அண்மையில் நிகழ்ந்த சுனாமி ஜப்பான் தேசத்தை கவிழ்த்துப்போட்டது; சுனாமிக்குப் பிறகான நிகழ்வுகள் இன்னும் கொடூரம்; மீட்புக் குழுவினர் நெருங்கமுடியாத அளவுக்கு அணுஉலை வெடிப்பினால் ஏற்பட்ட கதிரியக்கத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உடல்கள் கிடக்கின்றனவாம்; மீட்கப்படவோ எரிக்கப்படவோ இயலாத நிலையில் அவை இருப்பதாக செய்திகள் சொல்லுகின்றன; ஆனாலும் ஆங்காங்கு குற்றுயிரும் குலையுயிருமான நிலையில் தவிப்புடன் கூச்சலிட்டுக் கொண்டிருந்தவர்களை நோக்கி ஓடிச்சென்று மீட்பதில் மீட்புக்குழுவினர் கவனம் செலுத்தினர்;அதுபோலவே என்னுடைய பணித்தளமும் இன்னதென்று நிர்ணயித்துக்கொள்ளவேண்டிய நிலையிலேயே நானும் இருக்கிறேன்; ஆம்,முழுவதும் மரித்து கிடப்போரிடம் எனக்கென்ன, வேலை..? அலறிக் கொண்டிருப்பவர்களை நோக்கி எனது கவனத்தைத் திருப்புகிறேன்..!
"ஆதலால், தூங்குகிற நீ விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறார்." (எபேசியர்.5:14)
இந்த வசனத்தின் மூலம் ஆவியானவர் என்னுடன் இடைபடுகிறார்; "ஆகவேண்டிய பணிகள் மலைபோல் குவிந்திருக்க இங்கு உனக்கு என்ன காரியம்" என்று எஜமானர் கேட்கிறார்..?
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)