இப்புத்தகத்தின் சிறப்பு
கிறிஸ்துவ மறுமலர்ச்சியின் தந்தை என அழைக்கப்பட்ட மார்டின் லூத்தர் காலத்தில், அலெக்ஸாண்டர் ஹிஸ்லாப் என்பவர் எழுதிய இரண்டு பாபிலோன்கள் (THE TWO BABYLONS) என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. இதில் பாபிலோனியர்களின் பழக்கவழக்கங்கள் பற்றியும், பாபேல் நகரை உருவாக்கிய தங்கள் மன்னனாகிய நிம்ரோத்தையும், அவன் மனைவியையும் பாபிலோனிய மக்கள் எவ்வாறு கடவுளாக வணங்கி வருகிறார்கள் என்பதை பற்றியும் தெளிவான ஆதாரத்துடன் விளக்கியுள்ளார்.
மேலும் இப்புத்தகத்தில் பாபிலோனியர்கள் வணங்கிய, நிம்ரோத் மனைவியாகிய செமிராமிஸ் சிலையையே மரியாள் சிலையாக ரோம திருச்சபை மாற்றியுள்ளது என ஆதாரத்துடன் தெரிவித்துள்ளார். இப்புத்தகத்தை அப்போதைய ரோம திருச்சபை தடை செய்தது. அதன் பிறகு இந்த புஸ்தகம் வெளிவரவில்லை.
இப்புத்தகத்தில் சொல்லப்பட்ட காரியங்களை மேற்கோள்களாகவும், வேதத்தை ஆதாரமாகவும் வைத்து எழுதப்பட்டதே “மகா பாபிலோனும் அவள் குமாரத்திகளும்”
புஸ்தகம் வெளியிட்டதன் நோக்கம்:
பாபிலோனின் திரியேக கடவுளையும் அதின் பண்டிகைகளையுமே, கிறிஸ்துவ சபைகளாகிய ரோம திருச்சபை, புராட்டஸ்டென்ட் மற்றும் பெந்தகோஸ்தே திருச்சபையார் தங்கள் கடவுளாகவும், தங்கள் பண்டிகையாகவும், பெயரை மாற்றி வழிபட்டு வருகின்றனர். இந்த இருளிலிருந்து மெய்தேவனை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதே எங்கள் நோக்கமாகும்.
முற்றிலும் இலவசம்
இப்புத்தகத்தை படித்தறிய வேண்டும் என ஆர்வம் உள்ளவர்களுக்கு இலவசமாக தருகிறோம். எங்களை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
www.bibleloversassembly.com