Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மூவர் கூட்டணிக்கே என் ஓட்டு!


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
மூவர் கூட்டணிக்கே என் ஓட்டு!
Permalink  
 


Bro Chillsam: இதனால் நீங்களே சாது சம்பந்தமான அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் பதில் சொல்லவேண்டிய கட்டாயத்துக்கு உங்களை நீங்களே உள்ளாக்கிக் கொண்டுள்ளீர்கள்;

Golda: மிக்க மகிழ்ச்சி அன்பு சகோதரரே! முயன்றவரை முற்சிக்கிறேன். ஊழியக்காரர்கள் மேல் எறியப்படும் கற்களைத் தடுப்பதும் ஒரு ஊழியமே!

மோகன் சி லாசரஸ் சொன்ன ஒரு விஷயம் ஞாபகத்திற்கு வருகிறது. ஒரு சமயம் என்ன செய்தாலும் பொன்னாய் துலங்கும் ஒரு கிறிஸ்தவ தொழிலதிபரை பார்த்து ஆச்சர்யப்பட்டு, இவர் ஆண்ட்வரிடம் கேட்டாராம் - ஏன் ஆண்டவரே இவருக்கு மட்டும் என்ன செய்தாலும் இப்படி ஒரு ஆசீர்வாதம் என்று. ஆண்டவர் சொன்னாராம். என்னுடைய ஊழியக்காரன் ரேக்லேண்டை(Ragland) ஒரு சிலர் கல்லெறிந்து துன்பப்படுத்தியபோது, இவருடைய தாத்தா அப்படி செய்பவர்களை தடுத்து ஊழியக்காரனை பாதுகாத்ததின் பலன் தான் இது என்றாராம். Ragland ஒரு வெள்ளைக்கார மிஷினரி. தொப்பியில் கூழ் வாங்கி குடித்து இந்தப் பக்கத்தில் ஊழியம் செய்தவர்.

Bro Chillsam : கற்பனையான ஒரு குற்றச்சாட்டை பிரபலமான ஒருவர் மீது சாட்டவேண்டும் என்ற அவசியமோ உள்நோக்கமோ தீயஎண்ணமோ எனக்குக் கிடையாது என்பதை தாங்கள் முதலில் அறியவேண்டும்;

Golda :உள்நோக்கம் இல்லை என்றால் மகிழ்ச்சியே. என்னைப் போல் உண்மையை உண்மையாய் முகதாட்சண்யமில்லாமல் பேசி விடுவதுதான் எப்போதும் நல்லது!

Bro Chillsam : என்னால் விவரமாக அனைத்தையும் தட்டச்சு செய்து பதிக்கமுடியவில்லையே தவிர அவர்களுடைய அனைத்து சூழ்ச்சிகளையும் அறிந்தவனாகவும் முழுவதையும் வெளிப்படுத்த முடியாத நிலையிலும் இருக்கிறேன்;என்னைப் போலவே பல சகோதரர்கள் நாகரீகம் கருதியும் கிறித்தவத்தை கவனித்துக்கொண்டிருக்கும் புறவினத்தாரின் முன்பான சாட்சியை கருத்தில் கொண்டும் சில தனிப்பட்ட அசிங்கங்களை வெளியிடமுடியாத நிலையிலிருக்கிறோம்.

Golda :தவறான உபதேசம் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறோம். தனிப்பட்ட அசிங்கத்தை அல்லவே!

பிசாசு பொய்யனும், பொய்யர்களுக்கெல்லாம் தகப்பனாய் இருக்கிறான். அவன் ஆட்களை ஏற்படுத்தி/தூண்டி விட்டு பெயரைக் கெடுக்கத்தான் பார்ப்பான். இயேசு கிறிஸ்துவுக்கும் அப்படித்தான் அன்றும், ஏன் இன்றும் கூட நடக்கிறது. நீங்க நேரடியாக சம்பந்தப்பட்டிருந்தாலொழிய பிற விஷயங்களை கிசுகிசு வாகப் பாவித்து தள்ளி விடுவது தான் நல்லது.

Bro Chillsam : சாதுஜி பிதா குமாரன் பரிசுத்தாவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெறுவதை நம்புவதற்கும் அதை மாத்திரமே சத்தியமாக எடுத்து போதிப்பதற்கும் அதிக வித்தியாசமுண்டு; சாதுஜியிடம் ஒத்துப்போகும் தன்மை அதிகம் இருப்பதும் ஆனாலும் அதனூடாக தனக்கென்று ஒரு கூட்டம் சேரும்வரை பொறுத்திருக்கும் தந்திரம் இருப்பதாகவே என்னைப் போன்றவர்கள் உணருகிறோம்; எப்படியெனில் சற்றும் சம்பந்தமில்லாமல் ஞானஸ்நானம் அவசியம் தானா என்றும் முழுக்கு ஞானஸ்நானம் தான் பெற்றாக வேண்டும் என்பது என்ன கட்டாயம் என்றும் பேசிவருகிறார்; இப்படியே திருவிருந்து உட்பட அனைத்து மூல உபதேசங்களுக்கு விரோதமாகப் பேசி வருகிறார்; இதுபோன்ற முரண்பாடான கருத்துக்கள் அவரை வேறு சில காரணங்களுக்காக அவரை மனதார நேசிக்கும் நண்பர்களை வேகமாக அவரை விட்டு பிரித்து வருகிறது.

Golda :ஞானஸ்நானம் முக்கியம், மிக அவசியம் என்பது உங்கள் கருத்தானால், ஏன் நீங்க சகோ கொல்வினை ஞானஸ்நானம் எடுக்கும்படி சொல்லக்கூடாது? சொல்லாதபட்சத்தில் நீங்களும் சாதுவும் கொள்கையில் ஒன்றாகிவிடுகிறீர்கள் அல்லவா.

ஞானஸ்நானம் அவசியமில்லை என்று சாது ஒருபோதும் சொன்னதில்லை. முழுக்கு ஞானஸ்நானம் தான் பெற்றாக வேண்டும் என்பது என்ன கட்டாயம் என்றும் அவர் ஒருபோதும் பேசியதில்லை. இது உங்கள் கற்பனையே.

Bro Chillsam : எந்த சூழ்நிலையிலும் மாற்றப்பட முடியாததே மூல உபதேசம் எனப்படுகிறது;அது வேதவசனத்தினால் முத்திரையிடப்பட்டிருக்கிறது; அதனை ஒவ்வொருவரும் சூழ் நிலைக்கேற்ற வண்ணமாக திரித்தும் புரட்டியும் பேசி நீர்த்துப்போகச்செய்ய முயற்சித்தால் புரட்சிகரமாகப் பேசுகிறவர் என்ற பெயர் மக்கள் மத்தியில் கிடைத்தாலும் சத்தியத்தைப் புரட்டிய பாவத்திலிருந்து தப்பவே முடியாது.

Golda :அவர் நடத்தும்(வடக்கில்) வாலிபர் முகாமில் இரட்சிக்கப்பட்டவர்களுக்கு, ஞானஸ்நானம் எடுக்காவிட்டாலும் இராப்போஜனம் கொடுத்ததாக சொல்லியிருக்கிறார். அது தவறாக எனக்குத் தெரியவில்லை.

Bro Chillsam : ஏனெனில் இரகசிய வருகையைக் குறித்து அவர்கள் நம்புகிறார்கள் என்பது அது நடந்துவிட்டது என்ற நிலையில் தான் என்பதை நீங்களே மற்றொரு திரியில் குறிப்பிடவில்லையா?

Golda :இல்லை. தலை சுத்துது. எப்படி இப்படி நான் சொன்னதாக புரிந்து கொண்டீர்கள்??

Bro Chillsam : உபத்திரக்காலத்துக்கு முன்பாகவே இரகசிய வருகை என்பது தவறான உபதேசம் என்று நீங்கள் சொல்லவில்லையா?

Golda :ஆமாம். அதைத்தானே (pre tribulation rapture) நீங்க, ஏஞ்சல் டிவி உட்பட 98 சதவீத கிறிஸ்தவர்கள் நம்புகிறீர்கள்??

Bro Chillsam : இரகசிய வருகைக்கு சபையை ஆயத்தப்படுத்தவே ஆவிக்குரிய சபையார் உபதேசிக்கிறார்கள்;

Golda :ஏஞ்சல் டிவியும் அதைதான் செய்கிறது. அவர்களும் உங்களைப் போலவே pre tribulation rapture ஐ மையப்படுத்தித்தான் பேசுகிறார்கள்.

Bro Chillsam : ஆனால் இதற்கு முரணாக ஏஞ்சல் டிவியின் சாதுஜீ டீம் பகிரங்க வருகைக்காகவே சபையாரை எச்சரித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது தாங்கள் அறியாததா?

Golda :வருகை என்றால் இரண்டையும் (rapture and second coming) மற்றும் அந்திக்கிறிஸ்துவையும், வெளி விசேஷத்தில் உள்ள இன்ன பிற காரியங்களையும் பேசித்தான் ஆக வேண்டும்.

Bro Chillsam : இன்று கூட "நெஞ்சினிலே" தாங்கள் குறிப்பிட்ட யூதர்களின் யூபிலியைக் குறித்த கருத்தை சொல்லுகிறார்; அதற்கு ஆதரவாக அவர் ஒரு வேதவசனத்தைக் கூட குறிப்பிடாததுடன் ....

Golda :அது ஒரு தகவல் தான் , வசனம் என்று யாரும் சொல்லவில்லையே.

Bro Chillsam : நெவில் ஜாண்சனிடம் ஆண்டவர் சொன்னாராம், இனி ஒரு யூபிலியை யூதர்கள் காண்பதில்லை என்று; கடைசி யூபிலி எப்போது என்று பார்த்தால் கிழக்கு மேற்கு எருசலேம் இணைந்த 1967 ம் வருடமாம்; அதிலிருந்து 50 வருடம் 2017 அது கடந்து அடுத்த யூபிலி 2067 ல் வருவதற்குள் இந்த டைம் லைனில் ஏதோ ஒரு வருடத்தில் ஆண்டவருடைய பகிரங்க வருகை இருக்கும் என்று கணிக்கிறார்; இதையெல்லாம் கணிப்பதற்கு இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்?

Golda :காலத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்று ஆண்டவர் சொல்லியிருக்கிறார். அவர் அறிய முயற்ச்சிக்கிறார். வெளிப்பாடு பெறுகிறார். ஏற்றுக் கொள்வதும் கொள்ளாததும் அவரவர் விருப்பம்.

Bro Chillsam : வேதம் யூதர்களுடைய வருடக் கணக்கீடு மற்றும் நேரக் கணக்கின்படி தரப்பட்டுள்ளது என்பதையும் அந்த கணக்கின் படி தற்போது 5770 வருடம் நடந்துகொண்டிருப்பது யாருக்காவது தெரியுமா? அதுவே வேத நாயகனால் அங்கீகரிக்கப்பட்ட வருடக்கணக்கு என்பதையாகிலும் அறிவார்களா? ஆங்கில வருடக் கணக்கீட்டு முறையின்படியே காரியங்கள் சம்பவித்துக்கொண்டிருப்பதாக தற்கால போதகர்கள் நினைத்துக்கொண்டிருப்பது அவர்களின் அறியாமையையே காட்டுகிறது.

Golda : http://heavenawaits.wordpress.com/the-hebrew-timeline-for-the-messianic-kingdom/

Bro Chillsam : இவர்களுடைய உபதேசத்தை ஏற்றுக்கொண்டு ஏழாம் சபையின் காலமான தற்காலத்தில் ஏழாம் தூதனின் சத்தமான புறசாதிகளின் தீர்க்கதரிசியினால் வெளிப்படுத்தப்பட்டவைகளை விசுவாசிப்பதே இரகசிய வருகையில் காணப்படுவது என்றும் மத்திய ஆகாய அனுபவம் என்றும் ப்ரன்ஹாமினால் போதிக்கப்பட்டு சாதுஜி டீமினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அந்த உபதேசமே முன்னெடுத்துச் செல்லப்படுகிறது என்பதே மறுக்கமுடியாத உண்மையாகும்.

Golda :அப்படி ஏஞ்சல் டீவியில் யாரும் போதிக்கவில்லை. இது உங்கள் கற்பனையாகும் அல்லது கனவாகும்

Bro Chillsam : இதோ இயன்ற மட்டும் எடுத்து சொல்லியிருக்கிறேன்;எல்லாவற்றையும் எடுத்துச்சொல்ல அவகாசம் போதாது; ஆனாலும் ஏவாளுக்கு சாத்தான் செய்தது

Golda :இது தவறான உபதேசம் தான்.

நோவாவுக்கு அவன் மகன் செய்தது என்ன -

Golda :இதில் உண்மை இருக்கலாம் என்று பலரும் சொல்கிறார்களே!

--

Although denying he was a believer in the "oneness" doctrine, Branham had his own form of "oneness" teaching that defined God as one person who manifested Himself as three different "attributes": the Father, the Son, and the Holy Spirit, rather than three Persons comprising one Godhead. He believed the doctrine of the Trinity was the "Babylonian Foundation" of the denominations, inherited from Roman Catholicism

--

ஆனால் ஏஞ்சல் டிவியில் போதிப்பவர்கள் எல்லாம் திருத்துவ தேவனைத்தான் நம்புகிறார்கள் போதிக்கிறார்கள் ஆராதிக்கிறார்கள்.

Bro Chillsam : மிகவும் அழகு...கொள்ளை அழகு..! தாங்கள் மேலே குறிப்பிட்டுள்ள ப்ரன் ஹாமின் கொள்கையுடன் சாதுவின் கொள்கையை ஒப்பிடுவோமா...இதோ...

// In one God, eternally existing in three persons - Father, Son and the Holy Spirit. //

http://www.jesusministries.org/aboutus_4.php

இரண்டுக்கும் பெரிய வித்தியாசமிருப்பதாக என்னுடைய குருவி மூளைக்கு எட்டவில்லை;

Golda : அவர் attributes என்கிறார். இவர் three persons என்று சரியா சொல்றார்ல.

ஒரு கருத்துக்கணிப்பு இரட்சிக்கப்பட்டவர்கள் மத்தியில் எடுங்க சில்சாம் அவர்களே!

கேட்க வேண்டிய கேள்விகள்

1. கிறிஸ்தவர்களுக்கு ஒரு தேவனா, மூணு தேவனா? - மூன்று என்றால் தேவ தூஷணமாகிவிடும் என்று, எல்லோரும் ஒன்று என்றுதான் சொல்வார்கள். அது சரியான் பதில்தான்

2. பிதாதான் இயேசு கிறிஸ்துவாய் வெளிப்பட்டாரா? - ஆமாம் என்றுதான் பலரும் சொல்வார்கள். இது அறியாமை. ஆண்டவர் மன்னிப்பார் என்றுதான் நினைக்கிறேன்.

திருத்துவம் மனித மூளைக்கு கொஞ்சம் எட்டாத விஷயம்தான். அல்லது விளக்க முடியாத விஷயம். ஒருத்தர் தான்,ஆனால் மூவராயிருகிறார்கள் என்பது logic இடிக்கும். ஆனால் அதுதான் உண்மை!

Bro Chillsam : இயேசு ஸ்வாமி என்பதும் இறைவன் இயேசு என்பதும் எம்பெருமான் இயேசு என்பதும் இவர்களுடைய தந்திரமான கருத்து பிறழ்ந்த ஊடுறுவும் கருத்தாகும்;இதற்கெல்லாம் வேதத்தில் எந்த ஆதாரமும் இல்லை.இந்த போதகம் ஒன்லி ஜீஸஸ் எனும் கூட்டத்தாரின் கொள்கை என்று பொதுவாக நம்பப்படுகிறது.

Golda :இயேசு கிறிஸ்து தொழத்தக்க தெய்வம் என்று அவர்கள் பார்ப்பதைத்தான் அந்த அடைமொழிகள் காட்டுகிறது.மற்றபடி வேறெந்த கொள்கையும் அங்கே இல்ல. பயப்படாதீங்க!

Bro Chillsam : அவர்களை கண்மூடித்தனமாகப் பின்பற்றும் உங்களைப் போன்றவர்களுக்கு என்னைப் போன்றவர்களெல்லாம் கழைக்கூத்தாடிகளைக் காட்டிலும் கேவலமானவர்கள்; ஏனென்றால் அவர்கள் மிக உயரத்தில் இருக்கிறார்கள்; நாங்களோ தெருவில் நின்று கூவிக்கொண்டிருக்கிறோம் அல்லவா?

Golda :எங்க இருந்தால் என்ன? ஆண்டவர் சொன்ன இடத்தில் இருக்கிறோமா, அவர் சித்தம் செய்கிறோமா என்பதுதான் முக்கியம்.

Bro Chillsam : சாது சுந்தர்சிங் தன்னுடைய தனிப்பட்ட அனுபவங்களைப் போதனைகளாக்கவில்லை;

Golda :அனுபவங்கள் அனுபவங்களே! சாது சுந்தர் சிங்கின் புத்தகம் படித்து அவருடைய அனுபவங்களிலிருந்து நிறைய தெரிந்து கொண்டிருக்கிறேன்!

Bro Chillsam : தினகரனுடைய கருத்துக்களும் தனிப்பட்ட அனுபவங்களே;அவரைக் கெடுத்ததும் ப்ரன்ஹாமின் உபதேசமே;

Golda :தினகரனுமா??? அடப் பாவிகளா! (உங்களையல்ல... பொதுவாக!)

Bro Chillsam : இந்த முரண்பாடுகள் இரண்டு காரியங்களை தெரிவிக்கிறது; ஒன்று , தரிசனங்கள் தனிப்பட்ட அனுபவங்கள் அது ஒன்று போலிருக்கவேண்டிய அவசியம் இல்லை; அது மனதில் உருவகப்படுத்திக்கொண்ட ஒரு குறிப்பிட்ட கருத்தினால் கூட அமையலாம்; மற்றது அக்மார்க் ரீல் சுத்துகிறார்கள் என்பதே.

Golda :இந்தக் கருத்தை ஒத்துக் கொள்கிறேன். உண்மை என்று ஒரு சாராரும், ரீல் என்று ஒரு சாராரும் நம்புகிறார்கள்!

Bro Chillsam : இவர்கள் என்ன‌ சாது சுந்தர்சிங்கைப் போல எளிமையான வாழ்க்கையா வாழுகிறார்கள்?

Golda :எளிமை என்றால் என்ன? காசுள்ளவர்கள், பிரபலமானவர்கள் எளிமையாய் இருக்க முடியாதா? கார் இருப்பது தவறா?

Bro Chillsam : அனைத்து சுகபோகத்துடன் ஆள் படை பல பிரதானிகளுடன் சமுதாயத்தின் புகழ்மிக்கவர்கள் என்ற அதிகார ஆணவத்துடன் அல்லவா வலம் வருகிறார்கள்?

Golda :அப்படியா???

Bro Chillsam : பெண்களுக்கு பொதுவாகவே கல்யாணம் ஆகாதவர்கள் மீது ஒருவித அனுதாபம் ஏற்படும்;

Golda :திருஷ்டிதான் சுத்தி போட வேண்டும். இப்படி கண்டு பிடிப்புத் திலகமாக இருக்கிறீர்கள்!

Bro Chillsam : எல்லாம் சரி... எது சரி,என்று கேட்கிறீர்களா? எனக்குத் தெரியாது...ஆனால் எது தவறு என்பது மட்டும் ஆதாரப்பூர்வமாகத் தெரியும்;அதுவும் திறமை தானே..? ஒரு காரியத்தை உணருகிறேன், நீங்கள் மிகவும் தந்திரமாக என்னிடமிருந்து முழு விஷயத்தையும் கறக்க முயற்சிக்கிறீர்கள்;அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுவிட்டீர்கள்;எப்படியோ கண்திறந்தால் சரி..!

Golda :ஆமாம். எப்படியோ கண்திறந்தால் சரிதான் smile.gif



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 

//இவர்களுடைய சானலில் கதைக்கும் ஸ்டீவன் ப்ரூக்ஸ் எனும் இளம் போதகர் ஒருமுறை சொன்னது, நாம் கிறித்துவுக்கும் மேலானவர்கள்; ஏனெனில் அவரைக் காட்டிலும் நாம் பெரிதானவைகளைச்செய்வோம் என்று அவரே சொல்லியிருக்கிறாரே எனவே நாமும் கிறிஸ்துக்களே என்றார்; //

நிறைய பெந்தெகொஸ்தே உழியர்கள் இப்படி உளறிக்கொண்டு திரிவதை நினைத்து வருந்தியது உண்டு. இந்த தளத்திற்கு வரும் யாராவது இந்த கருத்தை நம்பினால் மீண்டும் யோவான் 13 மற்றும் 14 அதிகாரங்களை வாசித்தால் அவர் பரிசுத்த ஆவியானவர் துணையோடு சீஷர்கள் செயப்போகும் உழியத்தை குறித்து பேசுகிறார் என்று அறிந்துகொள்ளலாம். இயேசு இந்த உலகத்தில் வாழ்ந்த காலத்தில் சுமார்  120 மைல்களுக்கு மேலான துரத்திற்கு மேலே சென்று சுவிசேஷம் அறிவிக்கவில்லை , சுமார் 120 பேருக்கு மட்டுமே விசுவாசித்தார்கள். ஆனால் பவுலும், பேதுருவும் இயேசு வை விட நிறைய பேரை சந்தித்தார்கள், நிறைய துரம் சென்றார்கள் (Not sure about Peter Though) . ஆனாலும் இயேசுவுக்கும் பவுல் மற்றும் பேதுரு போன்றோருக்கும் மலைக்கும், துசிக்கும் உள்ள வித்தியாசம் இருந்தது.

  • ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்லவென்று நான் உங்களுக்குச் சொன்ன வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள். (யோவான் 15:20)

இயேசு தம்முடைய சொந்த விருப்பத்தின் படியும், சித்தத்தின் படியும் அற்புதம் செய்யமுடியும்.

பவுலும், பேதுருவும் உன்னதத்தில் இருந்து வரும் ஒத்தாசையை நம்பியே அற்புதம் செய்யமுடியும்

  • எரஸ்து கொரிந்துபட்டணத்தில் இருந்துவிட்டான்; துரோப்பீமுவை மிலேத்துவில் வியாதிப்பட்டவனாக விட்டுவந்தேன் (II தீமோத்தேயு 4:20 )

21 ஆம் நூற்றாண்டு பெந்தேகோஸ்தே உழியர்கள்?? இயேசுவை விட எங்களுக்கு பவர் ஜாஸ்தி என்று சொல்லிக்கொண்டு....மன்னிக்கவும்!



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

golda wrote:

பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் பெயராமல் கொடுக்கும் ஞானஸ்நானத்தையும், இரகசிய வருகையையும் அவர்கள் நம்புகிறார்கள். எனவே உங்க குற்றச்சாட்டு சிறிதும் ஆதாரமற்றது, வெறும் கற்பனை மட்டுமே , சில்சாம் அவர்களே!


அன்புக்குரிய சகோதரி அவர்களே, நீங்கள் சாதுவின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் குறித்து மகிழ்கிறேன்; இதனால் நீங்களே சாது சம்பந்தமான அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் பதில் சொல்லவேண்டிய கட்டாயத்துக்கு உங்களை நீங்களே உள்ளாக்கிக் கொண்டுள்ளீர்கள்;

இனி...

கற்பனையான ஒரு குற்றச்சாட்டை பிரபலமான ஒருவர் மீது சாட்டவேண்டும் என்ற அவசியமோ உள்நோக்கமோ தீயஎண்ணமோ எனக்குக் கிடையாது என்பதை தாங்கள் முதலில் அறியவேண்டும்;என்னால் விவரமாக அனைத்தையும் தட்டச்சு செய்து பதிக்கமுடியவில்லையே தவிர அவர்களுடைய அனைத்து சூழ்ச்சிகளையும் அறிந்தவனாகவும் முழுவதையும் வெளிப்படுத்த முடியாத நிலையிலும் இருக்கிறேன்;என்னைப் போலவே பல சகோதரர்கள் நாகரீகம் கருதியும் கிறித்தவத்தை கவனித்துக்கொண்டிருக்கும் புறவினத்தாரின் முன்பான சாட்சியை கருத்தில் கொண்டும் சில தனிப்பட்ட அசிங்கங்களை வெளியிடமுடியாத நிலையிலிருக்கிறோம்.

ஆனாலும் அது என்னுடைய ஆர்வமான பணியல்ல;என்னைப் பொறுத்தவரையிலும் அன்றும் இன்றும் என்றும் என்னுடைய கவனம் முழுவதும் உபதேசம் சம்பந்தமான குழப்பங்களை களையெடுப்பதிலேயே இருக்கிறது; ஏனெனில் தற்காலத்தில் ஓடிக்கொண்டிருக்கும் எந்தவொரு ஒரு குறிப்பிட்ட உபதேசத்துக்குள்ளும் என்னால் பொருந்திப் போகமுடியவில்லை; எல்லோருமே தங்களைத் தாங்களே பிரசங்கிப்பதிலேயே கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.

சாதுஜி பிதா குமாரன் பரிசுத்தாவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெறுவதை நம்புவதற்கும் அதை மாத்திரமே சத்தியமாக எடுத்து போதிப்பதற்கும் அதிக வித்தியாசமுண்டு; சாதுஜியிடம் ஒத்துப்போகும் தன்மை அதிகம் இருப்பதும் ஆனாலும் அதனூடாக தனக்கென்று ஒரு கூட்டம் சேரும்வரை பொறுத்திருக்கும் தந்திரம் இருப்பதாகவே என்னைப் போன்றவர்கள் உணருகிறோம்; எப்படியெனில் சற்றும் சம்பந்தமில்லாமல் ஞானஸ்நானம் அவசியம் தானா என்றும் முழுக்கு ஞானஸ்நானம் தான் பெற்றாக வேண்டும் என்பது என்ன கட்டாயம் என்றும் பேசிவருகிறார்; இப்படியே திருவிருந்து உட்பட அனைத்து மூல உபதேசங்களுக்கு விரோதமாகப் பேசி வருகிறார்; இதுபோன்ற முரண்பாடான கருத்துக்கள் அவரை வேறு சில காரணங்களுக்காக அவரை மனதார நேசிக்கும் நண்பர்களை வேகமாக அவரை விட்டு பிரித்து வருகிறது.

எந்த சூழ்நிலையிலும் மாற்றப்பட முடியாததே மூல உபதேசம் எனப்படுகிறது;அது வேதவசனத்தினால் முத்திரையிடப்பட்டிருக்கிறது; அதனை ஒவ்வொருவரும் சூழ் நிலைக்கேற்ற வண்ணமாக திரித்தும் புரட்டியும் பேசி நீர்த்துப்போகச்செய்ய முயற்சித்தால் புரட்சிகரமாகப் பேசுகிறவர் என்ற பெயர் மக்கள் மத்தியில் கிடைத்தாலும் சத்தியத்தைப் புரட்டிய பாவத்திலிருந்து தப்பவே முடியாது.

இரகசிய வருகையை சாதுஜியின் கூட்டத்தார் நம்புகிறார்கள் என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளது விஷமத்தனமாக இருக்கிறது;ஏனெனில் இரகசிய வருகையைக் குறித்து அவர்கள் நம்புகிறார்கள் என்பது அது நடந்துவிட்டது என்ற நிலையில் தான் என்பதை நீங்களே மற்றொரு திரியில் குறிப்பிடவில்லையா? உபத்திரக்காலத்துக்கு முன்பாகவே இரகசிய வருகை என்பது தவறான உபதேசம் என்று நீங்கள் சொல்லவில்லையா?

http://chillsam.activeboard.com/forum.spark?aBID=134567&topicID=42235182&p=3

இரகசிய வருகைக்கு சபையை ஆயத்தப்படுத்தவே ஆவிக்குரிய சபையார் உபதேசிக்கிறார்கள்; ஆனால் இதற்கு முரணாக ஏஞ்சல் டிவியின் சாதுஜீ டீம் பகிரங்க வருகைக்காகவே சபையாரை எச்சரித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது தாங்கள் அறியாததா? இதுவே ஏஞ்சல் டிவியின் உபதேசத்தை வேற்றுமையாகப் பார்க்கவைக்கிறது; இதற்கு ஆதரவாக சொல்லுவதெல்லாம் மனிதப் போதனைகளும் வியாக்கியானங்களும் அவர்கள் பார்த்ததாகக் கூறும் தரிசனங்களுமே;

இன்று கூட "நெஞ்சினிலே" தாங்கள் குறிப்பிட்ட யூதர்களின் யூபிலியைக் குறித்த கருத்தை சொல்லுகிறார்; அதற்கு ஆதரவாக அவர் ஒரு வேதவசனத்தைக் கூட குறிப்பிடாததுடன் அடிக்கடி வியாழன் கிரகத்துக்கு டூர் போய்வரும் நெவில் ஜாண்சன் என்பவரின் கூற்றையே குறிப்பிடுகிறார்; இவரும் மதிப்பிற்குரிய தேவமனிதன் என்று சாதுவினால் சாட்சி பெறுகிறார்;யாருடைய மதிப்பிற்குரிய எந்த தேவனுடைய மனிதன் என்பதெல்லாம் தனி ஆராய்ச்சியாகும்;

நெவில் ஜாண்சனிடம்  ஆண்டவர் சொன்னாராம், இனி ஒரு யூபிலியை யூதர்கள் காண்பதில்லை என்று; கடைசி யூபிலி எப்போது என்று பார்த்தால் கிழக்கு மேற்கு எருசலேம் இணைந்த 1967 ம் வருடமாம்; அதிலிருந்து 50 வருடம் 2017 அது கடந்து அடுத்த யூபிலி 2067 ல் வருவதற்குள் இந்த டைம் லைனில் ஏதோ ஒரு வருடத்தில் ஆண்டவருடைய பகிரங்க வருகை இருக்கும் என்று கணிக்கிறார்; இதையெல்லாம் கணிப்பதற்கு இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்? வேதம் யூதர்களுடைய வருடக் கணக்கீடு மற்றும் நேரக் கணக்கின்படி தரப்பட்டுள்ளது என்பதையும் அந்த கணக்கின் படி தற்போது 5770 வருடம் நடந்துகொண்டிருப்பது யாருக்காவது தெரியுமா? அதுவே வேத நாயகனால் அங்கீகரிக்கப்பட்ட வருடக்கணக்கு என்பதையாகிலும் அறிவார்களா? ஆங்கில வருடக் கணக்கீட்டு முறையின்படியே காரியங்கள் சம்பவித்துக்கொண்டிருப்பதாக தற்கால போதகர்கள் நினைத்துக்கொண்டிருப்பது அவர்களின் அறியாமையையே காட்டுகிறது.

இவர்களுடைய உபதேசத்தை ஏற்றுக்கொண்டு ஏழாம் சபையின் காலமான தற்காலத்தில் ஏழாம் தூதனின் சத்தமான புறசாதிகளின் தீர்க்கதரிசியினால் வெளிப்படுத்தப்பட்டவைகளை விசுவாசிப்பதே இரகசிய வருகையில் காணப்படுவது என்றும் மத்திய ஆகாய அனுபவம் என்றும் ப்ரன்ஹாமினால் போதிக்கப்பட்டு சாதுஜி டீமினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அந்த உபதேசமே முன்னெடுத்துச் செல்லப்படுகிறது என்பதே மறுக்கமுடியாத உண்மையாகும்.

ஒருவேளை அது உண்மையாக இருப்பின் நானே அதற்குக் கீழ்படிய வேண்டியவனாக இருக்கிறேன்;ஆனால் நான் இவர்களைப் புறக்கணிக்க அதுவல்ல காரணம்,அவர்கள் தங்களை அதிகாரப்பூர்வமானவர்களாகவும் விசேஷித்தவர்களாகவும் காட்டிக்கொள்ள புரட்டிக்கொண்டிருக்கும் வேதவசனங்களும் விவஸ்தைகெட்ட தரிசனங்களுமே;வேதத்தில் தூதர்களுடைய தரிசன அனுபவங்கள் இருப்பதாலும் அவற்றை நான் ஏற்றுக்கொள்வதாலும் மட்டுமே இவர்களுடைய அனுபவங்கள் உண்மையாகிவிடாது; ஏனெனில் அது அசல் என்றால் இது நகல்;அது நிஜம் என்றால் இது போலி.

நெவில் ஜாண்சன் எனும் கள்ளனின் கூற்று மற்றும் ஒரு வரலாற்றுக்குறிப்பு இரண்டை மாத்திரமே கருத்தில் கொண்டு இயேசுவின் இரண்டாவது அதாவது பகிரங்க வருகையை கணித்துவிடமுடியுமா?

golda wrote:

நானும் அவங்க என்ன தவறான் உபதேசம் சொல்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம் என்றுதான் பார்க்கிறேன். தப்பு தப்பு ன்னு எல்லோரும் சொல்றீங்களே தவிர என்ன தப்பு, ஏன் தப்பு, எதுக்கு தப்புன்னு யாரும் சொல்ல மாட்டேங்கிறீங்க!


இதோ இயன்ற மட்டும் எடுத்து சொல்லியிருக்கிறேன்;எல்லாவற்றையும் எடுத்துச்சொல்ல அவகாசம் போதாது; ஆனாலும் ஏவாளுக்கு சாத்தான் செய்தது என்ன, நோவாவுக்கு அவன் மகன் செய்தது என்ன என்பது போன்ற அதிர்ச்சிகரமான ஏஞ்சல் டிவி மற்றும் ப்ரன்ஹாமின் வியாக்கியானங்களெல்லாம் தமிழ் கிறித்தவர்களுக்கு முற்றிலும் அதிர்ச்சிகரமான செய்தியாகும்; அதையெல்லாம் எடுத்து சொல்லிவிட்டால் திருடர்கள் உஷாராகி விடுவார்கள்; ஏமாளிகளையும் முழுவதும் காப்பாற்றுவது தேவசித்தமல்ல; அப்படியிருந்தால் அவர் உயிர்த்தெழுந்தவுடன் பிலாத்துவிடம் அல்லவா சென்றிருக்கவேண்டும்?

golda wrote:
பிரன்ஹாமின் உபதேசத்தை போதிக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.பிரன்ஹாம் தேவன் ஒருவரே (பிதா தான், இயேசு கிறிஸ்து மற்றும் பரிசுத்த ஆவியானவர்) என்ற தவறான் உபதேசத்தை போதித்தாராம். என்னைக் கேட்டால் பல இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் கூட இப்படித்தான் அறியாமையில் சொல்வார்கள் என்று நினைக்கிறேன்.

--

Although denying he was a believer in the "oneness" doctrine, Branham had his own form of "oneness" teaching that defined God as one person who manifested Himself as three different "attributes": the Father, the Son, and the Holy Spirit, rather than three Persons comprising one Godhead. He believed the doctrine of the Trinity was the "Babylonian Foundation" of the denominations, inherited from Roman Catholicism

--

ஆனால் ஏஞ்சல் டிவியில் போதிப்பவர்கள் எல்லாம் திருத்துவ தேவனைத்தான் நம்புகிறார்கள் போதிக்கிறார்கள் ஆராதிக்கிறார்கள்.


மிகவும் அழகு...கொள்ளை அழகு..! தாங்கள் மேலே குறிப்பிட்டுள்ள ப்ரன் ஹாமின் கொள்கையுடன் சாதுவின் கொள்கையை ஒப்பிடுவோமா...இதோ...

// In one God, eternally existing in three persons - Father, Son and the Holy Spirit. //

http://www.jesusministries.org/aboutus_4.php

இரண்டுக்கும் பெரிய வித்தியாசமிருப்பதாக என்னுடைய குருவி மூளைக்கு எட்டவில்லை;இதிலும் கூட மேலோட்டமாகப் பார்த்தால் பெரிய கொள்கை குழப்பம் தெரியவராது;ஆனால் இதனை அவர்கள் வியாக்கியானம் பண்ணும் போதே விவகாரம் வெடிக்கும்;இயேசு ஸ்வாமி என்பதும் இறைவன் இயேசு என்பதும் எம்பெருமான் இயேசு என்பதும் இவர்களுடைய தந்திரமான கருத்து பிறழ்ந்த ஊடுறுவும் கருத்தாகும்;இதற்கெல்லாம் வேதத்தில் எந்த ஆதாரமும் இல்லை.இந்த போதகம் ஒன்லி ஜீஸஸ் எனும் கூட்டத்தாரின் கொள்கை என்று பொதுவாக நம்பப்படுகிறது.

இவர்களுடைய சானலில் கதைக்கும் ஸ்டீவன் ப்ரூக்ஸ் எனும் இளம் போதகர் ஒருமுறை சொன்னது, நாம் கிறித்துவுக்கும் மேலானவர்கள்; ஏனெனில் அவரைக் காட்டிலும் நாம் பெரிதானவைகளைச்செய்வோம் என்று அவரே சொல்லியிருக்கிறாரே எனவே நாமும் கிறிஸ்துக்களே என்றார்; ப்ரன் ஹாம் போதகத்திலேயே இரண்டு குழுக்கள் உண்டு;ஒன்று ப்ரன் ஹாமையே இரகசிய வருகைக்காக வாக்களிக்கப்பட்ட கிறிஸ்துவாக பார்ப்பது; இரண்டாவது குழு அவரை மணவாளனுடைய தோழனாகவும் மணவாட்டியை மணவாளனுக்கு அடையாளம் காட்டும் ஊழியனாகவும் வாக்களிக்கப்பட்ட தீர்க்கதரிசியாகவும் யோவான் ஸ்நானன் விட்டுச்சென்ற பணியை நிறைவு செய்பவனாகவும் சுவிசேஷங்களில் இயேசுவாலும் வெளிபடுத்தலில் யோவானால் தரிசிக்கப்பட்ட முன்னுரைக்கப்பட்ட தீர்க்கதரிசியாகப் பார்ப்பது.

இதில் இவ்வளவு உள்விவகாரங்கள் இருக்கையில் பட்டவர்த்தனமாக எடுத்த எடுப்பில் எந்த முட்டாளாவது எல்லாவற்றையும் சொல்லி தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக்கொள்வானா? முதலில் காலூன்றிவிட்டு பிறகு அடித்து சாப்பிடவேண்டும் என்பதே அனைத்து மிருகங்களின் குணாதிசயமாகும்; அவர்களை கண்மூடித்தனமாகப் பின்பற்றும் உங்களைப் போன்றவர்களுக்கு என்னைப் போன்றவர்களெல்லாம் கழைக்கூத்தாடிகளைக் காட்டிலும் கேவலமானவர்கள்; ஏனென்றால் அவர்கள் மிக உயரத்தில் இருக்கிறார்கள்; நாங்களோ தெருவில் நின்று கூவிக்கொண்டிருக்கிறோம் அல்லவா?

golda wrote:
ஆவிக்குரிய அனுபவங்கள், தேவ தூதர்களைப் பார்ப்பது எல்லாம் தவறு என்று சொன்னால் நம் வேதத்தை நாம் நம்பவில்லை என்றுதான் அர்த்தம்.அவைகள் தவறு என்றால் நாம் சாது சுந்தர் சிங்கையும், சகோ தினகரனையும் கூட, ஏன் பவுலையும், யோவானையும் கூட நம்ப முடியாது.

இதைக் குறித்து மேலே சில வரிகள் எழுதியிருக்கிறேன்; சாது சுந்தர்சிங் தன்னுடைய தனிப்பட்ட அனுபவங்களைப் போதனைகளாக்கவில்லை; தினகரனுடைய கருத்துக்களும் தனிப்பட்ட அனுபவங்களே;அவரைக் கெடுத்ததும் ப்ரன்ஹாமின் உபதேசமே; அவருடைய கருத்துக்கள் சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது; உதாரணத்துக்கு தினகரன் பார்த்ததாக சொல்லும் காட்சிக்கும் சாதுஜி பார்த்ததாக சொல்லும் காட்சிக்கும் நிரம்ப வித்தியாசம் இருக்கிறது; அவரோ மரித்துவிட்டார், எனவே கிராஸ் செக் செய்துகொள்ளும் வாய்ப்பும் இல்லை.

இந்த முரண்பாடுகள் இரண்டு காரியங்களை தெரிவிக்கிறது; ஒன்று , தரிசனங்கள் தனிப்பட்ட அனுபவங்கள் அது ஒன்று போலிருக்கவேண்டிய அவசியம் இல்லை; அது மனதில் உருவகப்படுத்திக்கொண்ட ஒரு குறிப்பிட்ட கருத்தினால் கூட அமையலாம்; மற்றது அக்மார்க் ரீல் சுத்துகிறார்கள் என்பதே.

தரிசனங்களின் மைய நோக்கமென்ன, தேவனுடைய இருதயத்தை வெளிப்படுத்துவதா, அல்லது தங்களை விசேஷித்தவர்களாகக் காட்டிக்கொள்வதா? இவர்கள் என்ன‌ சாது சுந்தர்சிங்கைப் போல எளிமையான வாழ்க்கையா வாழுகிறார்கள்? பவுல் தரிசனங்களையா பிரதானப்படுத்தினான்? யோவானைப் போன்று இவர்களெல்லாம் கைதியாக நாடு கடத்தப்பட்ட நிலையிலா தரிசனங்களை காண்கிறார்கள்; அனைத்து சுகபோகத்துடன் ஆள் படை பல பிரதானிகளுடன் சமுதாயத்தின் புகழ்மிக்கவர்கள் என்ற அதிகார ஆணவத்துடன் அல்லவா வலம் வருகிறார்கள்?

golda wrote:
சாது சில சமயங்களில் பேசத் தெரியாமல் பேசுவது போல் தான் இருக்கிறது. நாமும் கூட பல சமயங்களில் தவறுகிறோம். பேசத் தெரியாமல் பேசுகிறோம். ஆனால், அவரிடம் ஆண்டவர் சொன்னதை அப்படியே செய்ய வேண்டும் என்ற ஒரு குழந்தைக்கு இருப்பது போன்ற விசுவாசம் இருப்பதையும் பார்க்க முடிகிறது.

அது சரி, பெண்களுக்கு பொதுவாகவே கல்யாணம் ஆகாதவர்கள் மீது ஒருவித அனுதாபம் ஏற்படும்;அதுவே அவர்கள் வழுவிப் போகக் கண்ணியாகவும் இருக்கும்; அதுவே உங்களுடைய இந்த வரிகளிலிருந்து  எதிரொலிக்கிறது;பேசத் தெரியாமற் பேசுவது போல சாது ஒருபோதும் தவிக்கவே இல்லை; அவர் மனதில் இருப்பது அவரையும் அறியாமல் அவரை உந்தித் தள்ளுகிறது; ஆனாலும் அவருடைய உள்மனம் "அவசரப்படாதே" என்று அவரை எச்சரிக்கிறது;எனவே சமாளிக்கிறார்.

மேலும் அவர் தீர்க்கதரிசியாக இருந்தால் அவருடைய ஆவி அவருக்கு அடங்கியிருக்கவேண்டும் என்பது தீர்க்கதரிசிக்குரிய பிரமாணமாகும்; ஆண்டவர் சொன்னது அல்ல, ப்ரன்ஹாம் சொன்னதையே இவர் செய்து முடிக்க தீவிரிக்கிறார்; ஏனெனில் ஆலமரத்தினடியில் ஒரு செடியும் ஓங்கி வளர முடியாது;விழுதாக இருக்கவும் விருப்பமில்லை;இதனால் இவர்களைப் போன்றவர்கள் தனிமரமாக நின்று அதன் மூலம் தோப்பாக முயற்சிக்கிறார்கள்; தனிமரம் தோப்பாகாது என்பது பழமொழி..!

ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட உபதேசத்தை ஸ்தாபனத்தின் உபதேசம் என்றும் அதைவிட்டு வெளியேறி, "வனாந்தரத்துக்கு -கூடாரத்துக்கு வா , மணவாட்டியே " என்பது தான் ப்ரன்ஹாமின் அறைகூவல் ஆகும்; அப்படியே விலகி வருவோர்க்காக ஒவ்வொன்றிலும் ஒரு மாற்று செய்து வைக்கவேண்டும் அல்லவா? அதுவே பல்வேறு வேற்றுமையான உபதேசங்களுக்கும் குழப்பத்துக்கும் காரணமானது.

எல்லாம் சரி... எது சரி,என்று கேட்கிறீர்களா? எனக்குத் தெரியாது...ஆனால் எது தவறு என்பது மட்டும் ஆதாரப்பூர்வமாகத் தெரியும்;அதுவும் திறமை தானே..? ஒரு காரியத்தை உணருகிறேன், நீங்கள் மிகவும் தந்திரமாக என்னிடமிருந்து முழு விஷயத்தையும் கறக்க முயற்சிக்கிறீர்கள்;அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுவிட்டீர்கள்;எப்படியோ கண்திறந்தால் சரி..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் பெயராமல் கொடுக்கும் ஞானஸ்நானத்தையும், இரகசிய வருகையையும் அவர்கள் நம்புகிறார்கள். எனவே உங்க குற்றச்சாட்டு சிறிதும் ஆதாரமற்றது, வெறும் கற்பனை மட்டுமே , சில்சாம் அவர்களே!

நானும் அவங்க என்ன தவறான் உபதேசம் சொல்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம் என்றுதான் பார்க்கிறேன். தப்பு தப்பு ன்னு எல்லோரும் சொல்றீங்களே தவிர என்ன தப்பு, ஏன் தப்பு, எதுக்கு தப்புன்னு யாரும் சொல்ல மாட்டேங்கிறீங்க!

பிரன்ஹாமின் உபதேசத்தை போதிக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். பிரன்ஹாம் தேவன் ஒருவரே (பிதா தான், இயேசு கிறிஸ்து மற்றும் பரிசுத்த ஆவியானவர்) என்ற தவறான் உபதேசத்தை போதித்தாராம். என்னைக் கேட்டால் பல இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் கூட இப்படித்தான் அறியாமையில் சொல்வார்கள் என்று நினைக்கிறேன்.

--

Although denying he was a believer in the "oneness" doctrine, Branham had his own form of "oneness" teaching that defined God as one person who manifested Himself as three different "attributes": the Father, the Son, and the Holy Spirit, rather than three Persons comprising one Godhead. He believed the doctrine of the Trinity was the "Babylonian Foundation" of the denominations, inherited from Roman Catholicism

--

ஆனால் ஏஞ்சல் டிவியில் போதிப்பவர்கள் எல்லாம் திருத்துவ தேவனைத்தான் நம்புகிறார்கள் போதிக்கிறார்கள் ஆராதிக்கிறார்கள்.

ஆவிக்குரிய அனுபவங்கள், தேவ தூதர்களைப் பார்ப்பது எல்லாம் தவறு என்று சொன்னால் நம் வேதத்தை நாம் நம்பவில்லை என்றுதான் அர்த்தம்.அவைகள் தவறு என்றால் நாம் சாது சுந்தர் சிங்கையும், சகோ தினகரனையும் கூட, ஏன் பவுலையும், யோவானையும் கூட நம்ப முடியாது.

சாது சில சமயங்களில் பேசத் தெரியாமல் பேசுவது போல் தான் இருக்கிறது. நாமும் கூட பல சமயங்களில் தவறுகிறோம். பேசத் தெரியாமல் பேசுகிறோம். ஆனால், அவரிடம் ஆண்டவர் சொன்னதை அப்படியே செய்ய வேண்டும் என்ற ஒரு குழந்தைக்கு இருப்பது போன்ற விசுவாசம் இருப்பதையும் பார்க்க முடிகிறது.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
மூவர் கூட்டணிக்கே என் ஓட்டு..!
Permalink  
 


மூவர் கூட்டணி தொடர்பாக சகோதரர் மோகன்'சி- க்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறேன்; அதன் விவரம் பின்வருமாறு...

அன்பு சகோதரர் அவர்களுக்கு,

கர்த்தராகிய இயேசுகிறித்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்;தாங்கள் ஏஞ்சல் டிவியின் முதலாளிகளுடன் துபாய் பட்டணத்தில் எக்காள சத்தம் எனும் விசேஷித்த கூட்டத்தில் கலந்துகொள்ளுவதாக செய்தி வெளியாகியுள்ளது;அது சம்பந்தமாக சக ஊழியன் என்ற முறையில் தங்களை எச்சரிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.

http://chillsam.activeboard.com/forum.spark#lastPostAnchor#comment-42276116


இதுவரை தங்கள் மீது என்னைப் போன்றோர் நன்மதிப்பு கொண்டுள்ளோம்; ஆனால் உங்கள் மூலம் உங்களால் ஆதாயப்படுத்தப்பட்ட ஆத்துமாக்களை வஞ்சித்து ஆரோக்கிய உபதேசத்தைவிட்டு திசைதிருப்ப சாது மற்றும் வின்சென்ட் செல்வகுமார் ஆகியோர் தீவிரமாக முயற்சித்துக் கொண்டிருப்பதை தாங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லையோ என்னவோ..!

ஆனால் என்னைப் போன்று ஆரோக்கிய உபதேசத்துக்காக நிற்போர் அவர்களுடைய ஒவ்வொரு அசைவையும் கவனித்து வருகிறோம்; ஒருவேளை மீடியா போதையில் இருக்கும் அவர்களுக்கு இதன் ஆபத்தும் தீவிரமும் புரியாமல் இருக்கலாம்;ஆனால் அவர்களுடன் இணைந்ததால் உங்கள் மீதும் ஐயம் ஏற்படும் சூழ்நிலையில் உங்களை அவர்கள் தள்ளிவிட்டார்கள்.

சுருக்கமாக சில தகவல்களை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவருகிறேன்; அவர்கள் ப்ரன்ஹாம் எனும் கள்ளத்தீர்க்கதரிசியின் வழித் தோன்றல்கள்; இது சம்பந்தமான அனைத்து எச்சரிப்புகளும் ஏற்கனவே கொடுக்கப்பட்டு விட்டது;தாங்கள் இந்த விவரங்களையறியாமல் அவர்களுடன் இணைந்திருக்க வாய்ப்பில்லை அல்லவா? அப்படியானால் நீங்களும் அவர்களில் ஒருவரா? நீங்கள் பிதா குமாரன் பரிசுத்தாவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெறுவதையும் இயேசுவானவரின் இரகசிய வருகையையும் நம்புகிறதில்லையா..?

இதற்கு தாங்கள் அளிக்கும் பதிலைப் பொறுத்தே தங்களைக் குறித்து நாங்கள் ஒருமுடிவுக்கு வரமுடியும் என்று காத்திருக்கிறோம்;குறைந்தபட்சம் நீங்கள் துபாய் பட்டணத்தில் ஏஞ்சல் டிவியினர் நடத்தும் எக்காள சத்தம் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் இருந்தாலே போதும்..! தயவுசெய்து கூடிய சீக்கிரத்தில் பதிலளிக்கவும்.

கர்த்தர் தாமே உங்களையும் உங்கள் ஊழியங்களையும் ஆசீர்வதிப்பாராக..!

அன்புடன்,
"சில்சாம்"
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

இதில் பாரம் கொண்ட தளநண்பர்களும் மோகன்'சி-க்கு மின்னஞ்சல் அனுப்பி எச்சரிக்க அன்புடன் வேண்டுகிறேன்.
Bullet.jpg Bullet.jpg
 
Mohan C. LazarusFor 24 Hours Hotline Prayer
Jesus RedeemsPhone: (+91) 04639 - 235 315
Nalumavadi - 628 211.Fax: (+91) 04639 - 235 415
Thoothukudi District,for Office use: (+91) 04639 - 235 305, 705
Tamil Nadu, South India.Email: mohanlazarus@jesusredeems.com
 
Bullet.jpg Bullet.jpg



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
மூவர் கூட்டணிக்கே என் ஓட்டு!
Permalink  
 


//அடுத்த பெரிய நிலநடுக்கம் அமெரிக்காவில் தான் என்று பலர் சொல்கிறார்கள். சகோ ஜான், சகோ அசோக் குமார் கவனிக்க..! //

Anytime Sister.

கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம் (பிலிப்பியர் 1:21)



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

Trumpet-2011-brochure_UAE-(full).jpg

http://www.angeltv.org/


கள்ளத்தீர்க்கதரிசியான ப்ரன்ஹாமின் உபதேசங்களை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்துடன் செயல்பட்டுவரும் சாதுஜி, வின்சென்ட் செல்வகுமார் கூட்டணியில் மூன்றாவது நபராக மோகன் சி லாசரஸ் சேர்ந்திருக்கிறார்; இது கிறித்தவ சமுதாயத்துக்கு அதிர்ச்சிகரமான செய்தியாகும்; மோகன்'சி இத்தனை நாள் தந்திரமாக நம்மையெல்லாம் ஏமாற்றிக்கொண்டிருந்தாரா அல்லது ஏஞ்சல் டிவியின் சூழ்ச்சிக்கு பலியாகிவிட்டாரா என்பதை இனிமேல் தான் ஆராயவேண்டும்;அதனை விரைவில் வெளிக்கொணருவோம்..!

முதலில் மோகன் சி லாசரஸ் கூட்டணியில் வின்சென்ட் செல்வகுமார் இணைந்து வலம் வந்தபோது அத்தனை சந்தேகம் வரவில்லை;இப்போதோ சாதுஜியுடன் பகிரங்கமாகவே சேர்ந்திருக்கிறார்,மோகன்'சி; இது மிகவும் ஆபத்தான கூட்டணியாகப் போகிறது;மொத்த சபையும் கொள்ளைப் போகும் போலிருக்கிறது;மோகன்'சி-யின் பின்னால் அணிவகுத்திருக்கும் திரள்கூட்டத்தைக் குறிவைத்தே சாதுஜி காயை நகர்த்துகிறார்; விரைவில் மோகன்'சி-யின் தேவனுடைய வீட்டில் சாதுஜியின் தலையைப் பார்க்கலாம் போலிருக்கிறது..!

சாதாரண வாசகர்களுக்கு நான் என்ன சொல்லவருகிறேன் என்பது புரியாது; ஆனால் இது பொருந்தாத கூட்டணி என்பதை மாத்திரம் சொல்லி வைக்கிறேன் அல்லது மோகன்'சி இத்தனை காலம் தமிழ் கிறித்தவ சமுதாயத்தை ஏமாற்றி வந்ததை ஒப்புக்கொள்ளவேண்டிய நிலை வரலாம். இது பண விவகாரம் அல்ல,ஆரோக்கிய உபதேசம் சம்பந்தமானது ஆகும்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

chillsam wrote:

...மிரட்டி மதம் மாற்றுவதும் சட்டவிரோதமானதாகும்..!"


நாம் யாரும் மிரட்ட தேவையில்லை சில்சாம் அவர்களே!  அவர் கையிலிருக்கும் காற்று, கடல், வான், பூமி கூட்டணி அமைத்து மக்களை மிரட்ட ஆரம்பித்து விட்டது. மிரண்டு போய் இருப்பவர்களுக்கு ஆண்டவரைப் பற்றி சொல்லி ஆறுதலளிப்பதுதான் இப்ப நம்ம வேலை!

 

அடுத்த பெரிய நில நடுக்கம் அமெரிக்காவில் தான் என்று பலர் சொல்கிறார்கள். சகோ ஜான், சகோ அசோக் குமார் கவனிக்க!

 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

golda wrote:

கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவர்களுக்கு விரோதமாக எழும்புவதுதான் மிகவும் துக்கமான் விஷயம் சகோ ஜான்!



கோல்டா அவர்களின் உணர்வு நன்றாகப் புரிகிறது;ஆனாலும் தங்கள் கூற்று இயேசுவானவருடைய உணர்வுகளுக்கு விரோதமாக இருப்பது போலத் தெரிகிறதே,இன்னும் பவுலடிகளும்கூட இதனால் பாதிக்கப்படுவார் என்று எண்ணுகிறேன்; ஏனெனில் இவர்களெல்லாம் யூதர்களாக இருந்தும் யூதர்களுக்கு விரோதமாக எழும்பினார்கள் அல்லவா?



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவர்களுக்கு விரோதமாக எழும்புவதுதான் மிகவும் துக்கமான் விஷயம் சகோ ஜான்!



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 

//எனக்கு ஆவிக்குரிய ரீதியில் மிகவும் பிடித்தவர்கள் இப்போதைக்கு வின்சென்ட் செல்வகுமாரும், நம்ம விஜய குமாரும் (vijay76) தான்! சாது அந்த லிஸ்டில் இல்லை. நல்ல மனிதர் தான். நல்ல தீர்க்கதரிசி தான். என்றாலும் பல சமயங்களில்அவர் பேசுகிற அலைவரிசை எனக்கு ஒத்துப் போகிறதில்லை!// 
 
அன்பு சகோதரி. நீங்கள் சாதுவை விட்டு விட்டதை குறித்து சந்தோசம்!   சகோ. கொல்வினை ரெட்டை குதிரையில் பயணிப்பதாக சொல்லிவிட்டு  நீங்க எப்படி  சகோ.விஜய்யும்,சகோ.வின்சென்ட் செல்வகுமாரும் பிடித்தவர்கள் என்று சொல்லமுடியும்? எனக்கு தெரிந்தவரையில் சகோ.விஜய்க்கும்   சகோ. வின்சென்ட் செல்வகுமாருக்கும் ரொம்ப தூரம். இன்னும் ஆண்டவர் உங்களோடு பேசி சகோ. வின்சென்ட் செல்வக்குமாரையும் விட்டுவிட உதவிசெய்வாராக!
 
//"கடைசி காலம் என்பதோ, இயேசு சீக்கிரம் வருகிறார் என்பதோ பதட்டமானதும், ஆபத்தானதுமான செய்தியல்ல,அது ஒரு இதமான எதிர்பார்ப்பு ஆகும்...மிரட்டி மதம் மாற்றுவதும் சட்டவிரோதமானதாகும்..!"//
 
சகோ. சில்சாம் சரியாய் சொன்னீர்கள். இன்னும் பொருத்தமாய் சொல்ல வேண்டும் என்றால் அது ஒரு நிச்சயிக்கப்பட்ட மணமகள், தன்னை அலங்கரித்துக்கொண்டு மணவாளனை எதிர்பார்ப்பது போன்ற ஒரு சந்தோஷமான எதிர்பார்ப்பு!
  • யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தை தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கிவரக்கண்டேன்; அது தன் புருஷனுக்காக லங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப்போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது. (வெளி 21:2)
  •  என்னை இழுத்துக்கொள்ளும், உமக்குப் பின்னே ஓடி வருவோம்; ராஜா என்னைத் தமது அறைகளில் அழைத்துக்கொண்டுவந்தார்; நாங்கள் உமக்குள் களிகூர்ந்து மகிழுவோம்; திராட்சரசத்தைப் பார்க்கிலும் உமது நேசத்தை நினைப்போம்; உத்தமர்கள் உம்மை நேசிக்கிறார்கள் (உன்னதப்பாட்டு 1:4)
இந்த வியாபாரிகளின் புண்ணியத்தால் நாம் அந்தி கிறிஸ்துவை எதிர்பார்க்கும் அவலமான நிலைமைக்கு தள்ளப்பட்டு விட்டோம்.
  • சூரியனிலும் சந்திரனிலும் நட்சத்திரங்களிலும் அடையாளங்கள் தோன்றும்; பூமியின்மேலுள்ள ஜனங்களுக்குத் தத்தளிப்பும் இடுக்கணும் உண்டாகும்; சமுத்திரமும் அலைகளும் முழக்கமாயிருக்கும்.வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்; ஆதலால் பூமியின்மேல் வரும் ஆபத்துகளுக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிறதினால் மனுஷருடைய இருதயம் சோர்ந்துபோம்.
  •  இவைகள் சம்பவிக்கத் தொடங்கும்போது, உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால், நீங்கள் நிமிர்ந்து பார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள் என்றார். (லூக்கா 21:25 ,26  & 28 )
திகிருஸ்தவர்கள் ஒருவரை ஒருவர் வாழ்த்தும் போது "மாரநாதா" (ஆம் இயேசுவே வாரும்) என்று வாழ்த்துவார்களாம். இப்போது நமக்கு உலகம், பணம், வசதி என்று வேறு நிறைய பாய் பிரண்ட்ஸ் இருப்பதால்   இயேசு வந்து நின்றால் கூட சொந்த புருஷனிடம் "அடையாளம் கேட்கும்" பரிசேயருடைய நிலைமையில் நாம் இருக்கிறோம்.   நம்மை  வழிநடத்த வேண்டியவர்களும் மாரநாதா   மறந்து, "எங்காவது  பிணம்  விழாதா  நான் சொன்ன தீர்கதரிசனம் நிறைவேறிவிட்டது "என்று விளம்பரம் தேடலாமே என்று அலைந்து கொண்டு இருக்கிறார்கள்.   "மிருகம் பார்த்தேன்", "பத்து தலை","அக்கினி அபிஷேகம்" என்று புருடா விட்டுக்கொண்டு  திரிகிறார்கள்.ஹும்... என்னத்தை சொல்ல....


-- Edited by John on Saturday 2nd of April 2011 12:50:05 AM



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

அருமை சகோதரி அவர்களே விரிவாக எழுத நேரமில்லாததால் தற்போது தோன்றிய ஒரே ஒரு கருத்தினைப் பதிவுசெய்கிறேன்;"கடைசி காலம் என்பதோ, இயேசு சீக்கிரம் வருகிறார் என்பதோ பதட்டமானதும், ஆபத்தானதுமான செய்தியல்ல,அது ஒரு இதமான எதிர்பார்ப்பு ஆகும்...மிரட்டி மதம் மாற்றுவதும் சட்டவிரோதமானதாகும்..!"



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

2006 கடைசியில்தானே சிக்குன் குனியா தமிழ் நாட்டிற்குவந்தது.

 

அப்பொழுதுதான் எனக்கு ஒரு சிந்தனை வந்தது. கடைசி காலத்தில் கொள்ளை நோய்கள் வரும் என்று வேதம் சொல்கிறதே. ஒரு வேளை இது தான் கடைசி காலமாக இருக்குமோஎன்று. அது வரை வருகை பற்றியும், கடைசி காலம் பற்றியும் யோசித்ததில்லை. அப்பதான் ஏஞ்சல் டிவி யும் வந்து கொண்டிருந்தது. சாதுவும்,வின்சென்ட் செல்வகுமாரும் அறிமுகமானார்கள். கடைசி கால காரியங்கள், நிறைவேற வேண்டிய தீர்க்கதரிசனங்கள் பற்றியெல்லாம் கேள்விப்பட்டு என் ஆவிக்குரிய ஆவல் தூண்டப்பட்டு அதைப் பற்றியே அதிகம் யோசித்துஆராய்ச்சி செய்து  இப்ப அவங்களையும் தாண்டிப் போய் விட்டேன்!

 

நில நடுக்கம் பற்றிவின்சென்ட் செல்வகுமார் எழுதிய புத்தகத்தில் படித்து அதைப் பற்றி ஆராய்ந்ததில் தெரிந்தது தினந்தோறும் பூமி அதிர்ந்து கொண்டு இருக்கிறது என்ற அதிர்ச்சி செய்தி.

 

http://earthquake.usgs.gov/earthquakes/

 

என்னுடைய கடைசிக்காலம் சம்பந்தப்பட்ட ஆவிக்குரிய வாழ்க்கைக்கு நல்ல ஒரு தூண்டுகோலாய் இருந்ததால் ஏஞ்சல் டிவி யாராவது பார்க்கவில்லை என்று சொன்னால் என்னையறியாமல் எனக்கு ஒரு வருத்தம் வருகிறது!  வேறொன்றுமில்லை! மற்றபடி இது கடைசிக் காலம், ஆண்டவர் விரைவில் வரப் போகிறார், நாம் ஆயத்தமாய் இருக்க வேண்டும், கடைசிக் கால தீர்க்கதரிசனங்கள் பல நம்மைச்சுற்றிலும் நிறைவேறிக் கொண்டிருக்கிறது என்ற வெளிப்பாடு ஏஞ்சல் டிவி பார்க்காமலேயே ஜனங்களுக்கு உண்டாகிறது என்றாலும் எனக்கு சந்தோஷமே!

 

எனக்கு ஆவிக்குரிய ரீதியில் மிகவும் பிடித்தவர்கள் இப்போதைக்கு வின்சென்ட் செல்வகுமாரும், நம்ம விஜய குமாரும் (vijay76) தான்! சாது அந்த லிஸ்டில் இல்லை. நல்ல மனிதர் தான். நல்ல தீர்க்கதரிசி தான். என்றாலும் பல சமயங்களில்அவர் பேசுகிற அலைவரிசை எனக்கு ஒத்துப் போகிறதில்லை!

 

eloi4u wrote:


ஏஞ்சல் டி.வி பற்றிய என்னுடைய ஒற்றை வரி விமர்சனம்: கிறிஸ்தவ சாயம் பூசப்பட்ட கமர்சியல் சேனல்களின் xerox copy ‍ அவ்வளவே


எனக்கென்னவோநீங்க தரிசித்து சொல்லாமல் ஏதோ விசுவாசத்தில் சொல்வது போல் இருக்கிறது!

 



__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

என்னுடைய தளத்திலேயே ஏஞ்சல் டி.வி ஒளிபரப்பாகிறது (சிலர் கேட்டுக்கொண்டதால் வெளியிட்டிருக்கிறேன் தொடுப்பு). ஆனால் பொதுவாக அதன் நிகழ்ச்சிகள் கொஞ்சம் கமர்சியல் சாயம் பூசப்பட்டிருப்பது போல இருக்கிறது,

dial a song ‍ மற்றும் உலகப்பிரகாரமான rock ‍ இசையில் அமைந்த இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாடல்கள் சாது அவர்கள் சொல்லும் சில காரியங்கள் கொஞ்சம் இடறலாக இருக்கும். எனக்குத் தெரிந்த ஒரு பெண் சாதுஜி அந்த பெண்ணின் ஊரில் நடக்கவிருக்கும் ஒரு அழிவைப் பற்றியும், அதே போல அந்த அழிவு நடந்தவுடன் அந்த பெண் சாதுஜி க்கு தீவிர இரசிகை ஆகிவிட்டதாகவும் என்னிடம் சொன்னார்.

இவர் D.G.S. ‍ ஐ விட வல்லமையான ஊழியர் இவர் சொன்னால் நடக்காமல் போகாது என்று அடுக்கிக் கொண்டே போனார். இப்படி அவருடைய பல இரசிகைகளைப் பார்த்திருக்கிறேன்.

ஏஞ்சல் டி.வி பற்றிய என்னுடைய ஒற்றை வரி விமர்சனம்: கிறிஸ்தவ சாயம் பூசப்பட்ட கமர்சியல் சேனல்களின் xerox copy ‍ அவ்வளவே



__________________
க‌ர்த்த‌ர் என் மேய்ப்ப‌ராய் இருக்கிறார்


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

eloi4u wrote:

 ஏஞ்சல் டீ.வீ எங்கள் ஊரில் வருவது இல்லை,  


 உங்க கேபிள் ஆபரேட்டரிடம் கேளுங்கள்.

Or if possible you can watch it in the internet. 

பார்த்து உங்களுடைய கருத்துக்களை சொல்லுங்களேன்.



__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

golda wrote:

அப்புறம், நீங்க ஏஞ்சல் டிவி பார்ப்பது கிடையாதா? ஏன்?


 ஏஞ்சல் டீ.வீ எங்கள் ஊரில் வருவது இல்லை, ஆசீர்வாதம் டீ.வீ. வரும் சமயம் கிடைக்கும் போது இரவு ஒன்பது மணிக்கு ஒளிபரப்பாகும் தேவ‌செய்திகளைக் கேட்பேன்

 



__________________
க‌ர்த்த‌ர் என் மேய்ப்ப‌ராய் இருக்கிறார்


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

எல்லோரும் ஆரம்பத்தில் நன்றாக ஆவிக்குரிய விதத்தில் தான் ஊழியம் செய்கிறார்கள். வளர வளர ஒரு பெருமை வந்து விடுகிறது. இந்த நூற்றாண்டின் இணையற்ற தீர்க்கதரிசி, அகில உலக அப்போஸ்தன், உலகமெங்கும் வல்லமையாக பயன்படுத்தப்படும் போதகர் என்று அடைமொழி கொடுத்துக் கொள்கிறார்கள்.

அப்புறம், நீங்க ஏஞ்சல் டிவி பார்ப்பது கிடையாதா? ஏன்?



__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

golda wrote:
அவரவர் அவரவர் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு பொறுப்பு. பரிசுத்த ஆவியானவர் துணையோடு எதையும் பகுத்தறிந்து கொள்ள வேண்டியது நம் கடமை.

 

உண்மைதான் ஆனால் இது போன்ற ஊழியர்களும் சரி சுயாதீன சபை நடத்துபவர்களும் சரி தேவனையும் தேவனுடைய வார்த்தைகளையும் முன்னிருத்துவதே கிடையாது, இவர்கள் முன்னிருத்துவது தங்களையும் தாங்கள் எவ்வளவு வல்லமையானவர்கள் என்பதையும் தங்கள் முன் அமர்ந்திருக்கும் மக்களிடம் காட்டவே விரும்புகிறார்கள். கடந்த மாதத்தில் ஒரு சுயாதீன சபைக்கு மாலை நேர ஆராதனைக்கு (சில ஞாயிறுகள்) செல்லும் வாய்ப்பு கிட்டியது அங்கே சொல்லப்பட்ட போதனைகள் இந்த சபைக்கு வந்தால் கடன் பிரச்சனை தீரும், உங்கள் தொழில் வளரும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்றுதான்

என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.(மல்கியா 3:10 )என்ற வசனத்தின் படி நீங்கள் 100 ருபாய் சம்பாதித்தாலும் பத்து ரூபாய் தசம பாகம் கொடுங்கள் அப்பொழுது உங்களுக்கு உங்கள் தேவைகள் சந்திக்கப்படும் படியாக கொடுக்கப்படும் என்ற ரீதியிலேயே இருந்தது

நான் தனியாக போய் என்ன பிரதர் காணிக்கை கொடுத்தால் ஆசீர்வாதம் வந்துவிடுமா? பரலோக இராஜ்ஜியத்தை முதலாவது தேடினால் இவைகள் எல்லாம் நமக்கு கூட கொடுக்கப்படும் என்று வேதம் சொல்லுகிறதே என்றேன். இவங்க எல்லாம் ஒவ்வொரு பிரச்சனையிலிருந்து விடுதலை ஆகனும்னு வந்திருக்காங்க பிரதர் இவங்களுக்கு பரலோகத்த தேடுங்க உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டுன்னு சொன்னம்னா இவங்க இந்த சபைக்கு வரதுக்கு முன்னாலயே இப்படித்தான் இருந்தமையா அப்பறம் எதுக்கு இங்க வரனும்னு கேட்டுட்டு அடுத்த வாரம் வரவே மாட்டாங்க என்று பதில் கொடுத்தார்.

ஆளவுடுங்க சாமி என்று மனதில் நினைத்துக்கொண்டு திரும்பிப்பார்க்காமல் வந்துவிட்டேன்



-- Edited by eloi4u on Thursday 31st of March 2011 04:45:10 PM

__________________
க‌ர்த்த‌ர் என் மேய்ப்ப‌ராய் இருக்கிறார்


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

 

eloi4u wrote:
golda wrote:

சகோ ராஜ்குமார், ஊழியக்காரர்களை சப்போர்ட் பண்ணுவீங்களா, போட்டு தள்ளுவீங்களா - எப்ப என்ன செய்வீங்கன்னு தெரிய மாட்டேங்குதே!


 ஊழியங்களுக்கு நிச்சயம் சப்போர்ட் பன்னுவேன் சகோதரி ஆனால் இது போன்ற அட்டூழியங்களை பார்த்துவிட்டு எதற்காக போட்டு தள்ளக் கூடாது? இந்த துர் உபதேசங்களை பார்ப்பவர்கள் நிச்சயமாக வழிவிலகிப் போகத்தான் போகிறார்கள்

 


 அவரவர் அவரவர் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு பொறுப்பு. பரிசுத்த ஆவியானவர் துணையோடு எதையும் பகுத்தறிந்து கொள்ள வேண்டியது நம் கடமை.

 



__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

golda wrote:

சகோ ராஜ்குமார், ஊழியக்காரர்களை சப்போர்ட் பண்ணுவீங்களா, போட்டு தள்ளுவீங்களா - எப்ப என்ன செய்வீங்கன்னு தெரிய மாட்டேங்குதே!


 ஊழியங்களுக்கு நிச்சயம் சப்போர்ட் பன்னுவேன் சகோதரி ஆனால் இது போன்ற அட்டூழியங்களை பார்த்துவிட்டு எதற்காக போட்டு தள்ளக் கூடாது? இந்த துர் உபதேசங்களை பார்ப்பவர்கள் நிச்சயமாக வழிவிலகிப் போகத்தான் போகிறார்கள்

 



__________________
க‌ர்த்த‌ர் என் மேய்ப்ப‌ராய் இருக்கிறார்
1 2  >  Last»  | Page of 2  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard