Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தற்கொலை செய்துகொள்வதும் அர்ப்பணமே..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: தற்கொலை செய்துகொள்வதும் அர்ப்பணமே..!
Permalink  
 


Ashokkumar wrote:

இந்த நிலை மாறவேண்டும்,மாறுமா..?

மாறாது,   கண்டிப்பாக மாறவே மாறாது. இது கடைசி காலம், வேதத்தால் முன்னறிவிக்கபடியே, இவையெல்லாம் நடந்தே தீரவேண்டியுள்ளது.


குறைந்த பட்சம் சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்பில் இருப்பவர்கள் அவர்களுக்கு மெயில் அனுப்பி விளக்கம் கோரலாம் அல்லது எதிர்ப்பு தெரிவிக்கலாம்;நம்முடைய பணிகளைக் குறித்து அறியாதோர்க்கு அறிவித்து விழிப்புணர்வை உண்டாக்கலாம்;உலகப்பொருளுக்கும் தேவனுக்கும் ஒரே நேரத்தில் ஊழியம் செய்ய முயற்சிப்பவர்களையும் கிறித்தவ ஊழியத்தை ஆதாயத் தொழிலாக நினைத்து செய்வோரையும் தனிமைப்படுத்தலாம்;உதாரணமாக கேபி எடிசன் தன் மனைவியின் பெயரில் கிறித்தவ சபை சம்பந்தப்பட்ட ஆலய உபகரணங்கள் இசைக்கருவிகள் மற்றும் சிடிக்கள் போன்ற பொருட்களை வியாபாரம் செய்யும் ஒரு பெரிய நிறுவனத்தை நடத்துகிறார்.

home.jpg

வியாபாரம் செய்யட்டும்,ஆனால் ஊழியம் செய்யக்கூடாது;ஊழியம் செய்யட்டும் ஆனால் கட்டிடம் கட்டும் நிறுவனத்தை (Builders) நடத்தக்கூடாது;இதன் பாதிப்புகளைக் குறித்து இன்னும் அதிகமாக என்னால் எழுதமுடியும்;ஆனாலும் நான் சொல்லவரும் காரியத்தை அடிநாதத்தை எனது அன்புக்குரிய வாசகர்கள் அறிந்திருப்பர் என்றே நம்புகிறேன்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 63
Date:
Permalink  
 

என்ன கொடுமை சார் இது...................... இதெல்லாம் நடக்கனும்னு விதி அது தான் நடக்குது .

 

"மாற்றம் ஒன்று மட்டும் தான் மாற்றம் இல்லாதது"



__________________
தேவனிடத்தில் பட்சாபாதமில்லை...
ரோமர் 2;11


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
Permalink  
 

இந்த நிலை மாறவேண்டும்,மாறுமா..?

மாறாது,   கண்டிப்பாக மாறவே மாறாது. இது கடைசி காலம், வேதத்தால் முன்னறிவிக்கபடியே, இவையெல்லாம் நடந்தே தீரவேண்டியுள்ளது.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

"தற்கொலை செய்துகொள்வதும் அர்ப்பணமே"

-ரெவரெண்ட் கேபி. எடிஸன் அறிவிப்பு..!

நேற்று (11.04.2011) மாலையில் தமிழன் டிவியில் கே.பி.எடிசன் எனும் ஊழியர் செய்தியளித்துக்கொண்டிருந்தார்;செய்தியை முடியுந்தருவாயிலேயே நான் கவனிக்க முடிந்தது;ஆனாலும் அவருடைய செய்தியின் கடைசி குறிப்பாகச் சொன்னதும் அதற்கு உதாரணமாக அவர் குறிப்பிட்ட வசனமும் என்னை அதிர்ச்சியடையச் செய்தது;அந்த வசனம் பின்வருமாறு:

  • "தன் ஆயுததாரியை நோக்கி: அந்த விருத்தசேதனம் இல்லாதவர்கள் வந்து, என்னைக் குத்திப்போட்டு, என்னை அவமானப்படுத்தாதபடிக்கு, நீ உன் பட்டயத்தை உருவி, என்னைக் குத்திப்போடு என்றான்; அவனுடைய ஆயுததாரி மிகவும் பயப்பட்டதினால், அப்படிச் செய்யமாட்டேன் என்றான்; அப்பொழுது சவுல் பட்டயத்தை நட்டு அதின்மேல் விழுந்தான்.
  • சவுல் செத்துப்போனதை அவன் ஆயுததாரி கண்டபோது, அவனும் தன் பட்டயத்தின்மேல் விழுந்து, அவனோடேகூடச் செத்துப்போனான்.
  • அப்படியே அன்றையதினம் சவுலும், அவன் மூன்று குமாரரும், அவன் ஆயுததாரியும், அவனுடைய எல்லா மனுஷரும் ஒருமிக்கச் செத்துப்போனார்கள். (1.சாமுவேல்.31:4,5,6)

-மேற்கண்ட வசனத்திலிருந்து கிறித்தவ விசுவாசத்துக்கு ஊக்கத்தைக் கொடுக்கக்கூடிய பாடம் ஏதாவது இருப்பதாக யாராவது இதுவரை அறிந்திருப்போமா? ஆனால் இருக்கிறது.

tv.jpg

http://www.hebronministry.org/home.html

எடிசன் ஐயா ஒரு தேர்ந்த கட்டிடம் கட்டும் நிறுவனத்தின் முதலாளி என்பதால் ஐந்து பாயிண்ட் கொண்ட ஒரு அழகான செய்தியை வடிவமைத்துவிட்டார்.

செய்தியின் தலைப்பு: அர்ப்பணம்.

ஐந்து குறிப்பு கொண்ட ஒரு செய்தியை டிவியில் 15 நிமிடத்தில் ஒப்பிக்கவேண்டுமென்பது ஒரு பெரிய சவால் தானே?

அர்ப்பணத்தைக் குறித்த செய்தியின் ஐந்தாவது குறிப்பாக எதைச் சொல்லலாம் என்று யோசித்து ஒரு முடிவுக்கு வந்தார், சவுலின் வேலைக்காரன் தன் முதலாளி தற்கொலை செய்து மாண்டுபோனதையறிந்து தானும் அவனைப் போலவே அவனுடன் செத்துப்போகத் துணிந்ததையே அர்ப்பணத்தின் உச்சக்கட்டமாக எடிசன் பார்க்கிறார்..!

அர்ப்பணம் என்பது தன்னுடைய எஜமானுக்காக மரிக்கவும் ஆயத்தமாக இருக்கவேண்டும் என்ற செய்தியைப் பதிவுசெய்ய இந்த ஆயுததாரியை மேற்கோள் காட்டுகிறார்; ரொம்ப சந்தோஷம்; ஆனால் அது தற்கொலை ஆயிற்றே, ஐயா...நீங்கள் என்ன போதிக்கிறீர்கள் என்பதை அறிந்துதான் போதிக்கிறீர்களா, என்று அவரை யாரும் கேட்கமுடியாது; ஏனெனில் இது டிவி பிரசங்கம் அல்லவா?

நம்முடைய போதகர்களுடைய நிலைமைக்கு இது ஒரு உதாரணம்; அவர்களுடைய சம்பந்தா சம்பந்தமில்லாத புரட்டான உபதேசங்களுக்காகவே தனி ஆள் போட்டு கண்காணிக்குமளவுக்கு வரைமுறையில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது;ஆனால் இதுபோல எடுத்துச் சொல்லுபவர்களையே குற்றங்கண்டுபிடிக்கிறவர்கள் என்று தூஷித்து கிறித்தவ சமுதாயம் தள்ளிவிடுகிறது;வேறெந்த மார்க்கத்திலும் இதுபோல கண்டதையும் உளற அனுமதியில்லை.

ஆனால் கிறித்தவ மார்க்கமோ தலைவனில்லாத கட்சியைப் போலவும் தகப்பனில்லாத குடும்பத்தைப் போலவும் மேய்ப்பனற்ற மந்தையைப் போலவும் இருப்பதால் இங்கே யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பேசலாம் எழுதலாம் செய்யலாம் கொள்கைகளை அறிவிக்கலாம் சபைகளையும் ஸ்தாபனங்களையும் துவங்கலாம் என்ற நிலை இருக்கிறது.

