Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பிதாவாகிய தேவனை வணங்குவது எப்படி?


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 86
Date:
RE: பிதாவாகிய தேவனை வணங்குவது எப்படி?
Permalink  
 


சகோதரர் ஆதாம் அவர்களே,

எந்த பகுதி புரியவில்லை என்று சொன்னால் விளக்க எளிதாய் இருக்கும். எதுவுமே புரியவில்லை என்றால் இயேசுவின் நாமத்தில் பிதாவாகிய தேவனை தொழுது கொள்ளுங்கள். அவர் இதை பற்றி உரிய காலத்தில் புரிய வைப்பார்.


__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 63
Date:
Permalink  
 

அண்ணா நீங்கள் சொல்வதும் சரியாகதான் உள்ளது ஆனால் கொஞ்சம் குழப்பமாக உள்ளது
மேலும் விளக்கவும்

__________________
தேவனிடத்தில் பட்சாபாதமில்லை...
ரோமர் 2;11


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 86
Date:
Permalink  
 

பிதாவாகிய தேவனை வணங்குவது எப்படி?

 

இயேசு கிருஸ்து தொழத்தக்கவரா? என்னும் கேள்வியானது சகோதரர் சில்சாம் அவர்களால் எழுப்பப்பட்டு எல்லா கிருஸ்துவ தளங்களும் அதற்கு பதிலளிக்க வேண்டிய நிர்பந்தத்திற்க்கு ஆளாயினர். அது மட்டுமல்லாது அதை தொடர்ந்து வந்த சண்டைகளும், சச்சரவுகளும் எல்லா தளத்தையும் பாதித்தது.

 

இந்த கேள்விக்கு சரியான பதிலை சொல்வதற்காக வேதத்தை ஆராய்ந்த எனக்கு பல்வேறு தகவல்கள் கிடைத்தன. அவைகளின் விளைவே இந்த கட்டுரை.

 

தேவனாகிய கர்த்தருக்கு மரியாதை செய்வது எப்படி என்று பார்த்தால், ஆராதனை செய்தல், தலை குனிந்து பணிந்து கொள்ளுதல், முகம் குப்புற விழுந்து பணிந்து கொள்ளுதல், தொழுது கொள்ளுதல் என வேறு, வேறு வார்த்தைகள் சொல்லப்படுகின்றன.

 

இவைகள் வேறு வேறு வார்த்தைகளாக இருப்பதிலிருந்து இவைகள் ஒரே அர்த்தம் உடையனவை இல்லை என தெரிந்து கொள்ளலாம். இவைகளை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

 

முதலில் ஆராதனை செய்தல் என்றால் என்ன என்று பார்ப்போம்.

 

கர்த்தராகிய தேவன் பரலோகத்தில் உள்ள ஒரு கூட்டத்தினரால் ஆராதனை செய்யப்படுகிறார்.

வட புறத்திலுள்ள பர்வதத்தில் கர்த்தர் வீற்றிருக்க அவரை சுற்றி அனேக தேவ சேனைகளால் அவர் ஆராதனை செய்யப்படுகிறார்.

ஏசாயா 14.13. நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்குமேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்று (அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளி சொன்னான்).

பரலோகத்தில் நடக்கும் ஆராதனையின் மாதிரியின்படி, ஆசரிப்புக் கூடாரத்திலும், சாலமோனின் தேவ ஆலயத்திலும் ஆராதனை நடைபெற்றது.

எபிரேயர் 8.5. இவர்கள் செய்யும் ஆராதனை பரலோகத்திலுள்ளவைகைளின் சாயலுக்கும் நிழலுக்கும் ஒத்திருக்கிறது; அப்படியே, மோசே கூடாரத்தை உண்டுபண்ணுகையில் மலையிலே உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே நீ எல்லாவற்றையும் செய்ய எச்சரிக்கையாயிரு என்று தேவன் அவனுக்குக் கட்டளையிட்டார்.

ஆராதனை என்பது கிரியை சார்ந்த ஒரு விஷயம். அதாவது தூப கலசத்தை கொண்டு படைப்பது போன்ற பல கிரியைகள் அடங்கியது. இந்த ஆராதனையை அதற்கென தகுதி வாய்ந்த, பரிசுத்தம் உள்ளவர்கள் மட்டும்தான் செய்ய முடியும்.

ஆராதனை குறிப்பிட்ட ஒரு சிலரால் நடைபெற்றாலும், அதை பார்ப்பவர்கள் அனைவருமே ஆராதனை செய்வதாக அர்த்தம் ஆகும்.

எபிரேயர் 9.1. அன்றியும், முதலாம் உடன்படிக்கையானது ஆராதனைக்கேற்ற முறைமைகளும் பூமிக்குரிய பரிசுத்த ஸ்தலமும் உடையதாயிருந்தது.
2. எப்படியெனில், ஒரு கூடாரம் உண்டாக்கப்பட்டிருந்தது; அதின் முந்தின பாகத்தில் குத்துவிளக்கும், மேஜையும், தேவசமுகத்தப்பங்களும் இருந்தன; அது பரிசுத்த ஸ்தலமென்னப்படும்.
3. இரண்டாந் திரைக்குள்ளே மகா பரிசுத்த ஸ்தலமென்னப்பட்ட கூடாரம் இருந்தது.
4. அதிலே பொன்னாற்செய்த தூபகலசமும், முழுவதும் பொற்றகடு பொதிந்திருக்கப்பட்ட உடன்படிக்கைப் பெட்டியும் இருந்தன; அந்தப் பெட்டியிலே மன்னா வைக்கப்பட்ட பொற்பாத்திரமும், ஆரோனுடைய தளிர்த்த கோலும், உடன்படிக்கையின் கற்பலகைகளும் இருந்தன.
5. அதற்கு மேலே மகிமையுள்ள கேருபீன்கள் வைக்கப்பட்டுக் கிருபாசனத்தை நிழலிட்டிருந்தன; இவைகளைக் குறித்து விவரமாய்ப்பேச இப்பொழுது சமயமில்லை.
6. இவைகள் இவ்விதமாய் ஆயத்தமாக்கப்பட்டிருக்க, ஆசாரியர்கள் ஆராதனை முறைமைகளை நிறைவேற்றும்படிக்கு முதலாங்கூடாரத்திலே நித்தமும் பிரவேசிப்பார்கள்.
7. இரண்டாங்கூடாரத்திலே பிரதான ஆசாரியன்மாத்திரம் வருஷத்திற்கு ஒருதரம் இரத்தத்தோடே பிரவேசித்து, அந்த இரத்தத்தைத் தனக்காகவும் ஜனங்களுடைய தப்பிதங்களுக்காகவும் செலுத்துவான்.

இயேசுவின் பலியினால் இந்த ஆராதனை முடிவுக்கு வந்ததை பற்றி பவுல் சொல்கிறார்.

ஆதலால் பழைய ஏற்பாட்டு ஆராதனை என்பது புதிய ஏற்பாட்டு காலத்தில் இல்லை என்று தெரிந்து கொள்ளலாம்.

எபிரேயர் 8.13. புது உடன்படிக்கை என்று அவர் சொல்லுகிறதினாலே முந்தினதைப் பழமையாக்கினார்; பழமையானதும் நாள்பட்டதுமாயிருக்கிறது உருவழிந்துபோகக் காலம் சமீபித்திருக்கிறது.

எபிரேயர் 9.9. அந்தக் கூடாரம் இக்காலத்திற்கு உதவுகிற ஒப்பனையாயிருக்கிறது; அதற்கேற்றபடியே செலுத்தப்பட்டுவருகிற காணிக்கைகளும் பலிகளும் ஆராதனை செய்கிறவனுடைய மனச்சாட்சியைப் பூரணப்படுத்தக்கூடாதவைகளாம்.
10. இவைகள் (ஆராதனை சடங்குகள்) சீர்திருந்தல் உண்டாகும் காலம்வரைக்கும் நடந்தேறும்படி கட்டளையிடப்பட்ட போஜனபானங்களும், பலவித ஸ்நானங்களும், சரீரத்திற்கேற்ற சடங்குகளுமேயல்லாமல் வேறல்ல.

இயேசு கிருஸ்து பழைய ஏற்பாட்டின் ஆராதனை சடங்குகளை எப்படி, எவ்வாறு தேவையில்லாதவைகளாக மாற்றினார் என்பது இங்கே சொல்லப்பட்டுள்ளது.

எபிரேயர் 9.11. கிறிஸ்துவானவர் வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராய் வெளிப்பட்டு, கையினால் செய்யப்பட்டதாகிய இந்தச் சிருஷ்டிசம்பந்தமான கூடாரத்தின் வழியாக அல்ல, பெரிதும் உத்தமமுமான கூடாரத்தின் வழியாகவும்,
12. வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார்.

ஆகவே

எபிரேயர் 10.19. ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால்,
20. அந்த மார்க்கத்தின்வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும்,
21. தேவனுடைய வீட்டின்மேல் அதிகாரியான மகா ஆசாரியர் நமக்கு ஒருவர் இருக்கிறபடியினாலும்
, (புதிய ஏற்பாட்டு கால மக்களுக்கு ஆராதனை சடங்குகள் இல்லை)

புதிய ஏற்பாட்டு காலத்தில் ஆராதனை என்பதற்கான அர்த்தம் மாறி விட்டது. அவையாவன:

 

1.மாம்ச ரீதியான பாவங்களை செய்யாமலிருத்தல்

ரோமர் 12.1. அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.

2. தேவ ஆவியோடு தொடர்பு உள்ளவர்களாக இருத்தல்

பிலிப்பியர் 3.3. ஏனெனில், மாம்சத்தின்மேல் நம்பிக்கையாயிராமல், ஆவியினாலே தேவனுக்கு ஆராதனைசெய்து, கிறிஸ்து இயேசுவுக்குள் மேன்மைபாராட்டுகிற நாமே விருத்தசேதனமுள்ளவர்கள்.

(ஆவியினால் தேவனை ஆராதனை செய்வது எப்படி என்று வேறு ஒரு பதிவில் பார்க்கலாம்.)

3. பெற்றுக் கொண்ட கிருபையை விட்டு விலகாமல் இருத்தல் :

எபிரேயர் 12.28. ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம்.

தேவ ஆலயத்தில் செலுத்தப்படும் பலி சடங்குகள் இரண்டு வகைப்படும் ஒன்று தேவனுக்கு நன்றி செலுத்துவதற்காக கொடுக்கப்படும் பலி, இரண்டு பாவத்தினிமித்தம் செலுத்தப்படும் பலி
இயேசு தன்னையே பலியாக செலுத்தியதனால் பாவத்தினிமித்தம் செலுத்த வேண்டிய பலிக்கு தேவை இல்லாமல் போனது. இயேசு செய்த இந்த தியாகத்தினால் அவருக்கு நன்றி செலுத்துவது பிதாவாகிய தேவனுக்கு நன்றி செலுத்தும் பலியாக மாறியது.

புதிய உடன்படிக்கையின்படி செலுத்தப்படும் பலியின் மேன்மை பற்றி பவுல் சொன்னது

எபிரேயர் 13.10. நமக்கு ஒரு பலிபீடமுண்டு, அதற்குரியவைகளைப் புசிக்கிறதற்குக் கூடாரத்தில் ஆராதனை செய்கிறவர்களுக்கு அதிகாரமில்லை.
11-14 .(சுருக்கம்) இயேசு கிருஸ்து நமக்காக மிகப் பெரிய தியாகம் செய்தார்
15. ஆகையால், அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்.

4. ஆராதனையின் அடுத்த அர்த்தமாவது மற்றும் பலியின் அர்த்தமாவது :

இயேசுவின் நாமத்தை துதிக்கும் ஸ்தோத்திரபலியை இயேசுவின் மூலமாய் எப்போதும் பிதாவாகிய தேவனுக்கு செலுத்துவது.

இங்கே கவனிக்க வேண்டியது என்னவெனில் இயேசுவின் நாமத்தை துதித்தால் பிதாவானார் மகிமைப்படுவார் என்பதை அறிய முடியும்.

5. எபிரேயர் 13.16. அன்றியும் நன்மைசெய்யவும், தானதர்மம்பண்ணவும் மறவாதிருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார்.

இப்போது இயேசு சொன்ன ஆராதனையை பற்றி பார்க்கலாம். இந்த வசனமானது  கிருஸ்துவர்கள் என சொல்லிக் கொள்ளும் சில பிரிவுகளுக்கு மிகவும் பிடித்தமானதாகும்.

மத்தேயு 4.10. அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.

இந்த வசனத்தில் தேவனாகிய கர்த்தர் என்பது யாவே தேவனையும் குறிக்கும். கர்த்தராகிய இயேசு கிருஸ்துவையும் குறிக்கும் என்பதால் இயேசுவுக்கு ஆராதனை செய்வது தவறில்லை என்று சொல்லலாம்.

மூல மொழியில் கர்த்தர் என்பதற்க்கு என்ன என்று எழுதியிருக்கிறது என தெரியவில்லை. ஏனென்றால் தமிழில் கர்த்தர் என்று வரும் அனேக இடங்கள் மூல மொழியில் யாவே என்னும் நாமத்தால் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனக்கு தெரிந்து தெலுங்கு வேதகாமத்தில் இந்த இடங்களில் யாவே என்றே மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. (யாராவது இந்த இடத்தில் என்ன வருகிறது என்று சொன்னால் எனக்கு உதவியாய் இருக்கும்.)

கர்த்தர் என்பது யாவே என்று இருக்கும் பட்சத்தில்,

மேற்கண்ட வசனத்தை படித்த ஒருவருக்கு எழும் கேள்வி என்னவென்றால், இயேசு கர்த்தரை மட்டுமே பணிந்து அவர் ஒருவருக்கே ஆராதனை செய்ய சொல்லியிருக்கிறாரே அப்படியானால் கீழ்கண்ட கருத்து

(4. ஆராதனையின் அடுத்த அர்த்தமாவது மற்றும் பலியின் அர்த்தமாவது :

இயேசுவின் நாமத்தை துதிக்கும் ஸ்தோத்திரபலியை இயேசுவின் மூலமாய் எப்போதும் பிதாவாகிய தேவனுக்கு செலுத்துவது.)

எப்படி செல்லுபடியாகும் என்ற கேள்வி வரக் கூடும்.

இவ்வாறு கேட்பவர்களுக்கு நம்முடைய பதில்.

ஆராதனையின் இந்த பகுதியானது இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் விளைவாக ஏற்பட்ட புதிய உடன்படிக்கையின் நிறைவேறுதலினால் உண்டானதாகும். அதனால் இதைப் பற்றி இயேசு கிருஸ்துவே சொல்ல முடியாது. தேவ ஆவியினால் ஏவப்பட்ட பவுல்தான் இதைப் பற்றி சொல்ல முடியும். ஆகவே இதில் முரண்பாடுகள் எதுவும் இல்லை என்பதை பச்சை புள்ளை கூட புரிந்து கொள்ள முடியும்.

மேலும் மத்தேயு 4.10ல் இயேசு சொன்னது பழைய ஏற்பாட்டு ஆராதனை சடங்குகளையே. புதிய ஏற்பாட்டு காலத்தில் அவை முற்றிலும் மாற்றப்பட்டு விட்டதால் அந்த ஆராதனை வேறு இப்போதைய ஆராதனை வேறு என்றாகி விட்டது. அப்படி இருக்கும் போது இந்த வசனத்தை அடிக்கடி மேற்கோள்வது காட்டுவது சரியான வழியில் சென்று கொண்டிருப்பவர்களுக்கு இடறலை உண்டாக்கும் ஒரு தந்திரமே ஆகும்.

இப்போது ஆராதனை என்றால் என்ன என்பதை சுருக்கமாக பார்ப்போம்.

அதற்கு முன்பாக ஆலயம் என்றால் என்ன என்று பார்ப்போம்

தேவனுடைய ஆலயம் எனபது தேவனுடைய மகிமையும், வல்லமையும் எப்போதும் இருக்கின்ற / இருக்க வேண்டிய இடமாகும்.

இவ்வாறு தேவ மகிமை எப்போதும் ஓரிடத்தில் இருக்க வேண்டும் எனில் அங்கு தங்கியுள்ள தேவன் உயர்த்தப்பட வேண்டும், மனிதர்கள் அவரை வணங்க வேண்டும். அந்த இடம் பரிசுத்தமுள்ளதாக காக்கப்பட வேண்டும். இவைகள் எப்போதும் நடந்து கொண்டே இருக்க வேண்டும்.

இதற்காக அனேக சடங்குகள் எப்போதும் அந்த இடத்தில் செய்யப்பட்டு கொண்டே இருக்கும் /  இருக்க வேண்டும்,

இவ்வாறு இல்லாவிடில் அந்த ஆலயம் தீட்டுப்பட்டதாக மாறி, தேவ மகிமை ஆலயத்தை விட்டு போய் விடும். தேவ மகிமையை எப்போதும் தக்க வைத்து கொள்ள நடக்கும் சடங்குகளே ஆராதனை எனப்படும்.

புதிய ஏற்பாட்டு காலத்தில் மனிதனே தேவனுடைய ஆலயமாக மாறி விட்டதால், மனிதனுடைய மனதும், சரீரமும் பரிசுத்தமாக காக்கபட வேண்டும். தேவனிடத்தில் எப்போதும் அன்பு கூறுவதனால் கிருபையை விட்டு விலகாமல் காத்து கொள்ள வேண்டும். தேவனின் நாமத்தை எப்போதும் துதிக்க வேண்டும் என்பது போன்றவைகள் ஆராதனை முறைகளாயின. இவைகளை சரியாக காத்து கொள்ளும் போது தேவ சமூகம் நம்முடனே எப்போதும் கூட இருக்கும்.

பகுதி 2 : தொழுது கொள்ளுதல் - 1

தொழுது கொள்ளுதல் என்ற வாக்கியத்தை ஓரளவுக்கே ஆராய்ந்து பார்த்தேன். இன்னும் முழுவதுமாக முடிக்கவில்லை. இதன் முதல் பகுதி இப்போது.

தொழுது கொள்ளுதல் என்பதை பார்க்கும் போது தேவனுடைய நாமத்தை தொழுது கொண்டார்கள் என்றே பழைய ஏற்பாட்டில் அனேக இடங்களில் வருகிறது. நாமத்தை தொழுது கொள்வது என்றால் என்ன?

இதை அறிய மூல மொழிக்கான அர்த்தத்தையும், யூதர்களின் வழக்கத்தையும் ஆராய வேண்டியிருப்பதால் இதற்கான பதிலை பிறகு பார்க்கலாம்.

அதற்கு முன்பாக தொழுவதற்கான தேவனுடைய நாமங்கள் எவை என பார்ப்போம்.

சர்வ வல்ல தேவனின் நான்கெழுத்து நாமத்தை யூதர்கள் தொழுது கொண்டார்கள் என்பதும், அந்த நாமத்தால் புற சாதிகள் தேவனை அறியவில்லை என்பதும், புற சாதிகளுக்கு அந்த நாமம் தேவனுடைய நாமமாக அறிவிக்கப்படவில்லை என்பதும் நாம் அனைவரும் அறிந்ததே.

சர்வ வல்ல தேவனை இயேசு என்னும் நாமத்தின் மூலமாகவே அறிந்து கொண்டதால், இயேசு என்னும் நாமத்திலேயே இரட்சிக்கப்பட்டதால் நமக்கு கொடுக்கப்பட்ட, அறிவிக்கப்பட்ட தேவனின் நாமம் இயேசுவே என அறிய முடியும்.

ஏசாயா 9.6. நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.

இப்போது இயேசுவின் நாமம் தொழத்தக்கதா? என்று பார்ப்போம்.

ஆதாரம்-1

அப்போஸ்தலனாகிய பவுல், சவுலாக இருக்கும் போது இயேசுவின் நாமத்தை தொழுது கொண்டவர்களை துன்புறுத்தினவன் என இருக்கிறது. இதிலிருந்து இயேசுவின் நாமத்தை தொழுது கொள்ளலாம் என்பது தெளிவாகிறது. ஏனெனில் யாவே நாமத்தை தொழுது கொண்டிருந்தால் அவன் இயேசுவின் சீடர்களை துன்புறுத்த வேண்டிய அவசியம் இல்லை.

அப்போ 9.13. அதற்கு அனனியா: ஆண்டவரே, இந்த மனுஷன் எருசலேமிலுள்ள உம்முடைய பரிசுத்தவான்களுக்கு எத்தனையோ பொல்லாங்குகளைச் செய்தானென்று அவனைக்குறித்து அநேகரால் கேள்விப்பட்டிருக்கிறேன்.
14. இங்கேயும் உம்முடைய (இயேசுவின்) நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற யாவரையுங் கட்டும்படி அவன் பிரதான ஆசாரியர்களால் அதிகாரம் பெற்றிருக்கிறானே என்றான்.

இங்கே தெளிவாக இயேசுவின் நாமத்தை தொழுது கொண்டார்கள் என சொல்லப்பட்டிருக்கிறது.

அப்போ 9.20. தாமதமின்றி, கிறிஸ்து தேவனுடைய குமாரனென்று ஆலயங்களிலே (பவுல்) பிரசங்கித்தான்.
21. கேட்டவர்களெல்லாரும் ஆச்சரியப்பட்டு: எருசலேமில் இந்த (இயேசுவின்) நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவர்களை நாசமாக்கி, இங்கேயும் அப்படிப்பட்டவர்களைக் கட்டிப் பிரதான ஆசாரியர்களிடத்திற்குக் கொண்டுபோகும்படி வந்தவன் இவனல்லவா என்றார்கள்.

ஆதாரம்-2

ரோமர் 10.13. ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்.

12. அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய (இயேசுவுடைய) நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்.

ரோமர் 10.9. என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.

ஆதாரம்-3

1.கொரி 1.2. கொரிந்துவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாயும், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களாயுமிருக்கிற தேவனுடைய சபைக்கும், எங்களுக்கும் தங்களுக்கும் ஆண்டவராயிருக்கிற நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தை எங்கும் தொழுதுகொள்ளுகிற அனைவருக்கும் எழுதுகிறதாவது:

(என்னுடைய இந்த கருத்தை வைத்து விவாதம் செய்ய விரும்புகிறவர்கள் (தங்கள் சொந்த தளத்திலேயே பதித்தாலும்) தனி தொடுப்பாக ஆரம்பித்து பதிவு செய்யுமாறு கேட்டு கொள்ளுகிறேன். ஏனெனின் ஏற்கனவே இது சம்பந்தமான கேள்வியானது பல பக்கங்களுக்கு விவாதிக்கப்பட்டுள்ளதால் அதே இடத்தில் சேர்ப்பது என்பது மற்றவர்களுக்கு தெளிவை தராது.)

(தொடரும்)



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard