இதுவரை முகமதியர்களுக்கு எதிராக எதுவும் எழுதாமல் தவிர்த்து வந்தோம்;ஏனெனில் அதற்கென விசேஷித்த அழைப்பைப் பெற்ற உமர் போன்ற சகோதரர்கள் இருக்கிறார்களே, என்பதால்.மேலும் முகமதியர்கள் (என்பதே சரியான சொல்லாட்சியாகும்.) சம்பந்தமான விவாதங்கள் ஏற்கனவே பெரிதாக நடந்துகொண்டிருப்பதாலும் அது ஒரு தீர்வு எட்டப்படாத நிலைக்குத் தள்ளிவிடும் விஸ்தாரமான பணி என்பதாலும் தவிர்த்து வந்தோம்;ஆனாலும் முகமதியர்களின் பொய்ப் பிரச்சாரங்களைக் குறித்த மனவருத்தமும் வலியும் எப்போதும் நமக்கு உண்டு;அதுசம்பந்தமாக அவ்வப்போது நம்முடைய கருத்துக்களை தளங்களில் பதிவுசெய்து வருகிறோம்;அண்மையில் தமிழ் கிறித்தவ தளத்தில் பதியப்பட்டுள்ள ஒரு கட்டுரைக்கான தொடுப்பும் அதில் நாம் பதித்துள்ள கருத்துக்களும் பின்வருமாறு:
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)…உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக…சகோதரர் யூஸா எவன்ஸ் (Yusha Evans), இருபத்தொன்பது வயது இளைஞரான இவர், இஸ்லாத்திற்கு வந்த கடந்த பனிரெண்டு வருடங்களில் செய்த பணிகள் இன்றியமையாதவை. மாதம் இருவராவது இவரது தாவாஹ் பணியால் இஸ்லாத்தை தழுவி வருகிறார்கள். பல்கலைக்கழகங்களால் விரும்பி அழைக்கப்படும் நபர்களில் ஒருவராய் இருக்கிறார். இன்றைய இளைய தலைமுறை முஸ்லிம்களுக்கு பெரும் உத்வேகமாய் இருக்கக்கூடிய இவர் மனோதத்துவம் பயின்றவர். இவர் 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கலிபோர்னியாவில் “How the Bible Led me to Islam” என்ற தலைப்பில் தான் இஸ்லாத்திற்கு வந்த விதம் பற்றி கூறிய கருத்துக்கள் இங்கே உங்கள் பார்வைக்காக. அந்த சொற்பொழிவு சுமார் ஒன்றரை மணி நேர ஒன்று. முழுவதுமாக இங்கே எழுதினால் மிக நீண்ட பதிவாகிவிடும் என்பதால் சில விஷயங்கள் விடப்படுகின்றன.
// சஜிதா செய்தார்கள். “ஆ, இதுதானே நான் பல புத்தகங்களில் படித்தது”. முஸ்லிம்களின் தொழுகை என்னை மிகவும் பாதித்தது. இது பிரார்த்தனை (Prayer) அல்ல, பிரார்த்தனை என்றால் கடவுளிடம் கேட்பது, ஆனால் இது வழிபாடு (Worship). இது தான் நான் இத்தனை நாளாய் எதிர்ப்பார்த்தது.
தொழுகை முடிந்தது. எனக்கு, என்னைப் பார்த்து மிக வெட்கமாய் இருந்தது (I am ashamed of myself). மற்ற மதத்து நூல்களையெல்லாம் தெளிவாக ஆராய்ந்தவன், இஸ்லாமைப் பற்றி மட்டும் ஒரு புத்தகத்தை வைத்து யூகித்து விட்டேனே. வெட்கமாய் இருந்தது.
தொழுகை முடிந்தவுடன் நேராக அந்த இமாமிடம் சென்றேன். முன்னர் அவரிடம் சிறிது கடுமையாக நடந்து கொண்டதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டேன். பின்னர் அவர் என்னிடம் இஸ்லாத்தைப் பற்றி விளக்க முயன்றார். ஆனால் நான் அவரிடம், “இல்லை இல்லை, எனக்கு விளக்கம் தேவையில்லை. உங்களிடம் உங்களுக்கென்று புத்தகம் ஏதாவது இருக்கிறதா?”
“ஆம் இருக்கிறது, அதற்கு பெயர் குர்ஆன்”
“அதை நான் படிக்கலாமா”
“நிச்சயமாக, ஆங்கில மொழிபெயர்ப்பு இருக்கிறது. அதை எடுத்துக்கொள்ளுங்கள்”
எடுத்துக்கொண்டேன். அன்று இரவே படிக்கத் தொடங்கினேன். முதல் சூரா, அல் பாத்திஹா, பைபிளில் இருப்பது போன்று கடவுளை துதிக்கும் அழகான வார்த்தைகள். மேற்கொண்டு படிக்க ஆரம்பித்தேன்.
அதே பெயர்கள். ஆம் அதே நபிமார்கள். ஆனால் பெரிய வித்தியாசம். இங்கே இந்த நபிமார்கள், தூதர்களுக்குண்டான தன்மையுடன் இருக்கிறார்கள். அவர்கள் கொண்டுவந்த இறைச்செய்திக்கேற்ப வாழ்ந்து காட்டிருக்கிறார்கள். நிச்சயமாக இவர்கள் நான் பின்பற்றுவதற்க்குரிய தகுதியைக் கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக மனிதர்களுக்கு ஒரு நல்ல முன்னுதாரணம் இவர்கள். ஆர்வம் கூடிக்கொண்டே இருந்தது. ஈசா (அலை) அவர்களைப் பற்றி என்ன கூறுகிறது இந்த புத்தகம் என்று பார்க்க மிகுந்த ஆவல். சூரத்துல் அல் இம்ரான் போன்ற சூராக்களில் கூறப்பட்டிருந்த ஈசா (அலை) அவர்களது வரலாறானது நான் இதுவரை New Testament டில் படித்த கதைகளையெல்லாம் விட மிக அழகாக, தெளிவாக இருந்தது. என் மனதில் இருந்த ஈசா (அலை) இவர்தான். குரானை மூன்று நாட்களில் படித்து முடித்துவிட்டேன். ஆனால் முதல் இரவில் சூரத்துல் அல் இம்ரான் படித்த போதே என் மனதை இந்த புத்தகத்திற்கு அர்ப்பணித்துவிட்டேன்.
முஸ்லிம்கள் என்றால் யார், எப்படி முஸ்லிமாவது என்று கூட அப்போது சரியாக எனக்கு புரிந்திருக்கவில்லை. ஆனால் இதைப் பின்பற்றுபவர்கள் போல நானும் ஆக வேண்டும். இந்த புத்தகத்தில் இருக்கும் நபிமார்களை போலத்தான் நானும் வாழவேண்டும். இந்த புத்தகம் வாழ்க்கைக்கு வழிகாட்டி.
“இது தவறென்றால் சோதனைக்கு வையுங்கள், இது தவறென்றால் இதுபோன்ற ஒன்றை கொண்டுவாருங்கள்” என்று சவால்விடும் இதுபோன்ற ஒன்றை நான் இது வரை பார்த்ததில்லை. கடவுளைப்பற்றிய அனைத்து விளக்கங்ககளும் அர்த்தமுள்ளதாக, லாஜிக்காக இருந்தன. குரானின் போதனைகள் நேரடியானவை, நேர்மையானவை. //
நண்பரே, ஏற்கனவே இங்கு இஸ்லாத்தைப் பிரித்துப்போட்டு மேய்ந்துவிட்டார்கள் என்பதை நீங்களே அறிந்திருப்பீர்கள்; ஆனாலும் "தன் முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தன்" என்பார்களே அதுபோல புதிய பெயரில் பழைய சரக்கையே கொண்டு வந்திருக்கிறீர்கள்; இதனை எதிர்கொள்ளும் துணிச்சலும் ஆற்றலும் தமிழ் கிறித்தவ சமுதாயத்துக்கு உண்டு. ஒரு வேளை உங்களைப் போன்றவர்கள் நினைப்பது போல நாங்கள் பைபிளை மேலோட்டமாக வாசிப்பவர்களல்ல; அவ்வாறு மேலோட்டமாக வாசித்தவர்களே உங்களைப் போன்றவர்களால் வஞ்சிக்கப்படுகிறார்கள்; எங்களுக்கு குரானையும் தெரியும் அதன் நோக்கங்களும் தெரியும் என்பதால் கொஞ்சமும் சஞ்சலமோ சலனமோ இல்லவே இல்லை; எனவே உங்கள் முயற்சிகள் தமிழ் கிறித்தவ தளத்தைப் பொறுத்தவரையிலும் வீணாகவே போகப்போகிறது.
சகோதரர் உமர் அவர்களுக்கு பதில் சொல்ல திராணியில்லாத நீங்கள்- அவருடைய கட்டுரைகளுக்கு தொடுப்பு கொடுத்து விவாதிக்கும் தைரியமில்லாத நீங்கள் இங்கே வந்து துணிச்சலுடன் இஸ்லாத்துக்கு அழைப்பு விடுக்கும் ஒரு கட்டுரைக்கு தொடுப்பு தரமுடிகிறதென்றால் அதற்குக் காரணம் நாங்கள் தூங்கிக்கொண்டிருக்கிறோம் என்பதே தவிர நீங்கள் விழித்திருக்கிறீர்கள் என்பதல்ல..!
நீங்கள் பதித்துள்ள அனுபவ சாட்சியைக் குறித்து ஒரு சில கருத்துக்கள்:
இந்த சான்றளித்து மார்க்கத்தைப் பரப்பும் முறை உட்பட அனைத்து நுணுக்கங்களுக்கும் முன்மாதிரியாக விளங்குவது கிறித்தவமே; உங்கள் அனுபவ சாட்சியாளருடைய கூற்றுப்படி இஸ்லாம் அமைதியான மார்க்கம் எனில் ஏன் அனுதினமும் பல்வேறு தொலைக்காட்சிகளில் மார்க்க பிரச்சாரம் நடைபெறுகிறது; இதெல்லாம் வெறும் பசப்பு வார்த்தைகளே; நீங்களும் கிறித்தவர்களைப் போலவே பரப்புரை செய்து மார்க்கத்தை வளர்க்கப் பார்க்கிறீர்கள்; ஆனால் மிகப்பெரிய வித்தியாசம் என்னவென்றால் எங்களுக்குக் கட்டளையிட்ட எங்கள் எஜமானரான இயேசுவானவர் மார்க்கத்தை அன்பினால் மட்டுமே பரப்பச் சொன்னார்; ஆனால் உங்கள் தலைவரோ பட்டயத்தால் அதனைப் பரப்பினாரே..?
யூத மார்க்கத்தமைந்த முன்னோர்களை நபியாகவும் அவர்களை தெய்வீகமாகவும் காட்ட முனைந்து பைபிளைத் திரித்து தேர்ந்ததொரு நகாசு வேலை பார்த்து அதனை இறைவேதம் என்று சான்றளித்தவர்கள் மனிதர்களே, இறைவன் அல்லன்; நபிமார்களின் சொந்த வாழ்க்கை முன்மாதிரியாக இருக்கவேண்டும் என்று அங்கலாய்க்கும் நீங்கள் (நோவா,தாவீது...) முகமதுவின் சொந்த வாழ்க்கையை ஏன் கணக்கில் கொள்ளவில்லை? மீண்டும் அரைத்த மாவையே அரைக்க நான் விரும்பவில்லை; அது என்னுடைய அழைப்பும் அல்ல.
நீங்கள் நல்ல நேர்மையாளர் எனில் சகோதரர் உமர் அவர்களுடைய கேள்விகளுக்கு பதிலளிக்க முயற்சி செய்யுங்கள்; பைபிளைத் தழுவி ஓராயிரம் புத்தகங்களை பலரும் எழுதலாம்;ஆனால் அதில் ஒன்றும் பைபிளுக்கு இணையாகாது; ஏனெனில் அதன் ஆசிரியர் (முக(மது?)வைப் போன்ற.. ) ஒருவர் அல்ல; ஆனால் ஒருவரே; ஆம், சுமார் 42 பேர் அதில் சம்பந்தப்பட்டிருந்தாலும் சொல்லப்பட்ட செய்தி ஒன்றே; அது மனிதனின் வீழ்ச்சியும் மனுக்குல மீட்பும் நிகழ்ந்த வரலாறு;இந்த நோக்கத்துடனே நீங்கள் பைபிளைப் படைக்க முயற்சிக்கவும்.
மற்றபடி குரானை பைபிளுடன் ஒப்பிடுவதைவிட இடைப்பட்ட காலத்தில் உரைக்கப்பட்ட திருக்குறளுடன் குரானை ஒப்பிட்டுப் பாருங்கள்; திருக்குறளையே விஞ்சாத குரான் எப்படி பைபிளுக்கு மாற்றாக முடியும்? குரானைக் குறித்து பேசுவதற்கு உங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு; ஆனால் அது பைபிளைவிட சிறந்தது என்று சொல்லுவதற்கு உங்களுக்கு உரிமையில்லை; இதன் காரணமாகவே விரோதங்களும் சண்டைகளும் பெருகுகிறது; உங்கள் தேசத்தில் பெட்ரோல் இருக்கும் வரையே இஸ்லாம் அமைதி மார்க்கமாக இருக்கும்; ஏனெனில் பெட்ரோல் கிணறுகள் வற்றிப்போன பிறகும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த மக்கள் வேண்டுமே; இந்த இலக்கை எட்டியதும் மீண்டும் ஆதிநிலைக்கு இஸ்லாம் சென்று தன் சுயரூபத்தைக் காட்டும் என்பது நிச்சயம்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)