Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பிரம்ம குமாரிகள்


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
RE: பிரம்ம குமாரிகள்
Permalink  
 


உற்சாகப்படுதியதற்க்கு நன்றி சகோ.கோல்வின் அவர்களே,
    நீங்கள் கூறியது அனைத்தும் உண்மைதான். அவர்களுக்கு சிவபாபாவே முக்கியம். கண்களை திறந்து கொண்டு அந்த ஆரஞ்சு விளக்கை நானும் மணிக்கணக்கில் பார்த்திருக்கிறேன். ஆத்துமாவிற்க்கே வடிவம் கொடுத்து, புது மாதிரியான விக்ரகத்தை கொண்டு வந்தார்கள் (யோசித்து பார்த்தல் அது சிவலிங்கத்தின் இன்னொரு மாறுபாடே).
  மேலும், இவர்களுடன் சேர்ந்து நானும், மாமிசத்தையும், பூமியின் கீழ் விளையும் கிழங்கு போன்றவற்றையும் நான் சாப்பிடாமல் இருந்தேன். உடல் பலவீன பட்டதுதான் மிச்சம். ஆனால் நல்லவேளை, உடல் பலவீன பட்டது. இல்லாவிட்டால் அந்த கூட்டத்தை விட்டு வருவது சிரமமாய் இருந்திருக்கும்.
 
To be continued...


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

நல்ல தலைப்பை எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆரம்ப காலகட்டத்தில் நானும் இவர்களின் கூட்டத்திற்கு சென்றிருக்கிறேன். வித்தியாசமாக எண்ண வேண்டாம் என்ன நடக்கிறது என்பதை அறிவதற்காக. ஒரு வாரம் தியானம் என்றால் என்ன என்பது பற்றி கற்பித்தார்கள். 

எல்லோரும் கண்ணை மூடிக் கொண்டுதான் தியானம் செய்ய சொல்லுவார்கள். இவர்கள் சற்று வித்தியாசமானவர்கள். கண்ணை திறந்து வைத்துக் கொண்டே செய்ய வேண்டுமாம். மனக்கட்டுப்பாடு அப்போதுதான் வரும் என்பார்கள். மற்றும் இக்கூட்டத்தார் தாங்களாவே சமைத்து சாப்பிட வேண்டும். அல்லது இக்கூட்டத்தில் இருப்பவர் சமைப்பதைதான் சாப்பிட வேண்டும். எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். இன்றும் கூட அவர் அப்படிதான். வீட்டில் அம்மா சமைத்தால் கூட சாப்பிட மாட்டார். இயேசுவையும் கும்பிடலாம் சிவனையும் கும்பிடலாம். அல்லாவையும் கும்பிடலாம். ஆனால் சிவன், பாபுஜி முக்கியமானவனர். கூட்டம் தொடங்கமுன் 30, 15 நிமிடம் கண்ணைத்திறந்து கொண்டு சிவப்பு ஒளியையை (ஆத்துமா) பார்த்துக் கொண்டு நான் ஒரு அமைதியான ஆத்துமா என சொல்ல வேண்டும். பிற்பர்டு முரளி என சொல்லப்படும் தியானத்தை வாசிப்பார்கள். இவர்களின் பாபுஜி நேராக வந்து கொடுப்பதாக சொல்லிக் கொள்வார்கள். 

 

இன்னும் எழுதுங்கள். நானும் எழுதுகிறேன். 


 






__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
Permalink  
 

பிரம்ம குமாரிகள்
 
மிக அப்பாவித்தனமான தோற்றம் அளிக்கும் ஆபத்தான இயக்கம் இது. கல்வியில் சரியான கவனம் செலுத்த முடியாமலும், மேலும் ஆன்மீக தாகத்தினாலும் நான் சென்ற இடம் பிரம்மகுமாரிகள் மையம்.
வெண்ணிற உடையில், சாந்தமாகவும் அன்பாகவும் நடந்து கொண்ட அந்த சகோதரிகள், தியானம் கற்கும் முன் ஒரு வார பாடம் நடக்கும்.
அதில் அவர்கள் கற்றுத்தருவது, அனைத்து மதங்களும் (கிறிஸ்துவம் உள்பட) ஒன்றையே (அவர்கள் கருத்தையே) சொல்லுவதாக (பொய்) சொல்லுகிறார்கள். மேலும், யுகங்கள் நான்காக (சத்யுகம், த்ரேதாயுகம், த்வாபரயுகம் மற்றும் கலியுகம்) பிரிக்கப்படிருப்பதாகவும், நாம் கலியுகத்தின் கடைசி பகுதியான சங்கமயுகத்தில் இருப்பதாக சொல்லுவார்கள். மேலும் இந்த யுகச்சக்கரம், மீண்டும் மீண்டும் சுழலும் எனவும், இப்போது நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் 5000 வருடங்களுக்கு ஒருமுறை மீண்டும் அப்படியே நடக்கும் எனவும் கூறுவர். இந்த உண்மையை அறிந்து, அவர்களுடன் சேர்ந்து இந்த த்யானத்தை பயிலுவோர், சொர்க்கமாகிய சத்யுகம் முதற்கொண்டு அனைத்து யுகத்திலும் பிறப்பர், மற்றவரெல்லாம், தங்கள் செயலுகேர்ப்ப, மற்ற யுகங்களில் தங்கள் பிறப்பை ஆரம்பிப்பார்கள் என்றும் கூறுவர். மோசமானவர்கள், கலியுகத்தில் மாத்திரம் பிறப்பார்கலாம். மற்றபடி நரகம் என்று தனியாக ஒன்றும் இல்லை என் (பொய்) கூறுவர்.
இதில், சத்யுகத்தில் கிரிஷ்ணரும், திரேதாயுகத்தில் ராமரும் ஆட்சி செய்வார்களாம்.
இதை தவிர ஒரு காமெடி என்னவென்றால், கடவுளாகிய பரமாத்மா இப்போது வடஇந்தியாவில் பிறந்துள்ளார்கலாம்.
 
To be continued....



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard