Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயேசு மரித்து சிலுவையிலா? மரத்தூணிலா?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
RE: இயேசு மரித்து சிலுவையிலா? மரத்தூணிலா?
Permalink  
 



இது தமிழ் கிறித்தவ தளத்தில் நுழைந்து அங்கும் குழப்பம் விளைவிக்க முயற்சிக்கும் குள்ளநரிகளின் தந்திரத்துக்கெதிராக அடியேன் பதித்தது...

// தமிழ் கிறித்தவ தளத்தின் நிர்வாகம் தூங்கிக்கொண்டிருக்கிறதா என்று அறியவிரும்புகிறேன்; இதுபோன்ற நரித்தனமான பதிவுகளால் நம்முடைய தளம் மாசுபடுவதை எந்த ஆரோக்கிய உபதேசத்தைக் கைக்கொள்ளும் எந்தவொரு விசுவாசியாலும் சகித்துக்கொள்ள முடியாது என்பதை தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

அல்லது சாமர்த்தியமிருக்கும் யாராவது இடைவெளி விடாமல் உடனுக்குடன் பதிலளிக்கவேண்டுகிறேன்;நாம் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவொரு ஆத்துமா வஞ்சிக்கப்படும் ஆபத்து உண்டு;கண்டுகிடாம விட்டா தானா அடங்கிடும் என்பது அந்தகாலம்; அந்தகாலத்தில் அப்போஸ்தலர்களால் செய்யப்பட்ட அதிசயங்களைக் குறித்து வாய்கிழிய பேசிக்கொண்டிருக்கிறோமே தவிர தற்காலத்தில் யாரும் அவற்றை செய்துகாட்டுகிறதில்லை என்பதையும் நினைவுபடுத்துகிறேன்;

ரோஷன், முதலில் உம் விசுவாசத்தின்படி "இயேசுவை தெய்வமாகத் தொழுவதற்கு " சம்மதிக்கிறாயா, இல்லையென்றால் உமக்கு இங்கே வேலையில்லை;இங்கேயிருக்கும் சகோதரர்களிடமிருந்து சத்தியத்தை நிதானமாகக் கற்றுக்கொண்டு பிறகு அதில் வளருவதற்கு வேண்டுமானால் கேள்விகளைக் கேட்கலாம்;மற்றபடி உங்கள் சரக்குகள் எங்கிருந்து இறக்குமதியானது என்பதை அறிந்தே இருக்கிறோம்.

wtyoucanliveforever170.jpg


ரோஷன் பதித்திருக்கும் அவருடைய அவதார் படத்தைப் பார்த்தபிறகாவது நிர்வாகத்தாருக்கு ரோஷம் வந்தால் சரி..! //



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 

//மத்தேயு 27:37 குறிப்பிட்டுள்ளதுபோல் “இவன் யூதருடைய ராஜாவாகிய இயேசு என்று எழுதி, அவரது சிரசுக்கு மேலாக அதை வைத்திருக்க முடியாது. மாறாக அவரது கைகளுக்கு  மேலாகவே வைத்திருக்க முடியும். //

Good Point Bro. Colvin.  இன்னொரு அருமையான Observation, கிழே உள்ள வசனத்தில் ஆணிகள் என்று பண்மையில் இருப்பதை கவனிக்க

  •  மற்றச் சீஷர்கள்: கர்த்தரைக் கண்டோம் என்று அவனுடனே சொன்னார்கள். அதற்கு அவன்: அவருடைய கைகளில் ஆணிகளினாலுண்டான காயத்தை நான் கண்டு, அந்தக் காயத்திலே என் விரலையிட்டு, என் கையை அவருடைய விலாவிலே போட்டாலொழிய விசுவாசிக்கமாட்டேன் என்றான். (யோவான் 20:25)


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

எனக்கருமையான தமிழ் கிறித்தவ நண்பர்களே, இரசலின் யெகோவா சாட்சிகளின் கூட்டமாக இருந்தாலும் சரி, வேதாகம மாணவர் என்று சொல்லிக்கொள்ளும் கூட்டமாக இருந்தாலும் சரி, அவர்கள் ஒரு காரியத்தில் ஒன்றுபட்டிருக்கிறார்கள்,அது என்னவென்றால் " இயேசுவைத் தொழத்தக்க தெய்வமல்ல" என்று பிதற்றுவதில் ஒன்றுபட்டிருக்கிறார்கள்;இரட்சகராகிய இயேசுகிறித்துவானவர் சொன்னது என்ன,

  • "என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்." (யோவான்.12:48)

 

'அவரு எதுக்கு இப்படி சொன்னார் தெரியுமா,' என்று துவங்கி அவர்கள் எதைச் சொன்னாலும் சரி, இதைச் சொன்னவரைத் தள்ளிய பயங்கரம் வந்தே தீரும்; மேலும் ஒரு சிறியனுக்கு இடறலாக இருப்பவனுக்கு ஐயோ..!

ஒற்றை மரத்துண்டை க்றாஸ் என்று சொல்லவேண்டிய அவசியமில்லையே..? அனைவரும் அறிந்தவண்ணமாக ஆங்கிலத்தில் இயேசுவானவர் அறையப்பட்ட சிலுவை என்பது க்றாஸ் எனப்படுகிறது;அதற்கு இரண்டு வெவ்வெறு கோடுகள் இடையே சந்திப்பது ((+) or (X)) என்று பொருள் படுமா..? ஏதோ எனக்குத் தெரிந்த ஆராய்ச்சி..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 



Jesus


இயேசுக்கிறிஸ்து சிலுவையில் மரிக்கவில்லை மாறாக மரத்தூண் ஒன்றிலே கட்டி தொங்கவிடப்பட்டிருந்தார் என்பது யெகோவா சாட்சிகளின் போதனையாகும். (Source : The Watchtower 15 August 1987, p27) இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்தற்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை. என்று கூறும் இவர்கள் (Awake, 8 November 1972, p28) சிலுவை என்பதற்கு வேதாகமத்தில் உபயோகிக்கப்பட்டுள்ள பதம் மூலமொழியில் நேரான தூண் எனும் அர்த்தமுடையது என்று விளக்குகின்றனர். (Anonymous, Reasoning from the Scriptures, p89) ஆனால் சிலுவை என்பதற்கு மூலமொழியில் உபயோகிக்கப்பட்டுள்ள Stauros எனும் கிரேக்கப் பதம் T + X I எனும் மரத்தினால் செய்யப்பட்டவைகளைக் குறிக்கும். எனவே அப்பதத்தை மட்டும் ஆதாரமாக் கொண்டு இயேசுகிறிஸ்து I வடிவமரத் தூணில் மரித்தார் என்று கூறமுடியாது. (Source : R.M. Bowman, Understanding Jehovah’s Witnesses, p.143) மேலும் இயேசுக்கிறிஸ்து நேரான மரத்தூணில் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தால் மத்தேயு 27:37 குறிப்பிட்டுள்ளதுபோல் “இவன் யூதருடைய ராஜாவாகிய இயேசு என்று எழுதி, அவரது சிரசுக்கு மேலாக அதை வைத்திருக்க முடியாது. மாறாக அவரது கைகளுக்கு  மேலாகவே வைத்திருக்க முடியும். எனவே யெகோவாவின் சாட்சிகள் கூறுவதுபோல இயேசுக்கிறிஸ்துவின் கைகளிரண்டும் ஒன்றாக கட்டப்பட்டு அவர் மரத்தூணில் கட்டித் தொடங்கவிடப்பட்டார் என்னும் விளக்கம் தவறானதாகவே உள்ளது. (Source : R.Rhodes, Reasoning from the Scriptures with the Jehovah’s Witness, pp-397-398) ஆரம்பகாலத்தில்   யெகோவா சாட்சிகள் இயேசுக்கிறஸ்து சிலுவையில் மரித்தார் என்று கூறுகின்றபோதிலும் (R.Reed, Index of Wachtower Errors, p 73;The Watchtower 1 January 1891, p 1277, Anonymous, Creation pp161, 265, 336) பிற்காலத்தில் இவர்கள் தங்கள் கருத்தை மாற்றியுள்ளதோடு சிலுவையை வைத்திருப்பதும் அதைப் புனிதமாகக் கருதுவதும் விக்கிரக வழிபாடு எனப் போதிக்கத் தொடங்கினர். (Anonymous, Reasoning from the Scriptures, p 92)



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard