Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சகோ கொல்வினுக்கு சில கேள்விகள்:


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
RE: சகோ கொல்வினுக்கு சில கேள்விகள்:
Permalink  
 


//உலகத்தில் நாம்  தாமரை இலை தண்ணீர் போல் வாழ வேண்டும். சபை என்பது பரிசுத்தமான கிறிஸ்துவின் சரீரம். இரட்சிக்கப்பட்டவர்களால் ஆன கூட்டம். உலகத்தை வெறுத்த, உலக வ்ழிபாடுகளுக்கு தப்பிய கூட்டம். அதில் அசுத்தம் கறை திறை காணப்படக் கூடாது. இருந்தால் ஒன்று விலக்க வேண்டும் அல்லது விலக வேண்டும். மரியாளும் தெய்வம்தான் இயேசுவும் தெய்வம்தான் என்று சொல்பவர்கள் இந்துக்கள் போல் தானே. அவர்களோடு எப்படி ஐக்கியம் கொள்ள முடியும். கத்தோலிக்க பாடல்கள், ஜெபங்களில் உண்மை கிறிஸ்தவன் பங்கு பெற முடியுமா?  //

 

மரியாளும் தெய்வம் தான் என கத்தொலிக்கர்கள் சொல்கிறார்களா என்ன? பல  கிறிஸ்தவ பாமாலைகள் கத்தொலிக்க விசுவாசத்தில் இருந்தவர்கள் எழுதினவை ஆனால் அவற்றில் கத்தொலிக்கர்கள் நம்பும் கருத்துக்கள் நிச்சயம் இல்லை. 

இப்படி கறை திரை காணப்படக்கூடாது என பரிசேயர் தங்களை தாங்களே நீதிமான்கள் என நியாயம் தீர்த்துக்கொண்டதை தான் இயேசு கண்டித்தார். மரியாளையோ அல்லது புனிதர்களையோ கத்தொலிக்கர்கள் தெய்வம் என சொல்லவதில்லை.

 

இரண்டாம் உலகப்போருக்கு பின் ஜெர்மனி உலக நாடுகளுக்கு ஒரு பெருந்தொகையை அபராதமாக செலுத்தவேண்டியிருந்தது, மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த ஜெர்மனியை கோன்ரட் அடினார் என்ற கத்தொலிக்க கிறிஸ்தவர் ஆண்டு வந்ததார் (சான்ஸலர்) தெய்வபக்தியுள்ள அவர் தனது மாளிகைக்கு அருகில் உள்ள கத்தொலிக்க தேவாலயத்திற்கு தினமும் அதிகாலை ஜெபிக்க சென்று விடுவாராம். அப்படி தேவ நடத்துதலின் படி அவர் எடுத்த முடிவுகளால் தான் ஜெர்மனி மறுபடியும் வளர்ச்சி பாதையில் செல்ல ஆரம்பித்தது. அடினார், என்ன ஜெபித்தார், யாரிடம் ஜெபித்தார் என்பதையெல்லாம் ஆராயாமல் தேவன் மீது அவர் கொண்டிருந்த அசைக்க முடியாத விசுவாசத்தை தேவன் கனப்படுத்தினார் என்பதை பாருங்கள்.



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

Bro Joseph: ஏன் நாம் கூட விக்கிரக ஆராதனைக்காரர்களான மக்கள் அதிகம் இருக்கும் தேசத்தில் பிறந்து வலர்ந்திருக்கிறோம், அதனால் அதன் தாக்கம் நமக்கு இருக்கிறதா என்ன? உண்மையாக ஆராதிப்பவர்கள் இருக்கும் இடத்தில்தான் நாம் இருக்கவேண்டும் என்றால், இந்த உலகத்தில் எங்கும் நாம் போய் வசிக்கமுடியாது.

Golda: அது சரிதான். ஆனால் உல்க ஐக்கியம் வேறு. ஆவிக்குரிய ஐக்கியம் வேறு அல்லவா! இந்த வேத வசனங்களைப் பாருங்கள். 

I கொரிந்தியர் 5:9 விபசாரக்காரரோடேகலந்திருக்கக்கூடாதென்று நிருபத்தில் உங்களுக்கு எழுதினேன்.

I
கொரிந்தியர் 5:10 ஆனாலும், இவ்வுலகத்திலுள்ளவிபசாரக்காரர், பொருளாசைக்காரர், கொள்ளைக்காரர், விக்கிரகாராதனைக்காரர் இவர்களோடு எவ்வளவும் கலந்திருக்கக்கூடாதென்று நான் எழுதவில்லை; அப்படியானால் நீங்கள் உலகத்தைவிட்டு நீங்கிப்போக வேண்டியதாயிருக்குமே.

I
கொரிந்தியர் 5:11 நான் உங்களுக்கு எழுதினதென்னவென்றால், சகோதரனென்னப்பட்ட ஒருவன் விபசாரக்காரனாயாவது, பொருளாசைக்காரனாயாவது, விக்கிரகாராதனைக்காரனாயாவது, உதாசினனாயாவது, வெறியனாயாவது, கொள்ளைக்காரனாயாவது இருந்தால், அவனோடே கலந்திருக்கக்கூடாது; அப்படிப்பட்டவனுடனே கூடப்புசிக்கவுங்கூடாது
.

Golda:  உலகத்தில் நாம்  தாமரை இலை தண்ணீர் போல் வாழ வேண்டும். சபை என்பது பரிசுத்தமான கிறிஸ்துவின் சரீரம். இரட்சிக்கப்பட்டவர்களால் ஆன கூட்டம். உலகத்தை வெறுத்த, உலக வ்ழிபாடுகளுக்கு தப்பிய கூட்டம். அதில் அசுத்தம் கறை திறை காணப்படக் கூடாது. இருந்தால் ஒன்று விலக்க வேண்டும் அல்லது விலக வேண்டும். மரியாளும் தெய்வம்தான் இயேசுவும் தெய்வம்தான் என்று சொல்பவர்கள் இந்துக்கள் போல் தானே. அவர்களோடு எப்படி ஐக்கியம் கொள்ள முடியும். கத்தோலிக்க பாடல்கள், ஜெபங்களில் உண்மை கிறிஸ்தவன் பங்கு பெற முடியுமா?  

Bro Joseph: தேவன் விரும்புவது மனமாற்றமேயன்றி வெளிப்படையான மார்க்க மாற்றம்அல்ல. 

Golda: என்ன சொல்றீங்க? பொட்டு வைத்துக் கொண்டு, திரு நீறு பூசிக் கொண்டு, விக்கிரக கோவிலுக்கு போய் கொண்டு ஒருவர் கிறிஸ்தவராகவும் இருக்க முடியுமா? ஆண்டவருக்காக சில விலைக்கிரயம் செலுத்தித்தான் ஆக வேண்டும். தகப்பனையோ, தாயையோ,(தன் மார்க்கத்தையோ, ஜாதியையோ) என்னை விட அதிகமாய் நேசிப்பவன் எனக்கு பாத்திரன் அல்ல என்று இயேசு சொல்லியிருக்கிறாரே. சாது சுந்தர் சிங் வீட்டிலேயெ சுகபோகமாக இருப்பதை விட்டு விட்டு , ஏன் வீட்டை விட்டுப் போனார்? மோசே ஏன் அரண்மனையை விட்டு வெளியேற வேண்டும்? 

இரட்சிக்கப்பட்ட பின் சில விஷயங்களில் about turn  அல்லது U turn அடித்துத்தான் ஆக வேண்டும். போன தவறான் பாதையிலேயே போய் கொண்டிருக்க முடியாது. நமக்கு (என்னையும் சேர்த்துத்தான்) ஆண்டவருக்காக சிலுவை சுமக்க விருப்பம் கிடையாது. அது தான் இப்படியெல்லாம் சாக்குப் போக்கு கண்டு பிடிக்க வைக்கிறது. இருதயம் திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாய் இருக்கிறது என்று அறியீர்களா? 

Bro Joseph: கத்தொலிக்கர்களை நியாயம்தீர்க்க நாம் யார் 

Golda: அவர்கள் இரட்சிக்கப்பட வேண்டும் என்ற விருப்பம் உங்களுக்கு இல்லையா? ஆண்டவர் நியாயம் தீர்த்தால் அது இன்னும் கடுமையாக இருக்குமே! 

Bro Joseph: பல கத்தொலிக்க பாதிரிமார்களின் செய்திகள் நமது நவீனகால ஊழியர்களின் செய்திகளைவிட ஆழமாகவே இருக்கின்றன. 

Golda: அதனால் யாருக்கு என்ன பிரயோஜனம் உண்டாகப் போகிறது? நீங்க பிசாசை விட்டீங்கன்னா, எல்லோரையும் விட ஆழமான அழகான பிரசங்கம் செய்து விடுவான்.கம்யூனிச நாடுகளில் உண்மை கிறிஸ்தவர்கள்  underground churches இல் தான் கூடினார்கள். இப்ப சீனாவில் கூட அது ஒரு வலிமையான் அமைப்பாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். விசுவாசிகள் அதிகமாக உபத்திரவப் பட்டார்கள். இரத்த சாட்சிகளாய் மரித்தார்கள். என்வே தான் கம்யூனிசம் உடைந்தது. எல்லோரும் ஆண்டவர் மனசைத்தான் பார்க்கிறார் என்று தேசம் நடத்திய சபைக்கு மட்டும் போய் வந்ததிருந்தார்கள் என்றால் அடுத்து ஒரு கிறிஸ்தவ தலைமுறை அங்கு எழும்பி இருக்காது. கம்யூனிசமும் உடைந்திருக்காது. 

Bro Joseph: கத்தொலிக்க சபைக்கு செல்லும் விசுவாசிகள் அந்த சபையில் இருந்துகொண்டே தங்களது சபையின் மறுமலர்ச்சிக்காக ஜெபிக்கலாம். வெளியே ஓடிவந்தால் அதனால யாருக்கு என்னலாபம் 

Golda: ஏன் வெளியே வந்து அவர்களுக்காக ஜெபிக்கக் கூடாதா? அதனால் யாருக்கு என்ன நஷ்டம்? 

இன்னும் சில வசனங்கள்: 

II Corinthians 6

14. அந்நியநுகத்திலேஅவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது?

15.
கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது?

16.
தேவனுடையஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன்சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே.

17.
ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானவைகளைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
Permalink  
 

 
 கத்தோலிக்கர் மத்தியில் கிறிஸ்துவின் சாட்சியாய் வாழும் நண்பர் கோல்வினுக்கு வாழ்த்துக்கள். பல கத்தோலிக்கர்களை நீங்கள் கிறிஸ்துவினண்டை வழிநடத்துவீர்கள் என்று நம்புகிறேன்.


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

//நீங்களே ஒத்துக் கொள்ளும் படி பல தவறான காரியங்கள் அங்கு செய்யப்படுகிறது. அப்படியிருக்கும் போது எப்படி உஙகளால் அப்படிப்பட்ட சபை ஆராதனையில் கலந்து கொள்ள முடியும்? பாடல் பாட முடியும்? ஜெபிக்க முடியும்? அங்கு எப்படி ஐக்கியப்பட முடியும்?//

கத்தொலிக்க சபையின் பல பழக்கவழக்கங்களில் உடன் பாடு இல்லாவிட்டாலும் சகோதரர் கொல்வின் அந்த சபைக்கு செல்கிறார் என நினைக்கிறீர்களா. கத்தொலிக்க சபையின் பல பழக்கவழக்கங்கள் தவறு என ஆவியானவர் அவருக்கு உணர்த்தியிருப்பதே பெரிய அதிசயம். எனக்கு தெரிந்து பல கத்தொலிக்க சகோதரர்களுக்கு இதே போன்ற எண்ணம் இருக்கிறது. ஏதோவொரு வகையில் ஆண்டவர் அவர்களை மாற்றத்துக்குள்ளாக வழி நடத்துகிறார். கத்தொலிக்க சபைக்கு செல்லும் விசுவாசிகள் அந்த சபையில் இருந்துகொண்டே தங்களது சபையின் மறுமலர்ச்சிக்காக ஜெபிக்கலாம். வெளியே ஓடிவந்தால் அதனால யாருக்கு என்ன லாபம். 

அன்றைய கம்யூனிஸ்டு நாடுகளில் திருச்சபைகளில் ஆராதனை நடக்குமாம், எப்படி தெரியுமா? கம்யூனிச அரசாங்கத்தால் நியமிக்கப்படும் பாதிரியார் செய்தி கொடுப்பாராம், பெரும்பாலும் பொதுவுடமை கருத்துக்களியும் மார்க்சீய சிந்தனைகளியும் அள்ளிவிடுவார். அவ்வப்போது அவரது வாயில் இருந்து வேத வசனங்களும் வரும். வீடுகளில் வேதம் வைத்துக்கொள்ள அனுமதியில்லாததால் உண்மை விசுவாசிகள், இந்த செய்திகளை கேட்டாலாவது வசனம் நமது காதுகளில் விழுகிறதே என விசுவாச ஏக்கத்தோடு அமர்ந்திருப்பார்களாம், செய்தியின் ஏனைய பகுதிகளான பொதுவுடைமை மற்றும் கடவுள் மறுப்பு கருத்துக்கள் அவர்களை எள்ளளவும் பாதிப்பதில்லை. கடைசியில் கம்யூனிசத்தின் கோட்டைகள் என்னவாயிற்று என்பது நமக்கு தெரிந்ததே. எனவே வேத வசனங்களை உறுதியாக, அதன் உண்மை அர்த்தத்தில் நம்பும் எந்தவொரு கத்தொலிக்கரும் தனது ஆலயத்துக்கு போகலாம், தனது சபையின் எழுப்புதலுக்காக, அதே போன்று எண்ண அலைவரிசையுள்ள விசுவாசிகளுடன் இணைந்து ஜெபிக்கலாம். தேவன் விரும்புவது மனமாற்றமேயன்றி வெளிப்படையான மார்க்க மாற்றம் அல்ல.கத்தொலிக்கர்களை நியாயம் தீர்க்க நாம் யார். பல கத்தொலிக்க பாதிரிமார்களின் செய்திகள் நமது நவீன கால ஊழியர்களின் செய்திகளை விட ஆழமாகவே இருக்கின்றன.

 

// நாம் எங்கிருக்கிறோமோ, அது போல் மாற அல்லது அந்த ஆவிகளால் தாக்கப்பட அல்லது இழுப்புண்டு போக வாய்ப்புண்டு. நீஙக மரியாள் territory இல் இருக்கும் வரை , மரியாளுக்கு உஙக மேல ஒரு கண் இருக்கும்! சீக்கிரமா வெளியே வரப் பாருங்க.//

 

ஏன் நாம் கூட விக்கிரக ஆராதனைக்காரர்களான மக்கள் அதிகம் இருக்கும் தேசத்தில் பிறந்து வலர்ந்திருக்கிறோம், அதனால் அதன் தாக்கம் நமக்கு இருக்கிறதா என்ன? உண்மையாக ஆராதிப்பவர்கள் இருக்கும் இடத்தில் தான் நாம் இருக்கவேண்டும் என்றால், இந்த உலகத்தில் எங்கும் நாம் போய் வசிக்க முடியாது.

 

//// கோல்வின் அவர்களே, என்ன கூத்து நடக்கின்றது அங்கே?  ரசளைப் பற்றியும் அவரின் பிழையான போதனைகளை பற்றியும் ஆராய்து பார்க்கும் நிங்களா இந்த அருவருப்பான சபைக்கு போகின்றிர்கள். வாந்தி எடுக்கும் சபைக்கு போய்க் கொண்டா இங்கு எம்முடன் திருத்துவதைப் பற்றி  வாதாட வந்தனிங்கள். அதவிட கேவலம் என்ன வென்றால் சில்சாம் என்ற போதகர் அதை நியாயப் படுத்தி ; ஜால்ரா அடித்து எழுதுகிறார் பாருங்கள் அது தான் சுப்போரோ சோப்பர்.......:  விரைவின் வெளிப்படுதல் ௧௩ ஆம் அதிகாரத்தின் பதிலை கொடுக்கிறேன்: வாசித்த பின்பாவது கொல்வின் அவர்கள் இந்த வேசி சபையில் இருந்து வெளியே வருகிறாரா என்று பார்ப்போம்.//

 

ரசலின் பிழையான போதனை என சொன்னதுக்கு ரொம்ப நன்றி, நீங்கள் எந்த ஐக்கியத்தில் அல்லது சபையில் இருக்கிறீர்கள் என தெரியாது ஆனால் கோதுமைவிற்று கேவலப்பட்ட ரசலையும் அவரது கூட்டத்தையும் விட, இயேசுவின் தெய்வீகத்தை ஒத்துக்கொண்டு அவரை வணங்கும் கத்தொலிக்கர்கள் பரவாயில்லை என்பேன்.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

chillsam wrote:
சகோதார் கோல்வின் அவர்களும் இதுவரை கத்தோலிக்க அமைப்பில் இருப்பதாக நேர்மையுடன் ஒப்புக்கொண்டதுடன் உள்ளான மனுஷனில் மிக வல்லமையுடன் பெலப்படும் வண்ணமாக வளர்ந்து வருவது அவரிடமிருந்து வெளிப்படும் அன்பின் கனிகளால் விளங்குகிறது.

பெந்தெகொஸ்தேகாரர்கள் நம்மை "பெயர் கிறித்தவர்கள்" என்று தாக்குவார்களே அதுபோல கோல்வின் அவர்களையும் நான் தாக்கப்போகிறேன்... ஆம், அவர் ஒரு "பெயர் கத்தோலிக்கன்..." ஆனால் உண்மையில் கிறித்துவின் சீடர்..!




 

 மிக்க நன்றி சகோதரரே. நான் சொல்ல வந்த கருத்தை எளிமையாக சொல்லி விட்டீர்கள். கிறிஸ்துவுக்கு நிலைத்து நிற்கின்றேன் இதுவே மிக முக்கியமானது ஏற்கனவே நான் கூறியதுபோல வேதத்திற்கு புறம்பான எதையும் நான் கைக்கொள்கிறதில்லை. 



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

eloi4u wrote:

உண்மையில் இந்த தொடுப்பைப் படித்த போது என்னால் நம்பவே முடியவில்லை. ஒரு மனிதன் இரண்டு குதிரைகளில் எப்படி சவாரி செய்ய முடியும்? ஒன்றை திருப்தி படுத்த மற்றொன்றை பகைக்க வேண்டுமே. வேதவசனங்களை முழுமையாக கடைபிடித்து போதிக்கும் சபைக்கே கோல்வின் அவர்கள் செல்ல வேண்டும்.

 இல்லாவிட்டால் இது நிச்சயம் ஒரு இடறலாகவே இருக்கும் ஏனெனில் கத்தோலிக்க மதம் கிறிஸ்தவ மதமே அல்ல என்பது என் கருத்து


அருமை நண்பர் இராஜ்குமார் அவர்களே,

தாங்கள் ஆச்சர்யத்துடன் எழுப்பியிருக்கும் கேள்விக்கு இந்த உலகமே உதாரணமாக இருக்கிறது அல்லவா? புறத்திலே நாம் மாறுபாடான உலகத்தில் வாழ்ந்தாலும் அகத்திலே, பரத்தின் பாக்கியத்துடன் வாழ முயற்சிக்கிறோமல்லவா? அப்படியே சகோதார் கோல்வின் அவர்களும் இதுவரை கத்தோலிக்க அமைப்பில் இருப்பதாக நேர்மையுடன் ஒப்புக்கொண்டதுடன் உள்ளான மனுஷனில் மிக வல்லமையுடன் பெலப்படும் வண்ணமாக வளர்ந்து வருவது அவரிடமிருந்து வெளிப்படும் அன்பின் கனிகளால் விளங்குகிறது.

ஆனால் நம்முடைய கிறித்தவ திரட்டியிலிருந்து நான் பின் தொடர்ந்து சென்ற ஒரு கத்தோலிக்க தளத்தின் நண்பர் என்னை ஏற்றுக்கொள்வதில் மிகவும் சிரமப்பட்டார்.என்னுடைய நியாயமான கேள்விகளுக்குக் கூட பதிலளிக்கவில்லை;சில பின்னூட்டங்களை பதிக்கவுமில்லை;ஆனால் நண்பர் கோல்வின் அவர்களை அதுபோன்ற தீவிர கத்தோலிக்க தளங்களில் நீங்கள் காணமுடியாது; நம்முடைய ஆண்டவரும், அவர்களுடைய கனிகளினாலே நீங்கள் அவர்களை அறிவீர்கள் என்றாரே..?

பெந்தெகொஸ்தேகாரர்கள் நம்மை "பெயர் கிறித்தவர்கள்" என்று தாக்குவார்களே அதுபோல கோல்வின் அவர்களையும் நான் தாக்கப்போகிறேன்... ஆம், அவர் ஒரு "பெயர் கத்தோலிக்கன்..." ஆனால் உண்மையில் கிறித்துவின் சீடர்..!

இதனை நான் எந்த நிலையிலும் மறுக்கும் சூழ்நிலை எழாது;ஏனெனில் கடந்த மூன்று வருடங்களாக கோல்வின் அவர்களை நான் அவதானித்து வருகிறேன்; அவரிடம் சில உண்மைகள் இருக்கிறது.

நம்முடைய கிறித்தவமும் கூட மதம் அல்லவே, கிறித்தவ மதம் போதிக்கும் இயேசுவுக்கும் சத்திய பரனாகிய இயேசுவுக்கும் நிரம்ப வித்தியாசம் உண்டுதானே? இன்னும் விவரமாக எழுத முயற்சிக்கிறேன்; தங்கள் கருத்துக்களுக்காக நன்றிகள்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

உண்மையில் இந்த தொடுப்பைப் படித்த போது என்னால் நம்பவே முடியவில்லை. ஒரு மனிதன் இரண்டு குதிரைகளில் எப்படி சவாரி செய்ய முடியும்? ஒன்றை திருப்தி படுத்த மற்றொன்றை பகைக்க வேண்டுமே. வேதவசனங்களை முழுமையாக கடைபிடித்து போதிக்கும் சபைக்கே கோல்வின் அவர்கள் செல்ல வேண்டும்.

 

இல்லாவிட்டால் இது நிச்சயம் ஒரு இடறலாகவே இருக்கும் ஏனெனில் கத்தோலிக்க மதம் கிறிஸ்தவ மதமே அல்ல என்பது என் கருத்து



__________________
க‌ர்த்த‌ர் என் மேய்ப்ப‌ராய் இருக்கிறார்


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

 

// கோல்வின் அவர்களே, என்ன கூத்து நடக்கின்றது அங்கே?  ரசளைப் பற்றியும் அவரின் பிழையான போதனைகளை பற்றியும் ஆராய்து பார்க்கும் நிங்களா இந்த அருவருப்பான சபைக்கு போகின்றிர்கள். வாந்தி எடுக்கும் சபைக்கு போய்க் கொண்டா இங்கு எம்முடன் திருத்துவதைப் பற்றி  வாதாட வந்தனிங்கள். அதவிட கேவலம் என்ன வென்றால் சில்சாம் என்ற போதகர் அதை நியாயப் படுத்தி ; ஜால்ரா அடித்து எழுதுகிறார் பாருங்கள் அது தான் சுப்போரோ சோப்பர்.......:  விரைவின் வெளிப்படுதல் ௧௩ ஆம் அதிகாரத்தின் பதிலை கொடுக்கிறேன்: வாசித்த பின்பாவது கொல்வின் அவர்கள் இந்த வேசி சபையில் இருந்து வெளியே வருகிறாரா என்று பார்ப்போம்.//

மேற்காணும் கருத்து கோவை வெறியன் தளத்தில் பதிக்கப்பட்டுள்ளது;இதில் ஒரு புரியாத வார்த்தை இருக்கிறது;அதனை எப்படி போட்டு வாசித்துப் பார்த்தாலும் புரியவே இல்லை;என்னுடைய தாய்மொழியான தமிழில் எழுதப்பட்டதே புரியவில்லையே என்று மிகவும் அவமானமாக இருந்தது;
ஆளு ஜெர்ம
னிலே இருக்குதே...எதாவது ப்ரெஞ்ச், ஜெர்மனி மொழியில் திட்டியிருப்பாரோ என்றும் யோசித்தேன்... இதனை எப்படியாவது அறிந்தே ஆகவேண்டும் என்று ரொம்ப சிரமப்பட்டு பிறகே புரிந்தது, அடப்பாவிகளா,அது சூப்பரோ சூப்பர் என்ற ஆங்கில வார்த்தையாம்....இந்த இலட்சணத்தில் இவர்கள் மொழி ஆராய்ச்சி நடத்துகிறார்களாம்... இவர்களிடமிருந்து நாங்கள் வேதத்தைக் கற்கவேண்டுமாம்...நாகரீகக் கோமாளிகளான உங்களைவிட எப்போதும் பயந்திருக்கும் எங்கள் நிலைமையே மேலானது;எங்களுக்கு அறிவு லேசாய் வருமாம்;முதலில் தமிழை ஒழுங்கா பழகுங்கையா...பிறகு கிரேக்கு, எபிரேயு என்று போவீர்கள்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

பதில்களுக்காக நன்றி, சகோ கொல்வின்.உங்களை குற்றப்படுத்த வேண்டும் என்றோ, சிக்கலில் மாட்ட வைக்க வேண்டும் என்றோ நான் கேள்வி கேட்க வில்லை! 

Bro Colvin: 2) இராப்போஜனம் என்று சொல்வதில்லை. திருவிருந்துஆலயம் சென்றால் எடுப்பேன். தவறு என்றால் என்ன தவறு என்று சுட்டிக்காட்டுங்கள்

Golda: இயெசு கிறிஸ்துவின் பாடுகளையும்,சிலுவை மரணத்தையும், இரண்டாம் வருகையையும் நினைவு கூருவதுதான் திருவிருந்து ஆனால் கத்தோலிக்க மதம் திருவிருந்தின் போது அப்பமும், திராட்சை ரசமும் இயேசுகிறிஸ்துவின் உடலாகவும், இரத்தமாகவும் மாறி விடுகிறது என்று நம்புகிறது. திருவிருந்து நடைபெறும் ஒவ்வொரு முறையும் சிலுவை பலி நடைபெறுவதாக நம்புகிறார்கள். இது தேவ தூஷணம்அல்லவா?

Bro Colvin:3) ஒரு கோணத்தில் பார்த்தால் சரி. சான்றாக கிறிஸ்தவர்கள் வேறு நாடுகளில் கொடுமைப்படுத்தும்போது துன்பப்படுத்தும்போது போப்பினால் குரல் கொடுக்க முடியும். இன்னும் பலநாடுகளில் அதிகமாக கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படாதிருப்பதற்குக் காரணம் போப்பின் அதிகாரமே.

Golda: உண்மைக் கிறிஸ்தவர்களை அன்று துன்பப்படுத்தினார்கள். இப்ப ஏதோ கொஞ்சம் அமைதியாக இருப்பதுபோல் தெரிகிறது. இனியும் படுத்துவார்கள் பாருங்கள்.

Bro Colvin:வாளவிய அதிகாரம் எங்களை கட்டுப்படுத்துவதில்லை என்பதுதான் உண்மை. நீங்கள் எப்படி உங்கள் திருச்சபைக்கு கட்டுபடுகிறீர்களோ நானும்கட்டுப்பட்டவன் ஆவேன். ஆயினும் வேதத்திற்கு புறம்பான காரியங்களில்கட்டுப்படுவதில்லை உ-ம் சிவைணக்கம், புனிதர் வழிபாடு.இதனை நான் செய்யாதிருப்பதற்காக திருச்சபை என் உரிமைகளில் தலையிடுவதில்லை 

Golda: அவ்வளவு சலுகை சபை மக்களுக்கு கொடுக்கிறார்களா என்ன?

Bro Colvin: 4) கத்தோலிக்கன் என்று சொல்லி பெருமைப்பட்டுக்கொள்வதாக எங்கோயாவது எழுதியிருக்கின்றேனா.? எனது சபை எதுவெனக் கேட்டால் நான் சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றேன். இன்னும் பலருக்கும் தெரியாது நான் கத்தோலிக்கன் என்று. என்னுடன் பேசும் யாருமே இலகுவில் என்னை கத்தோலிக்கனாக எடைபோடமாட்டார்கள்.

Golda: கத்தோலிக்கன் என்று சொன்னால், மதத்தில் உள்ள எல்லா காரியங்களையும் சேர்த்து நீங்க செய்வதாக/ நம்புவதாகத் தான் யாரும் நினைப்பார்கள். ஒவ்வொருவரிடமும் நீங்க விளக்கிக் கொண்டிருக்க முடியாது அல்லவா? இப்படிப் பட்ட தவறான் அபிப்ராயம் பிறருக்கு ஏன் உண்டாக விட வேண்டும்?நீங்களே ஒத்துக் கொள்ளும் படி பல தவறான காரியங்கள் அங்கு செய்யப்படுகிறது. அப்படியிருக்கும் போது எப்படி உஙகளால் அப்படிப்பட்ட சபை ஆராதனையில் கலந்து கொள்ள முடியும்? பாடல் பாட முடியும்? ஜெபிக்க முடியும்? அங்கு எப்படி ஐக்கியப்பட முடியும்?

ஒரு துக்கமான் நிலை என்னவென்றால் , ஆவிக்குரிய காரியங்களுக்கு சபை தேவைப்படுகிறதோ இல்லையோ, உலக பிரகாரமான கல்யாணம், அடக்கம், வீடு பிரதிஷ்டை போன்ற காரியங்களுக்கு சபையும் , சபை பாஸ்டரும் தேவைப்படுகிறார்கள். சபை பாஸ்டர்மாரும் இந்த மாதிரி சமயங்களில் ஒரு ஹீரோ போல் தன்னை நினைத்துக் கொண்டு செயல்படுகிறார்கள். முதல் நூற்றாண்டில் இப்படிப்பட்ட காரியங்கள் எல்லாம் சபையில் நடந்தது போல் தெரியவில்லை. இதெல்லாம் இல்லாதிருந்தால் சபை இன்னும் ஆவிக்குரிய காரியங்களில், ஆத்தும ஆதாயத்தில் தீவிரமாக ஈடுபடுமோ என்னவோ? ஒருவேளை அப்படிப்பட்ட காரியங்களுக்கு சபை தேவை என்பதால் நீங்களும் அங்கு இருக்கிறீர்களோ?

Bro Colvin:திருச்சபை விட்டு திருச்சபை மாறுவதால் பரலோகம் செல்ல முடியுமா? இல்லையே தானே! தேவனின் வார்த்தைக்குக் கீழ்படிய வேண்டும். அதனை கடைபிடிக்கவேண்டும். இரட்சிப்பு இயேசுவால்தான் வருகிறது. நான் சார்ந்திருக்கும் திருச்சபையால் அல்ல. நான் இயேசுவையே சார்ந்திருக்கிறேன். 

Golda: கர்த்தரின் சரீரம்தான் சபை. கத்தோலிக்க மார்க்கத்தை திருச்சபை என்று சொல்ல முடியுமா? ஆத்துமாக்களை திருடி நரகம் கொண்டு செல்லும் சபை என்று வேண்டுமானால் சொல்லலாம்! இயேசுவையே சார்ந்திருப்பது நல்லதுதான். ஆனால் நாம் எங்கிருக்கிறோமோ, அது போல் மாற அல்லது அந்த ஆவிகளால் தாக்கப்பட அல்லது இழுப்புண்டு போக வாய்ப்புண்டு. நீஙக மரியாள் territory இல் இருக்கும் வரை , மரியாளுக்கு உஙக மேல ஒரு கண் இருக்கும்! சீக்கிரமா வெளியே வரப் பாருங்க. என்னை கேட்டால் கத்தோலிக்க சபைக்கு போவதற்கு எந்த சபைக்கும் போகாமலிருப்பது நலம்.

Bro Colvin:5) கண்டிப்பாக ஆராய்வேன். நம்பலாம். ஆனால்இப்போது இல்லை. குறிப்பாக பாவசங்கீத்தனம் செய்தல், சிலைவணக்கம், புனிதர் வணக்கம், குழந்தை ஞானஸ்நானம், உறுதிபூசுதல் மற்றும் சடங்காசாரங்கள், ஜெபமாலை ஜெபிப்பது போன்ற மூடப்பழக்கவழக்கங்களை எதிர்கிறேன். இவற்றை நான் கைக்கொள்வதில்லை. குழந்தை ஞானஸ்நானம் நான் அறியாத பருவத்தில் வழங்கப்பட்டது. பாவசங்கீத்தனம் நான் குருவானவரிடம் செய்வதில்லை. தேவனிடமே செய்கிறேன். 

Golda: நல்லது.மரியாள் வணக்கம், தேவதூதனிடம் ஜெபித்தல்,சிலைவணக்கம், புனிதர் வணக்கம், போன்றவை வேதவசனத்திற்கு விரோதமான பழக்கம் அல்லவா!

Bro Colvin:பேப்புமார் செய்த பாவங்களை அவர்களே ஒத்துக்கொண்டிருக்கிறார்கள்.. பல தடவைகள் மன்னிப்பும் கோரியுள்ளார்களே!. இதனை நீங்கள் அறியமாட்டீர்களா?

Golda: சகோ சில்சாம் பாணியில் சொல்ல வேண்டும் என்றால், சர்வ அதிகாரம் பெற்ற போப்பாய் இருப்பதே பெரிய பாவம்!! சமீப காலத்தில் வெளி வந்த பாதிரிமார்களின் சேட்டைகளை வாடிகன் மூடி மறைக்கத் தானே பார்த்தது. Child sex scandal-லில் மாட்டிக்கொண்ட பாதிரிமார்கள் சட்டப்படி தண்டிக்கப்பட்டார்களா? இந்த மாதிரி பாலியல்ரீதியான் குற்றங்கள் கத்தோலிக்க பாதிரிமார்களிடம் அதிகம் காணப்படுவது, அவ்ர்கள் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கவேண்டும் என்ற ஒரு மிகத்தவறான மனிதக்கொள்கைக்கு உட்படுத்தப்படுவதுதானோ? எங்கு சிலைவணக்கம் (ஆவிக்குரிய விபச்சாரம்) இருக்கிறதோ அங்கு பூமிக்குரிய விபச்சாரமும் இருக்கும்.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

கோல்வின் அவர்களே,

தங்களது நேர்த்தியான பதில்களால் அனைவரையும் கொள்ளை கொண்டுவிட்டீர்கள்;இதன்மூலம் "நிறைகுடம் ததும்பாது" என்ற முதுமொழிக்கும் இலக்கணமாகத் திகழ்கிறீர்கள்; முக்கியமாக முதல் கேள்வியிலேயே கோல்டா அவர்கள் குறைவுபட்டிருக்கிறார்;ஏனெனில் அண்மையில் ஏஞ்சல் டிவியில் சாதுஜி அவர்களது நெஞ்சினிலே நிறைந்து சொன்னது, "ஞானஸ்நானம்" அவசியமல்ல என்பதாக;

மேலும் பெந்தெகொஸ்தே மார்க்கத்தாரும் கூட இராப்போஜனம் அல்ல,பகற் போஜனமே நடத்துகின்றனர்;அதிலும் கத்தோலிக்கர்களைப் போலவே,"இது உங்களுக்காகப் பிட்கப்பட்ட கர்த்தருடைய சரீரம்" என்று தவறாமல் உச்சரிக்கப்பட்டே வழங்கப்படுகிறது;அதுபோலவே பாத்திரத்திலும் (அவுன்சு குடுவையில்) "இது உங்களுக்காக சிந்தப்பட்ட இயேசுகிறித்துவின் இரத்தம்" என்று உச்சரித்தவாறே வழங்கப்படுகிறது;இதில் எதை குற்றங்காண இயலும்...?

அன்பே பிரதானம்...அன்பை நிறைவேற்றுங்கள்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

எனது பதில்கள்

1) குழந்தையாக இருந்தபோது. ஏனென்றால் நான் கத்தோலிக்க பாரம்பரியத்தை சார்ந்தவன். மதம் மாறி வந்திருந்தால் பெரியவனாக இருக்கும் போது பெற்றுக் கொள்ளலாம்.

 

2) இராப்போஜனம் என்று சொல்வதில்லை. திருவிருந்து ஆலயம் சென்றால் எடுப்பேன். தவறு என்றால் என்ன தவறு என்று சுட்டிக் காட்டுங்கள்

3) ஒரு கோணத்தில் பார்த்தால் சரி. சான்றாக கிறிஸ்தவர்கள் வேறு நாடுகளில் கொடுமைப்படுத்தும்போது துன்பப்படுத்தும்போது போப்பினால் குரல் கொடுக்க முடியும். இன்னும் பலநாடுகளில் அதிகமாக கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படாதிருப்பதற்குக் காரணம் போப்பின் அதிகாரமே. மறைவாக பல காரியங்கள் நடைபெற்றாலும் அவை வெளிவருவதில்லை. அதற்கான அவசியம் கூட கிடையாது. மீடியாக்களை அவதானியுங்கள் உண்மை விளங்கும். 

 

வாளவிய அதிகாரம் எங்களை கட்டுப்படுத்துவதில்லை என்பதுதான் உண்மை. நீங்கள் எப்படி உங்கள் திருச்சபைக்கு கட்டுபடுகிறீர்களோ நானும் கட்டுப்பட்டவன் ஆவேன். ஆயினும் வேதத்திற்கு புறம்பான காரியங்களில் கட்டுப்படுவதில்லை உ-ம் சிவைணக்கம், புனிதர் வழிபாடு. இதனை நான் செய்யாதிருப்பதற்காக திருச்சபை என் உரிமைகளில் தலையிடுவதில்லை 

 

4) கத்தோலிக்கன் என்று சொல்லி பெருமைப்பட்டுக் கொள்வதாக எங்கோயாவது எழுதியிருக்கின்றேனா.? எனது சபை எது வெனக் கேட்டால் நான் சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றேன். இன்னும் பலருக்கும் தெரியாது நான் கத்தோலிக்கன் என்று. என்னுடன் பேசும் யாருமே இலகுவில் என்னை கத்தோலிக்கனாக எடைபோட மாட்டார்கள்

திருச்சபை விட்டு திருச்சபை மாறுவதால் பரலோகம் செல்ல முடியுமா? இல்லையேதானே! தேவனின் வார்த்தைக்குக் கீழ்படிய வேண்டும். அதனை கடைபிடிக்க வேண்டும். இரட்சிப்பு இயேசுவால்தான் வருகிறது. நான் சார்ந்திருக்கும் திருச்சபையால் அல்ல. நான் இயேசுவையே சார்ந்திருக்கிறேன். 

 

5) கண்டிப்பாக ஆராய்வேன். நம்பலாம். ஆனால் இப்போது இல்லை. குறிப்பாக பாவசங்கீத்தனம் செய்தல், சிலைவணக்கம், புனிதர் வணக்கம், குழந்தை ஞானஸ்நானம், உறுதிபூசுதல் மற்றும் சடங்காசாரங்கள், ஜெபமாலை ஜெபிப்பது போன்ற மூடப்பழக்கவழக்கங்களை எதிர்கிறேன். இவற்றை நான் கைக்கொள்வதில்லை. குழந்தை ஞானஸ்நானம் நான் அறியாத பருவத்தில் வழங்கப்பட்டது. பாவசங்கீத்தனம் நான் குருவானவரிடம் செய்வதில்லை. தேவனிடமே செய்கிறேன். 

பேப்புமார் செய்த பாவங்களை அவர்களே ஒத்துக் கொண்டிருக்கிறார்கள்.. பல தடவைகள் மன்னிப்பும் கோரியுள்ளார்களே!. இதனை நீங்கள் அறிய மாட்டீர்களா?



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

சகோ கொல்வினுக்கு சில கேள்விகள்:

 1. ஞானஸ்நானம் எடுத்திருக்கின்றீர்களா? எப்பொழுது? குழந்தையாய் இருந்த போதா, இரட்சிக்கப்பட்ட பின்பா?

2. கத்தோலிக்க சபையில்தான் இராப்போஜனம் எடுக்கின்றீர்களா?. அவர்கள் சொல்லும் இராப்போஜன சத்தியம் தவறு என்று தெரியுமா?

 3. போப்பின் வானளாவிய அதிகாரம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

 4. ஏன் கத்தோலிக்கன் என்று சொல்வதில் பெருமைப் பட்டு கொள்கிறீர்கள்? ஏன் அந்த பாராம்பர்ய பெயர் உங்களுக்கு தேவைப்படுகிறது அல்லது பிடித்திருக்கிறது அல்லது விட முடியவில்லை அல்லது விட விருப்பமில்லை?

 5. யெகோவா சாட்சிகள் பற்றி ஆராய்வது போல், ஏன் கத்தோலிக்க பாரம்பரியத்தையும் நீங்கள் ஆராயக் கூடாது? சில போப்மார்களின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறும் அல்லவா? அவர்களுடைய பல தவறான உபதேசங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரலாம் அல்லவா?

 இரட்சிக்கப்பட்டபின்னும் தன்னை கத்தோலிக்கன் என்று சொல்லி பெருமை பாராட்டிக் கொள்ளும் யாரும் இக்கேள்விகளுக்கு பதிலளிக்கலாம்!



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard