தலைப்பை தமிழில் பார்த்ததும் ஓடோடி வந்தேன். கொஞ்சம் தமிழில் எழுதலாமே. முடிந்தால், மொழிபெயர்த்தாவது போடலாம். மொழிபெயர்ப்பது ஒரு நல்ல ஊழியமே.
உங்க தமிழ் பற்றை பாராட்டுகிறேன்!! ஆங்கில தளங்களை மேய்வதுதான் என் வழக்கம். இப்பொழுது தமிழில் எழுத மிகவும் பிடித்திருக்கிறது. நீங்க சொன்னபடி மொழி பெயர்த்து எழுதவும் முயற்சிக்கிறேன்.
தலைப்பை தமிழில் பார்த்ததும் ஓடோடி வந்தேன். கொஞ்சம் தமிழில் எழுதலாமே. முடிந்தால், மொழிபெயர்த்தாவது போடலாம். மொழிபெயர்ப்பது ஒரு நல்ல ஊழியமே.
ஏஞ்சல் டிவியில் "ஓமேகா கேட்வே" (Omega Gateway) என்ற பெயரில் ஒரு திருடனின் நிகழ்ச்சியை ஒளிபரப்புவார்கள்;அந்த திருடனின் முகத்தைப் பார்த்தாலே சூனியக்காரனின் முகம் போல ஜொலிக்கும்;அவனுக்கு ஒரு பெந்தெகொஸ்தே பாஸ்டர் (இவர் வெள்ளை ஜிப்பா போட்டதைக் குறைகூறி சாது கடந்தவாரத்தில் பேசினார்...) மொழிபெயர்ப்பார்;
அப்படி ஒரு சமயம் அந்த திருடன் கூறியதையே இங்கே கோல்டா அவர்கள் ஆங்கிலத்தில் போட்டிருக்கிறார்கள்; இதெல்லாம் சீஸ் கொழுப்பெடுத்த வெளிப்பாடுகளாம்; அதாவது அந்த திருடன் சொல்லுகிறான்,வியாழன் கிரகத்தையே ஆண்டவர் புதிய உலகமாக சிருஷ்டிக்கப்போகிறாராம்;அதோடு மாத்திரமல்ல, இதனை நிரூபிப்பதுபோல இந்த ஆளையே ஆவியானவர் வியாழன் கிரகத்துக்கு ஒரு ஃப்ரீ டூர் அழைத்துச்சென்றுவந்தாராம்;
இது எப்படி இருக்கு..?
அவனவனுக்கு இங்கே விலைவாசி பிரச்சினையிலேர்ந்து பல பிரச்சினைகள் தலைக்கு மேல இருக்க இவனுங்களுக்கு பொழுதுபோகலையோ என்னவோ , ஒரு டிவி மீடியா கிடைத்தது என்று கண்டதையும் உளறிக்கொண்டிருக்கிறார்கள்;
அதாவது மணவாளன் வருகிறார் என்ற தலைப்பில் கோல்டா சொல்லவருவது யாதெனில் இயேசுவானவரே மணவாளன் என்பது நாம் அறிந்ததே;அவர் யோவான் 14- ல் சொன்னவண்ணமாக ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கும் ஸ்தலம், வியாழன் போன்ற ஏதோ ஒரு பிரம்மாண்டமான பிளானட் (Planet) தான் என்பது நம்ம ஆட்களின் யூகம்;யூகிக்கவும் கற்பனை செய்யவும் எல்லோருக்கும் உரிமையுண்டு;ஹாலிவுட்டில் இதுபோன்ற ஆட்களுக்கு நல்ல மவுசு;
ஆனால் இது கர்த்தருடைய காரியம் ஆச்சுதே, அவனுங்களுக்கு தான் பயமில்லாமற் போச்சுன்னா கேட்கிற நமக்கு புத்தி எங்கே போச்சு..?
"தேவனுடைய ராஜ்யம் எப்பொழுது வருமென்று, பரிசேயர் அவரிடத்தில் கேட்டபொழுது, அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: தேவனுடைய ராஜ்யம் பிரத்தியட்சமாய் வராது.
இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராது; இதோ, தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே என்றார்."(லூக்கா.17:20,21)
இவ்வாறு ஆண்டவர் தெளிவாகச் சொல்லியிருக்க,பவுலைப் போன்ற அப்போஸ்தலர்களுக்கே வெளிப்படுத்தப்படாத தரிசனங்களெல்லாம் தங்களுக்கு வெளிப்பட்டதாகச் சொல்லி சிலர் கிளம்பியிருப்பதால் என்ன பாதிப்பு தெரியுமா, கிறித்தவம் என்பதே பொதுஜனத்தின் பார்வையில் கேலிக் கூத்தாகியிருக்கிறது;
இவர்களுடைய தரிசனங்களையெல்லாம் இதுபோல மீடியாக்களில் அறிவிப்பதைவிட ஆண்டவரும் அப்போஸ்தலர்களும் செய்ததுபோல சிறு குழுக்களிடம் மாத்திரம் அறிவிக்கலாம் அல்லது கிறித்தவ மார்க்கத்தின் மூத்த தலைவர்களிடம் விவாதித்தபிறகு சத்தியவேதத்துடன் ஒப்பிட்டு பார்த்து பிறகு அறிவிக்கலாம்;அல்லது எல்லாவற்றைக்காட்டிலும் உத்தமமான காரியம் என்னவென்றால் அனைத்தையும் எழுதி முத்திரை போட்டு இவர்கள் செத்தபிறகே வாசிக்கவேண்டும் என்று முத்திரையிட்டு பூட்டி வைக்கலாம்;
தம்முடைய ஜனத்தை எப்படி கூட்டி சேர்க்கவேண்டும் என்பது அவர்களுடைய மீட்பருக்கு தெரியாதா,என்ன..?
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
"A new galaxy will be discovered by science and a new sign will emerge in the sky; a fresh excitement of the imminent coming of Jesus will be talked about in the House of the Lord in private and on the Internet. In the public arena, it will be a huge focus in 2011... fresh excitement!
America (and the world) will become fascinated with the upcoming wedding of His Royal Highness Prince William of Wales to the to-be Lady Catherine Middleton. "This will be a sign to My American Church the King is coming...the reigning of the Kingdom."