பிரபாகரனின் மகன் பெயர் சார்லஸ் என்ற காரணத்தால் அவர்கள் அப்படி நினைத்திருக்கலாம். ஆனால், அந்த பெயர் பிரபாகரனின் முன்னாள் தளபதியின் பெயர், அவர் மேல் உள்ள அன்பால் தன் மகனுக்கு அந்த பெயர் வைத்தார் என்று சில நம்பத்தகுந்த வட்டாரங்கள் எனக்கு கூறியது.
Also, it is a nice and practical thing to not to do anything, when you don't know what to do.
நன்றி,
அசோக்
May be that is the reason. Thanks for the information.
And they say something is better than nothing and nothing is better than nonsense!
அருமையான பதிவு. மற்றவர்களை அடிமையாக பார்க்க நினைக்கும், அடிமை புத்தி மாறினால்தான் இவர்களால் நல்ல விஷயங்களை சிந்திக்க முடியும், இல்லாவிட்டால் இப்படி விஷங்களைதான் கக்கமுடியும்.
சகோதரி கோல்டா,
பிரபாகரனின் மகன் பெயர் சார்லஸ் என்ற காரணத்தால் அவர்கள் அப்படி நினைத்திருக்கலாம். ஆனால், அந்த பெயர் பிரபாகரனின் முன்னாள் தளபதியின் பெயர், அவர் மேல் உள்ள அன்பால் தன் மகனுக்கு அந்த பெயர் வைத்தார் என்று சில நம்பத்தகுந்த வட்டாரங்கள் எனக்கு கூறியது.
Also, it is a nice and practical thing to not to do anything, when you don't know what to do.
சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மின் பத்திரிக்கையில் வாசித்தது.
தமிழகத்தில் தோன்றிய சுயமரியாதை இயக்கம் பிராமணீய எதிர்ப்பின் எதிரொலியாக உருவாக்கப்பட்டது. இதை உருவாக்கியதில் கிறிஸ்தவ சபைக்கு பங்குண்டாம், அதுவும் பெரியாரிய கொள்கைகளும் அதன் வழி தோன்றல்களான திராவிட இயக்கங்களும் கிறிஸ்தவ திருச்சபையின் தாக்கத்தின் விளைவாம். கட்டுரையின் ஆரம்பத்திலேயே தமிழ் பேசுபவர்களும் தமிழ் மக்களும் வேறு வேறு என தமிழ் சமுதாய அமைப்பின் அடி மரத்தையே ஆட்டிப்பார்த்திருக்கிறார்கள், அஃதாவது தமிழ் பேசும் அவர்களும் தமிழ் பேசும் அவாள்களும் வேறு வேறாம்.
அதிலும் ஜெயலலிதாவை கிறிஸ்தவ சார்பு நிலைக்கு தந்திரமாக கிறிஸ்தவ சபை தள்ளிவிட்டதாம். அம்மையாரது தோட்டத்திற்கு கிறிஸ்தவர்கள் போய் வந்தது அவாள்களின் கண்ணை உறுத்தியிருக்கிறது, அதுவும் ஜெருசலேம் போக உதவி என்றதும் பாவம் துடித்துவிட்டார்கள். உச்சகட்ட கொடுமை என்னவென்றால் இலங்கையில் நடந்த இன அழிப்பு இவர்களது கண்களை உறுத்தவில்லை மாறாக கிறிஸ்தவ ஈழம், மொத்த தெற்காசியாவை கிறிஸ்தவ மயமாக்க இன்றியமையாததாக சபை கருதியதாம். அதனால் இப்போது ஈழம் சிதைக்கப்பட்டபோது நாங்க ரொம்ப சந்தொஷப்பட்டோம் என சொல்றாங்களான்னு தெரியல.
பிராமணீய வீழ்ச்சியை திருச்சபை மிகவும் விரும்பியதாம். ஏனெனில் மொத்த இந்துத்துவத்தையும் சாய்க்க அது காலத்தின் தேவையாக இருந்ததாம். இப்போது தெரிகிறதா ஏன் இவர்கள் சுயமரியாதை இயக்கத்தை எதிர்த்து வந்தார்கள் என. அதுவும் ஈழ போராட்டத்தை ஊட்டி வளர்த்ததாக கருதப்பட்ட திராவிட இயக்கங்கள் மீது அவ்வளவு கோபம், இந்த கோபம் தான் ஈழ போராட்டத்தின் மீதும் இவர்களுக்கு திரும்பியது.
இங்குள்ள ஒரு சிலர் ஈழத்துக்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு தெரிவித்தனர் என தெரிகிறது. ஈழத்தின் கடைசி போரளி மண்ணில் வீழும் வரை ஆனந்தப்பட்டவர்கள், ஈழ மக்களின் மறுவாழ்விற்கென அந்த அரசாங்கம் என்ன செய்தது என்பதை பற்றி மூச்சு கூட விடவில்லை.
பிராமணீய எதிர்ப்பை முன்னெடுத்த திராவிட சுயமரியாதை இயக்கம் கிறிஸ்தவத்தை அடிப்படையாக கொண்டது என்பது அபத்தத்தின் உச்சகட்டம். ஒருவேளை திருச்சபையை திராவிட இயக்கங்கள் எதிர்க்காமல் இருந்திருக்கலாம் ஆனால் விமர்சிக்காமல் இருந்ததில்லை. சமுதாயத்தின் அடித்தட்டு மக்களுக்காக அமைப்பு ரீதியாக போராடியதில் சுயமரியாதை திராவிட இயக்கமும், அவர்களது முன்னேற்றதிற்கான கல்வி, வேலை வாய்ப்பு அளித்ததற்கு திருச்சபையும் ஒரே சம தளத்தில் நின்றிருக்கலாம். ஆனால் திருச்சபைக்கும் திராவிட இயக்கத்திற்கும் பாரிய வேறுபாடு இருந்திருக்கிறது, இன்னும் இருக்கிறது.
இதையெல்லாம் சுத்தமாக மூடி மறைத்து, ஈழம், திராவிட இயக்கம் மற்றும் திருச்சபையை ஒரே முக்கோணத்தின் மூன்று முனைகளாக்கி அவதூறு பரப்பும் செயல்களை பார்ப்பன ஊடகங்கள் செய்து வருகின்றன.
சமுதாயத்தின் அடித்தட்டு மக்களை மேலே கொண்டு வந்ததற்கு எந்த அளவுக்கு எரிச்சல் படுகிறார்கள் பாருங்கள். பிராமணீய எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு மற்றும் தமிழர்களுக்கு தமிழ் நாடு என்ற கொள்கைகளுக்கு ஒரே புள்ளி தான் ஆரம்பமாம். தமிழகம் என்றைக்கோ தேசீய நீரோட்டத்தில் கலந்து, இங்கு வரும் பல வட நாட்டவரை வாழ வைத்துக்கொண்டிருக்கிறது. இங்கு யாரையும் மொழி தெரியவில்லை என அடித்து விரட்டுவதில்லை. இப்போதுள்ள அனேக பள்ளிகளில் இந்தி கற்பிக்கபடுகிறது, எப்போதுமுடிந்த பிரச்சனையை இப்போது கிளறுகிறார்கள் பாருங்கள். ஆகக்கூடி பிளவுபட்ட சமுதாயம் தான் இவர்களது ஆவலா? அப்படி திராவிட வழி வந்த தமிழக அரசியலும், தமிழ் நாடும் கிறிஸ்தவ மயமாகவா இருக்கிறது. சுயமரியாதைக்காக தமிழ் சமுதாயம் குரல் கொடுத்தது தவறா, அரசியல் சுய நிர்னயத்திற்காக ஒரு இனம் போராடியது தவறா. இல்லை இப்போராட்டங்கள் அனைத்தும் தேவை இல்லை, மேல் தட்டு வருணாசிரம அடுக்கில் கீழ் நிலையில் பார்ப்பனீயத்து எச்ச சொச்சங்களை தின்று அடிமைகளாகவே இருந்திருந்தால் இப்படி ஒரு வயிற்றெறிச்சல் கட்டுரை வந்திருக்காதோ என்னவோ.சிந்தித்து பார்ப்போம்.