//அவர்கள் அதை ஏற்றுகொண்டார்கள் என்றால் பரிசுத்த ஆவியானவர் அவர்களையும் வெற்றிசிறக்க செய்துள்ளார், இல்லையேல் அவர்கள் அவர்கள் இன்னமும் வெற்றிசிறக்கவில்லை. சிலர் காலம் தாழ்த்தி வெற்றி சிறக்கலாம் (அதாவது ரட்சிக்கப்படலாம்), சிலர் நித்திய மரணத்தையும் அடையலாம். அதை குறித்து நாம் பெருமைப்படவோ, வெட்கப்படவோ எதுவுமில்லை. //
சரியாக சொன்னீர்கள்! ஏற்று கொள்ளாதவர்களுக்கும் சுவிசேஷம் பிரசிங்கக்கப்பட வேண்டும். யோவான் 6 ஆம் அதிகாரத்தில் இயேசு கிறிஸ்த்து 5000 (Plus woman and Kids) பேருக்கு சுவிசேஷத்தை பிரசங்கித்தார். சுவிசேஷத்தை கேட்டவர்கள் அவரை தங்கள் வயிறை நிரப்பும் ஒரு ராஜாவாக ஏற்று கொள்ள மனதாய் இருந்தார்கள் ஆனால் இயேசுவோ விலகி மலையின் மேல் ஏறிவிட்டார்.
இயேசு செய்த அற்புதத்தை அந்த மனுஷர் கண்டு: மெய்யாகவே இவர் உலகத்தில் வருகிறவரான தீர்க்கதரிசி என்றார்கள். ஆதலால் அவர்கள் வந்து, தம்மை ராஜாவாக்கும்படிப் பிடித்துக்கொண்டுபோக மனதாயிருக்கிறார்களென்று இயேசு அறிந்து, மறுபடியும் விலகி, தனியே மலையின்மேல் ஏறினார். (யோவான் 6:14-15)
அதாவது மோசேய் போல தினமும் எங்கள் வயிறு நிரம்பும்படி எங்களுக்கு தாருங்கள் ஒரு நாள் வயிறு நிரம்பினால் போதாது என்றார்கள்
வானத்திலிருந்து அவர்களுக்கு அப்பத்தைப் புசிக்கக்கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடி, நம்முடைய பிதாக்கள் வனாந்தரத்தில் மன்னாவைப் புசித்தார்களே என்றார்கள். (யோவான் 6:31)
எல்லாரும் (12 பேர் தவிர) அவரை விட்டு போன பின்பு சிஷர்களுக்கு ஒன்றும் புரிந்திருக்காது. உலகப்பிரகாரமாகப்பார்த்தால் இது ஒரு பெரிய தோல்வி ஆனால் இயேசு கிறிஸ்த்து சொன்னார்.
என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன். (யோவான் 6:44)
இதனுடைய அர்த்தம், மனிதன் தன்னில் தானே சுயாதினத்தில் தேவனை ஏற்று கொள்ளமுடியாது. தேவன் தன்னுடைய சுயாதினத்தின் மனிதனுடைய கண்களை திறக்கிறார் அப்போது அவன் அவரை ஏற்று கொள்ளுகிறான். இந்த இடத்தில் தேவன் தான் Sovereign மனிதன் அல்ல. இயேசு யூதாஸ் ஒரு பிசாசு தெரிந்திருந்தும் யூதாசை தேர்ந்தெடுத்தார். அவர் யூதாஸ் காட்டி கொடுக்கும் போது அதிர்ச்சி அடையவில்லை
இயேசு அவர்களை நோக்கி: பன்னிருவராகிய உங்களை நான் தெரிந்துகொள்ளவில்லையா? உங்களுக்குள்ளும் ஒருவன் பிசாசாயிருக்கிறான் என்றார். (யோவான் 6:70)
தேவன் ஒருவனுடைய கண்களை லிதியாளின் கண்களை போல திறக்காவிட்டால் நாம் தலைகிழா நின்னாலும் ஒன்றும் நடக்காது ஆகையால் சுவிசேஷத்தை அன்போடும், நான் உன்னவிட Spiritually Great என்ற பெருமையின்றி "உணவு எங்கே இருக்கிறது என்று தெரிந்த ஒரு பிச்சைக்காரன், தெரியாத ஒரு பிச்சைக்காரனிடம் எப்படி இடத்தை சொல்லுவனோ" அதே ஆவியில் சொல்லுவதோடும் , ஜெபிப்பதொடும் நம்முடைய பனி முடிகிறது. தேவன் ஆவியானவரின் சுவாசம் (காற்று) அவர் இஷ்டப்பட்ட இடத்தில் வீசும். ஒருவனிடத்தில் தேவனுடைய ஆவியானவர் செயல்பட்டு அவன் மறுபடியும் பிறக்கும் படி நாம் அவரை கட்டாயப்படுத்த முடியாது (ஆனால் கெஞ்சலாம்)
நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டுமென்று நான் உனக்குச் சொன்னதைக் குறித்து அதிசயப்படவேண்டாம்.காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது; (யோவான் 3:7-8)
இதை சொல்லிவிட்டு இயேசு கிறிஸ்த்து அவனை அப்படியே விட்டு விடவில்லை மாறாக என்ன செஈதால் காற்று விசும் என்பதை சொல்லுகிறார்
சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டது போல மனுஷகுமாரனும், தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும் (யோவான் 3:14-15)
இயேசு கிறிஸ்த்து உயர்த்தப்பட்டால் ஆவியானவார் விசுவார். பேதுரு கொர்னெலியுவின் விட்டில் அதைத்தான் செய்தார்.
ஏற்று கொள்ளாதவர்களுக்கும் ஏன் சுவிசேஷம் பிரசிங்கக்கப்பட வேன்டும் என்று பவுல் சொல்லுகிரார்.
சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது. (I கொரிந்தியர் 1:18)
உடன்பணியாலர்களே, சமீப காலமாக, வலைதளங்களிலும், அன்றாட வாழ்க்கையில் மக்களிடம் சுவிசேஷத்தை எடுத்துசெல்லும்போது, பல விதங்களில் சோர்வு வந்தது. என் தரிசனத்தை அறியாத பல கிறிஸ்துவர்கள் கூட, அறிவுரை கூறும் தோரணையில் சோர்வில் தள்ளினர். இத்தகைய சூழ்நிலையில் ஆவியானவர் எனக்கு கொடுத்த ஆறுதல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். இது உங்களில் யாரவது ஒருவருக்காவது பிரயோஜனமாக இருந்தாலே, இந்த கட்டுரை தன் முழு பயனையும் அடைந்ததாக கருதுவேன்.
யான் பெற்ற இந்த இன்பமான ரட்சிப்பை குறித்து மற்றவர்க்கு அறிவிக்க செல்லும் போது, பல இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது. நாம் ஏதோ அவர்களை வைத்து வியாபாரம் செய்யபோவது போல நடந்து கொள்கிறார்கள். அறிவியல் கட்டுரை என்ற பெயரில் ஏதாவது வார இதழில் வரும் கட்டுக்கதைகளை, எந்த ஒரு மறுபேச்சுமின்றி ஏற்றுக்கொள்ளும் மக்கள். தேவனை பற்றி பேசும்போது, ஏதோ அறிவியலிலும் இறையியலிலும் Ph .D வாங்கியது போல் பேசுகின்றனர். அறிவியல் ஆராய்ச்சியாளன் என்ற பெயரில் ஒருவன் சொல்கிறான் என்ற காரணத்திற்க்காக, கண்ணால் பார்க்காமலே வேற்றுகிரகவாசிகளை நம்பும் makkal, தேவனை மாத்திரம் கண்ணால் கண்டால்தான் நம்புவேன் என்றும், வேண்டுமானால் கடவுளை காட்டு என்று (ஏதோ அவர்களை கடவுளை கானச்செய்வது நமது கடமை போல) கேட்கிறார்கள். கேட்கும் கேள்விகள் எல்லாம், உண்மையை தெரிந்துகொள்ளுவதர்க்கு என்றல்லாமல், பதில் சொல்பவரை திக்குமுக்காட வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அமைந்திருக்கிறது. அரசியல்வாதிகளிடம் வருடக்கணக்காய் ஏமாந்த மக்கள், வியாபாரிகளிடம் ஏமாந்த மக்கள், ஒரு சுவிசெஷகனை பிடித்துவைத்துக்கொண்டு, ஏதோ பித்தலாட்டக்காரனை கண்டுபிடித்தமாதிரி கேள்வி கேட்டு, தன் விளக்கத்தை இந்த குருட்டு மக்களுக்கு புரியவைக்க முடியாமல் திணறும் சுவிசெஷகனை பழி வாங்குவதில் மக்களுக்கு மிக சந்தோஷம். இவர்களுடைய (ஆவிக்குரிய) கண்கள் குருடாய் இருப்பதால், விளக்கங்களை புரிந்து கொள்ள முடியாமல், சுவிசெஷகனிடம் பதில் இல்லை என்று சொல்லி கொக்கரிப்பதில் இந்த அவிசுவாசிகளுக்கு என்னதான் சந்தோசமோ?
ஆனால், இது குறித்து நாம் தளர்ந்து போக தேவையில்லை. நாம் நற்செய்தியை அறிவித்து விட்டாலே, நாம் நம் கடமையை செய்து விட்டவர்கள் மட்டுமல்ல, வெற்றி பெற்றவர்களும் கூட. ஆமாம், சுவிசேஷத்தை கொண்டு போவதுதான் நம் பணி. இரட்சிப்பு கர்த்தருடையது. சுவிசேஷத்தை கொண்டு செல்லவிடாமல்தான் சாத்தான் தடை செய்வான். நம் சுவிசேஷத்தை கொண்டு சேர்த்துவிட்டாலே, கடமையில் வெற்றிபெற்றவர்களாவோம். நீங்கள் யாருக்காவது சுவிசேஷத்தை கொண்டு சென்று இருக்கிறீர்களா? அப்படியானால் வாழ்த்துக்கள். உங்கள் கடமையில் வெற்றி பெற்று இருக்கிறீர்கள். அவர்கள் அதை ஏற்றுகொண்டார்கள் என்றால் பரிசுத்த ஆவியானவர் அவர்களையும் வெற்றிசிறக்க செய்துள்ளார், இல்லையேல் அவர்கள் அவர்கள் இன்னமும் வெற்றிசிறக்கவில்லை. சிலர் காலம் தாழ்த்தி வெற்றி சிறக்கலாம் (அதாவது ரட்சிக்கப்படலாம்), சிலர் நித்திய மரணத்தையும் அடையலாம். அதை குறித்து நாம் பெருமைப்படவோ, வெட்கப்படவோ எதுவுமில்லை.
சில நேரங்களில் மக்கள் நம்மை ஏற்றுக்கொள்ளாததோடு, நம்மையும், சுவிசேஷத்தையும் பரிகசிக்கலாம். இது பல சமயம் வேதனையை தரும். ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், இயேசுவை விட நாம் பெரிய ஊழியரா??? இல்லையே!!! ஆனால், இயேசுவின் ஊழித்தையே ஏற்றுக்கொள்ளாமல், அவரை பரிகசிக்கவும் மக்கள் செய்தார்கள். பல நேரம் உயிர் தப்பி ஓடவேண்டிய நிலையில் இருந்தார்கள் அப்போஸ்தலர்கள். சிறையில் அடைக்கப்பட்டும், கொடூரமாக கொலையும் செய்யப்பட்டார்கள். அப்பொழுது எவ்வளவோ பரிகசிப்பும் நடத்திருக்கும். அப்படி, அவர்கள் சிறைலடைத்தபோதும், கொலை செய்தபோதும் அவிசுவாசிகள், தாங்கள் வெற்றி பெற்றதாகத்தான் நினைத்தார்கள். உண்மையில், தோற்றது அவிசுவாசிகளே, நித்திய அக்கினியில் அவர்கள்தானே அவதிப்பட போகிறாகள். ஆனால், வீழ்ந்த ஒவ்வொரு சுவிசெஷகனும், விதையாகத்தான் விழுந்தார்கள். தன் வாழ்நாளில் மிக சொற்பமான மக்களை விசுவாசத்திற்குள் வழிநடத்திய சுவிசேஷகர்கள், தங்கள் வாழ்நாள் முடிந்த பிறகும், தங்கள் சுயசரிதம், போதகங்கள், எழுத்துக்கள் மூலமாக பெரும் கூட்டத்தை ஆண்டவருக்காய் ஆயத்தப்படுதியதை நாம் அறிவோம். அதனால், நாம் யாருக்காவது சுவிசேஷம் அறிவித்து, அவர்கள் அதை அப்பொழுது ஏற்றுக்கொள்ளாமல், நம்மை பரிகசித்தால், வருத்தப்படவேண்டாம். உங்கள் பிரயாசம் வீணாவதில்லை.
-- Edited by Ashokkumar on Monday 14th of March 2011 11:54:18 PM