  • "அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும். "  (வெளிப்படுத்தல்.22:11)

எச்சரிப்புக்காக ஆண்டவர் இவ்வாறு சொன்னதே இவர்களுக்கு மறைவிடமாகவும் இருக்கிறது;நம்மைப் போன்ற அறிவுஜீவிகளும் (?!) அவர் வரும்வரை காத்திருக்கவேண்டியதுதான்..!

  • "ஆனதால், கர்த்தர் வருமளவும் நீங்கள் காலத்துக்குமுன்னே யாதொன்றைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள்; இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளியரங்கமாக்கி, இருதயங்களின் யோசனைகளையும் வெளிப்படுத்துவார்; அப்பொழுது அவனவனுக்குரிய புகழ்ச்சி தேவனால் உண்டாகும்.
  • சகோதரரே, எழுதப்பட்டதற்கு மிஞ்சி எண்ணவேண்டாமென்று நீங்கள் எங்களாலே கற்றுக்கொள்ளவும், ஒருவனும் ஒருவனிமித்தம் மற்றொருவனுக்கு விரோதமாய் இறுமாப்படையாதிருக்கவும், நான் உங்கள்நிமித்தம் என்னையும் அப்பொல்லோவையும் திருஷ்டாந்தமாக வைத்து, இவைகளை எழுதினேன்." (1.கொரிந்தியர்.4:5,6)

பவுலடிகள் சொன்ன மேற்கண்ட ஆலோசனை சற்று ஆறுதலாக இருக்கிறது; இதையாவது யாராவது சம்பந்தபட்டவர்களுக்கு எடுத்துச்சொன்னால் பரவாயில்லை; ஆனால் அதுவும் கூடாத காரியம்தான், ஏனெனில் நம்முடைய தலைவர்கள் கேட்கும் திறனை இழந்து ரொம்ப நாள் ஆகிவிட்டது; அவர்கள் கர்த்தரைவிட்டு தூரப்பட்டு, வீணான மாயையான, பேர், புகழ் போதையில் சிக்கிவிட்டதால் ஆண்டவரே பேசினாலும் அவர்கள் காதுகளில் விழாத அளவுக்கு அவர்களைச் சுற்றிலும் அவ்வளவு கோஷ்டிகள், இரைச்சல்..!

ஐயா எடிசன் அவர்களையே எடுத்துக்கொண்டால் ஒருபுறம் கட்டிடம் கட்டித் தரும் நிறுவனத்தின் அதிபராகவும் மறுபுறம் பெந்தெகொஸ்தே மாமன்றத்தின் பொருளாளராகவும் சமுதாயத்தின் மதிப்பு மிகுந்த இடத்தில் வீற்றிருக்கிறார்;யாராவது அவரை நெருங்கிச் சென்று புத்திசொல்ல முடியுமா?

தற்கால சபையின் பீடங்களை அப்போஸ்தலத்துவ அழைப்பில் உள்ளவர்கள் அல்ல, தொழிலதிபர்களும் வியாபாரிகளுமே அலங்கரித்துக் கொண்டிருக்கிறார்கள்;மக்களோ தேவை மிகுந்தவர்களாகவும் மேடை கவர்ச்சியிலும் ஊடக ஈர்ப்பிலும் மயங்கிய நிலையிலும் இருக்கிறார்கள்; எனவே சத்தியத்தை சத்தியமாகச் சொல்லுவோரின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கிறது.

இன்னும் கர்த்தருக்காகவே தன்னுடைய ஜீவியகாலம் முழுவதையும் அர்ப்பணிக்கும் அழைப்பில் நிற்பது இகழ்ச்சியாகவும் பகுதி நேரம் மட்டும் எதையாவது செய்வது புகழ்ச்சியாகவும் கருதப்படுகிறது;இதனால் பகுதி நேரப் பணியாளர்கள் எவ்வளவு வேலைப்பளுவின் மத்தியிலும் கர்த்தருக்காக நிற்கிறார்கள் என்ற அனுதாபமும் அவ்வளவு பெரிய செல்வந்தர் இத்தனை எளிமையாக வந்து நிற்கிறாரே என்ற பிரமிப்புமே பிரதானப்படுத்தப்படுகிறது;.

இந்த நிலை மாறவேண்டும்,மாறுமா..?



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard