Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ராமாயணம்


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
RE: ராமாயணம்
Permalink  
 


சாது செல்லப்பாவின் இராமாயண விளக்கம் (நான் ரசித்தது)   
 
பத்து தலையுடைய ராவணன் சீதையை கடத்தி சிறை வைக்கிறான். ராமன் சென்று, அவன் பத்து தலையையும் கொய்து, தன் மணவாட்டி சீதையை விடுவிக்கிறார்.
 
பத்து கட்டளைகளுக்குள் பாவியாய் சிக்கியுள்ள மணவாட்டியை(சபை) , அந்த பத்து கட்டளைகளையும் நிறைவேற்றி இயேசுவானவர் விடுவிக்கிறார்.
 


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
Permalink  
 

ராமாயணம் உண்மை.
ஆதாரம்: நன்றாக பாருங்கள், அணிலின் முதுகில் மூன்று கோடுகள் உள்ளது. அது ராமாயணத்தில் ராமர் போட்டதாக்கும்.


__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

பிரபஞ்சனின் ”பெண்மை வெல்க” புத்தகத்தில் வரும் சீதை , ராமனும் தன் தூய்மையை நிருபிக்கும்படி அக்கினி பிரவேசம் செய்ய சொல்ல, அவன் மக்களுக்காகத் தான் உன்னை அப்படி செய்ய சொல்கிறேன் என்று சொல்ல, அவள் ராமனை தலாக் செய்து விட்டு போய் விடுவாள்!

அது அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
Permalink  
 

கையும் மெய்யுமாக பிடிபட்டு, ஊரே சேர்ந்து கல்லால் அடிக்க இருந்த ஒரு வேசியை, நம் அருள்நாதர் இயேசு ரட்சித்து, அவள் வாழ வழி செய்தார்.

எவனோ ஒருவன் குற்றம் சொன்னான் என்ற காரணத்திற்காக, கற்புக்கரசியான, தனக்காக வனத்திலும், பின்பு அசோக வனத்திலும் கஷ்டபட்ட சொந்த மனைவியை, காட்டுக்கு விரட்டியவன் ராமன்.
இந்த இருவரும் ஒரே கொள்கை உடையவர் என்று யாரோ ஒரு நண்பர் திருச்சியில் புலம்புகிறார்.


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

சிறிய கதைக்குள் பெரிய விடயங்கள். பல விடயங்கள் கேட்டறியாதவை. சீதையை விவாகரத்து செய்த விடயத்தை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. பல மாதங்களாக சன் டிவியில் ஒளிபரப்பான ராமாயணம் பார்த்தேன். வேறு ஒரு கோணத்தில் கதை சொன்னார்கள். அதாவது மக்களின் வேண்டுகோளுக்கிணங்கவே இராமன் சீதையை காட்டுக்கு அனுப்பினானாம். மக்கள் சேவையே மகேசன் சேவை இராமனுக்கு.

கம்பராமாயணத்திற்கும் வான்மிகி எழுதிய இராமாயணத்திற்கும் மிகுந்த வேறுபாடு உள்ளது.

நல்ல பல விடயங்களை தொடர்ந்து எழுதிவரும் உங்களுக்கு என் அன்பின் வாழ்த்த்துக்கள்


__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
Permalink  
 

ராமாயணம்
இது இந்துக்களின் இருபெரும் இதிகாசங்களில் ஒன்று. அதைவிட முக்கியம், இன்று இந்தியாவில் ரத்த ஆறு ஓடுவதற்கான மிகபெரிய காரணங்களில் ஒன்று. 
இது உண்மை நிகழ்வா, அல்லது கற்பனையா என்று பெரும் சர்ச்சை நிகழ்ந்து வருகிறது. சொல்லப்பட்ட நிகழ்வுகளின் மூலமும், அகழ்வாராய்ச்சி மூலமும், ஆவணபடுத்தப்பட்ட முறை மூலமும் பார்த்தால் இது கற்பனை என்றே தோன்றுகிறது.
மேலும், நாம் இது உண்மையா, புனைவா என்று பார்க்காமல், இந்த கதையின் குறிகோளையும், கதாபாத்திரங்களின் தன்மையையும் ஆராயலாம்.
 

கதையின் கருத்து:

திறந்த மனதுடன் பார்த்தால், ஒரு வீரமான, பலசாலியான, அரசனின் வாழ்க்கையை, சற்றே ஆணாதிக்க மனோபாவத்தோடு எழுதப்பட்டுள்ளது. இதில் நன்னெறி கருத்தாக எடுத்துக்கொள்ள எதுவும் இருப்பதாக தெரியவில்லை. அதீத கற்பனை நயத்தோடு சுவையாகவும், மனதை தொடும்படியாக எழுதப்பட்டுள்ளதை பாராட்டலாம்.

கதாநாயகன்:

இந்த கதையின் மையப்புள்ளி இந்த ராமனே (கதையின் பெயரே அதை கூறுகிறது: ராமா + அயனம் = ராமாயணம்). உண்மையில், இந்த கதாபாத்திரம் அளவுக்கு மீறி hype செய்யபட்டதேன்றே சொல்லலாம். கடவுளாக வழிபடும் அளவில் இவர் என்ன செய்தார் என்று யாரவது தெளிவாக எடுத்துரைத்தால் மகிழ்வேன்.

மிகுந்த பராகிரமசாளியாக இருந்தாலும், சுத்த வீரன் என்று சொல்லும்படி இவர் வாலியிடம் நடந்துகொள்ளவில்லை (முதுகில் குத்தியவர்).

நல்ல பிள்ளை என்று பெயர் வாங்க, மோசமான கணவனாக நடந்துகொண்டவர்.

தங்கள் தங்கைக்கும், மகளுக்கும் ராமனை போல வரன் தேடுபவர்களே, உங்களிடம் சில கேள்விகள்:

பெற்றோர் பேச்சை கேட்டுக்கொண்டு, கட்டிய மனைவியை (உங்கள் மகளை, சகோதரியை) கொடுமை படுத்திய மருமகன்களுக்கும் (மற்றும் மச்சான்களுக்கும்), இந்த ராமனுக்கும் என்ன வித்தியாசம்? அனைவரும் தன்னை நம்பி வந்த தன் மனைவியின் நலன் கருதாமல், தங்கள் பெற்றோரின் வாக்கை குருட்டுத்தனமாக ஏற்றுக்கொண்டு செயல் பட்டவர்களே. பார்த்து பார்த்து கட்டிகொடுத்த பெண், பரதேசியாய் கானகம் போவதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? சீதா, விரும்பியே கானகம் போனார் என சப்பைக்கட்டு காட்டுபவர்களே, எந்த பெண்தான் அப்படி போகமாட்டாள்? அவளுக்கு கொடுக்கப்பட்ட வைப்பேன்ன? ஒன்று வாழாவெட்டியாய் இருப்பது, அல்லது, கணவனோடு கானகம் செல்வது. நடப்பது அநீதி என்று தெரிந்தும், பாதிக்கபடப்போவது தன் மனைவி என்று தெரிந்தும், (தன் தகப்பன், அப்படி போக தேவையில்லை என்று தனிமையில் தெரிவித்தும்) தன் பெயருக்காக, புகழுக்காக கானகம் போனவனை என்னவென்று சொல்லுவது. இதில் (கடவுளாக கருதப்பட்ட) ராமன், யாரை திருப்தி படுத்தினான்? கூனியால் ஏமாற்றப்பட்ட, பொறாமைக்காரியான தன் சிற்றன்னையை திருப்தி படுத்தினான் (ஆனால் அதுவே அவள் விதவை ஆவதற்கும் காரணமானது).

 

நல்லபிள்ளை?

கூனி எதற்காக ராமன் மேல் வெறுப்பு கொள்ள வேண்டும்? ஏனென்றால், சிறுவயது ராமன், கூன் விழுந்த பனி பெண்ணாகிய கூனியின் முதுகில் அடித்து விளையாடி இருக்கிறான் என்று பார்க்கிறோம். என்னதான் இளவரசன் என்றாலும், இப்படியா சிறுவயது 23 ஆம் புலிகேசி போல், அடுத்தவரை துன்புறுத்தி மகிழ்வது? இப்படி அடித்து விளையாடும் பிள்ளையா நல்ல பிள்ளை?

தன் தம்பியின் குடும்பத்தையும் கெடுத்தான் எந்த அண்ணன் ராமன். அண்ணன் சொல்லை தட்டாதவன் இலக்குவன் என்றால், அவனை ஒழுங்காக அயோத்தியில் குடும்பம் நடத்த சொல்லி இவர் கட்டளை இட வேண்டியது தானே. அதை விடுத்து, "நமக்கு ஒரு அடிமை சிக்கிட்டான்" என இழுத்துக்கொண்டு காட்டுக்கு போவதா?

HYPE:

குகனிடம் நட்பு பாராட்டியதை இவர்கள் புகழ்வது ரொம்ப ஓவர். கங்கையை கடக்க "பாவம் யாரு பெத்த புள்ளையோ, காட்டுல தவிக்குது" என்று குகன் உதவினார். பதிலுக்கு இவரும், "நண்பேண்டா" என்று தழுவினார். இதை நீங்களும் நானும் செய்ய மாட்டோமா? ஆனால், கதாசிரியர் இதை ஒரு பெரிய விஷயமாக்கிவிட்டார். இந்த இடத்தில் குகனே சிறந்தவர், நன்றி சொன்னதுக்காக ராமனை போற்றுவது ஏன் என்று தெரியவில்லை.

இதே போல் அவர்  அனுமன், சுக்ரீவன், விபீஷணனிடம் கொண்ட நட்பும், நாம் சாதாரண மக்களிடம் காணகூடியதுதான்.

மேலும் ராவண வதம் கூட, மக்கள் நல்வாழ்வுக்கென்றில்லாமல், தன் மனைவியை காப்பாற்றவே ராமன் செய்தார்.

சீதைக்கு தலாக்:
பிறகு, எவனோ ஒரு புரளி பேசுபவன் சொன்னான் என்று தன் மனைவிக்கு "தலாக்" சொல்லிவிட்டார் ராமன். இஸ்லாமியர்களை "தலாக்" சொல்லுவதாக இகழும் இந்துக்கள் இதை யோசிக்க வேண்டும். இஸ்லாமியர்கள், இன்னொரு பெண்டாட்டி கட்டுவர்தர்க்காக, இருக்கும் பெண்டாட்டியை தலாக் செய்ய தேவையில்லை. பலதார மணங்களை அவர்கள் சட்டம் ஏற்றுகொள்கிறது. மற்ற காரணங்களுக்காகவே அவர்கள் தலாக் செய்கிறார்கள். இங்கே ராமனும் அதையேதான் செய்கிறார். தன் பெயருக்காக, எவனோ ஒருவன் புரளி பேசுகிறான் என்பதற்காக, பெண்டாட்டியை அக்னி பரீட்சை செய்து, பிறகு வனத்திற்கும் அனுப்புகிறார்.

முடிவுரை:

எங்கே, நாம் ராமாயணத்தை ஆய்ந்த பொது, ராமன் ஒன்றும் மிக மோசமானவனில்லை, அதே நேரம் குறைவற்றவனுமில்லை என தெள்ளதெளிவாகிறது. ராமன் முடிந்தவரை நல்லவனாக இருக்கவே போராடுகிறான் என்று தெரிகிறது, ஆனால் ஏதோ ஒன்று அவனை குறைவுள்ளவனாக்குகிறது. இதற்க்கு பரிசுத்த வேதாகமம் தெளிவாக விடையளிக்கிறது. ராமனுடைய குறைகளுக்கு காரணம்:

" for all have sinned and fall short of the glory of God" - Romans 3:23



__________________
Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard