கடவுளுடைய குமாரன் இயேசுநாதர் பேதுருவை நோக்கி "நான் வருமளவும் இவனிருக்க எனக்கு சித்தமானால் உனக்கென்ன" ? யோவான் 21:20-23. வசனத்தை பற்றிய விவாதங்கள், சில வழிகளில் நடைபெற்று வருகிறது. அதில் ஒன்றை பற்றி ஏஞ்சல் டிவியில் (யாரோ) சொன்னதாக சிலர் (பெந்தேகோஸ்ட் கிறிஸ்தவர்கள்) உரையாடி கொண்டிருந்தனர். அது..... இந்திய தேசத்தில் வாழ்ந்த கடவுளுடைய ஊழியர் சாது சுந்தர் சிங். இந்தியாவை கடந்து திபெத் தேசத்துக்கு செல்ல, இமயமலையை கடந்து கொண்டிருந்தார். மலையில் சாது களைப்படைந்த போது.. மிகவும் வயதான ஓர் முதியவர் சாதுவுக்கு தென்பட்டு, உரையாடினாராம். இந்த முதியவர் 2000 வருடமாக, யாருடைய கண்ணுக்கும் தெரியாமல், மலையில் வாழ்ந்து வருவதாகவும். இந்த முதியவர் வேறு யாருமல்ல... இவர் அப்போ - யோவானே ஆவார்...!ஏனெனில் யோவா 21:20-23 - படி அப்- யோவான் இன்னும் மரிக்க வில்லை.. ஆண்டவர் வரும் வரைக்கும் யோவான் உயிரோடிருக்க வேண்டுமே....! என்பதாய் அந்த தொலைக்காட்சியில் பேசப்பட்டதாம்....!
அப்படியானால், மத்தே 16:28- படி இயேசுநாதர் தமது இராச்சியத்தில் வருவதை காணும் முன்,அவருடன் இருந்த சிலர் மரணத்தை ருசிப்பார்ப்பதில்லை என்றார்..! அவருடன் இருந்த அப்போஸ்தலர் இரத்த சாட்சியாய் மரித்தனர்... இதற்கு ஏஞ்சல் டீவி என்ன சொல்லபோகிறது...? ஒருவேளை அவர்கள் என்ன தான் சொன்னாலும். அதற்கான பதில்.. இயேசுநாதர் தமது இராச்சியத்தில் மகிமை பொருந்தினவராய் எதிர்காலத்தில் வருவதை, அப்போஸ்தலர்கள். முன் கூட்டியே, தரிசனமாக அந்த மலையில் கண்டார்கள்....! மத்தே 17:1-13. இதன் மூலம் அந்த வார்த்தை நிறைவேறியது.... எனலாம்.!
அதே போன்று இயேசுநாதர் பேதுருவை நோக்கி 'நான் வருமளவும் இவனிருக்க, எனக்கு சித்தமானால் உனக்கென்ன" ? என்று யோவனை பற்றி சொல்லியது.. யோவா 21:20-23. அப்- யோவான், பரலோகத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு. இயேசுநாதர் தமது 2-ம் வருகையில் பூமிக்கு மகிமையோடு திரும்ப வருவதை, தரிசன காட்சியின் வாயிலாக பார்த்ததின் மூலம் நிறைவேறியது எனலாம். அதாவது நூற்றாண்டு காலம் வாழ்ந்து. இயேசுநாதரின் 2-ம் வருகையை. அப் - யோவான் நேரடியாக பார்த்து அனுபவித்தார் எனலாம்.. அதாவது, காட்சியின் வாயிலாவது இயேசுநாதர் மகிமையடன் திரும்பி வரும்வரை யோவான் உயிரோடிருக்க அனுமதிக்கப்பட்டார்....! என்று அறிந்துக் கொள்ளலாம்.
மற்ற படி, வேறுவிதமாக இருக்காது...
ஏஞ்சல் டீவி பல இலட்ச மக்களை சென்றடைகிறது. இப்படி கற்பனையாக சொன்னால் மக்கள் உண்மையை அறிந்துக் கொள்ள இயலாது...! தமக்கு வரும் கனவு / தரிசனம் / தோன்றும் தூதர்களின் வார்த்தையை நம்பி மோசம் போன முஹம்மது / ஜோசப் ஸ்மித் / எலன் G ஒயிட்.. போன்று மற்றுமொரு தவறான / கள்ள போதகத்தை. உருவாக்க இந்த ஏஞ்சல் டீவி, வழிவகுத்து விடுமே.....! ஏதோ அம்புலிமாமா கதை போல் ஏஞ்சல் டீவியில் தொடர் ஒன்று ஒளிப்பரப்பாகிறதோ....!
கணினியில் எமக்கு போதிய பயிற்சி / அனுபவம் இல்லை. எழுத்து பிழை இருந்தால் தயவு செய்து மன்னிக்கவும்...!
தானியேல் தீர்க்கதரிசியின் 70 வாரங்களில் கடைசி வாரமான 70-வது வாரம். தானி 9:23-27.
1 வாரம் என்பது 7 வருடம். ( 360 நாட்கள் = 1 வருடம் x 7=2520 நாட்கள்) 360x7 என்பது பைபிளின் நாட்கள். எஸ்தர் 1:4 / 2:12. இங்கு சூரிய அல்லது சந்திர சுழற்சியின் நாட்கள் சொல்லப்படவில்லை. தானியேல் புத்தகத்தில் புரசாதிகளின் நாட்களுடைய கணக்கீடு சில இடங்களில் உள்ளது.வெளிப்படுத்தல் புத்தகத்தில் பைபிளின் நாட்கள் பயன் படுத்தப்பட்டுள்ளது. இதையே சரி பாதியாக பிரித்தால்...
வரப்போகும் பிரபுவின் (அந்தி கிறிஸ்துவின்) நாட்கள் இப்படியாயிருக்கும்... 1) உபத்திரவ காலம் = 3 1/2 வருடம் = 1260 நாட்கள் = 42 மாதங்கள் = காலம் + காலங்கள் + அரைக்காலம்.....! 2) மகா உபத்திரவ காலம் = 3 1/2 வருடம் = 1260 நாட்கள் = 42 மாதங்கள் = காலம் + காலங்கள் + அரைக்காலம்.....!
குழப்ப விரும்பவில்லை...! தயவுசெய்து கீழ்க்கண்ட தளத்தை காணுங்கள்... http://www.360calendar.com/bible-prophecy-360-days-calendar-not-edited.htm
சென்ற மாதம் ஏஞ்சல் டீவியில், சாது ஒருவர் (காவி உடையணிந்திருந்தார்). வாலிபர் ஒருவருடன் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் சொன்னது. " சாத்தான், பாதாளத்திலிருந்து விடுவிக்கப்பட்டான் .அவன் புறப்பட்டுபோய், பரிசுத்த நகரத்துக்கு விரோதமாக பெறும் படையை திரட்ட, சாத்தானுக்கு 42- மாதங்கள் தேவைப்பட்டதாம்..." இது மிகப்பெரிய தவறு. ஏனெனில் 1 வாரம் = 7 வருடம் முடிந்து.... ஆயிரம் வருட அரசாட்சி முடிந்த பிற்பாடு நடக்கும் சம்பவம் இது....! ஒரு 42 - மாதங்கள் அல்ல இரண்டு 42 - மாதங்களும் நடந்து முடிந்த பின்னர் விசேடமாக வேறோறு 42 - மாதங்கள் கொடுக்கப்பட போவதில்லை....!
இதற்கு எந்த பைபிள் ஆதாரமும் கிடையாது.. ஒருவேளை கடவுள் இந்த சாதுவோடு இடைப்பட்டு இருக்கலாம். சமன்சுகளும் இடைபட்டிருக்கலாம்.. அதற்காக, " தான் சொவதெல்லாம் பைபிளின் படி உண்மை என்று இறுமாப்பு கொள்வது சரியானது அல்ல..
தமிழில் ஒரு வார்த்தை உண்டு " கற்றது கைமண்ணளவு , கல்லாதது உலகளவு..." அனைவருக்கும் இது பொருந்தும்...!
-- Edited by suncauvery on Thursday 2nd of June 2011 02:04:57 PM
யூதர்கள் ஓர் யூதனை தவிர புரசாதிகளில் இருந்து எழும்பும் ஒருவனை ஒருபோதும், தங்களுடைய மேசியா என்று ஏற்றுக் கொள்ளபோவதில்லை... "நான் என் பிதாவின் நாமத்தினாலே வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்று கொள்ளவில்லை.. வேறோருவன் தன் சுய நாமத்தினாலே வந்தால் அவனை (மேசியாவாக) ஏற்று கொள்வீர்கள் "என்று இயேசுநாதர் யூதர்களுக்கு தீர்க்கதரிசனமாக சொன்னார். அந்திகிறிஸ்து எந்த நாட்டிலிருந்து எழும்புவான் என்பதனை தானியேல் புத்தகத்தில் ... தானி 8:5-11 -ல் கிரேக்க இராச்சியத்தையும்,அந்த இராச்சியம் 4-காய் பிரிக்கப்படும் என்றும் மேலும் இதே புத்தகத்தில் 4-காய் பிரிக்கப்பட்ட கிரேக்க இராச்சியத்தில் சீரியா வடதிசை நாடாக குறிப்பிடப்பட்டுள்ளது... இந்த வடதிசை தேசத்திலிருந்து தான் சின்ன கொம்பான "அந்திகிறிஸ்து" எழும்புவான் என்று திட்டவட்டமாக சொல்லப்பட்டிருக்கிறது. மேலே சொன்னப்படி இந்த வரப்போகும் பிரபு தானி 9:27. ஒன்று யூதனாய் இருந்து பின்வாங்கி போனவனாய் இருக்க வேண்டும் அல்லது யூதர்களை ஏமாற்றவாவது யூதனைப்போல் நடித்து எதிர்காலத்தில் அவர்களை வஞ்சிக்கவேண்டிருக்கும்... மேலும் தானி 7:19-26. வருகிற விசித்திரமான ஆனால் பயங்கரமான மிருகத்தின் தலையில் உள்ள 10 கொம்புகளிலிருந்து எழும்பும் ( நேபுகாத் இராசா கண்ட கனவில் வரும் பிரம்மாண்டமான சிலையின் பாதத்தின் 10 விரல்கள்) மூர்க்கமுகமானவன், இந்த சீரியாவில் பிறந்தவனாய் இருக்கவேண்டும். அல்லது சீரியனுக்கு / அல்லது சீரியாவை விட்டு வெளியெறியவனாய் இருக்கவேண்டும். வரபோவது இசுலாமியரின் 10 கூட்டமைப்பான தேசமாக இருக்கிறதோ இல்லையோ... ஆனால் தானியேல் புத்தகத்தில் சொல்லப்பட்ட 4- காவது இராச்சியமான உரோம சாம்ராச்சியம் முழுவதாய் அழிந்து விடவில்லை. அது பிளவு பட்டு வலது இடதாய் உள்ளது ( பிரம்மாண்டமான சிலையின் கால் பகுதி). வரப்போகும் 10- கூட்டணி தேசங்களின் பின்னனி இந்த உரோம சாம்ராச்சியத்தின் , பிற்கால இராச்சியமாய் இருக்கப்போகிறது. அதிக விவரங்கள் தானியேல் / வெளிப்படுத்தல் புத்தகத்தில் உள்ளது.. பழைய பாபிலோன் எப்படி உரோமமாக மாறியது என்பதும் மீண்டும் எதிர்காலத்தில் பாபிலோன் திரும்பக்கட்டபடும் என்றும் சொல்லப்படிருக்கிறது.
-- Edited by suncauvery on Friday 27th of May 2011 09:55:30 PM
-- Edited by suncauvery on Friday 27th of May 2011 09:59:40 PM
-- Edited by suncauvery on Friday 27th of May 2011 10:01:20 PM
II தெச 2 ம் அதிகாரத்தில் அந்திக் கிறிஸ்து வெளிப்பட்ட பின் தான் நாம் அவ்ருடன் சேர்த்துக்கொள்ளப்படுவோம்(Rapture) என்று சொல்லப்பட்டிருக்கிறது. எனவே அந்திக் கிறிஸ்து வந்தால் தான் முடிவு இருக்கும். மே 21 க்குள் அது நடக்க வாய்ப்பிருப்பதுபோல் தெரியவில்லை.
மத்திய கிழக்கு, ஆப்பிரிக்க நாடுகளில் நடக்கும் கிளர்ச்சி 10 நாடுகளின் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை கொண்டு வரும். அதன் பின் அந்திகிறிஸ்து யாரென்று நமக்குத் தெரிய வரலாம். அவன் அப்பகுதியில் ஒரு தலைவனாகத்(உலகளாவிய அல்ல) தான் இருப்பான் என்று நினைக்கிறேன். ஆனால் அந்தி கிறிஸ்துவின் system (666 முத்திரை) உலகளாவிய முறையில் நடைமுறைப்படுத்தப்படும்.
சகோதரி கோல்டா அவர்களே, தயவுசெய்து தவறான செய்தியை தமிழ் கிறித்தவர்களுக்குத் தரவேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக்கொள்ளுகிறேன்;உங்கள் (சாதுவின்) யூகங்களெல்லாம் சத்தியமாகிவிடாது;மனிதனுடைய கணிப்புகளுக்கும் சூழ்ச்சியான கணக்கீடுகளுக்கும் அப்பாற்பட்டதே சர்வவல்லவரின் நேரம்.
Bro Chillsam: நீங்கள் சொல்லுவது போல உபத்திரவ காலத்துக்குப் முன்னரே சபை எடுத்துக்கொள்ளப்படும் எனும் போதனை பொய்யானது என்றால் அதற்குரிய நியாயமான விளக்கத்தைக் கொடுக்கும் பொறுப்பு உங்களுடையதே;
golda wrote:என்னைப் பொறுத்தவரை, உபத்திரவ காலத்திற்கு முன் எடுத்துக்கொள்ளப்படுவோம் (pre tribulation rapture) என்ற போதனை மிகத் தவறானதாகும். நான்கு முத்திரையும் உடைக்கப்பட்டாயிற்று. நாம் இப்போது உபத்திரவ காலத்திற்குள் தான் இருக்கிறோம். எடுத்துக் கொள்ளப்படுதல் 7ம் எக்காளம் ஊதப்படும் போது நடக்கலாம்..
அன்புக்குரிய சகோதரியே,
"என்னைப் பொறுத்தவரை, உன்னைப் பொறுத்தவரை" என்று யூகத்தின் அடிப்படையில் கணிக்க இது என்ன தமிழக சட்டமன்ற தேர்தல் களமா என்ன..? இது மாறாத தேவனின் தீர்மானம் அல்லவா, எனவே நெருப்புடன் விளையாடவேண்டாமே..!
தெரியாது என்று சொல்லி பரிசுத்தத்தையும் விசுவாசத்தையும் மாத்திரம் காத்துக்கொண்டு அமர்ந்திருந்தால் ஒன்றும் குடிமுழுகிவிடாது; தன்னை பெரிய ஆளாகவும் ஆராய்ச்சியாளனாகவும் தீர்க்கதரிசியாகவும் நிறுத்த துடிக்கும் சில சுயநலவாதிகளாலேயே இதுபோன்ற புரட்டான போ(தை)தனைகள் எங்கும் பரவிப் பாய்கிறது;
நீங்கள் சொல்லுவது போல உபத்திரவ காலத்துக்குப் முன்னரே சபை எடுத்துக்கொள்ளப்படும் எனும் போதனை பொய்யானது என்றால் அதற்குரிய நியாயமான விளக்கத்தைக் கொடுக்கும் பொறுப்பு உங்களுடையதே; நடப்பதே உபத்திரவக்காலம் என்று சொல்லுவீர்களானால் நீங்கள் அந்திகிறித்துவின் அடையாளத்தைத் தரித்துக்கொண்டு கைவிடப்பட்ட நிலையில் இருக்கிறீர்கள் (நானும்) என்று பொருளாகும்; இந்த உபதேசம் இதுவரை நாம் கற்பிக்கப்பட்ட அனைத்து அஸ்திபாரங்களையும் தகர்த்துவிட்டு புதிய அஸ்திபாரத்தைப் போடுவதற்கு சமானமாகும்; போடப்பட்டிருக்கிற அஸ்திபாரத்துக்கு மாற்றாக இன்னொன்றைப் போட ஒருவனாலும் கூடாது;
எடுத்துக்கொள்ளப்படுத்தல் 7 முத்திரை உடைக்கப்பட்டு ஏழாம் எக்காளம் ஊதப்படும் போதே என்பீர்களாகில் அதுவும் ப்ரன்ஹாமின் உபதேசத்தின்படி நடந்துவிட்டதே,என்ன செய்யலாம்..? இன்னும் யாருக்கு காத்திருக்கிறீர்கள்..?
ஒரு கேணையனுடைய உபதேசத்தைப் பின்பற்றி சோரம் போனதும் திரும்பிச் செல்லவும் தொடர்ந்து செல்லவும் வழியில்லாமல் செய்ததையே திரும்பவும் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள்;அதுவே இரஸல் கூட்டத்தாருக்கும்ப்ரன்ஹாம் கூட்டத்தாருக்கும் ஒரே நேரத்தில் சம்பவித்திருக்கிறது;
ஒரு படுபாவி, தூதனுக்கு கால் இல்லை என்று சாதித்தான்;சரி அதற்கு வசனத்தைக் காட்டு என்றால் கால் இருக்கிறது என்ற வசனத்தை நீ காட்டு என்று புத்திசாலியான முட்டாளைப் போல திருப்பியடித்தான்; நான், கால் இருக்கிறது என்றோ இல்லை என்றோ சொல்லி எந்த விவாதத்தையும் துவங்கவில்லையே;
அதுபோலவே நீங்களும், உபத்திரவக்காலத்துக்கு முன்னர் சபை எடுத்துக்கொள்ளப்படும் என்ற உபதேசம் தவறானது என்பதற்கான வசனத்தைக் காட்டவேண்டும் என்று கேட்டதற்கு பதிலாக என்னையே வசனத்தைக் கேட்டு துன்புறுத்திவிடாதீர்கள் என்று பணிவுடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
//இதுவும் நல்ல கேள்விதான். மோசேக்குப் பின் ஒரு யோசுவாவை ஆண்டவர் எழுப்புவார்.//
சந்தேகமே இல்லாம அது நீங்கதான் சகோதரி. கோல்டா. யோசுவா கூட மோசேயை இந்தளவு நேசித்திருப்பரா என்று தெரியவில்லை. நீங்க சாது(?) மீது வைத்திருக்கும் பக்தி கூடிய சிக்கிரம் உடையும் என்று நம்புகிறேன்.
//சாது இருப்பார்,ஏஞ்சல் டீவீ ஒளிபரப்பும் என்றால், 2 சாட்சிகள் வந்து போன பிறகு தான் முத்திரை அமலுக்கு வரும் , எடுத்துக் கொள்ளப்படுதலும்(rapture) இருக்கும் என்று நாம் எடுத்துக் கொள்ளலாம்!!//
இது ரொம்பவே என் மனசை காயப்படுத்தி விட்டது. சாது சொன்ன ஒரு புளுகை வைத்து இரண்டாம் வருகை எப்படியிருக்கும் என்று வேதத்தை வியாக்கினம் செய்வது மகா தவறு.
Bro Chillsam: எருசலேமில் வந்திறங்கும் இரண்டு தீர்க்கதரிசிகளின் ஊழியத்தை ஏஞ்சல் டிவி நேரடி ஒளிபரப்பு செய்யும் என்பது உண்மையானால் ஏஞ்சல் டிவியின் முதலாளிகளும் அதன் நிர்வாகிகளும் அதன் தொழிலாளர்களும் மற்றும் அதன் மதிப்பிற்குரிய நேயர்களான பங்காளர்களும் கர்த்தருடைய வருகையில் கைவிடப்படுவார்கள் என்பதே அதிர்ச்சிகரமான உண்மையாகும்; ஏனெனில் இரண்டு ஊழியர்களின் பணி மகா உபத்திரவ காலத்தின் உச்சக்கட்டத்தில் நடைபெறுவதாக உள்ளது; அந்த காலகட்டத்தில் அந்திகிறித்துவின் முத்திரையை தரிக்காதவன் கொள்ளவோ கொடுக்கவோ இயலாது அல்லவா? அப்படியானால் அந்திகிறித்துவின் முத்திரையை சாதுஜி குழுவினர் தரித்துக்கொள்ள ஆயத்தமாகி விட்டார்களா அல்லது இரத்தசாட்சியாக மரிக்கப்போகிறார்களா? அவர்கள் மரித்துவிட்டால் ஏஞ்சல் டிவியை யார் நடத்துவார்கள்?
Golda:சாது இருப்பார்,ஏஞ்சல் டீவீ ஒளிபரப்பும் என்றால், 2 சாட்சிகள் வந்து போன பிறகு தான் முத்திரை அமலுக்கு வரும் , எடுத்துக் கொள்ளப்படுதலும்(rapture) இருக்கும் என்று நாம் எடுத்துக் கொள்ளலாம்!!
என்னைப் பொறுத்தவரை, உபத்திரவ காலத்திற்கு முன் எடுத்துக் கொள்ளப்படுவோம்(pre tribulation rapture) என்ற போதனை மிகத் தவறானதாகும். நான்கு முத்திரையும் உடைக்கப்பட்டாயிற்று. நாம் இப்போது உபத்திரவ காலத்திற்குள் தான் இருக்கிறோம். எடுத்துக் கொள்ளப்படுதல் 7ம் எக்காளம் ஊதப்படும் போது நடக்கலாம்.
இந்த வரிசைப்படி நடக்கலாம் என்பது தான் என் அனுமானம்.:
உபத்திரவ காலம் ஆரம்பம் --> அந்திக் கிறிஸ்துவின் வருகை --> 2 சாட்சிகள் --> 666 முத்திரை --> எடுத்துக் கொள்ளப்படுதல் --> இரண்டாம் வருகை , அர்மகெதான் --> ஆயிரம் வருட அரசாட்சி
Bro Chillsam: அவர்கள் மரித்துவிட்டால் ஏஞ்சல் டிவியை யார் நடத்துவார்கள்?
இதுவும் நல்ல கேள்விதான். மோசேக்குப் பின் ஒரு யோசுவாவை ஆண்டவர் எழுப்புவார்.
கர்த்தருடைய வருகையை ஒருவனும் கணிக்கக்கூடாது,கணிக்கவும் முடியாது;இதுபோன்ற கணிப்புகள் பலமுறை பொய்த்துப்போயிருக்கிறது; யூதர்களின் தேவாலய நடைமுறைகளே இன்னும் துவக்கப்படாத நிலையில் யூபிலி வருடம் சம்பந்தமான கணிப்புகளுக்கெல்லாம் என்ன அவசியம் என்று புரியவில்லை.
"அப்பொழுது கூடிவந்திருந்தவர்கள் அவரை நோக்கி: ஆண்டவரே, இக்காலத்திலா ராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர் என்று கேட்டார்கள்.
க்ளோபல் வார்மிங் குறித்த அச்சங்கள் பரவிவரும் தற்காலத்தில் வியாபாரிகள் அதற்கேற்ப தங்கள் வியாபார தந்திரங்களை மேற்கொள்ளுகின்றனர்; உதாரணமாக ஈகோ ஃப்ரெண்ட்லி ப்ராக்டெக்ட் என்று அறிவித்து வியாபாரம் செய்வது; அந்த வியாபாரிகளுக்கும் சாதுவுக்கும் எந்த வித்தியாசமுமில்லை; ஒரு மனிதனோடு ஆண்டவர் பேசிவிட்டால் அந்த மனிதன் அதற்குப் பிறகு இந்த நவீன உலகத்தின் வசதிகளை அனுபவிக்கவோ பேர்புகழை விரும்பவோ துணியமாட்டான்; ஆனால் ஏஞ்சல் டிவி செய்துகொண்டிருப்பது என்ன, சுக போக (?) வாழ்க்கை வாழ்ந்துகொண்டு சற்றும் வெட்கமில்லாமல் தங்களைத் தாங்களே தீர்க்கதரிசிகளாக அறிவித்துக்கொண்டு தங்களை மகான்கள் ரேஞ்சுக்கு விளம்பரப்படுத்திக் கொள்ளுகிறார்கள்; இவன் அவனுக்கு சொறிஞ்சி விடுகிறான்,அவன் இவனுக்கு சொறிஞ்சி விடுகிறான், ரெண்டு பேரும் கள்ளர்கள். ப்ரன்ஹாமின் விஷ(ய)த்தை உறிஞ்சி குடித்துவிட்டு அவருக்கே துரோகம் செய்பவர்கள்.ஏனெனில் இவர்கள் கடைசிகாலமான ஏழாம் சபைக்கு இரகசியங்களை அறிவிக்க அனுப்பப்பட்ட தீர்க்கதரிசியான(?!) அவருடைய போதகங்களை திருடி எடுத்துக்கொண்டு அவரையே இருட்டடிப்பு செய்கிறார்கள்; இவர்கள் போதிப்பவை அனைத்தும் ஏற்கனவே அச்சிடப்பட்டு ப்ரன்ஹாம் எனும் கள்ளதீர்க்கதரிசியின் ஆட்களால் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது;அவற்றை யாரும் பொறுமையாக படிக்கமுடியாது; ஆனால் ஒருமுறை படித்துவிட்டால் பிறகு எந்த ஊழியரையும் மதிக்க தோன்றாது;ஏனெனில் இன்றைக்கு பிரசங்கம் செய்துகொண்டிருக்கும் அத்தனை ஊழியர்களும் அவருடைய வியாக்கியானங்களையே தங்களுக்கு ஆவியானவர் வெளிப்படுத்தினார் என்று துணிகரமாகப் பொய்சொல்லி போதிக்கின்றனர் என்பதை பகிரங்கமான குற்றசாட்டாகவும் சவாலாகவும் முன்வைக்கிறேன்;இன்னும் பலர் எங்கோ யார் மூலமோ கேள்விபட்டவற்றை வியாக்கியானம் செய்து போதித்து ப்ரன்ஹாம் என்பவரைக் குறித்து அறியாமலே கூட அவருக்கு சீடர்களாக இருக்கிறார்கள்.
இவர்கள் தங்களை யாருடைய வாரிசுகள் என்று அறிவித்துக் கொள்ளுகிறார்களோ அவர்களில் ஒருவரும் (கள்ளதீர்க்கதரிசிகளைத் தவிர...) தங்களைக் குறித்து விளம்பரப்படுத்திக்கொண்டதில்லை; அது பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசிகளாக இருக்கட்டும் அல்லது அண்மைக்காலத்தில் வல்லமையாக ஊழியம் செய்த சாது சுந்தர்சிங் ஆக இருக்கட்டும் யாருமே தங்களுடைய மகாத்மியங்களை வெளிச்சம் போட்டு காட்டியதே இல்லை; செய்தியை மட்டும் சொல்லிவிட்டு போய்க்கொண்டே இருப்பார்கள்;அது அப்படியே பிசகாமல் நிறைவேறியதும் சம்பந்தப்பட்டவர்கள் அச்சத்துடன் வந்து பணிந்துகொண்டு பிறகு வெளியே சென்று அவர்களைக் குறித்து சாட்சி சொல்லுவார்கள்.
சாதுசுந்தர்சிங் அதிகபட்சமாக செய்தது என்ன, என்எம்எஸ் (NMS) என்னும் மிஷினரி ஸ்தாபனத்தை ஸ்தாபித்தார்; அதன்மூலம் இன்றுவரை மிஷினரி பணிகள் எத்தனையோ இடர்பாடுகள் மத்தியிலும் நடைபெற்று வருகிறது; ஏஞ்சல் டிவியில் அதைக் குறித்து எப்போதாவது செய்தி வெளிவந்ததா? சாது சுந்தர்சிங்'கைப் போலவே அவருடைய வாரிசு என்று இந்தியா முழுமைக்கும் மகானாக தன்னைத் தான் விளம்பரப்படுத்திக்கொள்ளும் சாது முதலில் சாது சுந்தர்சிங்'கால் ஸ்தாபிக்கப்பட்ட என்எம்எஸ் (NMS)மிஷினரி ஸ்தாபனத்துக்கு குறிப்பிடத்தகுந்த உதவிகளை செய்யலாமே அல்லது அதேபோன்று தானும் மிஷினரி ஊழியத்தை நடத்தலாமே;காரணம் அதில் கலெக்ஷனும் கனெக்ஷனும் ரொம்ப குறைவு என்பதே.
இது எப்படி இருக்கிறதென்றால் விபத்தில் சிக்கிக்கொண்ட ஒருவனை சுற்றிலும் மக்கள் சூழ்ந்துகொள்ள எங்கிருந்தோ வந்த ஒருத்தன் "தள்ளுபா.. தள்ளுபா " என்று சொல்லிக்கொண்டே கூட்டத்தை விலக்கி முன்னேறி அடிபட்டு துடிப்பவனுக்கு எந்த உதவியும் செய்யாமலும் அவனைத் தூக்காமலும் இருந்து அவனுடைய மணிபர்ஸையும் செல்போனையும் லவட்டிக்கொண்டு ஓடிவிடுவான்; அந்த திருடனுக்கும் சாது போன்றவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
இவர்களெல்லாம் சீஸனுக்கு ஏற்ப கூத்துகட்டி கல்லா கட்டுகிறவர்களே; எப்படியென்றால் ஒரு கைதேர்ந்த வியாபாரி கோடைக்காலத்தில் சர்பத் கடை போடுவான்; அதே வியாபாரி மழைக்காலத்தில் சுக்குகாபி வியாபாரம் செய்வான்;அவனைப் போன்ற வியாபாரிகளே இவர்கள்..!
"என்னைக்குறித்து நானே சாட்சிகொடுத்தால் என் சாட்சி மெய்யாயிராது. என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவர் வேறொருவர் இருக்கிறார், அவர் என்னைக்குறித்துக் கொடுக்கிற சாட்சி மெய்யான சாட்சியென்று அறிந்திருக்கிறேன்."(யோவான்.5:31,32)
ஆண்டவர் சொன்ன இந்த குறியீட்டுக்குள் இவர்கள் வராதவரை இவர்களுடைய பொய்ப்பிரச்சாரங்களுக்கு யாரும் நடுங்க வேண்டியதில்லை; ஆண்டவரே தம்முடைய அற்புத செயல்களைக் குறித்து விளம்பரப்படுத்திக் கொள்ளாதபோது இவர்கள் எங்கெங்கோ நடைபெறும் சம்பவங்களிலெல்லாம் ஏதோ ஒருவகையில் தங்களையும் சம்பந்தப்படுத்திக்கொண்டு இவையெல்லாமே நாங்கள் முன்னுரைத்தே நடந்தது என்று சொல்லிக்கொள்ளுவது எவனோ பெற்ற பிள்ளை தன்னுடையது என்று அடம்பிடிப்பதைப் போலவே இருக்கிறது; இந்த மகான்களின் சூழ்ச்சி சீக்கிரத்தில் வெளிப்படும்;
"யந்நேயும் யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்து நின்றதுபோல இவர்களும் சத்தியத்துக்கு எதிர்த்து நிற்கிறார்கள்; இவர்கள் துர்ப்புத்தியுள்ள மனுஷர்கள், விசுவாசவிஷயத்தில் பரீட்சைக்கு நில்லாதவர்கள்.
ஆனாலும், இவர்கள் அதிகமாய்ப் பலப்படுவதில்லை; அவ்விருவருடைய மதிகேடு எல்லாருக்கும் வெளிப்பட்டதுபோல, இவர்களுடைய மதிகேடும் வெளிப்படும்." (2.தீமோத்தேயு.3:8,9)
ஆண்டவருடைய வருகையைக் குறித்தோ அவருடைய வருகை சமீபம் என்பதைக் குறித்தோ எச்சரிப்பதற்கும் அதற்கு நாள் குறிப்பதற்கும் வித்தியாசம் உண்டு; அவருடைய வருகையானது இனியும் தாமதிக்காது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை; ஆனால் சந்திக்கும் ஆயத்தத்துடன் காத்திருப்பது மட்டுமே நாம் உடனடியாக செய்யவேண்டியதே தவிர நவீன காமிராக்களை வாங்குவதும் பரலோகத்தைப் படம் பிடிப்பதும் அல்ல.
எருசலேமில் வந்திறங்கும் இரண்டு தீர்க்கதரிசிகளின் ஊழியத்தை ஏஞ்சல் டிவி நேரடி ஒளிபரப்பு செய்யும் என்பது உண்மையானால் ஏஞ்சல் டிவியின் முதலாளிகளும் அதன் நிர்வாகிகளும் அதன் தொழிலாளர்களும் மற்றும் அதன் மதிப்பிற்குரிய நேயர்களான பங்காளர்களும் கர்த்தருடைய வருகையில் கைவிடப்படுவார்கள் என்பதே அதிர்ச்சிகரமான உண்மையாகும்; ஏனெனில் இரண்டு ஊழியர்களின் பணி மகா உபத்திரவ காலத்தின் உச்சக்கட்டத்தில் நடைபெறுவதாக உள்ளது; அந்த காலகட்டத்தில் அந்திகிறித்துவின் முத்திரையை தரிக்காதவன் கொள்ளவோ கொடுக்கவோ இயலாது அல்லவா? அப்படியானால் அந்திகிறித்துவின் முத்திரையை சாதுஜி குழுவினர் தரித்துக்கொள்ள ஆயத்தமாகி விட்டார்களா அல்லது இரத்தசாட்சியாக மரிக்கப்போகிறார்களா? அவர்கள் மரித்துவிட்டால் ஏஞ்சல் டிவியை யார் நடத்துவார்கள்? பொய்ப் போதகத்தால் சபையைக் குழப்புகிறவர்களுக்கு யாரும் துணைபோய்விடவேண்டாம் என்றே மன்றாடுகிறேன்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
இந்த சந்ததி ஒழிந்து போகாது (மத் 24:34) என்று ஆண்டவர் சொல்லவில்லையா? நாம் தான் ஆண்டவர் வருகையை காணப் போகும் அந்த சந்ததி என்று நான் நம்புகிறேன்.
இஸ்ரவேல் தேசத்தில் இனி வரும் யூபிலி தான் கடைசி என்று ஆண்டவர் ஒரு தீர்க்கதரிசிக்கு சொல்லியிருக்கிறார். யூபிலி என்றால் 50 வருடம். எதிலிருந்து 50 வருடம் கணக்கிடவேண்டும் என்று அவர் கேட்டாராம். 1948 இல் இஸ்ரவேல் தேசம் உருவானாலும், 1967 இல் தான் எருசலேம் யூதர்கள் கட்டுப்பாட்டில் வந்தது. அதிலிருந்து தான் கணக்கிட வேண்டும் என்று ஆண்டவர் சொன்னாராம். அப்படிப் பார்த்தால், யூபிலி 2017ம் ஆண்டு வருகிறது. அடுத்த யூபிலி 2067 ஐ இந்த உலகம் பார்க்காது.
இன்னுமொரு தீர்க்கதரிசிக்கு (நம்ம சாது தான்!) ஆண்டவர் கட்டளையிட்டிருக்கும் பணி, வெளி 11ல் சொல்லப்பட்டிருக்கும் இரண்டு தீர்க்கதரிசிகளின் ஊழியத்தை உடனிருந்து ஏஞ்சல் டீவீ யில் ஒளி பரப்புவது. அவருக்கு இப்ப 50 வயது என்றால், இன்னும் 30 வருடம் அவர் தெம்பாக ஊழியம் செய்வார் என்று வைத்துக் கொண்டால் அதற்குள்ளாக இரண்டு சாட்சிகளின் ஊழியம் நடைபெற வேண்டும். அப்படிப் பார்த்தால், 2040 தான் கடைசி.
இப்படி காலத்தின் கடைசியில் நிற்கிறோம் என்று உலகில் நடக்கும் பல காரியங்கள் நமக்கு சுட்டிக் காட்டுகின்றது. தீர்க்கதரிசிகளும் சொல்கிறார்கள். எப்படிப் பட்ட வாழ்க்கை வாழ்கிறோம்? எதற்காக வாழ்கிறோம்? என்ற கேள்விகளை நமக்கு நாமே கேட்டுக் கொள்வது நல்லது.