Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நித்திய ஜீவன் மற்றும் நித்திய ஆக்கினை என்றால் என்ன? எல்லாரும் இரட்சிக்கப்படுவார்களா?


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
RE: நித்திய ஜீவன் மற்றும் நித்திய ஆக்கினை என்றால் என்ன? எல்லாரும் இரட்சிக்கப்படுவார்களா?
Permalink  
 


anbu:

//ஆம், தேவனால் நம்மை இரட்சிக்க முடியும்தான். ஆனால் அந்த இரட்சிப்புக்குக் குறுக்கே நிற்பது நமது அக்கிரமங்களே. நம்மிடம் அக்கிரம் இருக்கும்வரை தேவனால் நம்மை இரட்சிக்க முடியாதுதான்.//


soul:

சங்கீதம் 103:10 அவர் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார்.

சங்கீதம் 103:3 அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்கி,

எசேக்கியேல் 36:33 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் உங்கள் அக்கிரமங்களையெல்லாம் நீக்கி, உங்களைச் சுத்தமாக்கும் காலத்திலே பட்டணங்களில் குடியேற்றுவிப்பேன்; அவாந்தரமான ஸ்தலங்களும் கட்டப்படும்.

ரோமர் 6:23 பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.
--------------------------------------------------------------------------------------------------------------

எசேக்கியேல் 36:33 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் உங்கள் அக்கிரமங்களையெல்லாம் நீக்கி, உங்களைச் சுத்தமாக்கும் காலத்திலே பட்டணங்களில் குடியேற்றுவிப்பேன்; அவாந்தரமான ஸ்தலங்களும் கட்டப்படும்.

அப்படியே கீழ வாசிங்க. இது ஜெபம் பண்ணினால்தான் நடக்கும். கேட்டால்தான் கிடைக்கும்.

37. கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் வம்சத்தாருக்காக நான் இதை அநுக்கிரகஞ்செய்யும்படி அவர்கள் என்னிடத்தில் விண்ணப்பம் பண்ணவேண்டும்; மந்தை பெருகுகிறதுபோல் அவர்களில் மனிதரைப் பெருகப்பண்ணுவேன்.

--

சங்கீதம் 103:10 அவர் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார்.

சங்கீதம் 103:3 அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்கி,

அப்படியே கீழ வாசிங்க. இந்தக் கிருபை யார் மேல் இருக்கும்?

17. கர்த்தருடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள்மேலும், அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள்மேலும் அநாதியாய் என்றென்றைக்கும் உள்ளது.

18. அவருடைய உடன்படிக்கையைக் கைக்கொண்டு, அவருடைய கட்டளைகளின்படி செய்ய நினைக்கிறவர்கள் மேலேயே உள்ளது.

--

ரோமர் 6:23 பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.

மேல உள்ள வசனத்தையும் சேர்த்து வாசிக்கணும். பாவத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமையானால்தால் நித்திய ஜீவன்!

22. இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன்.
--



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

joseph wrote:

6) எதையுமே அறிவிக்க தேவையிராதபோது வேதத்தில் அப்படி என்ன ஆராய்ச்சி வேண்டியிருக்கிறது? 



 

இது நல்ல கேள்வி!!



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
நித்திய ஜீவன் மற்றும் நித்திய ஆக்கினை என்றால் என்ன? எல்லாரும் இரட்சிக்கப்படுவார்களா?
Permalink  
 


சில கேள்விகளுக்கான விடைகளை மேசியாவின் எதிரிகள் யோசிக்கவேண்டும்

1) மீட்பு அனைவருக்கும் என்றால் இயேசு ஏன் சுவிஷேஷத்தை அறிவிக்க கட்டளையிடவேண்டும், அதுவும் உலகமெங்கும் போய் அறிவிக்க சொன்ன காரணம் என்ன? முதலாவது எது சுவிஷேஷம்?

2) ஆசியா மைனர், இந்தியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பாவின் சில பகுதிகள் மாத்திரமே இயேசுவின் சீடர்களால் போக முடிந்திருக்கையில் இதை அவர் சீடர்களுக்கு மட்டும் தான் அறிவிக்க சொன்னார் என இவர்கள் உளறிவருகிறார்களே இது ஏன்? உலகத்தின் முடிவு பரியந்தம் உங்களுடன் இருப்பேன் என்பதன் அர்த்தம், உலகத்தின் முடிவு வரைக்கும் சுவிஷேஷம் அறிவிக்க வேண்டும் என்பது தான் அல்லவா.

3) ஆப்பிரிக்காவின் தென் பகுதி, தென்னமெரிக்கா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, சீனம் போன்ற இடங்களுக்கு இயேசுவின் சீடர்களா சுவிஷேஷம் அறிவிக்க சென்றார்களா?, தேவனுடைய வார்த்தை சென்றது என்றால் எப்படி, பறந்து சென்றதா, மிஷனரிகள் வாயிலாக தானே சென்றது, அதே மிஷனரி பணியை ஏன் இப்போது பகடி செய்கிறீர்கள், தூற்றுகிறீர்கள்.

4) தோமா காலம் முதல் ஆங்கிலேயெ மிஷனரிகள் காலம் வரை இந்தியாவில் நடைபெற்ற நற்செய்தி அறிவிக்கும் பணியை முற்றும் நிராகரிக்கிறீர்களா? இதற்கு இப்போது வரை இவர்களிடம் இருந்து பதில் இல்லை. ஒருவேளை நிராகரித்தால் இவர்கள் தங்கள் கூடாரத்தை கலைத்து விட்டு போகவேண்டும் (சூடு சொரணை இருந்தால்).

5) ஒருவேளை நற்செய்தியை கேள்விப்படாதவர்களாக இருந்திருந்தால் இவர்கள் இப்போது என்ன நம்பிக்கையை கொண்டிருந்திருப்பார்கள் (இதற்கும் இப்போது வரை பதில் இல்லை)

6) எதையுமே அறிவிக்க தேவையிராதபோது வேதத்தில் அப்படி என்ன ஆராய்ச்சி வேண்டியிருக்கிறது? 

எப்படியும் மேசியாவின் எதிரிகளே இதை வாசிப்பீர்கள், இதற்கு பதில் என்னவாக இருக்கும் என்பதை மோவாயை சொறிந்து கொண்டே யோசியுங்கள், பதில் இல்லை என்றால் நற்செய்தி அறிவிப்பதை பற்றி பேச உங்களுக்கு அருகதையில்லை. சும்மா தனி நபர் தாக்குதல் தொடுப்பதை விடுத்து கொஞ்சம் பொதுப்படையாக நிதானித்து எழுதுங்கள். 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
RE: நித்திய ஜீவன் மற்றும் நித்திய ஆக்கினை என்றால் என்ன? எல்லாரும் இரட்சிக்கப்படுவார்களா?
Permalink  
 


அது மட்டும் அல்ல நண்பரே, இயேசுவினிடத்தில் விசுவாசம் உள்ளோரை குழப்பி இடறல் அடையச்செய்கின்றவர்களுக்கு என்ன செய்யலாம் என்பதை மாற்கு 9:42 ல் தெளிவாக கொடுத்துள்ளார் ஆண்டவர். பொதுவாக இடறல் அடையச்செய்கிறவர்கள் வெளியே இருந்து வர மாட்டார்கள், நாம் நம்புவது போன்ற ஒன்றையே தாங்களும் நம்புவதாக சொல்லிக்கொள்வார்கள் அப்புறம், இயேசுவை யாரும்  தொழவில்லை என்பார்கள், அவர் தொழத்தக்கவர் அல்ல என்பார்கள் கடைசியில் இரட்சிப்பு தேவையில்லை என்பார்கள் அப்புறம் எல்லாருக்கும் மீட்பு என்பார்கள். கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் வஞ்சக வலையில் சிக்க வைப்பார்கள்.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 134
Date:
Permalink  
 

தேவனை அறியாதவர்களுக்கும், கீழ்படியாதவர்களுக்கும் வரும் பிரதிபலன்!

by Antony Ravichandran on Wednesday, August 24, 2011 at 3:00am @ Facebook

2 தெசலோனிக்கேயர்

அதிகாரம் 01 :6-10

 

7 தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினையைச் செலுத்தும்படிக்கு,

 

(யோவான் அதிகாரம் 03:18_20 :

*அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்: விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று.

* ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது.

* பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான்,தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்)

 

8 கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடும், ஜுவாலித்து எரிகிற அக்கினியோடும், வானத்திலிருந்து வெளிப்படும்போது அப்படியாகும்.

9 அந்நாளிலே தம்முடைய பரிசுத்தவான்களில் மகிமைப்படத்தக்கவராயும், நீங்கள் எங்களுடைய சாட்சியை விசுவாசித்தபடியினாலே உங்களிடத்திலும், விசுவாசிக்கிறவர்களெல்லாரிடத்திலும் ஆச்சரியப்படத்தக்கவராயும், அவர் வரும்போது,

10  (தேவனை அறியாத)அவர்கள் கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும், அவருடைய வல்லமை பொருந்திய மகிமையிலிருந்தும் நீங்கலாகி, நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள்.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

எல்லாருக்கும் மீட்பு பாலிசி (காப்பீடு உறுதி!!!)

 

செலுத்தும் பிரீமியம் : இப்போது செய்யும் பாவங்கள், அவரவர் தகுதிக்கு ஏற்ப போட்டுக்கொண்டே வரலாம்.

 

முதிர்வு: இப்போதைக்கு கிடையாது, போன‌துக்க‌ப்புற‌ம் பாத்துக்க‌லாம்

 

ஆயுள் கால‌ம் : அவ‌ர‌வ‌ர் த‌லையெழுத்துன்னு விதிச்ச‌து

 

ம‌ணி பேக்: போன‌துக்க்ப்புற‌ம் 6க்கு 4 ( ந‌ர‌க‌ம்) பிளாட்டில் வீடு உறுதி.

 

பாலிசி முடிவில் கிடைப்ப‌து: ராஜ்ய‌த்தில் ஏதாவ‌து கோர்ஸ் அப்பிய‌ர் ஆகி பாசானால் வ‌ட்டியும் முத‌லுமாய் கிடைக்கும்

 

கொடுத்துவைத்த‌வ‌ர்க‌ளுக்கு ப‌ர‌லோக‌த்தில் அர‌ண்ம‌னை போன்ற‌ வீடு நிச்ச‌ய‌ம்.

 

ரிஸ்க் க‌வ‌ரேஜ்: பாலிசியே பெரிய‌ ரிஸ்க் தான்...

 

ப‌ய‌ன்பெற‌ விரும்புவோர் அருகில் உள்ள‌ ஏஜ‌ன்டுக‌ளை அணுக‌வும். 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுந்தம் போக நினைத்தானாம் என்று தமிழில் ஒரு சொலவடை உண்டு. இது VNK கூட்டத்தாருக்கு மிகவும் சரியாக பொருந்தும். இங்கே ஒரு இலையை கூட புடுங்க முடியாதவன் ராஜ்யத்தில் போய் என்னத்தை புடுங்குவான் என தெரியவில்லை. நியாயத்தீர்ப்பை குறித்து வேதம் பலமுறை எச்சரிப்பு செய்வது இந்த செவித்தினவுள்ளவர்களுக்கு கேட்பதில்லை. நியாயத்தீர்ப்பு என ஒன்று இருந்தால் அதில் பாக்கியம் அடைவோரும் இருப்பார்கள், தண்டிக்கப்படுபவர்களும் இருப்பார்கள், எல்லாருக்கும் இரட்சிப்பு என்பது உண்மைதான் ஆனால் அதற்கு தகுதியுள்ளவனாக ஆக வேண்டும் என்பது இந்த கோமாளிகளுக்கு தெரிவதில்லை. எல்லாரும் மீட்க‌ப்ப‌டுவார்க‌ள் என்றால் அத‌ற்கு பேர் நியாய‌த்தீர்ப்பு இல்லை. 

 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

இன்று காலை இந்த வேத பகுதியை வாசித்துக்கொண்டிருந்தபோது பல கேள்விகள் எனக்குள் எழுந்தன. சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் சுவிஷேஷத்தை ஜாக்கிரதையாய் பிரசங்கம் பண்ண வேதம் நமக்கு போதித்திருக்க, மேசியாவின் எதிரிகள் சுவிஷேஷப்பணி என்பது கிறிஸ்து தனது சீடர்களுக்கு மாத்திரம் சொன்னது, மற்றவர்களுக்கு சொல்லவில்லை அதனால் நாங்க ஏ.சி ரூம் போட்டு வேத ஆராய்ச்சி செய்வோம் என்கிறார்கள், அழிந்து போகிற ஆத்துமாக்களை குறித்து பாரப்படும் ஆண்டவர் சுவிஷேஷம் அறிவிக்கும் படி தான் தன் தாசர்களை ஏவுகிறார், ஆனால் இவர்களுக்கோ சுவிஷேஷப்பணி என்பது எட்டிக்காயாய் இருக்கும். 

 

1 நான் தேவனுக்கு முன்பாகவும், உயிரோடிருக்கிறவர்களையும் மரித்தவர்களையும் நியாயந்தீர்க்கப்போகிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு முன்பாகவும், அவருடைய பிரசன்னமாகுதலையும் அவருடைய ராஜ;யத்தையும் சாட்சியாக வைத்துக் கட்டளையிடுகிறதாவது:

 

2 சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு. எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம்பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்லு.

 

3 ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமானஉபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு,

 

4 சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்.

 

5 நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு, தீங்கநுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று.

 

6 ஏனென்றால், நான் இப்பொழுதே பானபலியாக வார்க்கப்பட்டுப்போகிறேன். நான் தேகத்தை விட்டுப் பிரியும் காலம் வந்தது.

 

7 நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.

 

8 இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாக கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார். எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்.

 

2 தீமோத்தேயு 4 :1 முதல் 8 வரை

 

1) பவுல் தனது குமாரனைப்போல் இருந்த தீமோத்தேயுவுக்கு சொன்னது, யார் இந்த தீமோத்தேயு என பார்த்தால் அவர் இயேசுவின் நேரடி சீடராகவோ அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட 70 பேரிலோ இருந்ததில்லை. ஆனாலும் பவுல் அவருக்கு ஜாக்கிரதையாய் திருவசனத்தை உபதேசிக்க சொல்கிறார். ஜாக்கிரதையாய் அறிவிக்க சொன்ன காரணம் மக்கள் மனந்திரும்பி ரட்சிப்பை அடையவேண்டும் என்பது தான். இப்படியிருக்க மேசியாவின் எதிரிகள், சுவிஷேஷப்பணி என்பது சீடர்களுக்கு மாத்திரம் தான் மற்றவர்கள் அறிவிக்கதேவையில்லை என்றும் பாவிகள் ராஜ்யத்தில் வந்து கற்றுக்கொள்வார்கள் என தங்கள் சோம்பேறித்தனத்துக்கு வியாக்கியானம் சொல்லிக்கொண்டிருக்கின்றனர்.

2) 3 மற்றும் 4 ம் வசனங்களில் இவர்களை பற்றி அவ்வளவு தெளிவாக பவுல் சொல்லியிருக்கிறார். ஆரோக்கிய உபதேசத்தை பொறுக்க முடியாத இவர்கள் செவித்தினவுள்ளவர்களாய் ரசல் போன்றவர்களை போதகர்களாக தெரிந்து கொண்டு கட்டுக்கதைகளுக்கு சாய்ந்து போகப்போகும் கதையை பவுல் அப்போதே செப்பியிருக்கிறார். 

3) 5 ம் வசனத்தில் சுவிஷேஷகனுடைய வேலையை செய் என வேண்டுகோள் (கட்டளை?) கொடுக்கிறார். சீடர்களுக்கு மட்டும் தான் சுவிஷேஷப்பணி என சொல்லி சொம்படித்துகொண்டிருக்கும் கோமுட்டிகளுக்கு செருப்படி கொடுக்கும் வசனமாக இது இருக்கிறது. 

4) நல்ல போராட்டத்தை போராடினேன், என்ன நல்ல போராட்டம் என்பதை எல்லாம் விளக்கிக்கொண்டிருந்தால் என்ன பதில் சொல்வார்களோ தெரியாது.



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

spetersamuel wrote:

(மேசியாவின்) எதிரிகளுக்கு சுருக்கமாக எழுதப்பட்டுள்ள வார்த்தைகள் அர்த்தப்படுத்தத் தெரியாததால் யார் என்ன எழுதினாலும் அதை குற்றம் சொல்வார்கள். வேதத்தை அரைகுறையாக அர்த்தப்படுத்திக் கொள்வார்கள்.

//அதாவது துனை போதகன் எப்படி புரிந்துக்கொள்கிறார் என்றால், அதில் இல்லாதது தான் அர்த்தம் என்று புரிந்துக்கொள்கிறார்!! சாம்பிள்:

சங்கீதம் 48:11 உம்முடைய நியாயத்தீர்ப்புகளினிமித்தம் சீயோன் பர்வதம் மகிழ்வதாக, யூதாவின் குமாரத்திகள் களிகூருவார்களாக.

//பிரதிக்கு கிடைக்கும் தண்டனை வாதிக்கு களிகூருதலை கொடுக்கும் என்ற அர்த்தம் கூட தெரியாதவர்கள்!!!//  //

நாம் சரியாக அர்த்தப்படுத்திக்கொடுத்தாலும் வேதத்தில் இல்லாத வார்த்தையை சொன்னான் என்பார்கள். சரியான காமெடிதான்!!!


 

தாய் மொழி தமிழா இல்லாமல் இருக்குமோ? ஆனால்,கவிதையெல்லாம் எழுத தெரியுது, பக்கம் பக்கமா (சொந்த) வசனம் பேச தெரியுதே?

ஒரு வேளை இவங்க, சாத்தான் பறக்கும் தட்டில் கொண்டு வந்து இங்க போட்டுட்டு போயிட்ட வேற்றுக் கிரக வாசிகளா (Aliens!) இருக்கும்! அதனால் அவனுக்கேத்த மாதிரியே சிந்திக்கிறார்கள்!பேசுகிறார்கள்!



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 134
Date:
Permalink  
 

(மேசியாவின்) எதிரிகளுக்கு சுருக்கமாக எழுதப்பட்டுள்ள வார்த்தைகள் அர்த்தப்படுத்தத் தெரியாததால் யார் என்ன எழுதினாலும் அதை குற்றம் சொல்வார்கள். வேதத்தை அரைகுறையாக அர்த்தப்படுத்திக் கொள்வார்கள்.

//அதாவது துனை போதகன் எப்படி புரிந்துக்கொள்கிறார் என்றால், அதில் இல்லாதது தான் அர்த்தம் என்று புரிந்துக்கொள்கிறார்!! சாம்பிள்:

சங்கீதம் 48:11 உம்முடைய நியாயத்தீர்ப்புகளினிமித்தம் சீயோன் பர்வதம் மகிழ்வதாக, யூதாவின் குமாரத்திகள் களிகூருவார்களாக.

//பிரதிக்கு கிடைக்கும் தண்டனை வாதிக்கு களிகூருதலை கொடுக்கும் என்ற அர்த்தம் கூட தெரியாதவர்கள்!!!//  //

நாம் சரியாக அர்த்தப்படுத்திக்கொடுத்தாலும் வேதத்தில் இல்லாத வார்த்தையை சொன்னான் என்பார்கள். சரியான காமெடிதான்!!!



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 134
Date:
Permalink  
 

//யோவான் 3:16 - விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் - அதாவது விசுவாசியாதவன் கெட்டுப்போவான், அவனுக்கு ஆக்கினைத் தீர்ப்பு என்பது தான் வேதத்தில் சுவிசேஷம்!!!//

யோவான் 3:16 - என்ற வசனம் தான் வேதத்தில் சுவிசேஷத்தின் சுருங்கிய வடிவம் என்ற கருத்தையே //விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல்// என்றும் //விசுவாசியாதவன் கெட்டுப்போவான்// என்றும் சொல்லி இதை எடுத்துக்கூறும் வசனமே வேதத்தில் சுவிசேஷம் என்று அதாவது சுவிசேஷத்தின் சுருங்கிய வடிவம் என்று எழுதினேன்.

அந்த கருத்து கோவை பெரேயன்ஸ் மற்றும் சோல்சொல்யூஷனால் என்ன பாடுபடுகிறது என்பதைக்காணும்போது கோவை பெரேயன்ஸ் & கோ விற்கு வாசித்து எதையும் புரிந்துகொள்வதில் மிகப்பெரும் பிரச்சினை இருக்கிறது என்பது உறுதியாகிறது!!!



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

//அதனால்தான் கிறிஸ்துவின் சரீரமாகிய முன்குறிக்கப்பட்டவர்கள் அடங்கிய‌ சபைக்கு இப்போது "நியாயத்தீர்ப்பு"(போதனை), உலகத்துக்கு நியாயத்தீர்ப்பு நாள் (1000வருட போதனை) இனி வருவதாயிருக்கிறது.//

 

எந்த அகராதியில் ”நியாயத்தீர்ப்புக்கு” அர்த்தம் ”போதனை” என்று போட்டிருக்கிறது என்று சொன்னால் சரி பார்க்க வசதியாக் இருக்கும்.



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

நல்ல நோய் எதிர்ப்பு சக்தி இருக்குமானால், கிருமிகள் நம்மை ஒன்றும் செய்யாது. அது போல் ஆண்டவருக்குள் நல்லா புஷ்டியா வளர்ந்திருந்தோமானால், எந்த ரே ஸ்மிதின் துர் உபதேசமும் நம்மை ஒன்றும் செய்யாது.

இதை வாசித்தால் உங்களுக்கு தேள் கொட்டும்!

நித்தியம்

http://www.tektonics.org/qt/smithlr01.html



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

//ஏனென்றால் பாவம் இருப்பதினால் தான் மரணமே!! பாவத்துடன் தான் மரிக்கிறோம்!!! //

 

ஆண்டவர் பூமியில் இருக்கும் போதே பாவங்களை மன்னித்தார்.

லூக்கா 5:20 அவர்களுடைய விசுவாசத்தை அவர் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மனுஷனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.

இப்பவும் அப்படியே பாவத்தை மன்னித்தார் என்றால் நாம் பாவத்துடன் மரிக்க வேண்டியதில்லையே.

 

 ***

ரோமர் 4:7 எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ, எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள்.

என்றால் சிலருடைய பாவங்கள் மன்னிக்கப்பட வில்லை என்றுதான் அர்த்தம்.

 

மாற்கு 4:12 அவர்கள் குணப்படாதபடிக்கும், பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதபடிக்கும், அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கும்படி, இப்படிச் சொல்லப்படுகிறது என்றார்.

சிலர் பாவங்கள் மன்னிக்கப்படு்வதில்லை என்று சொல்லப்படுகிறது. அப்ப அவங்க எல்லாம் உயிர்தெழ மாட்டாங்களா?

 

 

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

ஊழியக்காரர்கள் எல்லாம், சோஃபா வில் உட்கார்ந்து பேசுறாங்க என்று அநியாயத்திற்கு  வருத்தப்படும் பெரேயன்ஸ் அவர்களே, சோஃபா வில் உட்கார்ந்துதான் பேச முடியும், நின்று கொண்டு அல்ல!!



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

[எங்களுக்கு பரிசுத்த ஆவி தேவனின் சிந்தை, தேவனின் வல்லமை!!]

அப்ப உங்களிடம் பேச மாட்டார்??

[தேவனின் ஆவி எங்களுக்கு எல்லாவற்றையும் கற்று தருகிறது!!]

ஒரு ஆள்தானே கற்றுத் தர முடியும்?? சிந்தையும் வல்லமையும் கற்றுத் தர முடியுமா?

[நீங்கள் தேவனின் வல்லமையை அறியாமல் விளையாடுகிறீர்கள்!!]

ஆமாம் இன்னும் ஷட்டில் காக் விளையாண்டு முடிக்காமல் இருக்கிறது!! ஞாபகப்படுத்தியதற்கு நன்றி!!

ஆனால் அதற்கப்புறம் என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்குப் புரியவில்லை. ஜெபம் தேவையில்லை என்று சொல்றீங்களா??

[இவர்களாக எங்களை தேவன் அழைத்தார் என்று தங்களை தீர்க்கதரிசி என்றும் ஊழியர் என்றும் சொல்லிக்கொண்டால் உங்களை போன்றோர் உட்கார்ந்து நம்பிக்கொண்டு இருங்கள், எங்களுக்கு என்ன‌!!??]

உங்களுக்கு என்ன, நீங்க அந்திக்கிறிஸ்துவுக்கு ஜால்ரா அடிச்சிட்டு இருங்க!



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

II பேதுரு 2:4 பாவஞ்செய்த தூதர்களை தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்து;

 

இங்கே சொல்லப்பட்டிருக்கும் நரகம் நரகமா, அல்லது கல்லறையா? அல்லது வேறு ஏதாவதா?? ஏன்?

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

//தேவனின் ஆவி எங்களுக்கு எல்லாவற்றையும் கற்று தருகிறது!! எங்களுக்குள் இருக்கும் அபிஷேகம் எங்களை நடத்துகிறது!!//

 

அப்படியா? பரிசுத்த ஆவியானவருக்கு பேர் வைக்கவில்லை என்று கிண்டல் பண்ணுகிறாரே உங்க நண்பர் சோல், அந்த பேரில்லாத ஆவியானவரா உங்களுக்கு கற்றுத் தருகிறார்??



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

//பவுல், பேதுரு, யோவான், ஸ்தேவான் போன்றோரின் வரிசையில் தான் நீங்கள் சாதுவையும் விசெயையும் வைத்திருப்பதை நினைத்தால்.............. என்னத்த சொல்ல‌!!//

பவுல் ஒரு மெத்த படித்த மேதாவி. கிறிஸ்துவை அறியும் அறிவின் மேன்மைக்காக பின் எல்லாம் நஷ்டம் குப்பை என்று விட்டு விடுகிறார்.

பேதுரு - சாதாரண மீனவர்தான்

யோவான் - இயேசுவின் மார்பின் எப்போதும் சாய்ந்திருந்த அனுபவமற்ற சிறு பையன்

ஸ்தேவான் - பந்தி விசாரணை செய்தவர்.

சாது - பள்ளிப் படிப்பு முடித்தவுடன் ஆண்டவர் ஊழியத்திற்கு அழைத்ததால் வந்தவர்.பரதேசியாய் இமயமலையில் அலைந்தவர்

விசெ- நாத்திகராக இருந்து, குடி சிகரெடுக்கு அடிமைப்பட்டு தேவ கிருபையால் விடுதலையானவர்.

இந்த தகுதியெல்லாம் நமக்கும் இல்லையா?? பவுலுக்குதான் அவர் தகப்பனா? உங்களுக்கு இல்லையா? பவுல் ஜெபத்தைத்தான் கேட்பாரா? உங்க ஜெபத்தைக் கேட்க மாட்டாரா? ஆண்டவர் பட்ச பாதம் உடையவர் அல்ல. உங்களையும் தரிசனம் கொடுத்து பயன்படுத்த அவர் சித்தமுள்ளவராகத்தான் இருக்கிறார். நீங்க ஆண்டவருக்காக ஒரு துரும்பையும் அசைக்கமாட்டோம் என்று உறுதியாக இருப்பதால், ஆண்டவரும் அமைதியாக இருக்கிறார்.

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

//இல்லாத எக்காளச்சத்தம் எல்லாம் சாது கேட்டிருக்கிறார், கானக்கூடாத தேவனை எல்லாம் விசெ பார்த்திருக்கிறார்!! //

பவுலை தேவன் சந்திக்கவில்லையா? அகாலப் பிறவி போன்ற எனக்கும் தரிசனமானார் என்று சொன்னாரே. பேதுருவை தேவதூதன் வந்து விடுவிக்கவில்லையா? ஸ்தேவான் இயேசுவை பார்க்க வில்லையா? யோவான் எக்காள சத்தம் கேட்க வில்லையா? ஆவியில் கேட்காமல், பூமியில் கேட்க ஆல்வின் தாமஸ் மீட்டிங் செல்லவும். அவர் எக்காளம் ஊதுகிறார்!!

//இல்லாட்டி உங்களின் சுவிசேஷத்தால் தான் பூமி நிறைந்திருக்கிறதே, பிறகு எப்படி கிரிஸ்து விசுவாசத்தை காணமாட்டேன் என்கிறார்!!

யோசியுங்கள்!!//

நீங்களே சொன்னபடி இக்கால ஊழியர்கள் தங்கள் ராஜ்ஜியத்தை கட்டுவதில் பிஸியாகி விட்டார்கள். போதாக்குறைக்கு பிசாசும் அந்திக் கிறிஸ்துவின் ஆவியினால் உங்களைப் போன்றோரை மயக்கி வைத்திருக்கிறான். அடுத்து உலகத்தில் நடைபெறப் போவது சர்வ மத ஒருங்கிணைப்பு. இது சரியா தவறா என்று உங்கள் வேத பண்டிதர்கள் என்ன் சொல்கிறார்கள் என்று பார்த்து வையுங்கள். அப்பத்தான் யாராவது கேள்வி கேட்டால் பதில் சொல்ல முடியும்.

இப்படி உலகம் போய்கொண்டிருப்பதால்தான் விசுவாசத்தைக் காண்பாரோ என்று சொல்லப்பட்டிருக்கிறது.

ஒருத்தர் இரட்சிக்கப்பட்டாலும் முழு பரலோகமும் களி கூர்வதால், சுவிசேஷம் சொல்வது அதி முக்கியம். ஊழியத்தின் பலனாக எண்ணிக்கையைப் பார்க்கத் தேவையில்லை.



__________________
1 2 35  >  Last»  | Page of 5  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard