இலங்கையில் சமாதானம், ஆசீர்வாதம் உண்டாகும்.தமிழ் மக்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள்
இலங்கையில் அமைதியாவது... மண்ணாங்கட்டியாவது........! இரண்டரை இலட்சம் தமிழ் மக்களை பறி கொடுத்து விட்டு.. அமைதியா...! தாய் / மகள் / மருமகள் / பேரப்பிள்ளை என வகை இல்லாமல். குடும்பத்தார் முன்னிலையில் மாறி, மாறி கற்ப்பழித்து. பலரை கர்ப்பிணிகளாய்,சிங்களவன் மாற்றி விட்டான்...! எமது மக்கள் இழி நிலையில் உள்ளனர்...! இவ்வளவு அவலங்களுக்கு பின், எமது மக்கள், சிங்களவனுக்கு அடிமையாக வாழ மாட்டார்கள். தலை முறை, தலை முறையாக போராட்டம் ஈழம் கிடைக்கும் வரை தொடரும். ஈழம் அமையாமல் அங்கு அமைதி வராது....! அமைதி வரும் என்றால், ஏன் சிங்களவன் இன்னும் 2 இலட்சம் பேரை இராணுவத்தில் சேர்க்க வேண்டும்.. ஏன் தன்னுடைய ஆயுத பலத்தை, பன் மடங்கு பெறுக்க வேண்டும்....? மன்னாரில் Petrol கண்டு பிடிக்கப்படும் வரைக்கும் தான் மவுனம்.. அதன் பிறகு. புலி வரும்.. சிங்களவனுக்கு கிலி பிடிக்கும்...
குறிப்பு: தீர்க்கதரிசனம் சொன்ன தீர்க்கதரிசியின் முன்னால் அவருடைய தாய் / மனைவி / சகோதரி / பிள்ளை - பலரால் கற்ப்பழிக்க பட்டு / அனைவரும் ஒரே சமயத்தில் கர்ப்பவதிகள் ஆனால் அமைதியாய் இருப்பாரோ...? அதே போல் ஆண் பிள்ளையளையும், கொலை செய்தால்,அமைதியாய் இருப்பாரோ..? குறைந்த பட்சம் மனதிலாவது கசப்படைய மாட்டாரோ...?
தீர்க்கதரிசனத்தை எதிரி கேள்விபட்டால் நகைப்பான்....! இவரை வைத்தே எம் மக்களை ( ஈழ கிறிஸ்தவர்களை ) மோசம் அடைய செய்வான்.....!
( இது அரசியல் அல்ல.. பொய் தீர்க்கதரிசனத்துக்கான பதில் ).
ஆனால் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள காரியங்கள் எல்லாம் உறுதியாக நடக்கும் என்ற அர்த்தத்திலேயே உள்ளது. அதாவது அப்பத்தாழ்ச்சி உண்டாகும்,எழுப்புதல் உண்டாகும்,ஆசீர்வதிக்கப்படுவார்கள்,பலமாய் ஊற்றப்படுவார்....... போன்று.கண்டிப்பாக நடைபெறும் என்று உரைக்கப்பட்ட ஒன்று நிறைவேறத்தானே செய்யும். அதற்கு ஜெபிப்பதால் என்ன பலன் என்பதே என் கேள்வி.
//எபி: மேலும் அமெரிக்கா, ஆஸ்திரேலியாவைப் பற்றிய தீர்க்கதரிசனம் அந்நாட்டவருக்கு தெரியப்படுத்தியாச்சா?//
கோல்டா:எந்த காலத்தில இருக்கீங்க? இன்டர்நெட்,டிவி போன்ற மீடியாவில் போட்டால்தான் உலகமே பார்க்கலாமே!//
இண்டர்நெட்டில் இன்று ஆயிரக்கணக்கான தளங்களும், செய்திகளும் இருக்கின்றன. எதை நம்பமுடியும். மேலும் எல்லாரும் எல்லாவற்றையும் வாசிப்பதில்லை. மேலும் இது எந்த டி.வில வந்தது? அந்த நாட்டு அரசாங்கத்திற்கு தெரிவிப்பதன் மூலமே அதிக பலன் கிடைக்கும்.
//எபி:இதுவரைக்கும் அவர் எந்த தேசத்தையும் சந்திக்காமல் இக்காலத்தில்தான் சந்திக்கிறாரா?//
கோல்டா:இது விதண்டாவாதம்!
எபி:அறுவடைக்கு என்று தனிஆண்டா?
கோல்டா:இதுவும் அப்படியே!//
என்ன கோல்டா, உங்களுக்கே விதண்டாவாதமாக தெரிகிறதா? ”தேவன் தேசத்தை சந்திக்கிற காலமிது,இது அறுவடையின் ஆண்டு” என்று ஒருவர் சொல்லும் போது இந்த கேள்விகள் தோன்றத்தானே செய்யும்? இது எப்படி விதண்டாவாதமாகும்?
உங்களிடம் நிறைய நல்ல விஷயங்கள் இருப்பதாக உணருகிறேன்;எனவே தயவுசெய்து நிதானமாகவும் நட்புணர்வுடனும் முன்னேறுங்கள்...கோல்வின் அவர்களின் உணர்வுகளுக்கு நியாயமான காரணங்கள் உண்டு.
நம்முடைய ஊழியர்கள் நம்மை கவிழ்த்துப்போட்டதை நாம் மிகத் தாமதமாகவே அறியமுடிகிறது; நாம் சுதாரிப்பதற்குள் அவர்கள் லைஃப்- ல செட்டில் ஆகிவிடுகிறார்கள்;எனவே எதிர்த்து பேசுவதே மாபாபம் என்று ஆதரவாளர்களால் அச்சுறுத்தப்படுகிறோம். நாம் எந்த இடத்தில் யாரால் ஏமாற்றப்படுவோமோ என்ற ஒருவித பாதுகாப்பு உணர்வே அனைத்துக்கும் காரணம்; இதனால் சரியானதைக் கூட ஐயத்துடன் பார்க்கும் மாயையும் தோன்றுகிறது; இதுவும் சாத்தானின் சூழ்ச்சியே; கோல்வின் அவர்களின் தரப்பில் நியாயம் உண்டு.
தற்போதைய தீர்க்கர்களின் செயல்பாடுகளுக்கும் வேதகாலத்தில் வாழ்ந்த தீர்க்கர்களின் செயல்பாட்டுக்கு அதிக வித்தியாசமுண்டு;அவர்களெல்லாம் இல்லாததிலிருந்து இருப்பதைச் சொன்னார்கள்; தற்போதயவர்களோ இருப்பதிலிருந்து இல்லாததைச் சொல்லுகிறார்கள்.
தொடர்ந்து பேசுவோம்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
இது பைபிளில் உள்ளதுதானே!. புதிதாக என்ன இருக்கிறது எப்போது எந்த நாளில் உருவாகும், வருடம், மாதம், திகதி குறிப்பிடவும்.
சகோதரி கோல்டா எழுதியது
\\அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாட்டின் சில இடங்களில் அப்பத்தாழ்ச்சி உண்டாகும் \\ அப்படியா? அப்பத்தாழ்ச்சி என்றால் என்ன? ஆங்கிலப்பதத்தினை குறிப்பிடவும். சில இடங்கள் என்றால் எந்த எந்த இடங்கள். இந்த நாடுகளில் மட்டுமா நிகழும். வேறு நாடுகளில் நிகழ்ந்தால்.......?
சகோதரி கோல்டா எழுதியது \\இயற்கை பேரிடர்கள் உண்டாகும். சமுத்திரத்தால் பயங்கர அழிவு உண்டாகும். கடற்கரைப் பகுதி மக்கள் சிலை வணக்கத்தை விட்டு தங்களை தாழ்த்தி கர்த்தர் பக்கமாய் திரும்ப ஜெபிக்க வேண்டும் \\ இயற்கை பேரிடர் நிகழாத ஒரு ஆண்டையாவது குறிப்பிட முடியுமா? எல்லா ஆண்டுகளிலுமம் எங்காவதுஒரு பேரிடர் நடந்து கொண்டுதான் இருக்கிறது
சகோதரி கோல்டா எழுதியது \\உலகநாடுகளைக்குறித்தவைகள்:
அமெரிக்கா, அட்லாண்டா நாட்டு சபைகளுக்குள் எழுப்புதல் உண்டாகும் இலங்கையில் சமாதானம், ஆசீர்வாதம் உண்டாகும்.தமிழ் மக்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள் \\ போல் தினகரன் சில வருடங்களுக்கு முன் இலங்கை வந்தபோது இதைதான் சொன்னார். இவர் சொல்லி வாய்மூடி 6 மாதத்திற்குள் கடுமைான போர் வெடித்து ஏராளமான உயிர்அழிவுகள், பொருள்சேதங்கள் ஏற்பட்டதை உலகமே அறியும். தமிழ் மக்களின் இன்னல்கள் தீர்க்கப்பட்ட தற்போதைய நிலையில் வாய்ப்பில்லை. ஏற்கனவே அமெரிக்காவின் அறிக்கை குப்பைக்குள் அனுப்பபட்டு விட்டது. ஐ.நா வின் அறிக்கையும் அப்படிதான் இருக்கும். இதற்குரிய இணக்கம் இ்ங்குள்ள தலைவர்களால் எட்டப்பட்டு விட்டது. அமெரிக்க சபையில் எழுப்புதலா? அடேங்கப்பா சரியாக பத்திரிகை, தொலைகாட்சி பார்ப்பதில்லை போலும், விபரச்சாரம், கருக்கலைப்பு மிக மிக அதிகமாக பெருகி விட்டதாக சமீபத்தை அறிக்கைகள் கூறுகின்றன. தயவு செய்து தினமும் பத்திரிகை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவும்.
சகோதரி கோல்டா எழுதியது \\ஆஸ்திரேலியாவுக்கு கொடியதான நெருக்கம் உண்டாகும் மியான்மரில் எழுப்புதல் உண்டாகும் \\ கொடிதான நெருக்கம் என்றால் என்ன? பொருளாதாராத்தை குறித்த சொல்லுகிறீர்களா? அது அனைத்து ஐரோப்பிய நாடுகளையும் அமெரிக்கா, மத்தியகிழக்கு நாடுகள் அனைத்திற்கும் இந்த பிரச்சினை பொதுவானது. தயவு செய்து பத்திரிகைகளை வாசிக்கவும்
ஒரு தீர்க்கதரிசி ஆண்டவரிடம் கேட்டாராம். ஆண்டவரே பிற நாடுகளில் நடக்கும் காரியங்களைப் பற்றி காட்டுகிறீர்கள். இதற்கு நான் என்ன செய்ய முடியும் என்று. அதற்கு ஆண்டவர் சொன்னாராம் - நீ ஒன்றும் செய்ய வேண்டாம். நடக்கும் இந்த காரியங்களுக்கு நீ ஒரு சாட்சியாக வைக்கப்பட்டிருக்கிறாய் என்று.
தீர்க்கதரிசி என்பவன் தேவனுடைய வாய். அவர் சொல்வதை ஜனங்களிடத்தில் சொல்பவன். அது எதிர் காலத்தில் நடக்கப் போகும் காரியமாக இருக்கலாம். எச்சரிப்பாக இருக்கலாம். காயம் கட்டும் , நம்பிக்கையூட்டும் வார்த்தையாக் இருக்கலாம். எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
இது ஒரு தீர்ககதரிசி கண்ட தரிசனம்:
ஆண்டவ்ர் முகம் வாடியிருப்பதைக் கண்ட இவர் ஏன் என்று கேட்க , ஆண்டவர் சொன்னது- ஜனங்களின் பாரத்தை என்னிடம் கொண்டு வர பல வாய்கள் இருக்கிறது. ஆனால் என் பாரத்தை ஜனங்களிடம் கொண்டு செல்ல ஆட்கள் இல்லை. இவர் சொன்னாராம். நான் இருக்கிறேன். என்னைப் பயன்படுத்துங்க என்று.
இவைகள் தீர்க்கதரிசனம் எனும் பெயரால் உரைக்கப்பட்டவைகள் போலிருக்கிறது. இவைகள் தீர்க்கதரிசனம் (?) என்றால் இவைகளுக்காக ஏன் ஜெபிக்க வேண்டும்? மேலும் அமெரிக்கா, ஆஸ்திரேலியாவைப் பற்றிய தீர்க்கதரிசனம் அந்நாட்டவருக்கு தெரியப்படுத்தியாச்சா?
//தேவன் தேசத்தை சந்திக்கிற காலமிது//
இதுவரைக்கும் அவர் எந்த தேசத்தையும் சந்திக்காமல் இக்காலத்தில் தான் சந்திக்கிறாரா?
//இது அறுவடையின் ஆண்டு.//
அறுவடைக்கு என்று தனி ஆண்டா?
விலைவாசியை பற்றி ஒன்றும் காணோம். ஒருவேளை அது கணிக்க முடியாதபடி ஏறுவதும் இறங்குவதாகவும் இருப்பதாலோ என்னவோ.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாட்டின் சில இடங்களில் அப்பத்தாழ்ச்சி உண்டாகும்
இயற்கை பேரிடர்கள் உண்டாகும். சமுத்திரத்தால் பயங்கர அழிவு உண்டாகும். கடற்கரைப் பகுதி மக்கள் சிலை வணக்கத்தை விட்டு தங்களை தாழ்த்தி கர்த்தர் பக்கமாய் திரும்ப ஜெபிக்க வேண்டும்
உலகநாடுகளைக்குறித்தவைகள்:
அமெரிக்கா, அட்லாண்டா நாட்டு சபைகளுக்குள் எழுப்புதல் உண்டாகும்
இலங்கையில் சமாதானம், ஆசீர்வாதம் உண்டாகும்.தமிழ் மக்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள்
ஆஸ்திரேலியாவுக்கு கொடியதான நெருக்கம் உண்டாகும்
மியான்மரில் எழுப்புதல் உண்டாகும்
இந்தியாவிற்காக:
தமிழ் நாட்டில் ஆவியானவர் பலமாய் ஊற்றப்படுவார். இது இந்தியா முழுவதும் பரவும். சிறுவர், வாலிவர் மீது ஆவியின் வல்லமை ஊற்றப்படும். சிறு பிள்ளைகள் தரிசனம் காண்பார்கள்
இது அறுவடையின் ஆண்டு. திரள் கூட்ட ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படுவார்கள். மீனவ சமுதாயத்தினர், சினிமா துறையினர் மத்தியில் எழுப்புதல் உண்டாகும்
பீஹாரில் இரத்தம் சிந்தப்படும்.இரத்தசாட்சிகள் எழும்புவார்கள்.
ஒரிஸாவில் இயற்கை சீற்றங்களினால் பெரிய பாதிப்புகள் உண்டாகும். குடியிருப்புகள் காலியாகும். கர்த்தருடைய நீதி வெளிப்படும்.
ஆந்திர மாநிலம் பாதுகாக்கப்பட , இம்மாநிலத்தின் அநேக இடங்களில் மரண ஓலம், குண்டு வெடிப்புகள், ஜனத்திற்கு விரோதமாய் ஜனம் எழும்புவார்கள்.
வட திசையிலிருந்து தேசத்தின் மீது தீங்கு வரும். பெரிய ஆறு திருப்பப்படப் போகிறது. விமான விபத்துகள் உண்டாகும்
தன்னை கடவுளாக காண்பிக்கும் ஒருவர் மரிப்பார். அவருடைய காரியம் முடிவுக்கு வரும்.
வான மண்டலத்தில் கிரியைச் செய்கிற பொல்லாத ஆவிகளைக் கட்டி ஜெபிக்க வேண்டும்.
(To Brother Chillsam: if this is too controversial or not in line with the board’s policy, பதிவை(பதிபவரை அல்ல) நீக்கி விடவும்!. நன்றி)
--
To Brother Colvin:
பால் தினகரன் இந்த வருடம் பிறக்கும் குழைந்தைகள் உடல் கூறு அமைப்பில் சில மாற்றங்கள் ஏற்படும் 2011 ஆண்டிலிருந்து மனுக்குலத்தின் சரீர அமைப்பிலேயும் வித்தியாசம் உண்டாகும் என்றுசொல்லியிருக்கிறார். This is an interesting prophecy. ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். நடக்குதான்னு பார்ப்போம்.