படம் பற்றி அல்ல , சாட்சி தான் சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன்!
என்ன சாட்சி? அந்த படத்தில் நடித்த அமலா பால் ஒரு கிறிஸ்தவர். அந்த படத்தில் சிறைச்சாலையில் இடம் பெரும் சொற்பொலிவு காட்சியில் கலாத்தியர் 5;21,22,23 ஆகிய வசனங்கள் சொல்லப்பட்டது. அந்த வசனங்களை ஆதாரமாக வைத்தே அந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இதைப் பார்ப்பவர்கள் நிச்சயமாக அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம், இவைகளால் வரும் நன்மைகளை அறிந்து இவைகளைக் கற்றுக் கொண்டு விட்டார்கள்.
பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள்,பொறாமைகள், கொலைகள், வெறிகள், இவைகளால் உண்டாகும் தீமைகளை அறிந்து அவைகளை விட்டுவிட்டார்கள். காதல் காட்சிகளையும் வன்முறைகளையும் கழித்துவிட்டு பாருங்கள் அது ஒரு அருமையான கிறிஸ்தவ படம் என்றா சாட்சி சொல்லுவார்?
படம் பாக்கறவன் கதாநாயகியின் கண்ணு காந்தமா இருக்கு.... கதாநாயகியை வயிற்றிலேயே வில்லன்கள் உதைக்கும் காட்சியும் அதைத் தொடர்ந்து ரயில் தண்டவாளத்தில் தூக்கி வீசி கொலை செய்யும் காட்சியும், கதாநாயகன் தற்கொலை செய்து கொள்வதும், அதைத் தொடர்ந்து கடமை தவறாத காவலதிகாரி கொலைகாரனாக மாறுவதும் தான் படத்தின் வெற்றியடையக் காரணம் என நண்பர்கள் சொல்லி கேள்விப்பட்டேன்.
***
கிறிஸ்தவ வானொலி ஒன்றில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், நான் சினிமாவில் அதிகப்பக்குவப்பட்ட பின்புதான் போயிருக்கிறேன் என்னை உதாரணமாக வைத்துக்கொண்டு கிறிஸ்தவ இளைஞர்கள் சினிமாவுக்கு வர வேண்டாம் தேவன் எப்போது என்னை வெளியே வரச் சொல்லிகிறாரோ அப்போது நான் சினிமாவை விட்டு வெளியே வந்து விடுவேன் என்றார்.
சில்சாம் அவர்கள் சொன்ன குமரி முத்து ஒரு சுயாதீன சபை நடத்திய கூட்டத்துக்கு கடந்த ஆண்டு வந்து இந்த விஜய் தம்பி கிறிஸ்தவனா இருந்துட்டு சினிமாவுல அதப்பத்தி எதையுமே சொல்ல மாடீங்கரார். இன்னும் உனக்கு அதிக ஆசீர்வாதங்கள் கெடைக்கும் தம்பின்னும் சொல்லிப்பாத்துட்டேன் இப்படி பல தடவ இது பத்தி அவர்கிட்ட சொல்லிப் பாத்துட்டென் கேக்க மாட்டேங்குரார்.
இப்படிப்பட்ட drama க்களும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது
-- Edited by eloi4u on Thursday 31st of March 2011 04:18:53 PM
-- Edited by eloi4u on Thursday 31st of March 2011 04:20:00 PM
படம் பற்றி அல்ல , சாட்சி தான் சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன்!
உங்க இயேசு அழைக்கிறார் பத்திரிக்கையில் கூடத்தான் Harris Jeyaraj இன் பேட்டி வந்தது!
என்னது எங்க ஏசு அழைக்கிறாரா? இது என்ன புது கரடி
anyway இதனால் சகலமானவர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய சத்தியம் என்னவென்றால்
இயேசுவின் பெயரைச் சொல்லிக்கொண்டு சில சினிமா காரர்களைக் கூட்டிக்கொண்டு எங்களிடம் வந்தால் இவர்களைப் போல கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் என்று சில போலிகள் கிளம்பியிருக்கிறார்கள் இவர்கள் முன்னிரவு நேரத்தில் சேவ் செய்யாத முகத்தோடு மஞ்சள் சட்டை ரோஸ்கலர் டை கட்டிக்கொண்டு டீ.வீ யில் லேகியம் விற்கும் போலி மருத்துவர்களுக்கு இனையானவர்கள். இவர்களை நம்பி மோசம் போகாதிருங்கள் தேவன் தம்மை பரியாசம் செய்ய ஒட்டார்.
தேன் இனிக்கும் தான், அதற்காக அதனை குஷ்டரோகியின் கையிலிருந்து நக்கி சுவைக்க யாராவது சம்மதிப்பார்களா? தற்கால ஊழியர்கள் அதற்கும் ஆயத்தம்? நீங்கள் இதிலும் விதண்டாவாதம் செய்வீர்கள் என்பதால் அதற்கும் பதில் சொல்லுகிறேன், ஆம்,இயேசுவானவர் குஷ்டரோகியை சற்றும் அருவருப்பில்லாமல் தொட்டது உண்மைதான்;ஆனால் குணமாக்கினாரே ? இவர்களோ, அவர்கள் குணப்படாத நிலையிலேயே அவர்களுடன் கொஞ்சி குலாவுகின்றனரே..?
மைனா படமெடுத்தபிரபு சாலமோனனின் பேட்டி ஏஞ்சல் டிவியில் ஒளி பரப்பி.......
அடக்கடவுளே இப்படியெல்லாம் அந்த டீ.வீ யில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறதா? சாராயக்கடை வைத்திருப்பவர் கிறிஸ்தவர் என்றால் சாராயத்தைக் கூட குடிக்கச் சொல்லி அவருடைய பேட்டியை ஒளிபரப்புவார்கள் போலும்.
சமீபத்தில் (ஜனவரியில் கேட்டது)மோகன் சி லாசரஸ் நக்மாவை சந்தித்தாராம். அவங்க சொன்னாங்களாம் - பிரதர் என்னை அரசியலுக்கு வரச்சொல்லி சிலர் சொல்கிறார்கள். சினிமாவில் நடிக்கவும் அழைப்பு வருகிறது. திருமணமாகி settle ஆகவும் சிலர் ஆலோசனை சொல்கிறார்கள். என்ன செய்வதென்று தெரியவில்லை. தேவசித்தம் தான் செய்ய விரும்புகிறேன். ஜெபித்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார்களாம். நீங்க நல்லா ஜெபிங்க. ஆண்டவர் உங்களுடன் பேசி உங்களை நடத்துவார் என்று ஆலோசனை சொல்லி வந்தாராம்.
அவருக்கு நான் அனுப்பிய மெயில் இதோ!
Dear brother,
Greetings!
I attended the fasting prayer camp on Saturday and Sunday. Thank You for organizing such camps. You have a great passion for winning souls to Christ.
I very much appreciate your ministry among cine people. May God greatly bless your work among them. In spite of all this, it is very sad that an actress recently committed suicide.
This mail is about the so called born again Christian cinema celebrities.
You said TASMAC shops destroy many families. Agreed. Likewise, Cinema destroys minds, especially young minds. Don’t you think?
Cinema is a field where flesh is glorified. I do not understand how a saved Christian can stay in such a profession.
You said films like Karunamoorthy, Passion of Christ were made by the cinema people. Is Maina directed by Prabu Solomon such a film?? I think that is yet another Tamil film on “divine love”. I have planned to watch that film and I request you also to watch that film.
You said a Christian comedian (karunas?) prays for 1.5 hours and he carries a Bible everywhere and that his colleagues call him “samiyar”. Fine. Comedians in the films normally speak double meaning dialogues and they tease girls along with the hero and help the hero to “love” the heroine and help him to succeed in his “divine love”. I have not watched any of his films/scenes. I wonder if he has acted decently and was bold enough to say that he won’t act/speak indecent dialogues.
What about Tamil Cinema Songs? Most of them praise the wonders of “love” and also they praise the eyes and nose of women. Are Harris Jeyaraj’s songs any different?. Do you think we can listen to and sing such cine songs?
You said they all boldly glorify Jesus everywhere.
கடவுளை புழ்ந்தால் போதுமா! வாழ்க்கை மாற வேண்டாமா?
I’m happy that Prabhu Solomon, Harris Jeyaraj and Karunas are touched by God and have faith in Jesus. Our God first touches people with His love and when people fell in love with Him, slowly He tells them that He is also a holy God. He has His own technique and timing to transform people in His image!
Just as AVM Rajan and Pushpalatha left cinema completely after they were saved, I believe now also God will ask people to come out of the commercial flesh based cinema industry. Before that happens, if we praise the cinema celebrities and place them in a tower by telecasting their testimonies in TV and in magazines, they would think they are doing right and in the end they may even end up in hell. Also such endorsements by ministers will make believers to think that cinema is ok and they will also get corrupted by cinema and may go to hell.
My opinion is, we need to sincerely pray for them, but we need not have to give any importance to them as long as they stay in the cine field.
Testimony of Harris Jeyaraj was published in Jesus Calls magazine. They were saying that he was doing well in his profession(they carefully avoided the word cinema) because of his prayers and because he was a Jesus Calls Young Partner. That actually made me wonder if Paul Dhinakaran was a fan of Harris Jeyaraj’s songs.
AR Rahman never fails to praise his God. Even in the Oscar ceremony, he said “ All Glory to God” in Tamil. He received two Oscar awards. Does that mean his God is greater than the God of Harris Jeyaraj?
God can certainly bless people with money, awards and rewards. But not all worldly success can be attributed to God. I do not think success in cinema can be attributed to Jesus.
In My Opinion, Success in commercial flesh based cinema industry does not bring any glory to the Holy God Jesus.
சினிமா என்னும் சாக்கடையில் இருந்தேன். இரட்சிக்கப்பட்டேன். வெளியே வந்தேன். இது சாட்சி.
சினிமாவில் இருந்தேன். இரட்சிக்கப்பட்டேன். இயேசு சினிமாவில் உயர்வை கொடுக்கிறார். இது என்ன சாட்சி?
ஊழியகாரர்கள் போட்டி போட்டுக்கொண்டு சினிமா பிரபலங்ளை புகழ்வதைப் பார்த்தால் கொஞ்சம் கண்ணை கட்டுகிறது. ஒன்றும் புரிய மாட்டேன் என்கிறது. கடைசி காலம் என்பது சரியாகத்தான் இருக்கிறது!!
அடுத்த பட பூஜைக்கு பிரபு சாலமொன் உஙகளை கூப்பிட்டாலும் கூப்பிடுவார். போயிடாதீங்க!
Anyway, God Bless You Brother! மூவர் கூட்டணி நன்றாக இருக்கிறது!
அருமை Brother சில்சாம். நீங்கள் குறிப்பிட்ட கள்ள தீர்க்கதரிசிகளை குறித்த வலுவான ஆதாரம் இருந்தால், அவைகளை தயவு செய்து வெளியிடுங்கள். அவைகள் எமக்கும் / பிள்ளையலுக்கும் உதவியாய் இருக்கும்.
நண்பரே, அந்தரங்கமானதொரு காரியத்துக்கு தான் ஆதாரம் வேண்டும்; வெளிப்படையாகக் கண்ணுக்கு முன்பாக அரங்கேறிக்கொண்டிருக்கும் அநியாயங்களுக்கு எதை ஆதாரமாகக் காட்டுவது? இந்த விஐபிக்களிடம் வேலைபார்க்கும் டிரைவர்களிடமும் தோட்டக்காரனிடமும் பாதுகாவலரிடமும் நெருங்கிப்பழகினாலே நிறைய கசப்பான சமாச்சாரங்கள் வந்துகொட்டும்;அவற்றையெல்லாம் இங்கே அரங்கேற்றினால் அவர்களுடைய உயிருக்கே ஆபத்தாக முடியும்;நானே கூட இவர்களிடமிருந்து உயிர்தப்பி வந்தவன் தான்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
அருமை Brother சில்சாம். நீங்கள் குறிப்பிட்ட கள்ள தீர்க்கதரிசிகளை குறித்த வலுவான ஆதாரம் இருந்தால், அவைகளை தயவு செய்து வெளியிடுங்கள். அவைகள் எமக்கும் / பிள்ளையலுக்கும் உதவியாய் இருக்கும்.
சினிமா துறையில் இருந்து இரட்சிக்கப்பட்டவர்கள் AVM ராஜன் புஷ்பலதா போல் முழுமையாக வெளிவரும்படி தான் ஆண்டவ்ர் நடத்துவார் என்பதுதான் என் கருத்தும்.
இரட்சிக்கப்பட்ட் பின்பும் மாம்சத்தை மகிமைப்படுத்தும்தமிழ் சினிமாவில் எப்படி நீடிக்க முடியும் என்பது கேள்விக் குறிதான்.
மைனா படமெடுத்தபிரபு சாலமோனனின் பேட்டி ஏஞ்சல் டிவியில் ஒளி பரப்பியதை அறிந்து நான் அவர்களுக்கு அனுப்பிய ஈமெயில் இதோ:
Greetings!
மைனாபாத்தாச்சா? படம்நல்லாஇருந்துச்சா?
Though I didn’t watch director Prabhu Solomon’s interview, I would like to record my strongest objection for telecasting interviews with cinema celebrities. This will only help to reduce the guilt associated with watching films. Cinema has the capacity to corrupt minds. David saw just one (bathroom) scene and that corrupted him. In Tamil films they show scene after scene like that and tempt the Davids to get corrupted. Even many non Christians have the wisdom to say that cinema corrupts young minds.
My thoughts on watching films:
There are no hard and fast rules for certain things.
God only knows what we are made of. He knows what is good /bad for each and every one of us. So God’s advice may be different to different people for their own benefit. For e.g.:, God might ask some to not watch any film, not to read any magazine, not to wear watch or jewels, or wear only saffron(!), or wear only white, or not to eat non veg… like this.
I stay away from Tamil films (do not have the taste/patience/tolerance for Tamil films) but watch English films in the movie channels. We all know that we shouldn’t watch obscene movies. Once God told me that I should also not watch films with too much violence and horror.
Even though God permits us to watch films, I do not think God will permit us to become part and parcel of the commercial flesh based film industry.
Tamil cinema revolves around love, more love, violence,revenge and family sentiments. May be in Hollywood , the directors have the liberty to make films on different topics. But even there cinema is a field where flesh is glorified. Whether it is Hollywood , Bollywood or Kollywood men must be handsome and must have muscles and women must be beautiful and sexy and of course must have a fair complexion. They are praised and booked in the films for their looks.
I do not think God cares one bit about our outward appearance and our fleshy talents. I do not think God likes it when flesh is given importance and glorified. I mean, nobody should boast about the way they look. I think God hates such attitude. I do not think God likes it when we (Christians) praise/ accept/ recognize somebody based on their looks. But cinema is a field where looks are everything, where looks are glorified, where men go to the extreme of getting six packs and eight packs and women go to the extreme of plastic surgeries. Can a true Christian stay in such a profession? That will be like Lot staying in Sodom and Gomorrah . In the end Lot lost everything.
I remember this dialogue I read somewhere. One person was saying: Look at Hollywood . Julia Roberts is praised because of her talents. Another person was saying: She has talents. But she became popular because of her looks and less/no dress scenes in her first film “pretty woman”. That is a good (a different) film. Now a days they censor all the films in the English movie channels. So you can watch that film, if God permits.
You seem to have less or no discernment. Sorry! Your friend Vincent Selvakumar, imo, has an excellent sense of discernment and I wonder what he thinks about this friendship between Christians and Cine field.
God won’t speak all the time in an audible voice to warn us. Sometimes we need to have the mind of Christ and know to separate good from evil. Bible advises us to avoid even the appearance of evil. Cinema certainly has the appearance of evil. Let us stay away from it. Watching films is one thing, but being a part and parcel of the cine field and endorsing cine people testimonies is another thing. I’m sure telecasting such testimonies will cause many to stumble and even if one person stumbles, gets corrupted by cinema and goes to hell because of that, their blood will be upon you. Really sorry, if you think, that is harsh.
Imo, our liberty to watch films should not become a stumbling block to others. That is the main point of I Corinthians 8. Substitute “eating food sacrificed to idols” with “watching films”.
Also read Ezekiel 13:22 & Jeremiah 23:14. We should not encourage evil.
So, Beware of the cinema spider that is out there to catch you and Angel TV.
சகோதரர் சில்சாம் அவர்களே! தங்களை தேர்தலுக்காக ஜெபிக்க சொன்னால் எப்படி என்ன குறிப்புகளுக்காக ஜெபிப்பீர்கள்? மோசமான் வாழ்க்கை வாழ்ந்த நக்மா என்றால், நாம் மிகவும் நல்லவர்களா? நாம் நல்லவர்கள் என்பதால் தான் ஆண்டவர் இரட்சித்தாரா? நீங்க சினிமா துறையில் இருந்ததாக சொல்லியிருக்கீங்க. உங்க துறை சேர்ந்த ஒருவர் இரட்சிக்கப்படுவது உஙளுக்கு மகிழ்ச்சி இல்லையா?
அன்பு சகோதரி கோல்டா அவர்களே,
நக்மாவின் இரட்சிப்பில் என்னைவிட ஆனந்தம் அடைந்தோர் யாருமில்லை; ஏனெனில் என் ஜனம் இரட்சிக்கப்படாதிருப்பதைவிட நானே புறம்பாக்கப்பட ஆயத்தமாயிருப்பேனே என்ற பவுலடிகளின் கூற்றை நன்கு அறிந்தவன்;பிரச்சினை, "தற்போது நக்மாவின் நிலை" என்னவென்பதே; மேலும் குமரிமுத்து என்பவரையும் நம்ம ஆட்கள் சுற்றிசுற்றி வந்தனர்; ஆனால் அந்த ஆள் தற்போது திமுகவின் பிரச்சார பீரங்கியாக இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.
என்னைப் போன்றோர் கர்த்தருக்காக இலட்சங்களையும் இலட்சணங்களையும் இழந்தோர் என்பது முக்கியமல்ல, நக்மா போன்றவர்களை நம்பி சோரம்போன மோகன் சி' போன்றவர்கள் இதுபோல கூலிக்குப் பிடித்த ஆட்களை வைத்து கிறித்தவ சமுதாயத்தை ஏமாற்றுவதுடன் பொதுமக்கள் மத்தியிலும் சலசலப்பை உண்டுபண்ணக்கூடாது என்கிறேன்.
எந்தவொரு புதிய விசுவாசியையும் நாங்கள் உடனே நம்புகிறதில்லை; இரண்டு அல்லது மூன்று வருடம் கழித்தே ஞானஸ்நானமே கொடுக்கப்படுகிறது;மேலும் ஊழியத்தில் பயன்படுத்த குறைந்தது ஐந்து வருடமாவது ஆகும்;ஆனால் இதுபோன்ற நட்சத்திரங்களால் விளைந்த நன்மையைவிட தீமையும் அவமானமுமே அதிகம் என்கிறேன்;அதையே உங்கள் சாதுவும் செய்துவருகிறார்; ஒரு தவறான காரியத்தை செய்துவிட்டு அதற்காக பல சமாளிப்புகளைச் சொல்லலாம்;ஆனால் முதல் கோணல் முற்றும் கோணல் என்பதை உணர்ந்தோமா?
"நாகமானை வாசலிலேயே நிற்கவைத்து டீல் பண்ணின அந்த எலிசா" எங்கே, தற்காலத்தில் இதுபோல நடிகைகளின் லைம் லைட்டில் வலம் வரத்துடிக்கும் நவீன எலிசாக்கள் எங்கே..?
சினிமாவிலிருந்து மீட்கப்பட்டோரில் அன்றும் இன்றும் நேர்த்தியானதொரு சாட்சி உண்டானால், அது இயேசுவினடிமை என்று தன் பெயரையே மாற்றிக்கொண்ட திரு.ஏவிஎம் ராஜன் மாத்திரமே. மற்றவர்களெல்லாரும் இரட்டை குதிரை சவாரி செய்வதையும் அதனை சாதுஜியைப் போன்ற கள்ள ஊழியர்கள் ஊக்குவிப்பதையும் பார்த்துக்கொண்டுதானிருக்கிறோம்; இன்று அந்த வரிசையில் மோகன் சி' யும் சேர்ந்துகொண்டார்.
தேன் இனிக்கும் தான், அதற்காக அதனை குஷ்டரோகியின் கையிலிருந்து நக்கி சுவைக்க யாராவது சம்மதிப்பார்களா? தற்கால ஊழியர்கள் அதற்கும் ஆயத்தம்? நீங்கள் இதிலும் விதண்டாவாதம் செய்வீர்கள் என்பதால் அதற்கும் பதில் சொல்லுகிறேன், ஆம்,இயேசுவானவர் குஷ்டரோகியை சற்றும் அருவருப்பில்லாமல் தொட்டது உண்மைதான்;ஆனால் குணமாக்கினாரே ? இவர்களோ, அவர்கள் குணப்படாத நிலையிலேயே அவர்களுடன் கொஞ்சி குலாவுகின்றனரே..?
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
அன்பு தம்பி ஆதாம், எபேசியர் 6: 10,11,12,13 வாசித்ததில்லையா!
10. கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்.
11. நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்.
12. ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.
13. ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.
-- Edited by golda on Wednesday 30th of March 2011 08:53:27 AM
சகோதரர் சில்சாம் அவர்களே! தங்களை தேர்தலுக்காக ஜெபிக்க சொன்னால் எப்படி என்ன குறிப்புகளுக்காக ஜெபிப்பீர்கள்? மோசமான் வாழ்க்கை வாழ்ந்த நக்மா என்றால், நாம் மிகவும் நல்லவர்களா? நாம் நல்லவர்கள் என்பதால் தான் ஆண்டவர் இரட்சித்தாரா? நீங்க சினிமா துறையில் இருந்ததாக சொல்லியிருக்கீங்க. உங்க துறை சேர்ந்த ஒருவர் இரட்சிக்கப்படுவது உஙளுக்கு மகிழ்ச்சி இல்லையா?
////////// தேர்தலுக்காக செய்யப்படும் யாகம், பில்லி சூன்ய வல்லமைகள் முறியடிக்கப் பட வேண்டும்
உங்க தலையில் இடி விழ....கொஞ்சமாவது அறிவுடந்தான் சிந்திக்கிறார்களா? இவர்களே மந்திரவாதிகளுக்கு ஏஜெண்டாக மாறாதது ஒன்றே குறை;சூனியம் வைத்து தேர்தல் முடிவை மாற்றிவிடமுடியும் என்று தேவ மனுஷன் ஒப்புக்கொள்ளுவது போல இருக்கிறது.இவர்கள் மந்திரவாதம் பில்லிசூனியம் பேய் பிசாசு யாகம் குறித்தெல்லாம் மிக உயர்வான எண்ணம் கொடுத்து அதைக் குறித்து தவறாகக் கணித்துவைத்திருப்பதன் பலன் முழுவதும் சாத்தானுக்கே போய் சேருகிறது;வேதம் சொல்லும் பிசாசின் செயல்பாடு என்பது வேறு,நம்முடைய சமுதாயத்தில் பரவியிருக்கும் அதைக் குறித்த பயங்கள் வேறு;இதைக் குறித்து தனி கட்டுரையே எழுதலாம்;ஆனாலும் ஆவியைப் பெற்றுள்ளதாகக் கூறி வலம்வரும் ஊழியர்கள் தெரிந்தோ தெரியாமல் மந்திரவாதம் பில்லிசூனியம் போன்றவற்றை அங்கீகரிப்பதுபோலப் பேசுவது தேவநாமத்துக்கே இழுக்காகும்;எனவே இந்த வேடதாரிகள் இயேசுவையும் கூட ஒரு ஏவல்சக்தியைப் போலப் பயன்படுத்த நினைக்கிறார்கள்.//////////////////////
golda : அதாவது, நேற்று (27.3.11) ஏஞ்சல் டிவியில் எலக்ஷனுக்காக ஒரு சிறப்பு நேரலை நிகழ்ச்சி நடத்தினார்கள். அதில் மோகன் சி லாசரஸ், சாது சுந்தர் செல்வராஜ், வின்சென்ட் செல்வகுமார் கலந்து கொண்டு கலந்துரையாடி பின்னர் ஜெபித்தார்கள். இந்த ஆவிக்குரிய கூட்டணி நன்றாக இருக்கிறது! மற்றபடி திமுக வா, அதிமுக வா என்ற குழப்பம் எனக்கு இன்னும் தெளிவாகவில்லை! //
கோல்டா, ஒரு இரகசியத்தைச் சொல்லவா,இந்த மூவர் கூட்டணி ஒரு சந்தர்ப்பவாத கூட்டணியாகும்;எப்படி தேர்தலுக்காக இரும்பும் களிமண்ணும் போல சிலர் அரசியலில் சிலர் சேர்ந்திருக்கிறார்களோ அதுபோலவே ஏஞ்சல் டிவியின் மூவர் கூட்டணியும் விளங்குகிறது; சாதுஜியும் சென்ட் செல்வகுமாரும் தாங்கள் சார்ந்துள்ள சமுதாயம் மற்றும் மாவட்டத்தின் அடிப்படையில் அம்மாவின் அனுதாபிகள் ஆவர்;மோகன் சி'யோ அம்மாவை அந்த காலத்திலிருந்தே யேசபேலாகவே பார்ப்பவர்;தற்போது யாருக்கோ கிச்சுகிச்சு மூட்டவே இவர்கள் கூட்டணி அமைத்திருக்கிறார்கள்.
இதனால் யாருக்கு லாபம் என்று பார்த்தால் ஏஞ்சல் டிவி-யினருக்கே லாபம்; ஏனெனில் தென்மாவட்டங்களில் மோகன் சி'க்கு இருக்கும் பெருவாரியான மக்களின் ஆதரவு ஏஞ்சல் டிவிக்கு தேவை; தென்மாவட்டத்துக்காரர்களையோ யாரும் அவ்வளவு எளிதில் ஏமாற்றமுடியாது என்பதால் ஏஞ்சல் டிவி-க்கு அங்கே வரவேற்பு இல்லை;அங்கே ஆசீர்வாதம் டிவியே முன்னணியில் இருக்கிறது;இதனை சமாளித்து முன்னேறவே ஏஞ்சல் டிவி மோகன்- சி'யை பிடித்துப்போட்டிருக்கிறது; இந்த கூட்டணியினால் மோகன் சி'க்கு சீக்கு பிடிக்காத குறைதான்;அவர் தன்னுடைய மரியாதையை இதனால் கெடுத்துக்கொண்டார்;இவரும் இந்த மோசடியாளர்களில் ஒருவரா என்று மக்கள் அதிர்ச்சியுடன் பார்க்கத் துவங்கிவிட்டார்கள்.
ஏனெனில் தென்மாவட்டத்துக்காரர்கள் புளி வித்தாலும் சரி உப்பு வித்தாலும் சரி அதில் உண்மை இருக்கும் உழைப்பு இருக்கும்;மோசடி செய்து பிழைக்கும் கீழ்த்தரமான எண்ணம் இருக்கவே இருக்காது;ஆனால் சிலர் தங்களைப் பிரதானப்படுத்திக்கொள்ள இந்த காலத்தில் எல்லா தகிடுதத்தங்களையும் செய்கிறார்கள்;இந்த கூட்டணி தேறவே தேறாது.ஏற்கனவே அழையா விருந்தாளியாக டிஜிஎஸ் அவர்களின் சவ ஊர்வலத்தில் புகுந்து அவருடைய அடியவர்களைக் கவர முயற்சித்தார்கள்;அது எடுபடாமல் போனதுடன் பால் தினகரனும் இவர்களைக் கண்டுக்கொள்ளவில்லை என்றவுடன் மரித்து பரலோகம் சென்று பிதாவின் அருகே முக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருந்த டிஜிஎஸ் அவர்களையே தள்ளி உட்காரச் சொல்லிவிட்டு அங்கே சாதுஜி போய் உட்கார்ந்துவிட்டதாக அறிவித்தார்கள்;இதனால் மக்களிடையே பெருங்குழப்பம் நிலவி வருகிறது;இதுபோதாதென்று மோகன் சி'யுடன் இவர்கள் அமைந்துள்ள புதிய கூட்டணியினால் மோகன் சி'யின் சுயரூபம் தெரியவந்திருக்கிறது;ஏனெனில் மோசடியாளர்களுடன் கூட்டணி போடுவோர் மீதும் அதே ஐயம் உண்டாவது இயல்பு;இந்த விவரங்களை நீங்கள் ஜாமக்காரன் இதழ் மூலம் இன்னும் விவரமாக வாசித்தறியலாம்.
// மோகன் சி லாசரஸ் வழக்கம் போல் மிகவும் அருமையாக பேசினார்.//
அவர் முதலிலிருந்தே அருமையாகத் தானே பேசிக்கொண்டிருக்கிறார்? அது அவருடைய பாணியாகும்;இவர்களெல்லாம் சினிமா நட்சத்திரங்களைப் பார்த்து காப்பியடித்து அவரவருக்கென்று ஒரு பாணியை வகுத்துக்கொண்டு செயல்படுகிறார்கள்;அந்த இமேஜுக்கு விரோதமாக இவர்கள் ஏதேனும் செய்தால் இவர்களுடைய கூடாரம் காலியாகிவிடும் என்பது அவர்களுக்கே தெரியும்;நாங்களும் காமராஜரிலிருந்து ஒவ்வொரு தலைவர்களையும் பார்த்துக்கொண்டு தானிருக்கிறோம்.
மோகன் சி'யின் இமேஜ் மொத்தமும் மோசமான வாழ்க்கை வாழ்ந்த நடிகை நக்மாவை மேடையேற்றிய போது பாதியும் அவர் பல்டியடித்தபோது மீதமும் கலைந்துபோனது;இனியும் அவரை நம்ப யாரும் தயாராக இல்லை;அவரைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஒரு வசனம் தான் ஞாபகம் வரும்;"சத்தமிடுகிற வெண்கலம் போலவும்..." என்பதாக;அதாவது உணர்ச்சியில்லாமல் உதட்டிலிருந்து மாத்திரம் பேசி நன்றாக நடிக்கிறார் என்பதாக.
// கடைசியில் இதற்காக ஜெபித்தார்கள்: //
ஏதாவதொரு வசனத்தை சம்பந்தமில்லாமல் சொல்லி அதனடிப்படையில் ஜெபிப்பதாகக் கூடுவது கிறித்தவர்கள் செய்யும் மற்றொரு அக்கிரமமாகும்;அதற்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஜெபக் குறிப்புகளே சாட்சி;செயல்படவேண்டிய நேரத்தில் ஜெபிப்பதும் ஜெபிக்கவேண்டிய நேரத்தில் செயல்படுவதுமே கிறித்தவர்கள் செய்யும் மற்றொரு மதியீனமான காரியமாகும்.
1. 234 தொகுதிகளிலிலும் தேவ சித்தப்படி ஆட்கள் elect ஆகவேண்டும்.
இந்த உலகமே பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது என்று வேதம் சொல்லும் போது அதிலிருந்து தேவனுக்கு சித்தமானவர்கள் எப்படிங்க தேர்ந்தெடுக்கப்பட முடியும்?
2. மக்கள் அனைவரும் ஓட்டுப் போட வேண்டும்.
ஆமா,மாவோயிஸ்டுகள் ஓட்டுப் போட வரமாட்டாங்க பரவாயில்லையா? பாட்டாளிகளுக்காகப் பாடுபடுவதாகச் சொல்லிக்கொள்ளும் கம்யூனிஸ்டுகளே ஆட்சி அதிகாரத்துக்காக சுரண்டல் பேர்வழிகளுடன் கூட்டணி அமைத்திருக்க ஏழைகள் வயிறோ பசித்திருக்க கொள்ளையில் பங்குகேட்கவும் தங்கள் வாரிசுகளை நட்சத்திரங்களாக்கவும் பெந்தெகொஸ்தே பெருச்சாளிகள் முதலாக வரிசையில் நிற்க நாங்கள் வரிசையில் நின்று ஓட்டுப்போடவேண்டுமா?
3. தேர்தலுக்காக செய்யப்படும் யாகம், பில்லி சூன்ய வல்லமைகள் முறியடிக்கப் பட வேண்டும்
உங்க தலையில் இடி விழ....கொஞ்சமாவது அறிவுடந்தான் சிந்திக்கிறார்களா? இவர்களே மந்திரவாதிகளுக்கு ஏஜெண்டாக மாறாதது ஒன்றே குறை;சூனியம் வைத்து தேர்தல் முடிவை மாற்றிவிடமுடியும் என்று தேவ மனுஷன் ஒப்புக்கொள்ளுவது போல இருக்கிறது.இவர்கள் மந்திரவாதம் பில்லிசூனியம் பேய் பிசாசு யாகம் குறித்தெல்லாம் மிக உயர்வான எண்ணம் கொடுத்து அதைக் குறித்து தவறாகக் கணித்துவைத்திருப்பதன் பலன் முழுவதும் சாத்தானுக்கே போய் சேருகிறது;வேதம் சொல்லும் பிசாசின் செயல்பாடு என்பது வேறு,நம்முடைய சமுதாயத்தில் பரவியிருக்கும் அதைக் குறித்த பயங்கள் வேறு;இதைக் குறித்து தனி கட்டுரையே எழுதலாம்;ஆனாலும் ஆவியைப் பெற்றுள்ளதாகக் கூறி வலம்வரும் ஊழியர்கள் தெரிந்தோ தெரியாமல் மந்திரவாதம் பில்லிசூனியம் போன்றவற்றை அங்கீகரிப்பதுபோலப் பேசுவது தேவநாமத்துக்கே இழுக்காகும்;எனவே இந்த வேடதாரிகள் இயேசுவையும் கூட ஒரு ஏவல்சக்தியைப் போலப் பயன்படுத்த நினைக்கிறார்கள்.
4. தேர்தல் அமைதியாக நடக்க வேண்டும்
தேர்தல் அமைதியாக எப்போது நடந்தது,உங்கள் ஊர்மட்டும் அமைதியா இருந்தா போதுமா,எவ்வளவு தன்னலம்..?கள்ளஓட்டு, ஆள்கடத்தல், ஓட்டு இயந்திரத்தை சேதப்படுத்துவது, கல்லெறிவது, கலவரம் செய்வது முதலாக தேர்தலுக்கே உரிய அனைத்து அக்கிரமங்களும் நடந்தே தீரும்;ஏனெனில் இது கர்த்தருடைய தேசம் அல்ல;எனவே இதிலிருந்து வெளியேறவே காத்திருக்கிறோம்;பரம்பரை பரம்பரையாக இங்கேயே இருந்து பார்லிமெண்ட்டில் சிலுவை கொடியேற்றபோவதாகவும் சட்டமன்றத்தில் பைபிள் வாசிக்கப்போவதாகவும் சொல்லிக்கொண்டிருப்போர் மாத்திரமே இதுபோன்ற ஜெபங்களைச் செய்துகொண்டிருப்பார்கள். இந்த சைக்கிள் கேப்பில் அங்கே கிறித்தவநாடு என்று சொல்லப்பட்ட அமெரிக்காவில் கீதையையே வாசித்துவிட்டார்கள் தெரியுமா? இப்படியெல்லாம் ஜெபித்தும் கலவரங்கள் நடந்தால் தேவன் ஜெபத்தை கேட்கவில்லையென்பீர்களா அல்லது ஓரளவு கேட்டார் என்பீர்களா அல்லது இவர்களுடைய ஆண்டவர் என்பவர் யாருமில்லை என்று ஆண்டவருடைய நாமம் தூஷிக்கப்படக் காரணமாக இருப்பீர்களா?
5. கர்த்தருக்கு சித்தமான அமைச்சர்கள், முதலமைச்சர் வர வேண்டும். மதுபான கடைகள் மூடப்பட வேண்டும்.
வரும் முதலமைச்சர் மதுபானக் கடைகளை மூடிவிட்டால் இலவச கிரைண்டர், மிக்ஸி, ஃபேன் எல்லாம் எப்படி கொடுப்பார்கள்? ஸ்பெக்ட்ரம் பணத்திலிருந்தா? டாஸ்மாக்கை துவங்கிவைத்த அம்மாவும் சரி,அதனைத் தொடர்ந்து லாபகரமாக நடத்த டார்கெட் வைத்து திட்டம் போட்டு நடத்திவரும் ஐயாவும் சரி உங்கள் ஜெபக்குறிப்பைக் கேட்டால் அவர்கள் பார்வையாலேயே உங்களை எரித்துவிடுவார்கள்;அவ்வளவு ஏன்,கிறிஸ்மஸ் அன்றும் பெரிய வெள்ளியன்றும் மதுபானக்கடைகளுக்கு விடுமுறைவிட கோரி ஜெபிக்கமாட்டீர்ளா? சாதாரண தியான மார்க்கத்தைக் கொடுத்த ஜைனர்களுக்கும், "ராமா" என்று உயிரைவிட்ட காந்திஜிக்கும் மதுபானக் கடைகள் மூடப்படுகிறதே..? ஏழைகளின் தாலியை அறுத்து இலவசங்களைச் சொல்லி ஓட்டு கேட்கும் பொறுக்கிகளுக்காக கிறித்தவன் ஜெபிக்கிறானாம்;உங்களுக்கெல்லாம் வெட்கமாக இல்லையா? அந்த நேரத்தில், "இயேசு மகராஜனே" பாட்டை போட்டாலாவது பால் வடியும் அந்த குழந்தையின் அழகு முகத்தைப் பார்த்து ஆறுதலடையலாம்.
6. 10 இரட்சிக்கப்பட்டவர்களாவது இந்த சட்ட சபையில் இருக்க வேண்டும்.
ஏன் சங்கீதம் (1) ஒன்றை வாசிக்கவா? இரட்சிக்கப்பட்டவனுக்கு அங்கே என்ன வேலை என்று கேட்கிறேன்;மோகனும் சாதுவும் தேர்தலில் நின்று பார்க்கட்டுமே? எவனாவது கேணையன், எங்கோ ஊழல் செய்து கட்டப்பஞ்சாயத்து செய்து சம்பாதித்த பணத்தை முதலீடாகப் போட்டு எம்மெல்லே (MLA) ஆகணும், அவரை உங்கள் மேடையிலேற்றி கனப்படுத்துவது போல நடித்து உங்களை கனப்படுத்திக்கொள்ளவேண்டும், அப்படித்தானே? இரட்சிக்கப்பட்டவர் எம்மெல்லே (MLA) ஆனாலும் அவர் போட்ட பணத்தை எடுக்கணுமே அதற்கு என்ன செய்வார்? மணல் கொள்ளை, நிலமோசடி இப்படி ஏதாவது செய்யணும்;அதிலிருந்து உங்களுக்கு ஒரு பங்கு கொடுத்தால் போதும் நீங்கள் அவரை இயேசுவின் நாமத்தில் மந்திரித்துவிடுவீர்கள்,அப்படித்தானே? ஆந்திராவில் இப்படியே ஜெட்சண் ஆபிரகாம் தான் சொல்லியே முதலமைச்சர் வந்ததாக பந்தா பண்ணினார்;என்ன ஆனது,தேவசித்தப்படி நியமிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட அவர் ஹெலிகாப்டர் விபத்தில் கொல்லப்பட்டார் அல்லவா? அதைப் பார்த்து கூடவா உங்களுக்கெல்லாம் அறிவு வரவில்லை?
// கேட்டதில் சில விஷயங்கள்:மோகன் சி லாசரஸ் சொன்னது: 10 வருடங்கள் முன்பு ஆண்டவர் தமிழ் நாட்டிற்காக அதிகம் ஜெபிக்க வேண்டும், தமிழ் நாட்டில் அதிகம் ஊழியம் செய்ய வேண்டும் என்று சொன்னாராம். ஏன் என்று கேட்ட போது, தோமாவை ஆண்டவர் ஞாபகப்படுத்தினாராம். தமிழ்நாடு ஒரு ஆவிக்குரிய ரீதியில் ஆசீர்வதிக்கப்பட்ட மாநிலம். இந்தியாவின் இரட்சிப்புக்கு தமிழ் நாடு முக்கிய பங்காற்றும், பங்காற்றிக் கொண்டிருக்கிறது. //
ஆசீர்வாதமான தமிழ்நாடு 2010 திட்டம் படுதோல்வி என்பதை அவர் ஒப்புக்கொள்வாரா? இதுபோன்ற திட்டங்கள் உலகப்பிரகாரமானது என்பதை அவர் உணர்ந்தாரோ இல்லையோ தெரியவில்லை;இன்னும் தோமாவைப் போல யார் இன்றைக்கு ஊழியம் செய்கிறார்கள்? தோமாவைக் குறித்த கதைகளே, கட்டுக்கதை என எதிரிகள் மறுபுறம் பிரச்சாரம் செய்கிறார்களே? குறைந்தது ஏழு தோமா வந்தனராம்;அவர்களில் எந்த தோமாவைக் குறித்து ஆண்டவர் இவருக்கு ஞாபகப்படுத்தினார்;இன்றைய கிறித்தவர்கள் தோமாவின் ஊழியத்தை அடியொற்றி பணியாற்றுகிறார்களா? அப்படி செய்திருந்தால் இந்தியா முழுவதுமே இன்று கிறித்தவ நாடாகியிருக்க வேண்டுமே? தமிழ்நாடு எப்படிப்பட்ட ஆசீர்வாத நிலையிலிருக்கிறது என்பதை நகரவாசிகளின் வாழ்க்கைத் தரத்தை வைத்தும் ஊழியர்களின் படாடோபங்களை வைத்தும் முடிவு செய்யமுடியாது என்பதை அவர் அறியவேண்டும்.
// ஒரு ஊழியக்காரர் தரிசனத்தில், உயிர்த்தெழுந்தபின் ஆண்டவர் இரண்டாம் முறை சீஷர்களை சந்திக்க செல்வதைக் கண்டு ஏன் ஆண்டவரே திரும்பவும் செல்கிறீர் என்று கேட்டதற்கு, நான் இந்தியாவை நேசிக்கிறேன் என்று ஆண்டவர் சொன்னாராம். ஒரு நல்ல ஜெபிக்கிற கிறிஸ்தவர் தேர்தலில் நின்றால், எந்த கட்சியை சார்ந்தவராக இருந்தாலும், அவருக்கு ஓட்டுப் போடுங்கள் என்று சொன்னார். //
ஓட்டுப் போடுவதன் மூலம் தேவசித்தத்தை செய்யப்போகிறோமா? ஆண்டவர் இந்தியாவை மட்டும் அதிகமாக நேசிக்கிறார் என்பதும் அல்லது பாகிஸ்தானை நேசிக்கவில்லை என்பதும் தவறான தரிசனமாகும்;ஒரு நல்ல ஜெபிக்கிற கிறித்தவர் ஏன் தேர்தலில் நிற்கவேண்டும் என்று கொஞ்சம் சொல்லுங்களேன்;அவர் தான், என்னுடைய இராஜ்யம் இவ்வுலகத்துக்குரியதல்ல என்று சொல்லிவிட்டாரே? வேதத்தில் எந்த புதிய ஏற்பாட்டு அப்போஸ்தலன் அரசாங்கப்பதவிகளில் இருந்தார் என்று கொஞ்சம் சொல்லுவீர்களா? நீங்களெல்லாம் வரி ஏய்ப்பு செய்யவும் அரசாங்கத்தை ஏமாற்றவும் ஊரை அடித்து உலையில் போடவுமே எல்லோருக்கும் நண்பனாக இருக்க முயற்சிக்கிறீர்கள்;இதையும் அதையும் ஆண்டவர் பார்த்துக்கொண்டே இருக்கிறார்;உங்கள் நிதி நிர்வாகத்தைக் குறித்த வெளிப்படையான ஒரு வெள்ளை அறிக்கையை இதுவரை சமர்ப்பித்திருக்கிறீர்களா? உங்கள் ஆடிட்டரைக் கூப்பிட்டு கேட்டால் அனைத்து வண்டவாளங்களும் வெளியே வரும்.
// கர்நாடகாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான் ஒரு கட்சியின் சார்பில் ஒரு நல்ல கிறிஸ்தவ்ர் நின்றாராம். அவர் சொன்னாராம் - கிறிஸ்தவர்களுக்கு எதிராக அவர்கள் பேசினால் நான் கேள்வி கேட்பேன் அல்லவா. நான் இங்கு இருப்பது நல்லதுதான் என்று. இது நல்ல logic தான். //
அந்த பக்தி நிறைந்த வைராக்கியமான யோக்கியமான கிறித்தவர் தேர்தலுக்காகப் போட்டியிட்ட ஊரில் வெற்றியை நிர்ணயிக்கும் அளவுக்கு அதிகமான கிறித்தவர்கள் இருந்திருந்தால் மட்டுமே அவருக்கு சீட்டு கொடுக்கப்பட்டிருக்கும்;ஓநாய் கூட்டத்தில் ஆட்டுக்குட்டிக்கு என்ன வேலை? ஓஹோ இயேசுநாதரே அனுப்பியிருப்பாரோ? போங்கய்யா,ச்சும்மா சிரிப்பு காட்டாதீங்க..!
// யாரிடமும் பணம் வாங்காதீர்கள் என்ற நல்ல அறிவுரை தந்தார் //
ஆமாம், பிஜேபி தலைவர் கூட இதே ஆலோசனையைக் கொடுத்தார்;ஏனெனில் கொடுப்பதற்கு அவரிடம் பணமில்லையாம்;கிறித்தவர்கள் பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடக்கூடியவர்கள் என்பது போலல்லவா இது இருக்கிறது? இது கிறித்தவர்களுக்கு மிகப் பெரிய அவமானம்;கொலைக்காரர்களையும் கொள்ளைக்காரர்களையும் அருகில் வைத்துக்கொண்டு இயேசுவுக்கு ஊழியம் செய்வதாகச் சொல்லி ஊரை ஏமாற்றும் நீங்கள் ஒரு ஏழை, ஒரு ஓட்டுக்காக நூறு இருநூறோ வாங்குவதோ கூட பொறுக்கவில்லையா? உங்கள் ஊழியங்களுக்கு லஞ்சப்பணங்கள் வருவதேயில்லை என்று உறுதிகூறுவீர்களா? அல்லது இதுவரை உங்கள் முறைகேடுகளுக்காக யாருக்கும் பெட்டியைத் தள்ளியதே இல்லை என்பதை மனசாட்சியுடன் சொல்லமுடியுமா? நாய் வித்த காசு குரைக்காது என்ற கொள்கையின்படி காணிக்கை என்ற பெயரில் யார் துட்டு கொடுத்தாலும் வாங்கிப்போட்டுக் கொண்டு தேவாலய பீடங்களை உங்கள் வாந்தியினாலும் அருவருப்பினாலும் நிரப்பி வருகிறீர்களே?
// இலங்கை பாராளுமன்றத்தில் ஒரு ஏஜி சபை பாஸ்டர் மகன் MP யாக இருக்கிறாராம். சமீபத்தில் மோகன் சி லாசரஸ் இலங்கை சென்ற போது அவர் கூட்டத்திற்கு வந்திருக்கிறார். அவர் பாராளுமன்றத்தில் பேசும் போது, மற்றவர்கள் கிண்டலாக அல்லேலுயா, அல்லேலுயா என்று சொல்வார்களாம்!! பாராளுமன்றத்தில் அல்லேலுயா சத்தம் கேட்பது நல்லதுதான் என்று இவர் சொன்னாராம்.//
அப்படியானால் இலங்கையில் இலட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதில் ஏஜி சபைக்கும் தொடர்பு இருக்கிறதா என்ன? பாபிலோனில் எப்படி ஐயா எருசலேமின் பாடல்கள் ஒலிக்கும்? ஏன் நீங்களெல்லாம் சங்கீதம்.137- ஐ வாசித்ததில்லையா?
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
//அவர் பாராளுமன்றத்தில் பேசும் போது, மற்றவர்கள் கிண்டலாக அல்லேலுயா, அல்லேலுயா என்று சொல்வார்களாம்!! பாராளுமன்றத்தில் அல்லேலுயா சத்தம் கேட்பது நல்லதுதான் என்று இவர் சொன்னாராம்.//
எனக்கு என்னமோ உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பயாக என்ற வசனம் தான் ஞாபகம் வந்தது சகோ. மோகன் C க்கு அது ஞாபகம் வராதது அதிசயமே!
அதெல்லாம் ஒரு வகையான ஆண்டவர் மேலுள்ள அன்பு!
குற்றம் கண்டு பிடிக்கும் மனப்பான்மையிலேயே இருப்பவர்களுக்கு இது புரியாது!
//அவர் பாராளுமன்றத்தில் பேசும் போது, மற்றவர்கள் கிண்டலாக அல்லேலுயா, அல்லேலுயா என்று சொல்வார்களாம்!! பாராளுமன்றத்தில் அல்லேலுயா சத்தம் கேட்பது நல்லதுதான் என்று இவர் சொன்னாராம்.//
எனக்கு என்னமோ உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பயாக என்ற வசனம் தான் ஞாபகம் வந்தது சகோ. மோகன் C க்கு அது ஞாபகம் வராதது அதிசயமே!
அதாவது, நேற்று (27.3.11) ஏஞ்சல் டிவியில் எலக்ஷனுக்காக ஒரு சிறப்பு நேரலை நிகழ்ச்சி நடத்தினார்கள். அதில் மோகன் சி லாசரஸ், சாது சுந்தர் செல்வராஜ், வின்சென்ட் செல்வகுமார் கலந்து கொண்டு கலந்துரையாடி பின்னர் ஜெபித்தார்கள். இந்த ஆவிக்குரிய கூட்டணி நன்றாக இருக்கிறது! மற்றபடி திமுக வா, அதிமுக வா என்ற குழப்பம் எனக்கு இன்னும் தெளிவாகவில்லை!
மோகன் சி லாசரஸ் வழக்கம் போல் மிகவும் அருமையாக பேசினார்.
கடைசியில் இதற்காக ஜெபித்தார்கள்:
1. 234 தொகுதிகளிலிலும் தேவ சித்தப்படி ஆட்கள் elect ஆக வேண்டும்.
2. மக்கள் அனைவரும் ஓட்டுப் போட வேண்டும்.
3. தேர்தலுக்காக செய்யப்படும் யாகம், பில்லி சூன்ய வல்லமைகள் முறியடிக்கப் பட வேண்டும்
4. தேர்தல் அமைதியாக நடக்க வேண்டும்
5. கர்த்தருக்கு சித்தமான அமைச்சர்கள், முதலமைச்சர் வர வேண்டும். மதுபான கடைகள் மூடப் பட வேண்டும்.
6. 10 இரட்சிக்கப்பட்டவர்களாவது இந்த சட்ட சபையில் இருக்க வேண்டும்.
கேட்டதில் சில விஷயங்கள்:
மோகன் சி லாசரஸ் சொன்னது: 10 வருடங்கள் முன்பு ஆண்டவர் தமிழ் நாட்டிற்காக அதிகம் ஜெபிக்க வேண்டும், தமிழ் நாட்டில் அதிகம் ஊழியம் செய்ய வேண்டும் என்று சொன்னாராம். ஏன் என்று கேட்ட போது, தோமாவை ஆண்டவர் ஞாபகப்படுத்தினாராம். தமிழ்நாடு ஒரு ஆவிக்குரிய ரீதியில் ஆசீர்வதிக்கப்பட்ட மாநிலம். இந்தியாவின் இரட்சிப்புக்கு தமிழ் நாடு முக்கிய பங்காற்றும், பங்காற்றிக் கொண்டிருக்கிறது.
ஒரு ஊழியக்காரர் தரிசனத்தில், உயிர்த்தெழுந்தபின் ஆண்டவர் இரண்டாம் முறை சீஷர்களை சந்திக்க செல்வதைக் கண்டு ஏன் ஆண்டவரே திரும்பவும் செல்கிறீர் என்று கேட்டதற்கு, நான் இந்தியாவை நேசிக்கிறேன் என்று ஆண்டவர் சொன்னாராம். ஒரு நல்ல ஜெபிக்கிற கிறிஸ்தவர் தேர்தலில் நின்றால், எந்த கட்சியை சார்ந்தவராக இருந்தாலும், அவருக்கு ஓட்டுப் போடுங்கள் என்று சொன்னார்.
கர்நாடகாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான் ஒரு கட்சியின் சார்பில் ஒரு நல்ல கிறிஸ்தவ்ர் நின்றாராம். அவர் சொன்னாராம் - கிறிஸ்தவர்களுக்கு எதிராக அவர்கள் பேசினால் நான் கேள்வி கேட்பேன் அல்லவா. நான் இங்கு இருப்பது நல்லதுதான் என்று. இது நல்ல logic தான்.
யாரிடமும் பணம் வாங்காதீர்கள் என்ற நல்ல அறிவுரை தந்தார்
இலங்கை பாராளுமன்றத்தில் ஒரு ஏஜி சபை பாஸ்டர் மகன் MP யாக இருக்கிறாராம். சமீபத்தில் மோகன் சி லாசரஸ் இலங்கை சென்ற போது அவர் கூட்டத்திற்கு வந்திருக்கிறார். அவர் பாராளுமன்றத்தில் பேசும் போது, மற்றவர்கள் கிண்டலாக அல்லேலுயா, அல்லேலுயா என்று சொல்வார்களாம்!! பாராளுமன்றத்தில் அல்லேலுயா சத்தம் கேட்பது நல்லதுதான் என்று இவர் சொன்னாராம்.