இந்துத்துவத்தில், பிறப்பு, மற்றும் மறுபிறப்பு கொள்கைகள் இன்னும் காமெடி ஆனது.ஒருவனது பிறப்புக்கு காரணம்,அவனது முன்பிறவியில் செய்த கருமங்களே காரணமாம் (என்ன கருமமோ).
ஒருவது அடுத்த பிறவியில் வரும் நன்மைக்கும் தீமைக்கும், அவன் இந்த பிறவியில் செய்யும் நன்மை தீமைகளே காரணமாம். இந்த பிறவியில் நடக்கும் விஷயங்களுக்கு கடந்த பிறவியின் கருமங்களே காரணமாம். அது சரிடா,ஒருவன் பிறவிக்கு, அவன் முற்பிறவி பலனே காரணமென்றால், முதல் முதல் பிறந்ததற்கு என்ன காரணமென்றால், அப்படி முதல் பிறவி என்று ஒன்று இல்லவே இல்லை, எல்லா பிறவிக்கும் முன்னாள் இன்னொரு முற்பிறவி இருக்குமென மொக்கையான,அறிவியல்(???) ரீதியில் (இவர்கள் அனைத்தையும் அறிவியல் ரீதியாக அனுகுபவர்கலாமே), பதில் வருகிறது.
சரி, இப்படி தொடர்ச்சியாக பிறவிகளாக போய்கொண்டிருந்தால் எங்கேயடா உங்கள் சொர்க்கமும் நரகமுமேன்றால், சரியான பதிலில்லை. தங்களுக்கு சொர்க்கமேன்றோ, நரகமேன்றோ ஒன்று இருக்கிறதா? அல்லது இந்த பிறவி சுழற்ச்சிதானா, என்று நித்தியத்தை குறித்த எந்த அறிவுமில்லாமல் இருக்கிறார்கள். தெளிவாக எந்த ஒரு சித்தாந்தமும் இல்லாமல், தான்தோன்றித்தனமாக இருப்பதே இன்றைய இந்துத்துவமாக இருக்கிறது.
இப்படி தான்தோன்றியாய், மாய வலையில் உள்ள இந்த மக்கள் இரட்சிக்கப்பட, மிகுந்த ஜெபத்தோடு, நாம் நமக்கு தெரிந்த உண்மைகளை அவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். ஆமாம்,பல வேளைகளில் இதனால் நாம் அவமானப்படுத்தப்படலாம், அடிக்கப்படலாம், என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால், வேறு வழியில்லை. பின்னாளில், அவர்கள், நம்மை நோக்கி "உண்மை தெரிந்த நீ என்னிடம் சொல்லி இருக்கலாமே" என்று கேட்டால் நாம் என்ன சொல்ல முடியும்?
பொதுவாக யாரையும் குற்றம் சொல்ல அஞ்சும் நான், இப்போது ஏன் இவ்வளவு பகிரங்கமாக இந்துத்துவத்தை குற்றம் சொல்கிறேன்? கிறிஸ்த்துவத்தின், கிறிஸ்துவின் மேன்மையை மாத்திரம் அறிவித்து கொண்டு இருக்கலாமே?
முதலாவதாக, நல்ல உணவின் மகத்துவத்தை சொல்வது போலவே, விஷத்தின் அபாயத்தையும் சொல்வது முக்கியம். தந்திரக்காரனாகிய சாத்தான், நம்மை நேரடியாக தாக்காமல் பல சமயம், மறைமுகமாக தாக்குவான். அவனுடைய இப்போதைய தந்திரம் என்னவென்றால், கிரிஸ்த்துவமும் நல்ல வழிதான், ஆனால் இந்துத்துவத்தால் யாருக்கும் பாதகம் இல்லை. அதனால், அதனையும் அனுசரிப்பதில் தவறில்லை (வேண்டுமானால், இந்துக்களும் இயேசுவை(யும்) வழிபடுவார்கள்), இதனால் உலகம் சமாதானமாயிருக்கும் என்று நயம் காட்டுவார்கள். இதனால், சாத்தான் அடையும் நன்மை என்னவென்றால், இரண்டு எஜமானனுக்கு ஊழியம் செய்யமுடியாமல், விசுவாசிகள் சோர்வுருவார்கள், சுவிசேஷம் அறிவிக்கும் பணி முடக்கப்படும். இதனால் பெருவாரியான ஜனங்களை நரகத்திற்கு வாரிக்கொள்ளலாம் என்று கணக்கு போடுகிறார்கள். கிறிஸ்துவை தவிர, அனைத்து வழிகளும் நரகத்திற்கே அழைத்து செல்லும். அதனால், அதன் கொடுமைகளை தைரியமாக சொல்லுவோம்.
இந்துத்துவம், கருட புராணம் போன்ற நூல்களின் மூலம் சொர்க்கம், நரகம் போன்றவைகளை சொல்லுகிறது, பாவம் செய்தவன் நரகத்தை அடைவான், நல்லவன் எல்லாம் சொர்க்கத்தை அடைவான் என. ஆனால், இதில் சுவாரசியமான பல விஷயங்கள் உள்ளது. சொர்க்கத்தை பற்றிய இந்துத்துவ கருத்து இவ்வாறு இருக்கிறது:
சொர்க்கத்தின் தலைவன் உடலெல்லாம் கண்கள்(???) கொண்ட இந்திரன். (இந்திரனை பற்றிய கதைகளை படித்தவர்கள், உண்மையில் இவர் எப்படி சொர்க்கத்தின் அதிபதி ஆனார் என்று ஆச்சர்யபடுவார்கள்).
ரம்பா, ஊர்வசி, மேனகை, போன்ற அழகிய நங்கையரின் நாட்டியங்கள் நடைபெறும் இடம் அந்த சொர்க்கம். இவர்களை பற்றிய கதைகளும் குழந்தைகளுக்கு சொல்ல முடியாதவையாக இருக்கிறது. (ஆனால், இவர்கள் இஸ்லாமியரின் "சொர்க்கத்தின் எழுபது கண்ணிகள்" குறித்து கேலி பேசுகின்றனர்).
சொர்க்கத்தில் பருகப்படும் ஒரு பானம் "சோமபானம்". அந்த பானத்தின் அருமை பெருமைகளை நாம் நமது இந்திய "குடி"மக்களுக்கு சொல்லிதர தேவையில்லை.
தேவலோகமாகிய சொர்க்கத்திலும் பல குழப்பங்கள், பிரச்சனைகள், சண்டைகள் நிகழலாம். (ஆதாரம், இந்து நூல்களே, முக்கிய சூத்திரதாரி: நாரதர்).
மேலும், அங்கேயே காதல் செய்யலாம், கல்யாணம் செய்யலாம், குழந்தை பெற்றுக்கொள்ளலாம் (அடுத்தவன் மனைவியை இச்சிப்பவந்தான் தலைவனாக இருக்கிறான், அதனால் கவனம் தேவை).
மேலே நாம் கண்ட (இந்துக்களின்) சொர்க்கத்திற்கும், கேளிக்கை விடுதிகளுக்கும் எனக்கு எதுவும் வித்தியாசம் தெரிவதில்லை. இதில் புனிதம், பரிசுத்தம், போன்றவைகளுக்கு ஏதாவது இடமுண்ட என்று பார்த்தால், எதுவுமே இல்லை. அவர்களை பொறுத்தவரை, சொர்க்கம் என்பது ஒரு "உல்லாசபுரி".
ஒரு மண்டலம் (நாற்பத்தி எட்டு நாட்கள்) விரதம் இருந்துவிட்டு, பிறகு மாலையை கழட்டியவுடன், டாஸ்மாக் தேடிச்செல்பவன் போல. வாழ்க்கையில் கொஞ்சம் கட்டுகோப்பாய் இருந்தால், உல்லாசபுரியாகிய சொர்க்கத்தில், பூவுலகில் விட்டு வைத்ததை எல்லாம் அனுபவிக்கலாம் என்று பலர் வாழ்கிறார்கள்.
நரகத்தை பற்றி அதிகம் ஒன்றும் இல்லை, அங்கே பாவம் செய்தவர்கள் கஷ்ட்டப்படுவார்கள், அங்கே அரக்கர்கள் மனிதர்களை கொதிக்கும் எண்ணெய்க்கொப்பறை, புழுக்கள், பூச்சிகள், போன்றவற்றால் கொடுமைப்படுத்துவார்கள், என்றெல்லாம் எழுதியுள்ளார்கள்.(ஆனால், கிறிஸ்துவர்கள் நரகத்தை பற்றி பேசினால் இவர்களுக்கெல்லாம் கோவம் பொத்துக்கொண்டு வருகிறது.)
ஆனால், போதுமான காலம் வரை தடிக்கப்பட்டு, பிறகு விடுதளையடைவார்கள் என்று ஒரு சாரார் நம்புகிறார்கள்.
இதில் இன்னொரு கூட்டத்தை பற்றி அடுத்த பதிப்பில் பார்ப்போம்.
இந்த தொடர்கட்டுரை, நமது இந்திய துணைக்கண்டத்தில் பெரும்பான்மையான மக்களும், இப்போது மேலைநாடுகளில் பரவிவரும் கலாச்சாரமான இந்துத்துவத்தை பற்றி எனக்கு தோன்றும் கேள்விகளின் தொகுப்பாகும். ஏற்கனவே, நமது தளத்தில் வெளிவந்த கட்டுரையான இந்துக்களே, உங்களுக்கு இந்த கேள்விகள் எழவில்லையா?? பெரும் பரபரப்பை உண்டு பண்ணியது. அதில் கேட்கப்பட்ட கேள்விகளை ஆழமாக இந்துக்கள் யோசித்திருந்தாலே பலர் அதன் உண்மை முகத்தை உணர்ந்திருப்பர்.
இந்த தொடர் கட்டுரை என்னுடையதாக மட்டுமில்லாமல், நண்பர்கள் அனைவரும் பங்களித்து, உலகிற்கு உண்மையை விளங்கசெய்வோமாக. வாரத்திற்கு ஒரு புதிய செய்தியாகிலும் இதில் வெளியாகும்.
தொன்மையான மதம், வேத மதமென்று வேடமிட்டு வந்த இந்த மதத்தின் முகத்திரை இனி நிறைய கிழிக்கப்படும். நண்பர்கள், இந்த தலைப்பை அடிக்கடி பார்வையிட ஊக்குவிக்க படுகிறார்கள். ஏனெனில் காமெடிக்கும் இந்துத்துவத்தில் பஞ்சம் கிடையாது. மாயமானகிய இந்துத்துவத்தின் பின்னால் ஓடும் இந்த ராமன்களையும், சீதைகளையும் வழிநடத்த உங்களுக்கு இந்த தொடர் கைகொடுக்கும் என்ற நம்பிக்கையுடன், அவர்கள் கருத்துக்களை குறித்து சிந்திக்கவும் (சிலசமயம் சிரிக்கவும்) வைக்க முயல்கிறேன்.