Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கிரிக்கெட் உலகக் கோப்பையும் கிறித்தவ விசுவாசமும்


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
RE: கிரிக்கெட் உலகக் கோப்பையும் கிறித்தவ விசுவாசமும்
Permalink  
 


அருமையான சிந்தனை. ஒரு கிரிகெட் ரசிகனுக்கு இந்திய அணி மேல் இருக்கும் விசுவாசத்தை விட, பல சமையங்களில் கிறிஸ்துவின் மேல் கிறிஸ்துவர்களுக்கு இருக்கும் விசுவாசம் குறைந்து விடுகிறது.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
கிரிக்கெட் உலகக் கோப்பையும் கிறித்தவ விசுவாசமும்
Permalink  
 


இந்தியா கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றது குறித்து நண்பர் விஜய் அவர்கள் நல்லதொரு கட்டுரையை வரைந்திருக்கிறார்;அதில் அடியேன் இட்டுள்ள பின்னூட்டமாவது...

இந்திய வீரர்கள் சாதித்திருக்கிறார்கள் என்பது உண்மைதான்;ஆனால் இரசிகர்களின் பார்வையிலிருந்து ஒன்றை நான் கற்றுக்கொண்டேன்; இந்தியா உலகக் கோப்பையை வெல்லும் வின்னிங் ஷாட்டை அடித்த அடுத்த நொடி பட்டணத்தின் தெருக்களெங்கும் பட்டாசுகள் வெடித்தது;அப்போது இரவு சுமார் 10:30 மணி இருக்கும்;வீட்டை நோக்கி திரும்பிக்கொண்டிருக்கும் என்னால் முன்னேறவே முடியாமல் தவித்துப்போனேன்;அந்த அளவுக்கு இரசிகர்கள் தலைகால் புரியாமல் கூச்சலிட்டும் வண்டியை எடுத்துக்கொண்டு வேகமாகச் சென்றும் அங்காங்கு பட்டாசு வெடித்தும் செல்லும் வாகனங்களையெல்லாம் மறித்து வாழ்த்து சொல்லியும் தங்கள் சந்தோஷத்தைப் பகிர்ந்துகொண்டனர்.

இதிலிருந்து ஒரு காரியத்தை நான் உணர்ந்தேன்;அதாவது இந்தியா உலகக் கோப்பையை வெல்லும் என்ற விசுவாசத்தின் கிரியையாக அந்த காரியம் சம்பவிக்கும் முன்பதாகவே பட்டாசுகளை வாங்கி ஒவ்வொரு இரசிகரும் ஸ்டாக் செய்துவிட்டார்; அவரவர் காசைப் போட்டு வாங்கியிருக்கிறார்;பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அந்த பட்டாசுகளை வாங்க அரசாங்கத்திடம் மானியம் கோரி யாரும் உதவியை நாடவில்லை;அந்த பட்டாசுகளை வெடிக்க அரசாங்கத்திடம் யாரும் அனுமதியும் கேட்கவில்லை.யாரும் கட்டளையிடும் முன்பதாகவே செயல்பட்டிருக்கிறார்.

ஒரு கிறித்தவன் எப்படி செயல்படவேண்டும் என்பதற்கு இந்திய சமுதாயத்தினரின் இதுபோன்ற விழாக்காலங்களில் கற்றுக்கொள்ளவேண்டும்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard