Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மத நம்பிக்கையே இல்லாமல் வாழும் மக்கள்..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
மத நம்பிக்கையே இல்லாமல் வாழும் மக்கள்..!
Permalink  
 


தினமலர் நாளிதழில் வெளியான அண்மைய செய்தி:-

பதிவு செய்த நாள் : மார்ச் 26,2011,23:07 IST

லண்டன் : உலகின் ஒன்பது நாடுகளில் சமீபத்தில் நடந்த ஓர் ஆய்வில், அந்நாடுகளில் பெரும்பான்மையான மக்கள் மத நம்பிக்கையே இல்லாமல் வாழ்ந்து வருவது தெரியவந்துள்ளது. இதனால், அவற்றில் தற்போது இருக்கும் மதங்கள் விரைவில் காணாமல் போய்விடும் என்று அந்த ஆய்வு கூறுகிறது. ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, கனடா, செசன்ய குடியரசு, பின்லாந்து, அயர்லாந்து, நெதர்லாந்து, நியூசிலாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய ஒன்பது நாடுகளில் சமீபத்தில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. இந்நாடுகளில் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேல் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு, அங்குள்ள மக்களின் மத விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அதன்படி, இந்நாடுகளில் பெரும்பான்மையான மக்கள் மத நம்பிக்கை இல்லாமலேயே வாழ்ந்து வருவது தெரியவந்துள்ளது. இப்படியே போனால் இன்னும் சில ஆண்டுகளில் அங்கு மதங்களே இல்லாமல் போய்விடும் என்று அந்த ஆய்வு எச்சரித்துள்ளது. அமெரிக்காவின் டல்லஸ் நகரில் நடந்த ஓர் கூட்டத்தில் இந்த ஆய்வின் முடிவு வெளியிடப்பட்டது. அதன்படி, மிகக் குறைந்தபட்சமாக நெதர்லாந்தில் 40 சதவீதம் பேரும், அதிகபட்சமாக செசன்ய குடியரசில் 60 சதவீதம் பேரும் மதநம்பிக்கை அற்றவர்களாக வாழ்ந்து வருகின்றனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த நிபுணர்கள் சிலர்,"இது ஒரு சாதாரண கணக்கு தான். அதாவது, நாம் மேற்கொள்ளும் ஒரு காரியத்தால் ஏதாவது பயன் விளைந்தால் அக்காரியத்தை நாம் தொடர்ந்து செய்வோம். உதாரணமாக, ஸ்பானிய மொழி பேசுவதால் விளையும் பயன், பெரு நாட்டில் தற்போது வழக்கழிந்து வரும் கொச்சுவான் மொழியைப் பேசுவதால் விளையும் பயனை விட மிக அதிகம். இதே கணக்கை மதநம்பிக்கையிலும் நீங்கள் வைத்துப் பார்க்கலாம்' என்று தெரிவித்தனர்.

மேற்கண்ட செய்தியை வாசித்த மாத்திரத்தில் இதுகுறித்த அதிர்வலைகள் எனக்குள்ளும் எழும்பியது;ஏனெனில் சில நாட்களுக்கு முன்னரே சுமார் 80 வயதாகும் பெரியவர் ஒருவர் வருத்தத்துடன் இதே காரியத்தைப் பகிர்ந்துகொண்டிருந்தார்;அவருடைய பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் மேற்கத்திய நாடுகளில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்;அவர் வேதனையுடன் பகிர்ந்துகொண்டது இதுதான், "நான் என்னுடைய தகப்பனார் வழியாகப் பெற்ற விசுவாசத்தை இதோ கிட்டதட்ட 80 சதவீதமாவது நிறைவேற்றியதுடன் என் பிள்ளைகளுக்கும் கடத்தினேன்;ஆனால் தற்கால தலைமுறையினருக்கு இதனைக் கொண்டு செல்லுவதில் பல நடைமுறை சிக்கல்கள் இருக்கிறது;அவர்கள் கல்வி பயிலும் நிறுவனத்திலோ பணிபுரியும் தளங்களிலோ ஆண்டவருடைய விசுவாசத்தினைக் குறித்து பேசுவதோ அதனை நிறைவேற்ற முயற்சிப்பதோ தடைசெய்யப்பட்டுள்ளது;இதனால் அவர்கள் தனிமைப்படுத்த‌ப்படுகிறார்கள்;தாங்கள் தனிமைப்படுத்தப்படுவதைத்  தவிர்க்க அவர்கள் தங்கள் விசுவாசத்திலிருந்து இளகிப்போகிறார்கள்; மேலும் கொஞ்சம் கொஞ்சமாக ஆண்டவரை விட்டும் விலகிப் போகிறார்கள்" என்று வருத்தப்பட்டார்.

இது சம்பந்தமாக என் மனதில் தோன்றியது என்னவென்றால், இதனை எதிரி எப்படி சாதித்தான், என்பதே; அன்றாட வாழ்வின் பொருளாதார நெருக்கடிகளோ பாவ சோதனைகளோ இதனை சாதித்தது என்று சொல்லுவதைக் காட்டிலும் வேதம் சொல்லுவது போல கர்த்தரைக் குறித்த சரியான அறிவில்லாமலே இவர்கள் சங்கரிக்கப்பட்டார்கள் என்பேன்.

  • "என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள்; நீ அறிவை வெறுத்தாய், ஆகையால் நீ என் ஆசாரியனாயிராதபடிக்கு நானும் உன்னை வெறுத்துவிடுவேன்; நீ உன் தேவனுடைய வேதத்தை மறந்தாய், ஆகையால் நானும் உன் பிள்ளைகளை மறந்துவிடுவேன்." (ஓசியா.4:6)

இதுவே ஆண்டவருடைய மனக்குமுறல் ஆகும்;அறியவேண்டியதை அறியவேண்டிய பிரகாரம் அறியாததும் அறியத் தேவையில்லாததை அதிகமாக அறிய தீவிரித்ததே இந்த விசுவாச துரோகம் ஏற்பட காரணமாக இருக்கவேண்டும்; ஏனெனில் விசுவாச துரோகம் வெளிப்பட்ட பின்னரே மற்ற காரியங்கள் தீவிரமெடுக்கும் என்பது தீர்மானமாகும்.

  • "எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது." (2.தெசலோனிக்கேயர்.2:3)

இதன்படி விசுவாச துரோகத்துக்கு ஆரம்ப வித்தாக விழுந்தது ஆரோக்கிய உபதேசத்துக்கு எதிரான கள்ள உபதேசமே; கள்ள உபதேசத்தின் மையக் கருவானது இறையியல் கொள்கை மற்றும் மூல உபதேசம் சம்பந்தமாகவே அமைந்துள்ளது.

மற்ற மார்க்கங்களைத் தவிர்த்து நம்முடைய கிறித்தவ விசுவாசத்தைக் குறித்து மட்டும் சிந்திப்போமானால் கிறித்தவத்தில் நிலவிவரும் உபதேசக் குழப்பங்களே இளைய தலைமுறையினரை சலிப்படையச் செய்துள்ளது என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது; கிறித்தவர்களாகிய நாம் கடந்த 2000 வருடத்துக்கும் மேலாக ஆதி அப்போஸ்தலர்களால் கொடுக்கப்பட்ட உபதேசத்தினால் போதிக்கப்பட்டு, போதித்து, அதனை நிறைவேற்றி வருகிறோம்; கள்ளங்கபடமில்லாமல் எதிர்கேள்வி எழுப்பாமல் நீரோடை போல போய்க் கொண்டிருந்த கிறித்தவ வாழ்வில், மனைவியின் கற்புநெறியைக் குறித்து ஐயங்கொண்ட‌ கணவனுடைய இருதயத்தின் நிலைமைக்கு கிறித்தவ விசுவாசத்தைத் தள்ளி கேள்விக்குறியாக்கியதில் இரண்டு முக்கிய எதிரிகள் பெரும்பங்காற்றினர்;ஒரு எதிரி வெளியிலிருந்தும் மற்றொரு எதிரி உள்ளேயிருந்தும் கலகம் செய்தான்.

இதில் நான் சீர்திருத்தவாதிகளையும் திருச்சபையை மறுசீரமைப்பு செய்யப் போராடிய பெரியவர்களையும் குறித்து கவனத்தில் கொள்ளவில்லை;ஆனால் படைப்பையே கேள்விகுறியாக்கிய டார்வினின் பரிணாமக் கொள்கையும் இரட்சகரின் தெய்வத்துவத்தையே ஆராயத் துணிந்த யெகோவா சாட்சிகளின் தலைவனான இரஸல் போன்றவர்களின் கள்ள உபதேசமும் இந்த கைங்கர்யத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது; மறுபுறம் விஞ்ஞானத்தின் அசுர வளர்ச்சியும் அத்துடன் ஒத்திசைந்து செல்ல ஆயத்தமாக இருந்த முகமதியர் மற்றும் நம்முடைய தேசத்தில் இந்து மார்க்கத்தவரின் வஞ்சகமும் சேர இவையனைத்தும் கிறித்தவத்தின் மீது பெரும் தாக்குதலாக விழுந்தது; இதனால் யூதமோ, முகமதியமோ, பௌத்தமோ அல்லது வேறெந்த பிரதானமோ மார்க்கங்களோ அதிக பாதிப்படையவில்லை;ஆனால் கிறித்தவம் மட்டுமே இன்றைக்கும் அனைத்து நன்மைகளையும் தன்னகத்தே கொண்டிருந்தும் புறக்கணிக்கப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது;இதற்கு முக்கிய காரணம் இயேசுவானவர் தொழத்தக்க தெய்வமல்ல,அவர் வெறும் தூதன் மாத்திரமே என்ற பொய்ப் போதகமே.

ஒரு சாமான்யனுடைய பார்வையிலேயே இதனை யோசிப்போம்; ஒரு ஆளைக் குறித்து நான் ரொம்ப பிரமாதமாகப் பேசிக்கொண்டிருக்கிறேன் என்று வைத்துக்கொள்ளுவோம்; என்கூடவே வந்த மற்றொரு நபர் எதிர்பாராமல் எனக்கு எதிர்த்து நின்று நான் சொல்லும் ஒவ்வொன்றையும் பரியாசம் செய்துகொண்டும் விமர்சித்துக்கொண்டும் இருந்தால் அந்த மூன்றாவது நபர் மிகவிரைவிலேயே எங்கள் இருவர் மீதும் நம்பிக்கை இழப்பதுடன், "முதலில் உங்களுக்குள் பேசி முடிவுக்கு வாருங்கள், டாடா பைபை" என்று சொல்லிவிட்டு போய் விடுவானல்லவா? மேலும் நான் யாரை மேன்மைப்படுத்தி ரொம்ப நல்லவர் என்று புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தேனோ அவர் மீதும் நம்பிக்கையிழப்பான்.

அதுபோலவே தற்கால சமுதாயம் இரட்சகராகிய இயேசுகிறித்துவின் மீதான நல்லெண்ணத்தையும் உயர்வான அபிப்ராயத்தையும் வேகமாக இழந்துவருகிறது; இதற்கு முக்கிய காரணமாக விளங்குவது ஒரு மனிதன் தன்னைக் கட்டுப்படுத்தும் சக்தி ஒன்று இருப்பதை விரும்பாததும் இச்சையை நிறைவேற்றுவதில் பழகிய ஆதாமின் இருதயமுமே; இதனால் என்ன, என்றைக்கோ வரும் என்று சொல்லப்படும் பேரின்பத்தைவிட உடனே கிடைக்கக்கூடிய சிற்றின்பத்தின்பால் ஒருவன் ஈர்க்கப்படுகிறான்.

பாவத்தைக் குறித்த தவறான கொள்கைகள் ஏற்கனவே பரவிவிட்டதால் பாவத்துக்கான தண்டனையைக் குறித்த பயமும் இல்லை;மேலும் பாவத்தைக் குறித்த துக்கத்துக்குக் காரணமாக இருக்கும் பரிசுத்தாவியானவரைக் குறித்தும் அவரை அனுப்பிய கர்த்தராகிய இயேசுகிறித்துவைக் குறித்த தாழ்வான எண்ணமும் ஒரு மனிதனை கடினமானவனாக மாற்றிவிடுகிறது.

இந்த சிந்தை மாற்றத்துக்கு முக்கிய காரணமாக அமைந்தது கிறித்தவத்தின் மீதான நம்பிக்கையைக் குலைக்கும் வண்ணமாக செய்யப்பட்ட துருபதேசங்களே என்கிறேன்;இது மேற்கத்திய நாடுகளில் வெற்றிகரமாக சாதிக்கப்பட்டு அதன் குறிக்கோளை எட்டிவிட்டது;அடுத்ததாக ஆசிய நாடுகளைக் குறிவைத்து அந்த சக்திகள் செயல்படத் துவங்கியிருக்கிறது; இந்த மாபாதக செயலுக்கு நம்மவர்களும் பலியாகி சாமரம் வீசிக்கொண்டிருக்கிறார்கள்.

இதையெல்லாம் கண்டு மனம்வெதும்பிக்கொண்டிருக்கும் என்னைப் போன்றோர் என்ன செய்யமுடியும்? இன்று காலையில் கிருபைக்காக கதறி கதறி வாய்விட்டு  அழுதேன்;சிலுவையிலறைப்படும் போது இயேசுவானவர் என்ன சொல்லி ஜெபித்தாரோ அதுவே என்னுடைய இன்றைய ஜெபமும், வேறென்ன செய்யமுடியும்?

  • "பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே " (லூக்கா.23:34)

நான் ஒரு வழிப்போக்கன், கிறித்துவின் அடியவன், திருமுழுக்கினர் யோவானைப் போல தீமைக்கு எதிர்த்து நிற்பவன், வனாந்தரத்திலிருந்து கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்தும் பணியில் என்னை ஈடுபடுத்திக்கொண்டவன், சிரச்சேதம் செய்யப்பட்டாலும் தயங்காமல் தலையைக் கொடுக்க நினைப்பவன், எனக்கென்று எந்த பின்புலமும் கிடையாது; நான் எந்த கௌரவமான அரசுப் பணியிலும் இருந்ததில்லை, கல்லூரி சாலை வழியாகக் கூட சென்றதுமில்லை;என்னை என்ன செய்தாலும் கேட்க ஆளில்லை;ஆகவே இந்த மார்க்க எழுச்சிக்காக இரத்தம் சிந்திய ஓராயிரம் பக்தர்களில் ஒருவனாக என்னை நானே மறு அர்ப்பணம் செய்கிறேன்.

நான் வாழ்ந்தாலும் உம்மோடு தான் (இயேசுவே)
நான் மரித்தாலும் உம்மோடு தான்

உமக்காகத் தானே உயிர்வாழ்கிறேன்
உம்மை தானே நேசிக்கிறேன்

ஆத்தும பாரம் தாருமையா
அபிஷேகத்தால் என்னை நிரப்புமையா

உம்மைப் போல என்னை மாற்றுமையா
உமக்காகவே என்னைத் தந்தேனையா

இயேவையே நான் தொழுவேன்
அவரே கண்கண்ட தெய்வம்
அவரே எங்கள் குலதெய்வம்...
அவரே என் இஷ்டதெய்வம்

  • "தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர்.
  • ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர்; நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே.
  • உமதுநிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம், அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம் என்று எழுதியிருக்கிறபடி நேரிட்டாலும்,
  • கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ?
  • இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே.
  • மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும்,
  • உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்."(ரோமர்.8:33 - 39)


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard