நீங்கள் என்னதான் என்னை கோமாளி என்று சொன்னாலும் நீங்கதான் பெரிய காமடி போங்க! உங்களை காமடியில் யாரும் மிஞ்ச முடியாது! தமிழ் கிறிஸ்தவர்களை சிரிக்க வைக்க 'கோவை காமடியர்கள்' என்கிற நீங்க இரண்டு பெரும் கட்டாயம் தேவை. இதே உங்கள் காமடிக்கு சில சாம்பிள்ஸ்
2 . ஆக்கினை என்றால் சிட்சை (அப்போ I தீமோத்தேயு 3:6 அவன் இறுமாப்படைந்து, பிசாசு அடைந்த ஆக்கினையிலே (G2917 κρίμα krima ) விழாதபடிக்கு, நூதன சீஷனாயிருக்கக்கூடாது. படி பிசாசும் சிட்சிக்க படுகிறானோ? அவனும் இரட்ச்சிக்கப்படுவனோ??)
3 . ஒரே மரணம் அதுவும் மாம்ச மரணமே !
4 . இயேசு மிகாவேல் தூதன்
5 . நியாயதீர்ப்பு என்பது தேவனுடைய இராச்சியத்தில் கற்று கொள்ளுதல் (அதுக்கு ஏன் பயப்படனும்? கற்று கொள்ள பயமா??)
6 . எல்லாருக்கும் இரட்சிப்பு உறுதி!
இங்கே என்னுடைய நண்பர்கள் சிலரிடமும் இந்த காமடிகளை பகிர்ந்து கொண்டேன் எல்லோரும் வயிறு குலுங்க சிரித்தோம் தொடருங்கள் உங்கள் காமடிப்பணியை!!
//"இயேசு"வால் எல்லாரையும் இரட்சிக்க முடியாது என்று நீர் பதிவு செய்தது எனக்கு தெரியும்!! //
இந்த காமடிக்கு நடுவில் குருநாதர் ரசல் பாணியில் பொய் வேறு!! Jesus CAN save every body infact the offer is for everybody but Jesus WILL save somebody (i.e Church or His flock). WILL க்கும் , CAN க்கும் வித்தியாசம் தெரியவில்லை என்றால் நல்ல Dictionary எடுத்து படிக்கவும்.
நமது தளத்தில் உள்ள சகோதர்களும் கூட நான் சொன்னவற்றை தவறாக புரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக கிழே உள்ள தொடுப்பை தருகிறேன் (காமடியர்களின் குழப்பத்திற்கும் 1 Timothy 2:6 அதிலே சிகிச்சை இருக்கிறது)
சரி, சரி நான் இந்த வெளிப்படுத்தின விசேஷம் புத்தகம் பத்தி பெரேயன் அவர்களிடம் கேட்டு ஒரு முடிவுசெய்கிறேன். புடிச்சிட்டேன்! இதோபெரேயன்சொல்லுறார்.
"இரண்டாம்மரணம்" என்கிற ஒரு வார்த்தை வெளி. புத்தகத்தில் மாத்திரமே இருக்கிறது!! இதை வைத்துக்கொண்டு, அது முதல் மரணம் போல் மனிதர்களுக்கு நேர்வதுதான் என்பது எப்படி சரியாக இருக்கும்!!" அப்படிபோடு அருவாள! இந்த வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தை வேதத்தில் இருந்து எடுத்திடலாம். வேறு புஸ்தகத்தில் இதுபோல எல்லாம் சொர்க்கம் போகமாட்டாங்க என்று இருந்தால் அதையும் எடுத்திடலாம். வாழ்கபெரேயன்!! வளர்க அவரது வேதஅறிவு(??)
அப்படியே யாருக்காவது "இயேசு" என்ற பெயர் பிடிக்காவிட்டால் புதியஏற்பாட்டையே மொத்தமா எடுத்திடலாம் பிரச்சனையே இல்லே!
பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார். (வெளி 21:8)
இது ஏன் இப்படி தப்பு தப்பா இருக்கு? ஒரே ஒருத்தனாகிய சாத்தானை பற்றி எழுதும்போது ஏன் பன்மையில் எழுதணும்? ம்ம்ம்ம்....எங்கேயோ தப்பு நடந்து இருக்கு.
மேலும் அவர்களை மோசம்போக்கின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்.(வெளி 20:10)
OK சாத்தானை தள்ளியாச்சு அப்புறம் என்ன நரகத்தை முடிடலாமா. சரி இந்த அதிகாரம் முழுவதையும் வாசித்துவிட்டு மூடலாம்.
ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான். (வெளி 20:15)
இது என்ன ஒரே குழப்பம்! சாத்தானை 10 ஆவது வசனத்திலே தள்ளியாச்சு! அப்புறம் என்ன திரும்ப ஜீவபுஸ்தகத்திலே பெயர் இல்லாத ஒருவனாகிய சாத்தானை திரும்ப நரகத்திலே தள்ளுறது?
இந்த வெளிபடுத்தினவிசேஷம் புத்தகத்தை குறித்து நண்பர் பெறேயனிடம் விசாரிக்கணும். இந்த புத்தகத்திலே ஏதே கோளாறுஇருக்கு.
வெளி 13:8 உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின்குடிகள் யாவரும் அதை வணங்குவார்கள்.
யோவான் உங்களுக்கு என்னஆச்சு? ஜீவபுஸ்தகத்தில் பெயர் இல்லாதவன் சாத்தான் ஒருவன்தான் அவன் மிருகத்தை வணங்குவானா? என்னது???
"பேரெழுதப்பட்டிராத பூமியின்குடிகள் யாவரும்" ஆ? அது ஏன் இப்படி நீட்டி முழங்குரிங்க சாத்தான் ஒருத்தேன் தானே! அதுக்கு எதுக்கு பேரெழுதப்பட்டிராத பூமியின்குடிகள் யாவரும்னு சொல்லுறீங்க.
ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும்; ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப்போடாமல், என் பிதா முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும் அவன் நாமத்தை அறிக்கையிடுவேன். (வெளி 3:5)
என்னங்க ஜான் நீங்க சொல்லுறதை பார்த்தால் ஜெயங்ககொள்ளதவன்னு யாரோ இருப்பதுபோல வாசிக்கிரவுங்க தப்பா நினைச்சிறப்போறாங்க . "According to the Gospel of Kovai Bereyans" எல்லாருடைய பெயரும் இருக்குன்னு சுலபமா சொல்லவேண்டியதுதான? அத்தவுட்டுட்டு வெட்டியா ஜெயந்கொள்ளுகிறவன், கொள்ளாதவன்அப்படின்னுஎழுதணுமா? அப்பொழுது மிருகம் பிடிக்கப்பட்டது; மிருகத்தின் முன்பாகச் செய்த அற்புதங்களால் அதின் முத்திரையைத் தரித்தவர்களையும் அதின் சொரூபத்தை வணங்கினவர்களையும் மோசம்போக்கின கள்ளத்தீர்க்கதரிசியுங்கூட பிடிக்கப்பட்டான்; இருவரும் கந்தகம் எரிகிற அக்கினிக்கடலிலே உயிரோடே தள்ளப்பட்டார்கள். (வெளி 20:15)
ஆகிலும், ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள்என்றார். (லூக்கா 10:20)
இயேசு அப்பா இதுல சந்தோஷப்படுறதற்கு பெருசா என்ன இருக்கு அதான் எல்லாருடைய பெயரும் புத்தகத்தில் இருகிறதே! பெரேயன் புத்தகத்தை முன்னாடியே தொறந்து சாத்தான் பேரு மட்டுமே இல்லைன்னு சொல்லிட்டார்.
அன்றியும், என் உத்தம கூட்டாளியே, அவர்களுக்கு உதவியாயிருக்கும்படி உன்னையும் வேண்டிக்கொள்கிறேன்; அவர்கள் கிலேமெந்தோடும் மற்ற என் உடன்வேலையாட்களோடுங்கூட சுவிசேஷ விஷயத்தில் என்னோடேகூட மிகவும் பிரயாசப்பட்டார்கள், அவர்களுடைய நாமங்கள் ஜீவபுஸ்தகத்தில் இருக்கிறது. (பிலிப்பியர் 4:3 )
ஜீவபுச்த்தகத்தில் பெயர் வருவதற்கு பிரயாசப்படனுமா? என்ன ஒன்னும் தெரியமே இருக்கீங்க பவுல். நீங்க தேவையில்லாம "கல்லெறியுண்டு, வாளால்அறுப்புண்டு, நிர்வாணத்திலும், குளிரிலும்" தேவைஇல்லாமல்இருந்துஇருக்குறீங்க. சாத்தான் பேர் தவிர எல்லார் பெயரும் இருக்குனு ஒருவார்த்தை எழுதியிருந்தா நாங்க எதுக்கு விசுவாசம் , பரிசுத்தம்னு கஷ்ட்டப்படபோகிறோம்?
பெறேயன்ஸ் //சாத்தான் ஒருவனே அந்த ஜீவபுஸ்தகத்திலே பெயர் இல்லாதவனாக காணப்படுகிறான்; ஏனென்றால் அவன் ஒருவனே நியாயம் தீர்க்கப்பட்டிருக்கிறான் (யோவான் 16:11), அவன் ஒருவனை தவிர அந்த இரண்டாம் மரணம் என்கிற அழிவிற்குள் யாராவது போகிறார்களென்றால் அது நீங்கள் வைத்திருக்கும் குப்பையானசிந்தைகள்தான்!!//
விவாதங்கள் எல்லைமீறியும் , சூடாகவும் போய்கொண்டு இருப்பதால் மேலே நண்பர் பெறேயன்ஸ் சொன்ன காரியத்தை சற்று நகைச்சுவையுடன் பதிலளிக்கலாம் என்று நினைக்கிறேன். அதற்கும் மேலே நான் "சாத்தான் மட்டுமே ஜீவபுஸ்தகத்தில் பெயர் இல்லாதவன்" என்று "உண்மையிலே" நினைக்கிற அளவிற்கு மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள் (நண்பர் அன்பு உட்பட) யாரும் இருக்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன்.
அப்பாவியாகிய ஜான் நண்பர் பெரேயன் சொன்னதை உண்மையென்று நம்பிவிடுகிறார். பின்பு தொடர்ந்து வேதத்தில் சில வசனங்களை வாசிக்கிறார். வாசிக்கும்போது ஜானுக்கு ஏற்படும் சந்தேகங்களை தொடர்ந்து வாசியுங்கள்.
ஆகிலும், தேவரீர் அவர்கள் பாவத்தை மன்னித்தருளுவீரானால் மன்னித்தருளும்; இல்லாவிட்டால் நீர் எழுதின உம்முடைய புஸ்தகத்திலிருந்து என் பேரைக் கிறுக்கிப்போடும் என்றான். (யாத்திராகமம் 32:32)
நண்பர் அன்புவிற்க்கும், காமடியர்களுக்கும் நடக்கும் விவாதம் சுவையாக சென்று கொண்டு இருப்பதால் சுவையோடு சுவை சேர்க்கும் நோக்கத்திற்காக இந்த பழைய 'இன்னும் பதில் சொல்லப்படாத' பதிவை வெளியிடுகிறேன்.
பிணம் எழுந்து போய் இன்னொரு பிணத்தை அடக்கம் பண்ணுமோ? இல்லை என்றால் மரித்தோர் யார்?
அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம் பண்ணட்டும், நீ என்னைப் பின்பற்றி வா என்றார். (மத்தேயு 8:22)
தேவனும் சரிரத்தை மாத்திரம் தான் கொல்ல வல்லவரா? அப்போ கிழே உள்ள வசனங்கள் எதற்கு?
ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள். (மத்தேயு 10:28)
என் சிநேகிதராகிய உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: சரீரத்தைக் கொலைசெய்து, அதன்பின்பு அதிகமாக ஒன்றும் செய்யத் திராணியில்லாதவர்களுக்குப் பயப்படாதிருங்கள். நீங்கள் இன்னாருக்குப் பயப்படவேண்டுமென்று உங்களுக்குக் காண்பிக்கிறேன்: கொலைசெய்தபின்பு நரகத்திலே தள்ள வல்லமையுள்ளவருக்குப் பயப்படுங்கள்; ஆம், அவருக்கே பயப்படுங்களென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். (லூக்கா 12:4-5)
நியாயப்பிரமாணத்தைக் கட்டளையிடுகிறவர் ஒருவரே, அவரே இரட்சிக்கவும் அழிக்கவும் வல்லவர்; மற்றவனைக் குற்றப்படுத்துகிறதற்கு நீ யார்? (யாக்கோபு 4:12)
நல்ல Sense Of Humar சகோதரி! அவரு வேற நெறைய புக்கு (Books) வைத்து இருக்கிறாராம் நாம் அதை பாத்து கூட இருக்கமட்டோமாம். உண்மைதான் ரசலின் குப்பையை நாம் எதுக்கு பார்க்கணும்?
சகோதரி கோல்டா கலக்குறீங்க.... நம்பவே முடியவில்லை. நண்பர் கோவை பெரியன் எத்தனை பேரைத்தான் சமாளிப்பார். உங்களுக்கென்று தனிப்பதிவு தொடங்கினாலும் ஆச்சரியமில்லை.
ஆத்தும கரைசலின் 50 இற்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தீர்கள். இதுவரை உருப்படியாக அதற்கு மறுப்பு எழுதினார்களா?
இப்போ நீங்கள் மாறுவேடம் பூண்டுள்ளதாக நண்பர் சொல்லுகிறார். இவரின் தளத்தில் அதுதானே நடக்கிறது.
எங்கே நண்பரே நிருபியுங்கள் பார்க்கலாம். இது எமது சவால்.
ஒரே ஹேடஸை குழின்னு, படுகுழின்னு, பாதாள குழின்னு, எரி நரகம், நரகம் என்று விதவிதமாக மொழிப்பெயர்த்து அதில் குளிர் காய்கிறீர்களே, அதைவிடவா காமேடி!!
வேதத்தை மொழிபெயர்த்த அத்தனை பேரும் மூல பாஷை தெரியாத முட்டாள்களா? நான் குறிப்பிட்ட எல்லா வசனத்திலும் Hades என்ற வார்த்தைதான் இருக்கிறதா?
ஆனால் போனவ வந்தவனெல்லாம் நானும் அபிஷேகிக்கப்பட்டவன் என்று சொல்வது நானும் ஒரு கிறிஸ்து என்று சொல்வதற்குச் சமம்.
மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன் என்று சொல்லியிருக்கிறார். எனவே உங்க மூஞ்சிக்கும் கிடைக்கும், கவலைப்பட வேண்டாம்!
அபிஷேகம் பெற்று விட்டீர்கள் என்றால், இயேசு கிறிஸ்து வெறும் படைக்கப்பட்ட மனிதன் தானோ, அல்லது தேவ தூதனோ எனும் சந்தேகமெல்லாம் தூள் தூளாகி விடும். எனவே, கோவை காமெடியன்ஸ், நீங்க ஜெபிக்க வேண்டிய ஜெபம் இது தான்: அன்புள்ள ஆண்டவரே, எங்களுக்கு வசனத்தைப் பார்த்தால் இயேசு கிறிஸ்து மனிதன் போல் தெரிகிறது. ஆனாலும் சகோ சில்சாம் & கோ, அப்படியல்ல இயேசு கிறிஸ்து தெய்வம் என்று நிறைய வசனங்களைக் காட்டி சாதிக்கிறார்கள். எது உண்மை ஆண்டவரே? எங்கள் ஐயங்களைத் தீர்த்து வைப்பீராக. அன்று உம் சீஷர்களை அபிஷேகித்தது போல் எங்களையும் அபிஷெகித்து, இயேசு கிறிஸ்துவுக்கு சாட்சியாக வாழ எங்களுக்கு உத்வி செய்யுங்க பிதாவே. ஆமென்!
மத் 5:29 உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்து போடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்.
42. அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.
50. அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றார்.
மத் 16:26 மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?
// பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் பரலோகத்தில் பிரவேசிப்பானா அல்லது இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்களை அனைவரும் பரலோகத்தில் பிரவேசிப்பார்களா என்கிற மிக பெரிய கேள்வி இருக்கிறது!! இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட அனைவரும் பரலோகத்திற்கு போக முடியும் என்று போதிப்பவர்கள் தான் இன்று அநேகராக இருக்கிறார்கள்!! அப்படி பார்த்தோமென்றால் பல கோடி ஜனங்கள் பரலோகத்திற்கு உரியவர்களாக இருக்கிறார்கள்!! வெவ்வேறு சபைகளுக்கு சென்றாலும், சிறைச்சாலையில் இருந்தாலும், விபச்சார விடுதிகளில் இருந்தாலும், கொலை கொள்ளையில் ஈடுபட்டாலும், அல்லது மிஷனரி ஊழியம் செய்தாலும், இவர்கள் அனைவரும் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்களே!! அப்படி என்றால் இவர்கள் எல்லாரும் பரலோகம் சென்று விட முடியுமா??
அப்படி என்றால் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்று ஏன் கிறிஸ்து தம்மை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்லி அவரை ஏற்றுக்கொண்டிருக்கும் ஜனங்களிடத்தில் சொல்ல வேண்டும்?//
ரொம்ப பெரிய கண்டுபிடிப்பு தான். கிறிஸ்துவாகிய மேசியாவின் வழியில் மனுக்குலம் இரட்சிப்பை அடைவதே பிதாவின் சித்தமாக இருந்தது. இந்த தேவ திட்டத்தை நிறைவேற்றத்தான் இயேசு பூமிக்கு வந்தார். இயேசுவை ஏற்றுக்கொண்டாலும் அவர் கற்பித்த அந்த இரண்டு கற்பனைகளையும் கைக்கொள்வதே பிதாவின் சித்தமாகிறது. அந்த 2 கட்டளைகளிலும் நியாயப்பிரமாணம் முழுவதும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியுள்ளது. கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட கிறிஸ்தவன் மாய்மாலமாகவும் வாழ சாத்தியம் உள்ளது எனவே தான் இயேசு பிதாவின் சித்தத்தை நிறைவேற்றவேண்டும் என்கிறார். எதிலுமே முழுமையை எதிர்பார்க்கும் ஆண்டவர் தனது சித்தத்தை முழுமையாக நிறைவேற்றவேண்டும் என வலியுறுத்துகிறார்... இவ்வளவு பேசும் நீங்கள் பிதாவின் சித்தம் என வேறு ஏதாவது இருந்தால் என்னவென்று எடுத்து வையுங்கள் பார்ப்போம்.
இவருக்கும் இந்த ஆராய்ச்சிக்கும் சம்பந்தமே இல்லை. யூதாஸ், அந்தி கிறிஸ்த்து மற்றும் கள்ள தீர்க்கதரிஷி ஆகியோர் பாவங்கள் மன்னிக்கப்பட்டு பரலோகம் போவர்கள் அப்புறம் எதுக்கு இந்த கேள்வி அப்புறம் தேவையில்லாத விளக்கம். எல்லார் பாவமும் மன்னிக்கப்படும் ஆகையால் "Go Sin Many More" Enjoy the best of both worlds. (இது தான் ரசலில் Gospel)
. ஏசாயா பார்த்த யேகோவா யார் என்று கேட்டு ஒரு மாசத்திற்கு மேல் ஆகியும் பதில் இல்லை. கொடுமை!!
Sin Many More" Enjoy the best of both worlds.
சரியாக சொன்னீர்கள். இதைத்தான் இன்றைய கள்ளப்போதகக் கூட்டங்கள் செய்து கொண்டிருக்கின்றன. நரகம் என்ற ஒன்று இல்லை. தேவன் நரகத்தில் மனிதனை வாதிக்க கொடூரமானவர் இல்லை. இவர்களைப் பொறுத்தவரையில் எத்தனை பாவங்கள் வேண்டுமானாலும் துணிந்து செய்யலாம். எல்லாம் அனுபவிப்பதற்குத்தான். இதனால்தான் பெரியவரும் விபச்சாரத்திற்கு ஆதரவாக தனது கருத்தை பதி்த்து சென்றுள்ளார்.
கத்தோலிக்கர்களின் ஆத்தும சுத்தரிகரிப்பு ஸ்தலம் போன்றும் இவர்களின் போதனைகள் இருக்கிறது.
//பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் பரலோகத்தில் பிரவேசிப்பானா அல்லது இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்களை அனைவரும் பரலோகத்தில் பிரவேசிப்பார்களா என்கிற மிக பெரிய கேள்வி இருக்கிறது!!//
இவர் எப்போது உளறுவதை நிறுத்துவார் என்று தெரியவில்லை? பிதாவின் சித்தமே இயேசு கிருஸ்துவை எல்லாரும் ஏற்றுகொள்ள வேண்டும் என்பதே.
//சர்வவல்லமையுள்ள தேவனாகிய பிதாவை குறித்தான அறிவு, இவரின் நேசக்குமாரனான கிறிஸ்துவை குறித்தான ஞானம், இவர்களின் சிந்தையும் வல்லமையுமான ஆவியை குறித்தான அறிவு, இந்த தெளிவை தேவனிடத்திலிருந்து அவரின் வார்த்தைகளிலிருந்து பெற்றவர்கள், மீண்டுமாக தேவனை மறுதலித்து, கிறிஸ்துவின் நிலையை மறுதலித்து போனால் அது மன்னிக்கப்படமாட்டாதாம்!! ஏனென்றால் இந்த அறிவானது, இந்த ஞானமானது, பிதாவாகிய தேவனிடத்திலிருந்து தான் கிடைக்கிறது!! பிதாவிடத்திலிருந்து அவரின் ஆவியினால் பெற்றுக்கொண்ட ஞானத்தை மறுதலிப்போருக்கு மாத்திரமே அது மன்னிக்கப்படாது என்கிற ஒரு கண்டிஷன் இருக்கிறது!!//
இவருக்கும் இந்த ஆராய்ச்சிக்கும் சம்பந்தமே இல்லை. யூதாஸ், அந்தி கிறிஸ்த்து மற்றும் கள்ள தீர்க்கதரிஷி ஆகியோர் பாவங்கள் மன்னிக்கப்பட்டு பரலோகம் போவர்கள் அப்புறம் எதுக்கு இந்த கேள்வி அப்புறம் தேவையில்லாத விளக்கம். எல்லார் பாவமும் மன்னிக்கப்படும் ஆகையால் "Go Sin Many More" Enjoy the best of both worlds. (இது தான் ரசலில் Gospel)
. ஏசாயா பார்த்த யேகோவா யார் என்று கேட்டு ஒரு மாசத்திற்கு மேல் ஆகியும் பதில் இல்லை. கொடுமை!!
-- Edited by John on Thursday 12th of May 2011 08:10:55 AM
அருமை நண்பரே, தங்களுடைய பாராட்டினை சிரந்தாழ்த்தி ஏற்றுக்கொள்ளும் முன்பதாக ஒரு காரியம்,என்னை "குரு" என்று குறிப்பிட்டதால் அன்பு அவர்களின் உஷ்ணமான பார்வை உங்கள் மீது விழ இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளவும்;மேலும் "குரு" என்று ஏன் குறிப்பிடக்கூடாது என்பதற்கு வேத வசனம் மட்டுமே காரணமல்ல, "குரு" எனும் ஈரெழுத்து வார்த்தையானது ஒவ்வொன்றுக்கும் ஒரு வார்த்தையானது பின்னணியில் இருப்பதால் அதன் உண்மையான பொருள் ஒரு வாக்கியமாகும்;அதாவது ஒரு ஈரெழுத்து சொல்லின் ஒவ்வொரு எழுத்தும் ஒரு வார்த்தையாக இரு வார்த்தையானது ஒரு வாக்கியமாகிறது.
தங்களுக்கு தமிழ் க்ளாஸ் எடுத்ததற்கு மன்னிக்கவும்; இது தமிழ் வார்த்தையுமல்ல, இது ஒரு சமஸ்க்ருத வார்த்தையாகும்;எனவே என்னை "குரு" என்று குறிப்பிடாமல் முன்னோடி என்று வேண்டுமானால் குறிப்பிடுங்கள்;அப்படியும் ஆண்டவர் சொல்லுகிறார்,முந்தினோர் பிந்தினோர் ஆவர்,என்பதாக.//
வாயை திறக்கவே பயமாய் இருக்கு. நண்பர் கோவை பெரேயன் தளத்தில் Soul Solution என்பவர் ஏன் இவ்வளவு காரமாக இருக்கிறார் என்று புரியவில்லை! Bereyans போல வசனத்தை ஆராய்வது என்றால் இதுதானோ?