சீயோனைச் சுற்றி உலாவி, அதின் கொத்தளங்களை எண்ணுங்கள்.
பின்வரும் சந்ததிக்கு நீங்கள் விவரிப்பதற்காக, அதின் அலங்கத்தைக் கவனித்து, அதின் அரமனைகளை உற்றுப்பாருங்கள்.
இந்த தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நம்முடைய தேவன்; மரணபரியந்தம் நம்மை நடத்துவார்.
இன்று ஒரு துக்கவீட்டில் மேற்கண்ட சங்கீதப் பகுதியை வாசித்து ஜெபித்து வந்தேன்;இந்த சங்கீதத்தின் அடிப்படையில் பாடப்படும் ஒரு பிரபலமான பாடலே இந்த சங்கீதத்தையே வாசிக்கத்தூண்டியது;அந்த குறிப்பிட்ட பாடலின் ஆரம்ப வரிகள் தியானிக்கத் தூண்டியது;அது நிச்சயமாகவே (மேசியாவின்) எதிரிகளுக்கு அதிர்ச்சியைத் தரக்கூடியதாகவும் இருக்கும்.
பாடல்கள் மூலமே விசுவாசத்தை வளர்க்கும் சந்ததியில் பிறந்த அடியேனுக்குப் பிடித்தமான அந்த பழைய பாடல்:
கர்த்தர் பெரியவர் அவர் நமது தேவனுடைய நகரத்திலும் தமது பரிசுத்த பர்வதத்திலும் மிகத் துதிக்கப்படத் தக்கவர்
-இது காலஞ்சென்ற பக்தசிங் ஐயா அவர்களின் "யெகோவா ஷம்மா" எனும் ஸ்தாபனத்திலிருந்து வெளிவந்த பாடலாகும்.
முதலில் இந்த சங்கீதத்திலிருந்து எனக்குள் எழுந்த சிந்தனைகளை இங்கே பகிர்ந்துகொள்ளுகிறேன்;முன்பதாக தள நண்பர்கள் தத்தமது கருத்தை முன்வைக்கட்டும்;அதன்மூலம் யார் திருந்துகிறார்களோ இல்லையோ நமக்கு பக்திவிருத்தியுண்டாகும் என்பது உறுதி..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)