கார்கில் போர் வரையிலும் தாய்த் திருநாட்டின் பாதுகாப்புக்காகப் போராடிய இந்திய துணைக் கண்டத்தின் பெருமைமிகு இராணுவத்தைக் குறித்து பெருமையடைகிறேன்;ஆனாலும் எந்தவொரு உண்மையான தேசபக்தனும் தான் தேசத்துக்காக செய்த தியாகத்தை விளம்பரப்படுத்துவதில்லை;இதைக் குறித்து ஆச்சரியப்படுகிறேன்; எத்தனையோ இராணுவ வீரர்கள் அந்த எதிரியை அழிக்காமல் தப்பவிட்டுவிட்டேனே என்று களத்துக்குத் திரும்பியதும் துடித்தது எனக்குத் தெரியும்; அப்பேற்பட்ட இராணுவத்துக்கே அவப் பெயர் உண்டாக்கும் வகையிலும் சிலர் செயல்படுகிறார்கள்;அவர்களால் முழுதேசத்துக்கே அவமானம்; எண்ணற்ற தியாகிகள் சிந்திய இரத்தம் இந்த மண்ணிலிருந்து கூப்பிடுகிறது;அண்மையில் கூட அரசியல்வாதிகளுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே சிக்கிக்கொண்டு முன்னேறவும் முடியாமல் பின்வாங்கவும் மனமில்லாமல் பாதுகாப்புப் படையினர் தவிப்பது அன்றாட நிகழ்வாக இருக்கிறது;
நமக்கென்ன ஓட்டுக்கு எவ்வளவு கிடைக்கும்,டிவி, கிரைண்டர், மிக்ஸிக்கு அடுத்து ஒரு குவார்ட்டருக்கு ஒரு குவார்ட்டர் இலவசம் தருவார்களா என்பதே கவலை..! உடனே இந்தியாவின் குடிகாரர்களை அவமானப்படுத்திவிட்டதாக யாராவது கேஸ் போட்டுடப்பொறாங்க..சாமியோவ்...நான் ச்சும்மா தேசபக்தியில் எதையோ உளறி வைத்தேன்,அம்புட்டுதேன்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)