Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: புளிப்பில்லா அப்பப் பண்டிகை


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
புளிப்பில்லா அப்பப் பண்டிகை
Permalink  
 


புளிப்பில்லா அப்பப் பண்டிகை : ஆபிப் 15 - ஆபிப் 21

 --

லேவியராகமம் 23

 5.முதலாம் மாதம் பதினாலாம் தேதி அந்திநேரமாகிற வேளையிலேகர்த்தரின்பஸ்காபண்டிகையும்,

6.
அந்த மாதம் பதினைந்தாம் தேதியிலே, கர்த்தருக்குப் புளிப்பில்லா அப்பப் பண்டிகையுமாய் இருக்கும்; ஏழுநாள்புளிப்பில்லா அப்பங்களைப் புசிக்கவேண்டும்


7. முதலாம் நாள் உங்களுக்குப்பரிசுத்தமான சபைகூடுதல்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.

8. ஏழுநாளும்கர்த்தருக்குத் தகனபலியிடவேண்டும்; ஏழாம்நாள் பரிசுத்தமானசபைகூடுதல்; அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது என்று சொல்என்றார்.

-- 

பஸ்கா பண்டிகையின் அடுத்த நாளிலிருந்து 7 நாட்கள் கொண்டாடப் படும் பண்டிகை. 7 நாளும் புளிப்பில்லா அப்பங்களைப் புசிப்பார்கள். அடிக்கப்பட்ட பஸ்கா ஆட்டுக் குட்டியை புளிப்பில்லா அப்பத்தோடும் கசப்பான கீரையோடும் பண்டிகையின் முதல் நாள் இரவு புசிப்பார்கள்.கசப்பு எகிப்தில் இருந்த அடிமைத்தன நுகத்தின் கஷ்டத்தைக் குறிக்கும். புளிப்பு பொதுவாக பாவத்தை குறிக்கும். இந்த 8 நாட்களையும்(பஸ்கா,புளிப்பில்லா அப்பப் பண்டிகை) சேர்த்து மொத்தமாக பஸ்கா என்று அழைப்பதும் வழக்கம் தான். 

புளிப்பில்லா அப்பப் பண்டிகை நமக்காக பிட்கப்பட்ட ஜீவ அப்பமான இயேசு கிறிஸ்துவின் பாவமற்ற பழுதற்ற தன்மையைக் குறிக்கிறது.

 





__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard