Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நித்திய ஜீவன் மற்றும் நித்திய ஆக்கினை என்றால் என்ன? எல்லாரும் இரட்சிக்கப்படுவார்களா?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
நித்திய ஜீவன் மற்றும் நித்திய ஆக்கினை என்றால் என்ன? எல்லாரும் இரட்சிக்கப்படுவார்களா?
Permalink  
 


John wrote:

இவருக்கும் இந்த ஆராய்ச்சிக்கும் சம்பந்தமே இல்லை. யூதாஸ், அந்தி கிறிஸ்த்து மற்றும் கள்ள தீர்க்கதரிஷி ஆகியோர் பாவங்கள் மன்னிக்கப்பட்டு பரலோகம் போவர்கள் அப்புறம் எதுக்கு இந்த கேள்வி அப்புறம் தேவையில்லாத விளக்கம். எல்லார் பாவமும் மன்னிக்கப்படும் ஆகையால் "Go Sin Many More" Enjoy the best of both worlds. (இது தான் ரசலில் Gospel)
. ஏசாயா பார்த்த யேகோவா யார் என்று கேட்டு ஒரு மாசத்திற்கு மேல் ஆகியும் பதில் இல்லை. கொடுமை!!

Sin Many More" Enjoy the best of both worlds.  

சரியாக சொன்னீர்கள்.  இதைத்தான் இன்றைய கள்ளப்போதகக் கூட்டங்கள் செய்து கொண்டிருக்கின்றன. நரகம் என்ற ஒன்று இல்லை. தேவன் நரகத்தில் மனிதனை வாதிக்க கொடூரமானவர் இல்லை. இவர்களைப் பொறுத்தவரையில் எத்தனை பாவங்கள் வேண்டுமானாலும் துணிந்து செய்யலாம். எல்லாம் அனுபவிப்பதற்குத்தான்.  இதனால்தான் பெரியவரும் விபச்சாரத்திற்கு ஆதரவாக தனது கருத்தை பதி்த்து சென்றுள்ளார். 

கத்தோலிக்கர்களின் ஆத்தும சுத்தரிகரிப்பு ஸ்தலம் போன்றும் இவர்களின் போதனைகள் இருக்கிறது. 



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 

//பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் பரலோகத்தில் பிரவேசிப்பானா அல்லது இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்களை அனைவரும் பரலோகத்தில் பிரவேசிப்பார்களா என்கிற மிக பெரிய கேள்வி இருக்கிறது!!//

இவர் எப்போது உளறுவதை நிறுத்துவார் என்று தெரியவில்லை? பிதாவின் சித்தமே இயேசு கிருஸ்துவை எல்லாரும் ஏற்றுகொள்ள வேண்டும் என்பதே.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 

எவை மன்னிக்கப்படும்?
 

//சர்வவல்லமையுள்ள தேவனாகிய பிதாவை குறித்தான அறிவு, இவரின் நேசக்குமாரனான கிறிஸ்துவை குறித்தான ஞானம், இவர்களின் சிந்தையும் வல்லமையுமான ஆவியை குறித்தான அறிவு, இந்த தெளிவை தேவனிடத்திலிருந்து அவரின் வார்த்தைகளிலிருந்து பெற்றவர்கள், மீண்டுமாக தேவனை மறுதலித்து, கிறிஸ்துவின் நிலையை மறுதலித்து போனால் அது மன்னிக்கப்படமாட்டாதாம்!! ஏனென்றால் இந்த அறிவானது, இந்த ஞானமானது, பிதாவாகிய தேவனிடத்திலிருந்து தான் கிடைக்கிறது!! பிதாவிடத்திலிருந்து அவரின் ஆவியினால் பெற்றுக்கொண்ட ஞானத்தை மறுதலிப்போருக்கு மாத்திரமே அது மன்னிக்கப்படாது என்கிற ஒரு கண்டிஷன் இருக்கிறது!!//

இவருக்கும் இந்த ஆராய்ச்சிக்கும் சம்பந்தமே இல்லை. யூதாஸ், அந்தி கிறிஸ்த்து மற்றும் கள்ள தீர்க்கதரிஷி ஆகியோர் பாவங்கள் மன்னிக்கப்பட்டு பரலோகம் போவர்கள் அப்புறம் எதுக்கு இந்த கேள்வி அப்புறம் தேவையில்லாத விளக்கம். எல்லார் பாவமும் மன்னிக்கப்படும் ஆகையால் "Go Sin Many More" Enjoy the best of both worlds. (இது தான் ரசலில் Gospel)
  • . ஏசாயா பார்த்த யேகோவா யார் என்று கேட்டு ஒரு மாசத்திற்கு மேல் ஆகியும் பதில் இல்லை. கொடுமை!!

 

 



-- Edited by John on Thursday 12th of May 2011 08:10:55 AM



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
RE: நித்திய ஜீவன் மற்றும் நித்திய ஆக்கினை என்றால் என்ன? எல்லாரும் இரட்சிக்கப்படுவார்களா?
Permalink  
 


//

அருமை நண்பரே, தங்களுடைய பாராட்டினை சிரந்தாழ்த்தி ஏற்றுக்கொள்ளும் முன்பதாக ஒரு காரியம்,என்னை "குரு" என்று குறிப்பிட்டதால் அன்பு அவர்களின் உஷ்ணமான பார்வை உங்கள் மீது விழ இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளவும்;மேலும் "குரு" என்று ஏன் குறிப்பிடக்கூடாது என்பதற்கு வேத வசனம் மட்டுமே காரணமல்ல, "குரு" எனும் ஈரெழுத்து வார்த்தையானது ஒவ்வொன்றுக்கும் ஒரு வார்த்தையானது பின்னணியில் இருப்பதால் அதன் உண்மையான பொருள் ஒரு வாக்கியமாகும்;அதாவது ஒரு ஈரெழுத்து சொல்லின் ஒவ்வொரு எழுத்தும் ஒரு வார்த்தையாக இரு வார்த்தையானது ஒரு வாக்கியமாகிறது.

தங்களுக்கு தமிழ் க்ளாஸ் எடுத்ததற்கு மன்னிக்கவும்; இது தமிழ் வார்த்தையுமல்ல, இது ஒரு சமஸ்க்ருத வார்த்தையாகும்;எனவே என்னை "குரு" என்று குறிப்பிடாமல் முன்னோடி என்று வேண்டுமானால் குறிப்பிடுங்கள்;அப்படியும் ஆண்டவர் சொல்லுகிறார்,முந்தினோர் பிந்தினோர் ஆவர்,என்பதாக‌.//

 

வாயை திறக்கவே பயமாய் இருக்கு. நண்பர் கோவை பெரேயன் தளத்தில் Soul Solution என்பவர் ஏன் இவ்வளவு காரமாக இருக்கிறார் என்று புரியவில்லை!  Bereyans போல    வசனத்தை ஆராய்வது என்றால் இதுதானோ?



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

John wrote:

//நீங்கள் சாதாரணமான ஆள் கிடையாது...உங்கள் கருத்துக்களில் குறும்பும் நகைச்சுவையும் புகுந்து விளையாடுகிறது;(மேசியாவின்) எதிரிகள் நம்முடைய வேலியை- அதாவது அலங்கத்தை எடுத்துக்கட்டினால் கூட சண்டைக்கு வருகிறார்களே... சன்பல்லாத்து மற்றும் தொபியாவின் வழிவந்தவர்களாக இருப்பார்களோ..?//

அதிலே "குரு" நீங்கதான் சகோதரரே! உங்களுடைய எழுத்துகளை, நடையை ரசிக்கிறேன். (குறிப்பு :- இதுக்கு திட்டு நான் நண்பர்(?!) பெறேயனிடத்தில் வாங்க வேண்டியது இருக்கும்)


அருமை நண்பரே, தங்களுடைய பாராட்டினை சிரந்தாழ்த்தி ஏற்றுக்கொள்ளும் முன்பதாக ஒரு காரியம்,என்னை "குரு" என்று குறிப்பிட்டதால் அன்பு அவர்களின் உஷ்ணமான பார்வை உங்கள் மீது விழ இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளவும்;மேலும் "குரு" என்று ஏன் குறிப்பிடக்கூடாது என்பதற்கு வேத வசனம் மட்டுமே காரணமல்ல, "குரு" எனும் ஈரெழுத்து வார்த்தையானது ஒவ்வொன்றுக்கும் ஒரு வார்த்தையானது பின்னணியில் இருப்பதால் அதன் உண்மையான பொருள் ஒரு வாக்கியமாகும்;அதாவது ஒரு ஈரெழுத்து சொல்லின் ஒவ்வொரு எழுத்தும் ஒரு வார்த்தையாக இரு வார்த்தையானது ஒரு வாக்கியமாகிறது.

தங்களுக்கு தமிழ் க்ளாஸ் எடுத்ததற்கு மன்னிக்கவும்; இது தமிழ் வார்த்தையுமல்ல, இது ஒரு சமஸ்க்ருத வார்த்தையாகும்;எனவே என்னை "குரு" என்று குறிப்பிடாமல் முன்னோடி என்று வேண்டுமானால் குறிப்பிடுங்கள்;அப்படியும் ஆண்டவர் சொல்லுகிறார்,முந்தினோர் பிந்தினோர் ஆவர்,என்பதாக‌.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 32
Date:
Permalink  
 

யேகோவாவின் சாட்சிகள் பிரசங்கிப்பதோ இராச்சியத்தின் சுவிசேசம்.
கிறிஸ்தவர்கள் பிரசங்கிப்பதோ கிறிஸ்துவின் சுவிசேசம் ( தேவ கிருபைக்கான சுவிசேசம் / சமாதானத்தின் சுவிசேசம் ).
இராச்சியத்தின் சுவிசேசம் முதலில் யோவான் ஸ்தானனால் பிரசங்கிக்கப்பட்டது. இது  'இயேசுநாதர்'  சிலுவையில் மரிக்கும் வரையில் பிரசங்கிக்கப்பட்டது.
இப்போது பிரசங்கிக்க படுவதோ, கிறிஸ்துவின் சுவிசேசம். இது சபை எடுபடும் வரையிலுமே...
மீண்டுமாய் இது...   அந்தி கிறிஸ்துவின் நாட்களில் யூதர்களால் பிரசங்கிக்கப்படும்.

( பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் சில சுவிசேசங்கள்.
1) இராச்சியத்தின் சுவிசேசம்.
2) கிறிஸ்துவின் சுவிசேசம் ( தேவ கிருபைக்கான சுவிசேசம் / சமாதானத்தின் சுவிசேசம் / மகிமையின் சுவிசேசம்).
3) என் சுவிசேசம்.... என்று சொல்கிறார் அப்போ பவுல்.
4) நித்திய சுவிசேசம்.
 இவைகளை பிரசங்கிப்பவர்களும். அதற்கான கால கட்டமும் வேறு....
 கடைசியாக  வேறோரு சுவிசேசமும்  உள்ளது.( கள்ள சுவிசேசம்) .
        



__________________
karna


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 

//நீங்கள் சாதாரணமான ஆள் கிடையாது...உங்கள் கருத்துக்களில் குறும்பும் நகைச்சுவையும் புகுந்து விளையாடுகிறது;(மேசியாவின்) எதிரிகள் நம்முடைய வேலியை- அதாவது அலங்கத்தை எடுத்துக்கட்டினால் கூட சண்டைக்கு வருகிறார்களே... சன்பல்லாத்து மற்றும் தொபியாவின் வழிவந்தவர்களாக இருப்பார்களோ..?//

 

அதிலே குரு நீங்கதான் சகோதரரே! உங்களுடைய எழுத்துகளை , நடையை ரசிக்கிறேன். (குறிப்பு :- இதுக்கு திட்டு நான் நண்பர் பெறேயனிடத்தில் வாங்க வேண்டியது இருக்கும்)



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

ஜாண் அவர்களே,

நீங்கள் சாதாரணமான ஆள் கிடையாது...உங்கள் கருத்துக்களில் குறும்பும் நகைச்சுவையும் புகுந்து விளையாடுகிறது;(மேசியாவின்) எதிரிகள் நம்முடைய வேலியை- அதாவது அலங்கத்தை எடுத்துக்கட்டினால் கூட சண்டைக்கு வருகிறார்களே... சன்பல்லாத்து மற்றும் தொபியாவின் வழிவந்தவர்களாக இருப்பார்களோ..?

ஏரோதுக்கள் தேவனுடைய ஆலயத்தை கட்ட தேவன் ஒருபோதும் அனுமதிக்கவே மாட்டார்; அது ஒரு கல்லின்மேல் ஒரு கல் இராதபடி இரட்சகரின் வாக்குபடியே இடிக்கப்பட்டது அல்லவா?

அதுபோலவே இவர்களுடைய தற்பெருமையும் அடக்கப்படும்;நோவாவின் பேழையில் எவ்வேழு ஜோடுகள் சேர்க்கப்படவும் அசுத்தமான துஷ்டமிருகங்களில் ஒரே ஒரு ஜோடு மட்டுமே சேர்க்கப்பட்டதுமே இவர்களுடைய "சிறுமந்தை" கூற்றுக்கு பதிலாகும்;இதனை ஏற்கனவே நான் அவர்களுக்கு பதிலாகக் கூறியிருக்கிறேன்.

நாம் தாவீதின் வீட்டாரைப் போலப் பெருகுவோம்;அவர்களோ சவுலின் வீட்டாரைப் போல க்ஷீணப்பட்டுப் போவார்கள் என்பது நிச்சயம்.

  • "சவுலின் குடும்பத்துக்கும் தாவீதின் குடும்பத்துக்கும் நெடுநாள் யுத்தம் நடந்தது; தாவீது வரவரப் பலத்தான்; சவுலின் குடும்பத்தாரோ வரவரப் பலவீனப்பட்டுப் போனார்கள்." (2.சாமுவேல்.3:1)

விதைப்பனை எகத்தாளம் பண்ணும் சோம்பேறிகளுக்கு அறுப்பிலே பிச்சை கேட்டாலும் கிடைக்காது.

  • "சோம்பேறி குளிருகிறதென்று உழமாட்டான்; அறுப்பிலே பிச்சைகேட்டாலும் அவனுக்கு ஒன்றுங்கிடையாது." (நீதிமொழிகள்.20:4)

இஸ‌லின் துர்ப்போதனைகளால் கிறிஸ்துவைக் குறித்த பயம் தெளிந்துபோய் இவர்களுக்குக் குளிர்விட்டுவிட்டது;எனவே அனலுமில்லாமல் குளிருமில்லாமல் இருக்கிறார்கள்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
நித்திய ஜீவன் மற்றும் நித்திய ஆக்கினை என்றால் என்ன? எல்லாரும் இரட்சிக்கப்படுவார்களா?
Permalink  
 


நண்பர் பெரேயன்

  • மத்தேயு 24:4. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; 5. ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள்.

// தாம் ஊழியர்கள் என்கிற போர்வையில் எத்துனை பேரை வஞ்சிக்கிறோம் என்கிற அச்சமே இல்லாமல் இருக்கும் ஒரு பெரிய கூட்டத்தார் மூலமாக தான் வஞ்சகம் உண்மையான சபையை பீறி போட்டதே தவிர, அற்புதம் எழுதுவது போல் ஏதோ ஒரு சிறிய கூட்டம் வஞ்சிக்காது, கிறிஸ்து இயேசு சொல்லுகிறபடி, அநேகர் வந்து அநேகரை வஞ்சிப்பார்கள்!!//

இது என்ன ஒரு சின்னபுள்ள தனமான கருத்து. உங்கள் கூட்டத்துடன் பேச ஆரம்பித்து சில  நீங்கள் வேதம் வாசிக்கும் பெரேயா (??) முறைமையை புரிந்து கொண்டேன். நீங்கள் காட்டிய வசனம்  (மத்தேயு 24:4) அநேகர் வந்து வஞ்சிப்பார்கள் என்றுதான் சொல்லுகிறதே தவிர தனி ஆளாகவோ அல்லது  சிறு கூட்டமாக வந்து 'அருமையான வேதாகம வகுப்புகள்" என்று கூவி அழைத்து வஞ்சிக்கமாட்டார்கள் என்று சொல்லவில்லை. கிழே உள்ள வசனத்தில் சிலர் என்று வருகிறது உடனே வஞ்சிக்கிறவர்கள் சிறு கூட்டமாக (உதாரணமாக உங்கள் கூட்டத்தை போல) வருவார்கள் என்று முடிவு செய்ய முடியுமா?

  •  உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன். (அப்போஸ்தலர் 20:30)

//ஆனால் வெகு சிலரே கிறிஸ்துவின் அந்த இடுக்கமான வாசலை கண்டுபிடித்து நடப்பார்கள் என்கிறது வேதம்!! சத்தியத்//தை விரும்புவோர் அல்லது அந்த வழியில் நடப்போர் ஆளுக்கு ஒரு சபை வைத்துக்கொண்டு ஒவ்வொரு உபதேசத்தினால், வித்தியாசமான தந்திரங்களினால் கூட்டம் சேர்க்காமல், கிறிஸ்து இயேசு சொன்னபடி சிலர் மாத்திரமே, அந்த சத்திய வழியை கண்டுபிடித்து நடக்க பிரயாசிப்பார்கள் என்பதே உண்மை!!"

நெசமாவா? நான் சாத்தான் மட்டும்தாம் விசாலமான பாதையில் நடப்பவன் என்றும் மற்றவர்கள் எல்லாம் இடுக்கமான வாசல் வழியை நடப்பவர்கள் என்றும் அல்லவா நினைத்தேன். எல்லாரும்தான் பரலோகம் போகப்போறோமே எப்படி நடந்தா என்ன?

இன்னும் எத்துனை காலம் தான் ஏமாற்றுவீர்களோ!!



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
RE: நித்திய ஜீவன் மற்றும் நித்திய ஆக்கினை என்றால் என்ன? எல்லாரும் இரட்சிக்கப்படுவார்களா?
Permalink  
 



கிழே உள்ள வசனத்தில் கொலை என்ற வார்த்தை என்னவிதமான மரணத்தை குறிக்கிறது?

இதோ, தம்முடைய கோபத்தை உக்கிரமாகவும், தம்முடைய கடிந்துகொள்ளுதலை அக்கினிஜுவாலையாகவும் செலுத்தக் கர்த்தர் அக்கினியோடும் வருவார், பெருங்காற்றைப்போன்ற தம்முடைய இரதங்களோடும் வருவார்.கர்த்தர் அக்கினியாலும், தமது பட்டயத்தாலும், மாம்சமான எல்லாரோடும் வழக்காடுவார்; கர்த்தரால் கொலையுண்டவர்கள் அநேகராயிருப்பார்கள். (ஏசாயா 66:15-16)

கர்த்தருடைய புதிய பூமியில் மாம்சமான யாவரும் அவருடைய மகிமையை காண்பார்கள்.


நான் சகல ஜாதியாரையும் பாஷைக்காரரையுங் கூட்டிச்சேர்க்குங்காலம் வரும்; அவர்கள் வந்து என் மகிமையைக் காண்பார்கள். (ஏசாயா 66:18)


இந்த வசனத்தை இரட்சிப்புக்கு உபயோகபடுத்த முடியாது. ஏனென்றால் அதே இடத்தில் அவரை தொழுதுகொள்ளுகிறவர்கள் நரகத்தில் உள்ள மனிதர்களை பார்ப்பார்கள் என்று இருக்கிறது


அப்பொழுது மாதந்தோறும், ஓய்வுநாள்தோறும், மாம்சமான யாவரும் எனக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்களென்று கர்த்தர் சொல்லுகிறார். அவர்கள் வெளியே போய் எனக்கு விரோதமாய்ப் பாதகஞ்செய்த மனுஷருடைய பிரேதங்களைப் பார்ப்பார்கள்; அவர்களுடைய பூச்சி சாகாமலும், அவர்களுடைய அக்கினி அவியாமலும் இருக்கும்; அவர்கள் மாம்சமான யாவருக்கும் அரோசிகமாயிருப்பார்கள்.(ஏசாயா 66:23-24)

 கொலை செய்யப்பட்டு (மரித்து) உயிரோடு எழுப்பட்டவன் நரகத்திலே தள்ளப்படுவானா? உங்களுடைய கிருஸ்தவத்திலே ஒப்புகொள்வீர்களா?


கொலைசெய்தபின்பு நரகத்திலே தள்ள வல்லமையுள்ளவருக்குப் பயப்படுங்கள்; ஆம், அவருக்கே பயப்படுங்களென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். (லூக்கா 12:5)

ஆத்துமாவை கொள்வதற்கும் சரிரத்தை கொள்வதற்கும் என்ன வித்தியாசம்?

ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள். (மத்தேயு 10:28 )




__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 

//அப்படின்னா பழைய ஏற்பாட்டையே வச்சுக்கலாமா? ஆனா பழைய ஏற்பாட்டிலும் இயேசு வாறாரே. அதற்கு என்ன செய்யப்போறீ்ங்க. மீட்பர் ஒருவரை அனுப்ப போவதாக தேவன் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் வாக்கு கொடுத்தாரே. அப்ப அதையும் எடுத்திடலாமா?//

நல்ல கேள்வி சகோ. கொல்வின். காவல் கோபுரக்காரர்கள் அதை முதலிலே செய்துவிட்டனர். இப்படி கிருஸ்தவர்கள் கேள்விகேட்கிறார்கள் என்று தெரிந்ததால் New World Transalation என்று ஒரு சாத்தான் வேதம் எழுதிவைத்து இருக்கிறார்கள். இவர்கள் நாங்கள் காவல் கோபுரத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்று மறுத்தாலும், இவர்கள் சொல்லுகிற குப்பை எல்லாம் அங்கிருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்பதை மறுக்கமுடியாது.

 இயேசு கிறிஸ்து மகிமையே இல்லாமல் பூலோகத்திற்கு வந்து மகிமையை சம்பாதித்தது போல ஒரு மாயையை உருவாக்கிக்கொண்டு இருந்தார்கள் ஆகையால் தான்   இவர்கள் "Pre-Incarnate" கிறிஸ்துவை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள நான் அவர்களிடம் பழைய ஏற்பாட்டு பக்தர்களோடு தேவன் முகமுகமாய் பேசினார், தேவனை நேரடியாய் தரிசித்தார்கள், தேவன் சிநேகிதன் போல பேசினார் என்றெல்லாம் வருகிறது ஆனால் புதிய ஏற்பாட்டில் "தேவனை ஒருவனும் ஒருபோதும் கண்டதில்லை" என்று வாசிக்கிறோம். அப்போ பழைய ஏற்பாட்டு பக்தர்கள் யாரைக்கண்டார்கள்? என்று கேட்டேன் பதில் இல்லை!

 ஜீவ புஸ்தகத்தை குறித்தும், இரண்டாம் மரணத்தை குறித்தும் எழுதிய கேள்விகளுக்கும் பதில் சொல்லமாட்டார்கள்.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

ஆஹா...ஆஹா. மிக அருமையாக எழுதியிருக்கீங்க சகோ. ஜோன்

ஆனா இது என்ன


அப்படியே யாருக்காவது "இயேசு" என்ற பெயர் பிடிக்காவிட்டால் புதிய ஏற்பாட்டையே மொத்தமா எடுத்திடலாம் பிரச்சனையே இல்லே!


அப்படின்னா பழைய ஏற்பாட்டையே வச்சுக்கலாமா? ஆனா பழைய ஏற்பாட்டிலும் இயேசு வாறாரே. அதற்கு என்ன செய்யப்போறீ்ங்க. மீட்பர் ஒருவரை அனுப்ப போவதாக தேவன் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் வாக்கு கொடுத்தாரே. அப்ப அதையும் எடுத்திடலாமா? இன்னும் நிறைய வெளிப்பாடுகள் இயேசுவை குறித்து பழைய ஏற்பாட்டில் உள்ளதே. மொத்தத்தில் ஒன்றுமிலாம ஆக்கிடுவிங்க போல.

__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 

பெறேயன்ஸ்
//சாத்தான் ஒருவனே அந்த ஜீவபுஸ்தகத்திலே பெயர் இல்லாதவனாக காணப்படுகிறான் ஏனென்றால் அவன் ஒருவனே நியாயம் தீர்க்கப்பட்டிருக்கிறான் (யோவான் 16:11), அவன் ஒருவனை தவிர அந்த இரண்டாம் மரணம் என்கிற அழிவிற்குள் யாராவது போகிறார்களென்றால் அது நீங்கள் வைத்திருக்கும் குப்பையான சிந்தைகள் தான்!!//

விவாதங்கள் எல்லை மீறியும் , சூடாகவும் போய் கொண்டு இருப்பதால் மேலே நண்பர் பெறேயன்ஸ் சொன்ன காரியத்தை சற்று நகைச்சுவையுடன் பதிலளிக்கலாம் என்று நினைக்கிறேன். அதற்கும் மேலே நான் "சாத்தான் மட்டுமே ஜீவ புஸ்தகத்தில் பெயர் இல்லாதவன்" என்று "உண்மையிலே" நினைக்கிற அளவிற்கு மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள்  (நண்பர் அன்பு உட்பட) யாரும் இருக்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

அப்பாவியாகிய ஜான் நண்பர் பெரேயன் சொன்னதை உண்மையென்று நம்பி விடுகிறார். பின்பு தொடர்ந்து வேதத்தில் சில வசனங்களை வாசிக்கிறார். வாசிக்கும் போது ஜானுக்கு ஏற்படும் சந்தேகங்களை தொடர்ந்து வாசியுங்கள்.

  • ஆகிலும், தேவரீர் அவர்கள் பாவத்தை மன்னித்தருளுவீரானால் மன்னித்தருளும்; இல்லாவிட்டால் நீர் எழுதின உம்முடைய புஸ்தகத்திலிருந்து என் பேரைக் கிறுக்கிப்போடும் என்றான். (யாத்திராகமம் 32:32)

என்னங்க மோசே கிண்டல் தானே பண்றீங்க? புத்தகத்திலே சாத்தான் பேரு மட்டும் தான் இல்லாம இருக்கும். தெரிஞ்சு கிட்டே கிறுக்கி போடும்னு சும்மாதானே சொன்னீங்க?

  •  அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: எனக்கு விரோதமாய்ப் பாவம் செய்தவன் எவனோ, அவன் பேரை என் புஸ்தகத்திலிருந்து கிறுக்கிப்போடுவேன். (யாத்திராகமம் 32:33)

தேவன் சொல்லுறதை பார்த்தால் சாத்தான் மட்டும்தான் அவருக்கு எதிரா பாவம் பண்ணவன் போல. யூதாஸ் கூட நல்லவர்.


 ஜீவபுஸ்தகத்திலிருந்து அவர்கள்பேர் கிறுக்கப்பட்டுப்போவதாக; நீதிமான்கள் பேரோடே அவர்கள் பேர் எழுதப்படாதிருப்பதாக. (சங்கீதம் 69:28)

எல்லாருமே நிதிமான்கள்தான்னு  பெறேயனுக்கு இருந்த அறிவு சங்கிதகாரனுக்கு இல்லை. என்னத்தை சொல்ல !!

 ஆகிலும், ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள் என்றார். (லூக்கா 10:20)

இயேசு அப்பா இதுல சந்தோஷப்படுறதற்கு பெருசா என்ன இருக்கு அதான் எல்லாருடைய பெயரும் புத்தகத்தில் இருகிறதே! பெரேயன் புத்தகத்தை முன்னாடியே தொறந்து சாத்தான் பேரு மட்டுமே இல்லைன்னு சொல்லிட்டார்.

அன்றியும், என் உத்தம கூட்டாளியே, அவர்களுக்கு உதவியாயிருக்கும்படி உன்னையும் வேண்டிக்கொள்கிறேன்; அவர்கள் கிலேமெந்தோடும் மற்ற என் உடன்வேலையாட்களோடுங்கூடச் சுவிசேஷ விஷயத்தில் என்னோடேகூட மிகவும் பிரயாசப்பட்டார்கள், அவர்களுடைய நாமங்கள் ஜீவபுஸ்தகத்தில் இருக்கிறது. (பிலிப்பியர் 4:3 )

ஜீவ புச்த்தகத்தில் பெயர் வருவதற்கு பிரயாசப்படனுமா? என்ன ஒன்னும் தெரியமே இருக்கீங்க பவுல். நீங்க தேவையில்லாம "கல்லெறியுண்டு, வாளால் அறுப்புண்டு, நிர்வாணத்திலும், குளிரிலும்" தேவை இல்லாமல் இருந்து இருக்குறீங்க. சாத்தான் பேர் தவிர எல்லார் பெயரும் இருக்குனு ஒரு வார்த்தை எழுதியிருந்தா நாங்க எதுக்கு விசுவாசம் , பரிசுத்தம்னு கஷ்ட்டப்பட போகிறோம்?

 ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும்; ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப்போடாமல், என் பிதா முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும் அவன் நாமத்தை அறிக்கையிடுவேன். (வெளி 3:5)

என்னங்க ஜான் நீங்க சொல்லுறதை பார்த்தால் ஜெயங்ககொள்ளதவன்னு யாரோ இருப்பது போல வாசிக்கிரவுங்க தப்பா நினைச்சிறப்போறாங்க . "According to the Gospel of Kovai Bereyans" எல்லாருடைய பெயரும் இருக்குன்னு சுலபமா சொல்ல வேண்டியது தான? அத்தவுட்டுட்டு வெட்டியா ஜெயந்கொள்ளுகிறவன், கொள்ளாதவன் அப்படின்னு எழுதணுமா?

அப்பொழுது மிருகம் பிடிக்கப்பட்டது; மிருகத்தின் முன்பாகச் செய்த அற்புதங்களால் அதின் முத்திரையைத் தரித்தவர்களையும் அதின் சொரூபத்தை வணங்கினவர்களையும் மோசம்போக்கின கள்ளத்தீர்க்கதரிசியுங்கூடப் பிடிக்கப்பட்டான்; இருவரும் கந்தகம் எரிகிற அக்கினிக்கடலிலே உயிரோடே தள்ளப்பட்டார்கள். (வெளி 20:15)

அய்யோ ! அய்யோ ! அக்கிரமம்!! ஜீவ புஸ்தகத்திலே சாத்தான் பேரு ஒண்டிதான் இல்லைன்னு பெரேயன் சொல்லியிருக்காரு அப்புறம் எப்படி மிருகத்தையும், கள்ளத்தீர்க்கதரிசியையும் நரகத்திலே Sorry அக்கினி கடலிலே Sorry , Sorry அக்கினி ஏறியிலே தள்ளலாம்?



  • பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார். (வெளி 21:8)


இது ஏன் இப்படி தப்பு தப்பா இருக்கு? ஒரே ஒருத்தனாகிய சாத்தானை பற்றி எழுதும் போது ஏன் பன்மையில் எழுதணும்? ம்ம்ம்ம்....எங்கேயோ தப்பு நடந்து இருக்கு.

  • மேலும் அவர்களை மோசம்போக்கின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்.(வெளி 20:10)

OK சாத்தானை தள்ளியாச்சு அப்புறம் என்ன நரகத்தை முடிடலாமா. சரி இந்த அதிகாரம் முழுவதையும் வாசித்து விட்டு மூடலாம்.

  • ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான். (வெளி 20:15)

இது என்ன ஒரே குழப்பம்! சாத்தானை 10 ஆவது வசனத்திலே தள்ளியாச்சு! அப்புறம் என்ன திரும்ப ஜீவ புஸ்தகத்திலே பெயர் இல்லாத ஒருவனாகிய சாத்தானை திரும்ப நரகத்திலே தள்ளுறது? இந்த வெளிபடுத்தின  விசேஷம் புத்தகத்தை குறித்து நண்பர் பெறேயனிடம் விசாரிக்கணும். இந்த புத்தகத்திலே ஏதே கோளாறு  இருக்கு.


  • வெளி 13:8 உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் யாவரும் அதை வணங்குவார்கள்.

யோவான் உங்களுக்கு என்ன ஆச்சு? ஜீவ புஸ்தகத்தில் பெயர் இல்லாதவன் சாத்தான் ஒருவன்தான் அவன் மிருகத்தை வணங்குவானா?  என்னது??? "பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் யாவரும்" ஆ ? அது ஏன் இப்படி நீட்டி முழங்குரிங்க சாத்தான் ஒருத்தேன் தானே! அதுக்கு எதுக்கு பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் யாவரும் னு சொல்லுறீங்க.

சரி, சரி நான் இந்த வெளிப்படுத்தின விசேஷம் புத்தகம் பத்தி பெரேயன் அவர்களிடம் கேட்டு ஒரு முடிவு செய்கிறேன். புடிச்சிட்டேன்! இதோ பெரேயன் சொல்லுறார்.

"இரண்டாம் மரணம்" என்கிற ஒரு வார்த்தை வெளி. புத்தகத்தில் மாத்திரமே இருக்கிறது!! இதை வைத்துக்கொண்டு, அது முதல் மரணம் போல் மனிதர்களுக்கு நேர்வது தான் என்பது எப்படி சரியாக இருக்கும்!!"


அப்படி போடு அருவாள! இந்த
வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தை வேதத்தில் இருந்து எடுத்திடலாம். வேறு புஸ்தகத்தில் இது போல எல்லாம் சொர்க்கம் போக மாட்டாங்க என்று இருந்தால் அதையும் எடுத்திடலாம். வாழ்க பெரேயன்!! வளர்க அவரது வேத அறிவு(??)

அப்படியே யாருக்காவது "இயேசு" என்ற பெயர் பிடிக்காவிட்டால் புதிய ஏற்பாட்டையே மொத்தமா எடுத்திடலாம் பிரச்சனையே இல்லே!
 

காமடி தொடரும்....


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
நித்திய ஜீவன் மற்றும் நித்திய ஆக்கினை என்றால் என்ன? எல்லாரும் இரட்சிக்கப்படுவார்களா?
Permalink  
 


பெறேயான்ஸ்

//நீங்கள் சுவிசேஷம் சொல்லுவதால் அல்ல கிறிஸ்து இரத்தம் சிந்துவதினால் தான் மனிதர்கள் இரட்சிக்கப்படுகிறார்கள்!! "நான் சுவிசேஷம் சொல்லுகிறேன்" என்கிற மேட்டிமை உங்களிடத்தில் இருக்கிறது, நீங்கள் ஏற்கனவே பிசாசிற்கு அடிமையாகி விட்டீர்கள் ஜான் அவர்களே!! நிச்சயமாக உங்களின் வெட்டியான சுவிசேஷத்தை கேட்பதால் அல்ல தேவனின் சித்தத்தின்படியே அனைவரும் இரட்சிக்கப்படுகிறார்கள்!!//



சுவிசேஷத்தை குறித்து நான் என்ன கருதுகிறேன் என்பதை நீங்கள் இதை எழுதுவதற்கு சில நாட்களுக்கு முன்பே நான் எழுதியிருக்கிறேன். தேவன் ஒரு கழுதையை கொண்டு தீர்க்கதரிசியின் மதிகேட்டை தடுக்கமுடியும். குஷ்ட்டரோகிகளை கொண்டு ஒரு ராஜ்யத்தை இரட்சிக்கவும் முடியும்.


//நீங்கள் வெட்டியாக சொல்லுகிறீர்களோ இல்லையோ, ஆனால் தேவன் தருகிற இரட்சிப்பில் பின் லேடனும், ஹிட்லரும் இரட்சிக்கப்படுகிறார்கள் என்றால் உங்களுக்கு ஏன் முறுமுறுப்பு!! உங்களுக்கு ஏன் போறாமை!! நீங்கள் பாவமே செய்யாத சுத்தமான பரிசுத்தவானோ!!//

நான் பாவியாய் இருப்பதினால் தான் "பாவியை தன்னுடைய இரத்தத்தினாலே நிதிமானக்குகிற வரை தொழுதுகொண்டு அவர் மேல் நம்பிக்கையை இருக்கிறேன்". இது பதில் சொல்ல உகந்த ஒன்றாக தெரியவில்லை. நீங்கள் நித்திய ஜீவன் என்றால் என்ன? நித்திய ஆக்கினை என்றால் என்ன? என்பதை விளக்கினால் (இதை குறித்து முன்பே எழுதியிருந்ததால் அந்த பதிவின் தொடுப்பைத்தரவும்) நாம் அதிலிருந்து தொடரலாம்.


கிழே உள்ள சில கேள்விகளுக்கு தங்களுடைய பதில் என்ன?

அப்போ யூதாசும் முடிவிலே இரட்சிக்கப்படுவானா?


கிழே உள்ள வசனத்தில் "ஆக்கினைத்தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி" என்று இருகிறதே. அது என்ன மரணம்?
  • என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (யோவான் 5:24)


கிழே உள்ள வசனத்தில் "உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும்" உயிரோடு இருக்கிறவன் யார்? மரியாமலும் என்றால் என்ன மரணத்தை குறிக்கிறது?


....என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; 
 (யோவான் 11:25-26)


கிழே உள்ள வசனத்தில் "தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும்" என்பதின் அர்த்தம் என்ன?

குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றார்.(யோவான் 3:36)





-- Edited by John on Saturday 19th of March 2011 10:22:33 PM

-- Edited by John on Saturday 19th of March 2011 11:51:15 PM

__________________
«First  <  1 2 3 4 5 | Page of 5  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard