Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வேத மாணவர் குழுவுக்கு சில கேள்விகள்.....


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: வேத மாணவர் குழுவுக்கு சில கேள்விகள்.....
Permalink  
 


நாம்  ஒரு புதிய இடத்துக்கு விலாசம் தேடி போகிறோம்; அங்கே வந்த முன்பின் அறிமுகமில்லாத ஒருவர் நமக்கு சரியான விலாசத்தைக் காட்டித் தருவதோடு நமக்கு சந்தோஷத்தையும் தருகிறார்; நாம் அந்த மனிதரிடம் எப்படி நடந்துகொள்ளுவோம், மரியாதையுடனா, நன்றியுடனா, அன்புடனா அல்லது இவையனைத்தும் இணைந்த ஒரு உணர்வுடனா..?

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நாம் ஒரே ஒரு முறை சந்திக்கும் ஒரு நபரால் இத்தனை ஆனந்தமும் மனநிம்மதியும் பெறமுடியுமானால் அதரிசனமான தேவாதி தேவனுடைய தற்சொரூபமாக வெளிப்பட்டு அனைத்தையும் செய்து முடித்தவரை எப்படி நடத்தப்போகிறோம்? விருந்தாளியைப் போலவா, வழிப்போக்கனைப் போலவா, அல்லது நம்மிடையே வாழ்ந்து மறைந்த ஒரு மகானைப் போலவா,அல்லது எந்த உணர்வுமில்லாத ஒரு ஆவியைப் போலவா..?

நாம் நம்முடைய இரட்சகரை எப்படி நடத்துகிறோமோ அப்படியே பிதாவாகிய தேவனும் நம்மை நடத்துவார்; ஏனெனில் அவரை நமக்காகத் தந்து அருளியவரே அவர் தானே..அவர் தான் இயேசு..!

(மேசியாவின்) எதிரிகள் மண்டைய உடைச்சுக்கப் போறாங்கே.. ஏண்டா பாவிங்களே, இயேசு நாதரு செய்த நன்மைகளுக்காக அவருக்கு நன்றி சொல்லுவது கூட பாவமா..? பிதா கோவிச்சுக்குவாறா..? ஏம்ப்பா, பிதாவும் இயேசுவும் இரஸலும் ரூதர்போர்டு போலன்னு நினைச்சுட்டிங்களா..?

இயேசுவை வாழ்த்துவோம-இன்ப
நேசரைப் போற்றுவோம்
நம்வாழ்வின் பெலனாம் நல் தேவனை
என்றென்றும் வாழ்த்துவோம்



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 

சகோ. எபி. நிச்சயமாக நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லமாட்டார்கள். நண்பர் சகாயம் "Cut and Paste" மட்டுமே பண்ணி விளம்பரம் மட்டும் தேடுபவர் அவரக்கு இதற்க்கு பதில் தெரியாது என்பது எனக்கு நன்றாய் தெரியும்

சகோ. சில்சாம் சொல்லுவது போல இயேசுவை தொழமறுப்பவனிடம் அவன் கடைசிவரை அப்படியே இருந்தால் போகப்போகிற இடம் குறித்து கேட்பதால் பலன் ஒன்றும் இல்லை.  பெரும்பாலும் எல்லா "Cult" கும்பலும் நரகம் என்பதை "Water Down" பண்ணி விடுவார்கள், சாத்தான் இவர்களுடைய பின்னால் இருந்து சிரிப்பதற்கு அதுவும் ஒரு அடையாளம். கிழே உள்ள வசனம் இவர்களுக்கு எச்சரிக்கையாய் இருக்கசொல்லி நம்மை போதிக்கிறது


  • விபசாரக்காரனாவது, அசுத்தனாவது, விக்கிரகாராதனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே.
    இப்படிப்பட்டவைகளினிமித்தமாகக் கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கினை வருவதால், ஒருவனும் உங்களை வீண்வார்த்தைகளினாலே மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; (எபேசியர் 5:5-6)

மறுபடியும் சொல்லுகிறேன் "வீண்வார்த்தைகளினாலே மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்"



__________________
ebi


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

சில்சாம் அவர்களே, என்ன கேள்வி கேட்டாலும் ஏதாவது ஒரு பதில் வைத்திருப்பார்கள் இல்லையென்றால்  திருத்தப்பட்டது என்று ஈசியாக சொல்லிவிடுவார்கள் என்பதை நன்கறிவேன். ஆனாலும் எனக்குள் எழுந்த கேள்விகளை கேட்காமலும் இருக்கமுடியவில்லை. இவைகளெல்லாம் ஏற்கனவே கேட்கப்பட்டாயிற்று என்பதும் எனக்கு தெரியாது.இப்போ கூட பாருங்க திருப்பவும் ஒரு சந்தேகம்...

சகாயம்:
// எனவே ஒரே தேவனாகிய யாவே கடவுளை ஒரே மத்தியஸ்தரான இயேசு கிறிஸ்து வழியாகத் தொழுது கொள்ள வேண்டும். //

கிறிஸ்து வழியாக யாவே தேவனை தொழுது கொள்ள வேண்டும் என்றால் என்ன? எப்படி? ( ஏற்கனவே பிதாவை எப்படி தொழ வேண்டும் ? என்று சகோ.ஜான் கேள்வி கேட்டுள்ளார்)




__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

colvin wrote:

சகோ. சகாயம்,

தலைப்பை விட்டு வேறுவேறு தலைப்பிற்கு தாவ வேண்டாம். பரிசுத்த ஆவி குறித்த பதிகளுக்கு இன்னும் தங்களிடமிருந்து பதில் இல்லை. மற்றும் சர்வசிருஷ்டிககும் முந்தினபேறானவர், தந்தை என்னினும் பெரியவராயிருக்கிறார் போன்ற பதிவுகளுக்கான விளக்கங்கள் இங்கு உள்ளன. பழைய பதிவில் தொடுப்பையும் கொடுத்தேன் பார்க்கவில்லையா? முதலில் அவற்றுக்கு ஆதாரத்துடன் பதில் எழுதுங்கள். பின்னர் நீங்கள் கீழ் குறிப்பிட்ட சில விடங்களை பார்க்கலாம்


நண்பர் கோல்வின் அவர்களே,எபி அவர்கள் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு நான் பொதுவானதொரு பதிலைக் கொடுத்தேன்;சகாயம் அவர்களோ தனக்குத் தெரிந்ததிலிருந்து விவரமானதொரு விகாரமான பதிலைக் கொடுத்துள்ளார்;அவர் வேறொரு திரியில் வாதத்தைத் தவிர்த்து அமைதி காத்தாலும் இங்கே இந்த குறிப்பிட்ட திரியின் தலைப்புக்குப் பொருத்தமான கருத்துக்களைக் கூற அவருக்கு உரிமையுண்டு;அவர் எழுதியது தவறாக இருந்தாலும், எழுதியது தவறல்ல‌...எல்லாம் அனுபவம் தந்த பாடமய்யா..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

சகோ. சகாயம்,
தலைப்பை விட்டு வேறுவேறு தலைப்பிற்கு தாவ வேண்டாம். பரிசுத்த ஆவி குறித்த பதிகளுக்கு இன்னும் தங்களிடமிருந்து பதில் இல்லை. மற்றும் சர்வசிருஷ்டிககும் முந்தினபேறானவர், தந்தை என்னினும் பெரியவராயிருக்கிறார் போன்ற பதிவுகளுக்கான விளக்கங்கள் இங்கு உள்ளன. பழைய பதிவில் தொடுப்பையும் கொடுத்தேன் பார்க்கவில்லையா? முதலில் அவற்றுக்கு ஆதாரத்துடன் பதில் எழுதுங்கள். பின்னர் நீங்கள் கீழ் குறிப்பிட்ட சில விடங்களை பார்க்கலாம்

__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 72
Date:
Permalink  
 

  அதுபோலவே அவர்களிடம் நான் ஒரே ஒரு கேள்வியை மீண்டும் மீண்டும் எழுப்பி வருகிறேன்; அது என்னவென்றால் இயேசுகிறித்துவை தெய்வமாகத் தொழலாமா கூடாதா என்பதே..! இதற்கு அவர்கள் சொல்லும் பதிலிலேயே மற்ற அனைத்து காரியங்களையும் விளங்கிக்கொள்ளலாம்;இதனால் இவர்களைப் புறக்கணிக்கவேண்டிய காரணமும் விரைவில் தெரிந்துவிடும்; ஏனெனில் முதல் கோணல் முற்றும் கோணல் அல்லவா? அவர் தேவனா என்று கேட்டால் கூட திருட்டுபய புள்ளைங்க, ஆமாமா... அவர் தேவன் தான் என்று ஒப்புக்கொள்வது போல ஒப்புக்கொண்டு தியோஸ் மற்றும் ஹோ தியோஸ் என்று விளங்காத ஒன்றைக் கூறி குழப்புவார்கள்.

ans:;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

chillsam பதில்கள் எதிர்பார்க்கப்படுகின்றன....................................

 இயேசுகிறித்துவை தெய்வமாகத் தொழலாமா கூடாதா? யாரை தொழுது கொள்ள வேண்டும்?

யோவா14:1;தேவனிடத்தில் விசுவசமாயிருங்கள்.என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்.

1தீமோ.2:5; தேவன் ஒருவரே ,தேவனுக்கும் மனுஷனுக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.”

 எனவே ஒரே தேவனாகிய யாவே கடவுளை ஒரே மத்தியஸ்தரான இயேசு கிறிஸ்து வழியாகத் தொழுது கொள்ள வேண்டும்.

கொலோ 1:14-16; குமாரன் வழியாக சகலத்தையும் சிருஷ்டித்த தேவன்.

1பேது 1:19-20 ; குமாரன் வழியாக இரட்சிப்பை உண்டாக்கிய தேவன்.

எபே 1:4-12; குமாரன் வழியாகவே தன்னை தொழுது கொள்ள வேண்டும் என சித்தம்   வைத்துள்ளார்.

 யோவா 14:6 ; நானே வழி

யோவா.10:9; நானே வாசல்.

இதை இயேசு

யோவா 16:23; நீங்கள் என் நாமத்தினாலே பிதாவினிடத்தில் கேட்டுக்கொள்வதெதுவோ அதை அவர் உங்களுக்கு தருவார்.

• பவுல் இதை

ரோமர்.16:27 ; தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாயிருக்கிற தேவனுக்கு இயேசு கிறிஸ்துவின் மூலமாய் என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.


கொலோ 3:17; வார்த்தையினாலாவது கிரியை யினாலாவது நீங்கள் எதைச் செய்தாலும் அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியங்கள்.


இயேசு கூட ஒரே தேவனை மட்டுமே தொழுது கொள்ள சொல்கிறார்.

 மத் 7:6; உன் பிதாவை நோக்கி ஜெபம் பண்ணு. 7:8; 7:9;

மத் 4:10 உன் தேவனாகிய யாவே கடவுளை பணிந்து கொண்டு ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக.

யோவா 4:21-23 “ பிதாவை எங்கும் தொழுது கொள்ளும் காலம் வரும் ”

ஏசா 42:8 என் மகிமையை வேறொருவனுக்கும் என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன்.

சங் 29:1 யாவே கடவுளுக்கு மகிமையும் வல்லமையையும் செலுத்துங்கள்.

யேகோவாவுக்கே அதை செலுத்துங்கள். நாளா 16:28.


அவர் தேவனா என்று கேட்டால் கூட திருட்டுபய புள்ளைங்க,

ans;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;; 



1. தேவனாகிய யேகோவாவின் முதல் சிருஷ்டி

வெளி 3:14; தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்கிறதாவது. ..

கொலோ 1:15; அவர் அதரிசனமான தேவனுடைய தற்சொரூபமும் சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்.

2. ஓரே பேறான குமாரன் - Only Son

 
யோவா1:14-18; யோவா 3:16; தேவன் தம்முடைய ஓரே பேறானகுமாரனை விசுவாசிக்கிறவன். எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும் படிக்கு.

மகன் - சங் 2:7; சங் 45:7 ; எபி 1:5-9; 3.

முதற்பேறானவர். – First Son . சங் 89:27; நான் அவனை எனக்கு முதற்பேறானவனும் , பூமியின் ராஜாக்களைப் பார்க்கிலும் மகா உயர்ந்தவனுமாக்குவேன்.

 4. செல்லப்பிள்ளை.

சாலொமோன் ராஜா பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டு முதல்சிருஷ்டியாகிய இயேசு கிறிஸ்துவைக் குறித்து கூறுகிறார். நீதி 8:22-30;

நீதி 8:22; கர்த்தர் தமது கிரியைகளுக்கு முன் பூர்வமுதல் என்னைத் தமது வழியின் ஆதியாகக் கொண்டிருந்தார். “ யேகோவா தமது படைப்புகளில் என்னையே முதலாவதாக படைத்தார். ” என்று திருத்திய மொழி பெயர்ப்புகளில் காணலாம். “ஆதி முதற்கொண்டும்”.

நீதி 8:23; அநாதியாய் அபிஷேகம் பண்ணப்பட்டேன். ஜெநிபிக்கப்பட்டேன். பிறப்பிக்கப்பட்டேன்.(ஆதி 1:20)

 5. ஞானம் :

மத் 11:19; ஞானமானது அதன் பிள்ளைகளால் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படும் என்றார்.

1கொரி. 1:31; அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்.


6. வார்த்தை -

யோவா. 1:14; வெளி.19:13; இரத்தத்தில் தொய்க்கப்பட்ட வஸ்திரத்தை தரித்திருந்தார். அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே. இயேசுவுக்கு வார்த்தை என்ற பெயரும் உண்டு.

அரசனுடைய பிரதிநிதியாக பேசுகிற ஒருவனை கிரேக்க பாஷையில் Logos – லோகாஸ் அதாவது வார்த்தை என்று அழைத்தனர். தேவனாகிய யேகோவா தமது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் உலகத்தாருடன் பேசினப்படியால் இயேசுவுக்கு வார்த்தை என்ற பெயர் பொருத்தமாயிருக்கிறது.

யோவா.12:49; நான் சுயமாய் ஒன்றும் பேசவில்லை. நான் பேசவேண்டியது இன்ன தென்றும் உபதேசிக்க வேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்கு கட்டளையிட்டார்.


உபா 18:18-19; உன்னைப் போல் ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக எழும்ப பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன். நான் அவருக்கு கற்பிப்பதெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார். (நிறைவேறுதல் அப். 3:22-23) (எபி 1:1)

 இக்காரணங்களை முன்னிட்டு யோவா.1:1-3; வசனங்களில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது.

அந்த வார்த்தை தேவனாயிருந்தது என்பதன் விளக்கம்.

“அநாதி தேவன்" = தொடக்கமும் முடிவும் இல்லாதவர் தேவன்.

ஆதியிலே (தொடக்கத்திலே) வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். யோவா.1:1;


தேவர்கள் (or) தேவன் என்பவர்கள் யார்?

எபிரேயமொழியில்எல்லோயிம்என்னும்பதம்தேவன்மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

 Elohim = தேவன் -வல்லவர். Ans ::இவ்வார்த்தப்படி வல்லவர்கள் அனைவரும் தேவர்களே ஆவர்.


Example : யாத் 4:16;7:1; நீ அவனுக்கு தேவனாக இருப்பாய். (மோசே- தேவன்).உன்னை நான் பார்வோனுக்கு தேவனாக்கினேன்.

 சங் . 82:1-6; நீங்கள் தேவர்கள் என்றும் , நீங்கள் எல்லோரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன். தேவ சபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார். தேவர்கள் நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார்.(யோவா.10:34-36---இயேசு)

2கொரி. 4:4 ; இப்பிரபஞ்சத்தின் தேவன் ஆனவன் அவர்களுடைய மனதை குருடாக்கினான். பொல்லாத செயலில் வல்லவன் - (சாத்தான் - தேவன்) .

யாத் 22:28; நியாயாதிபதியை தூஷியாமலும் …. (நியாயாதிபதி, தூதர்கள் , மோசே தேவனுடைய பிள்ளைகள் சாத்தான் தேவர்கள் என்று சொல்லப்பட்டுயிருக்கிறது). கிரேக்க பாஷையில் உள்ளபடி பார்த்தால் … In the beginning was the Logos , andthe Logos was with THE GOD and a god was the Word . என்றுள்ளது. பிதாவாகிய தேவனை THE GOD - மகாதேவன் குமாரனாகிய இயேசுவை a God - ஒரு தேவனாயிருந்தார்.

உபா 10:17 ; உங்கள் தேவனாகிய யேகோவா;  

1. தேவாதி தேவனும்

2. கர்த்தாதி கர்த்தரும்

3. மகத்துவம் ,வல்லமையும் பயங்கிரமுமான தேவனுமாயிருக்கிறார்

சங் 82:1; 4. தேவர்களின் நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார்.

சங் 95:3; 5. மகாதேவனும்.


 6. எல்லா தேவர்களுக்கும் மகா ராஜனுமாயிருக்கிறார். சங் 96:4 ;

 7. பெரியவர்

8. எல்லா தேவர்களிலும் பயப்படத்தக்கவர் அவரே.

சங் 96:7; யேகோவாவுக்கே அதை செலுத்துங்கள்.

சங் 136:2; தேவாதி தேவனைத் துதியுங்கள்.

சங் 138:1; தேவர்களுக்கு முன்பாக உம்மை கீர்த்தனம் பண்ணுவேன்.

1கொரி. 8:5-6;

1. அநேக தேவர்கள் உண்டு. வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் எனப்படுகிறவர்கள்உண்டு.

2. ஓரே தேவன் நமக்குண்டு இப்படி அநேக தேவர்களும், அநேககர்த்தாக்களும்உண்டாயிருந்தாலும் பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு. அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம்.

3.இயேசு கர்த்தர். இயேசு கிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு.
.......................


8. வல்லமையுள்ள தேவன்

ஏசா 9:6; நமக்கு ஒரு பாலகன் பிறந்தார். …அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனை கர்த்தர், வல்லமையுள்ள தேவன் , நித்திய பிதா , சமாதானப் பிரபு எனப்படும். ஆனால் பிதா – சர்வ வல்லமையுள்ள தேவன்.
 Example : (ஆதி 17:1; 28:3; 35:11; யாத் 6:2-3;)

 9. அனுப்பப்பட்டவர்.

யோவா 6:38; அனுப்பினவருடைய சித்தத்தின் படி…(4:34)

யோவா 8:42; அவரே என்னை அனுப்பினார்.

யோவா 5:30; என்னை அனுப்பின பிதாவுக்கு..

யோவா 7:28; என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர்.

யோவா 13:16; அனுப்பப்பட்டவன் தன்னை அனுப்பினவரிலும் பெரியவனல்ல.

யோவா 14:28; ஏனெனில் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்.

1யோவா 4:14; 10. கிறிஸ்துவுக்கு தேவன் தலையாயிருக்கிறார்.

1கொரி. 11:3;

1.தேவன்.............................................

1. ஸ்திரிக்கு புருஷன் தலை

2.கிறிஸ்து ..........................

2. புருஷனுக்கு கிறிஸ்து தலை

3. புருஷன்...........................

 3. கிறிஸ்துவுக்கு தேவன் தலை.

 4. ஸ்திரி

11. யேகோவா தேவனுக்கு கீழ்ப்பட்டிருப்பவர்


1கொரி 15:27; சகலத்தையும் அவருடைய பாதத்திற்கு கீழ்ப்படுத்தினாரே…சகலத்தையும் அவருக்குக் கீழ்ப்படுத்தினவர் கீழ்ப்படுத்தப்படவில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது.

1கொரி. 15:28; தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு குமாரன் தாமும் தமக்குச் சகலத்தையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார்.

12. பிதாவினால் ஜீவனை பெற்றுக்கொண்டவர்.

யோவா.5:26; ஏனெனில் , பிதாவானவர் தம்மில் தாமே ஜீவனுடையவராய் இருக்கிறது போல, குமாரனும் தம்மில் தாமே ஜீவன்உடையவராய் இருக்கும் படி அருள் செய்து இருக்கிறார்.

யோவா.6:57; ஜீவனுள்ள பிதா என்னை அனுப்பினது போலவும், நான் பிதாவினால் பிழைத்திருக்கிறது போலவும் இஎன்னை புசிக்கிறவனும் என்னிலே பிழைப்பான்.

 2கொரி.13:4; ஏனெனில் அவர் பலவீனத்தால் சிலுவையில் அறையப்பட்டிருந்தும், தேவனுடைய வல்லமையினால் பிழைத்திருக்கிறார்.

13. பிதாவினால் மரணத்திலிருந்து உயிரோடே எழுப்பப்பட்டவர்.

அப் 2:24; தேவன் அவருடைய மரண உபாதிகளின் கட்டை அவிழ்த்து ,அவரை எழுப்பினார். (2:25-31;)

 அப் 2:32; இந்த இயேசுவை தேவன் எழுப்பினார். இதற்கு நாங்களெல்லாரும் சாட்சிகளாயிருக்கிறோம்.

ரோம 10:9; “தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். ” (அப் 3:13-15; அவரை தேவன் மரித்தோரிலிருந்து எழுப்பினார்.

அப் 3.26; அப் 2:24; தேவன் அவருடைய மரண உபாதைகளின் கட்டைஅவிழ்த்து …

அப் 13:30; தேவனோ அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார்.

2கொரி.4:14; இயேசுவை எழுப்பினவர். 1கொரி.6:14; தேவன் கர்த்தரை எழுப்பினாரே. )

அப் 5:30-31; நீங்கள் மரத்திலே தூக்கிக் கொலை செய்த இயேசுவை , நம்முடைய பிதாக்களின் தேவன் எழுப்பி …. தமது வலது கரத்திலே உயர்த்தினார்.

14. தேவ குமாரன் : ( 1யோவா.5:10)

யேகோவா தேவன் சாட்சி அளித்தல் (யோவா 8:17-18)மத் 3:17; ( மாற் 1:11;)

1.அன்றியும்வானத்திலிருந்துஒருசத்தம் உண்டாகி : “ இவர் என் நேச குமாரன். இவரில், நான் பிரியமாயிருக்கிறேன்.” என்று உரைத்தது. மத் 17:5;

 2. “இவர் என் நேச குமாரன்.இவரில், பிரியமாயிருக்கிறேன். இவருக்குச் செவி கொடுங்கள்” என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று.

பேதுரு சாட்சி அளித்தல்

மத் 16:16; “நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து.”

மத் 16:17; பரலோகத்திலிருக்கிற என்பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். (யோவா 6:69)

ரோம 1:5; பரிசுத்த ஆவியின்படி பலமாய் ரூபிக்கப்பட்ட தேவக்குமாரன் 

15. அபிஷேகம் பண்ணப்பட்டவர்.john.20:31; லூக் 4:18;

 (இயேசு ------ இரட்சகர் . மத் 1:21; கிறிஸ்து --- அபிஷேகம் பண்ணப்பட்டவர்)

 (எபிரேயம் ---- மேசியா ; கிரிக்----கிறிஸ்து; ஆங்கிலம் - Anaitted;

தமிழ் – அபிஷேகம் பண்ணப்பட்டவர். )

சங் 2:6-9; நான் என்னுடைய பரிசுத்த பர்வதமாகிய சீயோன் மீதில் என்னுடைய ராஜாவை அபிஷேகம் பண்ணிவைத்தேன். .“நீர் என்னுடைய குமாரன் இன்று நான் உன்னை ஜெநிப்பித்தேன்.”

சங் 45:7; நீர் (இயேசு) நீதியை விரும்பி , அக்கிரமத்தை வெறுக்கிறீர் . ஆதலால் (இயேசுவே) தேவனே , உம்முடைய தேவன் (யேகோவா)உமது தோழரைப் பார்க்கிலும் உம்மை ஆனந்த தைலத்தினால் அபிஷேகம் பண்ணினார்.

அப் 10:38; இயேசுவைத் தேவன் …. அபிஷேகம் பண்ணினார். Ans: John 3:14;

 16. தேவன் இயேசுவைக் கொண்டு சிருஷ்டித்தார்.

கொலோ 1:16; அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது. … அவரைக் கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது.

யோவா 1:3; சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று.

எபே 3:11; இயேசு கிறிஸ்துவைக் கொண்டு எல்லாவற்றையு ம் சிருஷ்டித்த

எபி1:2; இவரைக் கொண்டு உலகங்களை உண்டாக்கினார்.


நீதி 8:22; யோவா 1:10; உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று.


பிதாவுக்கும் இயேசுவுக்கும் உள்ள வித்தியாசங்கள். :

நீதி 30:4 வானத்துக்கு ஏறியிறங்கினவர் யார்? காற்றைத் தமது கைப்பிடிகளில் அடக்கினவர் யார்? பூமியின் எல்லைகளையெல்லாம் ஸ்தாபித்தவர் யார்? அவருடைய நாமம் என்ன? அவர் குமாரனுடைய நாமம் என்ன? அதை அறிவாயோ! 

http://www.biblegreatmystery.com/bible/index.php?option=com_content&view=article&id=79&Itemid=56

__________________
yes


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

ebi wrote:

யாருக்கும் நரகம் இல்லை, அனைவரும் இரட்சிக்கப்படுவார்கள் என்னும் கோட்பாட்டினால் எனக்குள் சில கேள்விகள் எழுந்தன. அவைகளை இங்கே பதிக்கிறேன். கோவை பெரியன்ஸ் தளத்திலுள்ளவர்கள் மற்றும் சகாயம் போன்றோர் பதில்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

  • அப்படியானால் சுவிஷேசம் ஏன் சொல்ல வேண்டும்?
  • ஏன் தேவனுக்கு கீழ்ப்படிதலுள்ள,பிரியமான வாழ்க்கை வாழ வேண்டும்?அவரவர் தன் இஷ்டப்படி வாழலாமே, முடிவு ஒன்றுதானே?
  • பவுல், பேதுரு போன்றோர் கிறிஸ்துவினிமித்தம் ஏன் இரத்தசாட்சியாக மரிக்க வேண்டும்?
  • கிறிஸ்துவின் மேல் உள்ள விசுவாசத்தினால் என்ன பலன்?ஏன் அவரை விசுவாசிக்க வேண்டும்?
  • ஏன் மறுபடியும் பிறக்க வேண்டும்?
  • ஏன் வெளிப்படுத்தின சுவிசேஷத்தில் தேவன் ஏழு சபைகளையும் எச்சரிக்க வேண்டும்?
  • கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் மட்டும் எழுதி புதிய ஏற்பாட்டை முடித்திராமல் நிருபங்களும் ஏன் இருக்க வேண்டும்?
  • உங்கள் கோட்பாடுகளை நம்பாதவர்களுக்கும் நரகம் இல்லை, இரட்சிப்பு உண்டு. அப்படியிருக்க இந்த கோட்பாட்டிலிருக்கும் நீங்கள் ஏன் உங்கள் கருத்துக்களை இவ்வளவு சிரமம் எடுத்து மற்றவர்களுக்கு சொல்ல வேண்டும்?

நண்பரே, இந்த கேள்விகளெல்லாம் ஏற்கனவே எழுப்பப்பட்டுவிட்டது; அவர்களைப் பொறுத்தவரையிலும் இவையெல்லாம் குழந்தைத்தனமான கேள்விகள்; இதே கேள்விகளை நீங்கள் இஸ்லாமியரிடமோ பௌத்த மார்க்கத்தவரிடமோ எழுப்பினால் என்ன பதில் கிடைக்குமோ அதுவே இவர்களிடமிருந்தும் கிடைக்கும்; ஏனெனில் இவர்கள் ஒவ்வொரு ஆதாரக் கிறித்தவப் போதனைக்கும் எதிராக தீஸிஸ் செய்து வைத்து சிஸ்டமேடிக்காகவும் ஃபிக்ஸடாகவும் ஒரு மார்க்கத்தையே ஸ்தாபித்து வைத்துவிட்டார்கள்; அது கிறித்தவ ஸ்தாபனங்களின் மீதான வெறுப்பினால் வளர்ந்துவிட்ட‌ இயக்கமாகும்; ஸ்தாபன துவேஷமே இவர்களுடைய வெற்றியின் இரகசியம்; இவர்களுக்குப் புரியவைப்பதோ அல்லது இவர்களைப் புரிந்துகொள்வதோ முடியவே முடியாது; இது முழுக்க முழுக்க மனம் சம்பந்தமானதாகும்; இதில் ஒருவன் தான் முழுமனதாக நம்பி ஏற்றுக்கொண்டதே பிரதான பங்கு வகிக்கிறது; விண்ணகத்திலிருந்து ஒரு ஒளிவந்து சந்திக்கும்வரை தன் வழியே சரியானது என்று ஓடிக்கொண்டிருந்த பவுலைப் போன்றவர்கள் இவர்கள்; இவர்களை வேதபாரகர் பரிசேயருடைன் கூட ஒப்பிடுதல் தகாது; ஏனெனில் இவர்கள் யூதர்கள் அல்லவே;இவர்கள் அவனுடையதைக் கழுவிக் குடித்த பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

பொதுவாக நற்செய்தியைப் பிரசங்கிக்கும் போது சொல்லப்படும் உதாரணமானது நினைவுக்கு வருகிறது; என்னுடைய பெலவீனத்தை ஒருவர் அறியவேண்டுமானால் அவர் என்னுடைய பெலவீனத்துக்குள் வந்தால் தானே அறியமுடியும், இல்லாவிட்டால் எப்படி அதை தீர்க்கமுடியும்? இப்படியே சாவாமையுள்ளவரான இரட்சகர் எனக்காக அடிமை கோலத்தில் வந்து அவதரித்து பாடுபட்டு மரித்து மீண்டும் எழுந்தார்; இது "ஆதி" எனும் இசைத் தொகுப்பில் அறிவர் திரு சாம் கமலேசன் அவர்கள் சொன்னது; இதன்படியே இவர்களை அணுகுவதற்கு உங்களுக்கும் அவர்களைப் போன்ற மனநிலை வேண்டும்;
அது மிகவும் ஆபத்தான விளையாட்டல்லவா? அதைவிட எளிமையான ஒரு வழியும் இருக்கிறது; பல சகோதரர்களும் செய்வது போல இவர்களைக் குறித்து அறிந்துகொள்ளும் ஆர்வத்தை விட்டுவிட்டு உங்களுக்குள் இருக்கும் இம்மானுவேலரைக் குறித்து அறிந்துகொள்ளும் ஆவலை நிறைவுசெய்யுங்கள்; இந்த பிசாசுகள் பெலவீனமானவர்களைக் குறிவைத்தே தாக்குகிறது; எல்லோரும் என்னைப் போல தாக்குப்பிடிக்கமுடியாது;

  • "நீ கற்று நிச்சயித்துக்கொண்டவைகளில் நிலைத்திரு.."(2.தீமோத்தேயு.3:14)

மேசியாவின் எதிரிகள் முழுவேதாகமத்தையுமே ரீரைட் செய்வதுபோல செய்து ரிவைஸ் செய்திருக்கிறார்கள்;இதனால் வேதத்தின் எந்தவொரு வசனத்தை நீங்கள் எடுத்துக்கேட்டாலும் அதற்கு அவர்கள் சொல்லுவதே விளக்கம் என்று சாதிப்பார்கள்;அதனை நிறுவுவதற்காகவே கத்தோலிக்கம் போன்ற ஸ்தாபனங்களையும் நாம் கைக்கொள்ளும் இறையியல் கொள்கைகளையும் தூஷிப்பார்கள்;அவர்களுடைய தூஷண‌த்துக்கு அஞ்சி அந்த பக்கம் சிலரும் இந்த பக்கம் சிலரும் சிதறி ஓடுவார்கள்;மொத்தத்தில் சபை கலங்கடிக்கப்படும்;இதுவே அவர்களுடைய மைய நோக்கமாகும்.

எனவே என்னுடைய சிறிய குருவி மூளைக்கு எட்டிய ஒரு யோசனை என்னவென்றால், காய்கனி வாங்க கடைத்தெருவுக்கு செல்லுகிறோம்; அவ்வமயம் நாம் வாங்கவிருக்கும் காயை மட்டுமே பரிசோதிப்போமே தவிர கடையிலுள்ள மொத்த காய்களையுமல்ல; உதாரணத்துக்கு முருங்கை காயை முறுக்கிப்பார்த்தும் வெண்டை காயை நுனி உடைத்துப்பார்த்தும் வாங்கவேண்டுமாம்; வீட்டிலும் பானை சோற்றுக்கு ஒரு சோறு மட்டும் பதம் பார்த்தால் போதுமல்லவா?

அதுபோலவே அவர்களிடம் நான் ஒரே ஒரு கேள்வியை மீண்டும் மீண்டும் எழுப்பி வருகிறேன்; அது என்னவென்றால் இயேசுகிறித்துவை தெய்வமாகத் தொழலாமா கூடாதா என்பதே..! இதற்கு அவர்கள் சொல்லும் பதிலிலேயே மற்ற அனைத்து காரியங்களையும் விளங்கிக்கொள்ளலாம்;இதனால் இவர்களைப் புறக்கணிக்கவேண்டிய காரணமும் விரைவில் தெரிந்துவிடும்; ஏனெனில் முதல் கோணல் முற்றும் கோணல் அல்லவா? அவர் தேவனா என்று கேட்டால் கூட திருட்டுபய புள்ளைங்க, ஆமாமா... அவர்  தேவன் தான் என்று ஒப்புக்கொள்வது போல ஒப்புக்கொண்டு தியோஸ் மற்றும் ஹோ தியோஸ் என்று விளங்காத ஒன்றைக் கூறி குழப்புவார்கள்.

பெரும்பாலும் பலரும் வஞ்சிக்கப்படக் காரணமென்னவென்றால் காரியம் புரியாததால் அல்ல, புரிந்துகொள்ள முயற்சிக்காததாலேயே; பலரும் வாதத்தைத் தவிர்த்து ஏதோ நீ சொன்னா சரியாத்தான் இருக்கும், என்றே ஒத்துப்போகிறார்கள்; எதிர்த்து கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பவர்கள் புறக்கணிக்கப்படுவார்கள்; தான் புறக்கணிக்கப்படுவதை எந்தவொரு ஜீவனும் விரும்புவதில்லை என்பது உயிர்களின் தத்துவம் அல்லவா? அதுவே இந்த பிசாசுகளின் வெற்றி கோட்பாடும் சூக்ஷமமுமாகும்.

தான் பதிலளிக்க விரும்பாதவன் கணக்கற்ற கேள்விகளை எழுப்புவான் என்பது மற்றொரு இரகசியமாகும்; அது அந்தகால‌ இரஸலாக இருக்கட்டும் அல்லது தற்கால ஜாகிர் நாயக்காக இருக்கட்டும், கேள்வி கேட்டே வளர்ந்தார்கள்; அந்த கேள்விகள் திக்குமுக்காட செய்வது போலிருக்கும் ஆனால் நின்று யோசித்துப் பார்த்தாலே அந்த பிசாசுகளின் தந்திரம் புரியும்;

இந்த நாய்களைப் போலவே ஆண்டவருடைய ஊழிய காலத்தில் கேள்விகேட்ட பரிசேயருக்கு கேள்விகளையே பதிலாக்கினார், நம்முடைய ஆண்டவர்; அதேபோன்ற அணுகுமுறையே நமக்கு பாதுகாப்பானதாகும்; இவர்களிடம் கேள்வி கேட்பதோ அல்லது இவர்களுடைய கேள்விகளுக்கு பதில் சொல்லுவதோ நம்முடைய வேலையல்ல; அவர்களுடைய யோக்கியதைகளை எடுத்துக்கூறி, உன்னிடம் கற்றுக்கொள்ள எனக்கு எதுவும் இல்லை;உனக்குக் கற்றுக்கொடுக்கவும் என்னிடம் எதுவுமில்லை; எனவே இயேசுவை தெய்வமாகத் தொழாமல் அவர் மிகாவேல் தூதனின் அவதாரம் என்று பிதற்றும் நீ உன் வாயை மூடிக்கொண்டு அமைதியாயிரு அல்லது உன்னை கிறித்தவன் என்று சொல்லிக்கொள்ளாதே என்று உர(றை)க்கச் சொல்லவேண்டும்.

Thats all..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

ebi


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

யாருக்கும் நரகம் இல்லை, அனைவரும் இரட்சிக்கப்படுவார்கள் என்னும் கோட்பாட்டினால் எனக்குள் சில கேள்விகள் எழுந்தன. அவைகளை இங்கே பதிக்கிறேன். கோவை பெரியன்ஸ் தளத்திலுள்ளவர்கள் மற்றும் சகாயம் போன்றோர் பதில்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
  • அப்படியானால் சுவிஷேசம் ஏன் சொல்ல வேண்டும்?
  • ஏன் தேவனுக்கு கீழ்ப்படிதலுள்ள,பிரியமான வாழ்க்கை வாழ வேண்டும்?அவரவர் தன் இஷ்டப்படி வாழலாமே, முடிவு ஒன்றுதானே?
  • பவுல், பேதுரு போன்றோர் கிறிஸ்துவினிமித்தம் ஏன் இரத்தசாட்சியாக மரிக்க வேண்டும்?
  • கிறிஸ்துவின் மேல் உள்ள விசுவாசத்தினால் என்ன பலன்?ஏன் அவரை விசுவாசிக்க வேண்டும்?
  • ஏன் மறுபடியும் பிறக்க வேண்டும்?
  • ஏன் வெளிப்படுத்தின சுவிசேஷத்தில் தேவன் ஏழு சபைகளையும் எச்சரிக்க வேண்டும்?
  • கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் மட்டும் எழுதி புதிய ஏற்பாட்டை முடித்திராமல் நிருபங்களும் ஏன் இருக்க வேண்டும்?
  • உங்கள் கோட்பாடுகளை நம்பாதவர்களுக்கும் நரகம் இல்லை, இரட்சிப்பு உண்டு. அப்படியிருக்க இந்த கோட்பாட்டிலிருக்கும் நீங்கள் ஏன் உங்கள் கருத்துக்களை இவ்வளவு சிரமம் எடுத்து மற்றவர்களுக்கு சொல்ல வேண்டும்?


__________________
Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard