாமல், கோதுமை, அல்லது மற்றொரு தானியத்தினுடைய வெறும் விதையையே விதைக்கிறாய்.

38. அதற்கு தேவன் தமது சித்தத்தின்படியே மேனியைக் கொடுக்கிறார்; விதை வகைகள் ஒவ்வொன்றிற்கும் அததற்கேற்ற மேனியையே கொடுக்கிறார்.

39. எல்லா மாம்சமும் ஒரேவிதமான மாம்சமல்ல; மனுஷருடைய மாம்சம் வேறே, மிருகங்களுடைய மாம்சம் வேறே, மச்சங்களுடைய மாம்சம் வேறே, பறவைகளுடைய மாம்சம் வேறே.

40. வானத்துக்குரிய மேனிகளுமுண்டு, பூமிக்குரிய மேனிகளுமுண்டு; வானத்துக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே, பூமிக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே;

41. சூரியனுடைய மகிமையும் வேறே, சந்திரனுடைய மகிமையும் வேறே, நட்சத்திரங்களுடைய மகிமையும் வேறே, மகிமையிலே நட்சத்திரத்துக்கு நட்சத்திரம் விசேஷித்திருக்கிறது.

42. மரித்தோரின் உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும். அழிவுள்ளதாய் விதைக்கப்படும், அழிவில்லாததாய் எழுந்திருக்கும்;

43. கனவீனமுள்ளதாய் விதைக்கப்படும், மகிமையுள்ளதாய் எழுந்திருக்கும்; பலவீனமுள்ளதாய் விதைக்கப்படும், பலமுள்ளதாய் எழுந்திருக்கும்.

44. ஜென்ம சரீரம் விதைக்கப்படும், ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும்; ஜென்ம சரீரமுமுண்டு, ஆவிக்குரிய சரீரமுமுண்டு

--



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

ஒரு பத்து வயது பிள்ளை வேதம் வாசித்தால் கூட, நரகம் உண்டு, தேவ தூதனுக்கு கால் உண்டு, இயேசு கிறிஸ்து சரீரத்தில் உயிர்த்தெழுந்தார் என்று சொல்லப்பட்டிருப்பதைக் கண்டு பிடித்து விடும்.

இவங்க ஏன் இப்படி இருக்காங்க என்று என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.



__________________
ebi


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

பைபிளில் உள்ளதை தப்பும் தவறுமாக புரிந்துகொள்வதையே பிரதானமாக வைத்துள்ளார்கள் போல். Anti-Bible group.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

What Kind of Resurrection did Jesus Have?

How important is it to believe in a physical resurrection? It is part of the gospel and it is just as important as believing Christ died for our sins. In fact, it is the proof that the Father accepted Christ’s death. Paul writes in Rom 1:3-4 “concerning His Son Jesus Christ our Lord, who was born of the seed of David according to the flesh, and declared to be the Son of God with power according to the Spirit of holiness, by the resurrection from the dead.” So we see the resurrection proved who Jesus was. It fulfilled prophecy about himself in the Old Testament. It also fulfilled the Davidic covenant that promised an eternal descendant was to sit on David’s throne (Isa.9:6; Ps.89:29-37).

A physical raising from the dead is Not beyond God’s power “Why should it be thought incredible by you that God raises the dead? (Acts 26:8)

God himself says, “Behold, I am the LORD, the God of all flesh; is anything too difficult for Me?” (Jeremiah 32:27).

So why do some who claim they are believers in Jesus Christ not believe this? If they do not believe in a physical resurrection they do not have the correct gospel, which means they are not true believers, and are not in possession of the Holy Spirit who bear witness to this biblical fact.

This affirmation of faith since the beginning of the church is that ALL believer's will be physically resurrected. This is grounded in the fact of Christ's own resurrection. They based their belief on the unanimous teaching of the Bible. It was the Gnostics that denied a resurrection (like the new agers today believe in reincarnation not a resurrection).

Justin Martyr (A.D. 100-165) said: “The resurrection is a resurrection of the flesh which dies.” (Justin Martyr, Fragments of the Lost Work of Justin on the Resurrection, ch. 10. Found in the Ante-Nicene and Post-Nicene fathers Alexander Roberts and James Donaldson, eds., and Philip Schaff and Henry Wace, eds., Nicene and Post-Nicene Fathers, First Series, vols. 1-14; Second Series, vols. 1-14).


Athenagoras a second century Christian teacher stated that God's “power is sufficient for the raising of dead bodies, and is shown by the creation of these same bodies. For if, when they did not exist, He made at their first formation the bodies of men, and their original elements, He will, when they are dissolved, in whatever manner that may take place, raise them again with equal ease: for this, too, is equally possible to Him.”(treatise on “The Resurrection of the Dead” ch. 3)

Tertullian (A.D. 160-230) stated that the resurrection of the flesh to be the church's “rule of faith,” saying it “was taught by Christ” and only denied by heretics. (The Prescription Against Heretics, ch. 13.) The church was unanimous that those who denied a physical resurrection were not part of Christ’s church.

(Contd...)

http://www.letusreason.org/Doct51.htm


மேற்காணும் தொடுப்பிலிருந்து இயேசுவானவரின் சரீரப் பிரகாரமான உயிர்த்தெழுதலுக்கு ஆதரவான வலுவான ஆதாரங்களும் அதற்கான காரணங்களும் காணக்கிடைக்கிறது;கர்த்தருக்கு சித்தமானால் இதனை அவர்களுடைய அனுமதியைப் பெற்றபிறகு முழுவதும் பதிப்பதுடன் மொழி பெயர்த்து வெளியிடுவேன்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
இயேசுவின் சரீரம் எங்கே, அவர் சரீரத்தில் உயிர்த்தெழுந்தாரா..?
Permalink  
 


Natural Body, Spiritual Body>>>  2 Bodies???

The resurrection body will be of a nature corresponding to the eternal order. The principle is that God has always provided bodies suitable to the spheres of life assigned. Our resurrection bodies will have both continuity and difference in relation to our present bodies. Nature illustrates this. There is a continuity between what is planted and what sprouts and grows. Physical bodies are perishable subjecto to ageing and dying. Resurrection bodies will be spiritual, imperishable, glorified and powerful. The prototype for resurrection bodies of believers is Jesus' body following his resurrection

Thanks: NIV Study bible

இதை எழுதினாலும் ஏரியனின் சீடர்களுக்கு புரியாது. இப்படி இரண்டு விதமான சரீரங்கள் இருப்பதால் தான் இவற்றை வேறுபடுத்தி வேதம் காண்பிக்கிறது

1 கொரி 15:44.

இந்த உயிர்தெழுதலை தான் இயேசு நடத்தி காண்பித்தார். அந்த வசனத்தை நன்றாய் பாரும் ஜென்ம சரீரம், ஆவிக்குரிய சரீரம் என இரண்டு சரீரங்க்கள் இருப்பதை. வேதத்தை யார் புரட்டுகிறார்கள் என்பது புரிந்தால் சரி.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

// ஏன் அத்நாஷியஸ் என்கிற வேத புரட்டன் உமக்கு இதை குறித்து ஒன்றும் எழுதவில்லை என்கிற கவலையா உமக்கு!! மூடரகளின் கூட்டமே, உங்களிடம் கேட்டது, கிறிஸ்து சரீரத்தில் உயிர்த்தெழுந்தாரா என்பதற்கான நேரடியான வசனம்!! திரித்துவத்தை திரித்து சொல்லுவது போல், இயெசு சாப்பிட்டர், நகம் வெட்டினார் என்று சொல்லி திசை திருப்ப வேண்டாம்!! இயேசு கிறிஸ்து சரீரத்தில் உயிர்த்தெழுந்து பரலோகத்திற்கு சென்றாரா என்பதற்கான நேரடியான வசனம் இருந்தால் சொல்லுங்கள்!!

நாகரீகத்தை குறித்து ஜோஸப் பேச வேண்டியதில்லை, தமிழ் கிறிஸ்தவ தளத்தில் உம்முடைய நாகரீகத்தை ஒருவர் வெளிப்படுத்தியதை நானும் வாசித்தேன், உம்முடைய நாகரீகத்தை நீரே ஒப்பு கொண்ட பதிவையும் வாசித்தேன்!! ஆகையால் முதலில் நீர் உம்மை நாகரீகப்படுத்திக்கொண்டு அதன் பின் அடுத்தவர்களை சொல்லலாம்!!

நான் கேட்ட கேள்வி என்ன, நீர் தொடங்கியிருக்கும் பதில் என்ன!! இப்படி தானே தேவையில்லாத வாதம் துவங்குகிறது!! உங்கள் அத்நாஷியஸ் இதை குறித்து விளக்கம் கொடுக்கவில்லை போல்!!

கிறிஸ்து ஆவியில் தான் உயிர்த்தெழுந்தார் என்பதற்கு போதுமான வசனங்களை நான் கொடுத்திருக்கிறேன்!! உம்மிடம் அதற்குண்டான மாற்று வசனங்கள் இருந்தால் சொல்லும், சும்மா ரஸ்ஸல் ரஸ்ஸல் என்று வாந்தி எடுக்காதீர்!! //

வேதபுரட்டனான ஏரியனின் சீடர் கூவ ஆரம்பித்துவிட்டார். இயேசு ஆவியில் மாத்திரம் உயிர்த்தெழுந்திருந்தால் அவரது சரீரம் எங்கே என்பதற்கு பதிலை காணோம். சரீர பிரகாரமாக உயிர்த்தெழப்போய் தான் அவரால் சரீரப்பிரகாரமானவர்கள் செய்வதையெல்லாம் செய்ய முடிந்தது. இட்லி கொப்பரையில் இருந்து வரும் ஆவியை உம்மால் இட்லி என நினைத்து சாப்பிட முடியுமா. சரீர பிரகாரமாக இயேசு காணப்படப்போய் தான் அவரால் சாப்பிடவும், தனது சீடனை தொடவும் அனுமதிக்கமுடிந்தது. இந்த அடிப்படை அறிவு கூட இல்லை பேச வந்துவிட்டார்.

தமிழ் கிறிஸ்தவ தளத்தில் அந்த நபர் எவ்வாறு நாகரீகமாக பேச ஆரம்பித்தார் என்பது தெரியுமா அல்லது உமது பாரபட்சமான கண்களுக்கு தெரியவில்லையா. அப்போது கூட எனது எழுத்துக்களை திரும்ப பெற்றுக்கொண்டு மன்னிப்பு கேட்கும் தன்மையை எனக்கு ஆண்டவர் கொடுத்திருந்தால். உம்மை போல் மூச்சுக்கு 300 தரம் மூடனே என நான் கூவவில்லை. இப்பவும் அவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் முயற்சியில் தான் உள்ளேன், நீர் எனக்கு சர்டிபிகேட் தர வேண்டாம். 

இயேசு, இந்த ஆலயத்தை இடித்து போடுங்க்கள் அதை நான் திரும்பவும் எழுப்புவேன் என தன் சரீரத்தை குறித்து தான் சொன்னார். இந்த ஆலயத்தை இடித்து போடுங்கள் நான் ஆவியில் வந்து எனது சரீரத்தை காணாமல் போக செய்துவிடுவேன் என சொல்லவில்லை. 

நம்து சரீரம் பரிசுத்த ஆவியானவர் தங்கியிருக்கும் ஆலயம் என 1 கொரி 6:19 இல் இருக்கிறது. நமது சரீரத்தை ஆலயம் என வேதம் வர்ணிப்பதை கவனியுங்கள். இயேசுவின் உயிர்த்தெழுந்த மகிமையான சரீத்தால் பூட்டிய அறை வீட்டுக்குள் ஊடுருவவும் முடிந்தது அதே சமயத்தில் தனது சீடனை தொட்டுப்பார்க்கவும் அனுமதித்தார் இயேசு. 

 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

போனதெல்லாம் போக தற்போது ஒரு சீஸனல் சர்ச்சையை (மேசியாவின்) எதிரியான கோவை பெரேயன் கிளப்பியிருக்கிறார்;அது என்னவென்றால் இயேசுவானவர் சிலுவையில் மரித்து அடக்கம் பண்ணப்பட்டதோடு சரி, அதற்குப் பிறகு அவருடைய சரீரத்துக்கு என்னவானதோ அதைக் குறித்து எந்த கவலையும் இல்லை;ஆனால் அவர் ஆவியில் உயிர்த்தெழுந்தார், என்கிறார்.

இது கிறித்தவர்களுக்கு முற்றிலும் புதியதான அதிர்ச்சிகரமான செய்தியாகும்; முகமதியர்கள் சிலுவையில் மரித்தது இயேசு அல்ல என்பதுடன் அவருடைய உயிர்த்தெழுதல் தொடர்பான மற்ற நடபடிகள் முழுவ‌தும் கட்டுக்கதை எனவும் புனையப்பட்டது என்றும் உலகம் முழுவதும் அனைத்து ஊடகங்களிலும் பிரச்சாரம் செய்துவருவது அனைத்து கிறித்தவர்களுக்கும் தெரியுமோ தெரியாதோ அதனை நாம் பொருட்படுத்துகிறதில்லை;ஏனெனில் அவர்கள் அதனை வேதத்திலிருந்து எடுத்துச்சொல்லவில்லை;அவர்களுக்கென்று தனியாக எழுதிகொடுக்கப்பட்ட குரான் என்ற முகமதுவின் புத்தகத்திலிருந்து சொல்லுகிறார்கள்.

ஆனால் இந்த கோவை பெரேயன் கூட்டத்தாரோ நம்முடைய வேதத்திலிருந்தே துணிகரமாக எடுத்து இதுபோன்ற பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பிக்கொண்டிருக்கிறார்கள்; மொழியின் பெயராலும் மூலப்பிரதிகளின் பெயராலும் வியாக்கியானங்களின் பெயராலும் இந்த மடத்தனமான கொள்கைகளை சத்தியம் என்ற பெயரில் பல்வேறு தூஷணமான வார்த்தைகளுடன் கலந்து பிதற்றுகிறார்கள்;ஆனாலும் இந்த XXXXXXXXXXXX பயன்படுத்துபவை அனைத்தும் ஆரோக்கிய உபதேசத்தை ஏற்றுக்கொண்டு அதனை முன்னெடுத்துச் செல்ல பாடுபட்ட பெரியவர்களின் உபகரணங்களே; இந்த கூட்டத்தாரின் பிதாமகனான இரஸல் ஒரு துரும்பையும் கிறித்தவத்தின் மேன்மைக்காக கிள்ளிப்போட்டவன் அல்ல.

அவன் ஊற்றிக்கொடுத்த மதுவில் வெறிகொண்ட XXXXXX வெறியர்களான இவர்களுக்கு முந்தைய தலைமுறையின் சில்லறைகள் தந்திரமாக இரஸல் பெயரை மறைத்துவிட்டு வேதமாணவர்கள் என்ற பெயரில் இயங்கினார்கள்; அவர்களில் ஒருவனால் பாதிக்கப்பட்ட கோவை பெரேயன் தானும் விஷம் ஏற்றப்பட்டு கடந்த சுமார் 3 வருடமாக தமிழ் கிறித்தவ உலகின் இணையத்தைப் பாழாக்கிக்கொண்டிருக்கிறார்.

இவர் விரைவில் அழிக்கப்படுவார்; ஆனால் இவரால் வெறியூட்டப்பட்ட அப்பாவி இளைஞர்களின் இரத்தப்பழிக்கு இவரும் இவர் சந்ததியாரும் ஆளாகும் ஆபத்திலிருந்து இவரையும் இவர் கூட்டத்தாரையும் தப்புவிக்கவே இரவும் பகலும் போராடிக்கொண்டிருக்கிறோம்;இந்த குழப்பவாதிகளுடன் போராடுவதால் என்னைப் போன்றவர்களுக்கு எந்த பயனும் இல்லை; இதனால் என்னுடைய பக்திவிருத்திக்கோ என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கோ எந்த பிரயோஜனமும் இல்லை; மாம்சத்தின்படி கண்பார்வையிழந்தோர் மத்தியில் நான் ஊழியம் செய்தால் என்மீது நல்லெண்ணம் கொண்ட சிலர் எனக்கு உதவி செய்யமுன்வருவார்கள்;என் வருமானமும் பெருகும்; அதுபோன்ற சர்ச்சைக்கிடமில்லா பணியில் பல ஊழியர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்; ஆனால் ஆத்துமாவைத் தெளிவிக்கும் அவசரத்தில் போராடும் என்னுடைய இந்த எழுத்துப்பணிக்கு எந்தவிதமான சன்மானமும் யாரிடமிருந்தும் பெறப்படவில்லை என்பது சத்தியமாகும்; ஆனால் கொஞ்சமும் XXXXX நான் இங்கே கலெக்ஷன் பண்ணுவதாகவும் வீடுவீடாகச் சென்று கள்ளப்போதகம் செய்து சம்பாதித்து குடும்பம் நடத்துவதாகவும் பொய்மூட்டைகளை அவிழ்த்துவிடுகிறார், கோவை பெரேயன்; இதனால் எனக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை; அவர் என்னைக் குறித்து என்னவேண்டுமானாலும் பேசட்டும்; கேஸ் போடட்டும், கேஸ் விடட்டும், எதற்கும் நாம் அஞ்சப்போவதில்லை என்பதை ஏற்கனவே அறிவித்திருக்கிறேன்.

ஆனால் ஒரு தனி மனிதனின் வாழ்வில் முக்கியமான மாற்றத்துக்குக் காரணமாக இருக்கக்கூடிய சிலுவையைப் பற்றிய உபதேசத்தில் தொடர்ந்து குழப்பம் விளைவிக்கும் பயங்கரத்தை சகிக்கவே முடியாது; முதலில் ஆத்துமா கிடையாது என்றார்கள்; எனவே இயேசுவுக்கும் ஆத்துமா கிடையாது; இப்போது இயேசு சரீரத்தில் உயிர்த்தெழவில்லை என்கிறார்கள்; எனவே அவரும் காணக்கூடாத ஆதிநிலைக்கு அதாவது முன்பு இருந்த மிகாவேல் தூதனின் தன்மைக்குச் சென்றுவிட்டார் என்கிறார்கள் போலும்.

images?q=tbn:ANd9GcR25-f4g5fecfKe-aWZyJrheEqVlUCL89yBFFLeuXIaoXwhnW33images?q=tbn:ANd9GcSsv0oE2Ataa9V6TGFaVaE5cmVCIh2HiVfvm-TLBYCBTX1KFep6Yw

இயேசு சரீரத்தில் உயிர்த்தெழவில்லை என்றால் உயிர்த்தெழுதல் என்ற வார்த்தையின் பொருள் தான் என்ன? ஒரு ஆவி எழுந்து செல்லுவதையா உயிர்த்தெழுதல் என்கிறோம்; ஒன்று வார்த்தையின் படியான அர்த்தத்திலிருந்து ஒரு முடிவுக்கு வரவேண்டும் அல்லது பொதுவான அபிப்ராயங்களினால் உருவாகும் உணர்வின்படியான நிலைக்கு வரவேண்டும்; இந்த ரெண்டு நிலைக்கும் வர விருப்பமில்லாத ரெண்டாங் கெட்டான்களுக்கு எப்படி புரியவைக்க இயலும்? உயிர்த்தெழுதல் என்ற குறிப்பிட்ட வார்த்தையின் ஆங்கில வார்த்தையிலிருந்தாகிலும் பொருள் தேடுவோமென்று அங்கு சென்றேன். அங்கே இருக்கும் குறிப்புகளை சுருக்கமாகத் தருகிறேன்; முழு விவரத்தையுமறிய தொடுப்பைத் தொடரவும்.

Resurrection:-

From Wikipedia, the free encyclopedia
Jump to: navigation, search

Resurrection refers to the literal coming back to life of the biologically dead. It is used both with respect to particular individuals or the belief in a General Resurrection of the dead at the end of the world. The General Resurrection is featured prominently in Jewish, Christian, and Muslim scriptures. The death and resurrection of Jesus is the central focus of Christianity.

(Contd...)

ஆனாலும் விக்கிப்பீடியாவையெல்லாம் நான் ஏற்கமாட்டேன் எனக்கு வேதமே போதும் என்பார்; அதில் ஏதாவது புரியவில்லையென்றால் திருதிருவென முழித்துவிட்டு இரஸல் சொன்னதே போதும், அவரு சரியாத்தான் சொல்லியிருப்பாரு என்பார்; ஒரு மொழியிலிருந்து புறப்பட்ட ஒரு குறிப்பிட்ட வார்த்தைக்குரிய பொருளையறிய மொழி அகராதியைத் தானே நாடவேண்டும்? இதில் என்ன தவறு இருக்கமுடியும்? மொழியும் மொழி அகராதியும் மொழி இலக்கணமும் இல்லாமலா வேதத்தை மொழிபெயர்த்தார்கள்? மொழி என்றாலே இருவேறு கருத்துக்கள் இருக்கும்தானே? ஒரு மொழியை மற்றொரு மொழிக்கு மாற்றும் போது திரிபுகள் இருக்கும்தானே? அதனை வட்டார உணர்வின்படியாகத்தானே கிரகித்துக்கொள்ளமுடியும்? இந்த எந்த சாதாரண நடைமுறைக்கும் ஒத்துவராமல் ஆகாயத்தில் சிலம்பம் பண்ணும் மதியீனமான போதனையை இரஸலின் வழிவந்தோரிடமிருந்து பெற்று தன்னையும் வேதமாணவர் என்று கூறிக்கொள்ளும் இவர்களை எப்படி திருத்தமுடியும்?

images?q=tbn:ANd9GcRMbJbNZOr32pAvp36TfwcOVXeoTJNA0P4s3gwr3P0EgYax_VAyimages?q=tbn:ANd9GcSRi_iV4E91KfEhC5BRjXLP-wZhHL9w6JrOIWmgw0NY2ZEWKX9y

இயேசு மாம்சத்திலிருந்து உயிர்த்தெழுந்து ஆவியில் மறுரூபமாகி மகிமையின் சரீரத்திலிருந்து காணக்கூடியவராகவும் தொடக்கூடியவராகவும் கேட்கக்கூடியவராகவும் சாதாரண மனிதர்களைப் போல உணவு உட்கொள்ளக்கூடியவராகவும் அதே நேரத்தில் இயற்கைக்கு மேற்பட்ட வல்லமையினால் வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டவராகவும் இருக்கும் இவையனைத்துமே சாதாரண மனிதனால் கிரகிக்க முடியாத அற்புத செயல்களாகும்; இதைக் குறித்து அப்போதே ஆச்சர்யத்துடன் பார்த்து பிரமித்து நின்ற சீடர்களிடம், இரண்டு தூதர்கள் தோன்றி, அவர் சென்ற வண்ணமாக மீண்டும் வருவார் என்று சொல்லிச்சென்றார்கள்.

இயேசுவானவர் சரீரத்தில் உயிர்த்தெழவில்லை என்று வேதப்புரட்டு நிகழ்த்தும் கோவை
பெரேயனின் கூற்றுக்கு யௌவன ஜனம் தளத்தின் நண்பர்கள் முன்வைத்துள்ள கருத்துகளை இங்கே பதிக்கிறேன்;இனி இந்த சர்ச்சை தொடர்பான தத்தமது கருத்துக்களை தள நண்பர்கள் இங்கேயே தொடர்ந்து பதிக்கவும் வேண்டுகிறேன்.உயிர்த்தெழுந்த கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக‌.

Chillsam:-

பாம்பைக் கோபப்படுத்தி விஷத்தை உமிழச் செய்வார்கள்;பிறகு அந்த விஷத்தைக் கொண்டே பாம்பின் விஷத்தால் பாதிக்கப்பட்டோரை குணமாக்குவார்கள் என்று கேள்விபட்டிருக்கிறோம்;அதுபோலவே நம்முடைய தரத்தைத் தாழ்த்திக்கொண்டு சாக்கடைக்குள் புரண்டு கொண்டிருக்கும் கோவை XXXகளை எப்படியாவது மீட்டெடுக்க முயற்சித்து வருகிறோம்;இதன் பாதிப்பும் அதுகள் தெளிக்கும் சேற்றினால் நம்முடைய ஆடைகளெல்லாம் கறைபடுகிறது;ஆனாலும் இதன் முழுபலனும் தற்போது தெரியவராது;ஆனாலும் நமக்குள் ஊடுறுவியிருக்கும் ஒரு விகாரமான கூட்டத்தை எப்படியேனும் பகிரங்கப்படுத்தும் பணியை சிரமேற் கொண்டு செய்துவருகிறோம்.

அவ்வப்போது இதுபோல பட்டு தெறிப்பது போல அபூர்வமாக தங்கள் கொள்கைகளை எடுத்துவிடுவார்கள்;இதைக் கொண்டே இவர்களை நாம் வித்தியாசப்படுத்தி அறியமுடியும்;உதாரணத்துக்கு இதோ அந்த கோவை
பெரேயன் அறிவித்திருக்கும்
அறிவிப்பை பாருங்கள்,அவ
ர் சொல்லுகிறார்,

// மடத்தனமாக கிறிஸ்து சரீரத்துடன் உயிர்த்தெழுந்தார் என்று எழுதி கிறிஸ்தவத்தின் மானத்தை வாங்க வேண்டாம்!! இதற்கெல்லாம் ரஸ்ஸல் தேவையில்லை, வேத புத்தகமே போதும்!! உமக்கு ரஸ்ஸலை குறித்து ஒன்றும் தெரியாது, உமக்கு தெரிந்ததெல்லாம் மஞ்சல் பத்தரிக்கை நடத்தும் கலெக்ஷன் கள்ள போதகனும் அவனின் உபதேசங்களுமே!! அடுத்தவர்களின் அந்தரங்கத்தை விமர்சிப்பவனை மஞ்சல் பத்திரிக்கை நடத்துபவன் என்று எழுதுவதில் ஒரு தவறும் இல்லை!! //

இயேசுவானவர் மாம்சத்தில் உயிர்த்தெழவில்லை;சரி,அப்படியானால் அவருடைய சரீரம் எங்கே போனது என்றும் சொல்லலாமல்லவா? சொல்லமாட்டார்,அவருடைய வேதப் புரட்டு கிளாஸுக்கு வந்தா தான் சொல்லிக்கொடுப்பாராம்..!

இதைக் கண்டிக்க விரும்பும் நண்பர்களும் சத்தியத்தை அறிந்த சகோதரர்களும் உடனே இதற்குரிய பதிலைப் பதிக்கவும்;மற்றதை பிறகு பார்ப்போம்...

Joseph:-

இயேசு சரீரத்தில் உயிர்த்தெழாவிட்டால் நிச்சயம் மரணத்தின் மீதான் வெற்றி நிரூபிக்கப்பட்டிருக்காது. இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள் மூன்று நாளில் அதை எழுப்புவேன் என இயேசு சொன்னது தன் சரீரத்தை தான். இந்த விளங்காத ஏரியனிஸ்டு ரசலின் கூட்டம் இயேசுவின் உயித்தெழுதலை அம்புலிமாமா, விட்டலாச்சாரியா ரேஞ்ச்சுக்கு ஒப்பிட்டு உளறிக் கொண்டிருக்கிறது. 

//பி.கு. இதை வாசித்தவுடன் கலெக்ஷன் கள்ள போதகனின் புதிய சீஷர்கள் என்னமோ இதை போல் ஒரு எழுத்தை பார்க்காத மாதிரி போய் எல்லா தளங்களிலும் கூப்பாடு போடுவார்கள்!!//

ஆமாய்யா நீங்கள்  எழுதிய பதிவை பார்த்து உங்களது தளத்திலேயே பதில் எழுதலாம் என்று தான் நினைத்தேன் ஆனால் ஏற்கனவே உமது நாகரீகம் தான் ரொம்ப பிரபலமாயிற்றே, நீர் இங்கு வந்து இந்த பதிவை பார்ப்பீர் என தெரிந்து தான் இந்த தளத்தில் எழுதுகிறேன்.

இயேசுவின் சரீர உயிர்தெழுதலுக்கு பின்

1) இயேசு சாப்பிட்டார் (லூக்கா 24:42-43) ஒருவேளை இயேசு ஆவியாய் இருந்தால் எப்படி சாப்பிட்டிருக்க முடியும்

2) மத்தேயு 28:9 இயேசுவின் ஆவியாக மட்டும் இருந்திருந்தால் அவரது பாதங்க்களை எப்படி தழுவியிருக்க முடியும், கொஞ்ச்சம் யோசிங்க்ணா...

3) தோமாவுக்கு காண்பித்தது (யோவான் 20:25) , ஒருவேளை அது இயேசுவின் சரீரமாக இல்லாமல் இருந்திருந்தால் தனது கையில் உள்ள ஆணி பாய்ந்த காயம் இருந்திருக்காது

4) யோவான் 20:19-20

இயெசுவின் உயித்தெழுந்த சரீரத்துக்கு கதவையும் தாண்டி வரும் ஆவிக்குரிய தன்மையும், ஏனையோர் சாப்பிடும் அதே முறையில் உணவு சாப்பிடும் மாம்சத்திற்குரிய தன்மையும் இருந்தது. இதுவே மரணத்திற்கு பின் உயிர்த்தெழுந்த சரீரத்தின் தன்மை. அதன் வாயிலாக தான் இயேசு தனது காயங்க்களை காண்பித்தார்.

போங்க்க போய் உங்க ரசல் விட்டுட்டு போன மூல பாஷையில் ஏதாவது நூதனமாக எழுதி வச்சுட்டு போயிருப்பார். பாத்து வழக்கம் போல் சத்தியத்தை புரட்டுங்க...

John:-
நல்ல பதில்கள் சகோ. ஜோசப்..! வழக்கம் போல ரசல் கூட்டம் இயேசுவின் சரிரம் காத்துல கரைஞ்சு போச்சு என்று புளுகும். 1 கொரி.15:50 - ஐ வழக்கம் போல தவறாக திரித்து கொக்கரிக்கும். அதற்கு மேலே பவுல் எழுதியுள்ள ஆவிக்குரிய 'சரிரம்' என்ன என்பதை வசதியாக மறந்து விடும்.

இன்னொரு உபரி தகவலும் சொல்லுகிறேன். ஸ்தோயிக்கர்கள் (Peopl Who practiced Stoicism during Paul's Time) ஆவி உயிரோடு எழுவதை விசுவாசிப்பவர்கள். ஹிந்து மார்கத்தில் உள்ள யோகா போல Asceticism Practice பண்ணுபவர்கள். பவுல் இயேசு கிறிஸ்து ஆவியில் உயிரோடு எழுந்தார் என்று சொன்னால் அவர்கள் கிண்டல் செய்ய அவசியமே இல்லையே!
 
பவுல் அகிரிப்பாவிடம் இயேசுவின் உயிர்த்தெழுதலை குறித்து பேசும் போது அது எல்லாருக்கும் தெரிந்த விஷயம் என்று பேசுகிறார்.
  • இந்தச் சங்கதிகளை ராஜா அறிந்திருக்கிறார்; ஆகையால் தைரியமாய் அவருக்கு முன்பாகப் பேசுகிறேன்; இவைகளில் ஒன்றும் அவருக்கு மறைவானதல்லவென்று எண்ணுகிறேன்; இது ஒரு மூலையிலே நடந்த காரியமல்ல. (அப்போஸ்தலர் 26:32)
யூதர்களும் கூட இயேசுவின் கல்லறை வெறுமையை இருந்தது என்று ஒப்புக்கொண்டு, அவருடைய சீஷர்கள் சரீரத்தை திருடிக்கொண்டு போனதாய் Talmud ல் எழுதிவைத்து இருக்கிறார்கள். ஆவியில் புத்தர் எழுந்தார் என்று புத்தனுடைய சிஷனும் சொல்லலாம். முஹம்மது எழுந்தான் என்று ஒரு முஸ்லிம் சொல்லலாம். என்னடா அத்தாட்சி என்றால் "நான் பார்த்தேன்" என்பான். இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலையும் அது போல ரசலின் சீஷர்கள் கேவலப்படுத்துகிறார்கள்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard