பழைய ஏற்பாட்டிலே கர்த்தர் ஒவ்வொருவரையும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்கென்றே அபிஷேகித்திருக்கிறார். சிம்சோனைக்குறித்த தேவனுடைய நோக்கம் பெலிஸ்தியரை சிறுமைப்படுத்தி இஸ்ரயேலரை பாதுகாப்பதே. அந்த நோக்கம் பூரணமாய் நிறைவேறியது என்பது தான் உண்மை.
பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களை நம்முடைய சமுதாய பின்னணியோடு பார்ப்பதை தவிர்த்து வேதாகமம் எழுதப்பட்ட கால மற்றும் வேதாகம சமுதாயத்தின் பின்னணியில் தான் பார்க்கவேண்டும்.
இஸ்ரவேலர் சந்ததி பெருக வேண்டும் என்பது தான் ஆண்டவரின் சித்தமாய் இருந்தது. ஒரு ஆணால் ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைக்கு த்கப்பனாக இயலும். ஆனால் ஒரு பெண்ணிற்கு ஒரு வருடத்திற்கு ஒரு முறைதான் தாயாக இயலும். எனவேதான் ஆண்டவர் ஒருவருக்கு பல மனைவிகளை அனுமதித்திருந்தார். சாலமோனுக்கு ஆயிரம் மனைவிகள் இருந்ததால் அவர் த்குதியிழக்கவில்லை மாறாக விக்கிரக ஆராதனையில் விழுந்ததாலேயே அவர் தகுதியிழந்ததாக வேதம் சுட்டுகிறது. மாறாக தாவீதுக்கோ உன் ஆண்டவனுடைய ஸ்திரீகளையும் உனக்கு தந்தேன் என ஆண்டவரேகூறியதுமல்லாமல் இன்னும் தருவேன் எனவும் கூறுகிறார் (2 சாமு. 12:8).
சிம்சோன் விஷயத்தில் ஆண்டவருடைய ஆவியின் ஏவுதலினாலே அவன் திம்னாத்துக்கு போய் பெலிஸ்த்தருடைய பெண்மேல் சினேகம் வைத்தான் என வேதம் தெளிவாக கூறுகிறது (நியாயாதி. 13:21, 14:4) . சிம்சோன் சிங்கத்தை கொல்லும்போதும் பெலிஸ்தரை கொல்லும்போதும் தெலிலாள் (வேசி என கூறப்படவில்லை) மடியில் கட்டுண்டு கிடக்கிறபோதும் கர்த்தருடைய ஆவி அவன்மேல் பலமாய் இறங்கினார் என வேதம் சொல்கிறது.
சிம்சோன் தலைமுடி சிரைக்கப்படும்வரை தன் நசரேய விரதததை கைவிட்டதாட வேததில் கூறப்படவில்லை. எண். 6 ல் சொல்லப்பட்டுள்ள பிரேதம் மனித பிரேதத்தை குறிப்பதாகும். நசரேயருக்கு இறைச்சி விலக்கப்படவில்லை. மிருகத்தின் உடலை தொட அனுமதி உண்டு (எண். 6:19). சிம்சோன் எந்த சூழ்நிலையிலும் ஆண்டவரை விட்டு விலகவேயில்லை. அவன் ஆண்டவர் அவனுக்கென்று கொடுத்த தனிப்பட்ட கட்டளையாகிய நசரேய விரதத்தை கைவிட்டபோது ஆவியானவர் அவனை விட்டு விலகினார் (பழைய் ஏற்பாட்டு அபிஷேகம் குறிப்பிட்ட நோக்கத்திற்காக). முடி திரும்பவும் முளைத்தபோது மறுபடியும் அபிஷேகம் இறங்கியது. மேலும் யுத்தத்தில் மரணம் என்பது தற்கொலை என்று யார் உங்களிடம் சொன்னது? ஆண்டவர் தற்கொலைக்கு உதவுபவரா என்ன? தன் உயிர் கொடுத்தால் தன் தேச எதிரிகள் பலரை கொல்லலாம் என்ற நிலையில் அவர் எடுத்த புத்திசாலித்தனமான முடிவு அது. கண் போன நிலையில் அதுதான் சரியான முடிவும் கூட. மேலும் 20 வருடம் உயிரோடிருந்து கொன்றதை விட ஒரே நாளில் கொன்றது அதிகம். யுத்த களத்தில் வீரர்கள் மட்டுமே காணப்படுவார்கள். ஆனால் அங்கோ இஸ்ரவேலரை அடிமைப்படுத்தியிருந்த பிரபுக்கள் அனைவரும் மடிந்த்தார்கள்.
பி.கு.: ஆண்டவர் ஒருவனுக்கு ஒருத்தி என்ற விகிததிலேயே மனிதரை உருவாக்குகிறார். எனவே பலதார மணம் சரி என வாதாட வரவில்லை. மேலும் சமுதாய ஒழுக்கம் மீறி மற்றவரை வஞ்சிப்பதும், இடறல் உண்டாக்குவதும் பாவமல்ல என்றும் கூறவில்லை. ஆண்டவரை எவ்வளவு தூரம் நேசிக்கிறோமோ அவ்வளவு தூரம் மற்றவரிடம் அன்புகூருவோம். மற்றவர்களுடைய purse & spouse - ஐ இச்சிக்க மாட்டோம்.
வெறுக்க வேண்டியது - இச்சையை (திருவிளையாடல் பாணியில்)
மாறவே ஆசைப்படுகிறேன், என்னை மாற்றி விடும் அருமை நேசரே! என் சிந்தை மாறணும், செயல் மாறணும், பேச்சு மாறணும், ஐயா உம்மைப் போலவே! என் நடை மாறணும், என் உடை மாறணும், என் உள்ளம் மாறணும், ஐயா உம்மைப் போலவே!
செய்தி:
சிம்சோனின் பிறப்பு அற்புதமான பிறப்பு.
சிம்சோன் என்றால் sunshine (சூரிய பிரகாசம்) என்று அர்த்தம். ஆனால் அவன் வாழ்க்கை அப்படியில்லாமல் அமாவாசை ஆனது. ஏன்?
அவனிடத்தில் 1) decision 2) dedication 3) disciplined life and 4) destiny இல்லை.
இந்த செய்தி decisions பற்றியது.
என்ன தீர்மானங்கள்(decisions) அவனிடம் இல்லை? (அல்லது நம்மிடம் இருக்க வேண்டும்)
1. கர்ததரின் முகத்தையே தேடுவேன் - என்ற தீர்மானம் இல்லை.
அவர் முகத்தை தேடி எப்பொழுதும் ஜெபம் செய்ய வேண்டும். சங் 27:8
நியா 14:1,2,3 கண்ணுக்கு பிரியமாயிருந்த பெலிஸ்திய பெண்ணை நேசித்தான். நியா 16;1 காசா வேசியிடம் சென்றான். நியா 16;4 தெலிலாள் என்னும் ஸ்திரீயை நேசித்தான்
3. தேவ சித்தம் மட்டுமே செய்வேன்
நியா 16;4 - பெலிஸ்திய பெண்ணை திருமணம் செய்வது தேவ சித்தம் தானா என்று கேட்க வில்லை.
ஒரு வாலிபன் திருமணத்திற்காக இப்படியாக ஜெபித்தானாம்.
”ஆண்டவரே உம் சித்தப்படியே ஒரு பெண்ணைத் தாரும். அது எதிர் வீட்டு எலிசபெத்தாக இருக்கட்டும்”
1 தெச 4:3 நாம் பரிசுத்தமாயிருப்பது தேவ சித்தம்.
4. என்னை தீட்டுப் படுத்த மாட்டேன்
தான் எடுத்துக் கொண்ட நசரேய விரதத்தை தீட்டுப் படுத்தினான் எண் 6 1-8 வரை சொல்லப்பட்ட வசனத்தின் படி, நசரேய விரதம் எடுத்துக் கொண்டவர்கள், திராட்சை ரசத்தாலும், பிணத்தாலும் தீட்டுப் படக் கூடாது ஆனால் நியா 14:8,9 இன் படி சிங்கத்தின் பிணத்தாலும், அதிலுள்ள தேனினாலும்(திராட்சை தோட்ட தேன்) தன்னை தீட்டுப் படுத்தினான்.
தானி 1:8 தானியேல் தீட்டுப் பட மாட்டேன் என்று தீர்மானம் செய்தான்.
நியா 16;15,16 - தெலிலாள் அலட்டிக் கொண்டே இருந்தாள். அவளிடமும் ரகசியத்தை சொன்னான்.
நாக்கு - நெருப்பு - தீப்பெட்டி- தீப்பந்தம் போன்றது. பார்த்து உபயோகிக்க வேண்டும்.
அ ஆ விடம் சொன்னது: நம்ம ஜான்சன் பிரதர் படிக்கட்டில் தடுமாறி விழுந்து விட்டார் ஆ இ யிடம் சொன்னது ; ஜான்சன் பிரதர் விழுந்து போனார் இ ஈ யிடம் சொன்னது: ஜான்சன் பிரதர் பாவத்தில் விழுந்து போனார் ஈ உ விடம் சொன்னது: ஜான்சன் பிரதர் பாவத்தில் விழுந்ததால் கர்த்தர் அவரை அடித்தார்.
இப்படியெல்லாம் நாக்கு இஷ்டத்திற்கு பேசும்.
6.ஆவியானவரை துக்கப்படுத்த மாட்டேன்
நியா 16:20 கர்த்தர் அவனை விட்டு விலகினார்.
7. என்னைக் குறித்த தேவ நோக்கத்திற்காக வாழ்வேன்.
நியா 13:5 பெலிஸ்தியரிடமிருந்து இஸ்ரவேலை ரட்சிப்பதே அவனைக் குறித்த தேவ நோக்கம். ஆனால் தற்கொலையில் அவன் வாழ்வு முடிந்தது.
-- நல்ல தீர்மானங்களை எடுப்போம். அதன் படி வாழ்வோம். அப்பொழுது நீதியின் சூரியனாம் இயேசு கிறிஸ்துவை பிரதிபலிப்போம். நம் வாழ்க்கை அதிகம் அதிகம் பிரகாசிக்கும் சூரியன் போல் இருக்கும்.
பழைய உடன்படிக்கை காலத்தில் இதுவெல்லாம் சாதாரணம் சகோதரி, ஆனால் கிறிஸ்துவின் மரணத்தின் மூலம் ஞாயப்பிரமானம் முறிக்கப்பட்டுவிட்டது, ஆகவே அது பற்றி நாம் பேசவேண்டியதில்லை.
புதிய உடன்படிக்கை காலத்தில் வாழும் நாம் நம் சரீரத்தை பேணுவது போல நம் மனைவியைப் பேணுகிறோமா என்பதே இன்று நாம் சித்திக்க வேண்டியதாகும்
இது பற்றி நானும் யோசித்ததுண்டு, இது குறித்து தமிழ் கிறிஸ்தவர் தளத்தில் 2 ஆண்டுகளுக்கு முன் ஒரு கருத்தை பதித்ததாக ஞாபகம். உலகத்தின் அனைத்து சம்பத்துக்களையும், சுக போகத்தையும் அனுபவித்த சாலொமொன் ஞானி தனது அந்திம காலத்தில் அனைத்தும் மாயை என்பதை உணர்ந்தார். அதன் விளைவே பிரசங்கி புத்தகம் நமக்கு கிடைத்தது. சர்வ ஞானியான அவர் அந்த காலத்தில் நிச்சயம் ஆண்டவரோடு ஒப்புரவாகியிருப்பார் என்பதே பரவலான கருத்து.
இவ்வளவு தவறுகள் செய்தும் தேவன் சிம்சோனை கடைசியில் நினைத்தருளினார், அதை தற்கொலை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை, எதிரிகளை நிர்மூலமாக்க ஒரே அடியில் வேலையை முடிக்க அவன் செய்த தந்திரம், ஒருவேளை தற்கொலையாக இருந்திருந்தால் அவனது பெயர் நிச்சயம் எபிரேய 11ல் உள்ள விசுவாச வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்காது. நிச்சயம் தேவனோடு அவன் கொண்ட கடைசி நேர ஒப்புரவாகுதலை தேவன் அங்கீகரித்திருப்பார் என்றே நம்புகிறேன்
நல்ல குறிப்புகள் சகோதரி. இ்ங்கு பதித்தமைக்கு மிக்க நன்றி. இவனிடம் காணப்பட்ட காமஇச்சைகளே இவனை பாவத்தில் விழுத்தியது. தேவன் தனக்கிட்ட பணிகளையும் இவன் ஒழுங்காக செய்யவில்லை.