இரண்டு வகையான ஆசீர்வாதங்கள் உண்டு. 1.பூமிக்குரிய ஆசீர்வாதம். 2.ஆவிக்குரிய ஆசீர்வாதம்.
உண்ணவும் உடுக்கவும் உண்டாயிருந்தால் போதும் என்று நினையுங்கள் என்பது தான் இம்மைக்குரிய ஆசீர்வாதத்திற்குரிய தேவ ஆலோசனை.
முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும், நீதியையும் தேடுங்கள். அப்பொழுது இவைகளெல்லாம் கூட கொடுக்கப்படும் என்றும் வேதம் சொல்கிறது.
எனவே, கிறிஸ்தவர்கள் உலக ஆசீர்வாதத்தையல்ல, ஆவிக்குரிய ஆசீர்வாதத்தைத்தான் நாடித் தேட வேண்டும்.
ஆவிக்குரிய ஆசீர்வாதம் என்பது என்ன? எனக்கு வேதத்தில் மிகவும் பிடித்தது. நீ மிகவும் பிரியமானவன் என்று தானியேலைப் பார்த்து ஆண்டவர் சொன்னதுதான். அப்படி ஆண்டவர் நம்மைப் பார்த்து சொன்னால், அதுதான் ஆசீர்வாதம், என்னைப் பொறுத்தவரை! தானியேல் போல், பவுல் போல் ஆண்டவருடன் நெருங்கி ஜீவிப்பவர்கள் தான் ஆசீர்வதிக்கப்பட்ட லட்சாதிபதிகள் மற்றும் கோடீஸ்வரர்கள்!