ஜப்பானின் அணுக் கதிர்வீச்சு அச்சுறுத்தல் விடயமானது உலகளாவிய ரீதியில் பெருங்கவலைகளைத் தோற்றுவித்திருக்கும் நிலையில், அதிக எண்ணிக்கையான அணு ஆலைகளைக் கொண்டிருக்கும் இந்தியாவிலும் அந்தக் கவலை ஏற்பட்டிருக்கிறது. விசேடமாக சனச்செறிவுள்ள பகுதிகளில் இருக்கும் அணு ஆலைகள் தொடர்பாக கவலைகள் ஏற்பட்டுள்ளன.
அதேவேளை, தமிழ்நாட்டின் கூடங்குளத்திலுள்ள அணு உலை தொடர்பாக இலங்கையிலும் கவலைகள் வெளியிடப்படுகின்றன. இந்த நிலைமையில் இந்தியாவின் பௌதீகத் திணைக்களத்திலுள்ள இணை பேராசிரியரான கே.என்.உத்தம் அணு கதிர்வீச்சு தொடர்பாகவும் அதனைத் தடுப்பதற்கான வழிவகைகள் குறித்தும் கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார். இதனை டைம்ஸ் ஒவ் இந்தியா பத்திரிகை நேற்று வெளியிட்டிருக்கிறது.
பாரம்பரியமாக இந்தியாவில் மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் சிலவற்றின் மூலம் காமா கதிர்களின் தாக்கத்தை குறைக்க முடியுமென அவர் தெரிவித்துள்ளார். அணு கதிர்கள் வெளியேற்றப்படும் போது இந்த காமா கதிர்களே மிகவும் தீங்கு விளைவிப்பவையாகும்.
சட்டைப் பைகளில் வெங்காயத்தை வைத்திருத்தல், வீட்டு சுவர்களின் வெளிப்புறத்தே மாட்டுச் சாணத்தை மெழுகுதல் என்பன போன்ற பாரம்பரிய முறைமைகள் மூலம் இந்த காமா கதிர்களின் பாதிப்பை தடுக்க முடியுமென அவர் கூறியுள்ளார். வீட்டு சுவர்களில் மாட்டு சாணத்தால் மெழுகினால் அவை காமாக் கதிர்களை உறிஞ்சி விடும் என்று உத்தம் தெரிவித்திருக்கிறார். உண்மையிலேயே மாட்டு சாணமானது அல்பா,பீற்றா, காமா ஆகிய மூன்று கதிர்களையும் உறிஞ்சி விடும் தன்மை கொண்டவை. இவற்றில் அல்பாக் கதிர்கள் ஆடைகளின் படைகளுக்குள் ஊடுருவ முடியாதவை. அவற்றைத் தொடர்ந்து பீட்டாக் கதிர்கள் தாக்குகின்றன. அவற்றாலும் ஊடுருவ முடியாது ஆனால், காமா கதிர்கள் உடலின் இழையத்தின் ஊடாக ஊடுருபுவவையாகும். இவை மிகவும் தீங்கானவை என்று அவர் கூறியுள்ளார். வீட்டு சுவர்களின் மீது மாட்டு சாணத்தால் தடிப்பமாக மெழுகினால் அவை காமா கதிர்களை உறிஞ்சிக்கொள்ளும் அதன் மூலம் மக்களுக்கு பாதுகாப்புக்கும் கிடைக்கும் என்று உத்தம் தெரிவித்திருக்கிறார். இந்தியாவின் விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சில் அவர் பணியாற்றி றுகிறார்.
இதேபோன்று வெங்காயத்திலும் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி பயனளித்திருக்கிறது. அதாவது வெங்காயமும் காமாக் கதிர்களை உறிஞ்சக் கூடிய தன்மையைக் கொண்டதெனஆய்வு நிரூபித்திருக்கிறது. இவற்றை விட இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்படும் மூலிகை முறைகளும் பயனளிப்பவையாக உள்ளன. கடலைமாவை உடலில் பூசுதல், கடுகு எண்ணெய்யை உடலில் பூசுதல் என்பனவும் கதிர்வீச்சின் தாக்கத்தைக் குறைக்கும் என்று உத்தம் கூறியுள்ளார். அத்துடன், கீரை வகையான காய்கறிகளும் மற்றும் கடுகு இலை போன்றவை கதிர்வீச்சைக் கொண்டுள்ளவை. ஆனால், அவற்றைப் புறந்தள்ளிவிட முடியும். அவற்றின் மூலம் பாதிப்புகள் கிடையாது எனவும் உத்தம் கூறியுள்ளார். பசளி, துளசி, அகத்தி மற்றும் கடுகு இலைகளில் சோடியம் 23,24 உம் பொட்டாசியமும் உள்ளன. இவை உடலின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமானவை. இந்தப் உப்புகள் குறுகிய ஆயுள் கொண்டவை. பொட்டாசியம் 42, 12 மணித்தியால ஆயுள் கொண்டது. சோடியம் 22, 2.5 வருடங்கள் ஆயுள் கொண்டது. இதேபோன்று சோடியம் 22,24 பொட்டாசியம் 45, இரும்பு 59 என்பன வேறுபட்ட பீற்றாவை வெளிவிடுபவையாக உள்ளன. ஆனால், இவை பாதிப்பை ஏற்படுத்தாதவையாகும். இவைற்றை விட இயற்கையாக ஏற்படும் உப்புகளும் பல உள்ளன. அவை தீங்கு விளைவிக்காதவை. இயற்கை மட்டத்தை அவை தாண்டிச் செல்வதில்லை என்று உத்தம் கூறியுள்ளார்.