Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 5000 வருடத்துக்கு முன்பே ஓரினசேர்க்கை..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: 5000 வருடத்துக்கு முன்பே ஓரினசேர்க்கை..!
Permalink  
 


தமிழ் கிறித்தவ தளத்தில் யாரோ ஒரு நண்பர், யார் மீதான எரிச்சலைக் காட்டவோ அல்லது யாரையோ வம்புக்கு இழுக்கவோ பைபிளைக் குறித்தும் நம்முடைய இரட்சகரைக் குறித்தும் தூஷித்து, சேற்றைவாரி இறைத்திருக்கிறார்;நாம் அவருடைய வலையில் சிக்குவதாக இல்லை; ஆனாலும் அது தொடர்பான ஒரு செய்தி நினைவுக்கு வந்ததும் அதனைத் தேடியெடுத்து பதித்திருக்கிறேன்.

பைபிளை தரம் தாழ்த்தி குறைகூறி தூஷிப்பதால் தங்களை நாகரீகமானவர்களாகக் காட்டிக்கொள்ள மனிதன் முயல்கிறான்; ஆனால் மற்றொரு புறம் ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்புகளைக் கண்டு அதிர்ச்சியடைகிறான்; இதோ பைபிளில் ஏற்கனவே குறிப்பிடப்பட்டு கடவுளால் கண்டிக்கப்பட்ட ஓரினசேர்க்கை எனும் அருவருப்பு இருந்ததற்கான ஆராய்ச்சி கண்டுபிடிப்பு ஆதாரம்..!

இந்த ஓரினசேர்க்கை எனும் பாவப் பழக்கத்தினாலேயே எயிட்ஸ் போன்ற கொடிய நோய்கள் உண்டானதாக மருத்துவ உலகம் சொல்லுகிறது;நீ இறைவன் அருளிய வேதத்தைப் புறக்கணித்து சிருஷ்டிப்புக்கு விரோதமான காரியங்களைத் தொடர்ந்து செய்வாயானால் அதன்மூலமே நீ அவமானப்பட நேரிடும் அல்லது அழிந்துபோக நேரிடும் என்றே சிருஷ்டிகர் அன்போடு எழுதிவைத்திருக்கிறார்; இதையே பைபிளும் குறிப்பிட்டு மனிதனின் அருவருப்புகளை அம்பலப்படுத்துகிறது; இதனால் பாவத்தை விடமுடியாமலும் பாவத்தினால் உண்டான அவமானத்தினாலும் புழுங்கித் தவிக்கும் மனிதன் தன்னுடைய பாவங்களையும் அதற்கான காரணங்களையும் வரிசைப்படுத்தி இடித்துரைக்கும் பைபிளின் மீது தன் கோபத்தை திருப்புகிறான்;இதற்கு தான் சொல்லுவார்கள்,"பூனை தன் கண்ணை மூடிக்கொண்டு பூலோகமே இருண்டுவிட்டதாக நினைத்துக்கொள்ளும்" என்பதாக‌.

பின்குறிப்பு:

எப்போதோ படித்த இந்த செய்தியை மீண்டும் தேடியெடுத்து பதிக்கவே 2 மணிநேரம் ஆனது;ஆனாலும் நான் படித்த செய்திக் குறிப்பு இதுவல்ல;அதில் இன்னும் தெளிவாக இருந்தது; அதாவது மரித்த ஆணின் சடலத்துக்கும் பெண்ணின் சடலத்துக்கும் வித்தியாசம் தெரியும் பொருட்டு பெண்ணின் சடலத்தை இடதுபுறமாக ஒருக்களித்தும் ஆணின் சடலத்தை வலதுபுறமாக ஒருக்களித்தும் புதைப்பது பாரம்பரிய வழக்கமாம்;ஆனால் தற்போது கிடைத்துள்ள எலும்புக்கூடு ஆணின் எலும்புக்கூடாக இருந்தும் அது இடதுபுறமாக புதைக்கப்பட்டதை வைத்து இந்த ஆண் ஓரினசேர்க்கையாளனாக இருந்திருக்கவேண்டும் என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்திருக்கிறார்கள்.

வேதம் சத்தியமானது என்பதை இதுபோன்று அன்றாடம் வெளிவரும் ஒவ்வொரு ஆராய்ச்சிகளும் நிரூபித்துக்கொண்டே இருக்கிறது.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 


gay.jpg

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

உலகின் மிகவும் பழமையான தன்னினச் சேர்க்கையாளர் பற்றிய தகவல் இப்போது வெளிவந்துள்ளது.

அவர் இறந்து 5000 வருடங்களின் பின் அவர் பற்றிய தகவல் தெரியவந்துள்ளது.

பழம்பொருள் ஆய்வாளர்களால் பட்டப்பகலில் தோண்டி கண்டெடுக்கப்பட்ட ஒரு புதைகுழி மூலமே இந்தத் தகவல் கிட்டியுள்ளது.

மீட்கப்பட்ட எலும்புக் கூட்டை அடிப்படையாக வைத்து அவர் புதைக்கப்பட்டுள்ள விதத்திலிருந்து அவர் ஒரு தன்னினச் சேர்க்கையாளர் என்ற முடிவுக்கு ஆய்வாளர்கள் வந்துள்ளனர்.

இந்த எலும்புக் கூடு கற்காலத்துக்குச் சொந்தமானது. செக் குடியரசில் ப்ராக் நகர சுற்றுப்புறத்திலேயே இந்த எலும்புக் கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது கி.மு.2900 த்துக்கும் 2500 க்கும் இடைப்பட்ட காலப்பகுதிக்கு உரியது.

இந்த புதை குழிக்குள் காணப்பட்ட சில பாவனைப் பொருள்கள் இதற்கு முன் பெண்களின் புதைகுழிகளுக்குள் இருந்தே கண்டெடுக்கப்பட்டு உள்ளன.

gay2.jpg

அந்தக் காலப்பகுதியில் ஆண்கள் பொதுவாக யுத்த ஆயுதங்களுடனும், தொழில் செய்யும் கருவிகளுடனுமே புதைக்கப்படுவது வழக்கமாகும். இது தவிர இந்த எலும்புக் கூடு புதைக்கப்பட்டுள்ள விதமும் வித்தியாசமாக உள்ளது.

ஒரு பெண் புதைக்கப்படும்போது அந்தக் காலத்தில் பின்பற்றப்படும் அம்சங்களும், மரபுகளும் இதில் நிறைய காணப்படுகின்றன.

ஆனால் இது ஒரு ஆணின் எலும்புக்கூடு. எனவே இவர் அந்தக்காலப்பகுதியில் வித்தியாசமான பாலியல் இயல்புடன் காணப்பட்ட ஒருவர் என்ற முடிவுக்கு ஆய்வாளர்கள் வந்துள்ளனர்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard