( நம் தேவனை யாருடனும் ஒப்பிட முடியாது, இருந்தாலும் சிலருக்கு இது பிரயோஜனமாயிருக்கும் என்று நம்பி எழுதுகிறேன்).
நண்பர்களே,
சமீபத்தில் ஐயப்பன் பற்றி ஒரு கிறிஸ்துவ எதிர்ப்பு தளத்தில் (திருச்சிக்காரன் தளம்) நாம் விவாதித்து, தகாத வார்த்தைகளால் திட்டப்பட்டோம் என்று அறிவீர்கள். அப்படி திட்டப்பட்டதற்க்கு கர்த்தருக்கு ஸ்தோத்திரம். ஏனென்றால், அதன் மூலம் கர்த்தர் எனக்கு மேலும் பல விஷயங்களை கற்றுகொடுத்தார். அந்த விஷயங்களை இன்னொரு கட்டுரையில் எழுதுகிறேன்.
இப்போது, நாம் ஐயப்பனை பெற்றவர்களான ஹரி மற்றும் ஹரனையும், விசுவாசத்தின் தந்தை என்று அழைக்கப்படும் ஆபிரஹாமின் தேவனையும் ( அவர் நம் தேவன்தான்) பார்போம்.
முதலாவதாக ஐயப்பனின் கதைக்கு போவோம். ஒரு தீயசக்தியை அழிக்க இந்துக்களின் இரு பெரும் கடவுளரின் சக்தி சேர்ந்தால்தான் முடியும் என்று முடிவு செய்து, "கடமைக்காக" ஒரு திருவிளையாடல் (பலரின் வேண்டுகோளுக்கிணங்க, பல விஷயங்களை சென்சார் செய்கிறேன்) செய்து சிவனும் விஷ்ணுவும் (அதாங்க ஹரி, ஹரன்) ஐயப்பனை பெற்றுக்கொள்கிறார்கள்.
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால். ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ள மனிதர்கள்தான் "உடலுறவு" செய்கிறார்கள், கடவுளர் எனப்படுபவர்க்கும் அதே நிலைதானா? அப்போ அவர்கள் உண்மையில் கடவுள்தானா?
அப்போ உடலுறவே இல்லாமல், வெறும் அழுக்கினாலே உண்டாக்கப்பட்ட கணபதிக்கு வலிமையே இல்லையா? (கணபதி கதை இப்போ வேண்டாம், திசை மாறி போய்விடும்).
மேலும், இதில் சிவனுக்கு already ஒன்றுக்கு மேல்பட்ட பெண்களுடன் திருமணமாகிவிட்டது. விஷ்ணுவிற்கும் ஒன்றுக்கும் மேல்பட்ட பெண்கள் மற்றும் ஆணுடன் திருமணமாகியுள்ளது. இந்திய கலாசாரம் "கற்ப்புக்கும்" "ஒழுக்கத்திற்கும்" எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கும் என்பது தெரிந்ததே. ஆனால், இவர்கள் பலர் சொல்வது போல கடமைக்காக கூடியது போல கூடவில்லை.(ஐயோ, மீண்டும் அங்கேயே வருகிறேனோ). மேலும், கற்புநெறி தவறி தான் ஒரு நல்லது செய்ய வேண்டுமா? இதைக்கேட்டால், சிவன் நாமேல்லாருக்காகவும் விஷம் குடித்தார் அதனால் இதையெல்லாம் கண்டும் காணாமல் விட்டுவிடுங்கள்.
அவர் நமக்காக தியாகமாக விஷமெல்லாம் குடித்தார், அதனால் அவரை நீங்கள் வணங்கலாம், ஆனால் அதற்க்கு நான் சாட்சி தரமாட்டேன் (சிரிப்புதான் வருது), என்றெல்லாம் பலர் "self defeating statements " தருகிறார்கள்.
கிட்டத்தட்ட இதே போல் ஒரு சூழ்நிலை ஆபிரகாமின் வாழ்க்கையில் வந்தது. ஆபிராகாமுக்கு தேவன் ஒரு வாக்குத்தத்தம் பண்ணியிருந்தார். அதென்னவென்றால் ஆபிரகாமின் சந்ததியை அவர் வானத்து நட்சத்திரங்கள் போல பெருகப்பண்ணுவேன் என்று. ஆனால் நெடுங்காலமாய் ஆபிரகாமுக்கும், அவர் மனைவி சாராளுக்கும் குழந்தையே இல்லை. ஒருகாலத்தில் சாராளின் உடல், வயோதிகத்தின் காரணமாக குழந்தை பெறமுடியாத நிலைக்கு போனது. அப்போது, எப்படியாவது ஆபிரகாமின் சந்ததி இந்த பூமிக்கு வரவேண்டுமென்று தன் வேலைக்காரியோடு ஆபிரகாமை உறவு கொள்ள சொன்னாள் சாராள். ஆபிரகாமும் கடமையே கண்ணாக சொன்னபடி செய்தான், வேலைக்காரி மூலமாக குழந்தை பெற்றான்.
ஆனால், தேவன் அதை அங்கீகரிக்கவில்லை. அத்தகைய தவறான செயல், நன்மையானதாக அமையவில்லை. நம் குறிக்கோள் என்னதான் நல்லதாக இருந்தாலும், அதை தவறான வழியில் செயல்படுத்துவதை தேவன் விரும்புவதில்லை.
ஆனால், தேவன் மேலும் பதிமூன்று வருடம் கழித்து (அந்த சமயத்தில் ஆபிரகாமும் குழந்தையை உண்டாக்கும் வலிமையை இழந்திருப்பார் என்றே நினைக்கிறேன்), தேவ கிருபையால், அற்புதமாக, அந்த கிழவருக்கும் கிழவிக்கும் குழந்தை பிறந்தது. நம் தேவன் சகலத்தையும் செய்ய வல்லவர். அவர் அற்புதங்களின் தேவன்.
இதை பலர், அறிவியல் ரீதியாகவும், விஞ்ஞான ரீதியாகவும் இல்லை என்று கூறலாம். ஆனால், என் தேவன் சகலதிற்கும் (அறிவியல் உள்பட) ஆண்டவராய் இருக்கிறார். அவருக்கு அனைத்தின் மீதும் அதிகாரம் இருக்கிறது, எதற்கும் அவர்மேல் அதிகாரமில்லை.