Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஏஞ்சல் டிவியில் இன்று..."நினைத்தாலே இனிக்கும்"


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
ஏஞ்சல் டிவியில் இன்று..."நினைத்தாலே இனிக்கும்"
Permalink  
 


Bro John : நான் சில முறை சாதுவும், இன்னொரு அப்பாவி சகோதரரும் (பேரு சரியாய் தெரியவில்லை) உட்கார்ந்து பேசுவதை பார்த்து இருக்கிறேன். அதிலே சாது தன்னை பற்றி பெருமை பேசிக்கொண்டும் அவரை விமர்சிப்பவர்களை தாக்கி கொண்டும் இருந்தார் அந்த சகோதரர் சாதுவுக்கு ஜால்ரா அடித்துக்கொண்டு இருந்தார். காண சகிக்கவில்லை!

Golda : நீஙக சொல்வதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. அவருக்கு மட்டும் தான் அப்படிப்பட்ட அனுபங்கள் உண்டு என்பது போல் பல சமயங்களில் பேசுவது போல் இருக்கும். உதாரணத்திற்கு, ஆண்டவர் ஒரு தகப்பனைப் போல், ஒரு நண்பனைப் போல் பேசினார்...அதையெல்லாம் நீங்க பார்த்தால்தால் அல்லது கேட்டால்தாம் புரியும் என்று சொல்லும் போது அதில் கொஞ்சம் பெருமை காணப்படுவது போல் எனக்குத் தோன்றும். ”ஓடு மீன் ஓட உறு மீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு” என்பதன்படி, சின்ன மீனையெல்லாம் விட்டு விட்டு எனக்குத் தேவையான் பெரிய மீனை அவர் சொல்வதிலிருந்து நான் எடுத்துக் கொள்வேன். தேவ தூதர்கள் வந்து கொடுத்ததாக அவர் சொல்லும் சில வெளிப்பாடுகள், என் சிந்தையிலும் தானாக உண்டாகியிருப்பதைக் கண்டு நான் ஆச்சர்யமடைந்திருக்கிறேன். தரிசனம், சொப்பனம் மூலமாக மாத்திரம் அல்ல , சிந்தனையிலும் வெளிப்பாடு உண்டாகும் என்று அகஸ்டின் ஜெபக்குமார் ஒரு முறை சொன்னதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தேன்.

சிலர் அவரைத் தவறாய் பேசுவதைக் குறித்து வருந்திப் பேசுவதை தவறென்று சொல்ல முடியாது. மாம்சமான யாருக்கும் வருத்தமும், வேதனையும், கோபமும் வரத்தான் செய்யும்!

அது ஆனந்த்! சாது பாஸ் என்பதால் ஜால்ரா தான் போட முடியும்!

Bro John : Physical எருசலேமில் ஒன்றும் இல்லை.

Golda : அப்படி சொல்லி விட முடியாது.எருசலேம் என்றென்றும் ஆண்டவருக்கு சொந்தமான் இடம். அவர் நாமம் அங்கே எழுதப்பட்டிருக்கிறது. ஆயிரம் வருட அரசாட்சியின் போது இயேசு கிறிஸ்து அங்கிருந்துதான் ஆட்சி செய்வார். அது மகாராஜாவின் நகரம்.பிரபஞ்சத்தின் நித்திய தலை நகரம்.ஏதேன் தோட்டம் அஙுதான் இருந்ததாம். மனிதன் வீழ்ந்த இடம் அதுதான். மீட்கப்பட்ட இடமும் அதுதான். இந்த கடைசி காலத்தில் பல காரியங்கள் இஸ்ரேல், எருசலேமை மையப்படுத்தித்தான் நடக்கும். ஆவிக்குரிய யுத்தம் உச்ச கட்டத்தில் இருக்கும் இடம் அதுவாகத்தான் இருக்கும்.

இன்னும் எருசலேம் பற்றி பின்பு எழுதுகிறேன்.



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
RE: ஏஞ்சல் டிவியில் இன்று..."நினைத்தாலே இனிக்கும்"
Permalink  
 


Brother John : கடைசி முறை இந்தியா வந்து இருந்தபோது பிகார் மாநிலம் சென்று ஒரு Missionary ஐ சந்தித்து விட்டு வந்தேன். அந்த ஜனங்களை பார்த்தபோது மனதுக்கு கனமாக இருந்தது இன்னும் இருக்கிறது.

Golda : That is nice. அகஸ்டின் ஜெபக்குமாரின் கூட்டங்களுக்கு சென்றால், பீகார் உடனே போக வேண்டும் என்று ஒரு பாரம் உண்டாகும்! விபச்சாரத்தையே தொழிலாய் கொண்டுள்ள ஒரு கிராமத்திலுள்ள ஒரு பெண்ணை இவர்கள் குடும்பத்தில் பாதுகாப்பாய் வைத்திருப்பதாகச் ஒரு முறை சொன்னார்.

அதிலிருந்து இந்த கலர் லைட் போட்டு , பொண்ணுங்களையும், பசங்களையும் ஆட விட்டு ஆராதனை (நெசமாவா?) நடத்தும் வியாபாரிகளைப்பார்த்தால் இன்னும் அதிகமாக கோபம் வருகிறது.

நான் ஒரு தடவை கேக், சிப்ஸ் போன்ற snacks வகையறா வாங்கும் போது யோசித்தது- 3 வேளை சாப்பாட்டுக்கு வழியில்லாமல் கஷ்டப்படும் ஜனம் ஏராளம் இருக்க, இப்படி சாப்பாடு போக எக்ஸ்ட்ரா ஐட்டமும் வாங்கி நம்மால் சாப்பிட முடிகிறதே என்று. நம்மிடம் இருக்கும் எல்லா எக்ஸ்ட்ராவும் நம்மை குற்றவாளிகளாகத்தான் தீர்க்கும் என்று நினைக்கிறேன்.

என்ன சொல்ல வர்றேன்னா, நம் கண்ணில் இருக்கும் துரும்பு நமக்கு தெரிவதில்லை.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 

//என்ன கொடுமை இது. பேசுறவங்க எல்லோருமே எதையும் பாக்காமதான் பேசுறாங்க! முதல்ல பாருங்க சகோ ஜான். இன்டர்நெட்டிலாவது பாருஙக.ஒரு மாதமாவது ஜெபத்துடன் பாத்துட்டு அப்புறம் பேசுங்களேன்.//

நான் சில முறை சாதுவும், இன்னொரு அப்பாவி சகோதரரும் (பேரு சரியாய் தெரியவில்லை) உட்கார்ந்து பேசுவதை பார்த்து இருக்கிறேன். அதிலே சாது தன்னை பற்றி பெருமை பேசிக்கொண்டும் அவரை விமர்சிப்பவர்களை தாக்கி கொண்டும் இருந்தார் அந்த சகோதரர் சாதுவுக்கு ஜால்ரா அடித்துக்கொண்டு இருந்தார். காண சகிக்கவில்லை!

//எருசலேம் போகும்படி ஆண்டவர் உங்களை அழைத்தாலும் அழைக்கலாம்//

அங்கே என்ன இருக்கு? இயேசு எருசலேமிலா இருக்கிறார்? எருசலேம் டூர் போவதும், மீட்டிங் நடத்துவதும் ஒரு வியாபார தந்திரமே! சாது ஏன் இப்போது திபெத் போகிறது இல்லை?  கடைசி முறை  இந்தியா வந்து இருந்தபோது  பிகார் மாநிலம் சென்று ஒரு Missionary ஐ சந்தித்து விட்டு வந்தேன். அந்த ஜனங்களை பார்த்தபோது  மனதுக்கு கனமாக இருந்தது இன்னும்  இருக்கிறது. அதிலிருந்து இந்த கலர் லைட் போட்டு , பொண்ணுங்களையும், பசங்களையும் ஆட விட்டு ஆராதனை (நெசமாவா?) நடத்தும் வியாபாரிகளைப்பார்த்தால் இன்னும் அதிகமாக கோபம் வருகிறது.

மேலும் சொன்னால், இயேசு கிறிஸ்து கூட  எருசலேமை Defend பண்ணவில்லை

அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது. (யோவான் 4:21)

Physical எருசலேமில் ஒன்றும் இல்லை.

இவைகள் ஞான அர்த்தமுள்ளவைகள்; அந்த ஸ்திரீகள் இரண்டு ஏற்பாடுகளாம்; ஒன்று சீனாய்மலையிலுண்டான ஏற்பாடு, அது அடிமைத்தனத்திற்குள்ளாகப் பிள்ளைபெறுகிறது, அது ஆகார் என்பவள்தானே. ஆகார் என்பது அரபிதேசத்திலுள்ள சீனாய்மலை; அந்த ஆகார் இப்பொழுதிருக்கிற எருசலேமுக்குச் சரி; இவள் தன் பிள்ளைகளோடேகூட அடிமைப்பட்டிருக்கிறாளே. மேலான எருசலேமோ சுயாதீனமுள்ளவள், அவளே நம்மெல்லாருக்கும் தாயானவள் (கலாத்தியர் 4:24-26)



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

ebi wrote:

நான் ஒரு வாரம் வரை ஏஞ்சல் டீ.வி பார்த்திருப்பேன். அதற்கு மேல் எனக்கு பார்க்க பிடிக்கவில்லை. அதை பார்ப்பதால் நிச்சயமாக ஒரு பிரயோஜனமும் இல்லை என்று அறிந்ததால் நிறுத்திவிட்டேன். 


நல்ல விஷயத்தைத்தான் பிசாசு பார்க்க விட மாட்டான் அல்லவா?

வேறு என்ன டிவி நிகழ்ச்சிகள் பார்ப்பீர்கள்?

 



__________________
ebi


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

நான் ஒரு வாரம் வரை ஏஞ்சல் டீ.வி பார்த்திருப்பேன். அதற்கு மேல் எனக்கு பார்க்க பிடிக்கவில்லை. அதை பார்ப்பதால் நிச்சயமாக ஒரு பிரயோஜனமும் இல்லை என்று அறிந்ததால் நிறுத்திவிட்டேன். 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

John wrote:
//கேள்வி என்னவென்றால், "ஒரு மாடு சுத்திசுத்திவருதாம், இப்படி 30 அடிகள் வரையிலும் சுத்திசுத்தி வரும் அந்த மாட்டின் இரண்டு கால்கள் மட்டும் 31 அடிகள் சுற்றுகிறதாம்..." அது எப்படி..? //
 
இப்படிப்பட்ட விசுவாசத்தை துண்டும் (???) நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் ஏஞ்சல் டி.வி நான் பார்க்க முடியாததிற்க்காக தேவனை துதிக்கிறேன்

  என்ன கொடுமை இது. பேசுறவங்க எல்லோருமே எதையும் பாக்காமதான் பேசுறாங்க! முதல்ல பாருங்க சகோ ஜான். இன்டர்நெட்டிலாவது பாருஙக.ஒரு மாதமாவது ஜெபத்துடன் பாத்துட்டு அப்புறம் பேசுங்களேன்.யாருக்குத் தெரியும் எருசலேம் போகும்படி ஆண்டவர் உங்களை அழைத்தாலும் அழைக்கலாம்!



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 

//கேள்வி என்னவென்றால், "ஒரு மாடு சுத்திசுத்திவருதாம், இப்படி 30 அடிகள் வரையிலும் சுத்திசுத்தி வரும் அந்த மாட்டின் இரண்டு கால்கள் மட்டும் 31 அடிகள் சுற்றுகிறதாம்..." அது எப்படி..? //
 
இப்படிப்பட்ட விசுவாசத்தை துண்டும் (???) நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் ஏஞ்சல் டி.வி நான் பார்க்க முடியாததிற்க்காக தேவனை துதிக்கிறேன்


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

golda wrote:
கண்டு பிடித்து விட்டேன்!

எந்த மாடு எவ்வளவு தூரம் போனாலும், முன்னால் உள்ள இரண்டு கால்களை விட பின்னால் உள்ள இரண்டு கால்கள் ஒரு அடி பின்னால் தான் இருக்கும்!


நல்ல முயற்சி சகோதரி,அவர்களே...உங்களுக்கு எனது ஸ்பெஷல் பாராட்டுகள்...ஆனால் விடை சரியானதல்ல‌...இப்படித்தான் ஜோயலும் வெறுப்பேற்றினார்,நீங்களே யோசித்துப் பாருங்களேன், எந்தவொரு ஜீவனுடைய முன்னங்கால்களைத் தானே கணக்கில் எடுத்துக்கொள்ளமுடியும்..? பின்னங்கால்களையா கணக்கில் எடுப்பது? அப்படியும் ஸ்டாப் என்றதும் மாடு என்ன அட்டேன்ஷன் என்றா நிற்கும்...? ஸூப்பர் ஜோக்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

chillsam wrote:

கேள்வி என்னவென்றால், "ஒரு மாடு சுத்திசுத்திவருதாம், இப்படி 30 அடிகள் வரையிலும் சுத்திசுத்தி வரும் அந்த மாட்டின் இரண்டு கால்கள் மட்டும் 31 அடிகள் சுற்றுகிறதாம்..." அது எப்படி..?

நானும் கொஞ்சம் விளையாடி பாக்கறேனே...நிகழ்ச்சியைப் பார்த்தவர்களோ அல்லது விடையைத் தெரிந்தவர்களோ தாராளமாக இங்கே பகிர்ந்து கொள்ளலாம்; கர்த்தருடைய பிள்ளைகளான நாம் (?!) இதைக் கூட தெரிந்து வைத்துக்கொள்ளாவிட்டால் நம்மைக் குறித்து சாத்தான் என்ன நினைப்பான்..?


 கண்டு பிடித்து விட்டேன்!

எந்த மாடு எவ்வளவு தூரம் போனாலும், முன்னால் உள்ள இரண்டு கால்களை விட பின்னால் உள்ள இரண்டு கால்கள் ஒரு அடி பின்னால் தான் இருக்கும்!

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

chillsam wrote:

 பைத்தியம் பிடிக்காதது தான் குறை..!


அப்படி பைத்தியம் பிடிக்காமல் இருக்த்தான் ஜோயல் நிகழ்ச்சியைப் பார்க்க வேண்டும்!!

நானும் அதை முழுமையாகப் பார்க்க வில்லை. என்ன விடை என்று தெரியவில்லையே!



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: ஏஞ்சல் டிவியில் இன்று..."நினைத்தாலும் இனிக்கும்"
Permalink  
 


நம்முடைய எதிர்ப்பின் காரணமாகவோ என்னவோ,"நினைத்தாலே இனிக்கும்" என்ற நிகழ்ச்சியின் பெயர், "ஹலோ ஏஞ்சல்" என்று மாற்றப்பட்டுள்ளது; இந்த வாரம் (On 10.04.2011@7am) தம்பி ஜோயல் அற்புதமான ஒரு கேள்வியுடன் நிகழ்ச்சியை நடத்தினார்; அது நம்முடைய பொதுஅறிவுக்கும் பக்திவிருத்திக்கும் எவ்வளவு பிரயோஜனமாக இருந்தது என்பதெல்லாம் அவரவருடைய சொந்த அனுபவம் ஆகும்.

கேள்வி என்னவென்றால், "ஒரு மாடு சுத்திசுத்திவருதாம், இப்படி 30 அடிகள் வரையிலும் சுத்திசுத்தி வரும் அந்த மாட்டின் இரண்டு கால்கள் மட்டும் 31 அடிகள் சுற்றுகிறதாம்..." அது எப்படி..?

நானும் கொஞ்சம் விளையாடி பாக்கறேனே...நிகழ்ச்சியைப் பார்த்தவர்களோ அல்லது விடையைத் தெரிந்தவர்களோ தாராளமாக இங்கே பகிர்ந்து கொள்ளலாம்; கர்த்தருடைய பிள்ளைகளான நாம் (?!) இதைக் கூட தெரிந்து வைத்துக்கொள்ளாவிட்டால் நம்மைக் குறித்து சாத்தான் என்ன நினைப்பான்..?

பை தி வே சகோதரி கோல்டா அவர்களுடைய கருத்துக்கு நான் காரசாரமான பதிலைக் கொடுக்க எண்ணி ஒருவாரத்துக்குமேலாக எனது ப்ரோஸரை மூடாமலே வைத்திருந்தேன்; ஆனாலும் சமயம் வாய்க்காததால் (தேவ சித்தம் இல்லையோ..?) அதனை நிறைவேற்ற முடியவில்லை... நிறைய யோசிக்கிறேன்..ஆனால் மறந்துவிடுகிறது... எழுதுவதும் இல்லை... பைத்தியம் பிடிக்காதது தான் குறை..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
ஏஞ்சல் டிவியில் இன்று..."நினைத்தாலும் இனிக்கும்"
Permalink  
 


Brother Chillsam:

//கிறித்துவின் புனிதமான சீஷத்துவ முன்மாதிரிகளுக்கு விரோதமாகத் தொடர்ந்து செயல்பட்டுவரும் கிறித்தவ தொலைக்காட்சியான ஏஞ்சல்டிவி விரைவில் முடக்கப்பட நாமெல்லாம் பாரத்துடன்ஜெபிப்போமா? //

 காற்றுக்கு வேலி போட முடியுமா?

கடலுக்கு அணை கட்ட முடியுமா?

தேவன் செய்ய நினைப்பதை தடுக்க முடியுமா?

தேவனோடு போர் செய்து ஜெயிக்க முடியுமா?

தேவ சித்தத்திற்கு விரோதமான் ஜெபம் கூரையைத் தாண்டுமா?

சிந்தனை செய் மனமே!



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

I have an objection. ஒரு பெண்ணைக் குட்டி என்பது சரியான வார்த்தைப் பிரயோகம் கிடையாது என்பது தமிழில் பாண்டித்தியம் உள்ள தங்களுக்கு நிச்சயமாக தெரிந்திருக்கும்.

 அது மோன்சி. இப்பொழுது திருமணமாகி இலண்டன் சென்று விட்டதாக கேள்வி. அது retelecast என்று நினைக்கிறேன். டெலிபோன் மணி போல் நன்றாக சிரிக்கும் அந்தப் பெண்! மோன்சி ஜோயலை தம்பி என்பதால் நீ வா போ என்று சொல்வதையும் ஜோயல் மோன்சியை அக்கா என்று கூப்பிடுவதையும் கவனித்திருக்கலாம்.

எதிர் பாலருடன் பேசும் போது (எல்லா வகையிலும்) distance keep up பண்ணுவது நல்லதுதான். ஏவாளுக்கு 7 அடி. ஆதாமுக்கு 6 அடி தள்ளி நிற்க வேண்டும் என்று எங்க பாஸ்டர் சொல்வார்.

என்றாலும் சேர்ந்து படிக்கிறார்கள். சேர்ந்து வேலை பார்க்கிறார்கள். என்வே எதிர் பாலருடன் பேசுவது, சிரிப்பது, சில சமயம் கை குலுக்குவது முற்றிலுமாக தவிர்க்க முடியாது.

Maturity இருந்தால் பரவாயில்லை. இல்லாவிட்டால், எதிர் பாலரின் உடை(same same sweet), தோற்றம்( இன்றைக்கு bright ஆ இருக்கீங்க, சோகமா இருக்கீங்க) பற்றி பேசாமல் இருப்பது நலம்.

அது போல் பெயரை சுருக்கி கூப்பிடுவதை தவிர்ப்பது நல்லது உம்: ஜோயலை ஜோ என்று சொல்வது, பாலமுருகனை , பாலா என்று அழைப்பது, வனிதாவை வனி என்று அழைப்பது

ஜோயல் மொக்கை கேள்வி கேட்பதாக சொல்கிறீர்களே. கிறிஸ்தவர்கள் என்றால் கடி ஜோக் சொல்லக் கூடாதா??

ஜோயலின் அண்ணன் தான் ’ஆராய்ச்சி அரங்கம்’ நடத்தும் Michael Thomasraj என்று நீங்க ஒரு சமயம் வெளியிட்டிருந்த அவ்ர்கள் குடும்ப படத்தைப் பார்த்து தெரிந்து கொண்டேன்.நன்றி!

 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
ஏஞ்சல் டிவியில் இன்று..."நினைத்தாலே இனிக்கும்"
Permalink  
 


கிறித்தவ தொலைக்காட்சியான ஏஞ்சல் டிவி "நினைத்தாலே இனிக்கும்" என்ற சினிமா படப் பெயரில் நேயர் விருப்பப் பாடல் நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பை நடத்தி வருகிறது;கர்த்தரை ஆராதிக்கும் விசேஷித்த நாளான ஞாயிறன்று காலையில் இந்த நிகழ்ச்சியினை நடத்துவது ஒரு சிறப்பம்சமாகும். இதிலிருந்து என் மனதை பாதித்தவற்றை இங்கே போட்டுவைக்கிறேன்;காதுள்ளவன், கேட்கிறவன் கேட்கட்டும்.

இன்றைய  நிகழ்ச்சி முடியுந்தருவாயில் இதனை கவனிக்க நேர்ந்தது;அந்த நிகழ்ச்சியை நடத்தும் பிரபல‌ பெந்தெகொஸ்தே போதகரின் மகனான ஜோயல் வழக்கமாக ஏதாவதொரு சப்பையான கேள்வியைக் கேட்பார், அதனைத் தொடர்ந்து விருப்பப் பாடலைக் கேட்பார்; அவரோடு உதவிக்கு (?!) ஒரு குட்டி நிற்கிறாள்; அவளுடைய சிரிப்பும் அரட்டையும் அவ்வப்போது எப்படியாவது ஜோயலைத் தொட்டுவிட துடிக்கும் அவளுடைய கைகளும் பார்க்கவே அருவருப்பு;(என் கண்களில் தான் இருப்பதாக சாதுஜி சொல்லுவார், பாருங்கள்...)

இன்னொருத்தியின் புருஷனான ஜோயலை வா,போ என்று சொல்லுவது இன்னொரு கலாச்சார சீர்கேடு ஆகும்; ஒருவேளை சொந்த சகோதரியாக இருந்தாலும் பரவாயில்லை; ஆனால் அக்கா தங்கையுடன் நிகழ்ச்சியை நடத்தினால் ஒருவித கிளுகிளுப்பு 'மிஸ்' ஸாகுமே? ஜோயலுக்கும் அவருடைய மனைவிக்கும் சரியான புரிதல் இராதிருந்தால் இதனால் நிச்சயமாகவே அவருடைய மனம் பாதிக்கப்படும்; எந்தவொரு பெண்ணும் தன்னுடைய கணவன் இன்னொருத்தியுடன் நின்று அரட்டையடிப்பதை விரும்பமாட்டான்;அது கிறித்தவ ஒழுங்கும் அல்ல‌;இதுவே பல்வேறு பாலியல் குற்றங்களுக்கும் ஆரம்ப வித்தாகும். ஏற்கனவே இந்திய சமுதாயத்தின் கலாச்சாரம் கிறித்தவர்களால் சீர்கெட்டு வருவதாக எதிரிகளால் குற்றஞ்சாட்டப்படுகிறது;அது உண்மைதான் என்று தம்பட்டம் அடிப்பது போலவே ஏஞ்சல் டிவி செயல்படுகிறது;கேட்டால் ஜோயலும் அந்த குட்டியும் (பெயர், ஏதோ மான்ஸியோ மின்ஸியோ ஏதோவொரு கர்மம்...நினைவில் நிற்கவில்லை...) என்ன சொல்லுவார்கள், இது எங்கள் ப்ரஃபொஷன்,என்பதாக;அதாவது தொழில்,என்ன தொழில்? இது உங்களுக்குத் தகுதியானது தானா? இதனால் தேவநாமம் எந்த வகையில் மகிமையடையும் என்று சொல்லவருகிறீர்கள்? உங்கள் சொந்த மூளையறிவினாலும் சுயமான திட்டங்களாலும் தேவ ராஜ்யத்தை ஸ்தாபித்துவிடுவீர்களா?

விஷயத்துக்கு வருகிறேன், கேள்விக்கு பதிலைக் கேட்டே நிகழ்ச்சி தொடரும்;அதற்கு சரியான பதிலை யாரும் சொல்லுவதில்லை;ஏனெனில் அது பைபிளிலிருந்து கேட்கப்படுவதில்லை,அதனால் பக்திவிருத்தியும் உண்டாவதில்லை; ஆனால் நேயரை அங்கே இங்கே நகரவிடாமல் டிவி முன்பாக வைத்திருக்கவே இந்த தந்திரம் கடைபிடிக்கப்படுகிறது;இது சற்றும் ஐயமில்லாமல் (சன் டிவி போன்ற‌) சாத்தானின் அதே வழிமுறை தானே?

இன்றைய நிகழ்ச்சியில், "ஆரம்பமும் முடிவும் இல்லை,நடுவிலும் எதுவுமில்லை,அது என்ன?" என்ற ஒரு அபூர்வமான கேள்வியை ஜோயல் கேட்கிறார்; இன்றைக்கு  இந்த நிகழ்ச்சியில் இறுதியாக பெண் ஒரு டாக்டர் காலராகப் பேசினார்;அவரிடமும் இந்த சப்பையான கேள்வியை ஜோயல் கேட்கிறார்; கேட்கும் போதே நேர்மையுடன் ஜோயல் சொல்லிவிட்டார், இது ஒரு கீழ்த்தரமான மட்டரகமான கேள்வி என்பதாக. ஜோயல் டாக்டரிடம் பொதுவாக விசாரிக்கும்போது அந்தம்மா சொல்கிறார், அண்மையில் தீர்க்கதரிசன மாநாடு நிகழ்ச்சியை ஏஞ்சல் டிவியில் நேரடி ஒளிபரப்பு செய்தபோது ஓபி (OP) வார்டில் மற்ற செவிலியர் மற்றும் மருத்துவர்களுடன் இணைந்து பார்த்தாராம், அப்போது தேவப் பிரசன்னம் அப்படியே வந்து நிரப்பியதாம்; இவர் எதை தேவப்பிரசன்னம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார் என்பது புரியவில்லை;ஏனெனில் ஏஞ்சல் டிவி முழுக்க முழுக்க ஒரு கள்ள உபதேச ஊடகமாகும்;அதன் தலைவர்களான சாதுஜியும் வின்சென்ட் செல்வகுமாரும் கள்ள தீர்க்கதரிசிகள் ஆவர்; இந்த அதிர்ச்சிகரமான உண்மையை அறியும் ஆவியின் அபிஷேகம் ஒரு கிறித்தவனுக்கும் இல்லையோ அல்லது இருந்தும் சுயநலத்துக்காக ஒத்தூதுகிறார்களோ தெரியவில்லை.

இந்நிலையில் அந்த பெண் டாக்டரின் நிலைமையை நினைத்தால் பரிதாபமாக இருந்தது;அவரிடமும் ஜோயல் அதே கேவலமான- கீழ்த்தரமான- மட்டரகமான (அவருடைய ஸ்டேட்மெண்ட்டின் படியே..) கேள்வியைக் கேட்டார்,"டாக்டர்,யாருமே இதுவரை பதில் சொல்லவில்லை,நீங்கள் சொல்லுங்கள்,ஆரம்பமும் இல்லை முடிவும் இல்லை,அது என்ன?" அவர் மிக நேர்மையுடன் தெரியாது என்றதும் 'உங்களுக்குப் பிடித்தமான பாடல் என்ன', என்று கேட்க அவர் சொன்ன பாடலை ஒளிபரப்பினார்கள்;அது காலஞ்சென்ற மூத்த பெந்தெகொஸ்தே போதகர் சுந்தரம் அவர்களின் பேராண்டி சினிமா பாணியில் இளம்பெண்களுடன் ஆடிப் பாடிய, "அந்த சூரியன் அந்த சந்திரன்" எனும் பாடலாகும்; ஒருவழியாக நிகழ்ச்சி முடியுந்தருவாயில் கேள்விக்கான பதிலை ஜோயல் பக்கத்திலிருக்கும் குட்டியைப் பார்த்து இளித்துக்கொண்டே சொல்லுகிறார், "வேறொண்ணுமில்லை,அதான் ஓட்டை வடை...அது ரௌண்டா இருக்குதா அதனால ஆரம்பமும் இல்ல,முடிவும் இல்லை,அப்புறம் நடுவில ஒரு பெரிய ஓட்டை(?!) இருக்குதா,அதான் நடுவில ஒண்ணுமில்ல‌..!" என்பதாக‌.

அதாவது உளுத்தம்பருப்பை ஊறவைத்து அரைத்து எண்ணையில் பொறித்தெடுத்து உப்பியிருக்கும் மெதுவடையைச் சொல்லுகிறார்;அது ரெண்டு தரம் ஊறவைக்கப்படுவதாலோ என்னவோ உளுத்தம்பருப்பாக இருப்பதாலோ என்னவோ கொஞ்சம் உப்பலாகவே இருக்கும்;அது சரியாக வேகாது என்பதாலோ அல்லது ஒரு கவர்ச்சிக்காகவோ அதைச் சுடும்போதே அதன் நடுவில் பாட்டி ஒரு ஓட்டையைப் போட்டு விடுவாள்; தமிழர்களின் தனிச் சிறப்பு பலகாரமான மெதுவடையைக் கூட சர்ச்சைக்குரியதாக்குகிறார்களே இந்த ஊழியர்கள்..? ஒருவேளை தற்கால இளைஞர்களுக்கு நடுவில் ஓட்டை போட்ட மெதுவடையின் தத்துவம் தெரியாதோ என்னவோ (சாப்பிட மட்டும் தெரியும்..!) என்ற கரிசனையிலேயே இத்தனை விவரத்தையும் சொல்லவேண்டியதாகிறது.

ஆஹா...ஏய்ப்புதல் எப்படியெல்லாம் வீட்டுக்குள்ளயும் சபைக்குள்ளயும் பொங்கிக்கினு வருது பாத்தியளா? இதப் பார்த்து காப்பியடித்து சபைகளின் இளைஞர் குழுவும் பாஸ்டரிடம் சண்டைபிடித்து ஒரு சிறப்பு நிகழ்ச்சியை சபையிலேயே நடத்துவார்கள்;அதனை பாஸ்டரின் அருமை மகனாரே தொகுத்து வழங்குவார்,அதனை சபைக்கு வரும் குட்டிகளிலேயே சிட்டாகவும் சிக்காகவும்  துட்டாகவும் துடுக்காகவும் இருக்கும் ஒருத்தியுடன் இணைந்து நடத்துவார்,இதையெல்லாம் பார்ப்பதற்காக இவர்களுடைய மணவாளனும் வானத்திலிருந்து பிகில் ஊதிக்கினே வருவாரு இல்ல‌..? என்னய்யா செய்யப் போறதா திட்டம் வெச்சுருக்கீங்க‌...கிறித்துவின் மணவாட்டியை விபச்சாரியாக்கப் போறீங்களா, கம்மனாட்டிகளே..?

வேதம் தெளிவாக போதிக்கிறது,

  • "நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்." (ரோமர்.12:2) என்பதாக‌.

ஆனால் முற்றுந்துறந்த முனிவராக வேடமிடும் சாதுவே இதுபோன்ற  நிகழ்ச்சிகளின் இயக்குநர் என்பது எத்தனை கேவலமல்லவா?  கிறித்துவின் புனிதமான சீஷத்துவ முன்மாதிரிகளுக்கு விரோதமாகத் தொடர்ந்து செயல்பட்டு வரும் கிறித்தவ தொலைக்காட்சியான ஏஞ்சல் டிவி விரைவில் முடக்கப்பட நாமெல்லாம் பாரத்துடன் ஜெபிப்போமா?  கிறித்தவர்கள் ஏஞ்சல் டிவியை புறக்கணிக்கவேண்டும்; தன்னைத் தான் தீர்க்கதரிசி என்று அறிவித்துக்கொண்டு, தனக்கு தசமபாகம் அனுப்பச்சொல்லி வெட்கமில்லாமல் பகிரங்கமாக பிச்சையெடுக்கும் சாதுஜி ஒவ்வொரு வட்டார சபைகளிலும் இதுபோல வேசித்தன முகாந்தரத்துடன் நிகழ்ச்சிகளை நடத்தினால் ஒப்புக்கொள்ளுவாரா? சாதுஜி இதன் மூலம் யாரையோ ஆதாயப்படுத்துவதாகச் சொல்லி ஊரை ஏமாற்றாமல் நேரடியாகவே ஒரு சினிமாக்காரனாக மாறி அவருடைய "எல்லா" வெறியையும் தணித்துக்கொள்ளலாம்;அங்கே கேட்பாரும் மேய்ப்பாரும் இல்லை.

ஆனால் இங்கே ஆடுகளின் பெரிய மேய்ப்பனான இயேசுவானவர் உண்டு;அவருடைய தியாகங்களைக் கொச்சைப்படுத்தும் வண்ணமாகவும் அவருடய அடியவர்களின் இரத்தத்தை கேவலப்படுத்தும் வண்ணமாகவும் நீங்களெல்லாம் செயல்படுவதை அனுமதிக்கமுடியாது;உங்களுடைய ஒவ்வொரு அருவருப்பானதும் சத்தியத்துக்கு விரோதமானதுமான நிகழ்ச்சியையும் பார்த்து தனித்தனியாக விமர்சிக்க எங்களுக்கு நேரமில்லாததால் உங்கள் தொலைக்காட்சி ஊ(அட்டூ)ழியத்தைக் குறித்த பொதுவான மனக்குமுறலை இங்கே கொட்டியிருக்கிறேன்;நீங்கள் ஏற்கனவே ட்ராக் செட் பண்ணி செட்டிலாகிவிட்டீர்கள்;இதற்கு மேல் திருந்த வாய்ப்பிலை;ஆனாலும் எனது ஜனத்தை எச்சரிக்கும் வைராக்கியம் காரணமாக நான் ஏதோ எழுதியிருக்கிறேன்;அறிவுடன் சிந்திப்பவர்கள் நிச்சயமாகவே என்னுடைய உணர்வுகளைப் புரிந்துகொள்ளுவார்கள்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard